Monday, August 29, 2011

ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது சரியா? விமர்சனங்கள் உண்மையா?



மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த,மனதுக்கு ஊன்றுகோல் போன்ற வாழ்வியல் நடைமுறை. .மதம் சார்ந்த வாழ்வியல் நடைமுறைகளை இந்தியாவில் எவரும் தவிர்க்க முடியாது.பெரும்பாலானவர்கள் இந்த மதத்தில் இனத்தில் பிறந்தது அவர்கள் விருப்பத்தினால் அல்ல என்பதை உணர்ந்து  கூடுமான்வரை மதம் சார்ந்த‌ வாழ்வியல் நெறிமுரைகளை கடைபிடித்து வாழ்க்கை போராட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.பல்ருக்கு மதம் என்பது உண்மையா என்று தெரிவதை விட தனக்கு ஒத்துவரும் கொள்கைகளை மட்டும் பின்பற்றி ,வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் அறிந்த விஷயமே!!!!!!!.

அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை அவதானித்து அதன் காரணி சக்திகளை வரையறுத்து நடக்கக் கூடிய சில சாத்திய கோட்பாடுகள் உருவாக்கப் படுகின்றன். கால்ப்போக்கில் சில ஆய்வுகள் மூலம் சில கோட்பாடுகள் மெய்ப்பிக்கப் படலாம்,அல்லது தவறென்று நிரூபிக்கப் படலாம்.இது ஒரு தொடர்கதை.மனித சமூகம் கடந்த இரு நூற்றண்டுகளில்தான் அறிவியலில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.அறிவியல் நிரூபிக்கப் பட்ட உண்மைகளை எதிர்த்து கருத்து கூறுபவர்களை உலகம் ஒதுக்கி விடும்.இத்னால் மதவாதிகள் அறிவியலை திரிக்கும் முயற்சியில் இறங்கினர்.எங்கள் மதத்தில் அப்போதே இதெல்லாம் கூறியுள்ளது நிரூபிக்கப் பட்ட ஒவ்வொரு அறிவியல் உண்மையும் எங்கள்'"மதகுரு" ஒரு விளக்கம் கூறிவிடுவார் .இது தவறென்று எளிதாக் பல பதிவுகளில் காட்டியுள்ளதால் இப்பதிவில் நண்பர் ஆஸிக் அகமது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய ஒரு பதிவின் மீது என் விமர்சனம் மட்டும் வைக்கிறேன்.

இதில் நண்பர் ஆஸிக் அகமது ஒரு அறிவியல் விமர்சகர் என்ற வகையிலேயே  என் விமர்சன‌த்தை வைக்கிறேன்.அவர் மத மறுப்பாளர்களை கிண்டல்டிப்பது குறித்து அவரின் நகைச்சுவை உணர்வை வியந்து பாராட்டும் பக்குவம் நமக்கு  இருக்கிறது.இதே போல் வரும் எதிர்வினைகளின் மீதும் பக்குவத்தை வளர்த்தால் இன்னும் பாராட்டலாம். இவரிடைய பதிவுகளில் ஆத்திகர் என்ற நிலையில் இருந்து அனைத்து மதங்களும் ஒன்று என்ற கருத்தை வலியுறுத்தும் அவ்ருடைய மத சார்பின்மையையும் பாராட்டுகிறேன்.பிறந்த மதத்தின் பழக்கவழக்கங்களால் சில அரபி சொற்றொடர்களை ப்யன்படுத்தினாலும் அவருடைய கொள்கையான் அனைத்து ஆத்திகர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் போது நாத்திகர்களை தாக்கினாலும் பர்வாயில்லை என்றே கூறுகிறோம்.

ஏன் தேவையில்லாமல் மத விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத சார்பின்மையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை.தெரிந்தோ தெரியாமலோ சில அறிவியல் கருத்துகளை விவாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளது இதன் மூலம் சில‌ அறிவியல் உண்மைகளை அறிகிறோம் மற்றபடி தமிழர்களின் தனி பெருங்குணமாம் மத சார்பின்மை பாதிக்கும் படி எதுவும் சொல்லமாட்டோம் என உறுதி கூறுகிறோம்.அனைத்து மத (&உட்பிரிவு) பிரச்சாரகர்களும் நண்பர் ஆஸிக் அகமது போல் ஆத்திகர் என்னும் நிலையிலேயே ஒற்றுமையாக இருக்க விருப்பம் தெரிவித்து பதிவிற்குள் செல்வோம்.
**********************
முன்கதை சுருக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங் த்னது க்ராண்ட் டிசைன் என்னும் புத்த்கத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க கடவுள் தேவையில்லை.கவனிக்கவும் கடவுள் இருகிறாரா இல்லையென்றோ கூறவில்ல்லை.இப்புத்த்கத்தின் நோக்கம் இயற்பியல் விதிகளின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவதே தவிர நாத்திக பிரசாரம் அல்ல.இது கொஞ்சம் விவகாரமான் விளக்கம்(உண்மை என்றாலும்)  என்பதால் மதவாதிகள் விமர்சிப்பது இயல்பே.

பெரு விரிவாக்க கொள்கை


இபோதைய பிரபஞ்ச்த் தோற்றத்தின் நிகழ்வுகளை வளக்கும் பெரு விரிவாக்க கொள்கை குறித்து அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்..

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை. எளிதாக் புரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இங்கே படியுங்கள்.


சரி பெருவிரிவாக்க கொள்கை பற்றி தெரிந்து கொண்டீர்கள்.இப்போதைய‌ பிரபஞ்ச தோற்றம் பற்றிய நடைமுறை கொள்கை இதுதான்.ஒரு விஷய்த்தை அனைவரும் புரிந்து கொள்ள வேன்டும்.நமது பிர‌பஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்ப்தை சான்றாக வைத்தே உலகம் ஒரு புள்ளியில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற பெரு விரிவாக்க கொள்கை வடிவமைக்க படுகிறது.இந்த சான்றுகளை மெய்ய்பிக்கும் எந்த கொள்கையுமே பெருவெடிப்பிற்கு நிகரானதாக கூறலாம்.சான்றுகளின் மீதுதான் சாத்தியம் உள்ள கோட்பாடுகள் உருவாக்ப் படுகின்றன.பிறகு அதன் மீதான பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் படுகிறது.

பெரு வெடிப்புக் கொள்கை பிரபஞ்சம் விரிவடைதலை தெளிவாக் விள்க்குகிறது,அது பல் பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் பட்டது என்றாலும் இத்னாலும் விளக்க் முடியாத சில சான்றுகள் உள்ளது.இந்த சுட்டிகளை பாருங்கள்.



 பல சொற்களை தமிழ் படுத்த இயலவில்லை ஆகவே சுட்டிகளாக்வே அளிக்கிறேன்.பெருவெடிப்பு பிரபஞ்ச தோற்றத்தின் அனைத்து சான்றுகளையும் மெய்பிக்க வில்லை என்பதால் இது மாற்றியமைக்க அல்லது இதற்கு பதில் வேறு கொள்கை ஏற்றுக் கொள்ளப் படும் சூழலே உருவாகியுள்ளது.

இதற்கு மாற்றாக ஸ்ட்ரிங் தியரி,இன்ஃப்ளேஷனரி, theory Multiverse கொள்கை என்ற கொள்கைகள் பல் சான்றுகளை(பெரு வெடிப்பு விளக்காத) விளக்குகின்றன் .இக்கொள்கைகளின் மீது பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு மதிப்பு மிக்க சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

இந்த எம் தியரியின் அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்ச தோற்றத்தை க்ராண்ட் டிசைன் புத்தகத்தில் விளக்கி எழுதியுள்ளார். அக்கோட்பாட்டில் மட்டுமல்ல அறிவியல் சார்ந்த எந்த கோட்பாட்டிலும் கட்வுள் என்று வராது.சில விதிகள் வரையறுத்து இப்படி நடந்தது என்றுதான் கூறுவார்கள்.இதுவரை எழுதப்பட்ட எந்த அறிவியல் புத்தகத்திலும் முன்னுரையிலோ ,அல்லது நன்றி என்பதற்காக் மட்டுமே இறைவன் பெயர் வரும்.இது எழுதுபவரின் நம்பிக்கை பொறுத்தது.

இதில் ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளை குறிப்பிடவில்லை என்பது செய்தி.இந்த  புத்தக்த்தில் பெருவெடிப்பிற்கு முந்தைய சூழலும் வரையறுக்கப் படுகிறது.எம் தியரி தொடர் பதிவாக் எழுத இருக்கிறேன் வேண்டுமானால் இச்சுட்டியில் கொஞ்சம் தமிழில் தகவல் இருக்கிற‌து.

___________


நண்பர் ஆஸிக் அகமதுவின் பதிவின் சாராம்சம்

a). பெரு வெடிப்பிற்கு முன் ந்டந்தவற்றை விள‌க்க முடியாது.அப்படி சொல்லப்படும் கொள்கைகள் தவறு.(மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்)

b). இந்த க்ராண்ட் டிசைன் புத்தகம் கீழ்க்கண்ட சுட்டிகளில் விமர்சிக்கப் பட்டுள்ளது. 

1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican. 


2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. 


3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. 

நாம் எப்போதும் யார் எதை கூறினாலும் அதனை பார்த்து விட்டே முடிவு சொல்வது வழக்கம்.அந்த மூன்று இணப்புகளையும் பார்த்து அதன் மீது நம் கருத்துகள்.
__________
1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP -  John Horgan, Sep 13, 2010. Scientific American. 


சரி ஒரு கொள்கையை விமர்சிப்பவர்கள் அது குறித்த வித்தகர்களாக் இருக்கவேண்டியது இல்லை .என்றாலும் இந்த எம் தியரி குறித்து விமர்சிக்க அது அல்லது அதற்கு எதிரான் அறிவியல் கொள்கை உடைய விஞ்ஞானியாக் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.

திரு ஜான் ஹோகன் ஒரு பத்திரிக்கயாளர்.ஆன்மிக அறிவியல் பற்றி பல் புத்த்கங்கள் எழுதியுள்ளார்.இவர் எம் தியரி பற்றி எழுதுவதி விட எமன் பற்றிய தியரிகளே நன்றாக் எழுதுவார்.!!!!!!!!!!!!!!.

திரு ஜான் ஹோகன் எழுதிய இணயப் பக்கத்தின் (ச்கோ சுட்டின அதே பக்கம்) கீழ் உள்ள விமர்சனங்களை பார்த்தால் மிக அருமையாக் இருக்கிறது ஆக்வே பின்னூடங்களை பார்க்கும் படி வேண்டுகிறேன்.  பார்த்தால் பின்னூடத்தில் அவரை மிகவும் விமர்சித்து இருந்தார்கள்.அவர் ஏற்கெனவே எழுதிய கட்டுரையை மாற்றி எழுதியதும் தெரிந்தது.

பின்னூட்டத்தில் பலரும் விமர்சித்தாலும் கொஞசமும் கவலைப்ப்டாமல் பதில் அளிக்காமல் இருக்கும் அவருடைய இணையப்பக்கம் சென்று பாருங்கள். அதிக நேரம் பார்க்க வேண்டாம் சிக்கலில் இழுத்து விட்டு விடுவார்கள். ஆன்மீகத்தையும் அறிவிய்லை கலந்து குழப்பும் இவர் மாதிரி   ஆட்கள் நம் ஊரில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

இவர் சொல்வதையும் பின்பற்றி மதச்சார்பின்மை வளர்க்கும் சகோ ஆத்திகர் ஆஸிக் அக்மதுக்கு பாராட்டுகள். நாளைக்கு நித்யானந்தா இப்புத்தக்த்தை விமர்சித்தாலும் பாராட்டப்படுவார்.அவ்வளவுதான்.

__________________
2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link

அடுத்தவர் சகோ ப்யன்படுத்தும் பெயர் திரு பீட்டர் வொய்ட் கொலம்பிய பல்கலைகழகத்தில் கணித்ப் பேராசியராக பணிபுரிகிறார்.இவர் குவாண்டம் ஃபீல்ட் தியரி என்னும் முறையை இந்த எம் தியரிக்கு மாற்றாக கொண்டுவர முயற்சிப்பவர்.இதுவும் ஐன்ஸ்டின் சார்பிய&குவாண்டம் இயற்பியலை இணைக்கும் முயற்சியே.இவரும் இயற்கை வழி வாழ்பவர்(நாத்திகர்களில் கொஞ்சம் ஸ்பெசல்) என்னும் போது இவரை அறிமுகப் படுத்திய சகோ ஆஸிக்கிற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.இவர் கூறுவதை பாருங்கள்.பீட்டர் வொய்ட்டின் விமர்சனம் இரு நாத்திகர்களுக்கிடையேயான் போட்டி.இதில் ஆத்திகர்கள் வேடிக்கை பார்க்கலாம். 


/I’m in favor of naturalism and leaving God out of physics as much as the next person, but if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me./

இதைத்தானே ஸ்டீபனும் சொன்னாரு!!!!!!!!!!

இவர் ஏற்கெனவே ஸ்ர்டிங் தியரி தவறு என்று ஒரு புத்த்கம் கடவுளை பற்றி எதுவும் கூறாமல் 2006 ல் எழுதி உள்ளார்.இவருக்கு 2010ல் வந்த எம் தியரி பற்றிய புத்தக்த்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் புரியும்.

இவர் தியரி கொஞ்சம் படிக்க வேண்டும்.பீட்டர் வொய்ட்டின் இயற்கை நாடினால் இது பற்றி ஒரு பதிவு எழுத் ஆசை.

___________
3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link


This, and other recent pronouncements from Hawking in his new book The Grand Design were debated in a separate piece on Today by brain scientist Susan Greenfield and philosopher AC Grayling. Neither seemed too impressed with many of Hawking’s recent statements and Greenfield cautioned scientists against making “Taliban-like” statements about the existence of God.

நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கிறார்கள்.அறிவியலாளர்கள் கடவுளை தலிபான் மாதிரி ஸ்டைலில் வ்வரையறுத்து பேசாதீர்கள் என்று!!!!!!!!.

என்னத்தை சொலரது?.இப்படி பேசுகிறார்கள் என்றுதான் இந்த மறுப்பு பதிவு..அப்புறம் இம்மாதிரி அறிவியலுக்கு அரசு பணம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.இம்மாதிரி கடவுளை பற்றி சொன்னால் பொதுமக்கள் கோபப்படுவார்கள் ஏனெனில் அவர்களின் வரிப்பணம்தான் இப்படி அறிவியலுக்கு நிதி ஆகிறது என்கிறார். மிக்க அன்போடு கடவுளை விட்டு விடுங்க்ள் என்று கூறுவது புரிகிறது.

நாமும் இம்மாதிரி மதவாதிகளுக்கு வரும் பணத்தை அரசுகள் கண்கானித்து வருமான வரி வசூலிக்க‌ வேண்டும் என வேண்டுகிறோம்.

________
முடிவுரை

1.ஸ்டீபன் ஹாக்கிங் எம் தியரியை பெருவிரிவாக்கத்திற்கு மாற்றாக வைப்பது பிரச்சினையில்லை.அதன் மூலம் அனைத்தையும் விவரித்தாலும் பிரச்சினையில்லை. கடவுள் தேவையில்லை இந்த விதிகளே போதும் என்பதுதான் பிரச்சினை.எம் தியரி என்ன எந்த Z தியரியையும் மத புத்தக்க்த்தில் வரவழைக்கும் அண்னன் "அஆஇஈ" க்கு வேலை இல்லாமல் செய்யும் உலகளாவிய சதியல்லவா இது?


2.முதல் சகோ ஜான் ஹோகன் ஒரு ஆன்மீக வியாபாரி.அவர் அப்படி சொலவதில் வியப்பில்லை.

3.இரண்டாம் சகோ பீட்டர் வொய்ட் த்னது குவாண்டம் தியரியை சார்பியல்_குவாண்டம் இயற்பியலை இணைத்து பிரபஞ்ச தோர்றம் விளக்கும் ஒரு கணித மேதை.இவரும் நாத்திகர் என்பதால் நாளை இவர் புத்தக்ம் எழுதினாலும் கடவுள் என்பதை (முன்னுரை,நன்றி உட்பட‌) குறிப்பிடாமலே எழுதுவார் என்பது உறுதி.இப்போதுள்ள புத்த்கத்திலும் கடவுள் படைத்தார் என்று எழுதவில்லை.பெரு விரிவாக கொள்கையின் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்று கொள்கை அமைக்கும் முயற்சியில் அறிவியல் உலகம் உள்ள்து என்பதை புரிந்து கொண்டால் சரி. 

4. .Physics world  பிபிசி செய்திகள் அறிவுறுத்திய தலிபான் ஸ்டைலில் கடவுளை பற்றி பேசக் கூடாது என்பது மிக அருமை.இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.

இயற்கை விதிகளை கடவுள் படைத்து விட்டு எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள் என்று ஒதுங்கி விட்டார் என்று சொல்வது போல் மத அறிவியலாளர்களின் கருத்து இருக்கிறது.அறிந்த வரை கடவுள் என்பதை ஆய்வுப்பூர்வமாக் உணர முடியவில்லை என்பதை அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.ஆனால் கடந்த‌ காலங்களில் மட்டும் சிலருக்கு உதவி,செய்தி என்று கேசுவலாக் செயல் பட்டு இருக்கிறார்.சரி அது வேண்டாம்

இப்போதைய‌ ஆய்வுகளில் உண்ர முடியாத ஒரு பரிமாண‌த்தில் கடவுள்  இருக்கிறார் என்றால், என்றாவது ஒரு நாள் உண்ர முடியும் என்று நம்பினால் ஆட்சேபனை இல்லை.  இப்போது போல் ஒரு நாளும் உணரமுடியாது என்று நாத்திகர்களும் கூறுகிறோம்.இரு செயல்களுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன்.

அறிவியல் கடவுளின் இருப்பு குறித்து எதுவும் சொல்லாது,அக்கொள்கை இயற்கை நிகழ்வுகளை விளக்க‌ தேவையில்லை என்றே கூறுகிறது. இதே போல் கடவுள் கொள்கையாளர்களும் செய்தால் நலமாக் இருக்கும்.


இந்த பதிவு இட ஓய்வு நேரம்,இணையம், கணிணி மட்டும் போதுமென்று நான் கூறினால் எப்படியோ அது போன்றே ,பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க இயற்பியல் விதிகள் மட்டும் போதும்,கடவுள் என்னும் கருதுகோள் தேவையில்லை என்றே ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.

இத்னை மறுப்ப்வர்கள் பிரபஞ்ச தோற்றம் விவரிக்கும் ஒரு புத்த்கம் கடவுளின் செய்லாக வெளியிடட்டும் வரவேற்கிறோம்!. இன்னும் கொஞ்சம் பதிவு போட உதவியாக் இருக்கும்!!!!!!!!!!..

எதற்கும் பதிவின் தொடக்கத்தில் உள்ள பட்த்தை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.

இதே போல் கடவுள் என்பது உங்கள் மூளை(லை)யில் மட்டுமே இருக்கிறார் என்ற கருத்தையும் விமர்சிக்க சகோ ஆஸிக்கை ஊக்குவிக்கிறேன்.

http://www.corante.com/brainwaves/archives/2005/01/19/is_god_in_your_brain_neurotheology.php

http://www.dailymail.co.uk/sciencetech/article-1339517/God-brain-Scans-activity-religious-people-meditate.html

நன்றி சகோ ஆஸிக் அகமது.  


பிரப்ஞ்ச உருவாக்கம் &பெரு விரிவாக்க கொள்கை குறித்த காணொளி


44 comments:

  1. //Crap like this commentary has no place in Scientific American. Is this one of those things that gets posted remotely without the editors even looking at it first?//

    //Wow. Sour grapes, and such public ones.
    How embarrassing for you.
    Good luck with your god theory.//

    நண்பர் ஆஷிக் அகமத் பதிவில் புதியதாக அறிவியல் கோட்பாடு உதயமாகி, அதனால் தற்போதுள்ள கோட்பாடுகள் புஷவனமாகி விட்டன அல்லது கடவுள் இருக்கிறார் என்று நிருபணமாகி விட்டன, என்ற ஆசையில், சென்று பார்த்தால், ஏமாற்றம் அளித்தது.

    அந்தப் பதிவைவிட http://pagadu.blogspot.com/2011/08/blog-post_16.html பதிவே நன்றாக இருந்தது. ஒரு வேளை இருவரும் ஒருவரோ????????

    ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு கோட்பாட்டை வைத்தார். அதுதான் உண்மை வேதவாக்கு என்பதல்ல. அதை நிருபிக்க படலாம் இல்லை நிரூபிக்க முடியமல் போகலாம். மற்ற அறிவியல் கோட்பாடுகள் வரும், அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகும், நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நிரூபணம் ஆகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    உலகத்தில் உள்ள அறிவியல் இப்படித்தான் வளர்ந்தது. ஏன் கணினி கூட இப்படித்தான் வளர்ந்தது. 1400 வருடதிற்கு முன்னால், கணினி என்தை விளக்கினால்- எல்லாம் பேசும் என்ற கண்டுபிடித்தவர்கள்- கணினியைதான் கடவுள் என்பார்கள்.

    ஆனால் ஒன்று மற்ற அறிவியல் கோட்பாடுகளை விட, உலகம் ஆறு (ஏழா அல்லது எட்டா) நாட்களில் படைக்கப்பட்டது என்ற மகத்தான அறிவியல் கோட்பாடுதான், விமர்சனதிற்கு அப்பாற்பட்டு நிலைத்திருக்கும். ஸ்டீபன் ஹாக்கிங்கை விமர்சித்தைப்போல் ஆறு நாட்கள் படைப்பு என்பதை முதலில் சொன்னவர்களை- சொல்ல சொன்னதாக சொன்னவர்களை, crap, joke,dubious, unsubstantiated theory என்று நாம் விமர்சிக்க கூடாது.

    விஞ்ஞானிகள், கடவுள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு என்பதை உணர்ந்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கை உள்ள விஞ்ஞானியாக இருப்பது முரன்பாடல்ல. ஆனால் கடவுள் நம்பிக்கையே உண்மை என்று சொல்ல மாட்டார்கள்.

    .....தொடரும்

    ReplyDelete
  2. வாயேஜர் (voyager) இப்பொழுதுதான் நமது solar system யை தாண்டிஉள்ளது. அதற்குள் instant coffee போல் எனக்கு எல்லாவற்றிக்கும் விளக்கம் வேண்டும் என்று கூறினால் எப்படி. voyager போல் இன்னும் பல விண்களன்களை அனுப்பி practical ஆக ஆய்வு செய்து, பார்த்தால் தான் இன்னும் பல விஷயங்கள் புரியும்.

    அந்த காணொளியை பார்த்தால் மனித உலகம் ஒரு அணு அளவுக்கு இல்லை என்பது புரியும். அதில் இருக்கும் நம்க்கு கடவுளுக்கு ஏன் அவ்வளவு அக்கறை.

    ReplyDelete
  3. வணக்கம் நரேன்,
    ஸ்டீஃபன் ஹக்கிங்கோ,ரிச்சர்ட் டாக்கின்ஸோ ,பெரியாரோ தேவ தூதர்கள் அல்ல.யார் சொன்னதும் கால்த்தின் சோத்னைகளை தாங்கி நிற்க வேண்டும். இல்லையெனில் தூக்கி எறியப் படுவார்கள்.

    சான்றுகலை மெய்ப்பிக்கும் எந்த கொள்கையும் அதைவிட மிஞ்சி மெய்ப்பிக்கும் கொள்கை வரை நிலைக்கும் அவ்வளவுதான்.சன்ன்றுக்ள் மீதுதான் கொள்கையே தவிர ,கொள்கைக்காக மதவாதிகள் போல் சான்றுகள் தேடவில்லை.
    1.பெரு விரிவாக்க கொள்கை பல் சன்றுகளை விளக்கினாலும் அதற்கும் எல்லை உண்டு,சில சான்றுகளை இந்த மாதிரி விள‌க்க இயலவில்லை.

    2.அந்த சான்றுகலையும் சேர்த்து மெய்ய்பிக்கும் சில கொள்கைகள் முன் வைகப் படுகின்றன.அதில் எம் தியரி,இன்ஃப்ளேஷன் தியரி,குவாண்டம் ஃபீல்ட் தியரி ,பல பிரபஞ்ச கொள்கை போன்ற்வை முக்கியமானவை இதில் ஒன்று பல சோத்னைகளின் மேல் ஏற்றுக் கொள்ளப் படலாம்.இன்னும் கொஞ்ச நாள்களில் கல்வியில் கூட சேர்க்கப் படலாம்.
    அவ்வளவுதான்!!!!!!.

    ReplyDelete
  4. எனக்கு உதிரிப்பூக்கள் படம் ஞாபகம் வருகிறது.ப்டத்தின் நாயகன் ஒரு கொடுமைக்காரன்.அக்கிராம் மக்கலை மிகவும் துன்புறுத்துவான்.இறுதியில் அவனை அக்கிராம மக்கள் பிடித்து கொல்ல முயற்சிக்கும் பொது அவன் சொல்வது இது
    "நான் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறு உங்களை(கிராம மக்களை) என் போல் மாற்றியதுதான்."
    ப்டம் பார்க்கவில்லை எனில் இங்கே பார்க்கவும்.
    http://saarmovies.blogspot.com/2011/05/blog-post_2859.html
    அது போல் நாத்திகர்களும் ஒரு "அ ஆ இ ஈ " சொல்வதை வேதவக்காக் எண்ணி செயல் படுகிறார்கள் என்பதும்,அனைத்து நாத்திகர்களை அவர்கள் இஷ்டத்திற்கு வரையறுப்பதும் கொடுமை.

    எனக்கு மதத்தின் வாழ்வியல் நடைமுறைகள் பிடிக்கவில்லை அதனால் கண்டு கொள்வதில்லை என்றால் அவர்கள் போலவே நம்மையும் ஆக்க முயற்சிப்ப்து நல்ல நகைசுவை!!!!!!!.

    நாத்திகத்தை வைத்தும் ஏமாற்றி கொள்ளை அடித்த மஞ்சள் துண்டு திராவிட பாணி செலக்டிவ் நாத்திகம் நம் உட்ப்ட அனைவருக்கும் எவ்வளவு பிரச்சினை கொடுக்கிறது பாருங்கள்!!!!!!!!!.

    ReplyDelete
  5. \\ஸ்டீபன் ஹாக்கிங் எம் தியரியை பெருவிரிவாக்கத்திற்கு மாற்றாக வைப்பது பிரச்சினையில்லை.அதன் மூலம் அனைத்தையும் விவரித்தாலும் பிரச்சினையில்லை. கடவுள் தேவையில்லை இந்த விதிகளே போதும் என்பதுதான் பிரச்சினை.\\ அதுசரி, அந்த விதிகள் உருவாகக் காரணம் என்னவென்று சொல்லியிருக்கிறாரா?

    ReplyDelete
  6. \\அறிவியல் நிரூபிக்கப் பட்ட உண்மைகளை எதிர்த்து கருத்து கூறுபவர்களை உலகம் ஒதுக்கி விடும்.\\ சில இயற்க்கை நிகழ்வுகள், அதை விளக்க வேண்டும், அதற்க்கு சில [நிறுவப் படாத] கோட்பாடுகளை [postulates] எடுத்துக் கொண்டு ஒரு தியரியை கொண்டுவருகிறார்கள், அது இது வரையில் செய்த சோதனைகளின் [experiments] முடிவுகளுக்கு விளக்கம் கொடுக்கிறது, புதிய சோதனைகள் செய்தால் முடிவுகள் எப்படியிருக்கும் என்றும் சொல்லும். அவ்வாறு சொல்லும் வரை தியரி நிற்கும், முடியாத போது குப்பைக்குப் போகும், எந்த நிலையிலும் அறிவியல் எதையும் உண்மை என்று நிரூபிப்பதில்லை. அதனால் அறிவியலால் நிரூபிக்கப் பட்ட உண்மை என்பதே இல்லாத ஒன்றாகும்.

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர் ஜெய்ச்தேவ் தாஸ்
    /அதுசரி, அந்த விதிகள் உருவாகக் காரணம் என்னவென்று சொல்லியிருக்கிறாரா?/
    திருப்பி முதலில் இருந்தா??????
    சன்ன்றுகள் மீது தான்.எந்த சான்றுகள் என்றால்
    கொடுத்த சுட்டிகளை படித்து அதில் இருந்து எதையாவது கேட்டால் கொஞ்சம் நல்மாக் இருக்கும்.எம் தியரி பற்றி ஒரு தொடர் பதிவு எழுதுவேன் .

    /. அதனால் அறிவியலால் நிரூபிக்கப் பட்ட உண்மை என்பதே இல்லாத ஒன்றாகும்./

    இத்த்தானே நானும் சொல்கிறேன்.சான்றுகளை மெய்ப்பிக்கும் கொள்கை அதைவிட மிஞ்சி மெய்ப்பிக்கும் .It is maximum likely hood estimation.

    சான்றுகளை மெப்பிக்கும்,நடக்கக் கூடிய வாய்ப்புள்ள கொள்கையே ஏற்றுக் கொள்ளப் படும்.. முந்தைய கொள்கை இந்த‌ கொள்கை வந்தவுடன் காணாமல் போகும்.ஒவோரு கொள்கைக்கும் ஒரு எல்லை உண்டு.அந்த எல்லைகளை ஒவ்வொரு கொள்கையும் கொஞ்சம் விரிக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

    எல்லாம் கடவுள் படைத்தார் என்றால் பேசாம்ல் அறிவியல் ஒன்றே தேவையில்லை.

    பொதுவாக் அறிவியல் பற்றி இப்படி கூறுவது எந்த விதத்திலும் பயனளிக்காது.

    இபோது பிரபஞ்ச தோற்றம் பற்றி விவாதிக்கிறோம்.இதற்கு அறிவியல் சொல்லும் கொள்கையை மதவாதிகள் தங்கள் புத்தக்த்தில் ஏற்கென்வே கூறப்பட்டுள்ளது என்று பிரச்சாரம் செய்வதை தடுப்பதே என் நோக்கமாகும்.

    1.பெரு விரிவாக்க கொள்கையினால் சில சான்றுகளை மெய்ப்பிக்க முடியவில்லை.

    2.ஆகவே இதற்கு மாற்று விளக்க கொள்கை அவ்சியம்.அதில் ஒன்று M தியரி.இது காணாமல் போனால் எனக்கு கவலை இல்லை.ஆனால் ஒரு புது கொள்கை அவசியம்.

    சான்றுகளுக்கக்த்தான் கொள்கையே தவிர எவருக்கோ எதுவோ ,எப்போதோ தோன்றியது அல்ல.

    இப்போது ஏன் ஜெயதெவ் தாண் இஸ்லாமிய விமர்சனக்ங்களுக்கு மறுப்பு பதிவுகளில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு விவாதிக்கிறார் என்றால் உங்களை பற்றி சில கோட்பாடுகள் உருவாக்க முடியும்.நீங்கள் பதிவு எழுதவில்லை என் பதிவில் உள்ல பின்னூட்டங்கள் மட்டும் வைத்து பார்த்தால் நீங்கள் இறை நம்பிக்கையாளர் என்பது மட்டும் தெரியும்.

    உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் வைத்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் உறுதியாக ஏன் இப்படி விவாதிக்கிறீர்கள் என்பது கூற இயலும்.பதிவு எழுதினால் உடனே சொல்லி விட முடியும். ஒரு சிஸ்டத்தில் உள்ள இன்புட்(Input),அவுட்புட் (Output)ஆகியவைகள் தெரிந்தால் அந்த சிஸ்டம் பற்றி கணிக்க முடியும். இப்படித்தான் அறிவியல் கோட்பாடுகள் உருவாகின்றன.

    உங்களுக்கு வேண்டுமென்றல் நீங்கள்தான் படிக்க வேண்டும்.ஹாக்கிங்'s எம் தியரி சான்றுகளே இல்லாமல் புனையப் பட்டது என்று நீங்கள் வேண்டுமானால் ஒரு பதிவு இட்டு விடலாம்.

    உங்களை யாரும் எதையும் நம்ப வேண்டும் நம்பினால் இன்பமான் சொர்க்கம்,நம்பாவிட்டால் நரகம்.கொள்கையை விமர்சித்தால் தண்டனை என்றெல்லாம் கூறமாட்டார்கள்.

    ReplyDelete
  8. பிரபஞ்ச தோர்றம் பற்றிய கொள்கைகள் பற்றி மட்டும் பேசவும்.பொதுவான் அறிவியல் பற்றி இப்போது வேண்டாம்.

    ReplyDelete
  9. //சான்றுகளின் மீதுதான் சாத்தியம் உள்ள கோட்பாடுகள் உருவாக்ப் படுகின்றன.பிறகு அதன் மீதான பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் படுகிறது.//

    விஞ்ஞானத்தின் அடிப்படையே இதுதான்.ஆனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இளம் வயதிலிருந்து ஊட்டி வளர்க்கப்படுகின்றன அல்லது ஒரு கால கட்டத்தில் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப மதம் மீதான நம்பிக்கைகள் அதிகமாக வளர்கின்றன.இதனை நோக்கிய எதிர்க்கேள்விகளை மதநம்பிக்கையாளன் விரும்புவதில்லை.அப்படியே விவாதம் செய்தாலும் தான் நம்பும் மதம் சார்ந்த புத்தக எடுத்துக்காட்டு மட்டுமே துணை.எது உண்மையாக இருக்குமென்ற விரிந்த பார்வையின் எல்லை நோக்கி செல்வதில்லை.

    மதத்திற்கும் அப்பாலான கடவுள் சார்ந்த நம்பிக்கையாளனின் பதிவையோ மனிதனையோ இதுவரை நான் காணவேயில்லை.

    //ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு கோட்பாட்டை வைத்தார். அதுதான் உண்மை வேதவாக்கு என்பதல்ல. அதை நிருபிக்க படலாம் இல்லை நிரூபிக்க முடியமல் போகலாம். மற்ற அறிவியல் கோட்பாடுகள் வரும், அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகும், நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நிரூபணம் ஆகும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

    பின்னூட்டத்தில் நரேன் சொன்னது போல் ஹாக்கின்ஸ் தியரிகள் கூட ஒரு நாள் பொய்யாகிப்போகலாம்.விஞ்ஞானத்தின் தன்மையும்,நன்மையும் இதுதான்.

    ஹாக்கின்ஸ் தியரிகள் ரொம்ப கடினமாக இருக்கிறதென்றுதான் மக்களைப் போய்ச்சேரும் ”ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” திரைப்பாடல் வந்தது:)

    ReplyDelete
  10. பிர பஞ்ச தோர்றத்தை விள்க்கும் பெரு வெடிப்பு கொள்கை மாதிரியில் அந்த அதிக பொருண்மை,வெப்பம் கொண்ட புள்ளியை இறைவன் படைத்தார் என்று கூறுவதே மத வாதிகளின் வழக்கம்.ஆகவே பெரு வெடிப்பிற்கு முந்தைய எந்த கொள்கையும் வரையறுக்க முடியாது என்பது அவர்கள் கொள்கை.இத்னை இப்படி தெளிவாக் கூற மாட்டார்கள் அது வேறு விஷயம்.

    பிரபஞ்ச தோற்றத்தை கடவுளின் செய்லாக விவரித்து அறிவியல் அங்கங்கே தூவி(அறிவியல் இல்லாத கடவுள் உதவாது என்பது அனைவருக்கும் தெரியும்),தத்திவம் இட்டு தாளித்து எவரேனும் விவரித்து நண்பர் ஜெயதேவ் தாஸ் உட்பட ஒரு பதிவு எழுத வேண்ட்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  11. நன்றி நண்பர் ராஜ ராஜன்,
    நாம் திற‌ந்த மன‌தோடு அனைத்தையும் வரவேற்கிறோம்.விவாதிக்கிறோம்.உண்மையை தெடுகிறோம்.அனைத்தையும் இப்போதே அறிந்து விட முடியாது என்பதும் தெரியும்.இருந்தாலும் தேடல் மட்டுமே தொடர்கிறது.மனித சமுதாயம் உள்ளவரை இது தொடரும்.
    நன்றி

    ReplyDelete
  12. பிரப்ஞ்ச உருவாக்கம் &பெரு விரிவாக்க கொள்கை தரவிறக்கம் காரணமாக முழுவதும் ஒரு மணி நேர காலத்தை எடுத்துக்கொண்ட்து.அப்படியிருந்தும் 35.05 நிமிடத்தில் ஙேங்காகி விட்டது:)

    இதனுடன் ஹாக்கின்ஸ் பகிர்ந்து கொள்ளும் பெரு விரிவாக்க தியரியும் உள்ளது.முடிந்தால் இன்னொரு பதிவில் இணையுங்கள்.

    மீண்டும் வருவேன்.நன்றி.

    ReplyDelete
  13. நண்பர் ராஜ ராஜன்,
    இதில் நீங்கள் குறிப்பிடும் விஷயம் உள்ளது என்று நினைக்கிறேன்.இது இல்லையெனில் அந்த நீங்கள் குறிப்பிடும் சுட்டி அளித்தால் உதவியாக் இருக்கும்.நன்றி
    http://saarvaakan.blogspot.com/2011/08/blog-post_14.html
    http://saarvaakan.blogspot.com/2011/07/blog-post_22.html

    ReplyDelete
  14. //கடந்த‌ காலங்களில் மட்டும் சிலருக்கு உதவி,செய்தி என்று கேசுவலாக் செயல் பட்டு இருக்கிறார்//
    பாரபட்சமான கடவுள்!!!

    //மனித உலகம் ஒரு அணு அளவுக்கு இல்லை என்பது புரியும். அதில் இருக்கும் நம்க்கு கடவுளுக்கு ஏன் அவ்வளவு அக்கறை//
    நானும் இதைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் நம்பிக்கையாளர்களுக்கு இதில் ஏதும் பொருளில்லைபோலும்!

    //அனைத்தையும் இப்போதே அறிந்து விட முடியாது என்பதும் தெரியும்.இருந்தாலும் தேடல் மட்டுமே தொடர்கிறது.//
    தொடர்ந்த தேடல் ...

    //எந்த நிலையிலும் அறிவியல் எதையும் உண்மை என்று நிரூபிப்பதில்லை//
    வேடிக்கையாக உள்ளதே!

    ReplyDelete
  15. அய்யா வணக்கம்

    அதாவது அவர்கள் மதம் உண்மை என்றால் மதபுத்தக வரலாறு,அதில் குறிப்பிட்ட சம்பவங்களின் மீதான அகழ்வாய்வுகள் பற்றி பேசினால் ஏதோ உண்மை சொல்கிறார்கள் என்றாவது தோன்றும்.

    ஆனால் பேசுவது என்ன?
    இன்று அறிவியல் விளக்க் முயற்சிக்கும் ஒவ்வொன்றும் கடவுள் செயல்,.அனைத்தும் அவன் செயல் என்றல்லாவா கூற வேண்டும்!!!!!!.

    அப்போது அனைத்து அறிவியல்களையும் ஏன் கடவுள் செய்தார் என்று மத ஆட்சி நடக்கும் நாடுகளில் திருத்தி எழுதி படித்தால் அருமையாக் இருக்குமே!!!!!.

    கடவுளுக்கு பதிலாக் புவி ஈர்ப்பு விசை என்று கூறுவது தவறல்லவா!!!!!!!!

    அப்போது நன்கு நிரூபிக்கப் பட்ட செயல்களுக்கு கடவுள் தேவையில்லையா?

    சரி அந்த விசையையே படைத்தவர் கடவுள் என்று நம்ப்லாம்.ஆனால் நிரூபிக்க முடியுமா?.
    அவங்க கேரக்டரையே புரிந்து கொள்ள வேண்டும்.என்ன சொல்வார்கள்!

    உடனே அவர்கள் கடவுள் புவி ஈர்ப்பு விசையை படைக்கவில்லை என்று நிரூபி என்று அற்புதமாக் சொல்வார்கள்! ஹா ஹா ஹா.
    _______
    சரி கொஞ்சம் உருப்படியாக் ஏதாவது சொல்வோம்!
    அறிவியல் இயற்கை நிகழ்வுகளை அதன் காரணிகளின் செயலாக் வரையறுக்கிறது. எ.கா
    1. மேலே எறியப் படும் ஒரு பொருள் கீழே விழுவது ஏன்?
    ஈர்ப்பு விசையினால்

    2.அப்படி விழும் வேகம் எதனை(காரணி) சார்ந்து உள்ளது?

    இது விழும்,உயரம்,முடுக்கம்(acceleration0 ,நேரம் இவற்றின் தொடர்பாக் வரையறுக்கப் படுகிறது.

    s=(1/2)gt^2

    g=9.8 m/s^2 earth acceleration

    t=time in seconds

    s-distance in meters

    3. இதில் காற்றின் செயலை ஒதுக்கி விட வேண்டும்.அபோது அனைத்து பொருள்களும் ஒரே வேகத்திலேயே கீழே விழும்.இத்னை பரிசோதனை மூலம் கலிலியோ உறிதிப் படுத்தினார்.

    4. எப்ப்டி இந்த சமன்பாடு வந்தது.பல முறை சோத்னை செய்து தூரம், நேரம் ஆகியவற்றின் தொடர்பு நேரத்தின் இருமடிக்கு தூரம் நேர் விகிதத்தில் உள்ளது என்று கண்டு பிற‌து சமன் பாடு பொருத்துதல்(curve fitting) என்ற கணித முறையின் மூலம் "g" மதிப்பு கண்டு பிடிக்கப் பட்டது.

    5.நமது கல்வி முறையின் குறைபாடு எவரையும் சிந்திக்க வைக்காமல் ஃபார்முலா மன்ப்பாடம் செய்ய வைத்ததுதான்!!!!!!!!.

    இன்னும் கொஞ்சம் மதவாதிகளின் குழப்பும் மத அறிவியல்!!!!!!!.பார்க்கலாம் என்ன் நடக்கும் என்று!

    ReplyDelete
  16. /நம்பிக்கை சார்ந்து அறிவியல் செல்கின்றது/

    வாழ்க வளமுடன்!!!!!!!!!

    1.நம்பிக்கை சார்ந்து அல்ல பெரு விரிவாக்க கொள்கை சில சான்றுகளை மெய்ப்பிக்க முடியாத்தால் வேறு கொள்கைக்கு அவ்சியம் ஏற்படுகின்றது.
    இதையும் சொல்லுங்கள்.

    2.அந்த சான்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணமே நடக்கும் வாய்ப்புள்ள ,ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட இயற்கை விதிகளுக்கு முரண்படாமல் மாற்றுக் கொளகை முன் வைக்கப் படுகின்ற‌து.

    3.இதில் எம் தியரி,இன்ஃப்லேஷன் தியரி,குவாண்டம் ஃபீல்ட் தியரி,பல் பிரபஞ்ச கொள்கை போன்ற்வை போட்டியில் உள்ள்ன.இந்த அனித்து தியரிகளை பயன் படுத்தி இயற்பியல் விதிகள் மூலமே கடவுள்கள் இதை செய்தனர் என்று கூறாமலே விளக்க் முடியும்.இதில் ஒன்று பெரு வெடிப்பிற்கு மேலனதாக் ஏற்றுக் கொள்ளப் படலாம்.

    4. இதில் பீட்டர் வொய்ட் மட்டுமே குவாண்டம் ஃபீல்ட் தியரி கணித மேதை.
    ஜான் ஹோர்கன் ஒரு பத்திரிக்கையாளர்.

    நன்றி.

    ReplyDelete
  17. @ சார்வாகன்

    பொதுவாக நாத்தீகர்களிடம் நான் கண்ட ஒரு ஒற்றுமை, அவர்களிடம் அறிவியலின் limitations பற்றி பேசினால், அவர்கள் அதை விட்டுவிட்டு, அப்படியே பேசுபவர் எந்த மதம் என்று அறிந்து அதைச் சாட ஆரம்பித்து விடுகிறார்கள். அல்லது, இதையெல்லாம் கடவுள் செய்தாரா... என்று ஆரம்பித்து விடுகிறார்கள். ஜடப் பொருட்களுக்கு உள்ள பண்பை தங்கள் சவுகரியத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் உத்திதான் அறிவியல். அந்த ஜடப் பொருளோ, அதன் பண்புகளோ தோன்றியதெப்படி என்ற கேள்விக்கு அறிவியலால் ஒரு போதும் பதில் சொல்லவே முடியாது என்று நீங்களே ஒப்புக் கொண்ட பின்னர், அறிவியல் மூலம் நான் உண்மையை அறியப் போகிறேன், படிப் படியாக நெருங்கப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி முரணாக எழுதுவது ஏனோ புரியவில்லை. மேலே புவிஈர்ப்பு மாறிலி g யைக் கணக்கிடுவது பற்றி பெருமிதப் பட்டுள்ளீர்கள், ஆனால் அதைக் கணக்கிடுவதற்கு முன்னரும் g -க்கு அதே மதிப்பு தானே இருந்தது, பூமி ஆப்பிளையும் சந்திரனையும் ஈர்த்துக் கொண்டுதானே இருந்தது? அதற்க்கு அந்த மதிப்பு வந்ததெப்படி என்பதற்கு என்ன பதில்? நீங்கள் கடவுள் இல்லையென்றே வைத்துக் கொள்ளுங்கள், வேறு காரணம் தான் என்னவென்று கண்டு பிடிப்பதெப்படி என்று சொல்லுங்களேன்? [தயவு பண்ணி கடவுளை இங்க இழுக்க வேண்டாம், மறந்திடுங்க, காரணம் என்னவென்று மட்டும் சொல்லுங்க]

    ReplyDelete
  18. \\இதில் எம் தியரி,இன்ஃப்லேஷன் தியரி,குவாண்டம் ஃபீல்ட் தியரி,பல் பிரபஞ்ச கொள்கை போன்ற்வை போட்டியில் உள்ள்ன.இந்த அனித்து தியரிகளை பயன் படுத்தி இயற்பியல் விதிகள் மூலமே கடவுள்கள் இதை செய்தனர் என்று கூறாமலே விளக்க் முடியும்.இதில் ஒன்று பெரு வெடிப்பிற்கு மேலனதாக் ஏற்றுக் கொள்ளப் படலாம்.\\ மதவாதிகள் எல்லாவற்றுக்கும் கடவுளை இழுக்கிறார்கள் என்று சாடும் நீங்கள், எல்லாவற்றிலிருந்தும் கடவுள் என்பவரை எப்படி வெளியே தள்ளலாம் என்று வரிந்துகட்டிக் கொண்டு செயல் படுகிறீர்களே! செல்லும் திசை வெவ்வேறாக இருந்தாலும் நாத்தீகர்களும் மதவாதிகளைப் போலத்தானே செயல்படுகிறீர்கள், என்ன வேறுபாடு?

    ReplyDelete
  19. ஐன்ஸ்டீன் ஒரு இறைநம்பிக்கையாளர், ஆனபோதிலும் அவரைப் போல ஒரு ஜீனியஸ் உண்டா. அடுத்து தற்போது ஹாகின்ஸ், கொஞ்சம் புத்திசாலிதான், ஆனால் நாத்தீகர். அடுத்து ஒரு ஜீனியஸ் ஆத்தீகராக இருக்கலாம். இவை அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு. அவர்களுடைய அறிவியல் ஆரைச்சிகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர்ளது சொந்த விருப்பு வெறுப்புகளை அல்ல.

    ReplyDelete
  20. நண்பரே,
    /ஐன்ஸ்டீன் ஒரு இறைநம்பிக்கையாளர், ஆனபோதிலும் அவரைப் போல ஒரு ஜீனியஸ் உண்டா. அடுத்து தற்போது ஹாகின்ஸ், கொஞ்சம் புத்திசாலிதான், ஆனால் நாத்தீகர். அடுத்து ஒரு ஜீனியஸ் ஆத்தீகராக இருக்கலாம். இவை அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு. அவர்களுடைய அறிவியல் ஆரைச்சிகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமேயன்றி, அவர்ளது சொந்த விருப்பு வெறுப்புகளை அல்ல./

    பிரபஞ்ச தோற்றத்தை விள்க்க இயற்பியல் விதிகள் போதும் கடவுள் இத்னை செய்தார் என்று எதையும் கூறாமலேயே விளக்க முடியும் என்பதே ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து.இதில் ஒரு தவ்றும் இருப்பதாக் தெரியவில்லை.ஏதாவது அறிவியல் புத்தகத்தில் கடவுள் செயல் என்று கூற‌ப்பட்டு உள்ளது?
    _____________

    உண்மையான் ஆத்திகன் எனில் அனத்தும் கடவுள்கள் செயல் என்ரே கூற வேண்டும்.அறிவியலில் விவாதத்தில் இருக்கும் கொள்கைகளை மட்டும் கடவுள் செயல் என்பது?
    அதாவது இயற்கை விதிகள் அனைத்தையும் படைத்து விட்டு ,அனைத்து உருவாகப் போகும் பொருள்களுக்கும் அனைத்து குணங்களையும் கொடுத்து விட்டு
    ஒளிந்து கொண்டார் என்று கூர வருகிறீர்களா!!!!!!.

    /ஆனால் அதைக் கணக்கிடுவதற்கு முன்னரும் g -க்கு அதே மதிப்பு தானே இருந்தது, பூமி ஆப்பிளையும் சந்திரனையும் ஈர்த்துக் கொண்டுதானே இருந்தது? அதற்க்கு அந்த மதிப்பு வந்ததெப்படி என்பதற்கு என்ன பதில்/
    இந்த "g' க்கு மதிப்பு கொடுத்தவர் பல் கடவுள்கள் என்பது உங்கள் கருத்தா?.இதன் பெயர் fine tuning கருதுகோள் இதப் பற்றிய காணொளி நம் பதிவில் உண்டு
    காணுங்கள்.
    http://aatralarasau.blogspot.com/2011/08/blog-post_23.html
    ___________
    /எல்லாவற்றிலிருந்தும் கடவுள் என்பவரை எப்படி வெளியே தள்ளலாம் என்று வரிந்துகட்டிக் கொண்டு செயல் படுகிறீர்களே!/

    ஆமாம் கடவுள் என்ன உயர்குல்த்தில் பிறக்க வைத்தார் என்றால் ஏற்றுக் கொள்ளலாமா?

    முன் ஜன்ம பல்னால் கஷ்டப் படுகிராய் என்றால் சோம்பிக் கிடப்பதா?

    மத .விமர்சனத்திற்கு மரண தண்டனை என்பதும் இருக்கிறதே!

    மதத்தில் சொல்லியதற்காக் நாக்ரிகமற்ற சட்டங்கள் இருக்கின்ரன்வே!.
    உழைக்காமல் மதவாதிகள் பணம் சம்பாதிக்கிரார்

    நான் வெளியே தள்ளுகிறேனா!!!!!.ha haa ha

    நான் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறேன் நண்பரே.அறிவியல் எங்கள் மதத்தில் கூறப்படுள்ள்தால் இது மட்டுமே உண்மை என்னும் கருத்து மிக ஆப்த்தானது.

    அறிவியல் என்பது எல்லயற்ற தேடல்.அதே போல் உண்மையாக் மதம்ற்ற அனைத்துக்கும் மேற்பட்ட சக்தியாக கடவுளை தேடுபவர்களோடு நம்க்கு முரண்பாடு இல்லை.
    எ.கா சகோ திருச்சிகாரன்.அவர் கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.

    உங்கள் கடவுள்க‌ள் வேற்றுக் கிரக் குடும்பஸ்தன் ஒரு நாள் வந்து கூட்டி செல்வார் என்றால் நம்புங்கள் மகிழ்ச்சியாக !!

    என் மதம் மட்டுமே சரி என்ற கொள்கை கொண்ட கொளைகள் மறுக்கப் படாவிட்டால் இன்னொரு உலக்ப் போர் வந்து விடும்.நாம் வாழும் நாடு அமைதியாக் வாழ நம்து பெரும்பாலான் மக்கள் மத சார்பற்றவர்கள். தினமும் அல்ஜசீரா தொலைக்காட்சி பாருங்கள்.என்ன நடகிறதென்று புரியும்.இந்த கடவுள் என்னும் கருதுகோளினால் பிரச்சினைதான் அதிகம்.

    ww. english.aljazeera.net

    அதிலும் இந்த ஒரு கடவுள் கொள்கை மதங்களில் வன்முறை என்பது வரலாற்று ரீதியாக் இன்றளவும் நியாயப் படுத்தப் படுகின்றது.வேண்டுமானால் அனைத்து மதங்களும் உட்பிரிவுகளும் ஒன்று.எவ்வழியும் மறுமை அடையப் போதுமாந்து என்ற கருத்தில் அனைவரையும் இணையுங்கள் கடவுள் தேவையில்லை என்று கூறுவதை விட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  21. g ஒரு மதிப்பு உள்ளது, அதற்க்கு காரணம் என்ன என்று மட்டும்தான் கேட்டேன், அதற்க்கு உங்களிடம் பதில் இல்லை, அதை மறைக்க பல்வேறு மதங்களைச் சாடியுள்ளீர்கள். நான் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேனோ அதையே செய்துள்ளீர்கள். நான் கடவுளை இங்கே இழுக்கவேயில்லை, உங்களையும் இழுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் மெச்சிக் கொள்ளும் திருச்சிக்காரன் என்ற பதிவரிடம் சமீபத்தில் இதே தர்க்கம் நடந்தது, அவரும், இதே வேலையைத்தான் செய்தார். இது உங்களது இயலாமையால் வரும் விரக்தியின் வெளிப்பாடு. ஒன்றும் சொல்வதற்கில்லை.

    ReplyDelete
  22. \\இந்த "g' க்கு மதிப்பு கொடுத்தவர் பல் கடவுள்கள் என்பது உங்கள் கருத்தா?.\\ அப்படின்னு நான் சொன்னேனா? \\இதன் பெயர் fine tuning கருதுகோள் இதப் பற்றிய காணொளி நம் பதிவில் உண்டு
    காணுங்கள்.\\ g க்கு அதன் மதிப்பு எப்படி வந்து என்பதுதான் கேள்வி, அதை எப்படி கண்டுபிப்பதென்பதல்ல.

    ReplyDelete
  23. \\ஏதாவது அறிவியல் புத்தகத்தில் கடவுள் செயல் என்று கூற‌ப்பட்டு உள்ளது?\\ அறிவியல் உண்மையை நோக்கிப் பயணிக்கும், எந்த ஒரு கட்டத்திலும் உண்மையை அடையாது. அப்படியிருக்க அறிவியலையும், அறிவியல் புத்தகத்தில் சொல்லப் பட்டிருப்பதையும் நான் ஏன் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், உண்மையைச் சொல்லாத ஒன்று பற்றி உண்மையைத் தேடுபவன் ஏன் பொருட்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  24. \\அதாவது இயற்கை விதிகள் அனைத்தையும் படைத்து விட்டு ,அனைத்து உருவாகப் போகும் பொருள்களுக்கும் அனைத்து குணங்களையும் கொடுத்து விட்டு ஒளிந்து கொண்டார் என்று கூர வருகிறீர்களா!!!!!!.\\ சொல்லாத வார்த்தைகளை என் வாயில் போட்டு தப்பிக்க வேண்டாம் அன்பரே. g க்கு அதன் மதிப்பு வந்ததெப்படி? இந்தக் கேள்வியை விட்டுவிட்டு அதைச் சொல்ல வந்தாயா இதைச் சொல்ல வந்தாயா என்று சொல்லாததை நீராக ஊகித்து எனக்கும் சேர்த்து நீரே வாதிட வேண்டாம்.

    ReplyDelete
  25. \\இந்த "g' க்கு மதிப்பு கொடுத்தவர் பல் கடவுள்கள் என்பது உங்கள் கருத்தா?\\ இது என் கருத்து என்று நீராக ஊகித்துக் கொண்ட கருத்து.

    ReplyDelete
  26. \\ஆமாம் கடவுள் என்ன உயர்குல்த்தில் பிறக்க வைத்தார் என்றால் ஏற்றுக் கொள்ளலாமா?

    முன் ஜன்ம பல்னால் கஷ்டப் படுகிராய் என்றால் சோம்பிக் கிடப்பதா?

    மத .விமர்சனத்திற்கு மரண தண்டனை என்பதும் இருக்கிறதே!

    மதத்தில் சொல்லியதற்காக் நாக்ரிகமற்ற சட்டங்கள் இருக்கின்ரன்வே!.
    உழைக்காமல் மதவாதிகள் பணம் சம்பாதிக்கிரார்

    நான் வெளியே தள்ளுகிறேனா!!!!!.ha haa ஹா\\ நாத்தீகம் பேசுபவர்கள் மட்டுமென்ன ஒழுக்கத்தின் சிகரங்களா?

    ReplyDelete
  27. \\நான் எதிர்வினை மட்டுமே ஆற்றுகிறேன் நண்பரே.அறிவியல் எங்கள் மதத்தில் கூறப்படுள்ள்தால் இது மட்டுமே உண்மை என்னும் கருத்து மிக ஆப்த்தானது.\\ அப்படி ஏற்றுக் கோள் என்று நான் கூறவில்லை.

    ReplyDelete
  28. \\உங்கள் கடவுள்க‌ள் வேற்றுக் கிரக் குடும்பஸ்தன் ஒரு நாள் வந்து கூட்டி செல்வார் என்றால் நம்புங்கள் மகிழ்ச்சியாக !! என் மதம் மட்டுமே சரி என்ற கொள்கை கொண்ட கொளைகள் மறுக்கப் படாவிட்டால் இன்னொரு உலக்ப் போர் வந்து விடும்.நாம் வாழும் நாடு அமைதியாக் வாழ நம்து பெரும்பாலான் மக்கள் மத சார்பற்றவர்கள். தினமும் அல்ஜசீரா தொலைக்காட்சி பாருங்கள்.என்ன நடகிறதென்று புரியும்.இந்த கடவுள் என்னும் கருதுகோளினால் பிரச்சினைதான் அதிகம்.\\ நான் கேட்டதற்கு சற்றும் சம்பந்தமில்லாத திசைதிருப்பும் பதில்.

    ReplyDelete
  29. \\எ.கா சகோ திருச்சிகாரன்.அவர் கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.\\ அது உங்க இஷ்டம்.

    ReplyDelete
  30. \\அதிலும் இந்த ஒரு கடவுள் கொள்கை மதங்களில் வன்முறை என்பது வரலாற்று ரீதியாக் இன்றளவும் நியாயப் படுத்தப் படுகின்றது.வேண்டுமானால் அனைத்து மதங்களும் உட்பிரிவுகளும் ஒன்று.எவ்வழியும் மறுமை அடையப் போதுமாந்து என்ற கருத்தில் அனைவரையும் இணையுங்கள் கடவுள் தேவையில்லை என்று கூறுவதை விட்டு விடுகிறேன்.\\ இதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  31. வண‌க்கம் நண்பரே,
    ஏன் பதில் வனக்கம் சொலவதில்லையா?
    /g ஒரு மதிப்பு உள்ளது, அதற்க்கு காரணம் என்ன என்று மட்டும்தான் கேட்டேன், அதற்க்கு உங்களிடம் பதில் இல்லை,
    /
    இது ஃபைன் ட்யுனிங் என்ற கொள்கை.இதற்கு மறுப்பு சொல்லியாயிற்று.புரியவில்லையெனில் இந்த "g' க்கு மதிப்பு கொடுத்தவர் பல் கடவுள்கள்
    ___________

    /இது என் கருத்து என்று நீராக ஊகித்துக் கொண்ட கருத்து./

    பிறகு யார் கருத்து?
    __________
    /அறிவியல் உண்மையை நோக்கிப் பயணிக்கும், எந்த ஒரு கட்டத்திலும் உண்மையை அடையாது/

    மதம் உண்மையை நோக்காமல் இருப்பதுதான் பிரச்சினை
    _________
    /நாத்தீகம் பேசுபவர்கள் மட்டுமென்ன ஒழுக்கத்தின் சிகரங்களா?/
    மற்றவர்கலை பற்றி எனக்கு தெரியாது.நான் உழைத்து வாழ்கிறேன்.யாரையும் ஏமாறுவது இல்லை.
    ________

    அப்ப ஃபைன் ட்யுனிங் கருதுகோள் புரியவில்லை ஆகையால் ஆத்திகராக் இருக்கிறீர்.சரி புரிய இங்கே பாருங்கள்.இதில் இருந்து ஏதாவது கேள்வி கேளுங்கள்.
    http://www.youtube.com/watch?v=rt-UIfkcgPY

    வந்தே மாதரம்

    ReplyDelete
  32. வணக்கம் இங்கே பாருங்கள் ஜெயதெவ் தாஸ்
    http://www.counterbalance.org/cqinterv/ag-frame.html

    வந்தே மாதரம்

    ReplyDelete
  33. நண்பர் ஜெயதேவ் தாஸ்
    இந்தப் பக்கத்தில் அறிவியல் மட்டும் எழுதுவது என்ற முடிவிலேயே பழைய ப்க்கத்தை விட்டு விட்டு இத்னை ஆரம்பித்தேன்.சில இஸ்லாமிய நண்பர்கள் கூட்டமாக சில கேள்விகள் கேட்டதால் பதில் அளிக்க ஆரம்பித்து சில பதிவுகள் இட வேண்டியதாயிற்று.
    http://onlyoneummah.blogspot.com/2011/08/blog-post_23.html
    எங்கள் மதத்தில் அறிவியல் அன்றே கூறப்பட்டது என்ற் கருத்தையும்.போலி அறிவியலின் நிழலில் மத பிரச்சாரம் செய்வது ஏமாற்று வேலை.அதன் தாக்கம் குறித்து நீங்கள் அறியவில்லை என எண்ணுகிறேன்.

    என் ப்திவுகளை விமர்சித்து பின்னூட்டம் & பதிவு இட உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த பின்னூட்டங்கள் எல்லாம் சேர்த்தால் இரண்டு பதிவாக் வந்திருக்கும். பதிவராக முயற்சிக்கலாமே!.ஒரு ஆலோசனைதான்.பிரியமில்லை என்றால் ஒதுக்கி தள்ளுங்கள்.

    ஃபைன் ட்யுனிங் பற்றிய காணொளி ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை எனில் விரிவாக பதிவு எழுதுவேன்.இப்படியே உங்கள் மாதிரி ஆட்களே எழுத தூண்டுகின்ற‌னர்.பிறகு ஏன் கடவுள்களை பற்றி பேசுகிறய் என்பது !!!!!!!!!.

    இது என் பழைய இணையப் பக்கம்.தமிழ் பதிவுலகில் மதத்தில் அறிவியல் என்னும் கருத்தியலை குறைத்ததில் எனக்கும் பங்கு உண்டு.
    http://saarvaakan.blogspot.com/

    மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.
    http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_29.html
    விளக்கம் சொல்லியே ஓய்ந்து போய் விட்டேன்!.பதிவு இட வேண்டுமெனில் இடுகிறேன்.எம் தியரி எழுதுபவனை எமன் தியரியை விமர்சிக்க தூண்டாதீர்கள்!
    நன்றி வந்தே மாதரம்!!!!!!!!

    ReplyDelete
  34. \\ஏன் பதில் வனக்கம் சொலவதில்லையா?\\ வணக்கம் மனதளவில் இருக்க வேண்டும், அது இல்லை, வாயளவில் சொல்வதில் பயன் இல்லை.

    ReplyDelete
  35. \\இது ஃபைன் ட்யுனிங் என்ற கொள்கை.இதற்கு மறுப்பு சொல்லியாயிற்று.புரியவில்லையெனில் இந்த "g' க்கு மதிப்பு கொடுத்தவர் பல் கடவுள்கள்
    \\ இது இப்போதைக்கு ஒரு படி பின்னால் போய் ஒரு காரணத்தைச் சொல்லியிருக்கலாம், திரும்பவும் அதற்க்குக் காரணம் என்ன என்று கேட்டால் பதில் இருக்காது. இன்னொன்று அனாவசியமாக கடவுளை இழுத்திருக்கிறீர்கள், அனாவசியமாக.

    ReplyDelete
  36. ///இது என் கருத்து என்று நீராக ஊகித்துக் கொண்ட கருத்து./

    பிறகு யார் கருத்து?// அதைச் சொன்ன நீர்தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  37. ___________
    //அறிவியல் உண்மையை நோக்கிப் பயணிக்கும், எந்த ஒரு கட்டத்திலும் உண்மையை அடையாது/

    மதம் உண்மையை நோக்காமல் இருப்பதுதான் பிரச்சினை.// மதம் தீர்வு என்ற கருத்தை நான் எடுத்து வைக்காத நிலையில் தேவையில்லாமல் நீங்களாக என் சார்பில் பதில் எழுதிக் கொள்வது வேடிக்கை. உண்மையை அறிந்துகொள்ள அறிவியல் ஒருபோதும் உதவப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.

    ReplyDelete
  38. \\மற்றவர்கலை பற்றி எனக்கு தெரியாது.நான் உழைத்து வாழ்கிறேன்.யாரையும் ஏமாறுவது இல்லை.\\ இந்தமாதிரி வாழும் இறை நம்பிக்கையாளர்களும் உண்டு, ஏமாற்றுபவர்கள் எல்லா பக்கமும் உள்ளார்கள்.

    ReplyDelete
  39. \\வந்தே மாதரம் \\ இது எந்த அறிவியல் கண்டுபிடிப்பில் வந்த மந்திரம் என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  40. வண்க்கம் ஜெயதேவ் தாஸ்
    என் பக்கத்தை தமில்10 ல் பகிந்ததற்கு நன்றி.இப்போதுதான் பார்த்தேன். நாம் ஒருவர் செய்தால் அதற்கு நன்றியோடு பிரதியுபகாரமும் செய்ய்ய வேண்டும் என்பது நம் கொள்கை.
    "நன்றி மறப்பது நன்றல்ல நன்றல்லது
    அன்றே மறப்பது நன்று"

    மதம் தொடர்புள்ள சில இடுகைகளை உங்களுக்காக நிறுத்தி வைக்கிறேன்.அதிகம் கணிதம் குறித்து எழுத விழைகிறேன். அதில் சண்டை போடுவோம் சரியா!!!!.
    முடிவிலி தொடர்கள்& அதில் நம் ரமானுஜத்தின் பங்கு பற்றி தகவல்கள் சேகரிக்கிறேன்.
    நன்றி.
    நன்றி.

    ReplyDelete
  41. வண்க்கம் ஜெயதேவ் தாஸ்
    இந்த் இடுகையும் நீங்கள் வழக்கம்போல பல பின்னூட்டம் போட்டவுடன் நிறுத்தப் படும்.இன்றே கடைசி!!!!!!!!!!!!!ஹா ஹா ஹா
    நன்றி
    நன்றி.
    நன்றி.

    ReplyDelete
  42. \\மதம் தொடர்புள்ள சில இடுகைகளை உங்களுக்காக நிறுத்தி வைக்கிறேன்.\\ யாருக்காகவும் உங்க கொள்கையை விட்டுக் கொடுக்க வேண்டாம் பாஸ், உங்க புரோகிராம் எதுவோ அதுபடியே நடங்க, மாற்று கருத்துக்கள் வந்தால் அது உண்மையாக உள்ளது என்று உங்கள் மனதில் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், மற்றபடி ராமானுஜத்தைப் பற்றி படிக்க எனக்கும் ஆவலாகவே உள்ளது. [உங்கள் பதிவு பிடித்திருந்ததால் திரட்டியில் இணைத்தேன்!]

    ReplyDelete
  43. வண்க்கம் ஜெயதேவ் தாஸ்
    நாம் அன்புக்கு அடிமை நண்பா.
    அது கொஞ்சம் எளிமைப்படுத்த இருநாட்கள் ஆகும் என நினைக்கிறேன்.உங்களின் ஒத்துழைப்போடு முயற்சிப்போம்!!!!!!!
    முயற்சி செய்வோம்.
    இந்த இடுகையும் நிறுத்துகிறேன்.
    நன்றி!!!!!!
    நன்றி.

    ReplyDelete
  44. ஊழிற் பெருவலி யாதுள ?

    https://jayabarathan.wordpress.com/

    https://www.youtube.com/watch?v=FbxD04LWW10

    சி. ஜெயபாரதன், கனடா

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

    ஊழிற் பெருவலி யாவுள ? மற்றொன்று
    சூழினும் தான்முந் துறும்.

    வகுத்தான் வகுத்த வகையில்தான் கோடான கோடிப் படைப்புகள், உயிரினங்கள் அகிலத்தில் வடிக்கப் பட்டு இயங்கி வருகின்றன.

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=SBB2qHgZvLY

    [Physicist Dr. Michio Kaku on God]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kEK6WtHxNfw

    [Dr. Albert Einstein on God]

    https://mail.google.com/mail/u/0/#inbox/14e9798834ca76d4

    [Nature Creates the Most Beautiful Geometry]

    ஊழ் விதியைப் பற்றி நான் விஞ்ஞான ரீதியாக அறிந்துள்ள சிந்தனையின் பிரதிபலிப்பே இக்கட்டுரையின் சாரம் ! இங்கு நான் ஊழ் என்று குறிப்பிடுவது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஓர் இயற்கைச் சக்தியைக் குறிப்பிடுகிறேன். பிரபஞ்சத்தைப் படைத்துக் கட்டுப்படுத்தும் படைப்பாளியே மனித இயக்கத்தையும், போக்கையும் வழி நடத்தி வருகிறது என்பதுதான் என் கோட்பாடு. அதைக் கடவுள் என்றாலும் ஒன்றுதான். இயற்கை என்றாலும் ஒன்றுதான். பிரபஞ்சப் படைப்பாளி என்றாலும் ஒன்றுதான். ஊழ் விதி என்பது விளைவை மட்டும் காட்டி மனிதர் காணாமல் மறைந்திருக்கும் ஓர் இயற்கை நியதி.

    ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் படைக்கப் பட வேண்டும் என்று விண்வெளி உயிரியல் விஞ்ஞானி கார்ல் சேகன் கூறுகிறார். அதாவது பிரபஞ்சம் உருவானதும், காலக்ஸி, பரிதி மண்டலங்கள், மற்றும் உயிரின, தாவர உட்பிறப்புப் தோற்றங்களும் ஒரு காரண-விளைவு நியதியைப் பின்பற்றிச், சுழலும் ஓர் தொடரியக் கத்தை முன்னிட்டு உண்டானவையே. இந்தப் பிரபஞ்சமும், பேரண்டங்களும், அவற்றில் உதித்த பயிரினமும், உயிரினமும் மந்திர சக்தியால் ஒரு சில நாட்களில் தோன்றியவை அல்ல. பிரபஞ்சப் படைப்பாளி பல யுகங்களாய்த் திட்டமிட்டுச் செய்து தோற்றங்களை மாற்றி மாற்றிச் செம்மைப் படுத்தி உருவாக்கியதுதான் நாம் வாழும் உலகம். பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன வென்று கணிக்கப் பட்டுள்ளது. பூர்வீகத் தாதுக்களின் கதிரியக்க தேய்வின் அரை ஆயுளை வைத்துத்தான் அந்த எண்ணிக்கையைக் கணக்கிட்டி ருக்கிறார்.

    ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்து, சிறிது சிறிதாய்ச் செம்மையாக்கிக் கடவுளே நமது காலவெளிப் பிரபஞ்சத்தைப் படைக்க 13.7 பில்லிய ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஆயினும் பூரணம் அடையாத பூமியும் அதில் பூரணம் அடையாத மனிதப் பிறவிகள்தான் இதுவரைத் தோன்றியுள்ளன.

    பிரபஞ்சம் ஓர் உன்னத சக்தியான கடவுளால் படைக்கப் படவில்லை. அது தானாக உருவானது என்று விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறுவது முதலில் ஒரு விஞ்ஞான ஆய்வு விளக்கமும் இல்லை; முடிவுமில்லை. அப்படி மேலாகச் சொல்லித் தப்பிக் கொள்வது ஒரு விஞ்ஞான மேதையின் இயலாமையைத்தான் குறிக்கிறது. பிரபஞ்சம் தானாய்த் தோன்றி மாறி வருகிறது என்றாலும், கடவுள் படைத்தது என்றாலும் ஒன்றுதான்.

    பிரபஞ்சப் படைப்பாளி ஒரு மந்திரவாதியோ, மாஜிஸியனோ இல்லை. இரசாயனக் கதிர் ஏகமூலங்களின் (Radio Isotopes) அரை ஆயுள் தேய்வு நியதிப்படிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும் என்று பல்வேறு விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதாவது படைப்பாளியே இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை உண்டாக்க 13.7 பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்கிறது. இதுவரை விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ள பெரு வெடிப்பு நியதியின் (The Big Bang Theory) ஆரம்பமே ஓர் அனுமான ஊகிப்புதான். மெய்யாக இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று இதுவரை எந்த விஞ்ஞானியாலும் தர்க்கரீதியாக விளக்க முடியவில்லை. எல்லாம் மாறி, மாறிப்போகும் விஞ்ஞானத்தின் வெறும் அனுமான ஊகிப்புகள்தான். விஞ்ஞானம் பிரபஞ்ச ஆதி அந்தங்களை ஆராய முடியாது இடைப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விளக்கம் அளிக்கிறது.

    காரண-விளைவு நியதியைத் (Cause & Effect Theory) தர்க்க ரீதியாக ஒப்புக் கொள்ளும் உலக விஞ்ஞானிகள், பிரபஞ்சம் தானாக உருவானது, தானாக இயங்குவது, தானாக மாறுவது என்று ஆதாரமின்றிக் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விஞ்ஞானிகள் இதுவரை உயிர் என்றால் என்ன என்று விஞ்ஞான விளக்கம் தர முடிய வில்லை. எந்த இரசாயன மூலகங்களோ, மூலக்கூறுகளோ உயிரை உண்டாக்குவதில்லை. ஆங்கிலத்தில் உயிர் என்பதற்கு ஒரு தனிச்சொல் கூடக் கிடையாது. உயிர், ஆத்மா இரண்டு மட்டுமே மனிதனுக்கும் படைப்பாளிக்கும் உள்ள இணைப்பைக் காட்டுபவை.



    ReplyDelete