Wednesday, August 8, 2012

பரிணாமம் இனவெறிக் கொள்கையா?பகுதி:1வணக்கம் நண்பர்களே,

நாம் இப்போதைய‌ உயிரின தோற்ற‌ பரவல்  கொள்கையான பரிணாமம் பறிய கற்றல் ,பகிர்தல் செய்து வருகிறோம்.தமிழில் பரிணாமம் பற்றிய எளிய பதிவுகள் இல்லை என்பதை உணர்ந்த காரணத்தினாலும்,மதவாதிகள் இது சார்ந்து கருத்து திணிப்பு செய்து வருவதாலும் அது குறித்த நமது தேடல்களை பதிவிட ஆரம்பித்தோம்.

டார்வினியம் மட்டுமல்ல அது சாரா பரிணாம விளக்கங்களும் உண்டு,இன்னும் பல அறிவியலாளர்களின் பங்ககளிப்பும் அதில் டார்வினில் இருந்து பல மாற்றங்களை கொண்டு வந்தது. அறிவியலில் சான்றுகளை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு அதிகம் பொருந்தும் வண்ணம் மெய்ப்பிக்கும் கொள்கைகளே ஏற்கப் படுகின்றன.

ஒரு கொள்கைக்கு மாற்றுக் கொள்கை வருகிறது எனில் ,முதல் கொள்கை தவறு என்று பொருள் அல்ல.மாற்றுக் கொள்கை முதல் கொள்கைகளை விட சான்றுகளுக்கு அதிகம் பொருந்துகிறது என்பதே சரியாகும்.

ஒவ்வொரு சான்றுகளுக்கும் பல விளக்கங்கள் சாத்தியமே.ஆயினும் காலரீதியான &  பல பரிசோதனைகளின்  பல சான்றுகளையும் அதிகம் பொருந்தும் வண்ணம் விளக்கும் கொள்கைகளே நீடிக்கும்.

அறிவியல் கொள்கைகளிலும் பரிணாம வளர்ச்சி இருப்பதும்,அவை ஆதி மனிதனின்  அடிப்படை சிந்தனையில்  இருந்து கிளைத்து தழைத்ததும் அறிய முடியும்.அறிவியலில் எத்த‌னை துறைகள்,பிரிவுகள்,ஒரே புள்ளியில் தோன்றினாலும் தொடர்பின்றி போன துறைகள்தான் எத்த‌னை ??????????

அறிவியல் உறுதிப்படுத்தப்பட்ட கருத்துகளை ஏற்கும்,ஒவ்வாதவற்றை
புறந்தள்ளி விடும். ஆனால் சான்றுகளை அல்ல!!!!!!!!!!!!!.

இந்த பார்வையிலேயே அறிவியலை அணுகவேண்டும்.

"மனப்பாடம் செய்து புதிர் தீர்த்தல்" என்ற கல்வி முறையே பன்முகப் பார்வையை அழித்து பல சமூக‌ பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது என்றே நாம் கூறுகிறோம்.

நாம் டார்வினையோ,கோல்ட் அல்லது எந்த அறிவியலாளர் சொலவது எக்கால்த்துக்கும் பொருந்தும் உண்மைகள்,இவர்களே மனித குலத்தின் வழிகாட்டிகள் என்று கூறுவது இல்லை,யாராக இருந்தாலும் அவர்களின் அறிவியல் பங்களிப்பு மட்டுமே முக்கியம்.

மனிதர்கள் சுயநலம்,கொள்கை சார் நிலை,வாழும் கால  சூழல் கொண்டிருப்பார்கள் என்பதும் இதில் அறிவியலாளர்களும் விதி விலக்கு அல்ல என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

சென்ற கோல்ட் பற்ரிய தொடர் பதிவில் பரிணாமம் குறித்த பல அம்சங்களை எளிமைப் படுத்தி விளக்கினோம். பெரும்பரிணாமும் பரிசோதனை ரீதியாக் நிரூபிக்க கூடியதே,என்பதும் படிமங்களில் படிப்படியான மாற்ற‌ம்  இன்மை ஏன் என்பதையும் விளக்கினோம்.அது சார் விவாதங்கள்,விளக்கங்களின் தமிழில் அளிக்க வேண்டும் என ஆவல் கொண்டு இருந்தோம்!!!!!!!!!!!.

ஆனால் சகோ நந்தவனத்தான் பின்னூட்டத்தில் கோல்ட் மீது கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை வைத்தார்.

//நீங்கள் கூறுவதற்கு மாறாக கோல்ட்மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மார்டின் என்பவர் கபாலங்களை ஆய்ந்து வெள்ளையாருடையவை மற்ற இனத்தவரைவிட பெரியவை எனக்கூற அதை மறுத்த கோல்ட், மார்ட்டின் வெள்ளையர் கபாலங்கள் பெரியவை ஆதலால் அவர்கள் புத்திசாலிகள் என கூறியதாக தவறாக மார்டின் மீது குற்றம் சாட்டியுள்ளார் மேலும் மார்டின் தனது டேட்டாவை சரியான கையாளாமல் விட்ட பிராடு மாதிரி காட்டி The Mismeasure of Science என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் கோல்ட் செய்ததுதான் தவறு என காட்டுகின்றன,அவர் தனது கணக்கீடுகளை திருத்தி பிராடு செய்துள்ளார்.


மேலும் கோல்ட் பிறரது ஆராய்ச்சிகளை/ஐடியாக்களை திருடி தனது போல் காட்டியுள்ளார் .அவரது திறமை பற்றி நான் தந்த தொடுப்பில் ஜான் என்பவர் கூறுகிறார் "He has come to be seen by non-biologists as the preeminent evolutionary theorist. In contrast, the evolutionary biologists with whom I have discussed his work tend to see him as a man whose ideas are so confused as to be hardly worth bothering with, but as one who should not be publicly criticized because he is at least on our side against the creationists. All this would not matter, were it not that he is giving non-biologists a largely false picture of the state of evolutionary theory."

ஜானின் கருத்துக்கு மாறாக கோல்டை குறை சொல்லி இப்பின்னூட்டம். இது மதவாதிகளுக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால் நாம் அறிவியல் ஆர்வலர்கள், மதவாதிகள் அல்ல. எல்லாவற்றையும் கேள்வி கேட்டு உண்மையின் அருகில் செல்வதன்றோ நமது நோக்கம்?

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண் பதறிவு

நிற்க, மேற்கண்ட காரணங்களால் கோல்ட் புறக்கணிக்கபட்டிருக்கலாம் அல்லவா? 
நண்பர் சார்வாகனின் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்
//

நாம் விமர்சனங்களை வரவேற்கிறோம்.எனினும் தனிப்பட்ட மனிதர் மீது வைக்கப் படும் குற்றசாட்டுகளின் மீதான விவாதம் நேர விரயம்,அறிவியலில் சரியென்று ஏற்கப் பட்ட அவருடைய கருத்தினை மட்டுமே பகிர ,விவாதிக்க‌ வேண்டும்  என்பதே நம் கொள்கை.

பிறகு ஏன் மறுப்பு சொல்கிறோம் எனில் இதில் ஒரு நல்ல விடயமும் இருக்கிறது பரிணாமம் இனவெறிக் கொள்கை என விமர்சிக்கும் மத்வாதிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க ஒரு நல்ல வாய்ப்பாக நாம் கருதுகிறோம்.ஆகவே நாம் கொள்கை சார்ந்தே விளக்க வருகிறோம் கோல்ட் அவர்கள் செய்தது சரி என்று அல்ல!!!!!!!!

இதில் சகோ நந்தவனத்தான் குற்றச்சாட்டுகளை ஒழுங்காக பதிவு செய்வோம்.
அவர் குற்றச்ச்சாட்டுகளை சரி என ஆமோதிக்கும் பட்சத்தில் அதன் மீதான மறுப்புகளை ஆராய்வோம்.

  
1.// மார்டின் என்பவர் கபாலங்களை ஆய்ந்து வெள்ளையாருடையவை மற்ற இனத்தவரைவிட பெரியவை எனக்கூற அதை மறுத்த கோல்ட், மார்ட்டின் வெள்ளையர் கபாலங்கள் பெரியவை ஆதலால் அவர்கள் புத்திசாலிகள் என கூறியதாக தவறாக மார்டின் மீது குற்றம் சாட்டியுள்ளார் மேலும் மார்டின் தனது டேட்டாவை சரியான கையாளாமல் விட்ட பிராடு மாதிரி காட்டி The Mismeasure of Science என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் கோல்ட் செய்ததுதான் தவறு என காட்டுகின்றன,அவர்//
\
அவரின் ஆதார சுட்டிஇந்த இரு குற்றசாட்டுகளையும் கொஞ்சம் விரிவு படுத்துவோம்.

) சாமுவேல் ஜார்ஜ்  மார்ட்டன்  மனிதர்களின் கபால அளவுக்கும் புத்தி சாலித்தனத்திற்கும் தொடர்பு உண்டு என கூறவில்லை. கோல்ட் மார்ட்டனை அப்படி இனவெறியராக சித்தரித்தார்.


) சாமுவேல் ஜார்ஜ் மார்ட்டன் கபால அளவுகளில் மாற்றம் செய்து தனது கருத்துகளைக் கூறவில்லை.அப்படியே அளவுகளின் படியே விளக்கம் கூறினார்.


) கோல்ட் தனது மிஸ்மெஸ்சர் ஆஃப் மேன்[Mismesure of man)  புத்த்கத்தில் மார்ட்டன் பற்றி கூறிய விடயங்கள் தவறு.

2.//மேலும் கோல்ட் பிறரது ஆராய்ச்சிகளை/ஐடியாக்களை திருடி தனது போல் காட்டியுள்ளார் .//

அவரின் ஆதார சுட்டி


 சகோ நந்தவனத்தான் கொடுத்த இணைப்பில் இருந்து கோல்ட் தனது ஃபுல் ஹவுஸ்[Full House] புத்த்கத்தில் அப்போதைய பரிணாம கொள்கையின் முக்கிய அறிவியலாளர் ஜார்ஜ் சி வில்லியத்தின் கருத்துகளை குறிப்பிடவில்லை என மட்டும் குறிப்பிடப்படுகிறது. 
//The upshot, as George Williams wrote:
A certain amount of information is added by selection every generation.  At the same time, a certain amount is subtracted by randomizing processes.  The more information is already stored, the more would mutation and other random forces reduce it in a given time interval.  It is reasonable to suppose that there would be a maximum level of information content that could be maintained by selection in opposition to randomizing forces...
The view suggested here is that all organisms of above a certain low level organization - perhaps that of the simpler invertebrates - and beyond a certain geological period - perhaps the Cambrian - may have much the same amounts of [meaningful] information in their nuclei.
Saying this did not make Williams a heroic, persecuted martyr.  He simply won.  His arguments were accepted and biology moved on.  The book quoted above is Adaptation and Natural Selection, now showing its age but still considered a great classic.  The shift to a gene's-eye-view in evolutionary theory is sometimes called the "Williams Revolution", the other founders being Hamilton, John Maynard Smith, Trivers, and Dawkins as popularizer.  In short, Williams was not exactly Mr. Obscure.
And Williams wrote in 1966, thirty years before Gould wrote Full House.
If Gould had simply stolen Williams's ideas and presented them as his own, then he would have been guilty of plagiarism.  And yet at least the general public would have been accurately informed; in that sense, less damage would have been done to the public understanding of science.
But Gould's actual conduct was much stranger.  He wrote as if the entire Williams revolution had never occurred!  Gould attacked, as if they were still current views, romantic notions that no serious biologist had put forth since the 1960s.  Then Gould presented his own counterarguments to these no-longer-advocated views, and they were bizarre.  Evolution is a random walk in complexity, with a minimum at zero complexity and no upper bound?  But there is an upper bound!  Sheer chance explains why dogs are more complex than dinosaurs?  But they probably aren't!//
இது சகோ நந்தவனத்தான் ஆய்வுத் திருட்டா என விளக்க வேண்டுகிறேன்.
**********************************


இபோது தொடர் பதிவுக்கு வருவோம் 

இனவாதம்  என்றால் என்ன?

இது குறித்த  சரியான புரிதல் ஏற்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.உலகின் எங்கும் இனம் சார் முரண்கள் பெருகுவதும்,அது சார் வன்முறையில் உயிர்கள் பலியாவதும் வருத்தத்திற்கு உரிய விடயங்கள்.

மரண தண்டனை,போர்கள்,இன வன்முறை மனித சமுதாயத்தில் அற்றுப் போக வேண்டும். இதற்கு எதிரான எந்த ஒரு கொள்கையும் ஒதுக்கப் பட வேண்டும்.அது அறிவியல் கொள்கை ஆனாலும் சரி! ஆண்டவனின் கொள்கை ஆனாலும் சரி!!!!!!!!!!!!!!!!!!!!!!

முதலில் இனவெறி என்றால் சரியான் வரையறுப்பு அறிவோம்!


இனவாதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனமே மனித இயல்புகளையும் அவர்கள் தகுதிகளையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணி, இன வேறுபாடுகள் குறிப்பிட்ட இனங்களை மற்றவர்களிலும் உள்ளார்ந்த அடிப்படையில் மேலானவர்களாக ஆக்குகிறது என்னும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கையே இனவாதம் எனப்படுகிறது. இனவாத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் சில இனத்தவரை வெறுப்பர். அமைப்பு முறையிலான இனவாதத்தின் கீழ் சில இனக்குழுக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதையும், சிலவற்றுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவதையும் காணலாம்.
வரைவிலக்கணம்
இனவாதம் என்பது பொதுவாக இனத்தை அடிப்படையாகக் கொண்ட தப்பபிப்பிராயங்கள்வன்முறைஇனப்பாகுபாடுஅடக்குமுறை என்பவற்றோடு தொடர்புபட்டிருந்தாலும், இதற்கான வரைவிலக்கணங்கள் பல்வேறுபட்டவையாகவும், கடுமையான வாதங்களோடு கூடியவையாகவும் உள்ளன. வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு பொருள் கொடுக்கக்கூடிய இச் சொல்லுக்கு வழமையாக அமைந்துள்ள எதிர்மறைத் தன்மையான பொருளைத் தவிர்ப்பதற்கும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆக்ஸ்போட் ஆங்கில அகரமுதலியின்படி, ஓரினத்தவரைப் பிற இனத்தவரினின்றும் உயர்ந்தவர்களாகவோ தாழ்ந்தவர்களாகவோ வேறுபடுத்திக் காணக்கூடிய வகையில், ஒவ்வொரு இனத்தினையும் சேர்ந்த எல்லா உறுப்பினரும், அந்தந்த இனத்துக்குரிய இயல்புகளையோ தகுதிகளையோ கொண்டுள்ளார்கள் என்னும் நம்பிக்கை அல்லது கருத்தியலே இனவாதம் ஆகும். மக்குவாரி அகரமுதலி, மனித இனங்கள் அவற்றின் பண்பாட்டைத் தீர்மானிக்கும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, தமது இனம் உயர்வானது, அது மற்றவர்களை ஆளும் உரிமை கொண்டது என்ற எண்ணத்தையும் கொண்டிருப்பதே இனவாதம் என்கிறது.
“ஆகவே இனவாதம் அல்லது வெறி என்பது தன் இனத்தவரை உயர்வாகவும் பிறரை தாழ்த்தியும் கூறுவதும்,அதன் அடிப்படையில் நடத்துவதே!!!!!!!!!”

 இந்த இனம் சார் தனித்துவ மேன்மைகள் [Racial Supremacy] உண்டா என பலர் அறிவியல்ரீதியாக ஆய்வு செய்து நிரூபிக்க முயன்றனர்.

சரி சாமுவேல் ஜார்ஜ் மார்ட்டன் யார் ?அவரும் இப்படி இன மேன்மைக் கருத்தாக்கம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டாரா? பரிணாமக் கொள்கை இனம்,பண்புகள் பற்றி என்ன கூறுகிறது?

அடுத்த பதிவில் பார்ப்போம்.............

நன்றி

23 comments:

 1. கடினமான விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளும்படி தருவது பாராட்டுக்குரியது.உங்கள் பதிகள் அனைத்துமே பயனுள்ள பதிவுகளா அமைந்திருக்கின்றன.

  ReplyDelete
 2. வாங்க சகோ முரளி நல்மா!,

  இந்த பரிணாமம் பற்றி எழுத ஆரம்பித்ததில் இருந்து கணிதம் எழுத நேரம் இல்லை என்னும் வருத்தம் உண்டு.

  அறிவியல் என்பதும் சரியாக அதன் பன்முகத் த்னமை சார்ந்தே விள்ங்க வேண்டும்.அறிவியல் கொள்கைகளின் வரலாறு அதன் எல்லைகள், மாணவர்கள்க்கு கற்பிக்கப் படுவது இல்லை.

  ஓவொரு அறிவியல் கொள்கைக்கும் ஒரு மாற்றுக் கொள்கையாவது இருந்து இருக்கும்.

  *******

  இனவாதம் என்பதும் மிக பழமையான கருத்தாகும்.உலக் முழுதும் இருந்தது,நம் நாட்டில் சாதி என்ற பெயர் கண்டது என்பதுதான் சரியான் கண்ணோட்டம்.

  மனிதர்களில் அறிவு,பண்பு போன்ற விடயங்களில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை அறிவியல்ரீதியாக்வும் நிரூபிக்கிறார்கள்.

  எனினும் இரு ம‌னித‌ர்க‌ளை ஒப்பீடு செய்வ‌தே அவர்க‌‌ளின் திற‌மைக‌ளை ச‌ரியாக வரையறுக்காது.

  ப‌ரிணாம்க் கொள்கை இன்வாதக் கொள்கையா? இப்ப‌டி இன‌ மேன்மை ஆய்வுக‌ள் ந‌ட்த்திய‌வ‌ர்க‌ள் வரலாற்றில் யார்? இதிலும் அக்கால்த்தில் இது இய‌ல்பாக‌ இருந்த‌து என்ப‌தையும் வ‌லியுறுத்துகிறேன்.

  ம‌னித‌ சமுதாய‌ம் கடந்த கால் த்வறுகளில் இருந்து பாடம் கற்று த‌ட்டுத் த‌டுமாறியே ச‌ரியான‌ பாதை நோக்கி செல்கிற‌து என்ப‌தே ந‌ம் க‌ருத்து.

  நன்றி!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 3. திரு சர்வாகன் அவர்களே வணக்கம்,
  நான் பலமுறை இங்கே வந்து கமெண்ட் போடலாம்னா என்னோட ஐபோன்ல வழி இல்லாம போயிடுச்சி!
  என்னதான் பரிணாமம் பற்றி எப்படி சொன்னாலும் நிங்கள் சொன்னது அதன் அடிப்படையை சொல்லாமல் சாட்சிகள் சொன்னால் மட்டும் எப்படியும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! வேணும்னா ஒரு முடிவு வரும் அது என்னனா
  பரிணாமம் வந்தது கடவுளின் காரணத்தால்தான்! என்று!
  என்னுடைய ஒரே சந்தேகம்
  நம்முடைய பல் இத்தனை காலம் உழக்கிறதே அது இன்னும் உறுதியாகத்தானே ஆகி இருக்கவேண்டும்! உங்களின் கூற்றுப்படி பல் மட்டுமல்ல எல்லா உறுப்புகளின் சக்தியும் இன்னேரம் அதிகரித்து இருக்கவேண்டும் குறைந்தபட்சம்! உங்கள் கணக்குபடி அதான் பல லட்சம் ஆண்டுகளாகி விட்டதே! இன்னும் எந்த மாற்றமும் வரலையே! சினிமாவில்தான் சொல்லிகொண்டிருக்கிறார்கள் Mutation பத்தி! என்னுடைய தாழ்மையான கருத்து இதுதான்! நீங்கள் சொல்லும் பரிணாம கருத்துகளுக்கு இன்னும் ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை! இனிமேலும் கிடைக்காது! அதுவரை உங்களால் படைப்பு கொள்கையை முழுமையாக மறுக்க முடியாது!

  ReplyDelete
  Replies
  1. சகோ இராஜரத்தினம்
   வாங்க நலமா,முதல் முறையாக பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.
   //நீங்கள் சொல்லும் பரிணாம கருத்துகளுக்கு இன்னும் ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை! இனிமேலும் கிடைக்காது!//

   அப்படி ஒன்றும் தெரியவில்லை சகோ.
   பரிணாமம் என்பதே ஆதாரங்களை விள்க்கும் கொள்கை.படிம ஆதாரங்களின் படி பூமியில் வேவ்வேறு காலங்களில் வெவேறு உயிரின‌ங்கள் வாழ்ந்த்னை,ஒரு கால் உயிரின‌ங்கள்,முந்தைய,பிந்தைய உயிரினங்க்களுடன் தோற்ற அமைப்பில் பல ஒற்றுமை,சில வேற்றுமை கொண்டிருந்தன. இத்னை விளக்க வந்ததுதான் பரிணாம்க் கொள்கை. ஒரு கால் கட்ட விலங்குகள் காலப் போக்கில் சில காரணிகளால் அடுத்த கால கட்ட விலங்குகளாக் மாறி இருக்கும் என்பதே பரிணாம் கொள்கை.

   சான்றுகளை விளக்குவதே அறிவியல்!!!!!!!!!!

   கொஞ்சம் பரிணாம‌ம் பற்றி அனைவருமே கற்கலாம்.ட்யூக் பல்கலைக் கழகத்தில் இணைய மூலம் இலவச பரிணாம கல்வி கற்பிக்கிறார்கள்.தாங்களும் இணைய வேண்டுகிறென்.அதனை தமிழாக்கம் செய்ய ஆவல் உண்டு.அதன் போது நிறைய விவாதிப்போம்.

   http://aatralarasau.blogspot.com/2012/07/blog-post_27.html
   ****
   படைப்புக் கொள்கையும் பல வகைப்படும் சகோ,

   ஆபிரஹாமியத்தின் 6 நாள் படைப்பில் இருந்து வழி நட்த்தப் பட்ட பரிணாமம் வரை உண்டு.

   வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கை கொண்ட பல பரிணாம ஆய்வாளர்கள் உண்டு.எ.கா கென்னத் மில்லர்.

   http://www.millerandlevine.com/km/

   பரிணாம‌ம் சான்றுகளை படைப்புக் கொள்கையும் விளக்கினால் ஆட்சேபனை இல்லை.

   ஆனால் இயற்கை விதிகள்க்கு உடப்ட்ட விடயம் மட்டுமே அறிவியலில் ஏற்கப்படும்

   நன்றி சகோ

   Delete
 4. வணக்கம் சகோ.சார்வாகன்

  //ஒரு கொள்கைக்கு மாற்றுக் கொள்கை வருகிறது எனில் ,முதல் கொள்கை தவறு என்று பொருள் அல்ல.மாற்றுக் கொள்கை முதல் கொள்கைகளை விட சான்றுகளுக்கு அதிகம் பொருந்துகிறது என்பதே சரியாகும்.//

  அருமையான‌ விள‌க்க‌ம் ச‌கோ. இதைத்தான் நானும் என் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் அடிக்க‌டி கூறுவ‌துண்டு. மின் விள‌க்கில் அதிக மின்சாரத்தை ஈர்க்கும் குண்டு ப‌ல்பு க‌ண்டுபிடித்த‌வ‌ரும் விஞ்ஞானிதான்,இன்றைய‌ ந‌வீன‌ குறைந்த‌ மின்சார‌த்தை ஈர்க்கும் மின் விள‌க்குக‌ளை க‌ண்டுபிடித்துத் த‌ந்த‌தும் விஞ்ஞானிதான்,இதில் முத‌ல் முறை த‌வ‌று என்று கூறுவ‌து எப்ப‌டி சரியில்லையோ,அதுபோல் தான் ப‌ரிணாம‌த்தைக் குறை கூறும் ம‌த‌வாதிக‌ளின் கூற்றும். மாற்ற‌த்தை விரும்பாத‌வ‌ர்களே ம‌த‌வாதிகள் ஒரு தவறை அச்சு மாறாமல் மதப்பற்றால் அப்படியே பின்பற்றக் கூடியவர்களால் எப்படி பரிணாமத்தை ஜீரணிக்க முடியும்? தொட‌ருங்க‌ள் ஆவ‌லாக‌ இருக்கின்றோம் ந‌ன்றி...

  இனிய‌வ‌ன்....

  ReplyDelete
  Replies
  1. சகோ இனியவன்

   மத்வாத சகோக்கள்தான் நமக்கு ஆகமும் ஊக்கமும் அளிக்கிறர்கள்.நாமும் அர்களும் ஒன்றே.நாணயத்தின் இரு பக்கங்கள்.ஆகவெ அவர்களை யாரும் திட்ட விடமாட்டேன்.நான் மட்டும் மறுப்பும்,விளக்கமும் அள்ளி அள்ளி கொடுப்பேன்!!!!!!!! ஹி ஹி ஹி

   நன்றி

   Delete
 5. முதன் முதலாக உங்கள் தளத்தை பார்வையிடுகிறேன். தெரிந்துகொள்ள நிறைய தகவல்கள் இருக்கின்றன. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ எடிசன்
   சும்மா அங்கே இங்கே இருப்பதை சுட்டு,தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம் அவ்வளவுதான் சகோ! நன்றி!!!!!!!!!!!!!!!!

   Delete
 6. //பரிணாமம் வந்தது கடவுளின் காரணத்தால்தான்//

  ராஜரத்தினம்,

  கடவுளே பரிணாமம் ஆகி ஏனைய உயிரினங்களா ஆகிட்டார்னு சொல்ல வர்றீங்களா!

  ReplyDelete
  Replies
  1. சகோ எடிசன்
   வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்பதையோ,இயற்கையே கடவுள்,அதில் நாமும் ஒரு பகுதி என்னும் நம்பிக்கைக்கும் நாத்திகத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
   ஆனால் இயற்கைக்கு வெளியே படைப்பு சக்தி என்பதை நான் ஏற்பது இல்லை. சகோ இராஜரத்தினம் எந்த மாதிரி படைப்புக் கொள்கை கொண்டுள்ளர் என்பது அறியாமல் அவரோடு முரண்பட வேண்டாமே!!

   நன்றி

   Delete
 7. ராஜரத்தினம் @ நம்முடைய பல் இத்தனை காலம் உழக்கிறதே அது இன்னும் உறுதியாகத்தானே ஆகி இருக்கவேண்டும்
  ///////////////////////
  தவறான கணிப்பு ஆதி காலத்தில் பற்கள் மிக உறுதியாக இருந்தாலும் அதற்க்கு பராமரிப்பு கிடையாது .
  மேலும் உணவு பழக்கம். வேட்டை ஆடியதை பச்சையாக உண்பது ஏவ்வளவு கடினம் யோசித்து பாருங்கள் .
  மேலும் பற்கள் உதிர்ந்துவிட்டால் அவன் பட்டினி கிடந்து சாகவேண்டும் .ஆனால் தற்போது வேகவைத்தோ அல்லது வேறு வழியிலோ நாம் மிருதுவான உணவுகளைத்தான் சாப்பிடுகிறோம் அதனால் பற்களின் உபயோகம் குறைந்து விட்டது என்பதுதான் உண்மை 32 பற்கள் கூட இப்போது அவசியம் இல்லை 24 பற்களே போதும் என்று சொல்கிறார்கள்
  . எப்படி உடை உடுத்திய பிறகு உடம்பில் ரோமங்கள் எல்லாம் உதிர்ந்து விட்டதோ அதே போல் தலையிலும் முடி தேவைபடாத காலம் வரும் ..ஹி ..ஹி ..இப்போதே பாதிபேரு அப்படிதான் இருக்கான்

  ReplyDelete
 8. வாங்க சகோ அஞ்சா சிங்கம்,
  சரியான் பெயர்.நம்து பற்களின் அள்வுகள் குறைந்து வருவதாக் பிரித்தனிய தகவல் கலைக் களஞ்சியம் கூறுகிறது.  http://www.britannica.com/EBchecked/topic/275670/human-evolution/250603/Reduction-in-tooth-size

  நன்றி

  ReplyDelete
 9. நன்றி சகோ! நான் நலம் இறை அருளால்! நான் நிச்சயம் உங்கள் கொள்கைகளை நிராகரிக்க தயாரில்லை! என் சந்தேகமே very simple! அந்த முதல் மனிதன் தோன்றியதன் அடிப்படை காரணம் என்ன? அது ஏன் படைப்பு கொள்கையாக இருக்கமுடியாது என்பதே! நன்றீ! மற்றபடி evolution exists but that follows some rule I believe! thata all! Thanks! you do really great Job! keep it up!

  ReplyDelete
 10. //கடவுளே பரிணாமம் ஆகி ஏனைய உயிரினங்களா ஆகிட்டார்னு சொல்ல வர்றீங்களா!
  //
  நான் பரிணாம கொள்கையை நிராகரிக்கவில்லை! அது ஒரு குறிப்பிட்ட சட்ட திட்டத்தோடே நடப்பதாக நான் பார்க்கிறேன் நன்றீ! எடிசன் சகோ!

  வணக்கம் அஞ்சா சிங்கம் அவர்களே!
  பல்லோட தேவை குறைஞ்சுபோச்சுன்றதை ஏற்கிறேன்! ஆனால் நம் உடல் இன்னும் வலிமையாகதானே ஆகியிருக்க வேணும் இத்தனை ஆண்டுகால போராட்டத்தில்! ஆனாலும் எங்க அப்பாவை விட எனக்கு குறைவானதுனு எங்க அப்பா எப்பவும் சொல்வார்! இது கூட என் எண்ணம்தான்! நன்றீ!

  ReplyDelete
 11. சகோ இராஜரத்னம்,

  உங்களின் கருத்தோடு உடன்படுகிறேன்.இயற்கைக்கு மேம்பட்ட சக்தி இருப்பதன் சான்றுகள் இல்லை.ஆகவே அது பற்றி தெரியாது.கருத்து சொல்ல முடியாது!!!!

  அறிவியல் சான்றுகளை மட்டுமே விளக்கும் சார்பற்ற கொள்கை.

  இயற்கையையும்,இயற்கைத் தேர்வை படைத்து,காத்து,வழிநடத்துபவர்தான் என் கடவுள் எனில் நான் எதுவும் சொல்ல இயலாது.

  இன்றைய கால்கட்டத்தில் இருந்து கடந்த கால சூழல் அறிய முயல்கிறோம்,அத்னைக் கொண்டு எதிர்கால் சூழல் கணிக்கிறோம்.அவ்வளவுதான்.

  கிடைக்கும் சான்றுகள் மாறினால் விளக்கங்களும் மாறிவிடும்.இதற்கு பரிணாமமும் விதி விலக்கு அல்ல.இதுவரை அப்படி நடக்கவில்லை என்பதை மட்டுமே மிக தாழ்மையாக கூறுகிறோம் சகோ!!!!

  நன்றி

  ReplyDelete
 12. நண்பரே அருமையான பதிவு,

  அறிவியல் கொள்கைகளை புரிவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆங்கிலம் என்றாலும் தமிழில் என்றாலும், அதற்கு உண்டான எழுத்து நடை, அதற்கு உண்டான சொற்கள் எல்லாமே கடினம் தான். வறட்சியான ஒரு பாடமாகத்தான் இருக்கும். அது புரிய பிரபலமயடைய, எளிமையான சாதாரண நடையில் சொன்னால் போதும்.

  அறிவியல் மற்றும் அதன் கொள்கைகளை, அறிவியல் துறை சாரோதோர், சுவராஸ்யமாகத்தான் படிப்பதற்கு ஒரு சிறந்த வழி, அறிவியலாளர்களின் சொந்த வாழ்க்கையை படிப்பது அவர்களின் சர்ச்சைகளை படிப்பது. அந்த வகையில் நண்பர் நந்தவனத்தான் உங்களுக்கும் நடந்த விவாதம் நல்ல துவக்கம், மேலும் மேலும் அறிய தூண்டும், சர்ச்சை என்று வந்துவிட்டால், கடினமானவைகள் எளிதாக விளக்க வைப்பார்கள், புரிந்துகொள்ள் முடியும்.

  வரவர பதிவுகளில் லிங்குகள் மூலம் தேடலகள் அதிகமாகி தேடும் காரணமே தெரியாமல் போய் விடுகிறது. போதும் என்ற மனம் இருந்தால் தடுத்து விடலாம்.
  ////////
  "மனப்பாடம் செய்து புதிர் தீர்த்தல்" என்ற கல்வி முறையே பன்முகப் பார்வையை அழித்து பல சமூக‌ பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது என்றே நாம் கூறுகிறோம்.
  ///////////
  நமது கல்விமுறை, இப்படிதான் இருக்கிறது. முன்னர் சிலரும், குறிப்பிட்ட சமூகமும் செய்துகொண்டிருக்கும்போது குறையாக தெரியவில்லை. அதை பின்பற்றி அனைவரும் சமூக முறையில் முன்னேற துடிக்கும்போது குறை சொல்கிறார்கள். ஐ.ஐ.டி சேரும் மாணவரும் கோழிபண்னை கோச்சிங்க் கிளாஸால் மனப்பாடம் செய்துதான் சேருகிறான். அதையே நாமக்கல் கோழிபண்ணைகள் செய்து அண்ணா பல்கலைகழகத்தில் சேர்ந்தால் சரியில்லை என்கிறார்கள். இதை மாற்ற வேண்டும் என்றால், எல்லா தளத்திலும் ஒரே நேரத்தில் நல்ல மாற்று முறையில் மாற்றம் வேண்டும்

  ஓன்றை define செய்யமுடியுமா? என்றால் முடியாது, அதனால் தான் அந்த ஒன்றை வைத்தே தத்துவம் வந்துவிடுகிறது. இனம் என்பதை வரையறுக்க முடியுமா? என்றால் விளக்கங்கள் தரலாம். உதாராணதிற்கு தமிழனை வரையறுக்க முடியுமா? அதை வைத்து எத்தனை சர்ச்சைகள். இனத்தை வரையறுக்க நினைத்தால் முடிவில் தனிமனிதன் தான் வந்து நிற்பான்- LOL ))))))))

  http://answers.yahoo.com/question/index?qid=20090225174048AAtahhb
  1.) Race is a social constructions where people with similar somatic and pyhsiological features are lumped into categories
  2.) race is most typically reckoned by skin colour, but can also used nose size ( a feature commonly used in the carribean)
  3.) there are no set number of races because race is an arbitrary concept. Black and white people are not perfectly seperated, and the genetic difference can be greater between members of a race thn between members of different races - Race is a social construction veiled as a biological one
  4.) Black, white, Mulatto

  நன்றி தொடருங்கள்.

  ReplyDelete
 13. வாங்க சகோ நரேன்
  // சர்ச்சை என்று வந்துவிட்டால், கடினமானவைகள் எளிதாக விளக்க வைப்பார்கள், புரிந்துகொள்ள் முடியும். //
  பரிணாமத்தின் நிரூபணம் என்பதை சர்ச்சை என எடுத்து பரிணாம் மறுப்பாளர்களும் ஒத்துழைத்தால் சில பதிவுகள்,அதற்கு எதிர் பதிவுகள்,பின்னூட்டங்கள் என நிச்சயம் தமிழ்ப் பதிவுலகில் ஒரு புரிதல் ஏற்படுத்த முடியும்.பரிணாம் எதிர்ப்பு குழுவினர் உலக முழுதுமே ஆய்வுலக ஒழுக்க விழுமியங்களுக்கு ஏற்றபடி நடப்பது இல்லை.
  ஒரு ஆய்வுக் கட்டுரியில் சில பகுதிகளை மட்டும் எடுத்து கருத்து திரிப்பு செய்வதும்,பிறகு அதனை சுத்தமாக மறந்து வேறு தலைப்புக்கு தாவுவதும்தான் வழக்கம்.


  பெரும்பாலான‌ விவாதங்கள் தனிப்பட்ட முறையில் செல்வதும் நாகரிகமற்ற செயலே.கோல்ட் பரிணம செயலாக்கத்தில் இய்ற்கைத் தேர்வுக்கு மிக குறைந்த இடம் கொடுப்பதும் அதன் மீதான விவாதங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட தாக்குதல்களக திரும்பியது.
  எனினும் அறிவியல் தனது பன்முகத் தன்மையை பாதுகாப்பதால் தவறான கருத்துகள் கால்ப்போக்கில் தவிர்க்கப் படுகின்றன.
  //வரவர பதிவுகளில் லிங்குகள் மூலம் தேடலகள் அதிகமாகி தேடும் காரணமே தெரியாமல் போய் விடுகிறது. போதும் என்ற மனம் இருந்தால் தடுத்து விடலாம்.//

  அப்படியா உடனே கவன‌த்தில் கொள்வோம்.நன்றி!
  // ஐ.ஐ.டி சேரும் மாணவரும் கோழிபண்னை கோச்சிங்க் கிளாஸால் மனப்பாடம் செய்துதான் சேருகிறான். அதையே நாமக்கல் கோழிபண்ணைகள் செய்து அண்ணா பல்கலைகழகத்தில் சேர்ந்தால் சரியில்லை என்கிறார்கள்.//

  மிக சரி.இதனால்தான் ஐ ஐ டி மாணவர்களில் பலர் பொருளாதாரம் சார் மென்பொருள் பணிகளில்தான் அதிகம் இருக்கிறார்கள்.ஃபேஸ் புக்கில் போன்ற இடங்களில் பணியாற்ற எதற்கு பொறியியல் பட்டம்???

  //இனம் என்பதை வரையறுக்க முடியுமா? என்றால் விளக்கங்கள் தரலாம். உதாராணதிற்கு தமிழனை வரையறுக்க முடியுமா? அதை வைத்து எத்தனை சர்ச்சைகள். இனத்தை வரையறுக்க நினைத்தால் முடிவில் தனிமனிதன் தான் வந்து நிற்பான்- LOL ))))))))//
  சகோ ஜீனோம் அடிப்படையில் இனம் கண்டுபிடிக்க முடியுமா? வேறு என்ன கூற இயலும்? என்ற கேள்விக்கும் பதில் இப்பதிவில் வரும்.

  பிரச்சினைக்கு உரிய விடயம் என ஒதுங்கிப் போகாமல் அது குறித்தெ தெளிவான பன்முக விள்க்கங்களையும் அறிந்தாலே குழப்பம் தீர்ந்து விடும்.

  நன்றி!!!!!!!!!!!!!

  ReplyDelete
 14. மன்னிக்கவும். இப்போதுதான் பின்னூட்டமிடவே நேரம் கிடைத்தது.

  விவாதங்கள் தனிப்பட்ட முறையில் செல்வது தவறுதான். கோல்ட் எத்தனை சின்னவீடு வைத்திருந்தார் என ஆராய்ச்சி பண்ணினால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் அவர் எம்புட்டு அறிவியலை குழப்பினார் என அறிந்து கண்டிப்பதில் தவறு இல்லை.

  இயற்கை தேர்வினை அவர் எதிர்த்தால்தான் அவருக்கு எதிராளிகள் அதிகமாகிவிட்டார்கள் எனில் என்ன அர்த்தம் ? அப்படியெனில் மதவாதிகளுக்கும் பரிணமவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? முமின்கள் குரானை தூக்கி பிடிப்பது போல் பரிணாமவாதிகள் இயற்கை தேர்வினை தாங்குகிறார்களா? மாற்றுக்கொள்கையினை ஒத்துக்கொள்ளதாவர் எப்படி அறிவியலர் என ஒத்துக்கொள்வது. வேணும்னா இவர்களை பரிணம மதவாதிகள் என விட்டுவிடலாம்!

  ReplyDelete
 15. வாஙக சகோ நந்தவனத்தான்,
  //விவாதங்கள் தனிப்பட்ட முறையில் செல்வது தவறுதான். கோல்ட் எத்தனை சின்னவீடு வைத்திருந்தார் என ஆராய்ச்சி பண்ணினால் நிச்சயம் கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் அவர் எம்புட்டு அறிவியலை குழப்பினார் என அறிந்து கண்டிப்பதில் தவறு இல்லை//

  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.நியோ டார்வினிஸ்ட்கள் கோல்ட் குட்டையை குழப்புவதாக்வே நினைத்தனர்.

  ஆனால் பாருங்கள்.ஒரு நிகழ்வுக்கு இரு விள்க்கங்கள் பொருந்தும் போது மிகச் சரியாக நிரூபிப்பது மிக கடினம்.ஒரு வேளை காலம் பதில் சொல்லாம்.

  இபோதைய பரிணாம‌ அறிவியலில் கோல்ட்டின் நிறுத்திய நிலைத் தனமை மட்டுமே முழு மன‌தோடு ஏற்கப் படுகிறது.பிற கொள்கைகள் அப்படி அல்ல!!!!!!!!!!!.

  //இயற்கை தேர்வினை அவர் எதிர்த்தால்தான் அவருக்கு எதிராளிகள் அதிகமாகிவிட்டார்கள் எனில் என்ன அர்த்தம் ? அப்படியெனில் மதவாதிகளுக்கும் பரிணமவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? முமின்கள் குரானை தூக்கி பிடிப்பது போல் பரிணாமவாதிகள் இயற்கை தேர்வினை தாங்குகிறார்களா? மாற்றுக்கொள்கையினை ஒத்துக்கொள்ளதாவர் எப்படி அறிவியலர் என ஒத்துக்கொள்வது. வேணும்னா இவர்களை பரிணம மதவாதிகள் என விட்டுவிடலாம்!//

  ஆம் ஆம் ஆம் இதுவும் வருத்தத்திற்கு உரிய கசப்பான உண்மை சகோ!


  கொள்கை சார் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வராத போது தனிப்பட்ட ரீதியாக திசை திரும்புவதும் இயல்பு.

  நம் நடந்ததை ஆவணப் படுத்துகிறோம் ஆகவே விட்டு விட முடியாது.நாம் எதனையும் புனிதப் படுத்த விரும்புவது இல்லை.

  இது போன்ற பல வரலாற்று நிகழ்வுகள் அறிவியலில் உண்டு!!

  பெரும்பாலான அரசியல்,சமூக நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் !!!!!!!!

  போட்டிகள்,போராட்டங்கள், முரண்கள் மனிதர்கள் மட்டுமல்ல உயிரின‌ங்கள் அனைத்துக்குமே இயல்பான ஒன்றே!

  நன்றி!!!!!

  ReplyDelete
 16. Some more information on dawkins vs Gould fight

  http://en.wikipedia.org/wiki/Dawkins_vs._Gould

  http://www.physicsforums.com/showthread.php?t=10390

  http://www.samizdata.net/blog/archives/005150.html

  http://www.r21.org/2002/05/will-dawkins-succeed-where-gou.html

  ReplyDelete
 17. சகோ நந்த வனத்தான்

  கோல்ட் ,டேனியல் டென்னட் டிஷ்யூம் டிஷ்யூம்

  Darwinian Fundamentalism
  JUNE 12, 1997
  Stephen Jay Gould
  http://www.nybooks.com/articles/archives/1997/jun/12/darwinian-fundamentalism/?page=1

  "A movement of strict constructionism, a self-styled form of Darwinian fundamentalism, has risen to some prominence in a variety of fields, from the English biological heartland of John Maynard Smith to the uncompromising ideology (albeit in graceful prose) of his compatriot Richard Dawkins, to the equally narrow and more ponderous writing of the American philosopher Daniel Dennett (who entitled his latest book Darwin’s Dangerous Idea).1 Moreover, a larger group of strict constructionists are now engaged in an almost mordantly self-conscious effort to “revolutionize” the study of human behavior along a Darwinian straight and narrow under the name of “evolutionary psychology.”
  ****
  Darwinian Fundamentalism": An Exchange

  by Daniel Dennett

  http://www.stephenjaygould.org/reviews/dennett_exchange.html

  "Let me say a word about "Darwinian fundamentalism." Nonsense. I do not espouse the preposterous views Gould attributes to this mythic creed."

  ReplyDelete
 18. முதலில் தொடுப்புகளுக்கு நன்றி!

  முதலாவது தொடுப்பினை முன்பே கண்டிருக்கிறேன். மிகவும் நீளளளளமான கட்டுரை.ஒரு பக்கத்தினை மட்டும்தான் படித்தேன். கோல்டும் சும்மா சாதாரணமான ஆளு இல்லை போலிருக்கிறதே. நன்றாக வம்பு சண்டை வலிக்கிறார். ஆனால் இப்போது அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிய முக்கய தேவை நன்றாக பாலிடிக்ஸ் பண்ணுவதுதான். இந்தியா மாதிரி லஞ்சம் அரசியல் தொடர்பு எல்லாம் அதிகமில்லை. ஆனால் கோஷ்டி சேர்ப்பது மிகவும் முக்கயம்.இதை ஸ்டைலாக நெட்வெர்க்கிங் என்பார்கள்! இதைத்தான் இரு கோஷ்டிகளும் செய்கிதார்கள் என நினைக்கிறேன்.

  Tuffts-ம் ஹார்வேர்டும் அருகில் தானிருக்கின்றன. எதுக்கு கோல்டும் டேனியேலும் பரஸ்பரம் கடிதம் பரிமாறிக்கொண்டார்கள் என தெரியல. பேசாம கத்தி எடுத்துட்டு போய் சண்டையாவது போட்டிருக்கலாம்!:-)

  மேலும் சில இணைய பக்களை புரட்டியதில் நான் முன்பு கேட்டது போல ஐடியா திருடராக கோல்ட் சித்திரிக்கப்படவில்லை என்பதினை அறிந்தேன். ஆனால் அவர் அடுத்த விஞ்ஞானிகளின் கருத்துகளை புரட்டி பேசுவதும், கணித முறைகேடுகள் மூலம் ஆராய்ச்சி முடிவுகளை திருத்துவதுமான மெல்லமாரித்தனத்தை செய்துவந்ததாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுவே அவர் ஒரு வெள்ளையரல்லாத குடியேறியாக அதாவது இந்திய அல்லது சீன ஆராய்ச்சியாளராக இருந்தால் அவரை தூக்கி கடாசியிருப்பார்கள். ஆனால் வெள்ளையராதால் அவருக்கு ஒன்றும் நேரவில்லை. எதிரிகள் விடயத்தில் அவரது நடவடிக்கைகள் ஏற்றகொள்ளத்தக்க வகையில் இல்லை. இருப்பினும் அவரது தியரிகள் நிச்சயமாக பரிணாமவியல் பெரும்தாக்கத்தினை ஏற்படுத்தின என்பதை உணர்கிறேன்!

  ReplyDelete
 19. வானக்க சகோ நந்தவனத்தான்,
  //எதிரிகள் விடயத்தில் அவரது நடவடிக்கைகள் ஏற்றகொள்ளத்தக்க வகையில் இல்லை//

  அப்பாடா சரியா பாயிண்டைப் புடிச்சிட்டீங்க!. கோல்ட் ஒரு ஊமைக் குசும்பன்தான்.

  அதாவது அவ்ருடைய நிறுத்திய நிலைத்தன்மைக் கோட்பாடு ஏற்கப் பட்டதும்,கேம்பிரியன் படிமங்களுக்கான் விளக்கம் ஏற்கப் பட்டதும் அதனை பரிணாமத்தின் முழுமுதல் காரணியாக ஆக்க முயன்றார் என்பதே உண்மை.அதில் தோல்வியே!.

  கோல்ட்டின் விள்க்கங்கள் தவறென்று நிரூபிக்கப் பட முடியாது.அதற்காக இது மட்டுமே சரி என்றும் சொல்ல முடியாது.இயற்கைத் தேர்வு விள்க்குவதை இவர் அப்படி அல்ல இப்புடீ என்பார்.


  இயற்கைத் தேர்வுக்காக உழைத்த அறிவியலாளர்களின் 100 வருட உழைப்பை அனைத்தையும் தானே எடுக்க வேண்டும் என்பதே முரண்பாடுகளுக்கு வித்திட்டது.

  ஆரம்பித்தது கோல்ட்தான், அதுவும் டார்வின் சொன்னதுக்கு மறுப்பு என்ற பாணியில் எழுதவும் டார்வினுக்கு பின்னால் பல மாற்றங்கள் எவ்வளவோ பேர் செய்து இருக்கிறோம் அதை விவாதிக்கவும் என்றுதான் ஆரம்பித்தன.
  //இருப்பினும் அவரது தியரிகள் நிச்சயமாக பரிணாமவியல் பெரும்தாக்கத்தினை ஏற்படுத்தின என்பதை உணர்கிறேன்//

  His critics also accept this fact!!!!!!!!!!!

  பாருங்கள் கேம்பிரியன் படிம்ங்களுக்கான் விள்க்கத்தை வொன்டன்ஃபுல் லைஃப் என்னும் புத்த்கம் எழுதினார் கோல்ட்.டாக்கின்ஸ் அத்னை பாராட்டுகிறார் பாருங்கள்

  http://lucite.org/lucite/archive/atheism_-_dawkins_articles/wonderful%20life%20by%20stephen%20j.pdf
  *****************

  மார்ட்டன் அளவீடுகளில் தவறு செய்ததாக கோல்ட் கூறியது தவறே.எனினும் அந்த கபால அளவீடுகள் மூலம் அறிவுக்கு தொடர்பு படுத்த முடியாது என மட்டுமே சொல்லி இருக்க்லாம்.


  ஆனால் இதுதான் நடந்தது!!!!!!!!!

  யார் செய்தாலும் தவறு தவறுதான்!!

  " நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

  ReplyDelete