பைபிள் அல்லது விவிலியம் பற்றி அகழ்வாராய்சியாளர் Dr Francesca Starakopoulou ( University of Exeter.) வழங்கும் காணொளிபார்க்கப் போகிறோம்.இதில் 12 ப்குதிகள் உல்ளன.ஒவ்வொரு நான்கு பகுதியும் ஒவ்வொன்றாக மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகின்றன.
1.முதல் கேள்வி(1_4)அரசன் டேவிட்(தாவூத் அல்லது தாவீது)ன் சாம்ராஜ்யம் இருந்ததற்கான சான்றுகளை அகழ்வாராய்ச்சிகள் உறிதிப் படுத்துகின்றனவா?
பைபிளின் கதைகளில் அரசன் சாலமன்(சுலைமான்) கால்த்தில் இருந்து மட்டுமே ஒரு அளவிற்கு வரலாற்றுரீதியான சான்றுகள் உண்டு.அதற்கு முந்தைய கதைகளான ஆதம்,நோவா,ஆபிரஹாம்,மோசஸ் முதலிய கதைகளுக்கு ஆதாரங்கள் இல்லை.டாக்டர்.ஃப்ளோரன்ஸ்கா சாலமனின் தந்தையாக் கூறப்படும் டேவிட்டின் காலத்திற்கு நம்மை அழைதது சென்று சான்றுகளை ஆய்கிறார்.
2.இரண்டாம் கேள்வி(5_8).பழைய ஏற்பாட்டு கடவுளுக்கு மனைவி உண்டா?.இக்கேள்வி கொஞ்சம் பிரச்சினைக்குறியதே என்றாலும் ,பட்சபாதமின்றி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிடுவது ஒரு நியாயமான ஆய்வாளரின் கடமை.அகழ்வாய்வுகளின் படி பழைய ஏற்பாட்டில் கூறப்படும் கடவுளுக்கு மனைவி உண்டா?இது பைபிளில் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு விடை தேடப் படுகிறது. நான் பைபிள் படித்தது உண்டு,அப்ப்டி இல்லை என்று துள்ளி எழும் நண்பர்களே,பொறுமை மொழி பெயர்ப்பதில் மதவாதிகள் பல் ஏமாற்று வேலைகளை செய்வார்கள்.அதில் ஆண் ,பெண் பால் வேறுபாடு,ஒருமை ,பனமை வித்தியாசம், தனமை,படர்க்கை,இலக்கணம், பல அர்த்தங்கள் போன்றவற்றில் பல ஏமாற்று வேலைகள் உண்டு.கேட்டால் இப்படியும் சொல்லலாம் ,அப்படியும் சொல்லலாம் ஆனால் இப்படித்தான் அக்கால்த்தில் பொருள் கொள்ளப்பட்டது என்று பிடி கொடுக்காமல் பேசுவார்கள் என்பதும் நாம் அறிந்ததே. சந்தேகம் இருந்தால் இப்பதிவை படியுங்கள்.
இப்பொதைய அறிவியலே மத புத்தக்த்தில் புதிதாக முளைத்து வரும்போது இம்மாதிரி வேலைகள் சுலபமல்லவா?
3. மூன்றாம் கேள்வி(9_12) உண்மையிலேயே ஏதேன் தோட்டம் உண்டா? இருந்தால் எங்கே இருக்கலாம்?.ஆதம்&ஏவாள்(ஹவ்வா) முதலில் வசித்த இத்தோட்டம் எங்கே இருக்கலாம் என்ற அகழ்வாராய்சி மீதான ஆய்வு.ஆதம் கதைக்கு ஆதாரம் இல்லை என்று சொல்லிவிட்டு இது என்ன என்று கேட்கிறீர்களா?.பைபிளில் குறிப்பிடப் படும் சம்பவங்கள் அம்மாதிரியே நடக்க வாய்ப்பு உண்டா என்பதையே ஆய்வு செய்கிறோமே அன்றி வேறெந்த உணர்வு கொண்டு அல்ல.அதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் அந்த கால வரிசையிலேயே நடந்திருக்கும் என்பதக் கூட ஏற்பதில் ஆய்வுகள் தடை போடுகின்றன.ஆகவே காணொளி பார்த்து தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டுகிறேன்.நன்றி.
No comments:
Post a Comment