Saturday, August 18, 2012

விதைகளுக்கு விடுதலை வேண்டும் : காணொளி


வணக்கம் நண்பர்களே,

இப்பதிவில் நாம் பார்த்த ஒரு காணொளியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இயற்கை எபோதும் எதிலும் பல்வேறு வகைகளை உருவாக்குவதிலும்,அத்னை சூழலுக்கு ஏற்ப மாற்றுவதிலும் ஓய்வடையாமல் பணியாற்றுகிறது.

விதைகள் என்னப்படும் தாவரங்களின் உயிர் வித்துக்கள் பல் கலாச்சார விழுமியங்களில் முக்கிய ப்ங்கு ஆற்றுகிறது. நம் ஊரில் முளைப்பாரி திருவிழா போல் பல   நாடு, இனங்களில் இன்னும் விதைகளுக்கு மரியாதை செய்யும் விழுமியங்கள் உண்டு.

மனித விவசாயம் செய்ய ஆரபித்தது சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன் என கணக்கிடுகிறார்கள்.  விவசாயமே மனிதன்,சார்ந்த வில்ங்குக‌ளின் உணவுக்கான  குறிப்பிட்ட  பயிர்களை அதிகம் பயிரிட்டே வந்த்னர்.இது இயற்கைக்கு விரோதம் என்றாலும் இது எதிர்விளைவுகளை அதிகம் தோற்றுவிக்கவில்லை.

பயிர் வகைகளின் விதைகளையும் பக்குவப் ப்டுத்த், அடுத்து பயன்படுத்த என்றே பல பாரம்பரிய வழிவகைகளையும் நடைமுறை பரிசோத்னைகளில் கண்டறிந்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
 
ஆனால் கடந்த 100  ஆண்டுகளாக ,வேதியியல்,மூலக்கூறு அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றம் இயற்கைக்கு மிக  விரோதமான ஒரு செய்லை செய்ய எத்தனிக்கிறது. செயற்கையாக ம்ரபணு மாற்றப்பட்ட விதைகளை   இயற்கை விதைகளுக்கு மாற்றாக் கொண்டுவருவது இக்கணொளியில் விள்க்கப் படுகிறது.

இந்த செயற்கை விதைகள் ,அடுத்த த்லைமுறை விதைகளை உருவாக்காது.ஆகவே விதைகளுக்கு அந்த தயாரிப்பு நிறுவனத்திடமே வங்க வேண்டும்.

இந்த விதைகள் உலக முழுதும் பயன்படுத்தும் படி  நிலத்தின் தன்மை அறியாமல் தயாரிக்கப் படுவதால்,பல் இடங்களில் பயிர் உற்பத்தி நாசமான‌து.பல்வேறுவகை பயிர்க்ள் இல்லாமல் போய்விடும்.

நில‌ம் த்ன‌து ச‌க்தியை இழ‌க்க‌ ஆர‌ம்பிக்கும்.நிலத்தை பண்படுத்தும் ப‌ல் நுண்ணுயிர்க‌ளும் மடியும்.செய‌ற்கை விதை முறை ப‌ல் இட‌ங்க‌ளில் தோல்வி அடைந்து ப‌ல் விவ‌சாயிக‌ளை ஏழையாக்கிய‌து.

ஆக்வே இயற்கை விதிகளை ஒழிக்க முயலும் செயற்கை விதை நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். செய‌ற்கை விதைக‌ள் என்ப‌து உண‌வு த‌யாரிப்பையும் கைப்ப‌ற்ற‌ முய‌லும் பெரும் நிறுவ‌ன‌ங்க‌ளின் ச‌தியே!!

உல‌கின் ஒவ்வொரு இட‌த்தின் சூழ‌லுக்கு ஏற்ற‌ ப‌யிர்வ‌கைக‌ளையே,இய‌ற்கை விதைக‌ள் மூல‌ம்,இய‌ற்கை விவ‌சாய‌ம் செய்வ‌தே  நோய்க‌ள‌ற்ற‌ ச‌மூக‌த்தை உருவாக்கும். இய‌ற்கை விவ‌சாய‌த்தில் அதிக‌ம் உற்ப‌த்தி செய்ய‌ முடியாது என்னும் க‌ருத்து ஆய்வு ரீதியாக‌ ப‌ரிசோதிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

விவசாய நிலங்களை வீட்டு மனைகள் ஆக்க தடை விதிக்க வேண்டும்.வீட்டில் கூட இடம் இருப்பவர்கள் ஓவ்வொருவரும் ஒரு செடியாவது வைத்து பராமரிக்க வேண்டும். நம் வீட்டிலும் அடியேன் இரண்டு தக்காளி செடிவைத்து  பராமரித்ததில் தக்காளி கிடைக்க ஆரம்பித்து விட்டது.மிகவும் மகிழ்ச்சியாக் இருந்தது!

இய்ற்கையை போற்றுவோம்!
காணொளி பாருங்க‌ள்


நன்றி!!!!!!!!!!!!!!!!!

13 comments:

 1. மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM)பருத்தி இந்தியாவில் அதிக லாபமுடையதாக இருப்பதாக போன மாதம் PNAS இதழில் வந்த ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. இது மிகவும் உயர்தர அறிவியல் இதழ் என்பது குறிப்பிடத்தகுந்தது.
  http://www.pnas.org/content/109/29/11652.full

  GM பயர்கள் இயற்கையான பயிர்கள் அல்லதான். ஆனால் இந்த முறை பயிரிடல் செயற்கை ரசாயன முறைகளைவிட மேம்பட்டது. செயற்கை ரசாயனங்கள் கான்சர் மற்றும் பிறப்பு குறைபாடுகளை உருவாக்க வல்லன. ரசாயனங்களின் கட்டுப்பாடற்ற உபயோகமே இந்தியாவில் நடக்கிறது. ஆதலாம் பயிர்களை GM முறையில் பூச்சிகளால் பாதிக்காத அல்லது புரத பூச்சிக்கொல்லிகளை தானே உற்பத்தி செய்யும் வகையில் மாற்றி அமைப்பது நல்லது மேலும் இம்முறையில் அதிக சத்துள்ளனவாக GM மூலம் மாற்றலாம். உதாரணம் தங்க அரிசி- விட்டமின் ஏ அதிகமுள்ளது. பிராய்லர் கோழி மாதிரி பெரிய, அதிக உற்பத்தி செய்யும் பயிர்களை உருவாக்கலாம்.

  நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்துதான் இந்த விதைகள் உருவாக்குகின்றன. இதனால்தான் இவைகளை மீண்டும் வளராத வகையில் உருவாக்குகிறார்கள். போட்ட காசினை எடுக்க வேண்டுமே! ஆதலாம் இவற்றை காபிரைட் பெற்ற இசை சிடி மாதிரி மறுபடியும் அடுத்தவர் உற்பத்தி செய்ய இயலாத வண்ணம் உருவாக்குகிறார்கள். ஆனால் இம்மாதிரி விதைகள் அரசு ஆராய்ச்சி நிலையங்களில் உருவாக்கப்படும் போது மீண்டும் வளரும் வண்ணம் உருவாக்கலாம். தங்க அரிசி மீண்டும் விதை நெல் மூலம் வளரும். ஆனால் நமது நாட்டில் இது போன்று நடக்காது. காசு வாங்கி விட்டு நாம் ஓட்டு போடுவோம். அப்புறம் வர்றவன் மட்டும் சும்மாவா இருப்பான். ஒரு விஞ்ஞானி பதவிக்கு 25 லட்சம் லஞ்சம். திறமையானவர்கள் அயல்நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் ஓடிவிடுகிறார்கள்.

  தனியார் நிறுவனங்களுக்கு தகுந்த கட்டுப்பாடு, அரசு ஆராய்ச்சி போன்றவையே இதற்கு தீர்வுகளே ஒழிய GM பயிரே வேணாம் என்பது புத்திசாலிதனம் அல்ல.

  ReplyDelete
 2. வாங்க சகோ நந்தவனத்தான்.

  நல்ல தகவல்கள். பி.டி பருத்தி விதைகள் விலை அதிக்மாக் இருப்பினும் குறைந்த பூச்சிக் கொல்லி,அதிக மகசூல் என்பதில் சரிக்கட்டுகிறது என்பதையும், இப்போது இதுதான் இந்தியாவில் அதிகம் பயிரிடப் படுகிறது என்பதையும் சான்றுகள் மூலம் ஆய்வாளர்கள் விள்க்கினர்.
  இது ந‌ல்ல‌ விட‌ய‌ம் என்றாலும் இன்னும் ப‌ல‌ சிந்திக்க மடுமே வைக்கின்றன..

  1.விதைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.விதை விலை அதிகரிப்பு கட்டுக்குள் வைக்க இயலுமா?உலகளாவிய நிறுவனம் என்பதால் நம் நாட்டு ஆள்பவர்களைக்கூட கட்டுப் படுத்துவார்கள். சுதேசி முறையில் இப்படி யாரும் உருவாக்காமலும் பார்த்துக் கொள்வார்கள் என்பதையும் சொல்ல வேண்டியது இல்லை.

  2. மாறும் அரசியல் சூழலில் விதைகள் கிடைகாமல் போனால் திடிரென இய்ற்கை முறைக்கு நிலத்தை மாற்றினால் வரும் விளைவுகள் என்ன?

  3.இந்த‌ விதைக‌ள் இன்னும் ப‌ல‌வித சூழ‌ல் சார் ப‌ரிசோத‌னைகளுக்கும் உட்ப‌டுத்த‌‌ப‌டும்.இவ்விதைப் பயிர்களை தாக்கும் வண்ணம் பூச்சிகளும் பரிணாம் மாற்றம் அடையும். புதிய‌வ‌கை பூச்சி தாக்கினால் அத‌ற்கேற்ற‌ப‌டி விதையை செயற்கை ப‌‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி அடைய‌ வைக்க‌ வேண்டும்.இது ஒரு தொட‌ர் ஆயுத‌ப் போராட்ட‌ம் ஆக‌வே மாறும்.

  இதில் தொட‌ர்ந்து வெற்றி கிட்ட‌ வெண்டும்.

  4.இய‌ற்கை முறையில் இப்ப‌டி புதிய‌ வ‌கைக‌ளை அதிக‌ செல்வின்றி செய்ய‌ முடியாதா?[ஹி ஹி நாம் இது குறித்து ஒன்றும் அறியோம் ]

  அனைத்துக்கும் கால‌மே ப‌தில் சொல்லும்!

  ந‌ன்றி  ReplyDelete

 3. உணவுப் பயிர்களில் செயற்கை விதைக்ள் மூலம் உருவாக்குவதை மனிதர்கள் & சார் விலங்குகள் உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள் மிக சரியாக அறியப் பட வேண்டும்.இதுதான் மிக முக்கியம்!

  http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/gmfood.shtml

  நன்றி

  ReplyDelete
 4. //1.விதைகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.விதை விலை அதிகரிப்பு கட்டுக்குள் வைக்க இயலுமா?உலகளாவிய நிறுவனம் என்பதால் நம் நாட்டு ஆள்பவர்களைக்கூட கட்டுப் படுத்துவார்கள். சுதேசி முறையில் இப்படி யாரும் உருவாக்காமலும் பார்த்துக் கொள்வார்கள் என்பதையும் சொல்ல வேண்டியது இல்லை.//

  அவை தனியார் நிறுவனங்கள். அவை லாபம் சம்பாதிக்க எல்லாவித முறைகளையும் கையாளுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது நமது அரசுகள் கையில் உள்ளது. மேலும் அரசு நினைத்தால் இம்முறைகளை நம்நாட்டிலேயே செய்யலாம். இதை சீனா செய்கிறது. அவர்கள் நம்மைவிட எல்லா அறிவியல் துறைகளில் பத்தடி முன்னாடி உள்ளார்கள். இதற்கு காரணம் அமெரிக்கா முதலான நாடுகளில் பயின்ற விஞ்ஞானிகளுக்கு வேலையில் சீனாவில் முன்னுரிமை, இந்தியாவில் வேலைதர அவர்களிடம் லஞ்சம் கேட்கிறார்கள்!

  //2. மாறும் அரசியல் சூழலில் விதைகள் கிடைகாமல் போனால் திடிரென இயற்கை முறைக்கு நிலத்தை மாற்றினால் வரும் விளைவுகள் என்ன?///

  விளைவுகள் ஏதும் இருக்காது. இவ்விதைகள் நிலத்தை ஏதும் பாதிப்பதில்லை.ஆனால் பூச்சிகள் இருப்பின் கவனம் தேவை.

  //3.இந்த‌ விதைக‌ள் இன்னும் ப‌ல‌வித சூழ‌ல் சார் ப‌ரிசோத‌னைகளுக்கும் உட்ப‌டுத்த‌‌ப‌டும்.இவ்விதைப் பயிர்களை தாக்கும் வண்ணம் பூச்சிகளும் பரிணாம் மாற்றம் அடையும். புதிய‌வ‌கை பூச்சி தாக்கினால் அத‌ற்கேற்ற‌ப‌டி விதையை செயற்கை ப‌‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி அடைய‌ வைக்க‌ வேண்டும்.இது ஒரு தொட‌ர் ஆயுத‌ப் போராட்ட‌ம் ஆக‌வே மாறும்.
  இதில் தொட‌ர்ந்து வெற்றி கிட்ட‌ வெண்டும்.//

  உண்மை. இது நாம் தடுப்பு மருந்து- ஆண்டிபயோடிக் சாப்பிடுவது போலத்தான். எந்த ஒரு உயிர் கொல்லி முறைக்கும் தடுப்பு உயிரிகள் உருவாக்கூடும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை வெல்லும் பூச்சிகள் உருவாவது உண்டு. தொடர் ஆராய்ச்சி தேவை.
  ஆனாலும் நமக்கு அதிஷ்டம் இருப்பின் இந்த GM பயிர்கள் மட்டும் பயிரிடப்படும் பகுதிகளில் பூச்சியினங்களே வளர முடியாமல் அழிந்தும் போகலாம் அப்படி அழிந்தால் அங்கு விவசாயம் மீண்டும் இயற்கை முறைக்கு திரும்பலாம்.

  //4.இய‌ற்கை முறையில் இப்ப‌டி புதிய‌ வ‌கைக‌ளை அதிக‌ செல்வின்றி செய்ய‌ முடியாதா?[ஹி ஹி நாம் இது குறித்து ஒன்றும் அறியோம் ]//

  இவற்றை ஏற்கனவே பசுமை புரட்சி நேரத்தில் முயற்சித்திருப்பார்கள். பசுமை புரட்சி காலத்தில் ஜெனடிக் இன்ஜினியரிங் வளர இல்லை. ஆதலால் இயற்கை ஒட்டு முறைகள் மூலம் புதிய வகைகள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிதான் இப்போதைய GM பயிர்கள்.

  நன்றி.

  ReplyDelete
 5. //இயற்கை விவசாயம் செய்வதே நோய்களற்ற சமுதாயத்தை உருவாக்கும்//

  //விவசாய மனைகளை வீட்டு மனைகளாக்கத் தடை விதிக்க வேண்டும்//

  இது போன்ற நல்ல ‘இடித்துரை’களைத் திரட்டிகளில் படிக்க நேரும் அரசியல்வாதிகளோ, நிர்வாகத் துறையினரோ அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றால் ஏதேனும் பயன் விளையலாம்.

  யார் செய்யப் போகிறார்கள்?

  சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட பதிவு.

  பாராட்டுகள் சார்வாகன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வணக்கம் முனைவர் பரமசிவம் அய்யா,
   இயற்கை விதைகள்க்கு மாறாக் செயற்கை விதைகள் சார் விவசாயம் என்பது மிகவும் நடுநிலையான ஆய்வுக்கு பிறகே பரிசீலிக்கலாம்.

   எனினும் உணவுப் பயிர்களில் இப்படி செய்யக் கூடாது ,இயற்கையாகவே உணவுப் பயிர்கள் உறபத்தி என்பதுதான் மனித குலத்தை காக்கும்

   நன்றி

   Delete
 6. சமுதாய நலப்பதிவு அருமை சகோ.சார்வாகன் இது போல் அக்கறையுடன் ஒவ்வொரு மனிதனும் செயல்பட வேண்டும்.அப்பொழுதுதான் செயற்கை விதைகளை எதிர்கொள்ள துணிவு வரும். விவசாய விழிப்புணர்வு நம் சமூகத்தினரிடம் இல்லை என்பதுதான் வேதனை தரும் விடயம். எங்கள் வீட்டைப் பொருத்தவரையில் நான் கொல்லைப் புறத்தில் தென்னை,தக்காளி,கருவேப்பிலை,மாதுளை,மற்றும் வேப்பமரம் போன்ற பயிர்கள் வளர்ப்பதில் ஆர்வம் எப்பொழுதும் காட்டுவேன்,அது தொடர்கிறது அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். இதில் ஆர்வம் இருந்தால் தவிர தொடர முடியாது பதிவுக்கு நன்றி ..

  ReplyDelete
 7. வணக்கம் சகோ,
  //விவசாய விழிப்புணர்வு நம் சமூகத்தினரிடம் இல்லை என்பதுதான் வேதனை தரும் விடயம்.//
  உடல் உழைப்பு என்பதை மிக குறைவாக விலை கொடுக்கும் சமூகம் இப்படித்தான் சிந்திகும்,இருக்கும்.விவசாயம்,உணவு என்றால் அப்ப்டியே சும்மா காசு கொடுத்து வாங்கி விடலாம் என்பதுதான் பலரின் சிந்தனை!

  பெரும் நிறுவனங்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் மிக்க ஆர்வம் காட்டுகின்றன. விவசாயமும் உலகளாவிய மையப் படுத்தப்பட்ட உறபத்தி,விநியோகம் என மாறிவிடும்.செயற்கை விதைகளை வைத்தே குறுகிய கால்த்தில் கொள்ளை இலாபம் சம்பாதிக்க முனைவார்கள்.

  இன்னும் கொஞ்ச நாளில் அம்பானி விவசாயம் செய்து கிலோ அரிசி 100+ ரூபாய் என்றாலும் இதே மக்கள் பேசாமல் வாங்குவார்கள்.

  நாம் உண்மையை சொல்வோம்!!!!!!

  நன்றி

  ReplyDelete
 8. //நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்துதான் இந்த விதைகள் உருவாக்குகின்றன. இதனால்தான் இவைகளை மீண்டும் வளராத வகையில் உருவாக்குகிறார்கள். போட்ட காசினை எடுக்க வேண்டுமே! ஆதலாம் இவற்றை காபிரைட் பெற்ற இசை சிடி மாதிரி மறுபடியும் அடுத்தவர் உற்பத்தி செய்ய இயலாத வண்ணம் உருவாக்குகிறார்கள்.//

  …நாளைக்கே அவன் காசை கூடி விற்றால், விவசாயி நிலை.

  …//ஆதலால் இயற்கை ஒட்டு முறைகள் மூலம் புதிய வகைகள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிதான் இப்போதைய GM பயிர்கள்.//

  …ஒரு சாதாரண விவசாயி கூட ஒட்டு முறை செய்ய முடியும். ஜி.எம் அப்படி அணுக முடியாது. எனவே, இவை இரண்டையும் ஒப்பிட இயலாது.

  …//அவை தனியார் நிறுவனங்கள். அவை லாபம் சம்பாதிக்க எல்லாவித முறைகளையும் கையாளுவார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது நமது அரசுகள் கையில் உள்ளது.//

  …நம் அரசின் லட்சணத்தையும், தனியார்களின் லாபவெறியையும் நாம் ஏற்கனவே பல துறைகளில் பல காலங்களில் பார்த்தாகிவிட்டது.

  …////2. மாறும் அரசியல் சூழலில் விதைகள் கிடைகாமல் போனால் திடிரென இயற்கை முறைக்கு நிலத்தை மாற்றினால் வரும் விளைவுகள் என்ன?///

  விளைவுகள் ஏதும் இருக்காது. இவ்விதைகள் நிலத்தை ஏதும் பாதிப்பதில்லை.ஆனால் பூச்சிகள் இருப்பின் கவனம் தேவை. //

  …விளைவுகள் இருக்காது என்பதை எப்படி அவ்வளவு ஊர்ஜிதமாக சொல்ல முடியும். ஆதாரங்கள் உள்ளனவா?

  …அப்படி இந்த விதைகளை உபயோகிக்க வேண்டுமினில், முதலில் பயிற்சி நிலங்களில் பரிசோதிக்க வேண்டும். அதுவும் நம் நாட்டில் பல மாநிலங்களில் பல தட்ப வெப்பநிலைகளும், சூழ்நிலையும் உள்ளன. அவை எல்லாவற்றிற்கும் பொருந்த வேண்டும். இதற்கு விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதி செய்த பிறகே விவசாய உபயோகத்திற்கு வர வேண்டும். கூடங்குளத்தில் இந்திய அரசின் போக்கு எப்படி உள்ளதோ, அதே நிலை இதிலும் நீடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

  …//ஆனாலும் நமக்கு அதிஷ்டம் இருப்பின் இந்த GM பயிர்கள் மட்டும் பயிரிடப்படும் பகுதிகளில் பூச்சியினங்களே வளர முடியாமல் அழிந்தும் போகலாம் அப்படி அழிந்தால் அங்கு விவசாயம் மீண்டும் இயற்கை முறைக்கு திரும்பலாம்.//

  …அதிஷ்டம். வெள்ளம், புயல், மழை... போன்ற விடயங்களில் இந்த வார்த்தையை உபயோகிக்கலாம். விஞ்ஞான ஆராய்ச்சியிலும் இப்படி சொன்னால் எப்படி.

  … //மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM)பருத்தி இந்தியாவில் அதிக லாபமுடையதாக இருப்பதாக போன மாதம் PNAS இதழில் வந்த ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. இது மிகவும் உயர்தர அறிவியல் இதழ் என்பது குறிப்பிடத்தகுந்தது.//

  Please refer this paper.
  http://www.ifpri.org/sites/default/files/publications/ifpridp01170.pdf

  …In this paper, they mentioned, PNAS paper considered national level cotton yield but they did not consider state level yields. More than that, there was an increase in production area from 2002. Many other factors which are responsible for increase in cotton yield were not considered in the study. Finally, it concluded BT cotton is not only responsible for the increase in cotton yield, might be some more factors are there.

  ReplyDelete
 9. //நாளைக்கே அவன் காசை கூடி விற்றால், விவசாயி நிலை//

  1. விவசாயி வாங்காமல் விட்டுவிடலாம்.
  2. அரசு உர மான்யம் மாதிரி மான்யம் வழங்கலாம்
  3. அரசே ஆராய்ச்சி செய்து இந்த மாதிரி விதைகளை உருவாக்கலாம்.
  4. விவசாய உற்பத்தி பொருட்களை விலை ஏற்ற அரசு அனுமதிக்கலாம்

  //ஒரு சாதாரண விவசாயி கூட ஒட்டு முறை செய்ய முடியும். ஜி.எம் அப்படி அணுக முடியாது. எனவே, இவை இரண்டையும் ஒப்பிட இயலாது.//

  நீங்களே பேப்பரை வைத்து வாய்ப்பாடு எழுதலாம். இதற்கு அடுத்த முன்னேற்றம் கால்குலேட்டர், இதை நீங்களாக செய்ய முடியாது. எனக்கு கணக்கு போட வாய்ப்பாடுதான் வேணும்னா உங்க இஷ்டம்

  //நம் அரசின் லட்சணத்தையும், தனியார்களின் லாபவெறியையும் நாம் ஏற்கனவே பல துறைகளில் பல காலங்களில் பார்த்தாகிவிட்டது. //

  ஹிஹி அதுக்கு ஒழுங்காக ஓட்டுப் போட வேணும். நாம் தேர்தெடுத்த அரசுகள் இப்படி இருப்பதற்கு செருப்பை எடுத்து நம்மை நாமே மடார்ன்னு அடிச்சுக்க வேண்டியதுதான்!

  // விதைகளை உபயோகிக்க வேண்டுமினில், முதலில் பயிற்சி நிலங்களில் பரிசோதிக்க வேண்டும்.//

  இது எல்லா விதைகளுக்கும் பொருந்தும். எல்லா பொருட்களுக்கும் பொருந்தும். விவசாயிக்கு விதை குறித்த சந்தேகம் இருப்பின் சோதனை முயற்சியாக குறைந்த அளவில வாங்கி பயிரிடலாமே?

  //அதிஷ்டம். வெள்ளம், புயல், மழை... போன்ற விடயங்களில் இந்த வார்த்தையை உபயோகிக்கலாம். விஞ்ஞான ஆராய்ச்சியிலும் இப்படி சொன்னால் எப்படி. //

  அறிவியல் ஆராய்ச்சியில் அதிஷ்டம் ரொம்ப முக்கியம். இது நகைமுரண்தான். ஆனால் என்ன செய்வது? ஆனால் அதிட்டம் என்று சாதாரண மக்களை போல் அழைக்காமல் 'நிகழ்தகவு' என டெக்கனிக்கலாக அழைப்போம்!


  அந்த கட்டுரையின் குறைபாடுகளை அறிவோம்.வேளாண்மை துறையிலான ஜெனடிக் ஆராய்ச்சிகள் மருத்துவம் நுண்ணியிரியல் போல வெற்றிகள் கொண்டதாக இருக்கவில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆகவே இந்த ஆராய்ச்சி கட்டுரை ஊக்கமூட்டுவதாக கருதலாம். இதெல்லாம், நான் இயற்கை வாழ்வுதான் வாழ்வேன் என சொல்ல எனக்கும் ஆசைதான். அதுக்கு குறைவாக மக்கள் தொகை இருக்கவேண்டும். சும்மா பன்னி குட்டி போடுவதுபோல் போட்டு இந்தியாவில் மக்கள் தொகையை பெருக்கினால் இந்த மாதிரி புதிய ஆராய்ச்சி மூலம் தான் உணவு பற்றாக்குறையை தீர்க்க இயலும். ஏற்கனவே பூமியின் அதிக பட்ச தாங்கும் சக்தியினை தாண்டி மக்கள் தொகை சென்றுவிட்டது.சீனாக்காரன் பாம்பு பல்லி எதையும் விட்டுவைப்பதில்லை என கிண்டலடிக்கும் நாம் அந்த நிலைமை அவனுக்கு ஏன் வந்தது, அது நமக்கும் வருமா என யோசிப்பது அவசியம்!

  ReplyDelete
 10. நல்ல கட்டுரை.

  விவசாயத்தில் மண்ணின் வளம் குறையாமல், இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் அறிவியல் பயன்பட வேண்டும்.

  இதே போல மற்ற எரிசக்திப் பயன்பாடுகளும், காற்று, சூரிய சக்திகளை அதிகம் பயன்படுத்தல் வேண்டும்.

  ReplyDelete
 11. நண்பரே நல்ல விழிப்புணர்வு கட்டுரை,

  நம் நாட்டில் விவசாயிகளின் நிலை, உதவியற்ற நிலையில் இருக்கின்றது. யாரும் அக்கறை காட்டுவதாக இல்லை. மந்திரி ஒருவர், பணவீக்கம் நல்லது என்கிறார். பணவீக்கம் என்று, அனைவருக்கும் சம்பளம் ஏற்றுகிறார்கள். ஆனால் ஏனோ விவசாயத்தை மட்டும் கட்டுப்படுத்த நினைக்கிறார்.
  மரபணு மாற்ற்பட்ட(ம.மா) பயிர்கள், விவசாயிக்கு இலாபம் அளித்தால் வரவேற்கத்தக்கது. அதைப்போல், ம.மா. நிறுவனங்கள் ஏகபோக உரிமையாளர்கள் ஆவார்கள் என்று பயம் இருந்தாலும். ம.மா. அல்லாத இயற்கை பயிர்களை காய்கறிகளை விரும்புவர்களும் அதிக விலை கொடுத்து உண்ணுபவர்களும் இருப்பார்கள். அரசாங்கமும் அந்த நிலை வந்தால் கட்டுபடுத்தலாம். எப்படி கேன்சருக்கு மருந்துக்கு பொதுவான காப்புரிமை வழங்கப்பட்டதோ அதைப் போல. நமது அரசாங்க் விவசாயத்துறை தரும் விதைகள் எப்படிப்பட்டவை என்பது ஊர் அறியும். அவர்கள் கொஞ்சம் தர்ம உயர்த்தினால் தேவலாம். நிகழ்வுகள், ஒன்றினை ஒன்று சம் நிலையை அடைய வைக்கலாம்.

  முக்கியமாக பார்ப்பது விவசாயிக்கு எது இலாபம் தரும் என்பதுதான்.

  விவசாயம் நிலம் என்பது, பண லாபம் என்று ஒரு புறம் இருக்க, ஒரு குடுமபத்திற்கு, மனநிலை சம்பந்தமான பாதுகாப்பை, வேறு எந்த பொருளும் அளிக்காது. ஆனால், நுகர்வோர் கலாச்சாரத்தினால், அதிக நிலவிலை ஏற்றத்தினால், ஒரே நேரத்தில் கிடைக்க கூடிய மிகமிஞ்சிய அதிக விலையை முன்னிட்டு, விவசாயத்தால் வரும் இழப்பீடு கடனால், வீட்டு மனை வியாபாரிகளுக்கு விற்கிறார்கள். சென்னை அருகில் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஏக்கர் 10 இலட்சம் விற்ற நிலங்கள் எல்லாம் இன்று 3 கோடி வரை செல்கிறது. இப்படி இருக்கும் நிலையில் யாருக்கு விவசாயம் செய்ய ஆசை வரும்.

  இதற்கு தீர்வு:-
  1) விவசாயம், நிலத்தை விற்பதை விட இலாபகரமானதாக இருக்க வேண்டும்
  2) விவசாய செய்யும் நிலங்கள் குறைந்த விவசாய உணவு பொருடகளின் விலை மலைப் போல் ஏறினால், விவசாயம் செய்வது அதிகரிக்கும்.

  நன்றி.

  ReplyDelete
 12. @நரேன்

  இதுக்குதான் மரபணு மாற்றத்தை நான் ஆங்கிலத்தில் GM என எழுதினேன். உங்களின் தமிழ் சுருக்கத்தை படிக்கும் போது மாமா பயிர்கள்,மாமா நிறுவனங்கள் என அர்த்தம் வந்து அனர்த்தமாகிறதே! :-)

  ReplyDelete