Tuesday, March 6, 2012

பரிணாம கொள்கை மறுப்பாளர்களுக்கு ஒரு ஆலோசனை!!!!!!!!





Darwin's (Galapagos) Finches 





வணக்கம் நண்பர்களே இவ்வருட தொடக்கத்தில் இருந்து பரிணாம கொள்கையின் மாற்றாக் முன் வைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] குறித்து தொடர் கட்டுரை எழுதி வந்தோம்.அதன் முக்கிய கொள்கையாக்கமான எளிமைப் படுத்த முடியாத சிக்க்லான வடிவமைப்பு[irreducible complexity] பற்றியும் அறிந்தோம். பிறகு அதன் இன்னொரு முக்கியமான்  வில்லியம் டெம்ஸ்கியின் பரிணாம் செயலாக்க முறைகளின் மீது கணித ரீதியான் விமர்சனம் வரும் பதிவுகளில் அறிவோம்.

கடந்த சில பதிவுகளில் பரிணாம கொள்கை எதிர்ப்பு கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தோம் ஆகையால்  அ.வ‌ தொடர்  கொஞ்சம் தடை பட்டதற்கு வருந்துகிறோம்..

இப்பதிவில் பரிணாம எதிர்ப்பாளர்கள் தங்கள் விவாதத்தின் நிலை என்ன என்பதை தெளிவாக் கூறாமல் குழப்புவதையே நோக்கமாக் கொண்டு கேள்வி கேட்பதை அறிந்தாலும்,அவர்களின் நிலையை தெளிவு படுத்தவே இப்பதிவு.

பரிணாம கொள்கை[பிற கொள்கைகள் போல்] விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை..பரிணாம கொள்கையின் தந்தை திரு சார்லஸ் டார்வினே தனது உயிரினங்களின் தோற்றம் புத்த்க்கத்தின் 6ஆம் அத்தியாயம் பரிணாம் கொள்கையின்  கொள்கையின் சிக்கல்கள் பற்றியே எழுதி இருக்கிறார்

1.ஒரு உயிர்ன குழுவில் இருந்து வேறு ஒரு(சில) உயிரின குழு[க்கள்] பரிணமித்தால் ஏன் அதிகமான் இடைப்பட்ட படிமங்கள் கிடைக்கவில்லை?. ஏன் உயிரின குழுக்கள் சரியாக் இயல்பாக குழப்பமின்றி வரையறுக்கப் பட்டது போலவே தோன்றுகின்றன?


Firstly, why, if species have descended from other species by insensibly fine gradations, do we not everywhere see innumerable transitional forms? Why is not all nature in confusion instead of the species being, as we see them, well defined?


2. வவ்வால் போன்ற வித்தியாசமான் குணங்கள் கொண்ட உயிரினம் ,வேறு குணங்கள் கொண்ட உயிரினத்தில் இருந்து பரிணமித்து இருக்க முடியுமா?ஒட்டகச் சிவிங்கியின் வால்,உயிரினங்களின் கண் போன்ற சிக்க்லான் அமைப்பு கொண்ட உறுப்புகள் இயற்கத் தேர்வினால் வடிவமைக்கப் பட்டு இருக்க முடியுமா?


Secondly, is it possible that an animal having, for instance, the structure and habits of a bat, could have been formed by the modification of some animal with wholly different habits? Can we believe that natural selection could produce, on the one hand, organs of trifling importance, such as the tail of a giraffe, which serves as a fly-flapper, and, on the other hand, organs of such wonderful structure, as the eye, of which we hardly as yet fully understand the inimitable perfection?


3.ஒரு உயிரினத்தின் தனிப்பட்ட‌   குணங்களை இயற்கத்தேர்வினால்  மாற்ற‌ முடியுமா? கணித மேதைகளின் அற்புதமான கண்டுபிடிப்புகள் போன்ற தெனீயின் சிக்க்லான் கூடு கட்டும் குணத்தை[திறனை]  குறித்து நாம் என்ன சொல்ல முடியும்?


Thirdly, can instincts be acquired and modified through natural selection? What shall we say to so marvellous an instinct as that which leads the bee to make cells, which have practically anticipated the discoveries of profound mathematicians?


4.தங்களுக்குள் இனவிருத்தி செய்யக் கூடிய உயிரினத்தை[fertile] பெறும் உயிரின‌ங்களின் குழுக்கள் அவ்வாறு இனவிருத்தி செய்யக் கூடிய உயிரினத்தை .தங்களுக்குள் உருவாக்க முடியாதது ஏன்?
[குதிரை+கழுதை=கோவேறு கழுதை[மலடு] பற்றியே கூறுகிறார்.]


Fourthly, how can we account for species, when crossed, being sterile and producing sterile offspring, whereas, when varieties are crossed, their fertility is unimpaired?


இபோது பரிணாம் கொள்கையின் மீதான பல விமர்சனங்களின் பிதாமகன் யார் என்பதை அறிந்து இருப்பீர்கள்.இக்கேள்விகளுக்கு பின் வந்த அறிவியலாளர்கள் விடையளித்து விட்டார்கள். நம் முந்தைய பதிவுகளில் கூட விவாதித்து இருக்கிறோம்.டார்வினுக்கு பிறகு பல இடைபட்ட படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டதும்,பல் சிக்க்லான வடிவமைப்புகள் எளிமைப்ப்படுத்தப் பட்டதும் ,மூலக்கூறு அறிவியலின் முன்னேற்றமும் இவைகளுக்கு விடை அளித்து விட்டன!!!!!.

.அவரால் சில [சிறு] பரிணாம எடுத்துக் காட்டுகளாக கலாபாகஸ் தீவின்  பறவைகளின் பல் வகைகள் உருவாதல்,நாய்களில் பல வகைகளின் சில வகை ஓநாய் முன்னோர்கள்,மயில்களின் தோகை வளர்ச்சி போன்றவை அப்புதக்த்த்தில் ஆய்வு ரீதியான் சான்றுகளாக் குறிப்பிடுகிறார்.  

இத்னை விரிவு படுத்தியே அனைத்து உயிரினங்களும் ஒரே முன்னோரில்[common ancestor] இருந்து தோன்றி இருக்க வேண்டும் என்ற கொள்கையை வடிவமைத்தார்.அதன் காரணிகளாக இயற்கைத் தேர்வு,சிறு மாற்றங்கள் என்று சரியாக்வே மிக பொருந்தும் வகையில் வடிவமைத்தாலும் அது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது.

டார்வினின் இந்த சுய விமர்சனம் ஒவ்வொரு அறிவியலாளரும்[இதர கொள்கையாளர்களும் ]பின்பற்ற வேண்ட விடயம்.சுய விமர்சனம் என்பது அறிவியலின் ஒரு த்ன்னை சரிபார்க்கும் செயல்முறை என்பது அனைவரும் அறிவோம். மதவாதிகள் விமர்சனங்களை எதிர்கொண்ட விதத்தை வர்லாற்றின் இரத்தம் தோய்ந்த பக்கங்களும்,இப்போதைய சில நிகழ்வுகளும் எடுத்துக் காட்டுகின்றன.நாம் பரிணாமத்தின் மீதான அறிவியல் ரீதியான‌ விமர்சனங்களை வரவேற்கிறோம். பதில் அறிந்தவரை அளிக்க முயற்சிக்கிறோம்!!!!!

இப்போதைய மூலக்கூறு அறிவியலின் முன்னேற்றத்தால் பரிணாமம்  எப்படி நடக்கிறது என்பது சரியாக் விள்க்கப்பட்டு விட்டது. பரிணாம்த்தை சோதிக்கும் நிரூபிக்கும் சிலஆய்வுரீதியான பரிசோதனைகள் நடப்பதும் அது குறித்தும் சில பதிவுகள்  எழுதுவோம்.

இன்னும் சில விடயங்கள் பரிணாம் எதிர்ப்பு நண்பர்கள் அறியத் தருகிறேன்.நிச்சயமாக [பெரும் Macro evolution] பரிணாம மாற்றங்கள்  100% நிரூபிக்கப்படவில்லை என்பதை ஒத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை மட்டுமே வலியுறுத்துகிறோம். இந்த 150+ வருடங்களில் பரிணாமத்திற்கு எதிரான் ஆதாரம் எதுவுமே இல்லை என்பதால்தான் முதலில் எதிர்த்த அறிவியல் உலகம் பிறகு உயிரின தோற்ற கொள்கையாக் ஏற்றது.உலகின் பல பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப் படுகிறது.இன்னும் பல் கேள்விகள் விடையளிக்கப் ப‌ட வேண்டும்.. அக்கேள்விக்கான் விடைகள் விவாதமாக பல ஆய்வுக் கட்டுரைகள் ஆய்விதழ்களில் வெளிவருகின்றன.

விமர்சகர்கள்  தாங்களின் சரியான‌ நிலை என்ன என்பதை அறிந்து விவாதிப்பது பதிவு படிக்கும் நண்பர்களுக்கு நன்மை பயக்கும்.சிறு பரிமாணம் என்பதை அவர்களும் எதிர்க்க முடியாது இது ஆய்வு ரீதியாக் உறுதிப் படுத்தப்பட்ட விடயம்.

பரிணாம் எதிர்ப்பாளர்கள் சிறு பரிமாணம்[micro evolution] என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்பதால் இதனை எதிர்ப்பது இல்லை.அவர்களின் வாதம் எல்லாம் இந்த சிறுமாற்றங்கள் ஒரு உயிரின தொகுதிகளுள்ளேயே மட்டுமே வித்தியாசமான் சந்ததிகளை,உருவாக்க முடியும்.ஒரு குழு உயிரினங்களுக்கு ஒரே [அதே குழுவை சேர்ந்த]முன்னோர் என்பதையும் ஆய்வுப்பூர்வமாக் அறிய முடிவதால் இதனையும் எதிர்ப்பது இல்லை.இதற்கு எடுத்துக்காட்டாக சில  வகை ஓநாய்களில் இருந்து பரிணமித்த‌ நாய்களின் பரிணாம் வளர்ச்சி அறியலாம்.சில ஆயிரம் ஆண்டுகளில் அதன் குணம் ,உடல் அமைப்புகள்,பல் வகைகள் போன்றவை மாறியது கண்கூடு.





ஆகவே அவர்கள் இயற்கைத் தேர்வும்,சிறுமாற்றங்கள் ஒரு உயிரினக் குழுவை இன்னொரு உயிரின குழவாக் மாற்றாது[பெரும்பரிமாணம்] என்ற நிலைப்பாட்டில் விவாதிப்பது நனமை பயக்கும்.அவர்கள் இது குறித்தே விவாதிப்பது பல் தக்வல்கள் பகிர உதவும் என்பதே நம் வேண்டுகோள். பரிணாமம் நண்பர்கள்,எதிர்ப்பாளர்கள் அதிகம்[ சரியான] கேள்வி கேட்பதையே விரும்புகிறோம்.

ஆகவே படைப்பியல் தாதாக்களின் கருத்தை பரிணாம் விமர்சகர்கள் அறியத் தருகிறோம்.

 

Microevolution

Microevolution is a quantum of evolution that is supported by observations of living organisms. It describes the varieties that develop within a population, which are due to changes in genefrequency over time. The term microevolution typically refers to the small scale changes in organisms within the same species, which can lead to a subspecies or even new species. Such evolution is consistent with the creationist view and supports the diversification of the Biblical kinds following the flood of Noah.
It is however, important to note that the variation observed in living organisms is limited. This has been exemplified by centuries of domestic breeding history. There are today many varieties of dogs, but they remain dogs. There are many variations of livestock such as horses or cows, but again they are simply varieties of distinct kinds. This diversification does not necessarily or inherently lead one to the concept that all living creatures came from a common ancestor. An atheistic philosophy was responsible for such a conclusion.
Microevolution is distinguished from macroevolution, which is a larger scale change that results in the formation of higher taxanomic groups. It should however, be noted that many creationists caution against using the term or terms when debating.
Scientific American draws the following distinction:
“
Microevolution looks at changes within species over time—changes that may be preludes to speciation, the origin of new species. Macroevolution studies how taxonomic groups above the level of species change. Its evidence draws frequently from the fossil record and DNA comparisons to reconstruct how various organisms may be related.[3]

பரிணாம் கொள்கை சொல்வது அனைத்தும் தவறு என்பது அவர்களின் [மத பிரச்சார‌வாதம் உள்ளிட்ட அனைத்து] வாதங்களை முற்று முழுதாக் தவறாக்கி விடும். நாம் விவாதிப்பது பல விடயங்களை பல்ருக்கும் பயனளிக்கும் வகையில் பகிரும் என்பதை நம்புபவர்கள்.

ஆகவே


1.சிறு மாற்றங்கள் [ஒரு உயிரின குழுவில்]பல்வேறு வகைகளை உருவாக்குகிறது.

2.அதில் சூழலுக்கு பொருந்துபவை பெருகுகின்றன.பொருந்தாதவை அழிகின்றன்.

3.மாற்றம் என்பது ஒரு உயிரின தொகுதிகளுக்குள் மட்டுமே நடக்கிறது.

எனபதுதான் [பெரும்] பரிமாண எதிர்ப்பாளர்களின் சரியான வாதமாக இருக்க முடியும்.

என்ன நண்பரே சேம்சைட் கோல் போட்ட மாதிரி சொல்கிறீர்கள் என்றால்,இந்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் வருவதே இன்னும் பல் தக்வல் பகிர ஆவண செய்யும் ,பெரும் பரிமாண்மும் ஐயந்திரிபர நிரூபிக்க சான்றளிக்க இப்போது  முடியுமா என்ற தேடலை ஏற்படுத்தும் என்பதுதான்.

டார்வினின் இயற்கைத் தேர்வும்,சிறுமாற்றங்களும் சிறு பரிமாணத்தை மட்டும் ஏற்படுத்தும் என்பது டாக்கின்ஸ் எவ்வளவு ஆத்திகரோ அவ்வளவுதான் உண்மை!!!!!!ஹி ஹி ஹி.

ஒரு உயிரின குழுவின் சரியான் வரையறுப்பே இருக்க முடியாது[species problem] என்னும் போது ஒரு உயிரின குழுவிற்கு உடப்ட்ட மாற்றம் சிறுபரிமாணம் ஆக மட்டுமே இருக்க முடியுமா என்பதை நண்பர்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

சரி மீண்டும் அடுத்த பதிவில் இருந்து அ.வ[ID] கொள்கைக்கு வருவோம்..விவாதங்களுக்கு இடையில் பதில் அளீப்போம்!!!!!!!!

நாம் மிகவும் இரசித்து பார்த்த இன்னொரு காணொளி!கண்டு களியுங்கள்!





நன்றி!!!!!!!!!!!!!!!!
Thanks Google

Thursday, March 1, 2012

எய்ட்ஸ் நோயை[HIV infection] விட கொடிய‌ வைரஸ் கிருமி கண்டுபிடித்த பரிணாம எதிர்ப்பாளர்!!!!!!




கடந்த சில பதிவுகளில் பரிணாம எதிர்ப்பாளர்கள் அளிக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். சென்ற பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் படிம வரலாறு,இடைப்பட்ட படிமங்கள் பற்றி  கருத்து கூற மாட்டேன் ஆனால் பரிணாம் செயலாக்கம்  பற்றி மட்டுமே கேள்வி கேட்பேன் என்றார்.ஏற்கெனவே மதம் பற்றியும் எதிர் கேள்வி கேட்டால் ஓடி விடுவார்கள்  என்பதாலும், கேள்வி[பொன்?] முட்டை போடும் வா(த)த்தை அறுக்க விரும்பாமல் அதற்கும் சம்மதித்து விவாதத்தை தொடர்ந்தோம்.


பரிணாம் செயலாக்கம் பற்றி விள்க்கியது சரியாக் இருக்கும் போல் தெரிகிறது அதை பற்றி எதுவும் கூறாமல் சிறு மாற்றங்கள்[mutations] எந்த ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது ,என்ற கருத்து கூறினார்.

அதற்கு நாம் எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் CCR5 என்னும் சிறுமாற்றம் இது ஐரோப்பிய மேற்காசிய 10% மக்களிடம் காண்ப்படுகிறது என்னும் ஆய்வுக்க்ட்டுரை அளிதோம். இந்த சிறுமாற்றம்  7000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாக அக்கட்டுரை கூறுகிறது.

வைரஸ்களிலும் சிறுமாற்றம் ஏற்பட்டு அவைகள் மருந்தை விட சக்தி பெற்று வருவதை பரிணாமம் என பரிணாம எதிர்ப்பாளர் ஏற்கமாட்டார் என்றாலும் அது பற்றி ஆய்வு செய்யாமல் எவரும் நோய்களுக்கு மருந்து தயாரிக்க முடியாது.


இது பற்றி ஆய்வு செய்யும் ஒரு குழு.


வைரஸ் சக்தி பெறுவது வைரசுக்கு நீடித்து வாழ உதவுவதால் அதற்கு முன்னேற்றம்தான்.இதை எதற்கு சொல்ல வேண்டும் அவர் சொன்ன கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க வேண்டும் என்றாலும் பல் தகவல்கள் பகிர்வது நல்லதுதானே!.

டார்வின் மருந்தியல் என்ற துறையே இபோது வளர்ந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் நலம். சரி கேள்விக்கு போகலாம்!.


நாம் காண்பித்த இரு சிறுமாற்ற நிகழ்வுகள் முன்னேற்ற‌ம் அல்ல என்கிறார் நண்பர். நாம் கூறியது இந்த இயற்கையாக ஏற்பட்ட  CCR5 சிறுமாற்றம் ஐரோப்பிய,மேற்காசிய மக்களிடம் எய்ட்ஸ் கிருமி எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தி உள்ளது.ஆகவே இந்த சிறுமாற்றம்  செயற்கையாக ஏற்படுத்தி எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலான சில மருந்துகளும் உண்டு.


நண்பர் இப்படி சிறுமாற்றம் உள்ளவர்களுக்கு ஒரு வைரஸ் [West Nile virus] மூலம்  பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்ற அறிவியல் கட்டுரை அளித்தார்.

நாம் யார் எது சொன்னாலும் முதலில் காது கொடுத்துக் கேட்போம்.எய்ட்ஸ் என்பது கொடுமையான‌ வைரஸ் கிருமி என்பது அனைவருக்கும் தெரியும்.அப்போது அந்த West Nile virus வைரஸ் எய்ட்ஸ் கிருமியை விட  கொடியதாக் இருந்தால் மட்டுமே சாதிக் சொன்னது சரி.

நண்பர் சாதிக் கூறியது இதுதான்!

//இந்த mutationஆல் ccr5 receptor பழுதடைவதால் HIV கிருமி T cell க்குள் நுழைய முடிவதில்லை. இதனால் HIV கிருமி தாக்கும் வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். இதனால் பாதகமும் ஏற்படுகிறது. இந்த mutation T cell உடைய செயல்பாட்டை (நோய் எத்ர்ப்பு சக்தி) பாதிக்கிறது. இந்த mutation உள்ளவர்களுக்கு West Nile virus என்ற கிருமி தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.//

முதலில் சாதிக் காட்டிய சுட்டியில் இருந்து சிலவற்றை பார்ப்போம். கட்டுரை ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழாக்கம் அளிக்கிறோம்.த்வறு இருப்பின் சுட்டிக் காட்ட அன்போடு அழைக்கிறோம்.இவை அனைத்தும் சாதிக் காட்டிய சுட்டியில் இருந்தே

http://www.niaid.nih.gov/news/newsreleases/2006/pages/ccr5.aspx


A )People who lack a cell surface protein called CCR5 are highly resistant to infection by HIV but may be at increased risk of developing West Nile virus (WNV) illness when exposed to the mosquito-borne virus, report researchers from the National Institute of Allergy and Infectious Diseases (NIAID), part of the National Institutes of Health (NIH).

மனிதர்களில் CCR5 சிறுமாற்ற‌ம் கொண்டவர்கள்  கிருமிக்கு எதிர்ப்பு சக்தி பெற்று இருப்பது உண்மை என்றாலும் இவர்கள் West Nile virus (WNV) வைரஸால் பாதிக்கப்பட்ட கொசு கடித்தால் அந்த வைரஸ் நோய் பெறும் வாய்ப்பு அதிகம். இத்னை National Institute of Allergy and Infectious Diseases (NIAID),ஆய்வாளர்கள் அறிவித்தனர்

B)// The findings may have cautionary implications for physicians who are treating HIV-positive individuals with experimental CCR5-blocking drugs, say the scientists.//

இது எய்ட்ஸ் நோய்க்கு CCR5 சிறுமாற்றம் செயற்கையாக மருந்து மூலம் ஏற்படுத்தி குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை தாக்கங்களை ஏற்படுத்த‌லாம் என அறிவியலாள‌ர்கள் கூறுகின்றனர்.

C)// Most people inherit two normal copies (one from each parent) of the gene that codes for CCR5 protein. About 1 percent of North American whites, however, have a mutation in both copies (are homozygous) and thus do not produce any CCR5. These individuals have the good fortune of being highly resistant to HIV infection and otherwise seemed to suffer no ill effects from the absence of this receptor protein, scientists noted. But the new research by Dr. Murphy’s team suggests that lacking CCR5 may not be an unalloyed good after all.//

வட அமெரிக்க வெள்லையின மக்களில் 1% இந்த two copies CCR5 சிறுமாற்றம்  பெற்று உள்ள்னர்.இவர்களுக்கு எய்ட்ஸ் எதிர்ப்பு சக்தி உள்ளதும்,இவர்கள் சாதாரணமாக இருப்பதும் இப்போது இந்த ஆய்வினால்  கேள்விக்கு உள்ளாக்ப்பட்டு உள்ளது.அதாவது இந்த two copies CCR5 சிறுமாற்றம் முற்று முழுதும் நல்லது அல்ல.

D)//Dr. Murphy and his colleagues determined that 4.5 percent of 247 WNV-positive samples from Arizona were from patients who had two copies of the CCR5 mutation. In contrast, a control group of 145 WNV-negative blood samples showed 0.7 percent were from people who had two copies of the CCR5 mutation—a number in line with the expected 0.8 to 1 percent range believed to be present in all North American whites. Next, the researchers analyzed the WNV-positive samples from Colorado and determined that 4.1 percent of the entire set of 148 samples came from individuals homozygous for the CCR5 mutation. Among those Coloradans who provided WNV-positive samples and who self-reported their race as white, the percentage of homozygous individuals was 8.3.//

பரிசோத்னையில் அரிஜோனா மாநிலத்தில் 4.3 %,[from sample of 247]கொலராடோ மாநிலத்தில் 4.1% [from sample of 148], வெள்ளையின மக்களில் 8.3% [from no data] two copies  CCR5 சிறுமாற்றம் கொண்டவர்கள் வெஸ்ட் நைல் விரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


அச்சச்சோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த சிறுமாற்றம் உல்ளவர்களுக்கு எய்ட்ஸ் வராமல் போனாலும் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பது தெரியாமல் கூறிவிட்டோமா!.அவ்வளவுதான் அதிலும் நண்பர் சாதிக் இந்த வைரஸ் பற்றி  நமக்கு பற்றி கூறி இருப்பதால் இது எய்ட்சை விட கொடிய வைரஸ் என உலகில் கண்டுபிடித்தவர் டாக்டர் சாதிக்தானே!

இந்த வைரசும் பரிணாம் வளர்ச்சியில் உருவானதாக விக்கிபிடியா கூறினாலும் அவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றே கூறுவார் என்பதும் அறிந்ததே.


சரி மருந்தே இல்லாத நோயா என்றால் AMD 3100 மருந்து எய்ட்ஸ்+ வெஸ்ட் நைல் வரஸ் நோய்க்கும் பயனளிக்கும் என்கிறார்கள்.சரி அது என்ன என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறு மாற்ற‌த்தை CXCR4 செயற்கையாக் உருவாக்குகிறது என்கிறார்கள்.

இதனை வைத்து மனித்னின் எய்ட்ஸ்க்கு தடுப்பூசி போல் கண்டுபிடித்து விடுவார்கள் போலும் தெரிகிறது.

Background: Recently, an HIV-infected individual with leukemia received a bone marrow transplant from a ccr5?32 homozygous donor, a mutation that naturally confers resistance to HIV infection. Nearly 3 years post-transplant, this individual's viral load remains undetectable in the absence of ART. Our long-term goal is to recapitulate this success, by genetically disrupting the HIV co-receptors CXCR4 and CCR5 to engineer HIV-resistant CD4+ T cells for autologous transplant.

ஆகவே  CXCR4 க்கும் ஒரு கெடுதல் கண்டு பிடிக்க சாதிக்கை வேண்டுகிறோம்


சிறு மாற்றங்கள் நிறைய கைவசம் இருப்பதால் இன்னும் நிறைய பதிவு எழுத உதவி புரிய வேண்டுகிறோம்.

சிறு மாற்ற‌ம் நம்மை ஏமாற்றாது!!!!!!!!!!!!!.

சரி சாதிக் அந்த CXCR4 சிறு மாற்றத்திற்கு  ஒரு கெட்ட பெயர் ஏற்படுத்துவதில் மும்முரமாகி விடுவார். நாம் வெஸ்ட் நைல் வைரஸ் பற்றி இன்னும் கொஞ்சம் விவரம் அறிவோம்.


இந்த சுட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்  அமெரிக்காவில் ம‌ட்டும் கண்க்கீடு வைத்து உள்ளார்கள்.2011 ல் இருந்து 2012 ஜன்வரி 10வரை அமெரிக்காவில் மொத்தம் 690 பேர் பாதிக்கப்பட்டு 43 பேர் இறந்து விட்டார்கள்.


இந்த வைரஸ் ஒரு வருடத்தில் அமெரிக்காவின் 30 கோடி மக்கள் தொகைக்கு 600+ ஆட்களை பாதித்து, 40+ ஆட்களை கொல்கிறது.கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தினால் இது இன்னும் குறையலாம்.ஆனால் எய்ட்ஸ் என்பது இன்னும் உயிர்க் கொல்லி நோய் அதற்கு மருந்தாக் இந்த இரு சிறுமாற்றங்களும் பயன் படுகின்றன என்பதுதான் உண்மை.

ஆகவே வெஸ்ட் நைல் வைரஸ் வரும் வாய்ப்பு குறைவு,

வந்தாலும் குணப்படுத்தி விடலாம்.

இது எப்படியெனில் டாக்கின்ஸ் மதம் சாராத கடவுள் இருப்பதற்கு சிறு நிகழ்தகவு அளித்தது சுவனப்பிரியனுக்கு ஆத்திகமாக தெரிந்ததோ அதுபோல் CCR5 சிறுமாற்ற‌ம் எய்ட்க்கு எதிர்ப்பு சக்தி அளித்தாலும் எங்கேயோ,எப்போதாவது வரும் ,அதிகம் பாதிக்காத WNV வைரஸ் அந்த சிறுமாற்றம் உளள் வரை பிறரை விட அதிகம் பாதிக்கும் வாய்ப்பு  என்பது இவருக்கு மோசமான் விளைவாக் தெரிகிறது.எனக்கு இருவர் சிந்தனைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இது CCR5 க்கு மட்டுமே CXCR4 ல் இந்த குறைபாடு கூட கிடையாது.இதிலும் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்க அன்போடு பரிணம் எதிர்ப்பாளர்களை வேண்டுகிறோம்.

இன்னும் டாக்டர்  சாதிக்கின் இரு கேள்விகள் இருக்கின்றன.  அதற்கும் பதில் அளிப்போம்.





http://www.videojug.com/interview/hiv-treatment-and-combinations

நன்றி!!!!!!!!!!!!!!