ஐன்ஸ்டின் சார்பியல் கொள்கை(Relativity) பற்றி அனைவருக்கும் தெரியும்.சர் ஐசக் நியுட்டனின் இயக்கவியல் விதிகளின் எல்லைகளின் மீது எழுந்த கேள்விகளுக்கு விடையாக உதித்ததுதான் இது.இதன் சாரம்
1. ஒளியின் வேகத்தை விட எந்த பொருளும் போக முடியாது
2. அதிக வேகத்தில் சென்றால் நேரம் வழக்கத்தை விட மெதுவாக செல்லும்.
3.பொருள் ஆற்றலாக மாறும்(E=mc^2)
இது பற்றி இன்னும் தெரியவேண்டுமென்றால் இப்பதிவுகளில் படியுங்கள்
பெருவிரிவாக்க கொள்கையின் படி அதிக பொருண்மையும்,வெப்பமும் கொண்ட ஓர்மை புள்ளியில் இருந்து விரிவடைந்து அண்ட சராசரங்களும் தோன்றியது என்பதே இப்போதை பிரபஞ்ச தோற்றத்தை விளக்கும் கொள்கை.விரிவடைய ஆரம்பித்ததும் ஏற்படும் நிகழ்வுகளை நியூட்டன்& ஐன்ஸ்டின் விதிகளை வைத்து ஒரு மாதிரி(Model) கணக்கீடுகளுக்கு உதவியாக் உருவாக்கப் பட்டது.
ஆனால் அப்புள்ளியிலோ அல்லது அணுக்க்ளின் உள் இயக்கவியலையோ குவாண்டம் இயற்பியல் கொண்டு விள்க்குகிறர்கள்.
இரண்டு இடங்களுக்கும் வெவ்வேறு விதிகள் அலல்து ஒரு இடத்திற்கு பொருந்தும் விதிகள் மற்ற இடத்திற்கு பொருந்தாது.
இரண்டையும் இணைக்க ஐன்ஸ்டின் மிகவும் முயற்சி செய்தார்.இத்னை இறுதி கொள்கை அல்லது அனைத்து பொருள்களின் கொள்கை(theory of everything) என்று கூறுவர். இன்னும் பல் முயற்சிகள் நடைபெருகின்றன.இந்த கொள்கை நம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள்,செயல்களை விளக்க ஏதுவாக இருக்கும் என்பதால் ஒரு அறிவியலாளரின் கனவு இலட்சியம் இதனை உருவாக்குவதாக்வே இருக்க முடியும்.
சமீபத்தில் நான் படித்த திரு மார்க் ஆல்பர்ட் எழுதிய ஃபைனல் தியரி என்ற புத்தக்த்தின் விமர்சனமே இப்பதிவு
*****************
இறுதி தியரி என்ற புத்தகம் ஐன்ஸ்டின் ஒருவேளை ஏற்கென்வே இந்த கொள்கை கண்டுபிடித்து இருந்தால் எப்படி இருக்கும்?அதனை அடைய அமெரிக்க FBI யும் ஒரு தீவிரவாத அமைப்பும் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என்பதே இபுத்தகம். அறிவியலின் பிண்ணனியில் ஒரு முழு நீள மர்ம நாவலை எழுதியுள்ளார்.
இக்கதையின் நாயகன் திரு டேவிட் ஸ்விஃப்ட் கொலம்பிய பலக்லைகழக்த்தில் பணியாறும் பேராசிரியர்.அறிவியலின் வரலாற்றை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.அவ்ரின் விவாக இரத்தான மனைவி Karen: ,ஒரு மகனும்டன்(Jonah) தனியாக் வசித்து வருகிறார்.விடுமுறை நாட்களில் மட்டும் சென்று மகனுடன் சிறிது நேரம் விளாயடிவிட்டு அவனுக்கு தேவையான பொருள்களை வாங்கி கொடுத்து விட்டு வருவார்.ஒரு நாள் அவர் மகனோடு உரையாடும் போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிரது.அதில் எஃப்:பி:ஐ ஆசாமி ஒருவர் உடனே ஒரு மருத்துவமனைக்கு வரும்படியும் டேவிட்டின் ஆசிரியர் திரு ஹான்ஸ் க்ளின்மான்(பழைய ஹாலந்து கால்பந்து வீரர் பெயர் போல் உள்ளதா!!!!!!)ஆபத்தான் நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளதாக் கூறிகிறார்.
மக்னிடம் விடை பெற்று மருத்துவமனை சென்றால் பேராசிரியர் ஹான்ஸ் க்ளீன்மான் எவராலோ மரணத்திற்கு ஏதுவாக தாக்கப் பட்டது அறிகிறர்.பேராசிரியர் ஹான்ஸ் க்ளீன்மான் டேவிட்டின் பெயரை கூறியதாலேயே அழைத்ததாக கூறுகின்ரது எஃப் பி ஐ.பேராசியரின் அருகில் சென்று காத்திருக்கும் போது அவ்ருக்கு சுய நினைவு வருகிறது.அவ்ர் டேவிட்டிடம் மெதுவாக் இந்த இரு ஜென்மன் மொழி சொற்களை கூறுகிறார். Einheitliche Feldtheorie (The Unified Field Theory)..பேராசிரியர் ஹான்ஸ் க்ளீன்மான் ஐன்ஸ்டினின் ஆய்வு உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றியவர்.அறிவியலின் வரலாற்றில் முனைவர் பட்ட ஆய்வின் போது அவ்ரிடம் எடுத்த பேட்டி,அவர் அளித்த ஒத்துழைப்பு,ஐன்ஸ்டின் பற்றிய பல் பகிர்வுகள் அனைத்தும் டேவிட்டின் நினைவுகளில் ஓடுகிறது.
" என்ன சொன்னீர்கள் அய்யா" என்று கேட்கும் போது பேராசிரியர் க்ளீன்மான் நான் இறப்பது நீச்சயம் நான் சொல்வதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் என்று கூறி சில எண்களை அவர் காதில் முனுமுனுக்கிறார்.டேவிட்டை திருப்பி எண்களை சொல்ல சொல்லி உறுத்திப் படுத்தியதும் அவர் இறந்து விடுகிறார்.
செய்தி அறிவிக்க வெளியே வரும் டேவிட்டை எஃப் பி ஐ கைது செய்து அவர்கள் இடத்திற்கு அழைத்து சென்று என்ன கூறினார் பேராசிரியர் க்ளீனமான் என்று கொஞ்சம் அடாவடியாக விசாரிக்கிறார்கள்.ஏதோ ஒரு உள்ளுனர்வில் அவர் எதுவுமே கூறவில்லை என்று கூறுகிரார்.இதன் போது இரஷ்ய தீவிரவாதி ஒருவனும் இதனை தேடுகிறான்.அவன்தான் பேராசிரியர் க்ளீன்மானின் தாக்குதல்& மரணத்திற்கு காரணம்.
அவன் எஃப் பி ஐ அலுவகத்தின் மீது வெடிகுண்டு தக்குதல் நடத்த டேவிட் தப்பிக்கிறார். இப்போது எஃப் பி ஐ& தீவிரவாதி இருவரும் டேவிட்டை தேடுகிறார்கள்.டேவிட்டின் முன்னாள் விஞ்ஞானி தோழி Monique Reynolds ம் இதில் இணந்து தேடுகிறார்.இந்த எண்களின் இரகசியத்தை உடைத்து அது அனில் குப்தா என்னும் ஐன்ஸ்டீனின் முன்னாள் உதவியாளரை குறிக்கிறது என்று அவரை தேடி செல்கின்றனர்.
FBI&தீவிரவாதி இடம் இருந்து தப்பினாரா,ஐன்ஸ்டின் உண்மையிலேயே இறுதி கொள்கையை வடிவமைத்து இருந்தாரா,அது டேவிட்டிற்கு கிடைத்ததா என்பதில் கதை நகர்கிறது.
பல் அறிவியல் கொள்கைகளையும் கதை போகும் போக்கில் எளிமையாக் விவரிப்பது மிக அருமை.
இப்போதே முடிவு சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்.படியுங்கள் !!!!!!!!!!!.
அந்த இறுதி கொள்கை& அதற்கான ஐன்ஸ்டின் அவர்களின் முயற்சிகள்,
பற்றி கூறும் காணொளி
http://abyss.uoregon.edu/~js/21st_century_science/lectures/lec17.html
ReplyDeleteஅறிவுக்கு விருந்தளிக்கும் இப்படியொரு தளம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன். இனி தொடர்ந்து வருவேன். பகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteநன்றி சகோ!
ReplyDelete