வணக்கம் நண்பர்களே,
டில்லி பேருந்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பல விதங்களில் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து திருமதி ஜெயாபச்சன் உணர்ச்சிவசப்பட்டு இராஜ்யசபாவில் பேசினார்.
சட்டம் என்பது அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. 120 கோடி பல இன ,மொழி மக்கள் வாழும் நாட்டில், அதுவும் பாரிய பொருளாதார,சாதி ஏற்றத் தாழ்வு கொண்ட நாட்டில் சட்டம் பாரட்சமின்றி அனைவருக்கும் கடமையாற்றுவது கடினமே. இதில் அரசியல் தலைவர்கள்,காவல்துறை,நீதித்துறை ,ஊடகங்கள் , குற்றம் சாட்டப்பட்டோர்,சாட்டுவோர், சாட்சிகள் என பலரின் பங்களிப்பும் இதில் உண்டு.
ஒவ்வொரு குற்ற நிகழ்விலும் பலர் அதனைக் கண்டு கொள்ளாமல் நம்மைப் பாதிக்காமல் இருக்கவே ,ஒதுங்கிச் செல்லவே விரும்புகிறோம். நமது பதிவுலக்மே ஒரு எ.கா. பெரும்பானமை பதிவர்கள் பட்டும் படாமல் பிடித்ததில் ஏதோ எழுதி , எவருடனும் முரண்படாமல் செல்வதையே விரும்புவதை சொல்லலாம்.
பலரும் தன்னைப் பாதிக்காத விடயங்களில் கருத்து சொல்ல விரும்புவது இல்லை. பதிவுலகம் என்பது சமூகத்தின் மாதிரி ஆகும்.
ஒவ்வொரு மனிதனின் ஒரு குற்ற நிகழ்வு குறித்த பார்வை வித்தியாசப்படும்.
ஆனால் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே அந்நிகழ்வு தண்டனைக்கு உரியதா என முடிவு செய்யப்படும்.
நம் பதிவுலகில் மதவாத கருத்து திணிப்பாளர்கள் எந்த ஒரு பரபரப்பு நிகழ்வையும் தங்களின் மத பரப்புரைக்கு சாதகமாக காட்ட முயல்வது அனைவரும் அறிவோம்.
அந்த வகையில் திருமதி ஜெயாபச்சனின் பேச்சை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட இந்த பதிவு படித்தேன். இப்படியும் எழுதுவார்களா எனவே தோன்றியது.
பாருங்கள்!!!
//ஆஹா...ஓஹோ...பேஷ்...பேஷ்...
வாங்கம்மா...வாங்க...வாங்க...ஜெயா பச்சன்...
கலைத்துறையை சேர்ந்த நீங்கள் ஒரு அப்பாவி
பெண்ணுக்காக கண்ணீர் வடித்துள்ளீர்கள்...
அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்த நீங்கள்
வருத்தப்படுவது நிறைய ஆச்சரியத்தை தருகிறது...
சினிமா மக்களிடையே பரவலான பின் தான் இந்த கோரங்களும்,சம்பவங்களும் அதிகரித்துள்ளது....//
சான்றுகள் அற்ற வாதம்.மனிதனின் நாகரிக வரலாறு வெறும் 20,000 ஆண்டுகள் மட்டுமே, அதில் சட்ட திட்டங்கள், அனைவரும் சமம் என்னும் கொள்கைகள் எல்லாம் இந்த சில நூற்றாண்டுகள் மட்டுமே. பெண்கள் அடிமைகளாக கடந்த நூற்றாண்டில் கூட விற்கப்பட்டனர். இது எல்லாவற்றுக்கும் சினிமாதான் காரணமா??
நடப்பது ஊடகங்களினால் வெளியில் இப்போது தெரிகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை செய்யப்போகும் பெண்களின் மீது செய்யப்படும் பாலியல் கொடுமைகளுக்கும் அரபுக்கள் சினிமா பார்ப்பது காரணமா ? இல்லை வேறா??
//ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்கள் தந்தையாலும்,சகோதரராலும்,உறவினராலும்
மானபங்கப்படுத்துவதை எண்ணி வேதனைப்பட்டீர்களே....
24 மணிநேரமும் பெண்களை போகப்பொருளாக காட்டி
சதை வியாபாரிகளாக சித்தரிக்கும் கலைத்துறையும்
இதற்கு முழு முக்கிய ஒரு காரணமென்று தெரியுமா...???
மனிதர்களின் மூளைகளிலும்,எண்ணங்களிலும்
ஆபாசத்தையும்,வக்கிர எண்ணங்களையும்
வலுக்கட்டாயமாக விதைப்பதில் தாங்கள் இருக்கும்
கலைத்துறையும் ஒரு காரணமென்று தெரியுமா...????//
போர்களில் தோற்ற இனத்தவரின் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்பது பல நாடுகளில் வழக்கமாக் இருந்து இருக்கிறது. இதற்கு கடவுளின் ஆமோதிப்பும் உண்டு. இதனையும் தவறு என கூற முடியுமா??
//சிகரெட்டையும்,மதுபானத்தையும் ஹீரோயிஷமாக நினைத்து
தன் உடலையும்,மனதையும்,குடும்பத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி நடுத்தெருவில் விட்ட ஒவ்வொரு குடிமகனுடைய குடும்பத்தாரின் பாவத்திலும்,வயிற்றெரிச்சலிலும் உங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு தெரியுமா...???//
பதிவுலகில் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு யாருக்கு எதை வேண்டுமானாலும் அறிவுரை செய்யலாம்.புகை பிடித்தலும்,மதுபானமும் அளவு மீறினால் மட்டுமே பாதிக்கும். மத ஆட்சி நாடுகளிலும் ஹலால் மது அருந்தலாம் ,மத ஆட்சி நாடுகளிலும் சிகரெட்டுக்கு தடை இல்லை!!.
ஆகவே அளவோடு பயன்படுத்துவதே பிரச்சினை தவிர்க்கும்!!
கோத்ரா கலவரத்திலும் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப் பட்டதற்கு எது காரணம் மதவாதமா?சினிமாவா? அதற்கு மட்டும் பெரும்பானமை மதவாதம் காட்டும் நீங்கள். உங்கள் மத ஆட்சி நாடுகளில் சிறுபானமைப் பெண்களின் மீது நடைபெறும் வன்கொடுமைகளை பொதுவெளியில் பேச மாட்டீர்கள். நல்லவன் வேடம் கலைந்து விடும்.
எப்படியோ இப்படி மக்களை மத ரீதியாக பிரிப்பதில் வெற்றி பெற்றதுதான் மத்வாதிகளின் ஒரே சாதனை. சிறுபானமை மதவாதம் பெரும்பானமை மதவாதத்தையே வளர்க்கும்!!!
உங்களைப் போன்ற மத வாத கருத்துரையாளர்களால் இந்தியா பெரும்பான்மை மத நாடாகும் வாய்ப்பு வலுக்கிறது எனவே கணிக்கிறேன்!!!. நாளைய குஜராத் தேர்தலின் முடிவும் அதன் ஒரு முன்னோட்டமே!!
//உங்க மருமகள் தங்களுடைய கணவருடன் மேடையில் ஒன்றாக நடனம்
ஆடியபோது கலாச்சாரமீறலாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி அழுதிருக்க வேண்டும்.//
இப்படி ஒரு பெண்ணால் சிந்திக்க முயல்வதே நமக்கு கலாச்சார மீறலாக தெரிகிறது. அவர்கள் நடிகர்கள் ஆடியது வெளிப்படையாக தெரிந்த்து .ஆகவே விமர்சிக்க முடிகிறது. சில வீடுகளில் நடப்பது வெளியில் தெரியாது. அயோக்கியன் என தெரிந்தால் அவன் மதம் சரியாக பின்பற்றவிலை என்பீர்கள். உங்கள் கோமாளித்த்னங்களுக்கு எல்லையே இல்லையா??
திருமதி ஐஸ்வர்யா , திரு
அமிதப் பச்சனுடன் ஆடியது எந்த விதத்திலும் தவறு இல்லை!! த்வறாக் தெரிந்தால் உங்களின் பார்வையில் தவறு!!!
மத புத்தகக்த்தில் இப்படி விடயம் காட்டினால் அவர் ஏன் செய்தார் என விள்க்கம் கொடுப்பீர்கள்!! ஆகவே கண்ணாடி வீட்டில் உள் இருந்து கல் எரியாதீர்கள்!!
இப்படி எவரையும் மனம் போனபடி விமர்சிப்பதுதான் உங்கள் மதம் சொல்லும் ஒழுக்கம் என்றால் ஏன் இப்படி என புரிகிறது!!தவறு எங்கே இருக்கிறது??
நாம் சொல்வது இதுதான்.
1. மதக் கண்ணாடி கொண்டு பார்த்து எதையும் விமர்சிக்காதீர்கள்.
அதே விடயம் மதபுத்தகத்தில் இருக்கும் போது ஆமோதிக்கும் இரட்டைவேடம் வெளிப்படும்.உங்கள் மதம் உங்களுக்கு மட்டுமே புனிதம்!! எங்களுக்கு அல்ல!!
2. சினிமா இப்போதைய கலாச்சார ஊடகம், நாடகம் அழிந்து சினிமா வந்தது, சினிமா போய் வேறு ஏதேனும் வரும்.இன்னும் எவ்வளவு நாள் நீடிக்குமோ!!
3. உங்கள் மதமும் பிற மதங்கள் போல்தான், நல்லது கெட்டது உண்டு. உங்கள் மதத்தினரும் பிறர் போல்தான், நல்லவர் ,கெட்டவர் உண்டு.
உங்கள் மதத்தை கடைச்சரக்கு ஆக்கினால் விமர்சனம் தவிர்க்க இயலாது.
திருமதி ஜெயா பச்சனின் குடும்பத்தினர் மீதான உங்களின் ஆபாச விமர்சனத்திற்கு ஒரு தமிழனாய் தலை குனிகிறேன்.
தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.மன்னியுங்கள் தாயே!!
இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!!
நன்றி!!