Showing posts with label darwin. Show all posts
Showing posts with label darwin. Show all posts

Saturday, February 11, 2012

நினைவு கூறுவோம் டார்வின் நாள் பிப்ரவரி 12


வணக்கம் ந்ண்பர்களே,
உயிர்களின் தோற்றம் பற்றிய இப்போதைய அறிவியல் கொள்கையான பரிணாம் கொள்கையின் பிதாமகன் திரு.சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளான பிப்ரவர் 12 ஐ அவருடைய தினமாக உலக முழுவதும்  அறிவியலாளர்கள்,கொள்கை கற்கும் மாணவர்கள்,ஏற்பாளர்கள் பலரும் கொண்டாடுகிறோம்.அவரை பெருமைப் படுத்தும் விதமாக முனைவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் தயாரித்த சார்லஸ் டார்வினின் உன்னத அறிவு என்ற ஆவணத் திரைப்படம் வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி.

டார்வின் வெளியிட்ட இயற்கைத் தேர்வின் மூலம் உயிர்களின் தோற்றம் என்ற புத்தகம் உலக முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் தாக்கங்கள் இன்னும் எதிரொலிக்கின்றது.அறிவியல் தேடல் உள்ள ஒவொருவரும் படிக்க வேண்டிய அரிய புத்தகம்.கடந்த 150+ வருடங்களாக டார்வினை எங்கும், எப்போதும் எதற்கும் விமர்சிக்கும் மதவாதிகளின் கூக்குரலே இதற்கு அத்தாட்சி!!!!!!!!!!!!!

இக்காணொளி மூன்று பகுதிகளை உடையது.முதல் பகுதியில் ஒரு பள்ளிக்கு செல்லும் ரிச்சர்ட் டாகின்ஸ் அங்குள்ள மாணவர்களுடன் உரையாடி,அவர்களை சுற்றுலா போல் அழைத்து சென்று படிமங்கள் சேகரிக்க ,ஆய்வு செய்ய கற்று தருகிறார்.அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.இயற்கைத் தேவின் மூலம் டார்வின் பரிணாம் வளர்ச்சி என்னும் கொள்கையை எப்படி வடிவமைத்தார் என்பதையும் விள்க்குகிறார்.

இரண்டாம் பகுதியில் கென்யா செல்லும் டாக்கின்ஸ் அங்கு மனித  பரிணாம  வளர்ச்சி பர்றிய சான்றுகள்,மத குருக்களுடன் உரையாடல்,சமுக டார்வினியம் என்னும் தவறான் பயன்பாட்டு முயற்சி பற்றியும் விளக்குகிறார்.

மூன்றாம்& இறுதி பகுதியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோன்றிய பரிணாம எதிர்ப்பு பற்றி விளக்குகிறார்.

HAPPY DARWIN DAY!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!