Thursday, August 4, 2011

பாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்


இக்கட்டுரை பாகிஸ்தானின் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கையான The Dawn ல் வெளிவந்தது.  அத்னை எழுதிய Ms. மஹீன் உஸ்மானி என்னும் பத்திரிக்கையாளரின் பல கருத்துக்கள் இந்தியர்களுக்கும் பொருந்துவது பொல் இருந்ததால் அத்னை தமிழில் மொழியாக்க்ம் செய்துள்ளேன்.இதில் மத அடிப்படைவாதமும்,கண்மூடித்தனமான மத நம்பிக்கையும் ,அரசின் குறிப்பிட்ட‌ கொள்கையாக்க பாட புத்தகங்களும் எப்படி பாகிஸ்தானிய  சமுதாயத்தை மாற்றியது என்பது பற்றி கூறுகிறார்.அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களை நாம் பாகிஸ்தானியர்கள் என்று கூறுவதை விட இஸ்லாமியர்கள் என்றே வரையறுப்பது பல சிக்கல்களுக்கு வழி வகுப்பதாக கூறுகிறார்.

இனி Ms உஸ்மானியின் கட்டுரை.
___________________________________

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்ற பழமொழி போல் பாகிஸ்தானியர்கள் எதார்த்த சூழ்நிலையை மறந்து ஒரு மத பெருமித மாயவலைக்குள் கல்வி, அந்தஸ்து வித்தியாசமில்லாமல் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...இந்த மத பெருமித சிந்த்னாவாதத்திற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது என்பதை எண்ணிப் பார்க்கவும் மறுக்கின்றனர்..சமுதாயத்தின் சிக்கல்கள், குறைபாடுகள் அனைத்துக்கும் எதையாவது,எவரையாவது குற்றம் சாட்டும் மனநிலையே பெரும்பாலும் காணப்படுகின்றது. தங்கள் சமுதாய சிக்கல்களுக்கு காரணமான எதார்த்த உண்மையை அறிந்து கொள்வதை விட அனைத்துக்கும் பிற (மத) நாடுகளின் சதி என்ற சந்தேகமே கொள்கின்றனர்.  

கடந்த கால்த்தின் இஸ்லாமிய பெருமை குறித்த மாய பிம்பம அவர்கள் மனதில் வேரூன்றி விட்டது. 1947 C.E ல் பாகிஸ்தான் என்னும் நாடு இருக்குமா என்று இருந்த சூழலே இபோதும் உள்ளது.அப்போது இஸ்லாமியரல்லாதவர்கள் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு எதிராக இருந்தது போல் இப்போது இஸ்லாமிய பெருமிதவாதிகள் உள்ளனர்.சமுதாய சூழ்நிலை குறித்த அறிவு சார்ந்த எதார்த்த பார்வையோ,விமர்சனமோ இங்கு இல்லை.ஒருவரின் கல்வி,அறிவு அவருடைய சமுதாய ,அரசியல் பார்வையை தீர்மானிக்கும் என்பது உண்மைதான் என்றாலும் இம்மாதிரி சமுதாய சூழலுக்கு காரணம் என்ன?

 அரிசியில் இருந்து கல் நீக்குவது போல் முதலில் பாகிஸ்தானின் பொதுவான அரசியல் சித்தாந்தத்தை பார்ப்போம்.நம்து பள்ளி பாடநூல்களிலும்,மதசார்பின்மைக்கான விவாதங்களிலும் அரசியல் ஊர்வலங்களிலும் எதிரொலிப்பதுதான் .என்ன ஒலிக்கிறது?.[Pakistan ka matlab kiya? La illaha il lallah ] பாகிஸ்தான் என்பது என்ன?"அந்த ஏக இறைவனைத் தவிர வேறு எவரும் இல்லை " என்பதுதானே!!!!!!!!!இந்த சுலோகம் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு பல காலம் கழித்தே அரசியலில் பயன்பாட்டுக்கு வந்தது,ஆனால் பாகிஸ்தான் நாடு உருவாக்கப் பாடுபட்டவர்களின் செயலாக் கூறப்படுகின்ற‌து.

மதம் என்பது ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்பதும் அதனால் பல,இன,மொழி மக்களை ஒரே தேசிய இனமாக ,நாடாக‌ திரட்ட முடியும் என்பதும் வரலாற்றில் பல முறை நிரூபிக்கப் பட்ட விஷயம்.இறைவனை மேலான சக்தியாக காட்டுவதன் மூலம் மதம தேசிய ஒருமைபாட்டை அவன் கட்டளையாக  வடிவமைக்கிறது..கிரேக்க ஆலயங்கள் கிரேக்க தேசியத்தை வழிநட்த்தியது போல்,ஐரிஸ் (Irish)  கத்தோலிக்க மத பீடம் ஐரிஸ் தேசியத்தை ஊட்டி வளர்த்தது போல்,யூத மதம் இஸ்ரேலை உருவாக்கியது போல் இஸ்லாம் பாகிஸ்தானை கட்டியமைத்தது.

தளபதி ஜியா உல் ஹக் 1977 CE ல் ஆட்சியை கைப்பற்றிய பின் மத சார்பற்ற கொள்கைகளை தவிர்த்து மத அடிப்படையிலான அரசு ஒன்றை அமைக்க முயற்சித்ததன் விளைவுதான் இன்றைய பாகிஸ்தானின் நிலைமை. அவ்ரின்  இஸ்லாமிய மயமாக்கலின் முயற்சிக்கான கொள்கையாக்கம் பள்ளி பாட புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டன.  பொ.ஆ 1977க்கு முந்தைய‌ எந்த பாட புத்தக்த்திலும் இது போன்ற‌ கொள்கையாக்கங்கள் இருக்காது.  அதிபர் ஜியா உல் ஹக் ன் உத்தரவுப்படி பாட புத்தகங்களில் பாகிஸ்தானிய தேசியம் என்பது இனம்,மொழி,இடம் சார்ந்து இல்லாமல் மதம் சார்ந்தே வரையறுக்கப் பட்டது.மாணவர்களுக்கு இக்கொள்கையாக்கத்தின் மீது பிடிப்பு வர வேண்டும் என்பதற்க்க இம்மாதிரி சுலோகங்கள் உருவாக்கப் பட்டு கட்டாயமாக்கப் பட்டன.  முழுமையான(?) இஸ்லாமிய நாடாக் பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்பதே அவ்ருடைய எண்ணம்.

முஸ்லிம்கள் அதிகமாக் வாழும் நாடாக் உருவாக்கப் பட்ட பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக் மாறத் தொடங்கியது.முற்றும் முழுதும் இஸ்லாமிய ஷாரியா சட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.கருத்து சுதந்திரம்,மதச்சார்பின்மைக்கு கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கின.பாகிஸ்தானின் பழமையான் வரலாறான சிந்து சம்வெளி நாகரிகம், இஸ்லாமுக்கு முந்தைய வரலாறு ஆகியவை பாட புத்தக்ங்களில் மறைக்கப் பட்டு பாகிஸ்தான் என்பது முகம்து பின் காசிமின் படையெடுப்பில்(712 C.E) தொடங்குவதாக கூறப்படுகின்ற‌து. உம்மையாது வம்சம்(661_751 C.E) ,அப்பாசித்து வம்சம்(751_1283 C.E ) போன்ற அரேபிய(இஸ்லாமிய)  வரலாறுகளே பள்ளிகளில் போதிக்கப் படுகின்ற‌ன‌. பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே நாடாக இருந்தன ,ஒரே இனம்,கலாச்சாரம் கொண்டவை என்பது பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகள் அறியமாட்டார்கள்.

இம்மாதிரி கொள்கையாக்கம் பாகிஸ்தானியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள நாட்டை சேர்ந்தவர் போல் வரையறுப்பதுதான் மிகப் பெரிய அடையாளச் சிக்கலை உருவாக்கியது.பல பாகிஸ்தானிய இனத்தினர் தங்கள் முன்னோர்கள் அரபுகள் என்று கூறி வருவதும் உண்டு.

வரலாற்றாசிரியர் முபாரக் அலி இது குறித்து என்ன கூறுகிறார்?

மதத்தின் மீதான வரலாறு கட்டமைப்பு தவறான் விளைவுகளையே ஏற்படுத்தும் ஏனெனில் வரலாற்றுக்கு மதம் கிடையாது.பாகிஸ்தான் என்பது 1947க்கு பிறகுதான் அதற்கு முந்தைய வரலாற்றை நம்மால் மாற்ற இயலாது.

தேசப் பிரிவினையின் போது எழுந்த மத கல்வரங்களில் பலர் பாதிக்கப்பட்டானர்.அப்போது எழுதப்பட்ட வரலாற்று புத்தகங்களில் கூட பாகிஸ்தானின் வரலாறு சிந்து சமவெளி நாக்ரிகத்தில் இருந்தே தொடங்குகிறது முகம்து பின் காசிமின் (712) படையெடுப்பில் இருந்து அல்ல‌. இன்னும் மௌரிய பேரரசு ,அசோகர் பற்றியெல்லம் கூட பாட‌ புத்தகங்களில் உண்டு.கடந்த 30 ஆண்டுகளில் பாடபுத்தகங்கள் இந்தியாவுடன் பகைமை ஏற்படுத்த வேண்டும்,அத்னை நிரந்தர எதிரியாக காட்டி அதன் மீது அரசு க்ட்டப் படவேண்டும் என்ற‌ கொள்கையாக்கத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன.

இக்கொள்கையாக்கத்தை பாதுகாகும் பொறுப்பு இராணுவத்திடம் கொடுக்கப் பட்டது.அவர்களே மத நம்பிக்கையின் பாதுகாவலர்கள்.  பிற நாடுகளின் மீதான இஸ்லாமிய படையெடுப்புகள் பெருமைக்குறியதாகவும், அந்த படைத்தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக்வும் காட்டப்படுகிறார்கள். கல்வி,மருத்துவம்,அறிவியல் முதலியவற்றில் சாத்னை புரிந்தவர்கள் பற்றி பாட புத்தகங்களில் அதிகம் கூற‌ப்படுவது இல்லை..

செப்டம்பர் 6 லாகூர் மீது இந்திய தாக்குதலை நினைவு கூறும் தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது.பாகிஸ்தானிய பாட புத்தகங்களில் 1965 செப்டம்பர்  6 ல் இந்தியா எந்த வித முன் அறிவிப்பின்றி லாகூரை தாக்கியது,அத்னை பாகிஸ்தான் இராணுவம் முறியடித்தது என்று இருக்கும்..ஆனால் உண்மையில் பாகிஸ்தான் 1965,ஆகஸ்ட் 5ல் தனது படைவீரர்களை காஷ்மீருக்குள் அனுப்பியதற்கு பதிலடியாக்வே இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன் நீட்சியே லாகூர் தாகுதல்.போர்களில் தோல்வியுற்ற ஜெர்மனி,ஜப்பான் தங்கள் தவ்றுகலை மன்ப்பூர்வமாக் ஒத்துக் கொண்டு முன்னேற்றப் பாதைக்கு வந்தது போல் இல்லாமல் பாகிஸ்தான் த்னது தவறுகளுக்கு எப்போதும் நியாயம் கற்பித்தே வருகிரது. இன மொழி பேதத்தால் ஏற்பட்ட பங்களாதேஷ் பிரிவினையை[1971] இந்திய சதி என்றே பாட புத்தகங்களில் கற்பிக்கின்றனர்.

வரலாற்றுப் புரட்டுகள் மத சிந்த்னையோடு பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப் படுகின்றன. ஏழாம் வகுப்பு சமூகவியல் பாட புத்தக்த்தில் ஐரோப்பிய நாடுகள் கடந்த 300 ஆண்டுகளாக் இஸ்லாமிய உலகை சதி செய்து அடிமை படுத்த  முயல்கின்றன என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.புனிதப் போரைக் கைவிட்டதால்தான் உலக் முஸ்லிம்கள் அடிமைப் பட்டு கிடக்கிறார்கள் என்றும்,புனிதப்போரில் இறப்பவன் என்றும் வாழ்கிறான் என்று .வழிபாடுகளில் புனிதப் போர் புகழ்ந்து மேன்மைப் படுத்தப் படுகிறது.

இம்மாதிரி தீவிரவாதக் கருத்துகளே பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி என்னும் பெயரில் புகட்டப் படுகின்றன.முனைவர் ஹூத்பாய் பள்ளி பாடத்திட்டத்தில் உடனடி மாற்றம் தேவை என்கிறார்.மத கல்வி கற்கும் மதரஸாக்களை விட பள்ளிக் கல்வியே அதிகம் பேரை சென்றடைகிற‌து. கல்விக்கூடங்களில் அஹமதியா முஸ்லிம்கள்,இந்துக்கள், கிறித்தவர்கள் ஒதுக்கப்படுவதும்,மாணவர்கள் இல்லாத எதிரிக்காக‌ தயார் படுத்தப்படுவதும் கண்கூடான் உண்மை.பிற மதத்தை சேர்ந்தவர்களை இழிவு செய்யும் பாடங்களை கூட அவர்களும் படித்தாக வேண்டும்.எந்த விலக்கும் கிடையாது.கல்வி முறையில் கேள்வி எழுப்புவது தேசப்பற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதும் பிற மதத்தவரை சந்தேகத்துடனேயே பார்க்கவும் தூண்டுகிறது.

பாகிஸ்தானிலும் ,சமீபத்தில் உருவான பிற‌ நாடுகள் போல் வேலைவாய்ப்பு இன்மை, ஊழல்,பொருளாதார சிக்கல்கள் மற்றும் வன்முறை போன்றவை உண்டு.இவை அனித்துக்கும் சர்வ ரோஹ நிவாரணி மதமே என்ன்பவர்களின் பின்னால் வேலையற்ற இளைஞர்கள் திரள்கின்ற‌னர்.ஜைத் ஹமித் போன்ற முன்னாள் முஜாகிதீன்கள் இச்சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த முயல்கின்ற‌னர்.ஜெர்மனி உலகாளும் என்று ஹிடல்ர் கூறி ஜெர்மானியர்களை போரில் ஈடுபடுத்தியது போல் இவர் பாகிஸ்தான் இந்தியா போர் தொடுத்து காஷ்மீரை விடுவிக்கவும், பிறகு,ஆஃப்கானிஸ்தான்,பாலஸ்தீனம்,செசன்யா ... என்று செல்ல வலியுறுத்துகிறார்..

முனைவர் ஹூத்பாய் கூறுகிறார்" ஒரு நல்ல் கல்வியாளரோ,அற்வியலாளரோ இறை நம்பிக்கை உடையவராக இருப்பவர்கள் ஜைத் மாதிரி ஆட்களின் பின் செல்வதில்லை,அரைகுறை கல்வி அறிவு கொண்டவர்களே ஈர்க்கப் படுகின்ற‌னர்"..

இம்மதிரி கொள்கையாக்கங்கள் ஒரு சாதாரண அமைதியான பாகிஸ்தானை தீவிரவாத நாடாக ஆக்கிவிட்டன. 2008 ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் படி 54% தீவிர ஷாரியா சட்டம் அமலுக்கு வருவதை ஆதரிக்கின்ற‌னர். .இங்கிலாந்தில் வாழும் 18_ 29 வயதிற்குட்பட்ட 1226 பாகிஸ்தானி இளைஞர்களிடன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தங்கள் அடையாளமாக முஸ்லிம்(பாகிஸ்தானி அல்ல) என்றே கூறினர். பாகிஸ்தானில் வருவாயில் 1.5% மட்டுமே கல்விக்காக் செலவு செய்யப் படுகின்றது.கல்விமுறையில்,பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவ்சியம் ஏற்பட்டுள்ளதை உணர வேன்டும். பாகிஸ்தானின் எதிர்காலம் தீவிரவாதத்திற்கும், அமைதிக்கும் இடையே ஊசலாடுவதால் இதற்கு தோழமையுடன் பலர் உதவி செய்ய முன் வர வேண்டும்.பாகிஸ்தானுக்கு கண்மூடித்த்னமான் மத அடிப்படை கல்வி தேவையில்லை.எதிர்காலத்தில் கல்வி பெறாதவன் மூடன் அல்ல.சரியான கல்வியை பெற்றுக் கொள்ள தெரியாதவனே மூடன்.
_____________________
நன்றி சகோதரி மஹீன் உஸ்மானி



Earthquake Survivors by Maheen Usmani



***********************

3 comments:

  1. பாகிஸ்தானின் raison detre இந்தியா மற்றும் இந்து மத எதிர்ப்பு தான். இந்தியா ஏன் உருவானது என்றால் எளிமையான பதிலான், ஆங்கில ஏகாதிபதிய எதிர்ப்பு மற்றும் மக்கள் நலனுக்காக என்று கூறலாம். ஆனால் பாகிஸ்தான் ஏன் உருவானது என்றால், சரியான காரணம் இல்லை. ஏன் ஜின்னாவுக்கே பாகிஸ்தான் உருவான காரணம் குழப்பமாணதாகத்தான் இருந்துள்ளது.

    அதனால் அவர்கள் மக்கள் நலம் என்ற காரணம் கூறினால் பாகிஸ்தான் உருவாக தேவையில்லை. அதனால் இஸ்லாம் என்ற காரணத்தை எடுத்து வர அது பங்களாதேஷ் பிரிவினை மூலம் அடிப்பட்டு போனதால், இஸ்லாம் என்ற காரணத்தை நிலை நிறுத்த பள்ளிப் பருவத்த்லிருந்தே மூளைச் சலவை தொடங்குகிறது. வெறும் இஸ்லாம் என்றால் போதாது, இந்தியாவால் இஸ்லாமிற்கு அபாயம் என்ற காரணமும் மற்ற பொய்களும் கற்பிக்க படுகின்றன். அதனால் ஒரு சமுதாயமே ஒரு conspiratorial சமுதாயமாக மாறிவிட்டது. அதை உண்மை என்று நம்புவர்கள் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பதால் ஆபத்து அதிகம்.

    இஸ்லாம் ஒரு தேசத்தை கட்டி காக்கும் ஒரு காரணமாக இருக்க முடியாது. பங்களாதேஷ் பிரிவினையே ஒரு படிப்பினை.
    தமிழில் country, nation என்ற கோட்பாட்டுக்கு நாடு தேசம் என்ற சொற்கள் ஒரே அர்த்ததில் பயன்படுத்தப்படுகின்றன என நினைக்கிறேன். ஒரு நாட்டில் ஒரு இனம் இன்னொரு இனத்தை கொடுமைப்படுத்தினால், அந்த இனம் ஒரு nation ஆகி country கேட்கும். உதாரணம் ஈழம். மதமே ஒரு தேசத்திற்கு மூலக் காரணமாகி ஆதிக்கம் செலுத்தினால் மற்ற மத இனத்தவர்க்கு நிலமை படு மோசமானதாக இருக்கும்.

    கட்டுரையின் தமிழாக்கம் மிக அருமை... நன்றி.

    ReplyDelete
  2. ஆங்கில கட்டுரையில் வந்த ஒரு மறுமொழி.....

    It is not just the illiterate masses who are living in denial. Last week I met a visiting couple from Pakistan at a dinner party here in the SF Bay area. The husband / wife were both educated working professionals. Here are some of the gems they dropped during the dinner table chit chat.

    1. The attack of Sri-Lanka Cricket team was the work of Indian agents.

    2. the attack on PNS Mehran was the work of Ammerican agents.

    3. The devastating floods last year were caused by Indians who can now control the water flow into Pakistani rivers because of all the illegal dams they have constructed up-river.

    4. There are no Pakistani Taliban. The terrorist attacks around the country are the works of Americans in order to justify the Drone attacks and keep Pakistan involved in the war on terror.
    5. If the Americans simply leave Pakistan all our problems will disappear instantly.

    There was a lot more in the same vein. My two American born and raised teenagers had this to say after wards: “Dad, people in your old country are Nuts”.

    ReplyDelete
  3. //பாகிஸ்தானும் மத ரீதியான ஆட்சியை விட்டு ஜன‌நாயகம்,மத சார்பின்மை மேலான ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பது நல்லது.//

    முடவன் vs கொம்புத் தேன்
    ...........??

    ReplyDelete