Monday, July 1, 2013

விவேகானந்தர்,மோடி, அதீத பரப்புரை அபாயம்!!வணக்கம் நண்பர்களே,

விளம்பர பரப்புரை என்பது மனித சமூக வாழ்வின் நிகழ்வுகளில் தவிர்க்க இயலாதவை.விளம்பரம் இல்லா பொருளை விற்க இயலாது என்பதை நாம் அறிவோம்.பொருள்களுக்கு மட்டும் அல்லாமல் அரசியல்,மதம் போன்ற கருத்து பிரச்சாரங்களுக்கும் இன்றியமையாதது என்பதையும் நாம் அறிவோம். சில மிகைப்படுத்தப்பட்ட அதீத பிரச்சாரங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்பதிவில்  இரு .கா மூலம் அறிவோம்

திரு விவேகானந்தர் பற்றிய ஒரு தமிழ் மண பரப்புரை பார்ப்போம். இதில் அமெரிக்கா சென்று வரும் போது கப்பலில் இந்துமதத்தை விமர்சித்த இரு மாற்று மதப் பிரச்சாரகர்களை கடலில் தூக்கி எறிந்து விடுவேன் என விவேகானந்தர் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதுதான் அப்பதிவு.

இன்னொரு முறை என் மதத்தைப் பற்றி நீங்கள் தவறாகப் பேசினால்,............................


இதற்கு சான்றாக பதிவு ஆசிரியர் எதையும் குறிப்பிடவில்லை.இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடுள்ள நம் கல்லூரி அறை நண்பர் சொல்லி இருக்கிறார். அவர் இன்னும் திரு விவேகானந்தர் எந்த புத்த்கத்தை சீக்கிரம் ஒருமுறை படித்தாலே மனனம் செய்வார், கடும் பிரம்மச்சர்யம் காத்தமையால்,யோகாவினால் விந்து வெளியேறாமல்  தலைக்கு குண்டலினியாக ஏற்றியதன் விளைவாக ஏதோ பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்றும் நண்பர் கூறி இருக்கிறார்.

சரி விவேகானந்தர் மாற்று மத பிரச்சாரகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பது கட்டுக் கதை என்பதே நம் கருத்து. ஏன் எனில் சில வாதங்களை முன் வைக்கிறேன்.

1. மாற்று மதங்களை விவேகானந்தர் காலத்தில் விமர்சித்தது ப்ரோட்டஸ்டன்ட் மிஷனரிகளாக மட்டுமே இருக முடியும்.

2. விவேகானந்தருக்கு பைபிளில் நல்ல புலமை உண்டு. பிரச்சாரங்களை மத புத்த்கங்களில் சரிபார்க்கும் எவரிடமும் ,ஆபிரஹாமிய மத பிரச்சாரகர்கள் அருகில் வரமாட்டார்கள் என்பது நம் சொந்த அனுபவம். நம் பதிவுகளில் பல விவாதங்களில் இது நன்கு புலப்பட்டு இருக்கிறது.

அதுவும் இல்லாமல் விவேகானந்தர் கிறிஸ்துவின் நகல்[imitation of christ] என்னும் 14 ஆம் நூற்றாண்டு கத்தோலிக்க ஆன்மீக விளக்க புத்த்கத்தை பெங்காலியில் மொழியாக்கம் செய்தவர்.


Swami Vivekananda, the 19th Century Hindu Philosopher and founder of Vedanta Society, drew a number of parallels between the teachings of the Imitation and the Bhagavad Gita. Vivekananda wrote apreface and a translation of the Imitation in 1899.[59] Vivekananda would always carry a copy of the Bhagavad Gita and the Imitation.[60] Spiritual writer Eknath Easwaran compared the teachings of theImitation with the Upanishads.[61]
விவேகானந்தர் கற்று அறிந்த புத்தகங்கள்.
மதங்கள் பொதுவாக இருவகையில் விளக்கப்படும். முதல் வகை இயற்கைக்கு மேம்பட்ட ,சக்தி கொண்ட கடவுள் ,வணங்குவோருக்கு நன்மையும்,வணங்காதோருக்கு தீமையும் அளிப்பார்.இதை செய்,செய்யாதே என கட்டளைகள் உண்டு.

இரண்டாம வகை மனிதன் கடவுளின் ஒரு பகுதி,அதனை உணர,இன்னும் வளர  சில [யோகா போல்]பயிற்சிகள் என சுயத்தை கட்டுப்படுத்தல்,உணர்தல் அதிகம் உண்டு.இந்துமத பிரம்ம சமாஜ்,விவேகாந்தரின் வேதாந்த கருத்தாக்கம் இப்படி சொல்கிறது. இஸ்லாமின் சூஃபியியம் கூட ஒரு அளவுக்கு இப்படி சொல்லலாம்.

இரண்டாம் வகை இறையியலை கிறித்தவத்தில் அப்படி ஒரு வாழ்வியலாக  விளக்கும் புத்தக்ம்தான் கிறிஸ்துவின் நகல் என்னும் புத்தகம். அதனை விவேகானந்தர் மொழி பெயர்க்கும் போது ஒத்த கருத்துகளை ,கீதை,உபநிஷத்துகள்,புராணம் போன்றவற்றில் மேற்கோள் காட்டுவது ,ஒப்பீட்டு இறையியலில் அவருக்கு இருந்த புலமை அளப்பரியது என்பதைக் காட்டுகிறது.

17. There is then no peace in the heart of a carnal man, nor in him that is addicted to outward things, but in the spiritual and devout man. (The Imitation of Christ V.2.)
Swami Vivekananda's Footnote: Bhagavad-Gita 2.60
यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः
Publisher's Translation: The turbulent senses, O son of Kunti, violently carry away the mind of even a wise man striving after perfection.

அப்படிப்பட்ட அவர் விமர்சனங்களுக்கு அறிவு சார் விளக்கம் கொடுக்காமல் கடலில் தூக்கி எறிவேன் என் கொலை மிரட்டல் விடுத்தார் என்பது ,திரு விவேகானந்தரை இழிவு படுத்தும் செயல் மட்டுமே!!!

மதம் பற்றியோ,புத்தகங்கள் பற்றி எதுவும் அறியாமல்,பெருமித பிரச்சாரம் செய்வது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
**
2. திரு நரேந்திர மோடி மீது நமக்கு எந்த வித வெறுப்பு கிடையாது. சில சமயம் பாராட்டியும் பதிவு எழுதி இருக்கிறோம் என்றாலும் சமீப காலமாக பல சர்ச்சைகளில் அடிபடுவதை விமர்சிப்பதை தவிர்க்க இயலவில்லை.இப்போது திரு மோடி வரும் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருந்தாலும், கட்சியின் உள்ளும்,வெளியிலும் அதீத எதிர்ப்பினையும் சந்திக்கிறார்.

அவருக்கு விளம்பரம் செய்கிறேன் என ஆதரவாளர்களின் சில செயல்கள் திரு மோடியை காமெடியன் ஆக்கி விடும் போல் தெரிகிறது.


மதுரை வீரனின் திரு டி.எஸ்.பாலையாவின் நகைசுவையை விட மோடியின் உத்தரகாண்ட் வீரதீர சாகசம் இன்னும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறது.


இன்னொரு நகைச்சுவை!!!!!!!!!!!!!!!!இலங்கைக்கு தாரை வார்த்த கச்சத் தீவைக் கூட திருப்பி வாங்குவது கடினம்,இதில் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

புதிய நாடுகள் உருவாதல்,சில நாடுகள் இணைதல் பன்னாட்டு நிறுவங்களின் சுரண்டலுக்கு ஏதுவாக இருந்தால் மட்டுமே!!!


இதில் மோடியும் தன் பங்குக்கு சில விளம்பரம் செய்வது இன்னும் அதிக நகைச்சுவை. 2002 ல் நடந்த கோத்ரா கலவரம் உள்ளிட்டு, குஜராத மாநில முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து அவர்களோடு கலந்துரையாடல் என 175 முஸ்லிம் பிரதிநிதிகளோடு உரையாடி,அதில் அய்யா அப்துல் கலாமையும் கூட சேர்த்து வித்தை காட்டியதால் அதிக நகைச்சுவை ஆகி விட்டது.

கோத்ரா குறித்து இதுவரை அதிகம் அலட்டிக் கொள்ளாத மோடி திடீர் என மத சார்பற்றவர் ஆக முயற்சிப்புதற்கு செய்யும் முயற்சி என எவருக்கும் புரியாதா!!!

குஜராத்துக்கு வெளியே வர வேண்டும் என்றால் மத சார்பற்றவர் என் சான்றிதழ் வேண்டும் என்பதாலும்சென்ற பதிவில் கூட அத்வானி ஜின்னா பிராண்ட் சோப் போட்டு குளித்து மத சார்பற்றவர் ஆன இரகசியம் அறிந்ததால் மோடியும் மத சார்பற்றவர் ஆகியே தீருவேன் என அடம் பிடிப்பதை நாம் அறிந்து மோடிக்கு இன்னும் சில ஆலோசனைகள் வழங்குகிறோம்.


எளிதில் மத சார்பற்றவர் சான்றிதழ் வாங்குவது எப்படி????

1. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குஜராத்துக்கு அழைத்து மோடியை  பாராட்ட‌ சொல்லலாம். குடும்பத்டுடன் அழைத்து தாஜ் மஹால் சுற்றிக் காண்பித்து விருந்தளிப்பதாக கூறினால் ஒத்துக் கொள்வார். ஏற்கெனவே முசாரஃபுக்கு இப்படித்தான் செய்தோம் இங்கே வந்து மீண்டும்ஒரு ஹனிமூன் கொண்டாடி கார்கிலில் பிரச்சினை செய்தார் ஹி ஹி!!

2. பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் சென்று ஏதேனும் ஒரு அமைப்பிடம் மத சார்பின்மை விருது பெறலாம்.

3. ஜின்னாவை பாராட்டி புத்தகம் எழுதலாம்.[ஜஸ்வந்த் சிங் புத்தகத்தை விட தூள் கிளப்பனும்].

4. இஸ்ரேலை திட்டி அறிக்கை விடலாம்.

5. புத்தகம், திரைப்படம் தடை செய்யலாம்.[இதற்கு விசுவரூபம் தடையில் தமிழக அரசு நடந்த விதம் பற்றிய அறிய வேண்டும்]

6.மாறு வேடத்தில் தமிழ் நாடு வந்து இரு திராவிட கட்சிகளிடமும் எப்படி சிறுபான்மையினருக்கு எதுவும் செய்யாமலேயே அவர்களிடம் நல்ல பெயர் எடுப்பது,ஓட்டு வாங்குவது எப்படி என பயிற்சி எடுக்கலாம்.

***

நம்மைப் பொறுத்தவரை திடீரென ஒரு மாற்றம் பெரும்பாலும்  எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது.இந்த அதீத பிரச்சாரங்களும் அப்படியே!!!

வரும் தேர்தலில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என மட்டும் சொல்ல முடியும்.
பாஜக 200+ இடங்களுக்கு மேல வென்றால் கூட மோடி பிரதமர் ஆவது கடினம் என்பதும்,சிறந்த ஆட்சி, திடீர் மத சார்பின்மை என்னும் மோடி ஆதரவு  பிரச்சாரங்கள் எந்த அளவு  எடுபடும் தேர்தல் முடிவுகளில் தெரியும்.

நன்றி!!!!!!!!!!!!!!

10 comments:

 1. கேட்கிறவன் கேணை எனில் கேப்பையில் நெய் வடியும் என்பது போல, மத வெறிகளை தூண்ட விவேக(மில்லாத) கதைகளை புளுகித் தள்ளுவர் மதவாதிகள். மற்றபடி மோடி பிரதமராக பகீரத பிரயத்தணம் செய்கின்றார். எல்லாம் அரசியலில் சாதாரணமப்பா (கவுண்டர் குரலில்) மோடியின் எடுபிடிகள் வெளியிட்டுள்ள மேப்.. ம்ம்ம். சிங்களவரிடம் என்றைக்கு நம்மவர் வாங்கிக் கட்டிக்க போறாங்களோ. அவ்வ்வ்வ் !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,

   வட இந்தியாவில் எதை சொன்னாலும் நம்புவது போல் ,தமிழகத்தில் முடியாது என தெரியாத பேதைகள்.

   இராமர் கோயில் கட்டுவேன் என ஆட்சி பிடித்தவர்கள்,10 வருடம் ஆட்சி கிடைத்ததும் ஏன் செய்யவில்லை? இது திராவிடநாடு போல் டுபாக்கூர் என வட இந்திய சகோக்களுக்கு புரிய வேண்டாமா!!!

   அண்ணன் மோடி நான் இராமர் கோயில் விடயம் பக்கமே போக மாட்டேன்,என்னை பிரதமர் ஆக்கிடுங்கோ என் இன்னும் ஜோக் அடிக்கிறார்!!!
   இவருக்கு நன்றாக நகைச்சுவை வேடம் இயல்பாக வருகிறது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   http://www.ndtv.com/article/india/narendra-modi-not-visiting-ayodhya-says-his-office-381133   இராமனுக்கே பட்டை நாமம் சாத்துபவர்கள் சாதாரண மக்களுக்கு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி!!!

   Delete
 2. //சரி விவேகானந்தர் மாற்று மத பிரச்சாரகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்பது கட்டுக்கதை என்பதே நம் கருத்து//

  அது தான் நம் கருத்தும், யாரோ சும்மா கதை விட்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வியாசன்,
   ஆர்வக் கோளாறில் ஒருவரை,ஒரு கொள்கையை,கட்சியை,மதத்தை உயர்த்தி பேசுவதாக நினைத்து, நேர் மாறான விளைவை ஏற்படுத்தும் கருத்துகள் தெரிவிப்பது சகஜம் என்றாலும் தவிர்ப்பது நன்று!!

   நன்றி!!!

   Delete
 3. மோதி மிதித்து விடுவோம் மோடிமைய. அப்ப அடுத்து ராகுலா? உங்க பார்வையில் யார் சரி?

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஜோதிஜி,
   நான் திரு மோதியையோ அல்லது யாரையும் மிதிக்கவோ,மதிக்கவோ சொல்லவில்லை. ஒரு நல்ல மனநிலையில் இருக்கும்மனிதர் செய்யும் செயல்,பேசும் சொற்களுக்கு அவர் ,சார் இயக்கம் பொறுப்பு.இந்த பொறுப்பு அனைவருக்கும் குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அதிகம் வேண்டும்.

   1. மோடியின் உத்தரகாண்ட் வீர சாகசம்.
   2. அகண்ட பாரதம் 2019ல்
   3. திடீர் முஸ்லிம் பாசம்

   இதற்கான விளக்கம் பிரதமர் பதவிக்கான நகைச்சுவை விளம்பரம் மட்டுமே, இல்லை எனில் மாற்றுக் கருத்து தெரிவிக்கலாம்.
   ***
   திரு இராகுல் இப்படி நகைச்சுவை செய்தால் அதையும் பதிவிடுவோம். மோடிக்கு மாற்று இராகுல் மட்டுமா!!!

   120 கோடி மக்களில் இன்னும் பல திறமையாளர்கள்,விமர்சனத்தை ஏற்கும்,வெளிப்படையான,ஜன்நாயகத் தன்மையுடைய, மதம் சாதி சாராமை கொண்ட தலைவர்கள் நிறைய இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

   திறமையானவர்கள் மட்டுமே ஆள முடியும் சூழல் உருவாகிறது.
   ***
   பொருளாதாரம்,வெளியுறவு போன்ற விடயங்களில் பாஜக,காங்கிரஸ் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதும் ஊழலில் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

   ஜனநாயகத்தில்மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர் ஆள முடியும் என்றாலும்,விமர்சனம் என்பது தவிர்க்க இயலாது!!!

   விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை. சில நேரங்களில் சில மனிதர்களின் சொல் செய்லை சீர் தூக்கிப் பார்த்து விமர்சிப்பது மட்டுமே அவர்களை கட்டுப் படுத்தும்.

   இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
   கெடுப்பார் இலானும் கெடும்.


   நன்றி!!!

   Delete
  2. //பொருளாதாரம்,வெளியுறவு போன்ற விடயங்களில் பாஜக,காங்கிரஸ் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதும்//

   Supperrrrrr

   // ஊழலில் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.//

   We also consider the time factor.... Amount of corruption is not same as Rate of corruption.. The factor to be considered is Rate of Corruption not amount of corruption , The formula for Rate of corruption is

   Rate of corruption =
   (Total amount of Corruption / No of years ruled) + K

   Where K is a positive number form 0 to 10 cacluated considering No of years in politics, Amount got as party fund etc.

   Delete
 4. நீங்கள் விவேகானந்தர் பற்றி எழுதியதற்கு தொடர்புடையதாக ஜெயமோகனு ஒரிரு நாட்களுக்கு முன்பு எழுதினார்

  ##நம்முடைய மதமனநிலையில் இருந்து வந்தது அது. நமது மேடைப்பேச்சே மதச்சொற்பொழிவுகளில் இருந்து வந்ததுதான். ஆகவே எதையும் மிகையாகவும் பொய்யாகவும் புகழ்ந்தோ இகழ்ந்தோ பேசுவார்கள். அதற்காகக் கட்டுக்கதைகளை உருவாக்குவார்கள். அதுவே வரலாறாகவும் அரசியலாகவும் நீடிக்கும். அப்படி நம்மிடையே நீடிக்கும் எவ்வளவு அபத்தமான கதைகள் உள்ளன என்று பாருங்கள். காந்தியை பாரதி சென்றுசந்தித்து ஆசீர்வாதம் செய்தார் என்று ஒருகதை. ஆறுமுகநாவலர் ராமலிங்க அடிகள் நீதிமன்றம் வந்தபோது எழுந்து நின்றதைப்பார்த்து அவரது வழக்கை நீதிபதி நிராகரித்தார் என்ற கதை. இப்படிப் பல கதைகள்##

  சொல்ல வருகிற கருத்தை செத்துப்போன ஏதாவது ஒரு தலையின் மீது ஏற்றிவிடுவது இங்கு வழமைதானே? சில சமயங்களில் ஒரே கதையை ஒவ்வொரு ஆளும் ஒன்றுக்கு வேறுபட்ட ஆட்களை வைத்து சொல்லுவார்கள். கருத்தை நேரடியாக சொல்லாமல், அவரு சொன்னாரு இவரு சொன்னாரு என்பதன் காரணம், சொல்பவரின் தன்னம்பிக்கை குறைவா அல்லது கேட்கும் மக்களின் ஹீரோ ஒர்ஷிப் கலாச்சாரமா ?

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனத்தான், பயனுள்ள தகவல்கள் நன்றி.எங்களது எதையும் மிகைபடுத்தியும் பொய்யாகவும் புகழ்ந்தும் இரசிக்கும் மனநிலைக்கு உதாரணம் காட்ட புராண கதைகள் எல்லாம் தேவையில்லை. புலிகளுக்கு இங்கே கொடுக்கபட்ட அதீத பில்டப்பே போதும்.

   Delete
 5. சகோ.
  பெருந்தலைவர்கள் பற்றி அடித்துவிடும் சம்பவங்கள் விடயங்கள் நெறைய இருக்கின்றன, அதில் விவேகானந்தர் பற்றி இதுவும் ஒன்று.

  மோடி பிரதமராவது கடினம். அடுத்து காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும். பா.ஜ.காவின் பலம் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டும்தான். மோடி மதசார்ப்பற்றவர் ஆவாரோ இல்லையோ, தன்னுடைய இப்போதுள்ள புகழுக்கு மதசார்ப்பற்றவர்கள்தான் காரணம் என்பது அவருக்கு தெரியும்- அவர்களின் punching bag ஆக மாறிவிட்டார். பாவங்களை பலச்செய்து கங்கையில் நீராடி போக்குவதைப்போல், ஊழல்கள் பலச்செய்து மோடியை திட்டினால் அரசியல் புனிதராகிவிடுவார்கள். ஒன்னுமே இல்லாத சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பதைப் போல, சும்மாவிட்டால் அடுத்த தேர்தலில் தோற்றுபோயிருக்கும் மோடியை, திட்டி திட்டியே பெரியாளாக்கிவிட்டனர். மோடியை பற்றிய பதிவை தூசுதட்டி எழுதவேண்டும்

  நன்றி

  ReplyDelete