Monday, December 26, 2011

ஸ்டெம் செல்[Stem Cell] ஆய்வில் இந்திய ஆய்வாளர்கள் சாதனை!!!!!!!!




அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை விளக்கும் மனிதனின் தொடர் தேடல் என்றே கூறலாம்.ஒவ்வொரு நிகழ்வையும் (உரிய உபகரணங்கள் மூலம்)அவதானித்து பல சோதனைகளுக்கு பிறகு ஒரு கோட்பாடாக உருவகம் எடுக்கிறது. பிறகு காலப்போக்கில் இன்னும் பல வித விவாதம் , சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அக்கோட்பாடு மா(ஏ)ற்றம் அடைகிறது.

ஸ்டெம் ஆய்வில் பெங்களூரை சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய சாதனை புரிந்துள்ள்னனர்.ஸ்டெம் செல் என்றால் என்ன என்பவர்களுக்கு சில விளக்கங்கள்.தெரிந்தவர்கள் நேராக காணொளிக்கு சென்று விடலாம்.
எதனையும்  எளிமையாக கற்கவோ,விளங்கவோ எவராலும் முடியும் என்பது நம‌து ஆணித்தரமான நம்பிக்கை.நமக்கு கொஞ்சம் அணு அறிவியல் தெரியும் என்பதால் அதனோடு ஒப்பிட்டே கற்போம்.

A.செல் என்றால் என்ன?

உயிர்களின்(தாவரங்கள் உட்பட்ட) அடிப்படை பொருள் செல்

உயிரற்ற பொருள்கள்களின் அடிப்ப்டை பொருள் அணு.

செல்லின்(அணுவின்) உட்பகுதி நுயுக்ளியஸ் என்றே அழைக்கப் படுகிறது.

செல் திரு ராபர்ட் ஹூக்[1635 – 1703] என்னும் பிரிட்டிஷ் அறிவியலாளரால் 1665ல் கண்டு பிடிக்கப் பட்டது. இது குறித்த ஆய்வுகள் உயிரணுவியல் (Cell Biology) என அழைக்கப்படுகிறது.  "உயிரியலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உயிரணுவியல் பற்றிய ஆய்வு தீர்வு தரும்" என நம்பப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்வில் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் என்பதால் இத்துறை ஆய்வு மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிகக் கூடியது ஆகும்.


இரண்டும் மிக சிறியவை.ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் வரை உலகில் உள்ளது.சராசரியாக மனிதன் உட‌லில் 100 ட்ரில்லியன்[100*10^9] செல்கள் உள்ளன.ஒரு செல்லின் அளவு சுமார் 10 மைக்ரோ மீட்டர்[10*10^(-6) mt ], அதன் எடை 1 நானொ கிராம்[10^(-9)gms] .

B. செல் கொள்கை [Cell Theory] என்றால் என்ன?


Hooke, Leeuwenhoek, Schleiden, Schwann, Virchow) மற்றும் பலரின் கண்டுபிடிப்புகள் மற்றும் விளக்கங்கள் செல் கொள்கையின் வளர்ச்சிக்கு இட்டுச்சென்றது. செல்களுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பரவலாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கமே செல் கொள்கை
  1. உயிரினங்களின் கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு செல் ஆகும். எல்லா உயிரினங்களும் உயிரணுக்களினால் ஆக்கப்பட்டவை. அனைத்து உயிரணுக்களும் அடிப்படையில் ஒரே இரசாயன அமைப்பைக் கொண்டுள்ளன.

  1.  செல்கள் யாவும் முன்னர் காணப்பட்ட செல்களிலிருந்து பிரிவின் மூலம் உருவாகின்றன.வளர்சிதைமாற்றம் மற்றும் உயிர்வேதியியல் ஆனது உயிரணுக்களின் உள்ளேயே நடைபெறுகின்றன..(Similar to Law of conservation of Energy)

  1. உயிரணுக்கள் பரம்பரை தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது.

  1. ஒரு உயிரினத்தின் மொத்த செயலானது, அவ்வுயிரினத்தில் காணப்படும் ஒவ்வொரு தனி செல்களினதும் கூட்டு செயல் ஆகும்(கணிதம் போல்  ல்லை!!!!!!!!!!. தனிப்பட்ட சிறிய‌ செயல்கள் மொத்த செயலுக்கு சமம்).Principle of Superposition!!!!!!!
C. செல்களின் வகைகள் யாவை?

உயிரின‌ங்களின் உடலில் உள்ள அனைத்து செல்களும் ஒரே மாதிரி இருக்காது. மனித உடலில்  சுமார் 200க்கும் மேற்றபட்ட வித்தியாசமான செல்கள் உள்ளன்.

1.யுகர்யோடிக் செல்கள்: விலங்குகளின் செல்களை பொதுவாக இவ்வாறு கூறலாம்.இவ்வ்கை செல்கள் மையக்கரு நுயுக்ளியஸ் மற்றும் அதை சுற்றிய சில பகுதி உறுப்புகளுமாக ஒரு அணு போன்ற அமைப்பு உடையவை.

2.ப்ரோயுகர்யோடிக் செல்கள்: பாக்டீயா போன்ற ஒரு அல்லது சில செல் மட்டுமே கொண்ட உயிர்களின் செல் இவ்வகை சேர்ந்தது. இவை எளிய அமைப்பை கொண்டவை.இதில் நுயுக்ளியஸ்,சுற்றுபுற பகுதிகள் என்ற பிரிவுகள் கிடையாது.


D) குருத்தணு [stem cell] என்றால் என்ன?

குருத்தணு எனப்படுவது அனைத்துப் பல செல் உயிரினங்களிலும் காணப்படும், மேம்பாடு அடையாத மற்றும் வகைப்பாட்டிற்கு உட்படாத (unspecialized and undifferentiated), ஆனால்  செல் பிரிவின் மூலம் புதிய செல்களை உருவாக்குவதுடன் மேம்பட்ட செல்களை (specialized cells) உருவாக்கி வகைப்படுத்தப்பட்டு வெவ்வேறு திசுக்களையும் [tissue] உருவாக்கும் தன்மை கொண்ட  செல்களாகும். டொரன்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எர்னஸ்ட் மெக்குல்லோச் (Ernest McCulloch), ஜேம்ஸ் டில்(James Till) ஆகிய இருவரும் 1960 களில் செய்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இந்த குருத்தணு ஆய்வு வளர்ச்சியடைந்தது.


அதாவது எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த குருத்தணுக்கள் உட‌லின் எந்த செல் போலவும் செயல்பட முடியும் என்பதுதான்.உட‌லின் ஒவோறு உறுப்பின் செயலும் அதன் செல்களின் கூட்டு செயல் என்பஹை நினைவு  கூர்ந்தால் இந்த குருத்தணுக்களால பல மருத்துவ சாதனைகள் செய்ய முடியும் என்பது புரியும்.ஒரு உடல் உறுப்பையே கருத்தியல் ரீதியாக உருவாக்க முடியும்.ஆனால் இதற்கு இன்னும் பல மைல்கற்களை கடக்க வேண்டும்

பெங்க‌ளூரை சேர்ந்த ஐ ஐஎஸ் ஸி[IISC] ம‌ருத்துவ ஆய்வாளர்கள் இருதய செல்கள போல் செயல் படும் குருத்தணுக்களை உருவாக்கி சாதனை படைத்துள்ள்னர்.இது இருதய சிகிச்சையில் பல சாதனைகளுக்கு வித்திடும் எனது மகிழ்ச்சியான செய்தி.இப்பதிவே இந்த செய்தி அறிவிக்கவே.!!!!!!. கொஞ்சம் விள்க்கமாக சொல்லிவிடலாம் என்று சில கேள்விகள்& பதில்கள் அவ்வளவுதான்!!!!!!!!!!!!!!!





4 comments:

  1. It would be easy to understand if you could use English for medical terms. Anyhow, good post.

    ReplyDelete
  2. நன்றி Rabbani ,Rathnavel ,Dharan நண்பர்களே!!!!!!!111

    ReplyDelete