Wednesday, January 29, 2014

டான் ப்ரௌனின் இன்ஃபெர்னோ(நரகம்) :புத்தக விமர்சனம்

Cover
வணக்கம் நண்பர்களே,

சில தின‌ங்களுக்கு முன் படித்த, நமக்கு பிடித்த எழுத்தாளர் திரு டான் ப்ரௌன் எழுதிய தி இன்ஃபெர்னோ(நரகம்) என்னும் கதைப் புத்தகம் பற்றிய விமர்சனமே இப்பதிவு.  டான் ப்ரௌன் டாவின்சி கோட் என்னும் புத்தகம் மூலம் உலகப் புகழ் பெற்றவர்.

அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன் என்றாலும்,2013ல் வெளிவந்த இப்புத்தகம் படிக்க இப்போதுதான் நேரம் கிட்டியது. இது அவரது தளம்.


அவருடைய புத்தகங்கள், அது தொடர்பான பல விடயங்களை இங்கு பகிர்கிறார். இவரின் கதைகளில், மதம்,அறிவியல் ,வரலாறு,குறியீடுகள்(symbols) சார்ந்த ஆய்வுகள் குறித்து அதிகம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரின் பெரும்பாலான கதைகளில் , ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும்  திரு இராபர்ட் லாங்டான் என்னும் வரலாற்று குறியீட்டுப் பேராசிரியர் நாயகனாக வந்து குறியீடுகளின் புதிர் மர்மங்களை விடுவிப்பது முக்கிய விடயம் ஆக இருக்கும்.சரி இந்த புத்த்கத்தின் கதைச் சுருக்கம் பார்த்து விடுவோம்.
**
கதைச் சுருக்கம்.

திரு இராபர்ட் லாங்டான்(Robert Longdon) இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர மருத்துவமனையில் த்லையில் (சுடப்பட்ட) காயத்த்துடன் கண் விழிக்கிறார். அவருக்கு கடந்து இரு தினங்களில் நடந்த விடயங்கள் நினைவில்லை. அவரை இரு குழுக்கள் தேடுகின்றன.அவருக்கு நரகம் பற்றி பல கனவுகள் வருகின்றன.  மருத்துவமனையில் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவரை ஒரு பெண் மருத்துவர் சியனா ப்ரூக்(sienna brook) காப்பாற்றி தனது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறார்.

அவரின் சட்டையில் உள்ள ஒரு சிறிய ப்ரஜெக்டரில்(தமிழில் என்ன?)நரகம் பற்றிய ஒரு படம்உள்ளது. அது 13 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் டான்டே அலி-‍‍‍எர்ரி(1265-1321)  எழுதிய டிவைன் காமெடி(Divine comedy நரக நகைச்சுவை) என்னும் புத்தகத்தில் வரும் நரகத்தின் வர்ணனையின் அடிப்படையில் ஆன  படம்.
இத்தளத்தில் அந்த வர்ணனைகளின் அடிப்படையில் ( Botticelli's Map of Hell.) வரையப்பட்ட படங்கள் உள்ளன.


அந்த ப்ரஜெக்டரில் உள்ள‌ படத்தில்  சில எழுத்துக்கள்,குறியீடுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் தனது தேடலை லாங்டான்+ப்ரூக்ஸ் தொடங்குகின்றனர். அவர்களை ஒரு பெண் கொலைகாரி, ஒரு இராணுவக் குழு துரத்துகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மெண்டாசியம் என்னும் கப்பலில் இருந்து இயங்கும் கன்சார்டியம்(கூட்டமைப்பு) என்னும் சட்டவிரோத செயல்களை செய்து தரும் நிறுவனம் அந்த பெண் கொலைகாரியை அனுப்பியது என்பதும் கதையில் சொல்லப்படுகிறது.

ஒரு வருடம் முன் அந்நிறுவன‌த்திற்கு ஒரு வாடிக்கையாளர் தனக்கு ஒரு மறைவிடம் வேண்டும் என நாட,அவர்கள் செய்து கொடுத‌தனர்.அவர் பெயர் திரு பெர்ட்னான்ட் ஜோப்ரிஸ்ட்(Bretand Zobrist) தலை சிறந்த மரபணு.  பொறியியல்(genetic engineering) வல்லுனர். அவர்  சில தினங்களுக்கு முன் வந்து குறிப்பிட்ட தேதியில் ஒரு காணொளியை உலகம் முழுதும்  வெளியிட வேண்டும் என்கிறார். இது நடந்து சில நாட்களில் ஜோப்ரிஸ்ட் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

அதனால் அக்கணொளியை பிறகு பார்க்கும் நிறுவன தலைவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதன் படி உலக மக்கள் தொகை என்பது மனித குலத்தை அழிக்கும் ஒரு விடயம் என்பதால் அதனைக் காப்பாற்ற ஏதோ செய்து இருப்பதாக அக்கணொளியில் ஜோப்ரிஸ்ட் கூறி இருப்பதால் அது என்ன என்பதை அறிய நிறுவன தலைவர் முயல்கிறார். அதற்காகவே லாங்டானை துரதுகிறார். லாங்டானிடம் உள்ள படத்தில் அந்த மர்மம் உள்ளது.

ஏற்கெனவே திரு ஜோப்ரிஸ்ட் உலக சுகாதார நிறுவன தலைவரான(world Health Organisation) எலிசபெத் சைன்ஸ்கி(Elizabeth Sinskey) உடன் மக்கள் தொகைக் குறைப்பிற்கான தனது கண்டுபிடிப்பை விளக்க அது இருவருக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. அவரை உயிரியல் தீவிரவாதியாக(bio-terrorist) எலிசபெத் அறிவிக்கிறார்.

எலிசபெத் ,ஜோப்ரிஸ்டின் ஆய்வுகளை தடுக்க முயல்வதால்தான் அவர் ஒளிந்து வாழ்ந்தார் என்பதும் விளங்குகிறது. லாங்டானைத் துரத்தும் அந்த இராணுவக்குழு உலக் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தது.

ஆகவே லாங்டானிடம் உள்ள படத்தின் மூலம் அவர் ஜோப்ரிஸ்டின் இரகசிய ஆய்வின் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்கின்றார். அவரை கன்சார்டியம், உலக சுகாதார நிறுவனம் இரண்டுமே துரத்துகின்றன.

 மக்கள் தொகைக் குறைப்பிற்கான ஜோப்ரிஸ்ட் கண்டுபிடிப்பு என்ன?
லாங்டான் அதைக் கொண்டுபிடித்தாரா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கதை சொல்கிறது.

கதையின் முடிவை வேண்டும் என்றே சொல்லவில்லை. கதை படிக்கும் விருப்பம் போய்விடும்.
**
இதில் டாண்டேயின் நரகம் என்பதில் பல படிகள் உண்டு.
1. நரகம்(inferno) 2) சுத்திகரிக்கும் இடம்(purgatory) 3)சொர்க்கம்(Heaven சுவனம்!!!)

நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல வேண்டும் என்றே டாண்டேயின் கருத்து ஆகும்.நம் அண்ணனின் மத புத்தக விளக்கம் கூட அதையே சொல்கிறது!!!!

68. உமது இறைவன் மீது சத்தியமாக!379 அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம். 

69. பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலும் அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்வதில் மிகக் கடுமையாக இருந்தோரைத் தனியாகப் பிரிப்போம். 

70. அதில் கருகுவதற்குத் தகுதியுடையோர் யார் என்பதை நாம் நன்றாக அறிவோம்.

 71. உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.280

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/maryam/
Copyright © www.onlinepj.com


Thanks to onlinepj.com
திரு டாண்டேவுக்கு ஒரு காதல் தோல்வி உண்டு. எனினும் சுவனத்தில் காதலியுடன் சேர்வது போல் கதையில் சொல்வதில் இருந்து அவரின் காதலின் ஆழம் புரிகிறது!!!


டாண்டேயின் புத்தகத்தில் இன்னொரு மத தலைவர் நரகத்தில் இருப்பதாக கூறி இருப்பது சமீப காலம் வரை சர்ச்சைக்கு உள்ளாகும் விடயம். அது குறித்து இங்கே படியுங்கள்!!! 


ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் நாத்திகர்கள் மட்டும் அல்ல, பிற மத ஆத்திகர்களையும் நரகவாசி என்று சொல்வதற்கு 12 ஆம் நூற்றாண்டு திரு டாண்டேயும் விதிவிலக்கு அல்ல என்றே நாம் கூறுகிறோம். இக்காலத்திலேயே அப்படிப்பட்டவர்கள் இருப்பதை நாம் அறிவோம் அல்லவா ஹி ஹி!!!

கதையின் முடிவில் ஜோப்ரிஸ்டின் மர்ம கண்டுபிடிப்பு துருக்கியின் இஸ்தான்புல்(isthanbul) நகரில் உள்ள ஹேகிய ஷோஃபியா (Hagia sohpiya)அருங்காட்சியகத்தில் இருப்பதாக கதை சொல்கிறது. அது பற்றி நாமும் ஒரு (நகைச்சுவை) பதிவு இட்டு இருப்பதும் ஞாபகம் வருகிறது.

அப்பாடா ஒரு வழியாக  இம்மாதத்தின் இரண்டாம்(??) பதிவையும் எழுதிவிட்டோம்.

எழுத வேண்டும் என்னும் உத்வேகம் குறைவது நன்கு புலப் படுகிறது.

(இயற்கை நாடினால்) தொடர்ந்து விடாமல் எழுதுவோம்!!!

நன்றி!!!

14 comments:

  1. என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்? அடிக்கடி வாங்க; வந்து எழுதுங்க!
    நீங்க வராமா ஜெயதேவ் தாசும் முடங்கிக் கிடக்கிறார்;
    நல்ல எழுத்தார்கள் வந்து எழுதணும். ஜெயதேவ் தாசயையும் சேர்த்து தான் சொல்கிறேன்; அவர் இறங்கி ஆடினாத்தனே நாம பந்து போடமுடியும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      முடிந்தவரை எழுதவே முயற்சிக்கிறோம். நீங்கள் கூறுவதும் உண்மைதான், நமது அன்புக்குரிய மாற்றுக் கருத்து நண்பர்கள்,உறவுகளே நம்மை எழுத உந்தும் சக்தியாக இருக்கிறார்கள்.

      முரண்களே முன்னேற்றத்தின் தூண்டுகோள்!!!

      நம் மாப்ளே தாசும் சீக்கிரம் நிறைய எழுதி நம்மையும் எழுத வைப்பார் என்வே எதிர் நோக்கலாம்.

      நன்றி!!!

      Delete
    2. நன்றி சகோ கலா குமரன்

      Delete
  2. மயானத்துக்கு புதுசா வந்திருக்கேன் ,அடிக்கடி பிணங்களைப் பார்க்க நினைக்கிறேன் .காட்டுங்க,காட்டுங்க ,காட்டிகிட்டேஇருங்க !

    ReplyDelete
    Replies
    1. சகோ பகவான் ஜீ
      எல்லாம் அவர்கள் செயல்!!! நம் கையில் என்ன இருக்கிறது!!
      நன்றி!!!

      Delete
  3. Hi Saarvaagan,
    How are you?
    Glad to read your post after a long time.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஏலியன்,
      நலம். கொஞ்சம் பணி காரணமாக எழுத இயலவில்லை. இனி மாதம் இரு பதிவு நிச்சயம்.அன்புக்கு நன்றி!!

      Delete
  4. Towering Inferno என்ற படம் அண்ணா சாலையில் [இருந்த] Safire தீயேட்டரில் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்; அவசியம் பார்க்கவேண்டிய படம்! நெருப்பு என்றால் என்ன என்று புரியும்.

    Twin Towers எரியும் போது எனக்கு இந்தப் படம் தான் நியாபகம் வந்தது. அதில் கொடுமை ஒருவன் அல்லது ஒருவள் வெப்பம் தாங்காமல் தரையில் குதித்து செத்தது பயங்கரம்!

    இரணடாவது விமானம் கட்டிடத்தில் நுழையும் போது,....Matt Lauer & Katie Couric இருவரும் அப்ப NBC -ல் இருந்து இந்த கருமத்தை live -வாக காட்டியது சோகம்--அதைவிட சோகம்! அதை நான் live -வாக பார்த்த்து!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நம்பள்கி,
      9/11 ஒரு மிகப் பெரிய சோகம்தான். யாரோ செய்யும் அரசியல் சதி வேலைகளில் பொது மக்க்ள் பலி ஆகிறார்.
      சொர்க்கம் நரகம் இரண்டுமே இங்குதான் என்பது நம்க்கு தெரியும் அல்லவா!!!

      Delete
  5. long time ...... no see ....

    regards........

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,

      மணி இரத்ணம் பாணியில்
      அவர்களை எழுதச் சொல்லுங்க,நானும் எழுதுகிறேன். ஹி ஹி

      மற்றபடி கொஞ்சம் பணி அதிகம்.
      நன்றி!!

      Delete
  6. நான் இந்த புத்தகத்தை இன்னம் வாசிக்கவில்லை, விரைவில் வாசிக்க வேண்டும், நிறைய விடயங்களை சொல்லி இருக்கின்றீர்கள், சுவாரசியமாத்தான் இருக்கும் போல, அடிக்கடி எழுதுங்கள், தாங்கள் இல்லாமல் பதிவுலகம் கொஞ்சம் டல்லடிக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ விவரணம்,
      உங்கள் எழுத்துகளும் மிக அருமை. குறிப்பாக டிசம்பர் 25 பற்றிய பதிவு அபாரம். தொடர்ந்து வாசிக்கிறேன். முன் போல் படிவு இடவோ,பின்னூட்ட தொடர் விவாதம் நடத்தவோ நேரம் இல்லை. முயல்வேன்.
      மீண்டும் நன்றி!!

      Delete