Saturday, December 10, 2011

சூரிய ஒளியை பயன் படுத்துவோம்

a

மக்கள் தொகை அதிகரிப்பு,வாழ்வு முறை மாற்றம் போன்றவை நம்மை அதிகம் மின்சாரம்,எரிபொருள் சார்ந்த ஆற்றலை சார்ந்தே வாழ தூண்டுகின்றன என்றால் மிகையாகது.ஓவ்வொரு ஆண்டும் நம்முடைய மின்சாரம்,எரிபொருள் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அணு உலைகள் உட்பட்ட சர்ச்சைக்குறிய தொழில் நுட்பத்தை பயன் படுத்தியாவது நமது ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய விழைகிறோம்.

ஆற்றல் தேவையை பூர்த்தி செய்வது அரசின் செயல் மட்டுமா? நமக்கு பங்கில்லையா!.ஒரு சில ஆலோசனைகளை இப்பதிவில் பகிருவோம்.நமது நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 300 நாட்கள் தெளிவான சூரிய ஒளி,வெப்பம் கிடைக்கிறது இதனை நம்மவர்கள் பயன் படுத்த முயற்சித்தால் நம் ஆற்றல் தேவையை வரும் காலத்தில் பெருமளவு குறைக்கலாம்.

சூரிய ஒளியை இரு முறைகளில் பயன்படுத்த இயலும்.
1.நேரடியாக சூரிய வெப்பத்தை சேகரிக்கும் கல்ன் கொண்டு நீர்,உணவு சூடு படுத்துதல் [solar cookers,solar water heaters etc..]
2. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்தல்[photovotaic cells]

முதல் முறை எளிமையானது,சிக்கனமானது.மஹாராஷ்ட்ரா மாநிலம் ஷிர்டியில் உள்ள சாய்பாபா கோயிலில் வரும் பகதர்களுக்கு (ஒரு நாளில் ஆயிரக்கணக்கணோர்) உணவு சூரிய அடுப்பு மூலம் தயாரித்து வழங்கப்படுகிறது காணொளி காண்க.இவ்விணையப்பக்கத்தில் பல் விடயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன்.


புதிதாக வீடுகட்டுபவர்கள் சோலார் பேனல்களையும் சேர்த்து திட்டமிட்டு கட்டினால்  மின்சார செலவுகளை குறைக்க முடியும்.வரும் காலத்தில் மின்சார தேவைக்கு அரசை சாரா நிலை கூட ஏற்படும் படி செய்ய இயலும்.சில சூரிய ஒளி பயன்பாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனக்களின் தகவல்கள் கீழ்க்கண்ட இணைப்புகளில் பெறலாம்.6 comments:

 1. cost analysis of solar cookers

  http://solarcooking.org/Granada06/43_satyavathi_muthu.pdf

  http://eetd.lbl.gov/staff/gadgil/docs/2009/sbc-rpt-2009.pdf

  ReplyDelete
 2. List of solar thermal power stations

  http://en.wikipedia.org/wiki/List_of_solar_thermal_power_stations

  ReplyDelete
 3. வணக்கம்!வேலைப் பளுவில் தொடர்ந்து பதிவுகளை நோக்க இயலவில்லை.

  நீங்களும்,பதிவர் வவ்வாலும் சூரிய ஒளி எரிபொருள் சார்ந்து பேசுகிறீர்கள்.இதில் எனக்கு இன்னும் இணைந்த கருத்து இல்லை.காரணம் ஏனைய நாடுகளை விட அமெரிக்கா ஆராய்ச்சிக்காக அதிகம் செலவிடுவதிலும்,பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளுக்கான வழிகளைத் தேடுவதிலும் ஆர்வம் கொண்டுள்ளது.முக்கியமாக அரபுநாடுகளையும்,ஈரானையும் சார்ந்த பெட்ரோலிய எரிபொருள் பொருளாதாரத்தை கீழே தள்ளி விடுவதில் இஸ்ரேலுக்கு மிகுந்த விருப்பம் இருக்கும்.ஆராய்ச்சி தீவிரத்தைப் பொறுத்தோ அல்லது குறைந்த பட்சம் இன்னும் 50 ஆண்டுகளுக்காவது பெட்ரோலுக்கு மாற்று எரிபொருள் சாத்தியமில்லை.

  பெட்ரோலைச் சார்ந்த தொழில் நுட்ப கார்கள்,விமானங்கள்,கப்பல் இன்னும் பிற உலகப்பொருளாதாரத்தை கடலில் கடாசுவது அவ்வளவு சுலபமில்லை.

  ReplyDelete
 4. நண்பர் இராஜராஜன்,

  நான் இப்பதிவில் சூரிய ஒளியை பெட்ரோலுக்கு மாற்று என்பதாக சொல்லவில்லை.அந்த அளவிற்கு சூரிய ஒளி தொழில் நுட்பம் வரும் காலத்தில் பயன் தந்தால் வரவேற்போம்.நான் சொல்வது மிக எளிமையான ஒன்று.சூரிய ஒளி அடுப்பு,போல் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் மரபு சாரா ஆற்ரல் தொழில் நுட்பம் பயன் படுத்தக் கூடாது என்பதுதான்.

  ஏன் அரசை எல்லாவற்றுக்கு குறை சொல்வதை விட்டு விட்டு ஒரு குழுவாக மாற்று வழிகளை பயன் படுத்தி நம்து எரிபொருள்,மின்சார தேவையை குறைக்க கூடாது என்பதுதான் நம் ஆசை.அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுடு தண்ணீர் தயாரிக்கவாவது சூரிய ஒளியை பயன் ப்டுத்தலாமே.ஷிர்டி கோயில் போல் ஒவொரு பெரிய உணவு விடுதியும் முயற்சிக்கலாமே.அவ்வளவுதான்
  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

  ReplyDelete
 5. ஷீர்டியில் செய்வது மிகசிறப்பான விசயம், மாற்று எரிபொருளை குறித்து மிகதீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணத்தில்தான் உலகம் உள்ளது. தமிழக அரசு கூட சூரிய ஒளியினால் மின் உற்பத்தி செய்ய கூடிய பசுமை வீடுகளை கட்ட நிதி ஒதுக்கியுள்ளது.http://goo.gl/cFL6M அரசாங்கம் இது போன்ற மாற்று முயற்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு அளித்து, இந்த துறையில் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தால் சுற்றுசூழலுக்கு பாதகமில்லாத வருங்காலம் மலர வாய்ப்புள்ளது. இம்மாதிரி விசயங்களில் நண்பர் சார்வாகன் சொல்வதுபோல் மாசற்ற உலகத்தை உருவாக்க, அரசாங்கத்தை மட்டும் எதிர்பார்க்காமல் தனி நபர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய முயற்ச்சிக்கவேண்டும்.

  நண்பர் சார்வாகன், இடுகைக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி. சார்வாகன் என்ற பெயரில் வேறொரு பதிவரும் எழுதுகிறாரே அவரும் நீங்களும் ஒன்றா?

  ReplyDelete
 6. வணக்கம் நண்பர் சீனிவாசன்,
  நீங்கள் என்னுடைய இன்னொரு இணையப் பக்கம்
  http://saarvaakan.blogspot.com/
  பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.முதலில் அப்பக்கத்தை ஆரம்பித்து மத ஆய்வுகள்,விவாதங்கள் குறித்தே எழுதிக் கொண்டிருந்தேன்.பிறகு அதில் ஈடுபாடு போய் விட்டது.ஏதேனும் அறிந்த விடயங்களை வைத்து சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியுமா என்ற தேடலில்,அப்பக்கத்தில் எழுதுவதை கொஞ்ச நாட்களாக நிறுத்தி வைத்துள்ளேன்.

  ஆகவே
  1.(கணிதம்)அறிவியலை எளிமைப் படுத்தி அளித்தல்,
  2.தன்னிறைவு பெற்ற‌ இயற்கையோடு இணைந்த வாழ்வு
  என்ற கருத்தியலில் மட்டுமே இந்த இணையப் பக்கத்தில் எழுதுகிறேன்.இதில் ஒரு ஆத்ம திருப்தி இருப்பதாக் உணர்கிறேன்.

  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

  ReplyDelete