Friday, February 24, 2012

பரிணாமம் குறித்த சில விளக்கங்கள்


ஒரு நண்பர் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.இது அவ்ர் ஏற்பாரா இல்லையா என்பதை நாம்றியோம் எனினும் இது மற்ற்வர்களுக்கும் பயன்பட‌ட்டுமே என்பதுதான் நம் நோக்கம்.

//1.நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது.//

சரி. ஒரு உயிரின குழு இன்னொரு(சில) உயிரின குழுவாக(குழுக்களாக) காலப்போக்கில் இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்கள் ஆகியவற்றால் மாறுவதை பரிணாம் வளர்ச்சி என்கிறோம்.இதில் ஒரு உயிரினக் குழுக்களிடையே நடக்கும் சிறு(மைக்ரோ) பரிணாமம் கண்கூடாக பார்க்கப்படுவதல் யாராலும் எதிர்க்கப்படுவதில்லை.ஒரு உயிரினம் இன்னொரு உயிரின்மாக் பல் மில்லியன் ஆண்டுகளில் மாறுகிறது என்னும் பெரும்(மேக்ரோ) பரிமாணம்  பெரும்பான்மையான மதவாதிகளால் எதிர்க்கப் படுகிறது.
_________________

//2.ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் காணொளியில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.//

படிமங்கள் என்பது இயற்கையால் நம்க்கு கிடைத்த கொடை.அனைத்து படிமங்களுமே பராமரிக்கப்பட்டு ஆய்வாளர்களுக்கு யாரும் கொடுப்பது இல்லை.கிடைப்பதை ஆய்வு செய்து,வகைப்படுத்தி,விவாதித்து  கருத்து வெளியிடுகிறார்கள்.கிடைத்த படிமங்களில் பல இடைப்பட்ட நிலைகளை நன்றாக விள்க்குகின்றன.
படிமங்கள் எப்படி கிடைக்கின்றன என்பதை அட்டன்பரோவின் காணொளியில் அருமையாக் விள்க்கியுள்ளார்.முடிந்தால் பார்க்க்லாம்.


David Attenborough: Lost Worlds Episode 1 Magic In The Rocks (BBC)


David Attenborough: Lost Worlds Episode 2 Putting Flesh On Bones (BBC)

_______________
//3.ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம்.//

இதுதான் சிறு(மைக்ரோ )பரிமாண வளர்ச்சி.கண்கூடாக நிரூபிக்கப்பட்டதால் ஏற்றே ஆக வேண்டும்.
______________
 4.தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.// 
Fish to Amphibians-reptiles



5//ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.//

Reptiles-mammals and Birds





6..
அப்போ கடலில் திமிங்கிலங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறதே! வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து ஒரு திமிங்கிலமும் கடலைத் தாண்டி வரவில்லையே! அடுத்து கடல் வாழ் உயிரினங்களுக்கும் நில வாழ் உயிரினங்களுக்கும் அடிப்படையிலேயே சுவாச உறுப்புகளில் மாற்றங்கள் உள்ளது. தண்ணீர் இல்லாமல் அவற்றின் உடல் அமைப்புக்கு நிலத்தில் வாழவும் முடியாதே!




திமிங்கல்த்தின் முன்னோர்கள் நில வாழ் விலங்குகள்.இதற்கு நன்றாக் இடைப்ப்ட்ட படிமங்கள் உண்டு.இதுவும் இரண்டாம் காணொளியிலேயே விள்க்கப்படுகிறது.
http://www.pbs.org/wgbh/evolution/library/03/4/l_034_05.html

http://www.talkorigins.org/features/whales/
______________


7.நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே!

நண்பரே நீங்கள் ஏற்றுக் கொள்ளாததால் காணொளியில் காட்டப்பட்ட அப்படிமங்கள் நிராகரிக்கப் படப்போவது இல்லை.இது அறிவியல் உலகில் ஏற்கப்பட்டவை.பாதுகாத்தும் வரப்படுகின்றன்.
அறிவியல் உலகிற்கு பிரச்சினை இல்லாமல் தனிப்பட்ட மனித்னாக இந்த முடிவு எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.



8.மனிதனுக்கு இது போன்ற பரிணாம வளர்ச்சியின் படிமங்களை இது வரை சமர்ப்பிக்கவில்லையே! ஆதார சுட்டிகள் அப்படி ஏதும் இருக்கிறதா.நமது முக்கிய பிரச்னையே மனிதனின் பரிணாமத்தைப் பற்றியதுதானே.



மனித பரிமாண வளர்ச்சிக்கு அறிவியல் உலகில் ஏற்கப் ப‌ட்ட பல படிம சான்றுகள் உண்டு.இவை ஒரு சில.இவைகள் லண்டனில் உள்ள இயற்கையியல் வரலாற்று அருங்காட்சியத்தில் உள்ளது 


இன்னும் சில இடங்களிலும் படிம்ங்கள் பாதுகாக்கப் படுகின்றன.


Virtual fossil Musuem

பரிணம்த்தின் மீதான் கேள்விகளுக்கு விடை தேடி அளிக்க சித்தமாக்வே இருக்கிறோம்.பரிணாம் மறுப்பாளர்களுக்கு விடை தேவையில்லை என்பதை உணர்ந்து இருந்தாலும் இது விடை தேடும் மற்றவர்களுக்காவது பயன்படும் என்றே முயற்சிக்கிறோம்.நன்றி!!!!!!!!!!!!!!!

23 comments:

  1. மேற்கத்திய மதங்கள் அழியாமல் இருக்க பரிணாமம் தன்னை மெய்பித்துக் கொள்ளாமல் இருந்தால் போதும் போல.

    அப்பவும் ஒரே ஒரு இடைச் சொருகள், 'குரங்கிலிருந்து ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டனர்" என்று வேதப் புத்தகத்தை திருத்திவிட்டு பல் இளிப்பார்கள்

    ReplyDelete
  2. வாங்க சகோ கோவி
    பரிணாம் எதிர்ப்பு என்பதும் மதத்தின் ஒரு உறுதி மொழி ஆகிவிட்டது!!!!!!!!!!.
    ஆகவே தினமும் பரிணாம் கொள்கையை மறுதலிக்கிறேன் என்று பிரார்த்தனைபோது கூட சொல்வார்கள் என எனக்கு தோணுகிறது.அவர்கள் பரிணாம் கொள்கை உண்மை என்றால் மத படைப்புக் கதைகள் பொய்யாகி விடும் என்பதை உணர்ந்து இருப்பது நமக்கு மகிழ்ச்சியே.

    இருப்பினும் மறுக்க முடியாத சூழல் வந்தால் வழிநடத்தப்பட்ட பரிணாமம் என்ற கொள்கைக்கு வந்து விடுவார்கள் என்பதும் நிச்சய்மாக நடக்கும்.ஆனால் இபோதுள்ள ஆக்ரோஷமான் மதவாதம்,பிரச்சாரம் காணாமல் போகும் என்பதும் உண்மை!!!!!!!!
    நன்றி

    ReplyDelete
  3. இன்னும் கேள்வி பதில்

    //7.நீங்கள் கொடுத்துள்ள சுட்டி முழுவதுமாக கிடைத்த படிமங்கள் அல்ல. இவர்களாக பல இடங்களிலும் சேகரித்து எடுத்து ஒட்ட வைத்தது. மேலும் அவை ஒரிஜினல் படங்களும் அல்ல. வரைந்தவையே!//
    ***********
    ஏன் பரிணாம் எதிர்ப்பு நண்பர் படிம்ங்கள் ஒட்ட வைக்கப்பட்டன என் கூறுகிரார்.?

    அவருடைய மத விஞ்ஞானி சகோ பதிவில் பில்ட்மேன் மோசடி பற்றிய பதிவை படித்ததால் அனைத்து படிமங்களும் அப்ப்டித்தான் என்ற கருத்துக்கு வந்து விட்டர்.
    ************
    ஏன் வரை படங்கள் திருத்தப்ப்ட்டதாக் கூறுகிறார்?

    இதுவும் அவருடைய மத விஞ்ஞானி சகோ பதிவில் ஹேய்கலின் கரு வளர்ச்சி வரைபட மோசடி பற்றி படித்ததால் அனைத்து வரைபடங்களும் மோசடியே.
    *************
    அவை மோசடி என்று ஒதுக்கிய அறிவியல் உலகமே பரிணாம் கொள்கையின் சான்றுகளாக் ஏற்கும் பல படிமங்களை பற்றி அறியாமல் கூறுகிறார்.அவ்வளவுதான்!!!!!!!!!

    ReplyDelete
  4. //1.நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும்.//

    இதற்கும் எடுத்துக்காட்டுகள் உண்டே. பகடு பதிவில் கூட ஒன்று இருந்தது என்று நினைவு; குதிரையின் பரிமாணம் எப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் சிறிது சிறிதாக மாறி இன்றைய குதிரை உருவானது என்பதை படிமங்கள் மூலமாக நிறுவியிருப்பார்களே ... அது சரி .. நீங்கள் சொன்னது போல் //பரிணாம் மறுப்பாளர்களுக்கு விடை தேவையில்லை என்பதை உணர்ந்து இருந்தாலும்...// என்பது உண்மைதானே ..

    ReplyDelete
  5. இப்பொழுது உள்ள கால மாற்றத்தில், சூழ்நிலை மாற்றத்தில் இடைநிலை படிவங்கள் அழிந்து போக வாய்ப்புள்ளதே .
    மேற்கத்திய மத குருமார்களை போல நம் நாட்டிலும் பரினாமத்தை யாரேனும் எதிர்திருக்கிறர்களா நண்பரே?
    ஏனெனில் எமக்கு தெரிந்து நம் நாட்டின் குருக்கள் மத நம்பிக்கைகளை பொறுக்கி தின்னவும் , அதிகாரத்தில் திளைக்கவுமே பயன்படுதிருக்கிறார்கள்..முஸ்லிம்களை , கிறுத்துவர்களை போல அவ்வளவு மூர்கத்தனமான இல்லை என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  6. @ suvvannappiriyan
    ================================================
    நண்பரே.
    நபி? பெயர்களை எழுதும்போது ஆங்கிலத்திலும் சேர்த்து எழுதுங்கள். என்னை போன்ற தமிழ் தெரியாத மக்குகளுக்கு படிக்கவும் தேடவும் உதவும்.

    பதிவில் நிறைய Archaeological ஆதாரங்களை எதிர்பார்த்தேன். நீங்கள் சொல்வதைப் போல ஆதாரங்களை பார்த்தால் உண்மையில் அயோத்தியில் சர்சைக்குரிய இடத்தில் இராமர் கண்டிப்பாக பிறந்திருப்பார்!!!!!!!!!!

    ////கால மாற்றத்தால் மக்கள் அழிந்தனர்...அதை இறைவன் செய்தார் என்பது சரியா?//

    அது முஸ்லிம்களின் நம்பிக்கை.//

    என்ன நண்பரே இஸ்லாத்தில் நம்பிக்கை வார்த்தைக்கு என்ன வேலை. அதுதான் உண்மை என்று சொல்ல வேண்டாமா.

    சார்வாகனுக்கு, அந்த ரகசியத்தை சொல்லிவிட்டீர்களா. கிடைக்கும் பணத்தில் பங்கு கேட்கலாம் என்று இருக்கிறேன். பணம் முக்கியம் அமைச்சரே -:)
    ================================================

    சார்வாகன் உங்கள் நண்பர் அந்த பரமரகசியத்தை உங்களிடம் பகிற்ந்துவிட்டாரா??????

    ReplyDelete
  7. வாங்க தருமி அய்யா
    பரிணாம கொள்கை கொடுக்கும் ஆதாரங்கள் இவர்களுக்கு தேவையில்லை.ஆனால் அது அறிவியலாளர்களுக்கு போதும்.அனைத்து அறிவியல் கொள்கைகள் போல் பரிணாமமும் நிரூபிக்கப்பட்ட,ஏற்கப்பட்ட கொள்கை .எனினும் அவர்களின் கேள்விகளுக்கு த்வறாமல் விடையளிக்கும் பணியை தொடர்ந்து செய்வோம் என்பதை மட்டும் தெரிவிக்கிறோம்
    நன்றி
    **********
    வாங்க செல்வக் குமார்
    அதுவும் அவர்களுக்கும் தெரியும்.இடைப்ப்ட்ட படிமம் என்பது அறிவியலின் படி தெளீவாக வரையறுக்கப்பட்டு அதற்கு பல படிம சான்றுகள் உள்ளது.கிடைத்த படிம்ங்கள் பல் பரிணாம இடைநிலைகளை நன்றாகவே தெளிவாக் விள்க்குகின்றன்.இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என அவர்களுக்கும் தெரியாது.ஒரு இடைநிலைப்படிமம சரி மனிதனுக்கு முந்தைய நிலை எப்படி இருந்தால் ஏற்பார்கள் என்பதை அறிவித்தால் ந்லம்.
    நன்றி
    ****************
    @னரேன் அந்த ராட்சத மனித படிம சன்று பார்த்து அயர்ந்து,வியந்து போய்விட்டேன்.அதற்கு நீங்களாவது,தாவா மேதை இ.சா ஒரு பதிவிட்டால் நலம்.நமக்கு நகைச்சுவை மிக்ஸிங் சரியாக் வர மாட்டேன் என்கிறது.

    பணம் பற்றி பேச்சு வார்த்தை நடத்துவோம்.நீங்களும் ஒரு பங்கா !!!!!!!.
    சரி என்ன செய்வது.இருப்பினும் அனைவருக்குமே பணம் மில்லியன்களில் லம்ப்ஃபா கிடைக்கும்.த்வறான் பரிணம் கொள்கையை கைவிட்டால் செலவிட்ட பணம் போய்விடும் என்பதால்தான் காப்பற்ற முயல்கிறார்கள் என்ற கருத்துதான் எனக்கு மிகவும் பிடித்தது.ஆகவே கிடைக்கும் வாய்ப்பை சகோவின் இக்கருத்து அதிகரிக்கிறது.

    அங்கு ஒரு அனானி ஆத்முக்கு உள்ள XY குரோமோசோமில் இருந்து ஹவ்வாவிற்கு XX குரோமோசோம் எப்படி உருவாக‌ முடியும் என்ற கேள்விக்கு பதில் நம் சகோ அளித்தது பிடித்த நகைச்சுவை.ஆகவே

    "விடை தெரியா கேள்விகளுக்கு வித்தக்னே விடையாவான்"

    சும்மா கேள்வி கேட்காதீர்கள் அனானிகளே
    நன்றி

    ReplyDelete
  8. பரிணாமத்தை நிறையப் பேருக்கு கற்பனை செய்து பார்க்க முடியாததால் வித்தியாசமான கேல்விகளை கேட்கிறார்கள்.சிலர் எங்கே மனிதனுக்கும் குரங்குக்கும் இடையிலுள்ள ”அந்த லின்க்” என்று அடம் பிடிக்கிறார்கள். பரிணாமத்தை மரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். பழைய கிளைகள் புதிய கிளைகளாக மாறி மரம் உருவாகுவதில்லை. பழைய கிளைகள் அப்படியேதான் இருக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள். கீழே உள்ள சைட்டில் விளக்கம் உள்ளது. http://evogeneao.com/tree.html

    ReplyDelete
  9. வாங்க சகோ சந்துரு நல்ல இணைப்பு கொடுத்தீர்கள் மிக்க நன்றி.
    அவர்களின் கேள்விகளும் நம் பதில்களும் விகரமாதித்தன் வேதாளம் மாதிரி .ஆகவெ அவர்கள் கேட்க நாம் பதில் சொல்ல பிறகு முருங்கை மரம் ஏற அப்ப்டியே வண்டி போய்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஎ இருக்கிறது.
    மீண்டும் நன்றி

    ReplyDelete
  10. சகோ சார்வாகன்!

    நாம் சொல்லும் கருத்தை குறைந்தபட்சம் நாமும் கடைபிடிக்க வேண்டும். மதவாதிகள் சொல்வது வெறும் நம்பிக்கை. அதை நாங்கள் ஒத்துக் கொள்ளமாட்டோம் என்று சொல்கிறீர்கள். இங்கு மனிதனின் பரிணாமம அடைந்த படிமங்கள் அறிவியல்பூர்வமாக அனைத்து அறிஞர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்டதா? இந்த எலும்புகள் அனைத்தும் பல இடங்களில் சேகரிக்கப்பட்டு தனது கற்பனைக்கு ஏற்றவாறு ஜோடிக்கப்பட்டவைகளே! அதில் ஒரு சில படிமங்கள் விலங்குகளுக்கானதாகவும் இருக்கலாம். இப்போது நீங்களும் கடவுள் மறுப்புக்காக இந்த நிரூபிக்கப்படாத ஆராய்ச்சிகளை தூக்கிப் பிடிக்கிறீர்கள்.

    சகோ ஆஷிக் வைத்த எந்த கேள்விக்கும் இதுவரை பதிலும் சொல்லவில்லை. இந்த படிமங்களின் வரலாறையும் இங்கு லேசாக பார்ப்போம்.

    "Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

    தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).

    உயிரினப் படிமங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாகததான் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்துதான் படிமங்களின் வரலாறு தொடங்குகிறது. கேம்பிரியன் காலமான இங்கிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் முழுமையான நாம் தற்போது பார்க்கும் வடிவிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரும் பரிணாமம் அடைந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இல்லை.

    இந்த கேம்பிரியன் காலத்துக்கு முந்தய காலமான இடியக்காரா காலம் சென்று படிமங்களை ஆராய்ந்தால் ஏதும் கிடைக்குமா என்று உங்கள் ஆய்வாளர்கள் தேடினர். ஆச்சரியமாக இடியக்காரா காலத்தில் விலங்களின் படிமங்கள் சுத்தமாக இல்லை. அதாவது அந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை. இடியக்காரா காலத்தில் மறைந்த படிமங்கள் கேம்பிரியன் காலத்தில் திடீரென எவ்வாறு வந்தது? இதற்கு டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றனர்?

    திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் புறத் தோற்றம் மட்டும் அல்லாது சுவாச உறுப்புகளும் தரைக்கு ஏற்றவாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். புறத் தோற்றத்தையே அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் திணரும் நீங்கள் சுவாச உறுப்புகளின் பரிணாமத்தை எந்த காலத்தில் நிரூபிக்கப் போகிறீர்கள்? :-)

    அப்படி நிரூபித்து விட்டால் சுவனப்பிரியனான நான் டார்வின் பிரியனாக மாறி உங்களோடு நாத்திகத்துக்கும் வந்து விடுகிறேன். பிறகு நானும் நீங்களும் நரேனும் தருமியும் வவ்வாலும் சேர்ந்து ஆத்திகவாதிகளை ஒரு வழி பண்ணி விடலாம்.

    Deal or No Deal!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. வாங்க சகோ சுவனப்பிரியன்

    //இங்கு மனிதனின் பரிணாமம அடைந்த படிமங்கள் அறிவியல்பூர்வமாக அனைத்து அறிஞர்களாலும் ஒத்துக் கொள்ளப்பட்டதா? //
    இப்பதிவின் மூன்றாம் காணொளியில் காட்டப் பட்ட படிமங்கள அனைத்தும் அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
    ****************
    //இந்த எலும்புகள் அனைத்தும் பல இடங்களில் சேகரிக்கப்பட்டு தனது கற்பனைக்கு ஏற்றவாறு ஜோடிக்கப்பட்டவைகளே! அதில் ஒரு சில படிமங்கள் விலங்குகளுக்கானதாகவும் இருக்கலாம். இப்போது நீங்களும் கடவுள் மறுப்புக்காக இந்த நிரூபிக்கப்படாத ஆராய்ச்சிகளை தூக்கிப் பிடிக்கிறீர்கள்.//
    இதனை நிரூபிக்க‌ நீங்கள் முயற்சித்தால் அதற்கு உதவ நான் மட்டுமல்ல் இன்னும் பலர் முன் வருவார்கள்.இப்படி மட்டும் நிரூபிக்க முடிந்தால் இவ்வருட நோபல் பரிசு நம்க்குதான்.
    //சகோ ஆஷிக் வைத்த எந்த கேள்விக்கும் இதுவரை பதிலும் சொல்லவில்லை//
    அவர் முன் வைத்த கேள்விகள் உங்களுக்கு புரிந்து இருந்தால் அவைகளை என்பதிவு மட்டுமல்ல ,அனைத்து பரிணாம் கொள்கை ஏற்பாளர்களின் தளங்களில் கேட்க முடியும்.பல் கேள்விகளுக்கு விடை அளித்து இருக்கிறோம்.பதிவு எழுதும் போது இவரின் கேள்விக்கு விடை என்று குறிப்பிடும் அவசியம் எனக்கு இல்லை.கேளுங்கள் விடைகள் கொடுக்கப்படும்.
    //உயிரினப் படிமங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாகததான் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்துதான் படிமங்களின் வரலாறு தொடங்குகிறது. கேம்பிரியன் காலமான இங்கிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் முழுமையான நாம் தற்போது பார்க்கும் வடிவிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரும் பரிணாமம் அடைந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இல்லை. //

    முதலில் கடந்த 500 மில்லியன் ஆண்டுகளுக்குள் கிடைத்த படிமங்களுக்குள்ளேயே பரிணாமம் சரியா என்று பார்க்க முடியும் போது எதற்கு அதற்கு முன்னே போக வேண்டும்?. இடியக்காரன் படிமங்களில் கூட வளர்ச்சி அடைந்த கிம்பர்லி என்னும் விலங்கு இருக்கிறது.இதை காட்டினால் இதற்கு முன்னாள் என்பீர்கள்.
    சான்றுகள் குறைவாக் உள்ள காலத்தை ஆய்வு செய்வதில் என்ன ப்யன்?.
    பரிணாம் அறிவியலாளர்கள் மனிதனுக்கு முந்தைய படிமங்கள் என பல்வற்றையும் இன்னும் திமிங்கலத்தின் பரிணாம் வரலாறு, போன்ற நன்கு நிரூபிக்கப்பட்ட நசான்றுகள் உள்ள விடயத்தில் மீது விவாதிப்பது எளிதில் முடிவுக்கு வர இயலும்.
    //
    திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் புறத் தோற்றம் மட்டும் அல்லாது சுவாச உறுப்புகளும் தரைக்கு ஏற்றவாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். புறத் தோற்றத்தையே அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் திணரும் நீங்கள் சுவாச உறுப்புகளின் பரிணாமத்தை எந்த காலத்தில் நிரூபிக்கப் போகிறீர்கள்? :-) //
    அப்படியா திமிங்கல பரிணாம் வளர்சி பற்றி தெளிவாக் ஒரு பதிவு இட்டு விடுவோம்.திமிங்கலத்தின் முன்னோர் ஒரு நீர் வாழ் உயிரினம்.இதன் சான்று படிமங்கள் பாகிஸ்தானில்தான் தோண்டி எடுக்கப்பட்டது.
    http://news.nationalgeographic.com/news/2001/09/0919_walkingwhale.html
    பதிவு விரைவில் எதிர்பாருங்கள்.
    // அப்படி நிரூபித்து விட்டால் சுவனப்பிரியனான நான் டார்வின் பிரியனாக மாறி உங்களோடு நாத்திகத்துக்கும் வந்து விடுகிறேன். பிறகு நானும் நீங்களும் நரேனும் தருமியும் வவ்வாலும் சேர்ந்து ஆத்திகவாதிகளை ஒரு வழி பண்ணி விடலாம்.//
    பரிணாமத்தை மட்டும் வைத்து மதம் சரியா என்று முடிவு செய்யலாமா? தேவையில்லை என்றே நான் கூறுவேன்.எனினும் நாங்கள் ஆட்திகவாதிகளை அல்ல மதவாதிகளையே அதுவும் அவர்களின் தவறான பிரச்சார உத்திகளையே எதிர்க்கிறோம்.தனிப்பட்ட விதத்தில் அனைவர் மீதும் நட்பு மட்டுமே பாராட்டுகிறோம். இறைமறுப்பாளர்களுக்கு மறுமை வாழ்வு,சுவனம் ஆகியவை கிடையாது.பலமுறை யோசித்து கொள்ளுங்கள்.

    நன்றி சகோ

    ReplyDelete
  12. பரிணாம் கொள்கை என்பது டார்வினுக்கும் முந்தையது.இயற்கை விதிகளுக்கு உட்பட்டு ஒரு உயிரினம் இன்னொரு உயிரின்மாக மாற முடியுமா என்ற என்ற கேள்விக்கு விடையாக வந்த பல் கொள்கையாக்கங்களில் அதிகம் சாண்ருகளுக்கு பொருந்தியது டார்வினின் இயற்கைத் தேர்வு மூலம் பரிணாம வளர்ச்சியே அதுவே இபோதைய அறிவியல் கொள்கை.
    http://anthro.palomar.edu/evolve/default.htm

    மத்வாதிகள் ஒவொரு உயிரின தோற்றத்திற்கும் அல்லது உயிரின குழுவின் தோற்றத்திற்கு இயற்கைக்கு மேம்பட்ட சக்திதான் காரணம் என்கிறார்கள்.ஒருவேளை டார்வினின் இயறகைத் தேர்வுக் கொள்கையாக்கம் தோல்வி அடைந்தால் தங்கள் இயற்கைக்கு மேம்பட்ட கொள்கை வெற்றி பெரும் என நினைக்கிறார்கள்.ஆனால் அப்படி அல்ல.இன்று ஒரு அறிவியலாளர் ஒரு உயிர்னம் இன்னொரு உயிராக் மாறுவது வேறு காரணங்கள்தான் என சான்றுகள் ,ஆய்வுகள் மூலம் நிரூபிக்க்லாம்.அது டார்வினின் கொள்கையை விட அதிகம் சான்றுகளை விள்க்குவதில் பொருந்தினால் அதையும் ஏற்பதில் இயற்கையியளரான இறைமறுப்பாளர்களுக்கு தயக்கம் இல்லை.

    அப்படி நடக்கும் வாய்ய்பு சிறிது இருந்தாலும் இயற்கைக்கு மேம்பட்டச(க்)திதான் படைத்தது என்னும் கொள்கைக்கு அறிவியல் என்றுமே வரவே வராது.அப்படி சொல்வதும் அறியவே இயலாது என்று கூறுவதற்கும் வித்தியாசம் இல்லை.

    ReplyDelete
  13. ப்ளாட்டிபஸ் நம் கண் முன் இருக்கும் பரிணாம உதாரணம், முட்டையிட்டு பால் கொடுக்கும் பாலூட்டி அது ஒன்று தான்!

    ReplyDelete
  14. வாங்க தலை வால்பையன்
    ஆதாரம் கேட்டா கொடுத்தாலும் படிமத்தை வெட்டி ஒட்ட வைத்தான் என்றுதான் கூறுவார்கள்.அவர்கள் புத்தக வசன‌ம் அர்த்தம் அடைப்புக்குறி போட்டு வெட்டி ஒட்டுவது போல் அறிவியலாளர்களையும் [&நம்மையும்] நினைப்பதுதான் கொடுமை.
    இருந்தாலும் நாம் மனம் தளராமல் கேள்விகளுக்கு ஆதாரத்துடன் விடை கொடுப்போம்,வேதாளங்கள் முருங்கைமரம் ஏறட்டும்.
    ப்ளாட்டிபஸ் தக்வலுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  15. பரிணாமம் மீதான கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கு நன்றி.

    // ஒரு உயிரின குழு இன்னொரு(சில) உயிரின குழுவாக(குழுக்களாக) காலப்போக்கில் இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்கள் ஆகியவற்றால் மாறுவதை பரிணாம் வளர்ச்சி என்கிறோம்//

    பரிணாமம் குறித்து அழகிய definition கொடுத்துள்ளீர்கள்.

    பரிணாமம் குறித்த விவாதங்களில் படிம ஆதாரங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் பரிணாமம் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. முதலில் படிம ஆதாரங்கள் மூலமாக பரிணாமத்தை நிரூபிக்க முடியுமா ?

    ஒரு உயிரினத்தின் படிமம் குறிப்பிட்ட காலத்தில் அந்த உயிரினம் வாழ்ந்தது என்பதற்குதான் ஆதாரம். நீங்கள் கூறியது போல் ஒரு உயிரின குழு , இன்னொரு குழுவாக மாறியது என்று படிமங்களைக் கொண்டு நிரூபிக்க முடியாது.

    இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்களால் (natural selection + random mutation) பரிணாமம் நிகழ்வதாக கூறினீர்கள். இது எவ்வாறு நிகழ்கிறது என்று கூறினால் பரிணாமத்தை எளிதாக நிரூபிக்கலாம்.

    மருத்துவ உலகில் ஆயிரக்கணக்கான mutations பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த mutations எதுவும் ஒரு புதிய உறுப்பையோ , புதிய செயல்பாட்டையோ உருவாக்கவில்லை. மாறாக இந்த mutations குறைபாடுள்ள குழந்தைகளையும், புற்று நோய் மற்றும் பலவிதமான நோய்களையே உருவாக்குகின்றன.

    இந்த mutations மூலமாக பரிணாமம் நிகழ்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன ? Mutations மூலமாக ஒரு புதிய செயல்பாடுள்ள உறுப்பு (functional organ) உருவானதற்கான ஒரு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

    உதாரணமாக ஒரு செல்போன் தொழிற்சாலையில் ஒரு தொழில்நுட்ப கோளாறினால் புதிய மாடல் செல்போன் உருவானது என்று கூறினால் நம்புவீர்களா ? கோடிக்கணக்கான ஆண்டுகள் இந்த தொழிற்சாலை இயங்கி, பல்லாயிரக்கணக்கான கோளாறுகள் சேர்ந்தால், உயர்தொழில்நுட்ப மாடல்கள் உருவாகும் என்று சொல்வீர்களா என்று தெரியவில்லை ?

    முடிவாக "இயற்கைத் தேர்வு+சீரற்ற‌ சிறு மாற்றங்கள் " மூலம் பரிணாமம் எவ்வாறு நிகழ்கிறது என்று விளக்கவும்.
    தயவுசெய்து யுடியூப் வீடியோக்கள் வேண்டாம். authoritative sourcesகளிலிருந்து கட்டுரை வடிவில் இருந்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  16. வாங்க சாதிக்

    //பரிணாமம் மீதான கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கு நன்றி.

    மதம் குறித்த விமர்சனங்களுக்கு அளித்து யாருமே எதுவுமே மறுப்பு தெரிவிக்காததால் போர் அடிக்கிறது ஆகவே இப்போது பரிணாமம் மட்டுமே.மத ,புத்த‌கம் குறித்து எதுவுமே எதிர் கேள்வி கேட்க மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்.
    //பரிணாமம் குறித்து அழகிய definition கொடுத்துள்ளீர்கள்.//

    பரிணம்த்திற்கு சரியாக வரையறுப்பு உள்ளது என்பதை ஒத்துக் கோண்டதற்கு மிக்க நன்றி.ஏனெனில் மத விஜ்ஜானி ஒருவர் பரிணாம‌ம் என்பதே ச‌ரியாக‌ வ்ரையறுக்கபடவில்லை என்றுகூட பதிவிட்டு உள்ளார்.
    //பரிணாமம் குறித்த விவாதங்களில் படிம ஆதாரங்கள் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால் பரிணாமம் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. முதலில் படிம ஆதாரங்கள் மூலமாக பரிணாமத்தை நிரூபிக்க முடியுமா ?//
    படிம ஆதார‌ங்கள் மூலம் பூமியின் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்துள்ள்ன என்பதை அறிய முடிகிறது.பல உயிரினங்கள் அழிந்ததும் அவற்றில் இருந்து சிறிது மாறுபட்ட உயிரினங்கள் அடுத்த கால்கட்டத்தில் வாழ்ந்ததும் அறிய முடிகிறது.இது அறிவியலில் சென்ற கால்கட்ட உயிரினங்கள் சி(ப)ல இயற்கைத்தேவில் வெற்றி பெற்றவை அடுத்த கால் கட்ட விலங்குளாக மாறியுள்ளன என்ற டார்வினின் கொள்கையாக் ஏற்கப்பட்டுள்ளது.
    ஆகவே படிம வரலாறு பரிணாம்த்திற்கு ஆதாரம் அல்ல என்ற கருத்து அறிவியலுக்கு ஏற்புடையது அல்ல.

    படிம வர்லாறை ஏன் ஆதாரமாக ஏற்க முடியாது என்று இன்னும் கொஞ்சம் தெளிவாக கூற முடியுமா?.
    இதனை கூறும் அறிவியலாளர்கள், அவர்களின் கருத்துகள் அடங்கிய சுட்டிகள் தர முடியுமா?.
    இது உங்கள் சொந்தக் கருத்து எனில் அதை கொள்ள உங்களுக்கு இருக்கும் உரிமையை ஆதரிக்கிறேன்.

    படிம வரலாறு எப்படி இருந்தாலும் ஏற்க முடியாதா? அல்லது எப்படி இருந்தால் ஏற்க முடியும்?

    ஒரு எ.கா இபோது மனிதன் போன்ற ஒரு படிமம்[atmost 4 million years ago] கேம்பிரியன் படிமங்களில்[500 millions ago] கிடைத்து இருந்தால் பரிணம் கொள்கை முற்றும் முழுதும் தவறு.இப்படி பரிணாம் மரத்திற்கு,கால் கணக்கீட்டு அளவுகளுக்கு மாறாக் ஏதேனும் பரிமாண வளர்ச்சி உள்ளதா?
    Lucy 3.2 million years old ape man like fossil
    http://news.nationalgeographic.com/news/2009/10/091001-oldest-human-skeleton-ardi-missing-link-chimps-ardipithecus-ramidus.html

    இதற்கு கருத்து கூறுங்கள் பிறகு பரிணாம் செயலாக்கம் குறித்தும் விவாதிப்போம்.

    ReplyDelete
  17. சகோ.சார்வாகன்,

    பிளாடிபஸ் மட்டுமா ,நான் கூட பரிணாமத்தின் ஒரு எச்சம் தான், வவ்வால் பாலூட்டி பறவை இனம் ஆச்சே(ஹி..ஹி நான் ஆண் வவ்வால்)

    வவ்வால்

    நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற திமிங்கிலம் போல நீரில் இருந்து நிலத்துக்கு வந்த உயிரினத்தின் இணைப்பாக சீலாக் காந்த் என்ற படிம மீன் 4 கால்கள் போன்ற துடுப்புடன் கடலில் இன்னமும் உயிருடன் இருக்கு அது டினோசர் காலத்து மீன், அதற்கான சுட்டிகள் கீழே,

    சீலாகாந்த்-படிம மீன் 2

    ---------
    சு.பிரியன், மற்றும் அவரது சகாக்களுக்கு,

    படிமம் இருக்கா, அதை வச்சு பரிணாமத்தை எப்படி சொல்ல முடியும்னு விளங்காமலே கேட்டா எப்படி?

    ஒரு படிமம் தானா உருவாகிடாது , நிலப்பிளவு, வெடிப்பில் சிக்கி ,நுண்ணுயிர்களால் அழிக்கப்படமால் அதற்கான வெப்பத்தில் மண்ணில் புதையுண்டு பாறையாக உருவாக வேண்டும் அப்போது தான் படிமம் உருவாகும், பெரும்பாலும் உருகிய எரிமலைக்குழம்பு நிலையில் உயிரினம் மாட்டி அப்படியே பாறையாக குளிர்ந்தால் மட்டுமே சாத்தியம்.

    அப்படிப்பட்ட சூழல் ஏற்படாமல் , உயிரினம் உண்டு, வளர்ந்து ,இறந்து மக்கிப்போனால் படிமம் உருவாகாது.

    நாமலும் தான் செத்தா புதைக்கிறோம் படிமம் ஆகிடுதா எல்லா உடலும். எகிப்த் ல மம்மி ஆக்கி வச்சு கிட்டத்தட்ட ஒரு படிமம் போல வரலாற்றின் சுவடுகளை காட்டவில்லையா?

    ஏன் இப்போ முகமது நபியோட படிமம் இருக்கா இல்லை மம்மி இருக்கா நீங்க நம்ப? அவர் கைப்பட எழுதிய நூல்கள் இருக்கா, என்ன இருக்குனு நம்புறிங்க, ஒரு 1000 ஆண்டுகாலத்துக்கே ஆவணம் இல்லை. இதில் பல மில்லியன் ஆண்டுக்களுக்கு இயற்கையாக உருவான படிமங்களில் தொடர்ச்சி கேட்கிறிங்க.

    இருக்கும் ஆதாரங்களைக்கொண்டு , விடுபட்டவைகளை நிரப்பி தொகுத்து அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படி விஞ்ஞானம் காட்டியுள்ளது.

    ReplyDelete
  18. சகோ.சார்வாகன்,

    பிளாடிபஸ் மட்டுமா ,நான் கூட பரிணாமத்தின் ஒரு எச்சம் தான், வவ்வால் பாலூட்டி பறவை இனம் ஆச்சே(ஹி..ஹி நான் ஆண் வவ்வால்)

    வவ்வால்

    நிலத்தில் இருந்து நீருக்கு சென்ற திமிங்கிலம் போல நீரில் இருந்து நிலத்துக்கு வந்த உயிரினத்தின் இணைப்பாக சீலாக் காந்த் என்ற படிம மீன் 4 கால்கள் போன்ற துடுப்புடன் கடலில் இன்னமும் உயிருடன் இருக்கு அது டினோசர் காலத்து மீன், அதற்கான சுட்டிகள் கீழே,

    சீலாகாந்த்-படிம மீன் 2

    ---------
    சு.பிரியன், மற்றும் அவரது சகாக்களுக்கு,

    படிமம் இருக்கா, அதை வச்சு பரிணாமத்தை எப்படி சொல்ல முடியும்னு விளங்காமலே கேட்டா எப்படி?

    ஒரு படிமம் தானா உருவாகிடாது , நிலப்பிளவு, வெடிப்பில் சிக்கி ,நுண்ணுயிர்களால் அழிக்கப்படமால் அதற்கான வெப்பத்தில் மண்ணில் புதையுண்டு பாறையாக உருவாக வேண்டும் அப்போது தான் படிமம் உருவாகும், பெரும்பாலும் உருகிய எரிமலைக்குழம்பு நிலையில் உயிரினம் மாட்டி அப்படியே பாறையாக குளிர்ந்தால் மட்டுமே சாத்தியம்.

    அப்படிப்பட்ட சூழல் ஏற்படாமல் , உயிரினம் உண்டு, வளர்ந்து ,இறந்து மக்கிப்போனால் படிமம் உருவாகாது.

    நாமலும் தான் செத்தா புதைக்கிறோம் படிமம் ஆகிடுதா எல்லா உடலும். எகிப்த் ல மம்மி ஆக்கி வச்சு கிட்டத்தட்ட ஒரு படிமம் போல வரலாற்றின் சுவடுகளை காட்டவில்லையா?

    ஏன் இப்போ முகமது நபியோட படிமம் இருக்கா இல்லை மம்மி இருக்கா நீங்க நம்ப? அவர் கைப்பட எழுதிய நூல்கள் இருக்கா, என்ன இருக்குனு நம்புறிங்க, ஒரு 1000 ஆண்டுகாலத்துக்கே ஆவணம் இல்லை. இதில் பல மில்லியன் ஆண்டுக்களுக்கு இயற்கையாக உருவான படிமங்களில் தொடர்ச்சி கேட்கிறிங்க.

    இருக்கும் ஆதாரங்களைக்கொண்டு , விடுபட்டவைகளை நிரப்பி தொகுத்து அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படி விஞ்ஞானம் காட்டியுள்ளது.

    ReplyDelete
  19. சார்வாகன் ,

    ஒரு சுட்டி விட்டுப்போச்சு


    சீலாஹ் காந்த் -படிம மீன்

    ReplyDelete
  20. வாங்க சகோ வவ்வால்
    நீங்கள் [பல் அறிவியலா:ளர்களும்] சீலோகாந்த் பரிணாம்த்தின் ஆதாரம் என்கிறீர்கள்.ஆனால் அதில் ஒரு வகை வாழும் படிமம் என்று எதிரானதாக் காட்டும் பதிவும் தமிழில் உண்டு.வாழும் படிமம் பரிணாமத்தின் எதிரான நிரூபணம் இல்லை என்று துறை சார் வல்லுனர் கூறினால் பரிணாம்ம் உங்கள் மதம் ஆகவே அதனைக் [அவர்கள் போல்] காக்க என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று மத விஜ்ஜானி போட்டுத் தாக்கிவிட்டார்.

    அப்பாவிகள் பல்ர் அறியாமல் எதிர்ப்பது உண்மைதான் என்றாலும் சிலர் அறிந்தும் எதிர்ப்பதும் உண்மை.
    நன்றி

    ReplyDelete
  21. முஸ்லிம் நண்பர்களே பரிணாமத்தை மறைக்க எடுக்கும் முயற்சி புரியாணிக்குள்; முழு மாட்டை மறைப்பதைபோலாகிவிட்டது. அதை விட்டுவிட்டு துhண்டிலுக்குப் போய்க் குரங்கான கதையில் இருந்து பரிணாமத்தை நபிதான் சொன்னாh; என்று எடுத்துவிட்டால் பிரச்சினையூம் முடியூம் சுவா;க்கம் போதலும் தடைப்படாது. முயற்சி செய்யங்களே!

    ReplyDelete
  22. வானக்க சகோ மெப்

    பல கற்ற இஸ்லாமிய அறிஞர்கள் வழி நடத்தப்பட்ட படிணாமம் என்ற கொள்கையை வலியுறுத்துகின்றனர்.இதனை பலர் விரும்புவது இல்லை.ஆயினும் இது குரானை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை உண்மை என்றில்லாமல் உருவகமாக‌ விள்ங்க வேண்டும் என்னும் நிலைக்கு ஆள்க்கி விடும் பிறகு ஷாரியா உள்ளிட்ட் எதையுமே திணிக்க முடியாது.

    ஆதம் ஏவாள் உள்ளிட்ட இப்போதைய விலங்குகள் அனைத்தையும் இப்போதைய வடிவத்திலேயே படைத்தார் என்பதுதான் குரானிய படைப்புக் கொள்கையாக் அவர்களின் புரிதல்.

    இத்தகயை புரிதல் முற்று முழுதும் த்வறு என்று நிச்சயம் கூற இயலும்.அவர்களின் பரிணாம் எதிர்ப்பு வாதங்கள் எல்லாம் நகைச்சுவை மட்டுமே!

    அடிக்கடி வாங்க நன்றி!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  23. சிறந்த பதிவு

    ReplyDelete