Wednesday, March 20, 2013

பரதேசியின் பறை ஓங்கி ஒலிக்கட்டும்!!!


.
வணக்கம் நண்பர்களே,

இயக்குனர் பாலாவின் திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்து இருந்தாலும் பரதேசி படம்  ஒரு பாதிப்பு ஏற்படுத்தியது என்பதால் அந்த பாதிப்பை பதிவாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற முடிவே இப்பதிவு.

வரலாறு,அறிவியல் என்பவை மனிதனை கடந்தகால நிகழ்வுகளில் இருந்து கற்று,நிகழ்காலத்தில் வாழ்ந்து,எதிர்காலத்தினை கணிக்கும் விடயங்கள் என்பதால் இரண்டிலும் ஆர்வம் உண்டு.

நமது வரலாறை ஆவணப் படுத்தும், பாமர மக்களிடையே கொண்டு செல்லும் எந்த முயற்சியும் பாராட்டத் தக்கதே. அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு முதல் பாராட்டினைத் தெரிவிக்கிறோம்.

ஒரு மக்கள் குழுவின் ,மூன்று கால கட்ட வரலாற்றினை படம் சொல்கிறது.

1. தென் தமிழக சாலூர் கிராமத்தில் வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதிக்குழுவின் எதார்த்த வாழ்வு. வறுமை இருந்தாலும், உழைப்பு சுரண்டப் பட்டாலும், சுதந்திரமாக ,மகிழ்ச்சியாக வாழ்ந்த சூழல் முதலில் காட்டப் படுகிறது.
ஒரே சாதிக்குள்ளும் பொருளாதாரம் சார்ந்து ஏற்றத் தாழ்வு இருப்பதும் நாயகனுக்கு, நாயகியை திருமணம் செய்ய மறுக்கும் தாயின் மனநிலையாக காட்டப் படுகிறது.

அவர்களின் வாழ்வாதாரம் சார் சூழல் சரியாக காட்டப் படவில்லை என்பதே நம் கருத்து. விவசாய பண்ணைகளில்,செங்கல் சூளைகளில் கூலிகளாக இருப்பவர்களின் வாழ்வில் படத்தில் காட்டப்பட்ட சுதந்திரம் கூட‌ கிடைக்குமா என்பது கேள்விக்குறியதுதான்.இந்த சூழலில் கூட குறைந்த கூலி,பாலியல் சுரண்டல் முதலானவை நடந்தது,இன்றும் கூட பல கொத்தடிமை மீட்பு போன்ற செய்திகளில் படிக்கிறோம்.கூலி  உயர்வு கேட்ட மக்களை குடிசையோடு கொளுத்திய சம்பவங்களும் வரலாறு.



2.இச்சூழலில் இருந்து பொருளாதார முன்னெற்றம் வேண்டி கங்காணி என்னும் ஏமாற்றுப் பேர்வழியின் பேச்சை நம்பி, கூட்டமாக சில மாதம் நடந்தே மூணார் தேயிலைத் தோட்டத்திற்கு வந்து சேர்கின்றனர். வரும் வழியில் சிலர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் போதே ,அவர்களை அப்படியே விட்டுவிட்டு செல்வது வரும் துன்பத்திற்கு இலேசான முன்னோட்டமாக எடுக்கலாம்.

தேயிலை என்பது சீனாவில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப் பட்டு வந்தது, வெள்ளையருக்கு இது பற்றி 17 ஆம் நூற்றாண்டில் தெரிய வந்ததும், இதனை உலக முழுதும் அறிமுகப் படுத்தி,ஒரு சந்தையை உருவாக்கி வெற்றி கண்டனர். சீனா தெயிலைக்கு போட்டியாக மலை சார் நிலங்களில் காட்டை அழித்து ,தேயிலைத் தோட்டம் உருவாக்கினர்.எப்போதும் சீன,மேலை நாடுகள் வியாபார,ஆதிக்க போட்டி பலரின் துன்பங்களுக்கு குறிப்பாக தமிழர்களின் துயரத்திற்கு காரணம் ஆவதை என்ன சொல்வது?.அந்த தேயிலைத் தோட்டங்களுள் ஒன்றுதான் படத்தில் காட்டப் படுகிறது.

இலாபம் அதிகரிக்க வெண்டும் எனில், வேலை செய்யும் தொழிலாளிகளின் உழைப்பை அதிகம் சுரண்டினால் மட்டுமே சாத்தியம் என்பதால் , அவர்களின் உழைப்பிற்கு மிக குறைந்த கூலி,அதுவும் வருட முடிவில் மட்டுமே கிடைக்கும் என சொல்லப் படுகிறது.

உணவு,வாடகை,மருத்துவம்,வட்டி என மிச்சம் மீதி எதுவும் மிஞ்சாது ,கடனில் எப்போதும் இருக்கும் படி சூழலில் தொடர்ந்து உழைத்தாக வேண்டும்.

உழைப்பில் உடல் குலைந்து ,ஆரோக்கியம் தொலைத்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்.

இப்படியே புதிதாக கூலிகள் வருவதும்,அங்கேயே பலர் உழைத்து சருகாகி மடிவதும்,தொடர்கதையாக நாடு சுதந்திரம் வரை நடந்தது.

இன்றும் கூட இந்திய,இலங்கை மற்றும் கென்யாவில் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மோசம் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. டீ'ன் விலையில் 1% மட்டுமே தொழிலாளர்களுக்கு இன்றும் செல்வதாக சொல்வது உரைக்கும் உண்மை.


சுதந்திரத்தின் பின் சில தொழிலாளர் உரிமைகள் பற்றி சட்டம் கொண்டு வரப் பட்டாலும், அவை நடைமுறைக்கு வராது. இச்சட்டங்கள் கங்காணி போல் தொழிலாளர் நல அலுவலர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.
Plantations Labour Act, 1951


3. மதமாற்ற பிரச்சினை: இப்போது புலம் பெயர்ந்த,ஒடுக்கப்பட்ட சாதிக் குழுவுக்கு, உழைப்புச் சுரண்டல் அல்லாமல் மதமாற்ற‌ப் பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுகிறது.

இச்சூழலை படத்தில் , மத மாற்றப் பிரச்சாரகன் கங்காணியை விட மோசமானவன் என்னும் ஒரு வாக்கியத்தில் மட்டும் காட்டி நம் கணிப்புக்கு கதையின் போக்கை விட்டுவிட்டு படத்தை முடித்து விடுகிறார்கள்.
***

முதலாளிகளின் மதமும், பிரசாரகரின் மதமும் ஒன்றாக இருப்பதாலும், இந்த மத மாற்றம் தொழிலாளிகளை மதரீதியாக பிரிக்கும் என்பதால் இது அனுமதிக்கப்டுவது மட்டும் அல்ல ஊக்குவிக்கப் படும். முதலில் மதம் மாறும் சிலருக்கு சில பொருளாதார வசதிகள் கிட்டும். இது கூட ஒருவகை விளம்பரமே. தொடர்ந்து மாறுபவர்களுகு பெயர் மட்டுமே மாறும், வேறு எதுவும் மாறாது.பெயர் மாறினாலும், ஒடுக்கப்படும் மக்கள் இடையே சில தலைமுறைகளில் பிரிவு நிரந்தரம் ஆகும்.

தமிழர்களில் மதம் மாறிய பெரும்பான்மையோரின் நிலை, இந்து சமூக ஒடுக்கப்பட்ட சாதியினரின் நிலைக்கு ஒப்பாக இருப்பது இதன் நிரூபணம் ஆகும். 

வாழ்வாதாரம் சார் போராட்டங்கள் திரிந்து மதம்,இனம் சார் பிரிவினைகளாக பரிணமித்தால் ஆயுதம் கொடுத்து போராக மாற்ற‌  வல்லூறுகள் பல உண்டு. முரண்பாட்டின் காரணி உணவு கொடுக்க மறுப்பவன், ஊரை அழிக்கும் ஆயுதம் கொடுப்பது ஏன் என போரிடும் இரு சகோதரக் குழுக்களும் உண்ர மாட்டார்கள்.நம் சாதி, மதம் சேர்ந்த்வன் ஆண்டாலும் நமக்கு எதுவும் செய்ய மாட்டான் என மக்கள் உணராத வரை இந்த ஏமாற்று வேலை தொடரும்.

ஆனாலும் மதம்,சாதி சார்ந்த பிரச்சினைகளில் , தனது ஒடுக்குதலையும் மறந்து ,கூட ஒடுக்கப்படும் சொந்த சகோதரர்கள் என்பதையும் மறந்து, தன் மத எஜமானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பல சமயங்களில் பதிவுலகில் கண்டு இருக்கிறோம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இதுபோல் ஆசை வார்த்தை காட்டி கூட்டி செல்லும்  கங்காணிகளும் உண்டு. கந்து வட்டிக்கு கடன் வாங்கி சென்றோர், பல வருடம் உழைத்து வீணாகப் போக வேண்டியதுதான். அங்கு சென்றால் அப்படித்தான்,போகாமல் ஊரில் இருக்க வேண்டியதுதானே என மதம் சார்ந்து சுரண்டலுக்கும் ஆதரவாக கூக்குரல் இடும் சகோக்களும் உண்டு.அந்த இடம் பூலோக சொர்க்கம், அங்கே தேவதூதர்கள் போல் எஜமான்கள் என்னும் பரப்புரைகள் பலவும்  படித்து இருக்கிறோம் அல்லவா!!!


சுரண்டும் எஜமானர்கள், கங்காணியாக மத்திய தர வர்க்கம், சுரண்டப்படும் விவசாயி,கூலித் தொழிலாளர்கள் என வைத்து பார்தாலும் சரிதான்.

முடிவாக சொல்வது மத்திய தர வர்க்க [பதிவுலக] கங்காணிகளே சுரண்டும் எஜமானை விட, சுரண்டப்படும் சகோதரனுக்கு குரல் கொடுங்கள் என்பதே!!!!!!!!!!!

கானா பாலாவின் இப்பாடல்(ம்) நம்க்கு மிகவும் பிடித்து விட்டது. இப்போது முணுமுணுக்கும் பாடல் இதுதான்.

கேளுங்கள்!!!!!!!!



இப்பாடலை மதமாற்றப் பிரச்சாரத்தை கிண்டல் அடிக்கும் விதமாக எடுத்து இருந்தாலும், அப்பாட்டில் வரும் பாமர மக்களின் இசை பறை ஒலி இவற்றுக்கு தீர்வு வராதா?? என நம்மைப் பார்த்து கேட்பதாகவே உணரலாம்.மனிதர்களின் பிரச்சினைகளை,மனிதர்களாகிய  நாம்தான் சுமுகமாக தீர்க்க வேண்டும்.

ஆகவே பரதேசியின் பறை ஒலி ஓங்கி ஒலிக்கட்டும்!!!!

நன்றி!!! 

Friday, March 15, 2013

அறிவியலின் இருமுகத் தன்மை



வணக்கம் நண்பர்களே,

இணையத்தை பயன்படுத்தும் பெரும்பான்மையோர் அறிவியல் பாடம் பள்ளியில் படித்து இருப்போம். ஏதோ சில விதிகள், வாயில் நுழையா பெயர்கள்,சூத்திரங்கள்,வரையறுப்புகள் என பலருக்கு எரிச்சல் ஊட்டிய பாடம் ஆகவே இருந்து இருக்கும். அறிவியல் என்பது என்ன? என்ற கேள்விக்கு சரியாக விடை சொல்வது கடினமே!!. பல பொருந்தும் வரையறுப்புகள் உண்டு,எங்கு குறிப்பிடுகிறோமோ அதற்கு தக்கபடி அதனைப் பயன்படுத்த வேண்டும்.

அறிவியல் என்பது அறியும் இயல் என தமிழில் சொல்கிறோம்,இயற்கையை ,அதன் நிகழ்வுகளை அறியும் இயல் என விளங்கலாம். இயற்கை என்பது என்ன என் அடுத்த கேள்வி வரும்.

இப்படி தொடர் கேள்விகளுக்கு விடை அளிப்பதும் அறிவியலே.இயற்கை என்றால் நாம் அறிந்த,உணர்ந்த விடயம் என்றாலும் இதன் மேலும் கேள்விகள் வரும்.

1.அறியாத/உணராத‌ விடயம் அறிவியல் இல்லையா?

2. அறிய இயலா /உணர இயலா  விடயம் அறிவியல இல்லையா?

முதல் கேள்வி சரியானது, புதிதாக் அறியும்,உணரும் விடயங்கள் அறிவியல் என்றாலும் சான்றுகள் வரும் வரை ஏற்கப் படாது.

இரண்டாம் கேள்வி குயுக்தியான தந்திரம் கொண்டது. முந்தைய கேள்விக்கு ஆம் எனில் இதுவும் உண்மையாக இருக்கலாமே என வாதிட முடியும்.

முதல் கேள்வி சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் உண்மை ஆகும். இரண்டாம் கேள்வி என்றுமே  சான்றுகள் அடிப்படையில் உண்மை ஆகாது.இதில் ஒரு சிக்கல் என்ன்வெனில் பொய் என்றும் சான்றுகள் காட்ட இயலாது.இந்தவகை விளக்கங்கள் போலி அறிவியலை கொண்டு வந்து விடும்.

ஆகவே அறிவியல் என்பது கிடைத்த அளவீட்டு சான்றுகளின் விளக்கம்.அந்த விளக்கத்தின் மீதான கணிப்புகள் எதிர்கால சான்றுகளையும் மெய்ப்பிக்க வேண்டும்.இப்படியே அறிவியல் ஒரு தொடர்கதை....

இது ஒரு அளவுக்கு பிரச்சினை இல்லாத விளக்கம் என்றாலும் சான்று என எதை ஏற்பது? என்பது இன்னும் அதிக சிக்கலான விடயம்.

ஆகவே அறிவியல் என வரையறுப்பதில் உள்ள சிக்கல்களை உணரவேண்டும்.
*

இப்பதிவில் அறிவியலின் இரு முகங்களை பார்க்கப் போகிறோம்.திருவிளையாடல் படத்தில் புலவ‌ர் தருமி[நடிகர் நாகேஷ் நம்ம அய்யா அல்ல] , புலவ‌ர் இறையனாரிடம்[ சிவனின் அவதாரம்]பல கேள்விகளை கேட்பார், அதில் ஒன்றுக்கொன்று முரணான விடயங்கள் பற்றியே அதிக கேள்விகள் வரும்.



இதில் கவனிக்க வேண்டியது கேள்விகள் ஒன்ன்றுக்கொன்று முரண்படுவது போல்,பதில்கள் முரண்படாது,அதிக பட்சம் தொடர்பு அற்று இருக்கும்.

பிரிக்க முடியாதது என்னவோ? - தமிழும் சுவையும்; 
பிரியக் கூடாதது? - எதுகையும் மோனையும்;

சேர்ந்தே இருப்பது? - வறுமையும் புலமையும்; 
சேராதிருப்பது? - அறிவும் பணமும்

சொல்லக் கூடாதது? - பெண்ணிடம் ரகசியம்; 
சொல்லக் கூடியது? - உண்மையின் தத்துவம்

பார்க்கக் கூடாதது? - பசியும் பஞ்சமும்; 
பார்த்து ரசிப்பது? - கலையும் அழகும்

இதை ஏன் சொல்கிறோம் என்றால் கேள்விகள் என்பது தேடல், முரண்படும் கேள்விகளின் விடைகள் முரண்பட அவசியம் இல்லை என்பதுதான். ஆத்திகம்,நாத்திகம் கூட விடையற்ற கேள்விகளுக்கு விடை தேடும் முறைகள் மட்டுமே!!!
**

அறிவியலில் அறிந்த விடயம்,அறியா விடயம் என இரு விதம் உண்டு என அறிவியலின் வரையறுப்பில் அறிகிறோம்.

அறிந்த என்றால் ஒரு அறிவியல் விதி என எடுத்துக் கொள்வோம்.

ஒரு அல்லது சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு இயற்கை நிகழ்வை, அதன் காரணிகளாக பகுத்து, அவ்ற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஒரு விதி ஆக்குகிறார்கள். நமது பள்ளி ஆய்வகங்களில் அதனை பரிசோதித்து ,ஆய்வு முடிவுகளை ஆவணப் படுத்துகிறோம்.

ஒரு வகுப்பில் ஒரே பரிசோதனையை பலர் செய்யும் போது , முடிவுகள் கொஞ்சம் மாறுபடும். இந்த வித்தியாசங்கள் ஒரு அளவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும்.அப்போதுதான் அந்த விதியை சரியாக பரிசோதித்து இருக்கிறோம்.அல்லது அந்த விதி மாற்றப்பட வேண்டும்!!!

அறிவியலின் படி இரு அளவுகள் சமம் எனில் அதன் வித்தியாசம் மிக குறைவாக இருப்பதே.

சரி ஏன் வித்தியாசம் வருகிறது?

பலர் ஒரு பரிசோதனையை ஒரே இடத்தில் செய்தாலும்,பயன்படும் பொருள்களின் நிலை சார்ந்து வரலாம்,அதாவது சூழல் சார்ந்து வரலாம். பொருள்களின் தன்மைகளும் சூழல்,காலம் பொருத்து மாறும்.அளவீட்டுக் கருவிகளின் தரம் மாறலாம். 

எப்படி இருந்தாலும் ஒரு பரிசோதனையை பலர் செய்யும் போது வித்தியாசம் வருவது இயல்பு. அந்த வித்தியாசம் அதிகரிக்கும் சூழல் வரும் போது,புதிய காரணிகள் விதிகளில் சேர்க்கப்படும்,விதி மாறும்.

ஆகவே ஒரு விதியில் சரியாக அளவிடும் மாறா தன்மை[Deterministic],மாறும் தன்மை[chance] இரண்டும் உண்டு.இந்த மாறும் அளவுகள் குறைவாக இருக்கும் வரை விதி ஏற்கப்படும்.

இதையே இருமுகத் தன்மை என்கிறோம்.

http://dualityscience.com

Duality also refers to phenomena having a twofold nature and characterized by states that are mutually exclusive. 

Rule= Deterministic +Chance

விதியின் மாறா பகுதியின் காரணிகள் நன்கு வரையறுக்கப்பட்டவை, நன்கு பரிசோதிக்க முடியும்,மாறும் பகுதி புதிய  அல்லது சில விளக்க இயலா காரணிகளால் இருக்கலாம்.

http://plato.stanford.edu/entries/determinism-causal/


இந்த நூற்றாண்டின் மிக முக்கிய மூன்று அறிவியல் கொள்கைகள் சார்பியல்,குவாண்டம் இயக்கவியல்,பரிணாமம் ஆகியவை ஆகும்.

இந்த இருமுகத் தன்மை இந்த மூன்றுக்கும் பொருந்துவது மட்டும் அல்ல,இந்த கொள்கைகள் கொண்டும் அறிவியலின் இருமுகத் தனமையை விளக்கலாம்.

சார்பியல்=மாறா விடயம் ஐன்ஸ்டினின் விதிகள், மாறும் விடயம் கருப்பு பொருள் இருப்பு சார்ந்து இதன் அளவீட்டு நிரூபணத் தன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகிறது.

குவாண்டம் இயக்கவியல்= நிகழ்த்கவு சார்ந்து அறியும் விடயம், ஒரு செயலின் வேகம்,இடம் ஆகியவற்றை நிகழ்த்கவு சார்ந்தே அளவிட முடியும் என்பது மிக சரியாக அறிவியலின் இருமுகத் தன்மையை விளக்குகிறது.

பரிணாமம்= மாறா விடயம்[deterministic] =சூழல் சார் மாற்றம் இயற்கைத் தேர்வு

மாறும் விடயம்[chance]=சூழல் சாரா மாற்றம், சீரற்ற மரபு விலகல்[Random Genetic Drift].

பரிணாம அறிவியல் ஆய்வாளர்களில் ஒரு செயல் இயற்கைத் தேர்வினால் நடந்ததா இல்லை,சீரற்ற மரபு விலகலா என் குடுமிப் பிடி சண்டை அடிக்கடி நடக்கும்.

மாறா விடயத்தை சரியாக கணிக்க முடியும் அளவுக்கு, மாறா விடயங்களை கணிப்பது விளக்குவதில் சிக்கல் உண்டு.

ஆகவே அறிவியல் விதிகளும் சூழல் பொறுத்து மாறும்.ஒவ்வொரு விதியும் சரியாக இருக்க நிகழ்தகவு உண்டு.

சூழல் என்னும் போது சார்பியல்,மாறும் என்பது பரிணாமம்,அதன் நிகழ்த்கவு என்பது குவாண்டம் ஆகும்.

அறிவியலில் ஒரு புதிய விளக்கம் அளிக்கும் போது அறிவியல் ஆய்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மட்டுமே செயல்படுவார்.

ஏன் எனில் அவர்கள் இந்த இருமுகத் தன்மையை உணர்ந்து இருப்பதால்.

பாருங்கள் சென்ற வருடம் ஹிக்ஸ் போசான் ஆய்வில் ,கண்டுபிடிக்கப்பட்ட‌
போசானைப்  தொடர்ந்து பரிசோதித்து வந்த ஆய்வாளர்கள் நேற்று அது போசானாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என உறுதியாக் சொல்வதாக தெரிவிக்கின்றனர். ஹி ஹி.


Scientists at the Large Hadron Collider say the particle outlined in July 2012 looks increasingly to be a Higgs boson.
The Higgs, long theorised as the means by which particles get their mass, had been the subject of a decades-long hunt at the world's particle accelerators.

ஹிக்ஸ் போசான் ஒரு பொருளுக்கு நிறை எப்படி வருகிறது என்பதை விளக்குகிறது.இதன் மீது இன்னும் பல ஆய்வுகள் நடக்கும் போது அதிக விவரம் தெரியலாம்.

எடை கொடுக்கும் என்றால் மந்திரம் போல் எடை வருமா? என பரிசோதிப்பது அல்ல,அப்படி எளிய முறையில் விளக்க முடியுமா என இப்போது தெரியாது.

அணு உடைப்பான் அமைப்பில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பொருந்தும் விளக்கமாக போசான் துகள் இருப்பு சாத்தியம் அதிகம் என உறுதி செய்யப் படுகிறது.

அதன் மேல் விவாதம்,ஆய்வுக் கட்டுரை,பலரின்  பல பரிசோதனைகள் என சில வருடங்கள் செல்லும். பிறகு உறுதியானால் பிரபஞ்ச புதிரின் அடுத்த கட்டம் செல்வார்கள்.    

அடுத்த பதிவில் போசான் துகள் என ஒருமித்து கருத்து உறுதியானால்  என்ன ஆய்வுகள் தொடரும் என விவாதிப்போம்.

அப்புறம் இதையும் சொல்லி விடுவோம்!!!

"அவனே எடையை அளிக்கிறான்" அல்லது "அனைத்தையும் அளிக்கிறான்"என்பது போன்ற மத புத்தக வசனம் கொண்டு  ஹிக்ஸ் போசான் மத அறிவியல் வித்தை காட்டும் மத வாதிகள் கொஞ்சம் பொறுத்து செயல்பட அறிவுறுத்துகிறோம்.

அறிவியல் விதி வரும் முன்னே, மத அறிவியல் வசனம் வரும் பின்னே!!!

ஹி ஹி நாமே ஆலோசனை கொடுத்து விட்டோமா!!

நன்றி!!