Saturday, February 6, 2016

அரியலூர் பரிணாம படிமங்கள்


வணக்கம் ந‌ண்பர்களே

தமிநாட்டின் அரியலூர் பகுதி ஒரு பரிணாம படிமங்களின் சுரங்கமாக‌ உள்ளது செய்திகளில் இருந்து அறிய முடிந்தது. அது பற்றி நிர்முக்தா இணைய தளம் ஒரு நல்ல காணொளி தயாரித்து யுட்யூப் தளத்தில் பகிர்ந்து உள்ளனர். அவர்களுக்கு நம் நன்றியுடன் அதனை இப்பதிவில் பகிர்கிறோம்.

படிம(Fossil) சான்றுகளின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களில் ,பல வகை உயிரினங்கள் வாழ்ந்து வந்ததின் அறிவியல் விளக்கம்தான் பரிணாமக் கொள்கை.பரிணாமக் கொள்கை மரபணு ஆய்வுகள் மூகலமாகவும் உறுதி செயப்பட்டது.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி உயிரிய‌ல் பாடத்தில் பரிணாமம் ஒரு பகுதி ஆகும்.இக்காணொளியில் படிமங்களின் வயது கணக்கிடும் முறை பற்றியும் விளக்கப் படுகிறது.மாணவர்கள் ,பரிணாம ஆய்வாளர்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம் ஆகும்.

காணொளி கண்டு மகிழ்க

விளக்கங்கள் பின்னூட்டங்களில் தொடர்வோம்

பரிணாம எதிர்ப்பு மதவியாதிகளே நாங்க ரெடி நீங்க ரெடியா???

நன்றி!!!!





Friday, November 27, 2015

இந்த புதிய குரான் விளக்கம் வன்முறையைத் தடுக்குமா(ம்!)?


வணக்கம் ந‌ண்பர்களே,
நேற்று சி. என். என் தொலைக்காட்சியில் ஆய்வு குரான்(STudy Quran) என்ற ஒரு புத்தம் புதிய குரான் விளக்கம் பற்றி ஒரு செய்தி ஓளிபரப்பு ஆனது. அது பற்றியே இந்தப் பதிவு.குரான் என்பது முசுலீம்களின் மதப் புத்தகம் என்பதும், பொ.ஆ 610 முதல் 632 வரை அரேபியாவின் மெக்க,மதினா நகரங்களில்,திரு முகமது என்ற இறைதூதருக்கு அரபி மொழியில் வழங்கப்பட்ட‌ட செய்தி என்பது அவர்களின் நம்பிக்கை.அரபி அல்லாத குரான்கள், குரான் விளக்கமாக மட்டுமே கருதப் படுகின்றன.

உலகில் அதிகம் மதிக்கப்படும், விமர்சிக்கப்படும் புத்தகம் இதுதான் என்றால் மிகையாகாது.குரானை நம்புவோர் அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், ஏக இறைவனின் மாற்றமில்லா இறுதி வாக்கு என்பதால் அதனை அப்படியே ஏற்கின்றனர்.ஆனால் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தினர்,முன்னாள முசுலிம் ஆகியோர் அதில் உள்ள வன்முறை சார் வசனங்க‌ளை சுட்டி அதனை விமர்சிக்கின்றனர்.
குரான் உலகின் பெரும்பான்மை மொழிகளில் , விளக்க உரைகள் உண்டு. ந‌மது தாய்த் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட குரான் விளக்க உரைகள் உன்டு.


இந்தப் பதிவில் சி என் என் தொலைக் காட்சி தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம். நமது சொந்தக் கருத்துகளை பின்னூட்டங்களில் மட்டுமே நாகரிகமாக விவாதிப்போம்.இதுதான் தொலைகாட்சி செய்தியின் சுட்டி .
http://www.cnn.com/2015/11/25/living/study-quran-extremism/index.html

இது அப்புத்த்கத்தின் அமேசான் தள இனைப்பு
http://harperone.hc.com/studyquran/
http://www.amazon.com/The-Study-Quran-Translation-Commentary/dp/0061125865

இது அமெரிக்க பல்கலைக் கழக மத ஆய்வாளர்களான 
Seyyed Hossein Nasr (Editor-in-Chief), University Professor of Islamic Studies at the George Washington University,Caner

K. Dagli (General Editor), Associate Professor of Religious Studies at the College of the Holy Cross,

Maria Massi Dakake (General Editor) is Associate Professor of Religious Studies at George Mason University,

Joseph E. B. Lumbard (General Editor) is Assistant Professor in the Department of Arabic and Translation Studies at the American University of Sharjah 
,Mohammed Rustom (Assistant Editor), Associate Professor of Islamic Studies at Carleton University.

ஆகியோரால் மொழி பெயர்க்கப்ப்ட்டது.ஒவ்வொரு வசனத்திற்கும் அடிக்குறிப்பு (foot note)விள்க்கம் அளித்து இருப்பதாக‌ செய்தி சொல்கிறது.

இது விமர்சனத்திற்கு உள்ளாகும் வசனங்களுக்கு ,மாற்றுப் பொருள் அளிக்கிறதாம்.ஷியா,சுன்னி பிரிவு சார் தனித் தனி விளக்கமும் இருக்கிறது.எனினும் இது அதிக முசுலிம்களால் ஏற்கப்ப்டாது என்பது ந‌மது கணிப்பு.
ஏன்?
1. இந்ந்த மாற்று விள்க்கம் சரி என்றால் கமுந்தைய 1400 வருட விளக்கங்கள் தவறாகி விடும்.மத குருக்கள்,அடிப்படைவாதிகள் பிடியில் இருந்து புத்தக விளக்கம் கல்வியாளர்கள் கையில் செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஃபத்வா கூட வரலாம்.

2.இந்ந்த புத்த்கத்தில், மூல அரபி வசனங்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலம் மட்டும்தான் என்பதாலும்,மொழிபெயர்பாளர்கள் மேலை நாட்டவர் என்பதாலும் இது இசுலாமிய ஆய்வு சார் மேலை நாட்டு பல்கலைக் கழகங்கள் தாண்டி படிக்கப்ப்டாது.

3. ஏற்கெனவே அகமதியா மற்றும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்க உரைகளும் இப்படித்தான் இருக்கிறது. நாமும் குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்லவில்லை என்னும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்கம் சார்ந்து ஒரு பதிவு இட்டோம்.
http://saarvaakan.blogspot.com/2011/04/434.html
ஜிஹாத் என்னும் புனிதப் போரை , மன‌தின் தவறான எண்ணங்களுக்கு எதிரான போராட்டம் என விளக்கம்  தருகிறார்கள். http://www.muslim.org/islam/jihad.htm
அகமதியா, குரான் மட்டும் பிரிவினர் ,முசுலீம்களில் சிறுபான்மை என்பது குறிப்பிடத் தக்கது.

என்றாலும் மனிதர்களுக்கு சமாதானம் ஏற்படுத்தும் இப்படி முயற்சிகள் பாராட்டப் படத் தக்க‌வைதான்.நமது இதயம் மாற்று விள்க்கம் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட விரும்பினாலும்,அறிவோ வாய்ப்பு குறைவு என்பதையே இயம்புகிறது.

எப்படி இருந்தாலும், மதம் சார் சட்டங்கள் தூக்கி எறியப் படும் வரை, மதகுருக்கள் அரசியல் செல்வாக்கு அழியும் வரை இப்படிப்பட்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

ந‌ன்றி!!!நன்றி!!! நன்றி!!!

Tuesday, October 20, 2015

மாட்டுக் கறி தடைக்கு முன்னால்!!!!!!!!!!!!!!!!

வணக்கம் ந(அ)ண்பர்களே,
மீண்டு(ம்) பதிவு எழுத ஆசை.ஆயிரம் கதை சொல்லி  ஆட்சி பிடித்த  மதம் சார் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் , மத வெறியை தூண்ட முயற்சித்து வருகிறது.

மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் இடம் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? அல்லது எதிர்க்கும் அரசின் ஆதரவாளருக்கு தெரியாதா?

http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

World     10,200,000
Rank     Country     2015            Change
1     India                   2,400,000     23.53%
2     Brazil                  2,005,000     19.66%
3     Australia             1,590,000     15.59%
4     United States      1,098,000     10.76%
5     New Zealand        555,000        5.44%


இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, மதங்களின் தொகுப்பு.

யார் முசுலீம், கிறித்த்வர் அல்லாதவரோ அவருக்கு  இந்து சட்டம் செல்லும்   என மட்டுமே நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

இந்து என்பதன் வரையறுப்பு பற்றி தெரியாது என நீதிமன்றத்தில் சொல்கிறது ஆளும் இந்ந்துத்வ அரசு.
http://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece

 Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.

இந்த சூழலில் இந்ந்துக்களின் உணவு இது என வரையறை செய்ய இயலுமா?

உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.உலக முழுதும் பல்வேறு உனவுப் பழக்க முறைகள் உண்டு.
காலம் காலமாக வ்ழக்கத்தில் இருது வரும்,பிடிக்கும் உணவை சாப்பிட எவருக்கும் உரிமை உண்டு.
மாட்டுக் கறி உண்ணுதல் சுமார் 10,000 வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட இந்த வழ்ழக்கம் இருப்பதகா அகழ்வாய்வு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

http://beef.sabhlokcity.com/2013/07/archaeological-evidence-of-beef-eating-in-india-indus-valley-vedic-period-etc/

பவுத்தம்,சமணம் ஆகியவற்றின் தாக்கத்தினால்தான் , மாமிச உணவு தவிர்த்தல் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தது.வேத கால மதத்தில் பலியிடுதலும், சோமபானம் (அந்தக் கால சரக்கு) படைத்தலுமே வழிபாடு ஆக இருந்தது.

தாவர உணவு மட்டுமே சாப்பிடுவேன். அது உடலுக்கு நல்லது என பிரச்சாரம் செய்வேன் என்று சொல்வதும் ஒருவரின் உரிமை. ஆனால் ஆடு ,கோழி, பன்றி, எருமை சாப்பிடுவேன் ஆனல் யாரும் பசு, எருது மட்டும் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல.

மாட்டுக் கறி பிரச்சினைக்கு முன்பு,அதாவது மாற்று மதத்தின‌னருக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு

1. யார் இந்து என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வேண்டும் எனில் மாட்டுக் கறி சாப்பிடாதவர் மட்டுமே இந்து என வரையறை செய்யலாம்.

2.இந்துக்கள் அனைவருக்கும் ஒரே உணவுப் பழ‌க்கம் கொண்டு வர வேண்டும்.ஒன்று அனைத்து இந்துக்களும் சைவ உணவு ,அல்லது  ஆடு ,கோழி, பன்றி, எருமை கரி சாப்பிட வேண்டும்.

3. இந்துக்களில் ஒரே சாதியில் திருமணம் செய்ய தடை வேண்டும். சாதி விட்டு சாதி மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும்.

4.அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

5.சமீபத்திய‌ சேச சமுத்திரம தேர் எரிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

யாரேனும் விவரம் அறிந்த(??) இந்துத்வ ஆதரவாளவர் (ஒருவேளை) இருந்தால் பசு மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என சொல்லும் வேத வசனம் குறிப்புகள் தரவும்.

ந‌ன்றி!!!!!!!!!!!

Tuesday, April 29, 2014

பங்கு சந்தை+ சோதிடம்= ஒரு ஏமாற்று வேலை!!!


வணக்கம் நண்பர்களே,

மனிதர்கள் இயற்கை வளங்களை நுகர்வதற்கு, ஏற்பட்ட அமைப்பே பொருளாதாரம்.இதில் சிலர் செல்வம் உள்ளோர் ஆகவும், பலர் அன்றாட வாழ்வுக்கே தடுமாறுவதும் இப்போதைய சூழல் மட்டும் அல்ல, மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலே இப்படித்தான்.


இயற்கை அனைவருக்கும் (கொள்கை அளவில்) பொது என்றாலும், நுகர்வில், உழைப்பிற்கு விலையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. இது பொருளாதார பிரமிட் போல் கீழ் இருப்பவனின் உழைப்பை மேலே இருப்பவன் சுரண்டுவதை தார்மீக நீயாயம் ஆக்குகிறது.

அனைவருக்கும் குறைந்த பட்சவாழ்வாதாரம், பாதுகாப்பு வழங்கும் வாழ்வியல் முறை, பொருளாதார அமைப்பு இதுவரை கண்டறியப்பட்டவில்லை( பொது உடமை கொள்கை ஆதரவாளர்கள் மன்னிக்கவும்!!!) என்பதுதான் உண்மை.

இயற்கை வழங்கும் மூலப் பொருள்களை , முதலீடு+ உழைப்பு மூலம் ,தேவைக் கேற்ற பொருள் தயாரித்து, சந்தையில் விற்று இலாபம் அடைதல் என்பதே சந்தை பொருளாதாரம். இதுவே  இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகளின் இப்போதைய பொருளாதாரக் கொள்கை.

போதுமான  முதலீடு இல்லாதோர், வங்கி மூலமோ, அல்லது பங்குகள் மூலம் முதலீடு  பெறுவது கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் வழக்கம் ஆகி வருகிறது.
இந்திய பங்கு வணிகம் 1870 ல் மும்பையில்அப்போது பம்பாய்தொடங்கியது. 1992 க்கு பிற்கு உலகமயமாக்குதலில் அசுர வளர்ச்சி கண்டதுஇந்த சுட்டி இந்திய பங்கு வணிகம் பற்றிய சில வரலாற்று குறிப்புகளைத் தருகிறது.



.முதலில் பங்கு வணிகம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் எளிமைப் படுத்தி புரிந்து கொள்வோம்.பங்கு வணிகம் என்பது பலர் முதலீடு செய்து நடத்தும் வணிகம் எனலாம்நீங்கள் ஒரு தொழில் தொடங்க முனைகிறீர்கள்உங்களிடம் போதுமான நிதி இல்லைஅதற்கு பலரிடம் கடன் வாங்குகிறீர்கள்அவர்களையும் உங்கள் தொழிலில் பங்குதாரர் ஆக்கிஇலாபத்தில் பங்கு கொடுக்கிறீர்கள் என்பதுதான் ங்கு வணிகம்.



உங்களுக்கு கடன் கொடுப்பவர்,உங்களின் தொழில் இலாபகரமானதாநீங்கள் தொழிலில் திறமை உடையவராநாணயம் உள்ளவரா என்பதைப் பொறுத்தே உங்களுக்கு கடன் வழங்கதொழிலில் பங்குதாரர் ஆக முன்வருவார் என்பது அனைவரும் அறிந்த விடயம்இக்காணொளி பங்கு வணிகம் பற்றிய எளிய விளக்கம் தருகிறது.


அதிக இலாபம் கொடுக்கும் பங்குகளின் மதிப்பு சந்தையில் அதிகரிக்கும் என்பதால், பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்க அதில் ஈடுபட்டு உள்ளோர் முயல்கின்றனர்.இச்சூழலில் ஒரு பங்கின் செயற்கையாக  விலையை அதிகரிக்க பல ந்திரங்களும் நடைமுறைக்கு வருகின்றது.


பங்கு வணிகம் என்பதே ஒரு சூதாட்டம் போன்றது என்ற கருத்து உடையவர் உண்டு.பங்கு வணிகத்திலும் பிற துறை போன்று ஏமாற்றுவோர் இருப்பதும் உண்மைதான். இலாபம் சம்பாதிக்காமலேயே பங்குகளுக்கு தேவையை ,ஊடகம், அரசியல் துணையுடன் அதிகரித்து, பலரை ஏமாற்றி பங்குகளை வாங்க வைத்து, பிறகு பங்கு உரிமையாளர்கள் விற்க முடியாமல் போகும் போது, பங்குகளின் விலை முழுவதும் சரியும். அப்போது மொத்த பணமும் இழக்கும் சூழல் ஏற்படும்.சத்யம் தொழில் நுட்ப நிறுவன வீழ்ச்சி, ஹர்சத் மேத்தா மோசடி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


இச்சூழல் தவிர்க்க, ஒரு நிறுவன பங்கு கடந்த 10 ஆண்டுகளில், என்ன மாற்றங்களைக் கண்டு வந்தது என அனுமானித்து முதலீடு செய்வது நலம். ஒரு .கா ஆக இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் பற்றி அறிய முயற்சி செய்வோம்.

சில நிறுவனங்கள் , பங்கின் மதிப்பை இரட்டிப்பு அல்லது அதற்கு மேலும் போனஸ் ஆக அதிகரிக்கின்றன. 1993 ஒருவர் 100 பங்கு தலா 95 ரூபாய் என 9,500 முதலீடு செய்து இருந்தால் அதன் மதிப்பு இன்று என்ன தெரியுமா???.
சுமார் 1.5 கோடி என  சொல்லப் படுகிறது.


ஆனால் அது தவல் தொழில் நுட்ப புரட்சியின் ஆரம்பம் என்பதால் மட்டுமே அப்படி அசுர இலாபம் கிடைத்தது. இன்று இன்ஃபோசிஸ் பங்குகளை வாங்கினால் சாதாரண இலாபம் மட்டுமே கிட்டும்.ஆனால் இப்படிப்பட்ட நிறுவன பங்குகள் மிகவும் குறைவான,(ஆனால் நம்பகமான) இலாபங்களைக் கொடுக்கும்.
இன்ஃபோசிஸின் இந்த வார‌ நிலவரம் விலை 52.38$(டாலர் அதாவது 3179.90 ரூபாய்)
Date
Open
Price
High
Price
Low
Price
Close
Price
Total
Volume(Nos)
52 High
52 Low
26-apr-14
52.38
52.75
52.22
52.50
1,293,508
63.20
0.00
25-apr-14
52.50
52.61
52.15
52.55
1,383,032
63.20
0.00
24-apr-14
52.25
52.31
51.80
52.30
1,635,072
63.20
0.00
23-apr-14
51.99
52.69
51.51
52.45
1,749,217
63.20
0.00
22-apr-14
52.44
52.78
52.33
52.50
796,584
63.20
0.00



அதாவது நல்ல நம்பகமான நிறுவனம் என்றால், குறுகிய காலத்தில் இலாபம் அதிகரிப்பு குறைவாகவே இருக்கும் என்றாலும், நீண்ட கால முதலீடு என்றால்,இலாபம் தரும்.

Thanks to


இன்ஃபோஸிசில் முதலீடு செய்யுங்கள் என தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம். பங்கு வணிகத்தின் சாதகம்,பாதகம் இரண்டையும்  விளக்க ஒரு .கா அவ்வளவுதான்.

ஒரு நிறுவனத்தின் பங்கு ஏறுமா?இறங்குமா என்பதைக் கணிக்கும் மென்பொருள்களும் உண்டு.

பங்கு வணிகத்தில் முதலீடு செய்து குறைந்த காலத்தில் அதிக இலாபம் என்பது ,அனைவருக்கும் கிட்டாது என்பதை அதில் ஈடுபடும் அனைவருக்கும் தெரியும். கணிப்பு என்றாலே தவறாகும் வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் கொள்வது நல்லது.

ஆகவே விரும்பும் சகோக்கள் அதன் நெளிவு சுழிவு அறிந்து, உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யவும். அரசு வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பு என்றே சொல்கிறோம். அதிக வட்டி அல்லது இலாபம் என்பதுதான் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகரிக்கிறது என்பதே நம் கருத்து.

இப்பதிவு எழுதக் காரனமே தமிழ் மணத்தில் கண்ட ஒரு பதிவுதான். சரி பங்கு வணிகம் பற்றி நண்பர் ஏதேனும் தகவல் கொடுப்பார் என முதன் முதலில் அவர் தளத்திற்கு சென்று பார்த்தால் அதிர்ச்சி!!!


ஜாதகம் பார்த்து பலனும் பரிகாரமும் பெற வேண்டுமா?
நீங்கள் ஏற்கனவே நஷ்டமடைந்திருந்தாலும், இனி எப்போதும் சரியாக டிரேடிங் செய்து ஷேர்மார்க்கெட்டில் லாபமடைய உங்களது ஜாதகத்தைப் பார்த்து பலனும் எளிய பரிகாரமும் சொல்ல வேண்டுமானால் இதற்கான எளிய கட்டணமாக ரூ 1555/- நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) அனுப்பி விடுகங்கள்.நேரில் வருவதென்றாலும் முன்னதாக பணம் செலுத்தி ஜாதக நகலை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு அப்பாயின்ட்மென்ட் பெற்றுக்கொண்டு வாருங்கள்.
ஜோதிட ரீதியிலான ஷேர் டிரேடிங் பயிற்சி
 ****

நண்பர் (பதிவர்), பங்கு வணிக முதலீடுகளுக்கு , சோதிட அடிப்படையில் ,முடிவு எடுக்க கற்பிப்பதாக விளம்பரம் செய்கிறார்.அப்படி கற்பிப்பதற்கு சில ஆயிரம் ரூபாய்கள் வரை தொகையாகவும் நிர்ணயம் செய்கிறார் என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தியது

சோதிடம் என்பது  சில கோள்கள்,நட்சத்திரம் போன்றவை, ஒருவரின் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துகின்றன என்பதும் பிறந்த நேரம் சார்ந்து அவை கணிக்கப்படுகின்றன. டாலமியின் புவிமையக் கோட்பாட்டின் கணித அடிப்படையில் கோள்களின் இயக்கம் கணிக்கப்படுகிறது. கோள்களின்  இருப்பிடம் சார்ந்து பலன்கள் என கணிக்கிறார்கள்.சோதிட அடிப்படையில்  திருமணம், புதுமனை வாங்குதல்,விற்றல், தொழில் தொடங்குதல் என பல விடயங்கள் நடக்கின்றன.
சோதிடம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விடயம்.ஒருவரின் மனதுக்கு ஆறுதல் கொடுப்பது என்ற அளவில் மட்டுமே ஏற்கலாம். மற்றபடி எதிர்கால விடயங்களை சரியாக கணித்து அதன் மூலம் பங்கு வணிகத்தில்  இலாபம் அடையலாம் என்பது நிச்சயம் அறிவார்ந்த செயல் ஆகாது.
ஏன் சோதிடம் என்பது மோசடி என்பதை இக்காணொளி விளக்குகிறது




ஆகவே  பங்கு வணிகத்தில் சாதகம்,பாதகம் இரண்டும் உண்டு. அதனை அனுமானித்து மட்டுமே முதலீடு செய்யவும். சோதிடம் சார் பங்கு வணிக கணிப்பு என்பதை தவிர்த்தல் உங்களின் பணத்தை பாதுகாத்து சேமிக்கும்.
http://articles.orlandosentinel.com/2013-08-13/business/os-broker-pleads-guilty-prison-20130813_1_ex-broker-ponzi-scheme-fraud

Ex-broker who ran astrology-based investment scheme pleads guilty to fraud, sentenced to prison

August 13, 2013|By Richard Burnett, Orlando Sentinel

நன்றி!!!!