Thursday, May 3, 2012

இந்தியாவின் அறிவியல்,மருத்துவ கண்டுபிடிப்புகள் :காணொளி
இகாணொளி தமிழ்,ஆங்கிலம் இதர இந்திய‌ மொழிகளில் இந்தியர்களின் தொன்னமையான கண்டுபிடிப்புகளில் அறிவியல்,மருத்துவம் சார்ந்த துறைகள் பற்றி விளக்குகிறது.

காணொளி பாருங்கள்.இகாணொளியில் அறிய வேண்டிய பல விடயங்கள் உண்டு.காணொளியில் சொல்வதற்காகவோ அல்லது ஏதேனும் புத்தக்த்தில் எழுதி இருப்பதல் மட்டும் உண்மை என்று கூறுவது சரியல்ல என்பதை நாம் அறிவோம்.எனினும் இவைகளை உண்மையா என வாழ்வில் யாரேனும் சோதித்து பார்த்து இருக்க்லாம்.இந்த குழந்தைகளுக்கு உரம் எடுத்தல் என்னும் முறையில் குணம் அளித்தது எனக்கு பயன் அளித்தது என் தாய் கூறினார். ஆகவே அந்த முறை உண்மை என்பதற்கு நான் சான்றளிக்கிறேன்.

சித்த மருத்துவம்&ஆயுர்வேதம் ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று வழிமுறை சிகிச்சை கூறுகிறது.அதுதான் இது என தன்னை எப்படியாவது நிரூபிக்க முயலவில்லை என்பது அதன் உண்மையையும் வலிவையே காட்டுகிறது.


வர்மக்க்லை,கேரள எண்ணெய் உடல் பிடிப்பு மருத்துவம் இன்னும் பல விட்ய்ங்களையும் விள்க்குகிறார்கள்.

இவைகளில் சிலவற்றை  பயன்படுத்திய சகோதரர்கள் தங்கள் அனுபவங்களை பிறரோடு பகிர்ந்தால் அது அனைவருக்கும் செய்யும் மிகபெரிய சமூக நலனாகும்.

நம் அறிவியல் தொழில் நுடபம் பல்வற்றை இழந்து விட்டோம்,மிஞ்சி இருப்பவற்றையாவது சரியாக சார்பற்று ஆய்வு செய்து முறையான பயன்பாட்டுக்கு ஆவண்ப்ப்டுத்த வேண்டும்.அப்படி செய்யப்பட்ட அறிவியல் மருத்துவத்திற்கு காப்புரிமை பெறுவதும் காலத்தின் கட்டாயம்.

அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற இலக்கில் நமது மருத்துவ கண்டுபிடிப்புகள் நிச்சயம் பங்களிப்பு செய்யும் என்னும் நம்பிக்கை கொள்வோம்!!!!

கண்டு களியுங்கள்!!!!!!!.
 

6 comments:

 1. சகோ.சார்வாகன்,

  காணொளி பொறுமையாக காண்கிறேன்.

  மூலிகை மருத்துவம் பயனுள்ள ,பக்க விளைவற்ற ஒன்று. என்ன குண்மாக ஆகும் காலம் கூடுதல் என்பதால் உடனடி நிவாரணம் தேடி ஆங்கில மருத்துவம் நாடி சென்று இன்று அதுவே முக்கியமான மருத்துவமாக ஆகிவிட்டது ஆங்கில மருத்துவத்தில் குணமாக நோய்கள் கூட மூலிகையால் குணமாகும்.

  நல்லப்பகிர்வு!(ஆமாம் காணொளியில் எதுவும் உள்குத்து இல்லையே ... பார்த்தால் ஏதோ பொடி இருப்பது போல தெரியுது)

  ReplyDelete
 2. வாங்க சகோ வவ்வால்

  நம் அறிவியல்,தொழில் நுட்பங்கள் சில குடும்பங்களின் தலைமுறைக்குள் மட்டுமே இருந்ததால் பல் அழிந்தன.இன்னும் சில வகை மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்துதான் கை கண்ட மருந்து.இந்த மருத்துவமுறை சரியாக முறைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தலாம்.இயற்கை சார்ந்த தொழில் நுடபம்,விவசாயம் என்று நாம் மட்டும் புலம்ப வேண்டியதுதான்.

  மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தை பார்த்தால் இன்னும் 100 ஆண்டுகளில் உணவும் தண்னீரும் மட்டுமே முக்கியம் என சண்டை போட்டு நம் ஆதிகால முன்னோர்கள் போல் ஆகி விடுவோம்.

  நாம் என்ன பொடி வைக்கிறோம் சகோ!. அனைவரும் பொடிப்பொடியாகி விடக் கூடாது என்பதற்காக்வே எதோ கூவுகிறோம்.

  நன்றி

  ReplyDelete
 3. அருமையான பதிவு நண்பரே.

  ReplyDelete
 4. வாங்க சகோ தமிழன் நலமா

  கருத்துகு நன்றி.

  ReplyDelete
 5. சார்வாகன் இனி பரிணாம எதிர்ப்பு பலமாக இருக்காது போல இருக்கே. அதுக்கு தமிழ்மணம் ஆப்பு வைத்துவிட்டது, ஆப்பு வைக்கப்படாதவர்களும் பாதிக்கப்பட்டுட்டாங்க side effect!. ஆப்பின் side effectஆக உங்கள் உற்சாகம் குன்றாது இருக்க வேண்டிக்கிறேன்.

  மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லியை பயன்படுத்தி நாட்டு மருத்துவர்கள் குணமாக்குவதை கண்டுள்ளேன். அடியேன் அப்படி குணமாகியவன் தான். ஏற்காடு அடிவாரத்துல உள்ள ஒரு கிராமம் இதற்கு பெயர்பெற்றது. சளிக்கு ஓமத்திரம் இலையை சாப்பிட்டா சரியாகும் (அடியேனை சாப்பிடவைத்து சரி செய்துள்ளார்கள்). இப்பல்லாம் ஓமத்திரம் செடியை காண்பதே அரிதாக உள்ளது. ஓமத்திரம் மாதிரி சளிக்கு வேற எந்த மருந்தும் வேலை செய்யாது என்று அடித்து சொல்லலாம்.

  ReplyDelete
 6. அருமையான காணொளி நண்பரே, இதை தொகுத்த யுவன்செந்தில்குமார் என்பவரை பாராட்டதான் வேண்டும்.
  நமக்கு பிடித்தது, Teaching maths is miserable: Chinese stole the zinc technology -:).
  இந்த பழங்கால மருத்துவம் மற்றும் இதர அறிவுகளை, அழியாமல் ஆவணப் படுத்துதல் மிகவும் முக்கியம். ஆங்கில மருத்துவம் 95% placebo effect தான். சரித்திரம் மறு ஆய்வு செய்வது அவசியம். நமது மக்களை தாழ்வு மனப்பாண்மையில் வைப்பதற்காகவே உருவாக்கபட்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. Danger பாய்க்கு இதுதான் இந்தியா.

  ReplyDelete