Tuesday, October 11, 2011

மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி கற்க வேண்டுமா?


பரிணாம கொள்கை பற்றி அனைவருக்குமே தெரியும்.பரிணாமம் என்பதை மாற்றத்துடன் கூடிய வம்ச விருத்தி[descent with modifications] என்று எளிதாக வரையறுக்க்லாம். அதாவது உலகின் உள்ள அனைத்து உயிரினங்களும் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் பாக்டீரியாவில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றன என்பதுதான்.இதில் மனிதனின்  பரிணாம வளர்ச்சி என்றால் சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது.இது பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஒரு பலகலைகழக அமைப்பு பற்றி அறிமுகம் செய்வதே இப்பதிவின் நோக்கம்.

ஸ்மித்சோனியன் பல்கலைகழகம் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நக்ரில் அமைந்துள்ளது.இது அமெரிக்க அரசால் நிதியுதவியுடன் நடத்தப்படும் பல்கலை கழகம்.இதின் ஒரு பிரிவாக மனித பரிமாணம் பற்றிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் மீதான ஆய்வுகள் ,சான்றுகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.

மனித பரிமாணம் கற்க ஆர்வம் உள்ளவர்கள் கண்டு பயன் பெறலாம்.அவர்களின் தளம்அவர்களின் தளத்தில் உள்ள கேள்வி பதில் பகுதி சிறப்பாக,எளிமையாக் இருப்பதாக எனக்கு பட்டது பாருங்கள்.

அந்த அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுகிறது.அது பற்றிய ஒரு காணொளி கண்டு களியுங்கள்.பரிணாமம் பற்றிய ஏதாவது தகவல் தேவைப் பட்டால் கூடுமான்வரை அளிக்க முயற்சிக்கிறேன்.தகவல் வேண்டும் நண்பர்கள் கேட்கலாம்!
8 comments:

 1. நண்பரே அறிமுகப்படுத்திய தளங்கள் fantastic.

  சின்னப்புள்ளத்தன்மான கேள்விகள் கேட்பவர்களுக்கு, அவர்கள் பாஷையில் பதிலளிக்கிறது. மேலதிக விவரங்களும் தருகிறது.
  மனம் இருந்தால் ஞானப் பால் குடிக்கலாம்.

  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 2. சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய விசயங்கள்.

  ReplyDelete
 3. வணக்கம் நரேன்,ஜோதிஜி
  பரிணாம கொள்கைக்கும் பிற அறிவியல் கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன எனில்.இது 99% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு இதன் மேல் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.ஆனால் உலக பொது மக்களில் 10% பரிணாமம் குறித்த சரியான புரிதல் உடையவர்களாக இருப்பார்களா என்பது கூட சந்தேகமே.இது பரிணாம் எதிர்ப்பாளர்களால் சரியாக பயன் படுத்தப் படுகிறது.

  இது ஏன் என்பதற்கு இரு காரணம்
  1.மனிதர்கள் ஒரு பரிணாம் வளர்ச்சி அடைந்த விலங்கு,பிற விலங்குகளுக்கும் நமக்கும் மூதாதையர்கள் ஒன்று என்பது சிந்தனை ரீதியான பெருமிதத்தில் எற்பதற்கு கடினமாக் உள்ளது. இன்னும் கூட குறிப்பிட்ட இன,மத, சாதி பெருமைகள் என்ற கருத்தாக்கத்தில் கூறப்படும் கட்டுக் கதைகளுக்கு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

  2.பரிணாம் எதிர்ப்பாளர்கள் கூட வேறு வழியில்லாமல் சிறு பரிமாணம் எனப்படும் மைக்ரோ பரிமாணத்தை ஏற்கின்றனர்.ஒரு குழு உயிரினங்களுக்கு ஒரே மூதாதையர் என்பதே .எ.கே அனைத்து நாய்களும் ஒருவித ஓநாய் போன்ற மூதாதையரிடம் இருந்தே தோன்றின.செலக்டிவ் ப்ரீடிங் என்பது செயற்கை பரிமாண முறையில் வேண்டிய இன வகைகளை உற்பத்தி செய்கிறார்கள்.
  http://knol.google.com/k/the-dog-its-origins-evolution#
  http://www.dog-names.org.uk/history-evolution-dogs.htm


  பரிணாம் எதிர்ப்பளர்கள் கூறுவது ஒரு உயிரினம் இரு அல்லது மேற்பட்ட வேறு உயிரினமாக மாற முடியாது என்பது மட்டுமே அவர்களின் வாதம்.
  இது அனைவருக்குமே வரும் சந்தேகம்தான்
  இரு வேறுபட்ட உயிரினம் என்றால் என்ன?
  எந்த இரு உயிரினங்கள் இணந்து இனவிருத்தி செய்யக் கூடிய சந்ததியை உருவாகக் முடியவில்லையோ அவை வேறுபட்ட உயிரினங்கள் என்பதே அறிவியலின் வரையறுப்பு.

  இபோது யோசித்து பாருங்கள் ஜீன் மாற்றத்தினால் குரோமோசோம் எண்ணிக்கை மாறுபடும் வாய்ப்பு உண்டு.அப்படி மாறிய உயிரினம் வேறு ஒன்றாகிவிடும் .தன் பழைய இனத்தோடு இன விருத்தி செய்ய இயலாது.இபோது இச்சிந்தனையில் பாருங்கள் சட்டென்று புரிந்து விடும்.இது பற்றி ஒரு தனி பதிவிட வேண்டும்.
  இங்கே பாருங்கள் !!!!!!.எல்லாம் புரிந்தது போல் இருக்கும்.
  44 நிறவுருக்களைக் கொண்ட மனிதன்

  http://annatheanalyst.blogspot.com/2011/07/44.html

  ஜீன் ஆய்வுகள் வளரும் வேகம் பார்த்தால் இதனை ஆய்வு பூர்வமாக் நிரூபிக்கும் நாள் அருகில் என்று கூற இயலும்.வருகைக்கும் கருத்து பதிவிற்கும்.நன்றி

  ReplyDelete
 4. இங்கே பருங்கள் ஆண் புலி+பெண் சிங்கம்=டைக்லான்
  பெண் புலி+ ஆண் சிங்கம்=லைஜர்

  இவை இரண்டும் செலக்டிவ் ப்ரீடிங் முறையில் உருவாக்கப் பட்டவை,இவை இரண்டும் வெவ்வேறு உயிரினம்!!!!!!!!!!!!!
  http://en.wikipedia.org/wiki/Liger
  http://en.wikipedia.org/wiki/Tiglon

  http://www.lairweb.org.nz/tiger/tigons.html

  ReplyDelete
 5. Human Evolution: No Easy Fix
  Ariel Fernandez
  http://www.project-syndicate.org/commentary/fernandez1/English

  http://english.aljazeera.net/indepth/opinion/2011/10/2011104115723738874.html

  ReplyDelete
 6. இங்கே உங்கள் பணி கண்டு வியக்கும் ஒரு மூஃமின்!
  வாழ்க

  ReplyDelete
 7. குர்ஆனில் எந்த ஒரு மந்தரம் மாயஜாலம் இல்லை ஆனாலும் முஸ்லிம்கள் நம்புகிறோம் இது நாங்கள் சரியாக குரானை புரிந்துகொள்ள தவறி விட்டோம் புரிந்து கொண்டவர்கள் வின்னானிகள் அதனால் தான் கடல் தண்ணீரையும் குடிநீர் ஆக்கமுடின்தது ஆகாயத்தில் பரக்கமுடின்தது இந்த உலகத்தில் மதவாதிகள் தேவையில்லை வின்னாநிகளே தேவை அல்லா(அறிவியல் )இன்றி ஒரு அணுவும் இல்லை

  ReplyDelete