வணக்கம் நண்பர்களே,
தமிழ்பதிவுலகில் பரிணாமம் மீதான விமர்சனங்களையும்,மதம் சார் ஆட்சி என்பதையும் தொடர்ந்து விவாதித்து விமர்சித்து வருகிறோம். நம்ம மாப்ளே தாசு பரிணாம எதிப்பு பதிவு எழுத முயற்சி செய்கிறார் என்பதால், ஒரு ஆசிரியராக அவர் எழுதிய பதிவில் தேவையான திருத்தங்களை இப்பதிவில் செய்வோம்.
A)முதலில் தலைப்பு: பரிணாமம் அறிவியல்தானா?
இதில் இரு சொற்கள் பரிணாமம் ,அறிவியல் இருக்கிறது. இதன ஏற்கப்பட்ட வரையறை சொல்ல வேண்டும் ,ஆனால் சொல்லவில்லை. ஆகவே நாம் சொல்லி விடுவோம். அறிவியல் விடயங்களை சொல்லும் போது சுட்டிகள் கொடுக்க வேண்டும்.அவர் செய்யவில்லை நாம் செய்வோம்?விக்கிபிடியா தகவல்களே போதுமானது.
அ) பரிணாமம் என்பதன் வரையறை என்ன?
Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations. Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins
பரிணாமம் என்பது தலைமுறைரீதியாக கடத்தப்படும் மாற்றங்களினால் உயிரின குழுக்களில் ஏற்படும் உரு அமைப்பு,ஜீனோம், ப்ரோட்டின் மாறுதல்கள் ஆகும்.இத்னால் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிர்களில் இருந்து அனைத்து உயிரிகளும் கிளைத்து தழைத்தன. ஆகவே பரிணாமம் என்பது உயிரின தோற்ற,வளர்ச்சி,பரவல் வரலாறு. இதன் சான்றுகள்
1.காலரீதியான உருமாற்றம் கொண்ட படிமங்கள்.
2.ஜீனோம் மாற்றம் தலைமுறைரீதியாக ஏற்படுகிறது. இதனால் உரு அமைப்பு மாற்றம்[Morphological Change],ஒரு உயிரின குழு இணைந்து இனவிருத்தி செய்ய இயலா சிற்றினங்களாக பிரிதல்[speciation] என்பவையும் சான்றாக ஆவணப் படுத்தப்பட்டு உள்ளது.
**
ஆ)அறிவியல் என்பதன் வரையறை என்ன?
//விஞ்ஞான ரீதியான பரிசோதனை அப்படின்னா என்ன?
ஒரு நிகழ்வை கவனித்தல், அதுகுறித்த கோட்பாடு, பரிசோதனை, சோதனை முடிவுகளில் இருந்து அனுமானம் [Observation, Theory, Experiment & Conclusion] என்ற வரிசைக் கிராமமாக அணுகுவது விஞ்ஞான முறையாகும். //
தாசும் அறிவியல் பற்றி சொன்னாலும் ,சான்று என்பதைப் பற்றியே சொல்லவில்லை.
http://en.wikipedia.org/wiki/Science
Science (from Latin scientia, meaning "knowledge") is a systematic enterprise that builds and organizes knowledge in the form of testable explanations and predictions about the universe.
பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வையும் பரிசோதனை மீது உறுதிப் படுத்த படக் கூடிய , விளக்கம் ,கருதுகோள் உருவாக்கும் கட்டமைப்பு.ஒரு நிகழ்வை அளவீடுகளாக்கி, காரணிகளாக பகுத்து, கடந்த நிகழ்கால அளவிடப் பட்ட சான்றுகளுக்கு விளக்கமும், எதிர்கால நிகழ்வுகளுக்கு கருதுகோளும் கொடுப்பதே அறிவியல்.
**
B) பரிணாமம் எப்படி அறிவியலாக ஏற்கப் படுகிறது?.
Observation
சான்றுகளின் படி பிரப்ஞ்சம் தோன்றியது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமி தோன்றியது 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். முதல் ஒரு செல் உயிரி படிமத்தின் காலம் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ளிட்டு,பூமியின் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகை உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை சான்றாக்கி உள்ளனர்.
அதுவும் ஒரு கால கட்ட உயிரினத்திற்கும், அடுத்த கால கட்ட உயிரினங்களுக்கும் உரு அமைப்பில் தொடர்பு இருந்தாலும் சிறு அளவு மாற்றமும் இருந்ததும் ஆவணப் படுத்தப் பட்டது.
Theory
ஆகவே ஒரு கால கட்ட உயிரினங்கள் சூழல் சார்[natural selection],சாரா[ random genetic drift] மாற்றங்களினால் தலைமுறைரீதியாக மாற்றம் அடைகிறது என விளக்கம் அளிப்பது பரிணாம கொள்கை. நிகழ்வுக்கான விளக்கமே அறிவியல். விளக்கத்திற்கு சான்று தேடுவது அல்ல!!.
Testing
கடந்த 50ஆண்டுகளில் மூலக்கூறு அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியால், மனிதன் உள்ளிட்ட பல் உயிரினங்களின் ஜீனோம் குறியீடுகளாக ஆவணப்படுத்தப் பட்டது.
தலைமுறைரீதியாக ஜீனோம் ம்யுட்டேஷன் என்ப்படும் மாறுதல் அடைவதும், இந்த ஜீனோம் மாற்றங்கள் உருமாற்றம், சிற்றினங்கள் ஆக பிரிதல் என்பதும் ஆயவக பரிசோத்னைகளில் உறுதிப்படுத்தப் பட்டது.
Conclusion
ஆகவே பரிணாமம் அறிவியல் ஆகும்.
**
C) பரிணாமத்தை எப்படி தவறான விளக்கமாக அறிவியல்ரீதியாக நிரூபிப்பது?
பரிணாமம் என்பதே காலரீதியான ,தலைமுறை ரீதியான மாற்றம் ஆகும்.ஒரு செல் உயிரில் இருந்து இன்றைய உயிரிகள் வரை முன்னோர்,வழித்தோன்றல் என்ற தொடர்பாக பரிணாம மரம் உண்டு. இதன் கடந்தகால சான்றுகள் படிமங்கள்தான். இதுவரை கிடைத்த படிமங்கள் இந்த பரிணாம மரத்தின் கருதுகோள், விளக்கம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கவில்லை.
ஒருவேளை இனிமேல் கிடைக்கும் படிமங்கள் பல இதற்கு மாறாக இருப்பின் பரிணாம மர விளக்கம் கைவிடப்படும். இது முதலில் நடந்தால் மட்டுமே பரிணாமம் பொய்யாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எ.கா ஹோமோ சேஃபியன் என்னும் மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் என்பது இப்போது ஏற்கப்பட்ட பரிணாம விளக்கம். சிம்பன்சியும், மனிதனின் முன்னோரும் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பொது முன்னோரில் இருந்து பிரிந்தனர்.அதன் பிறகு மனிதனின் ஹோமோ பேரினத்தில்[Genus] 20 வகை மனித இனம் தோன்றி, ஹோமோ சேஃபியன் மட்டும் மிஞ்சியது. ஒரு ஹோமோ சேஃபியன் படிமம் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் கிடைக்கும் பட்சத்தில் இந்த விளக்கம் தவறாகிவிடும்.
உயிரினங்களின் மறைவு என்பதும் பரிணாம நிகழ்வுதான்.பல உயிரினங்கள் இன்றும் மறைவதும் கூட இதன் சான்றே!!
ஜீனோம் மாற்றம் உறுதியான படியால்,இத்னால் உருமாற்றமோ, சிற்றினம் ஆதலோ[speication] நடைபெறவே முடியாது என் நிரூபிக்க வேண்டும். இது நடக்கும் வாய்ப்பு மிக மிக மிக ...குறைவு!!!
ஆகவே படிம ஆதாரம்,ஜீனோம் ஆய்வு மட்டுமே பரிணாம கொள்கையின் மீது கேள்வி எழுப்ப முடியும்!!!
ஆகவே பரிணாமம் என்பது அறிவியல் என விளக்கி விட்டோம்.விளக்கம் முடிந்தது, இப்போது திருத்தம்!!
***
மாப்ளே தாசின் பதிவுக்கு செல்வோம்.
a) // 1859 ஆம் ஆண்டு ஒரு ட்விஸ்டாக சார்லஸ் டார்வின் இந்த நம்பிக்கை மேல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். உயிர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாக மிக மெதுவாக நடைபெறும் இயல்பான பரிணாம வளர்ச்சி மூலம் உருவாயின என்றார்.//
தவறு பரிணாம் கொள்கை டார்வினுக்கும் முந்தையது. பரிணாமத்தின் முக்கிய காரணி இயற்கைத் தேர்வு[natural selection] என்பதே டார்வின்& வால்லஸ் ஆகியோரின் விள்க்கம் ஆகும்.அதற்கு முந்தைய லாமார்க்கியம் பற்றி இச்சுட்டியில் பார்க்கவும்.
Lamarckism (or Lamarckian inheritance) is the idea that an organism can pass on characteristics that it acquired during its lifetime to its offspring (also known as heritability of acquired characteristicsor soft inheritance). It is named after the French biologist Jean-Baptiste Lamarck (1744–1829), who incorporated the action of soft inheritance into his evolutionary theories as a supplement to his concept of an inherent progressive tendency driving organisms continuously towards greater complexity,
b)//எங்காவது பாதி மனிதனாகவும், பாதி குரங்காகவும் வாழும் உயிரினத்தைப் பார்த்திருக்கிறோமா? பாதி தவளை-பாதி மீன்? பாதி பறவை-பாதி ஊர்ந்து செல்லும் இனம்? இந்த மாதிரியெல்லாம் இடைப்பட்ட உயிரினம் என்று எதுவும் இல்லை!! எந்த உயிரினத்தை எடுத்தாலும் முற்றிலும் பூரண வளர்ச்சியடைந்த உயிர்களாக உள்ளனவே தவிர பாதி வளர்ச்சியடைத உயிரினங்கள் எதுவும் இல்லை.... மீன், குரங்கு, மனிதன் போன்ற இன்றைக்கு இருக்கும் உயிரினமாயினும், டைனோசர் போன்ற பூமியில் மறைந்த உயிரினமாயினும் முழு வளர்ச்சியடைந்த நிலையிலான படிவங்களே உள்ளன, அவை எவற்றுக்கும் முன்னோர் இருந்ததாகவோ அல்லது ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறியதாகவோ எந்த Fossil ஆதாரமும் இல்லை. மேலும், அவை ஒரு காலகட்டத்தில் திடீரெனத் தோன்றுகின்றன, திடீரென மறைகின்றவே தவிர ஒருபோதும் பாதி பரிணாமம் அடைந்த நிலையில் ஒரு படிவம் கூட இதுவரை கிடைக்கவில்லை.//
இங்கேதான் நிற்கிறார் தாஸ்!!ஒரு உயிரினம் முழுமை அடைந்தது என அறிய முடியாது, வாழும் சூழலுக்கு பொருந்தினால் வாழும் அவ்வளவுதான். இப்படி இடைப்பட்ட உயிரினங்கள் என்பது தவறான கணிப்பு!!.இப்போதைய உயிரினம் மட்டும் முழுமை அடைந்தவை என்பது தவறான புரிதல்.ஒவ்வொரு கால கட்ட உயிரினமும் முழுமை அடைந்தவைதான்.
இவருக்கு இந்த பதிவு!!
c). வாழும் மஹ்தி ஹாரூண் யாஹ்யா உலகம் தோன்றி 7000 வருடம் ஆகிறது என்னும் கொள்கை கொண்டவர். அவரின் விளக்கத்தை தாசு ஏற்கிறாரா?
In his work Al-Burhan fi Alamat al-Mahdi Akhir az-Zaman, Al-Muttaqi al-Hindi, one of the Ahl al-Sunnah scholars told in 8 hadiths that the life span of this world is 7000 years .
...
“THE LIFE OF THIS COMMUNITY WILL EXCEED 1,000 YEARS, YET BE LIMITED TO 1,500 YEARS.”
One of the greatest Islamic scholars al-Suyuti made this statement after examining the hadith.
“THE LIFE OF MY COMMUNITY WILL NOT EXCEED 1,500 YEARS.”
We are now in the year 1431 Hijri calendar. That is 1431 years have passed from the life span of the community since our Prophet (saas). So then how much will the life span of the Islamic community pass the year 1500?
By numerogically examining a hadith told by our Prophet regarding the End of Times, Bediuzzaman has made the calculation that the acceptance time of the Islamic community, that is their victorious time will end in year 1506 hijri calender, meaning that it will not exceed 1500 years as told in the hadith.
One of the greatest Islamic scholars al-Suyuti made this statement after examining the hadith.
“THE LIFE OF MY COMMUNITY WILL NOT EXCEED 1,500 YEARS.”
We are now in the year 1431 Hijri calendar. That is 1431 years have passed from the life span of the community since our Prophet (saas). So then how much will the life span of the Islamic community pass the year 1500?
By numerogically examining a hadith told by our Prophet regarding the End of Times, Bediuzzaman has made the calculation that the acceptance time of the Islamic community, that is their victorious time will end in year 1506 hijri calender, meaning that it will not exceed 1500 years as told in the hadith.
1506 Hijri=2086 உலகம் அழியுதுங்கோ!!!
d). பில்ட் டௌன் மேன் படிமம் மோசடி மட்டும் உண்மை. இதுபற்றி பல பதிவுகளில் விவாதித்து விட்டோம்.
தாசின் பதிவில் சொல்ல்ப்படும் விடயங்கள் அனைத்தும் ம[னி]தாபிமானி ஆஸிக்கின் பதிவில் இருக்கும், நாம் ஏற்கெனவெ அலசிய விடயங்களே!!
நாம் ஒவ்வொரு விடயத்தையும் ,ஒன்றன் பின் ஒன்றாக சான்றுகள் அடிப்படையில் அலச முயல்கிறோம். கேள்வி கேட்டு குழப்ப முயல்பவர்களை சமாளிக்க பெரிதாக சிரமப்படத் தேவையில்லை.
இப்பதிவில் பரிணாமம் ஏன் அறிவியல் ஆக உள்ளது? இதனை தவறு என நிரூபிக்கவும் வழி காட்டி இருக்கிறோம்.
இது இல்லாமல் பரிணாமத்தின் 380 கோடி வருட வரலாற்றில், கோடிக் கணக்கான உயிரின, உறுப்பு வகைகளில் கேள்வி கேட்பது எந்த பயனையும் தராது.கேட்கும் கேள்விக்கு சான்று இருப்பின் விளக்கமும் ஆய்வுக் கட்டுரைகளில் இருக்கும்.
என்றாலும் தாஸ் உலகின் உயிரியல்,ஆய்வகங்கள், பல்கலைக் கழகங்களில் பரிணாமம் ஏற்கப்பட்டு, கற்பிக்கப்படுவதை ஒத்துக் கொண்டு,பதிவிலும் சொல்லி இருக்கிறார்ர்.
//150 ஆண்டுகள் கடந்தபின்னர், இன்றைக்கும் உலகின் முக்கிய கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சியாளர்களிடமும் டார்வினின் பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்கள் எவ்வாறு தோன்றின என்ற தேடலில் ஒரு முக்கிய கொள்கையாக விளங்கி வருகிறது.//
மிக்க நன்றி. மார்க்க பந்துக்கள் முழு ஒட்டகத்தை பிரியாணியில் மறைக்கும் கூட்டம் என்பதால் இதையும் ஒத்துக் கொள்ளவில்லை.பரிணாமம் என்பதே தங்களின் மதத்தை ஒழிக்க வந்த [வழக்கமான] சதிக் கோட்பாடு என்றே சித்தரிக்கின்றனர். ஹி ஹி
ஆகவே மாப்ளே தாசை பாராட்டுகிறோம்!!
இப்பதிவைப் படிக்கும் நண்பர்களை தாசின் பதிவையும் படித்து ,விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம், பின்னூட்டத்தில் பதில் அளிப்போம்.
நன்றி!!