Friday, August 19, 2011

மனித க்ளோனிங் சாத்தியமா? ஆவண‌ப்படம்

க்ளோனிங் என்பது உயிரியலில் ஒரு உயிரை பிரதி எடுப்பது என்று கூறலாம்.சில கால்நடைகள் மட்டும் இம்முறையில் உருவாக்கப் பட்டது தெரிந்ததே.மனித க்ளோனிங் என்பது பல நாடுகளில் தடை செய்யப் பட்டு உள்ளது.இந்த ஆவண‌ப் பட்த்தில் இத்னை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு மருத்துவ அறிஞர் பன்யோடிஸ் ஜாவோஸ் பற்றிய ஆவணப் படம்.மத்தியக் கிழக்கு லெபனானின் ஆய்வக்த்தில் இருந்தே இவருடையா ஆய்வு மேற்கொள்ளப் படுவதாகவும் கூறுகிறார்.இதற்கு அந்த அரசு,மத தலைமைகள் ஆதரவு அளிக்கின்ற‌ன.

இவர் கூறும் பல விஷயங்கள் ஆச்சர்யம்,குழப்பம்,பயத்தையும் ஏற்படுத்துகின்றன.மனித க்ளோளிங் செய்வதில் வெற்றி பெற்று இருப்பதாகவும், 11 கருகளை. இம்முறையில் உருவாக்கி உள்ளதாக் கூறுகிறார்.இன்னும் இறந்த மூன்று மனிதர்களின் டி என் ஏ(DNA) கொண்டு அவைகளின் பிரதிகளை உருவாகி உள்ளதாக கூறுகிறார்ர்.இறந்த 10 வயது சிறுவனும் இதில் ஒன்று..

இது நல்லதா கெட்டதா என்பதை விட தேவையற்றதாகவே தெரிகிற‌து.
காணொளி பாருங்கள்


No comments:

Post a Comment