Tuesday, October 4, 2011

2011 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு:பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது

 Nobel laureates Perlmutter, Schmidt, and Riess
2011 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு  Saul Perlmutter(US) , Adam Riess ( US) and Brian Schmidt ( Australia). ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் யார் என்பதை இந்த சுட்டிகளில் படியுங்கள்.

நமக்கு முக்கியம் அவர்கள் என்ன கண்டு பிடித்தார்கள் என்பதே!


Type 1a supernovae: white dwarf என்றழைக்கப்படும் நட்சத்திரத்தின் நுயுக்ளியர்  எரிபொருள் 97% தீர்ந்த பின் ஏற்படும் நிலையாகும்.நமது சூரியன் கூட சில பில்லியன் ஆண்டுகளுக்கு பின் இப்படி ஆகிவிடும்.
சந்திரசேகர் எல்லை[1.38 solar masses] என்னும் எடை அடையும் போது அவை வெடித்து சிதறுவது Type 1a supernovae என அழைக்கப் படுகிறது.இதனை ஆய்வு செய்யும்போது பிரபஞ்சம் விரிவடைவது மட்டுமன்றி விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது என்பதை ஆய்வு ரீதியாக ஆவணப்படுத்தினர்.

Prof Saul Perlmutter சூப்பர்னோவா காஸ்மாலாஜி ப்ராஜெக்டின் தலைவராக இருந்தவர். 1988 ல் இருந்து இதில் பணியாற்றி வருகிறார்.


Prof Schmidt and Prof Riess  இது போன்ற  High-z Supernova Search Team.
ஆய்வு மேற் கொண்டவர்கள்.

இந்த இரு குழு ஆய்வாளர்களுக்கும் சூப்பர்னோவா வெடிப்பு ஏற்படும் போது வெளிப்படும் ஒளி அலைகளை வைத்து அது நகரும் வேகத்தை அளப்பதுதான் நோக்கம். ஒளி அலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றங்கள் அதன் தூரத்தை காட்டும்.இது டாஃப்ளர் விளைவின் அடிப்படையில் கண்க்கிடபடுகிறது.அதாவது ஒரு ஒளி(light) உங்களிடம் இருந்து  விலகினால் சிவப்பும்,நெருங்கினால் ஊதா வண்ணமும் அதிகம் புலப்படும் என்பதுதான் இவ்விளைவு.இது ஒலிக்கும்(sound) பொருந்தும் விலகினால் அளவு குறைவாகவும் நெருங்கினால் அதிகரிக்கும்.

தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் மெதுவாகவும் அருகில் உள்ள நட்சத்திரங்கள் வேகமாகவும்(ஒப்பீட்டளவில்) என்ற கருதுகோள் ஆய்வின் முன் கொண்டு இருந்தனர்.

இது பிக் ஃபேங்(Big bang) எனப்படும் பெரு விரிவாக்க கொள்கையின் அடிப்படையிலான கருதுகோள்,அதாவது ஒரு புள்ளியில் இருந்து பிரபஞ்சம் விரிவடையும் போது வேகம் கொஞ்சம் கொஞ்சமாக் குறைந்து ஒரு எல்லைக்கு அப்பால் மீண்டும் சுருங்கும்(Big crunch) என்ற கொள்கை இதன் அடிப்படையிலானது.

இன்னும் கூட ஐன்ஸ்டினின் காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்(cosmological constant) சார்ந்த விள்க்கம் கூட இதற்கு உண்டு.இது பற்றி இன்னும் சில பதிவுகளில் பார்ப்போம்.

ஆனால் இரு குழுக்களும் எதிர்பார்த்த அளவுகளுக்கு பதிலாக தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் அருகில் உள்ள நட்சத்திரங்களை விட வேகமாக  செல்வதை கண்டறிந்தனர்.. அப்படி எனில் பிரபஞ்சம் எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கும் என கருத இயலும்.!!!!!!!!

இது ஆய்வுரீதியாக உறுதிப் படுத்தப்பட்ட ஒரு இயற்கையின் நிகழ்வு.இதற்கு விள்க்கம் அளிக்கும் கொள்கை ரீதியான மாதிரி(Model) வடிவமைக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படும். இந்த அதிகரிக்கும் விரிவடைதலை(accelerating expansion)  கருப்பு ஆற்றல்(dark energy) ஏற்படுத்துகிறதா என்பதும் ஒரு விடை தெரியா கேள்வியே!!!
இத்தகவல் அளித்து பதிவிட ஊக்குவித்த சகோதரர் இராஜராஜனுக்கு நன்றி!!!!!!

5 comments:

 1. http://www.bbc.co.uk/news/science-environment-15165371

  ReplyDelete
 2. Three scientists have won the Nobel Prize in Physics for their discovery that the universe is not just expanding but also picking up speed as it balloons, rather than slowing down, the Royal Swedish Academy of Sciences announced Tuesday, Oct. 4.

  Two teams, one headed by Saul Perlmutter of Lawrence Berkeley National Laboratory and University of California, Berkeley, and the other by Brian Schmidt of the Australian National University and Adam Riess of Johns Hopkins University and Space Telescope Science Institute, had set to work to map the universe by locating the most distant supernovas. They focused on so-called type Ia supernova, an explosion of an old compact star as hefty as the sun but as small as the Earth. The teams ultimately found 50 distant supernovas whose light was weaker than expected, meaning they were farther away than they should have been -- a sign that the expansion of the universe was accelerating.

  Both teams announced their discoveries in 1998. "We expected to see the universe slowing down, but instead, all the data fit a universe that is speeding up," Riess said in 1998 while still a Miller Postdoctoral Research Fellow at UC Berkeley.

  ...

  In addition to overturning a cosmological theory, their discoveries suggest that the expansion of the universe will continue to speed up until, in the distant future, hot stars are so far apart the universe will be a cold and dark place.

  ReplyDelete
 3. ஏன் சூப்பர்னோவாவை ஆய்வு செய்தனர்?
  சூப்பர்னோவா என்பது நட்சத்திர வெடிப்பு.நமது பிரபஞ்சத்தில் பல பில்லியன் காலக்ஸிகள்.அதில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம்.இபோது காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது என்பதை ஹூபில் தொலை நோக்கி அளவீடுகள் மூல்ம் கண்டறிந்தது போல் இவர்கள் சூப்பர் நோவாவில் வெளிப்படும் ஒளியின் அளவீடுகளை கொண்டு விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது என்று உறுதிப்படுத்தினர்.

  Edwin Hubble's arrival at Mount Wilson, California, in 1919 coincided roughly with the completion of the 100-inch (2.5 m) Hooker Telescope, then the world's largest telescope. At that time, the prevailing view of the cosmos was that the universe consisted entirely of the Milky Way Galaxy. Using the Hooker Telescope at Mt. Wilson, Hubble identified Cepheid variables (a kind of star; see also standard candle) in several spiral nebulae, including the Andromeda Nebula and Triangulum. His observations, made in 1922–1923, proved conclusively that these nebulae were much too distant to be part of the Milky Way and were, in fact, entire galaxies outside our own. This idea had been opposed by many in the astronomy establishment of the time, in particular by the Harvard University-based Harlow Shapley. Despite the opposition, Hubble, then a thirty-five year old scientist, had his findings presented in the form of a paper at the January 1, 1925 meeting of the American Astronomical Society.[14] Hubble's findings fundamentally changed the scientific view of the universe.

  Hubble also devised the most commonly used system for classifying galaxies, grouping them according to their appearance in photographic images. He arranged the different groups of galaxies in what became known as the Hubble sequence
  _________
  Combining his own measurements of galaxy distances based on Henrietta Swan Leavitt's period-luminosity relationship for Cepheids with Vesto Slipher and Milton L. Humason's measurements of the redshifts associated with the galaxies, Hubble discovered a rough proportionality of the objects' distances with their redshifts.[16] Though there was considerable scatter (now known to be due to peculiar velocities), Hubble was able to plot a trend line from the 46 galaxies and obtained a value for the Hubble Constant of 500 km/s/Mpc, which is much higher than the currently accepted value due to errors in their distance calibrations. In 1929 Hubble formulated the empirical Redshift Distance Law of galaxies, nowadays termed simply Hubble's law, which, if the redshift is interpreted as a measure of recession speed, is consistent with the solutions of Einstein’s equations of general relativity for a homogeneous, isotropic expanding space. Although concepts underlying an expanding universe were well understood earlier, this statement by Hubble and Humason led to wider scale acceptance for this view. The law states that the greater the distance between any two galaxies, the greater their relative speed of separation.

  This discovery was the first observational support for the Big Bang theory which had been proposed by Georges Lemaître in 1927. The observed velocities of distant galaxies, taken together with the cosmological principle appeared to show that the Universe was expanding in a manner consistent with the Friedmann-Lemaître model of general

  ReplyDelete
 4. //தூரத்தில் உள்ள நட்சத்திரங்கள் அருகில் உள்ள நட்சத்திரங்களை விட வேகமாக செல்வதை கண்டறிந்தனர்.. அப்படி எனில் பிரபஞ்சம் எப்போதும் விரிவடைந்து கொண்டே இருக்கும் என கருத இயலும்.!!!!!!!!//

  என்னக் கொடுமைங்க, இப்படி இவர்கள் உண்மைகளை கண்டுச் சொல்லி மதப்புத்தகங்களையும் மாற்றி எழுதும் வேலை வைத்துவிடுகிறார்களே.

  "வானத்தில் இருந்து பூமியைப் பிரித்தான்" என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது எங்கள் மதப்புத்தகம், பிரித்தான் என்றால் என்ன ? ஒரு பொருளில் இருந்து ஒன்றைப் பிரிக்கும் போது அதனிடையே இடைவெளி அதிகரிக்கிறது, இதைத்தான் இன்று விஞ்ஞானிகள் கண்டு கொண்டு சொல்லி இருக்கிறார்கள், இதிலிருந்து தெரிகிறதா ? 3455 ஆண்டுக்கு முன்பே இது பற்றி எங்கள் மதப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. சாதரணமனிதனால் இத்தகைய உண்மைகளைச் சொல்லமுடியுமா ? அது இறைவாக்கியம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா என்று சிந்திக்கமாட்டீர்களா ?

  முடியல

  ReplyDelete
 5. வாங்க சகோ,
  நமக்கு இப்போது உண்மையான அறிவியல் கற்பதில் மட்டுமே ஆர்வம் காதல்.அறிவியலுக்கும் மேலான(?) சில விஷயங்கள் விவாதிப்பதில் நேரம் விரயம் ஆவதால் ஏதொ கொஞ்சம் முடிந்தவரை கற்று எளிமையாக் சொல்ல விழைகிறேன்.
  இந்த கருப்பு ஆற்றல்&பொருள் பற்றி அறியாதவரை இதனை இப்போது விளக்க இயலாது.விடாது கருப்பு,விட்டுவிடு கருப்பா என்று ஏதாவது சொல்லலாம்!!!!!!!!!!
  கருத்துக்கு நன்றி

  ReplyDelete