Thursday, March 8, 2012

வைரஸ் தாத்தாவின் புத்தம் புதிய டார்வின் எதிர்ப்பு படைப்பியல் கொள்கை டி நோவா!!!!!!!.




அப்ரக்கா தப்ரா,ஜீ பூம்பா  அண்டாக்க கஷேம்,அபூக்கா ஹுகும் மாறிவிடு ஜீனோம்!!!!!!!!!!!!!!

நாம் வழக்கம் போல் ஏதாவது பரிணாம எதிர்ப்பு அறிவியல் விமர்சனம் வருகிறதா என தமிழ் பதிவுலகில் விழிப்புடன் இருக்கிறோம் என்பதை சொல்லத் தேவையில்லை.என்ன கொஞ்ச நாட்களாக் அறிவியல் சார்ந்த பரிணாம் எதிர்ப்பு பதிவு வரவில்லையே என்றால் வாராது வந்த மாமணி போல் ஒரு சின்ன பதிவு.சரி யானைப் பசிக்கு கிடைத்தது சோள்ப்பொறிதான்.பிரியாணி போய்,வாத்து முடடை வந்தது.சரி வாத்து முட்டையோடு சோளப்பொறியும் கிடைத்தால் நல்லதுதானே!!!!

சரி என்ன விடயம் என்கிறீர்களா!!!!!!
இங்கே பாருங்கள்.


ஒரு முண்ணனி ஃப்ரென்ச் நுண்ணுயிரியல் ஆய்வாளர்.[மைக்ரோ பயாலாஜிஸ்ட்] Didier Raoult of the University of Aix-Marseille, பரிணாம கொள்கையை முற்றும் முழுதாக நிராகரித்து புத்தகம் எழுதியுள்ளார் என்பது எதிர்ப்பாளர்களுக்கு தங்களின் உண்மையான்  பரிணாம் எதிர்ப்பு மார்க்கத்திற்கு ஒருவர் வந்துள்ளதை ஸ்வீட் எடுகொண்டாடு என் காட்பரீஸ் விளம்பர பாணியில் கொண்டாடுவது இயல்பே! .பிரியாணி போடாமல் ஸ்வீட் மட்டும் எடுப்பதில் நம்க்கு கடும் கோபம்.ஆகவேதான் இப்பதிவு. ஒருவேளை கொண்டாடபிரியாணி போட்டு நம்மையும் அழைத்து இருந்தால் இப்பதிவு வெளியிட்டு இருப்போமா என்ற கேள்வியை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.!!!!!!!!!!.

ஒருவர் எந்த கொள்கையையும் ஏற்கவோ மறுக்கவோ நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உள்ள உரிமையை ஆதரிக்கிறோம்.ஆனால் அவர் சொன்னதில் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு மகிழ்ந்து கொண்டாடி காட்பரீஸ் எடுக்கும் நம் சகோக்கள் மீது வருத்தம். அவரை பின்பற்ற தொடங்கிய காட்பரீஸ் குழுவினருக்கு அவர் கூறிய முழு விவரமும் அளிப்பது நம் கடமை.நமக்கு கேள்வி பதிலாக அளிப்பதே எளிதாக் படுவதால் அப்ப்டியே செய்வோம்!.

1.யார் இந்த ஆய்வாளர்?

ஃப்ரான்ஸ் நாட்டை Didier Raoult சேர்ந்த ஒரு சிறந்த துண்ணுயிரியல் மேதை.முனைவர் பட்டம் அத்துறையில் பெற்றவர்.ப்ரான்ஸ்நாட்டின் புகழ் பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்றான் University of Aix-Marseille ல் பணியாற்றி வருகிறார்..
இவர் பல் வைரஸ்களை கண்டு பிடித்ததோடு மட்டும் அல்லாமல் அதன் ஜீனோம் எனப்படும் உயிர்க் குறியீடுகளையும் அறிந்து ஆவணப்படுத்தி உள்ளார். பல மருத்துவம் நுண்ணுயிரியல் சார்ந்த ஆய்விதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார். உலகின் பெரிய வைரஸ்களை எல்லாம் கண்டு பிடித்த இவரை நாம் அன்போடு வைரஸ் தாத்தா என அழைக்க்லாம்.!!!!!!!!!!!

2.காட்பரீஸ் குழுவினர் இவ்விடயத்தை எங்கிருந்து பெற்ற்னர்?
நல்ல கேள்வி.
அப்பதிவின் மூலத்தை அளிப்போம்.


நம் காட்பரீஸ்  சகோ இந்த மூல சுட்டி உள்ள பரிணாம் எதிர்ப்புத் தளத்தில் வந்த விடயத்தில் தங்கள் சாக்லேட் கொள்கைகளுக்கு பங்கம் வராமல் கொஞ்சம் மட்டும் மொழி பெயர்த்து வழக்கம் போல் பதிவிட்டு விட்டார். சரி ஏதோ ஒரூவர் பரிணாம கொள்கையை திடிரென எதிர்ப்பது புதிதல்ல எனினும் நுண்ணுயிர்களின் பரிணாம் வளர்ச்சி என்பது ஆய்வுரீதியாக் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று ,அதுவும் அதன் இனவிருத்தி விரைவாக் நடப்பதால் தலைமுறைரீதியான மாற்றங்கள் எளிதில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டு விட்டன.நுண்ணுயிர்கள் பரிணாம மற்றம் அடையாது என்று யாரும் கூற இயலாது என்னும் போது  வைரஸ் தாத்தா பேரா ரால்ட் பரிணாம் மாற்றத்தை எதிர்க்கிறார் எனில் ஆச்சர்யமான் விடயமே!

வைரஸ் தாத்தா நுண்ணுயிர்களின் பரிணாம் வளர்ச்சி குறித்தே சில ஆய்வுக் கட்டுரை பதிவிட்டு இருக்கிறார்.

1. Ogata H, Audic S, Renesto-Audiffren P, Fournier PE, Barbe V, Samson D, Roux V,
Cossart P, Weissenbach J, Claverie JM, Raoult D
 Mechanisms of evolution in Rickettsia conorii and R. prowazekii. Science 2001; 293(5537):2093-2098.


2.Rickettsial evolution in the light of comparative genomics.


3.முதலில் பரிணாம் எதிர்ப்பு தளத்தின் அப்பதிவு பேராசிரியர் ரால்ட் பற்றி என்ன கூறுகிறது?.

பேரா ரால்ட் டார்வினுக்கு அப்பால் என்ற ஃப்ரென்ச் மொழி புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்.

டார்வின் ஒரு மதகுரு.அவரின் கொள்கையாக்கமானபரிணாம மரம் பைபிளை அடிப்படையாக் கொண்டது. பரிணாம் மரம் மிகவும் எளிமையான் மாதிரி. இன்னும் பரிணாம் கொள்கையின் இயற்கைத் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்.. ஜீன்கள் பரிமாற்றம் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களுக்கிடையே மட்டுமன்றி பாக்டீரியாவில் இருந்து பிற மேம்பட்ட[மனிதன் போன்ற] உயிரினங்களுக்கு இடையேயும் நடக்கிறது. இது மனிதக் குடலில் நடக்கிறது ஒரு சான்றாகும்..

 இது டி நோவா[???????????] படைப்பியல் கொள்கை மூலம் புதிய உயிர்கள் தோன்றுவது சாத்தியம் என்பதை விள்க்குகிறதுஆகவே டார்வினின் பரிணாம் மரம் இடையிடையே இணைக்கப்பட்ட வலைப் பின்னல் போன்ற அமைப்பாக மாற்றப் பட வேண்டும்."


“"Darwin was a priest," Raoult says, claiming that the image of the tree of life that Darwin proposed is inspired from the Bible. "It also is too simplistic." Raoult questions several other tenets of modern evolutionary theory, including the importance of natural selection. He says recent discoveries in genetics show how frequently genes are exchanged not just between different microbial species but also between microbes and complex organisms, for instance, in the human gut. That means de novo creation of entirely new species is possible, Raoult argues, and Darwin's branching tree of life should be replaced by a network of interconnected species.

அதாவது என்ன சொல்கிறார் என்றால் ஒரு பாக்டீரியா மனிதன் அல்லது வேறு உயிரினத்துடன் ஜீன் பரிமாற்றம் செய்தும் புதிய உயிர்கள் தோன்றலாம் என்கிறார். ஆகவே அவர் பரிணாம் வளர்ச்சி,மாற்றத்தை எதிர்க்கவில்லை அதுவும் புதிய உயிர்கள் இப்போதும் தோன்றுகிறது என்பதையும் ஏற்கிறார்.டார்வினின் கொள்கையாகத்தில்  பரிணாம காரணிகளின் பங்கு,,பரிணாம் மரம் ஆகியவற்றை மட்டுமே எதிர்க்கிறார்.

இது நிச்சயம் ஒரு அறிவியலில் புதிய புரட்சியான கருத்துதான்.

உங்களுடன் பாக்டீரியா ஜீன் பரிமாற்றம் நடத்தினால் நீங்கள் வேறு உயிரினமாக [உடனே ????????] மாறிவிடுவீர்கள்.

Overview of the ERV Controversy

Evolutionists claim that a virulent strain of ancient viruses called retroviruses plagued vertebrates (and most non-vertebrates) as they evolved throughout time. After their initial outward communicable infection (exogenous), evolutionists also claim that these viruses were able to insert their DNA into their host’s germ cells, which are all sperm and egg related cells. Any viral DNA that integrates into the DNA of a host’s germ cell would be automatically passed down (inherited) to all offspring and that type of transmission and is called endogenous.
ERVs are considered ‘proviral,’ which means they a latent form of an original virus that can no longer replicate and infect. Because all ERVs lack and have different genetic material than that of exogenous retroviruses, evolutionists commonly refer to ERVs as “retrovirus-like elements” or “remnant sequences.” 

ERV integration points within chromosomes are typically located at the identical position (loci) of related species. Evolutionists believe that integration sites are random upon insertion into the germline from exogenous retroviral infections and claim that those shared loci could only have occurred by common descent. This case of presupposition is why ERVs have been the poster child for biological evolution.


http://www.whoisyourcreator.com/endogenous_retroviruses.html

டார்வினின் பரிணாம் கொள்கைக்கும் மாற்று விள்க்கம் அளிக்கிறது.இது இயற்கைக்கு உடபட்டே இருப்பதால் இது குறித்து இன்னும் தக்வல் அறிந்து பரிசீலிக்கவே விரும்புகிறோம்
இதற்கு அறிவியல் உலகில் ஆதரவு கிடைத்தது போல் தெரியவில்லை.அப்புத்தகம் கிடைத்தால் படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் உண்டு.வைரஸ் தாத்தா வைரஸ் பரிணாம் வளர்ச்சி பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் பதிவிட்டு இருந்தாலும்,இப்படி நுண்ணுயிரும்,ஒரு மேம்பட்ட உயிரினமும் ஜீன் பரிமாற்றம் செய்து புது உயிர்கள் தோன்றியதாக‌  ஆய்வுக்கட்டுரை இடவில்லை.

ஆனால் இது குறித்து பல் ஆய்வுகள் நடப்பதை நாம் அறிவோம். என்டோ ஜீனஸ் ரெட்ரோ விரஸ் [Endogenous retrovirus] ]ஊடுருவல் என்பதும் ஜீன் மாற்றங்களை ஏற்படுத்தும், என்பதும் இப்போதைய ஆய்வில் உள்ள ,விவாதிக்கப்படும் விடயம்.ஆகவே அவர் கருத்து பரிசீலனையில் உள்ளது..

இது குறித்த ஒரு காணொளி  






இந்த என்டோ ரெட்ரோ வைரஸ் பற்றி ஒரு பதிவு இடவேண்டும் என நினைத்து இருந்தேன்நாம் கூறுவது என்ன?

உயிரினங்கள் இயற்கையாகவே  சில காரணிகளால் வேறு உயிரினங்களாக மாறியது,மாறுகின்றன,மாறும் இதில் இயற்கைக்கு மேற்பட்ட சக்தியின் பங்களிப்பு கிடையாது.

மூலக்கூறு அறிவியல் முன்னேற்றத்தில் இன்னும் இயற்கைக்கு உடப்ட்ட சில காரணிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டாலும் தவறு இல்லை.

இப்போது பரிணாம்த்தின் காரணிகள்

இயற்கைத் தேர்வு+சிறு மாற்றங்கள்+நுண்ணுயிர்களின் ஜீன் பரிமாற்றம் என்று மாறினால் அது இன்னும் ஆய்வு ரீதியான ஐயமற்றவிள்க்கம் அளிக்குமெனில் மிக நன்று!!!!!!!!! ஆனால் இப்புதிய காரணி வைரஸ் ஜீன் பரிமாற்றம் அதற்கு கடும் பரிசோதனைகளை கடக்க வேண்டி இருக்கும்.!!!!!!!!!.

நாம் என்ன டார்வினே இறுதி பரிணாம அறிவியலாளர் அவர் எழுதிய புத்தகத்தின் கருத்துக்கு மாற்று புத்தகம் இருக்க கூடாது என்றா கூறுகிறோம்?

சரி வைரஸ் தாத்தா இது குறித்து  எழுதிய ஏதாவது ஆய்வுக் கட்டுரை கிடைக்குமா  என தேடிய போது ஒரே ஒரு தலையங்கமும் அதன் சிறு பகுதி மட்டும் கிடைத்தது. .இங்கே படியுங்கள்.என்னது அதனையும் மொழி பெயர்த்து அளிக்கவா!.சரி இதன் மீது விவாதம் வந்தால்,அவசியம் என்றால் அளிப்போம்!

A viral grandfather: genomics in 2010 contradict Darwin's vision of evolution.(Editorial)
 Date: 23/12/2010 Online Date: 27/05/2011



5. சரி அது என்ன டெ நோவா படைப்பியல் கொள்கை?

அவர் சொன்னதில் இந்த டி நோவா படைப்பியல் கொள்கை சாத்தியம் என்பது மட்டும் நாம் வேறுபடுகிறோம்.நான் இந்த சொல்லை இப்போதுதான் கேள்விப் படுகிறோம்.இதுஎன்ன என்றால் தெளிவாக கூறவே முடியாது .மனிதர் புரிந்து கொ[ல்ல]ள்ள‌ இது ம(னி)தக் கொள்கை இல்லை இல்லை.அதையும் தாண்டி குழப்பமானது!

சரி குறிப்பாக சொன்னால் பூமி,சந்திரன் ,மனிதன் உள்ளிட்ட‌ உயிரினங்கள் உள்ளிட்ட படைப்பு மிக விரைவாக் நடந்து விட்டதுஇதில் இந்த வைரஸ்களின் பங்கும் உண்டு என வைரஸ் தாத்தா வலியுறுத்துவதாக் கொள்வோம்.

இபோது நாம் காட்பரீஸ் குழுவினரிடம் தாத்தாவின் கட்டுரை+ டி நோவா படைப்புக் கொள்கையை[நம்க்கு சரியாக் புரியாததால்] ந்ன்கு விள்க்கி அறிவியல் சான்றுகளுடன் ஒரு பதிவிட வேண்டுகிறோம்.அப்படி இல்லையெனில்  அக்கொள்கைதான் தங்கள் சாக்லேட் கொள்கை என அறிவித்து விட கோருகிறோம்.பதில் அளிக்க மறுத்தாலும் அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை அதரிக்கிறோம்.

What is De novo creation?

De novo creation is the ancient conceptualization of origins found in the Bible. This term is made up of the Latin words de meaning “from” and novus “new.” Stated more precisely, it is a view of origins that results in things and beings that are brand new. This type of creative activity is quick and complete. It appears in a majority of ancient creation accounts and it involves a divine being/s who act/s rapidly through a series of dramatic interventions, resulting in cosmological structures (sun, moon, stars) and living organisms (plants, animals, humans) that are mature and fully formed.




நுண்ணுயிர்களின் ஜீன் பரிமாற்றம் உயிரினங்களில் பல்வேறு வகைகளை தோற்றுவித்தால்,அதன் மூலம் புதிய உயிரினங்கள் தோன்றுவதாக் நிரூபிக்கப்பட்டால் நாம் வரவேற்கிறோம்,அதில் இயற்கைக்கு மேம்ம்பட்ட சக்தி என்ற அறிவியலில் நிரூபிக்க இயலாத கருத்தை மட்டும் ஒதுக்கிறோம்.உயிரினங்களை வைரஸ் விட்டு கடிக்க வைத்து ஜீன்களில் மாற்றம் செய்தது இயற்கைக்கு மேம்ம்பட்ட சக்தி என நம்புவதில் நம்க்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் அதனை விள்க்கினால் நன்று. வைரஸ் கடித்தால் ஜீன் மாறுகிறது என்பதும்,டி நோவா கொள்கை அனைத்தும் அப்ப்டியே இருக்கிறது என்பதும் மிகவும் வழக்கம் போல் குழப்புகிறது. [இதனை விள்க்கி] சீக்கிரம் அடுத்த பரிணாம் எதிர்ப்பு பதிவு எழுத காட்பரீஸ் சகோதரர்களை வேண்டுகிறோம்.

One more video






நன்றி
Thanks google

18 comments:

  1. Gorillas More Related to People Than Thought, Genome Says
    Surprising differences include gene that aids knuckle walking.
    http://news.nationalgeographic.com/news/2012/03/120306-gorilla-genome-apes-humans-evolution-science/

    ReplyDelete
  2. நல்ல இடுகை, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது

    ReplyDelete
  3. CONVINCE OR CONFUSE, THAT IS WHAT RELIGION IS DOING ALL THESE YEARS...

    ReplyDelete
  4. சகோ.சார்வாகன்,

    நல்ல விளக்க(மாற்று அடி) பதிவு! ஒரு பத்தியில் ஒரு பகுதியை மட்டும் எடுத்துப்பார்த்தால் அதன்ன் பொருள் வேறாகவே இருக்கும், அதன் அடிப்படையில் ஒரு "பிட்" போட்டு இருக்காங்க முட்டாய்(ள்) சகாக்கள். அதுக்கே நோபல் பரிசு வாங்கிட்டா போல புளகாங்கிதம் வேற :-)) குடிக்க ஒரு காரணம் தேடுறாப்போல இவனுங்க்க சுவீட் திங்க இப்படிலாம் காரணம் தேடுறாங்க, பாவம் சாப்பிட்டு போகட்டும் சர்க்கரை நோயாளியாக இருந்தா சரி தான்.

    வைரஸ் கடி ஜீன்ல மாற்றம் உண்டாக்குதுனு ரொம்ப நாளாவே ஒரு கருத்து சொல்லிக்கிட்டு இருக்காங்க, மலேரியா அல்லது ஏதோ ஒரு நோய் தொற்றி மீண்டு வந்தால் அதே நோய்க்கு எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறாப்போல ஜீன் மாறுதுனு முன்னர் ஒரு கட்டுரை படித்தேன் அப்போ வாக்சினேஷன் எல்லாம் ஒரு தலைமுறைல செஞ்சா போதுமே எதுக்கு எல்லா குழந்தைக்கும் செய்றாங்க?

    ReplyDelete
  5. நம்ம பாய் போகிற போக்கில் சொல்லிட்டுப் போய்ட்டாரா, ஆனால் அதற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றது என படிக்க அதிக நேரங்கள் பிடிக்குமே.

    ஏன் எல்லோருக்கும் ”ஜாக்கேட்” போட்டு எழுதும் வியாதி பிடித்துவிட்டது??

    ReplyDelete
  6. நான் நேற்றே vanjoor பதிவை கண்டேன். அவர் உண்மையென்ற பெயரிலும் மதபிரசாரம் செய்வது தெரியும்.உங்க பதிவில் படித்த பின்பு தான் அங்கே போய் படித்தேன். வாக்குகளை அள்ளி வழங்கிய மதவாதிகள் பின்னோட்டமிடுவதில் மட்டும் அங்கே மிக எச்சரிக்கையாகிவிட்டனர்.
    எங்களுக்கு உங்களது நல்ல பதிவு கிடத்தது.

    ReplyDelete
  7. வாங்க நண்பர் கோவி கண்ணன்
    /, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது/

    அப்படி நடந்தால் நல்லதுதான் எனினும் அப்போது முதல் செல்களை படைத்து பரிணம கொள்கையையும் படைத்து ,பரிணம்த்தை வழி நடத்திக் கொண்டே இருப்பது எங்க ஆள் என்று ஒரே போடாய் போட்டு விடுவார்கள்.அப்ப்டி சொல்பவர்கள் சிலர் இப்போதும் இருக்கிறார்கள்.இபோது அப்படி சொல்பவர்களுக்கு என்ன நடக்கிற‌து என்பதை இச்சுட்டியில் காணுங்கள்!
    UK Cleric Receives Death Threats For Supporting Evolution

    http://www.youtube.com/watch?v=CFn_4j4RzWI
    நன்றி

    ReplyDelete
  8. வாங்க நண்பர் சூர்ய ஜீவ
    குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் நாம் இருக்கிறோமே!
    அப்புறம் மீன் பிரியாணி போட்டு விடமாட்டோமா!!!!!!!!!![குறைந்த பட்சம் ஃபிஷ் ஃப்ரை]
    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க நரேன்
    அவர்கள் போகிற போக்கில் சாக்லேட்டுக்கு குறைவு ஏற்டாத படி மட்டுமே சொல்ல முடியும்.நாம்தான் எதை தையோ தேடி பதிவு போட்டு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்,விள்க்க்ம் சொல்லியே ஓய்ந்து இடமாட்டொம்ம!!!!!!! ஹி ஹி
    அது ப்ரக்கெட்டோஃபோபியா வைரஸ் கடித்து ஜீன்களில் மாற்றம் ஏற்பட்டு ஃப்ராக்கெட் போட்டு எழுதும் பழக்கம் வந்து விட்டது.!!!!!!
    ***********
    வாங்க நண்பர் குயிக்ஃபாக்ஸ்
    அவங்க ஒரு பதிவு போட்டால் நாமும் போட்டு தாக்கி விடலாம்.சும்மா இருக்கும் போது என்ன பதிவு எழுதுவது என்றே தெரிவதில்லை.இப்படி பதிவை படித்தவுடன் 1000 யோசனைகள் அழகாய் வருகிறது.அங்கே பின்னூட்டம் குறைவாக,ஜாக்கிரதையாக் இருப்பது ஏன் எனில் ,அவர்களின் பின்னூடங்க்களுக்கும் நகைச்சுவை மறுப்பு பதிவு போடுவோம் என அறிந்து இருக்க்லாம்!!!!!!!

    முதலில் வைரஸ் தாத்தா எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் கிடைத்தால் படிக்க வேண்டும்.
    கருத்துகளுக்கு நன்றி!!!!!!!!!!!!.

    ReplyDelete
  10. சகோ,
    //உயிரினங்கள் இயற்கையாகவே சில காரணிகளால் வேறு உயிரினங்களாக மாறியது,மாறுகின்றன,மாறும் இதில் இயற்கைக்கு மேற்பட்ட சக்தியின் பங்களிப்பு கிடையாது.//


    இதற்க்கு மனிதனின் பங்களிப்பே உண்டு என்கிறேன். இயற்கைதான் மிகப்பெரிய சக்தி இதற்க்கு மேம்பட்ட சக்தி என்று உண்டா? :)

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    நல்ல இடுகை, பரிணாமத்தின் கைகளால் மதங்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது//

    ஐயா என்ன தப்பா சொல்றீங்க...எனகென்னமோ மதங்கள் கையால் மனிதர்களே அழித்துக்கொல்வார்கள் என தோன்றுகிறது

    ReplyDelete
  12. வாங்க நண்பர் புரட்சிமணி
    /இதற்க்கு மனிதனின் பங்களிப்பே உண்டு என்கிறேன். இயற்கைதான் மிகப்பெரிய சக்தி இதற்க்கு மேம்பட்ட சக்தி என்று உண்டா?/

    இதை நாம் சொன்னால் நாத்திகன்,இறைமறுப்பாளன் இன்னும் புரியாத மொழியில் என்னன்னமோ சொல்கிறார்கள். பாருங்கள் சகோ நம் உடலிலேயே பல உயிரினங்கள் இருக்கின்றன.இறந்தவர் உடலிலும் வாழ்கின்றன.அந்த உயிரினங்களுக்கு நாம் அல்லது இறந்த உடல் எப்படி தோன்றும்?.அதுபோல் இப்பிரபஞ்சமும்,இயற்கையும் நம்க்கு தோன்றுகிற‌து,

    நான் சொல்வது சரிதானே!
    நன்றி

    ReplyDelete
  13. வாங்க நண்பர் வவ்வால்
    இது இன்னும் பல் பரிசோத்னைகளை கடக்க வேண்டும் என்பதுதான் உண்மை.வைரஸ் ஜீன் மனிதன் உள்ளிட்ட பல உயிரிங்களிலும் இருக்கிற‌து.

    நீங்கள் கேட்டப்டி ஏன் நோய் எதிர்ப்பு சக்தி தலை தலைமுறைக்கும் வரும்படி செய்ய முடியுமா? என்பதும் நல்ல கேள்வி!!!!! ஜெனெடிக்ஸ் துறையில் இமாதிரி ஏதோ செய்வதக் கேள்வி படுகிறேன்.நோய்களற்ற,அதிக வருடம் வாழக்கூடிய, வலிமையான் உடல்,புத்திசாலித்தனம் கொண்ட சூப்பர்மேன்களை உருவாக்குவார்களா !!!!!!!!!!!
    கண்ணைக் கட்டுதே!!!!!!!!
    நன்றி

    ReplyDelete
  14. நண்பரே,

    ஏதோ படித்ததில் பிடித்தது என்ற கணக்காக... இதை தருகிறேன்.
    http://kaipullai.com/2011/09/12/the-greatest-heist-in-indian-history-how-our-history-was-changed-and-we-didnt-even-notice-part-1the-lost-eon-6th-century-b-c-to-1174-a-d/

    ReplyDelete
  15. Thanks a lot naren!!!!!!!!!
    New Discovery of Indian History

    **************
    This is India’s history from that persons point of view

    Harappans were the first people in India, and they had a fetish for building abnormally large bath-tubs.

    Their asses were then kicked by the some unknown invading Aryans.

    Somewhere down the line, Alexander and his badass gang of Greeks came calling.

    Chandragupta Maurya with his adviser Chanakya, did some awesome 420giri to take over from the Greeks.

    They were then succeeded by the Guptas who brought the ‘Golden Age’ with them.

    Mahmud of Ghazni, however, looted all that gold. He needed a sum total of 17 visits to complete his gold quest.

    Mohammad Ghauri followed him with similar intentions, but decided to avoid the trouble and simply stay back. And then he died.

    He left his slave Qutub-ud-din Aibak to do all the ruling. His most significant achievement was to build one pointless tower.

    Then came a Muslim queen, underlining our credentials in female liberation.
    It was then the turn of Tughlaq and his gang of idiots. They moved national capitals around because they hated the weather.

    From somewhere, Babar, a descendant of a lame, one eyed king from Central Asia landed in India.

    He and his sons, calling themselves Mughals, ruled India for the next 350 years.
    Their party came to an end when Englishmen arrived, redcoats and all, and took a strong fancy to our country.
    Lot of interesting stuff is there I will follow him
    Thanks again

    ReplyDelete
  16. http://www.scientificamerican.com/article.cfm?id=backseat-drivers
    Gut Microbes May Drive Evolution
    The bacteria that live quietly in our bodies may have a hand in shaping evolution
    By Carrie Arnold | March 9, 2012 | 1

    microbes such as Bacteroides fragilis may be as important as our genes.Image: Photo Researchers, Inc.
    The human body harbors at least 10 times more bacterial cells than human cells. Collectively known as the microbiome, this community may play a role in regulating one's risk of obesity, asthma and allergies. Now some researchers are wondering if the microbiome may have a part in an even more crucial process: mate selection and, ultimately, evolution.
    The best evidence that the microbiome may play this critical role comes from studies of insects. A 2010 experiment led by Eugene Rosenberg of Tel Aviv University found that raising Drosophila pseudoobscura fruit flies on different diets altered their mate selection: the flies would mate only with other flies on the same diet. A dose of antibiotics abolished these preferences—the flies went back to mating without regard to diet—suggesting that it was changes in gut microbes brought about by diet, and not diet alone, that drove the change.
    To determine whether gut microbes could affect an organism's longevity and its ability to reproduce, Vanderbilt University geneticist Seth Bordenstein and his colleagues dosed the termites Zootermopsis angusticollis and Reticulitermes flavipes with the antibiotic rifampicin. The study, published in July 2011 in Applied and EnvironmentalMicrobiology, found that antibiotic-treated termites showed a reduced diversity in their gut bacteria after treatment and also produced significantly fewer eggs. Bordenstein argues that the reduction of certain beneficial microbes, some of which aid in digestion and in the absorption of nutrients, left the termites malnourished and less able to produce eggs.
    These studies are part of a growing consensus among evolutionary biologists that one can no longer separate an organism's genes from those of its symbiotic bacteria. They are all part of a single "hologenome."
    "There's been a long history of separating microbiology from botany and zoology, but all animals and plants have millions or billions of microorganisms associated with them," Rosenberg says. "You have to look at the hologenome to understand an animal or plant." In other words, the forces of natural selection place pressure on a plant or animal and its full array of microbes. Lending support to that idea, Bordenstein showed the closer the evolutionary distance among certain species of wasps, the greater the similarities in their microflora.
    Researchers believe that the microbiome is essential to human evolution as well. "Given the importance of the microbiome in human adaptations such as digestion, smell and the immune system, it would appear very likely that the human microbiome has had an effect on speciation," Bordenstein says. "Arguably, the microbiota are as important as genes."
    This article was published in print as "Backseat Drivers."

    ReplyDelete
  17. மிகவும் பல அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.

    ஒவ்வொருவரும் ஒன்றை நிரூபணம் செய்ய தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

    இன்றைய சூழலில் நமக்கு கிடைக்கும் விசயங்களின் அடிப்படையில் தான் நமது சிந்தனை போகும். கிடைக்கும் விசயங்களை வைத்து வித்தியாசமாக சிந்தனை செய்யும்போது சில விசயங்கள் புலப்படலாம். உற்று நோக்குதல். இந்த உற்று நோக்குதல் மூலம் பரிணாமம் சரியாகவே இருக்கும்.

    //வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவரவரை கூத்தாட்டு
    வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவேன்//

    இப்போது இங்கே இந்த வரிகளில் எங்கே இறைவன் தென்படுகிறார் என சொல்லுங்கள் பார்க்கலாம். :)

    பரிணாமங்களின் பரிமாணங்கள் தொடரட்டும். தமிழ் தான் எத்தனை அழகு. பரிமாணம் = பரிணாமம்.

    ReplyDelete
  18. வணக்கம் நண்பர் இராதாகிருஷ்னன்
    அருமையான் விள்க்கம்,நன்றி!

    ReplyDelete