Saturday, September 8, 2012

சவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா?வணக்கம் நண்பர்களே,

எண்ணெய் என்பது இப்போதைய  பொருளாதர‌த்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். உலகின் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சவுதி அரேபியாவே முண்ணனி வகிக்கிறது.

நேற்று அல்ஜசீரா செய்தியில் சவுதியில் பொ.ஆ 2030 க்கு பிறகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அளவு இருக்காது என படித்ததும் , இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடப்பது வியப்புக்கு உரியது.  


சவுதி இப்போது ஒருநாளைக்கு 11.1 மில்லியன் பேரல் எண்ணெய் உறப்த்தி செய்து அதில் 7.7 மில்லியன் பேரல் ஏற்றுமதி செய்கிறது.மீதம் உள்ள‌ 3.4 மில்லியன் பேரலை[25%??] சவுதியே ப‌யன் படுத்துகிறது.

இது சிட்டி கார்ப் என்ப்படும் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஹெய்டி ரஹ்மான் கூறிய கருத்து ஆகும்.அவரின் கருத்தை சார்ந்து டெய்லி டெலிகிராஃபில் வெளியான கட்டுரையின்  தமிழாக்கத்தை அளிக்கிறேன். 


 சிட்டி கார்ப் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்தால் சவுதி பொ.ஆ 2030ல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகி விடும்!!.

அந்நிறுவனத்தின் ஹெய்தி ரஹ்மானின் 150 பக்க சவுதி எண்ணெய் பொருளாதாரம் சார்  தகவல் அறிக்கை இத்னை கூறுகிறது. இது பலருக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் நிகழப்போகிறது என வியப்பும்,அதிர்ச்சியும் ஏற்படுத்தலாம்.

இதன் முக்கிய காரணி என்னவெனில் சவுதியின் தனிப்பட்ட‌ எண்ணெய் நுகர்வு அதிகரித்தலே!!. சவுதி தனிப்பட்ட எண்ணெய் 50%[1.5 million barrels]  பொது மக்களால் பயன்படுத்தப் படுகிறது.இதில் மூன்றில் இரு பங்கு குளிர்சாதனப் பெட்டிகள் பயன்பாடு!!. 

ஒரு சவுதி அரேபியர் ஒரு நாளுக்கு சுமார் 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதும்,இது உலக சராசரியை விட 91% அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இங்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீர் பெறப்படுவதும்,உலகின் 17%  கடல் நீர் சுத்திகரிப்பு நீர் இங்கு உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள். இதற்கும்  அதிக பொருள் செல்வு, எரிபொருள் தேவை உண்டு.தண்ணீரின் தேவை வருடம் 9% அதிகரிக்கிறது. மின்சாரத்தின் தேவை ஆண்டுக்கு 8% அதிகரிக்கிறது.


மேலும் சவுதியில் எண்ணெய் சந்தை விலையை விட மிக குறைந்த விலையில் வழங்கப்படுவதும் சிக்கலை அதிகப்படுத்துகிறது. சவுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மொத்தமும் பயன்படுத்தப் படுகிறது. குவைத் இரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதும் குறிப்பிடலாம்.

ஹெய்தி ரஹ்மான் கூறுகிறார்.

• Saudi Arabia Could be an Oil Importer by ~2030 — Saudi Arabia is the world’s largest oil producer (11.1mbpd) & exporter (7.7mbpd). It also consumes 25% of its production. Energy consumption per capita exceeds that of most industrial nations. Oil & its derivatives account for ~50% of Saudi’s electricity production, used mostly (>50%) for residential use. Peak power demand is growing by ~8%/yr. Our analysis shows that if nothing changes Saudi may have no available oil for export by 2030.
• It Already Consumes All Its Gas Production — Saudi Arabia produces 9.6bn ft3/day of natural gas. This is entirely consumed domestically. It is looking to raise gas production to 15.5bn ft3/day by 2015E, implying a 2011-15E CAGR of 12.7%. However, peak power demand is growing at almost 8% pa. We believe Saudi Arabia will need to find new sources to meet residential & industrial demand.

ரஹ்மானின் கருத்துகளை ஏற்கெனெவே மேலே சொல்லி விட்ட படியால் மொழி பெயர்க்கவில்லை.
ஒரு வேளை இந்த கணிப்பு தவறாக இருக்கலாம் ,இது போன்ற பிற ஆய்வுகளில் மட்டுமே உறுதி செய்யப்படும். சவுதி எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயம் தங்களின் உண்மை எண்ணெய் இருப்பை வெளியே சொல்ல மாட்டார்கள். எனினும் உச்ச எண்ணெய் [Peak Oil] என்ற அளவை நெருங்கி விட்டோம் என்பதன் அறிகுறியாக எடுக்க வேண்டியதுதான்.!!! 
இப்பதிவில் சவுதியின் அதீத நுகர்வையே விமர்சிக்கிறோம். "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!. 
அதீத நுகர்வு ஆபத்தானது  என்றெ நாம் பதிவுகளில் வலியுறுத்தி வருகிறோம். மல்ர்களிடம் இருந்து  தேனீ தேன் எடுப்பது போல் ஒரு அரசன் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என ஒரு சங்கப்(???) பாடல் கூறுவதாக படித்தது உண்டு.
அதுபோல் மனிதர்களின் தேவைகள் இயற்கையை பாழ் படுத்தாமல் பயன்படுத்த வேண்டும்.இன்னும் பல்லாயிரம் தலைமுறை அனைத்து உயிரின‌ங்களும் பிரச்சினையின்றி வாழ வழி தேட வேண்டும். .
எப்படி என்றால் குறைந்த பட்சம் உணவு,உடை,ஆற்றல்,எரிபொருள்  நுகர்வு தேவைகளை முடிந்த வரை  குறைக்கலாம்.சிறிய அள்வில் வீட்டில் ஒரு செடியாவது வளர்க்கலாம்.ஏதோ ஒருவகையில் ஒவ்வொருவரும் ஏதேனும் இயற்கை சார்ந்து  உற்பத்தி செய்தல் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும்!!!
இதுதான் நல்ல தீர்வு!!!

73 comments:

 1. அருமையான கட்டுரை.

  சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் த்யாரித்தல் கட்டயமாக்கப் படவேண்டும்.

  மலிவு விலை, இலவசங்கள் ஒளிய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ தேவப் பிரியா,

   ஆற்றல் தட்டுப்பாடு என்பது சவுதி மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டுக்குமான பிரச்சினை.

   கருத்துக்கு நன்றி

   Delete
 2. நல்ல பதிவு ! உலகம் முழுவதும் எண்ணெய் தீர்ந்து வருகின்றது. ஆனால் பெருமளவு எண்ணெய் வளங்கள் தொடப்படாமலேயே அமெரிக்கா, கனடாவின் நிலத்துக்கு அடியில் இருக்கின்றது !!!

  அதே போல 2-3 கோடி மக்கள் கொண்ட சௌதி இவ்வளவு எண்ணெய் சக்திகளை பயன்படுத்திக் கொள்வது வியப்பாக உள்ளது. எண்ணெய் தீருமானால் அங்கு பல சிக்கல் எழும் என்பதில் ஐயமில்லை. சொகுசாக வாழ்ந்து பழகிவிட்டார்கள் வேறு !!!

  குறிப்பாக எண்ணெய் வளம் இல்லாத போது, அத்தியாவசிய நீர், உணவு, மின்சாரம் பெறுவதே சிக்கலாகிவிடும், அப்புறம் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் அண்டித் தான் வாழ வேண்டி வரும்.. சுற்றுலாத் துறைக்கு இப்போதே அமீரகம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றதைப் பார்க்கக் கூடியதாக உள்ளது.

  பார்ப்போம் என்ன நடக்கப் போகின்றது என !

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ அருணன்,

   நீங்கள் சொல்வது உண்மை. சவுதிகளின் ,அமெரிக்கர்களின் வாழ்வுமுறை அதீத நுகர்வு என்பதும் இது அவர்களையே முதலில் பாதிக்கிறது.அமெரிக்கா தனது தேவைக்கு ஆக்கிரமிப்பு செய்வதும் அறிந்த கதை,சவுதி எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போனால் பெரும் சிக்கல்களை உலகம் சந்திக்கும்!.

   நன்றி!!!

   Delete
 3. சகோ.சார்வாகன்,

  பி.பீ ஆயிலின் ரிப்போர்ட்டில் இருந்ததை வைத்து முன்னர் எனதுப்பதிவிலும் இதனை சொல்லியிருந்தேன், இன்னும் 50-60 ஆண்டுகளில் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் எண்ணை இருக்காது என்பது அந்த ரிப்போர்ட்டின் சாரம்சம், எனவே 2030 இல் உற்பத்தியானது தற்போதுள்ளதில் பாதியாகிவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  அமெரிக்கா மட்டும் பயன்ப்படுத்தாத ஆனால் கண்டறியப்பட்ட வளத்தினை கொண்டிருப்பதாகவும் போட்டு இருக்கிறார்கள் அதன் மூலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் வண்டியோடும்.

  இப்போது சொல்லி இருப்பது "சுவீட் குருட் " எனப்படும் தரமான குருடுக்கே, இதன் பின்னர் ஷேல் வகை குருட் கிடைக்கும் ,ஆனால் அதன் சுத்திகரிப்பு செலவு அதிகம்.

  பீக் ஆயில் நிலையை எப்போதோ எட்டியாயிற்று ,இப்போது போஸ்ட் பீக் ஆயில் நிலை.

  உலகில் கண்டுப்பிடிக்காத எண்ணை வளங்கள் இன்னும் இருக்கின்றன,அதற்கு தான் அனைவரும் வலை வீசித்தேடி வருகிறார்கள், மிகப்பெரும்பாலான எண்ணை வளம் ஆர்டிக்,அண்டார்டிக் பனிக்கட்டிக்கு அடியில் உள்ளதாம் ஆனால் அதனை எடுக்க முயன்றால் உலகிற்கு அழிவு என்பதால் எடுக்க இது வரை முயலவில்லை, இனி எப்படியோ?

  எனவே நான் சொன்ன மாற்று எரிபொருள் மற்றும் சூரிய சக்தியே நிரந்தர தீர்வு.

  நிலக்கரியை பெட்ரோல் ஆக மாற்ற முடியும் செலவு அதிகம்,மேலும் நிலக்கரியும் விரைவாக தீர்ந்து வருகிறது, உலக நிலக்கரி இருப்பு இன்னும் சுமார் 120 ஆண்டுகள், அது எல்லா நாட்டுக்கும் அல்ல, இந்தியாவுக்கு இன்னும் 40-50 ஆண்டுகள் கையிருப்பு இருக்கும்.

  பிரிட்டனில் 2020 இல் அனைத்து நிலக்கரியும் தீர்ந்து விடும்.

  எனவே நிலக்கரியையும் நம்ப முடியாது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வவ்வால்,

   /இப்போது சொல்லி இருப்பது "சுவீட் குருட் " எனப்படும் தரமான குருடுக்கே, இதன் பின்னர் ஷேல் வகை குருட் கிடைக்கும் ,ஆனால் அதன் சுத்திகரிப்பு செலவு அதிகம்.//

   எண்ணெய், நிலக்கரி என்ன அள்ள அள்ள குறையாத அமுத சுரபியா!!!
   இருந்தாலும் சவுதிகள் வாழ்வுமுறையை மாற்றினால் இனூம் கொஞ்ச நாள் தாக்கு பிடிக்க்லாம்.

   மிக சரி.ஆமாம் இந்த ஷேல் வகை எண்ணெய் பற்றி நீங்கள் ஒரு பதிவிட நேயர் விருப்பம் தெரிவிக்கிறேன்.

   நன்றி

   Delete
  2. சகோ,சார்வாகன்,

   முன்னரே மாற்று எரிபொருளின் தொடர்ச்சியாக பெட்ரோல், நிலக்கரி பற்றி ஒன்று பதிவிடுவதாக இருந்தது ,வழக்கம் போல பரணில் போட்டாச்சு ,தூசு தட்டி மீண்டும் இடுகிறேன்.

   ஹி...ஹி எனக்கும் கூட நேயர் விருப்பமா, அடியேனுக்கும் செல்வாக்கு கூடும் போல தெரிகிறதே ,இதை வைத்து ஒரு போண்டா ,டீ வாங்க முடியுமா என முயற்சித்து பார்த்துவிடலாமா ? :-))

   Delete
 4. இயற்கை வளங்கள் தரும் சக்திகள் குறையும் போது, அல்லது தீரும் போது உலகில் சமூக, கலாச்சார, வாழ்வியல் சார்ந்து பல மாற்றங்கள் வரும் ! பல நாடுகள் தோல்வியடையும் .. பசி பட்டினி அதிகரிக்கலாம் . போர்கள் பெருகலாம் ..

  எண்ணெய் தீர்ந்த பின் தண்ணீருக்கு அடுத்த போட்டியாக இருக்கும் .. அமெரிக்கா, கனடா ஆகியவை இன்னும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் ..

  என்ன நடக்கப் போகின்றதோ ? எதிர்காலத்தை நினைத்தால் கவலையாகவே உள்ளது.

  நம் சகோக்களுக்கு என்ன ஜாலியாக சுவனத்துக்கும் / சுவர்க்கத்துக்கும் போய் அஜால் குஜாலாக எஞ்சாய் பண்ணப் போகின்றார்கள். நாம் தான் இந்த பூமியில் வாழ்ந்து மடியணும் போலிருக்கு !!!

  எண்ணெய் தீர்ந்த பின் சௌதிக்கு ஸ்பெஸல் வசதி செய்து அங்குள்ள மக்கள் சுவனத்துக்கு டிக்கெட் வாங்கி சென்று விடுவார்கள் ( அட அப்படித்தானே சொன்னாங்க ! இல்லையா )

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,

   கனவுலகில் மிதப்போரை எதார்த்த உலகிற்கு கொண்டுவர முயல்கிறோம்.

   இதுதான் எதார்த்த உண்மை என் உணர்ந்தால் மட்டுமே வாழ முடியும்.

   சவுதிகள் தங்களின் பூலோக சுவன கனவை விட்டு ஒட்டகத்தை பூட்டி ஏர் உழ வேண்டியதுதான்.

   அரேபியா ஒட்டகம் க‌ட்டி
   அமெரிக்கா ஏர் பூட்டி

   பாலை வனத்தை உழுது போடு சவுதிக்கண்ணு ,
   அந்த கனவைக் கொஞ்சம் மறந்து போடு சவுதிக்கண்ணு

   பாடல்: சார்வாக பாகவதர்
   இராகம்: சுவனப் பிரியா
   தாளம்: எகத்தாளம்
   ****

   நன்றி!!!!!!!!!!!!!!!

   Delete
 5. உங்க அழைப்பை ஏற்று இதே வந்திட்டேன் சண்டை போட :-)

  //"குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!. //


  குந்தாம தின்னா மட்டும் எடுக்க எடுக்க பெட்ரோல் வந்துகிட்டேவா இருக்கும்? எப்படியும் இந்த நூற்றாண்டில் தீரத்தான் போவுது. இருக்கறதை வழிச்சு நக்கீட்டு வேற வேலைய பார்ப்போம் என சவுதி சேக்குகள் நினைத்திருப்பார்கள்!

  //சிறிய அள்வில் வீட்டில் ஒரு செடியாவது வளர்க்கலாம்.//

  வளர்த்தால் உடனை பெட்ரோல் கிடைத்திடுமா என்ன? செடியெல்லாம் பெட்ரோலாக மாற பல மில்லியன் வருசமாகுமே? அதுக்குள்ளற வேற எரிபொருளை கண்டுபிடிச்சுட மாட்டோம்? ஒருவேளை அப்போது உங்களுக்கு பிடித்த sustainable சக்தியான அணுமின்சாரத்தில் இயங்கும் கார் வந்தாலும் வந்திடும்.

  சும்மா ஜாலிக்காகத்தான இந்த பின்னூட்டம் பிடிக்கலைனா அடுத்த பின்னூட்டதை எடுத்துகிடுங்க.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ந.வனத்தான்

   //குந்தாம தின்னா மட்டும் எடுக்க எடுக்க பெட்ரோல் வந்துகிட்டேவா இருக்கும்? எப்படியும் இந்த நூற்றாண்டில் தீரத்தான் போவுது. இருக்கறதை வழிச்சு நக்கீட்டு வேற வேலைய பார்ப்போம் என சவுதி சேக்குகள் நினைத்திருப்பார்கள்!//

   அதுக்காக படுத்துக்கிட்டே குஜாலாக கை அமுக்க ஆள் கால் அமுக்க ஆள் என்று வாழ்வதா!!!

   வசதியான சவுதிகள் அமரிக்கா ஐரோப்பா ஓடி விடுவார்கள்,அதுக்குத்தான் மதம் பரப்புகிறேன்னு இடம் தயார் பண்ணுகிறார்கள்!

   செடி நட்டால் எண்ணெய் வருமா?. ஆனால் மழை வரும்!!.சூழல் மேம்படும்!

   டைனோசார் போன்ற விலங்களின் எச்சமே பல்லாண்டுகளின் எண்ணெய் ஆனது.

   பாலைவனத்தான் ஆகும் சவுதிகள் என்ன செய்வார்கள் என்பதே கேள்வி!!

   பாலைவனத்தை நந்தவனம் ஆக்குவதே சவால்!!

   நன்றி

   Delete


 6. சூப்பர் பதிவு சகோ! எப்புடி இப்படியெல்லாம் எழுதுறீங்கன்னே தெரியல. அருமையான நடை அசத்தலான செய்திகள். கரை புரண்டோடும் அறிவியல். சுவையான சுற்றுபுறசூழல் விடயங்கள். உங்களுக்கு உள்ள சமூக அக்கறை, அறிவினை அனைவருக்கும் புகட்டும் உங்கள் ஆர்வம் ஆகா, அற்புதமைய்யா அற்புதம். நீர் பதிவுலகின் ஒளி, நீங்க காட்டுவதுதான் எங்களுக்கு வழி! வணக்கம் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ,

   சூப்பர் பின்னூட்டம் தலைவா. இது போன்ற பின்னூட்டங்களே ஒரு சமூக சிந்தனையுள்ள பதிவனை உருவாக்குகிறது.பதிவின் சாரத்தை அழகாக புரிந்து பொறுப்பாக இடப்பட்ட பின்னூட்டம்.இது கல்லின் செதுக்க வேண்டிய விடயம்

   நன்றி

   டிஸ்கி
   அப்புறம் மாலை சந்தித்து பேசியபடி கவனித்து விடுவோம்!!

   இன்னும் கொஞ்சப் பேரை இதே போல் பின்னூட்டம் போடவும்,தமிழ் மண ஓட்டு போடவும் பிடிக்கவும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!
   நாம் பிரபல்ய பதிவர் ஆனதும் பின்னூட்டப் பெட்டிக்கு பாதுகாப்பு[moderation] போட்டு உங்கள் போன்ற நல்ல உள்ள‌ங்கள் மட்டுமே பின்னூட்டம் போட ஆவண செய்வோம்!!ஹி ஹி

   அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!!

   நன்றி

   Delete
 7. "///குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!///

  உண்மை! உண்மை!!அமெரிக்காரன் ஒரு பொறுக்கி, பேமானி, எச்சப் பொறுக்கி! பேட்டை ரவுடி...இப்படி எது வேண்டுமானாலும் சொல்லலாம்; மற்ற நாடுகளைப் பொருத்தவரை...

  ஆனால், அவனது[அமெரிக்காவின்] குடிமகன்களுக்கு அமெரிக்காவைவிட ஒரு நல்ல தகப்பன் கிடைக்காமாட்டான்...ஒரு மீனவனை திட்டக் கூடமுடியாது. சுட்டால், அந்த நாடு காலி...அங்க புல் பூண்டு முளைக்கும்...நிற்க...

  எண்ணெய் வளம் தீர்ந்தால் சவுதி அமெரிக்காவின் முழு நேர அடிமைகள் தான்;

  America will be ruthless when they want to crush others. If Saudi is depleted with oil, it will be crushed and buried. In other words,
  பெண் அழகா இருக்கும் வரை தான் அவர்களுக்கு மௌசு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நம்பள்கி
   உங்களின் உருவக கருத்து மிக சரி

   அமெரிக்க வெள்யிலே ரவுடி.வீட்டிலே நல்ல அப்பா!!. இந்த அமரிக்க அப்பாவுக்கு ஏகப்பட்ட சின்ன வீடு வச்சுக்கிட்டு ,கிடைத்தவனை அடித்து பிடுங்கி ரோட்டில் தண்ணிய போட்டுக்கிட்டு பண்ர ரவுசு தாங்க முடியவில்லை!!

   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   நன்றி

   Delete
 8. வணக்கம் சகோ,
  //இப்பதிவில் சவுதியின் அதீத நுகர்வையே விமர்சிக்கிறோம். "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!.//

  முன்னறிவு இருந்தால்தானே இதைப்பற்றி சிந்தனை வரும்? குரானே அறிவு அறிவே குரான் என்று எண்ணுபவர்களுக்கு எப்படி சிந்திக்கத் தோன்றும்? ஏற்றத்தாழ்வு அவனே உருவாக்கினான் அதனால் அவனே சரிசெய்வான் என்றல்லாவா எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்,"கொடுத்தவனே பறித்துக் கொண்டான்" பறித்தவன் திரும்பக் கொடுப்பான் என்றிருப்பார்களா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  இனியவன்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இனியவன்,

   இந்த எண்ணெய் வளம் சவுதி ஆளும் வர்க்கம்,மத்திய தர வர்க்கம் இரண்டையுமே ஒரு பெருமித மாயையில் ஆழ்த்தி விட்டது.வீட்டு வேலைக்கு ,ஓட்டுனர் வேலைக்கு மில்லியன் கணக்கில் வெளிநாட்டு ஆள்கள் அம்ர்த்துவதை என்ன சொல்வது?

   காலம் நல்ல பாடம் விரைவில் கற்று கொடுக்கும்.பிறகு இந்த பெருமித கூச்சல் இருக்காது!!!பிழைப்பை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.எனினும் இது பிற நாடுகளின் மீதும் பொருளாதார தாக்கம் ஏற்படுத்தும்!!

   நன்றி!

   Delete
 9. நல்ல பதிவு சகோ! பிற்கால சந்ததி வாழ, இது ஒர் எச்சரிக்கை பதிவு! வருமுன் காப்போம் என்பதை அனைவரும் தெளிவாக உணர வேண்டும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க புலவர் அய்யா,
   ஆம் அய்யா .வருமுன் காப்போனே சிறந்தவன்.
   கருத்துக்கு நன்றி!

   Delete
 10. பெட்ரோல் தீர்ந்தால் ஒன்றும் குடி மூழ்கி போகாது. முகமது நபி தனது ஆரம்ப காலத்தில் இரண்டு மூன்று பேரித்தம் பழங்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார் என்பதை ஞாபகப்படுத்தினால் இவர்களும் அவரைப் போலவே வாழப் பழகிக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலையாட்களை வெளியாக்கினால் பில்லியன் கணக்கில் டாலர்களை மிச்சப்படுத்தலாம். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு டிரைவர்கள், மூன்று டிரைவர்கள் என்ற நிலை மாறி சவுதிகளே ஓட்டுனர்களாகி விடுவார்கள். தற்போது விவசாயத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே இஸ்லாம் என்ற அருமையான வழியை வைத்து சவுதிகளை சிக்கன வாழ்வு வாழ்பவர்களாக மாற்றி விடலாம்.

  ஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.

  என் பையன்களுக்கே ஆடம்பரமாக ஏதும் கேட்டால் இரண்டு நபி மொழிகளை எடுத்துப் போடுவேன். மௌனமாகி சென்று விடுவார்கள். எனவே கவலையை விடுங்கள். எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் வாழ்ந்து விடுவர். அதற்கு இஸ்லாம் அழகிய வழி காட்டுகிறது.

  மனமிருந்தால் மார்க்கமுண்டு. :-)

  ReplyDelete
  Replies

  1. வாங்க சகோ சு.பி
   உடனே அதிக பொருளதார சிக்கல் சவுதிக்கு வராது.எல்லாலம் கொஞ்சமாக் 50 வருடம் கழித்தே தெரியும். என்ன நம்போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

   சராசரி இந்தியன் போல் எப்போதும் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பவனுக்கு பழகி விடும்.
   ஆள் அம்பு,ஆடம்பரம் என்று வாழ்ந்து பழகிய அரபியர்கள் ஒரு தலைமுறை கஷ்டப்படுவார்கள்.பிறகு சரியாகி விடும்.

   இதுவும் நல்ல பரிந்துரைதான். சுவனரின் சேவை சவுதிக்கு தேவை

   //ஹஜ், உம்ரா வருபவர்களுக்காக இன்று அரசு கோடிக்கணக்கான டாலர்களை செலவழிக்கிறது. பெட்ரோல் குறைந்தால் ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். இதை வைத்தே கூட அரசு செலவினங்களை சமாளித்து விடலாம்.//

   கருத்துக்கு நன்றி!

   Delete
  2. என்ன சார்வாகன்! மெக்கா சுற்றுலாதளம் ஆகபோவது உறுதிதானா!

   Delete
  3. //ஒவ்வொரு வெளி நாட்டவரும் 3000 ரியால் பராமரிப்பு செலவுக்காக சவுதி அரசுக்கு கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் உலக முஸ்லிம்கள் கட்டியே தீர வேண்டும். //

   நான் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் .. இறைவனின் திருத்தலத்தை வியாபார மயம்மாக்குவதை குரான் தடை செய்கின்றது ... மெக்காவைக் காட்டிப் பணம் பறிப்பதை முகம்மது நிச்சயம் கண்டிக்கின்றார் ... குரானுக்கு விரோதமாக சௌதி செயல்படுமானால் .. மெக்காவை தனிநாடாக மாற்ற முனைவோம் ... ( இப்படி ஒரு குரூப் வராமலா போகும் சொல்லுங்கள் ) ....

   Delete
  4. சகோ குட்டிப் பிசாசு,

   நான் எண்ணெய் தீரும் நேரம் மெக்கா சுற்றுலாத் தலம் ஆகும் என க்ணித்தேன்.நம் சகோ சு.பி எப்போதும் என் கருத்துகளை மறுப்பது இல்லை. நான் சொல்லும் விதம் வேண்டுமானால் மாறுபடுவார்.

   இங்கு நம் கருத்தை வழி மொழிந்த சகோ சு.பிக்கும் ,அத்னை ஞாபகத்தில் வைத்திருக்கும் உங்கள்க்கும் நன்றி!!

   Delete
 11. சகோ சார்வாகன்,
  அமெரிக்காகாரன், சிறப்பான கூர்மதிக்காரன் போலிருக்கிறது.
  எண்ணெய் தீர்ந்தால் என்ன மாதிரி நிலைமகளை சவுதி எதிர்கொள்ளும் என்பதை, எண்ணெய் பேரல் 30 டாலராக இருந்தபோது தெரிந்தது. இப்போது அமெரிக்க எண்ணெய் உற்பத்தில் தன்னிறைவு அடைந்து, ஏற்றுமதி செய்யும் நிலை வந்தவுடன் பேரலுக்கு சராசரியாக 100 டாலராக இருக்கிறது. கொள்ளை அடிக்கிறார்கள்.

  முடிவில் எண்ணெய் வளங்கள் அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும்தான இருக்கும் போல. கடவுள் ஏன் அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆற்றலையும் அருளையும் தருகிறான் என தெரியவில்லை.

  கடைசி சொட்டு எண்ணெய் இருக்கும்வரை எண்ணெய் வியாபாரிகள், அதனை வைத்து வியாபாரம் செய்யவார்கள், மக்களும் தீர்த்துவிட்டு பிறகு என்னவென்று யோசிப்பார்கள்.
  மாற்று வழிகளை யோசிக்க பயன்படுத்த ஒரே வழி, எண்ணெய் பொருட்களின் விலையை அதிமாக்குவதுதான்.

  சவுதி மற்ற நாடுகளை போல ஒரு சராசரி நாடுதான். பாதகங்கள், சாதகங்கள் கொண்ட நாடு. மார்க்கம்தான் சாதகம் என சொன்னால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. கடவுளை பார்த்தால்தான் பயமாக இருக்கிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட பூமியான சவுதிக்கு எண்ணெய் என்ற ரஹ்மத்தை அளித்தவர், அதை தீர்ந்தவுடன் வேறு என்ன ரஹ்மத்தை அளிப்பார் என தெரியவில்லை.

  எண்ணெய் தீர்ந்தால், கடவுளின் எண்ணெய் அருளில்லாமல் மற்ற மார்க்கமற்ற மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதைப்போலத்தான் அரபியர்களும் வாழ்வார்கள். என்ன சவுதியில் வேலைக்கு செய்கின்ற நமது இந்திய சகோக்களுக்கு கொஞ்சம் இடர்பாடுகள் அவ்வளவுதான்.

  என்னடா இது சவுதியின் எண்ணெயை வைத்து யூதர்கள்தான் பெரும்பான்மையாக பயன்பெறுகிறார்கள் என்ற கோவத்தில், எண்ணெயை சீக்கிரமாக தீர்த்துவைக்க கடவுளின் சதியாகவும் இருக்கலாம்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ நரேன்,
   // கடவுள் ஏன் அமெரிக்காவிற்கு இவ்வளவு ஆற்றலையும் அருளையும் தருகிறான் என தெரியவில்லை.//

   எனக்கும் இதே கேள்வி உண்டு கொழுத்தவன் ஒட்டாண்டி ஆனால் அவனை சுரண்டி தின்னவன் கதி என்ன? சுரண்டலுக்கு ஏற்ற அடுத்த ஏ(கோ)மாளி யார்??

   **
   // சவுதிக்கு எண்ணெய் என்ற ரஹ்மத்தை அளித்தவர், அதை தீர்ந்தவுடன் வேறு என்ன ரஹ்மத்தை அளிப்பார் என தெரியவில்லை.//

   அது யாருங்க ரஹ்மத்? எனக்கு ஷகீலா,அசின்,இலியான,மும்தாஜ்,தமன்னா கதிரினா கைஃப் மட்டுமே தெரியும் ஹி ஹி

   நன்றி!!

   Delete
 12. //டைனோசார் போன்ற விலங்களின் எச்சமே பல்லாண்டுகளின் எண்ணெய் ஆனது.//

  நல்லவேளைய சவுதிகாரனுவள டைனோசர் வளருங்கன்னு ஐடியா குடுக்காமவிட்டீங்களே, அதுவரைக்கும் சவுதிகாரனுக தப்பிச்சானுக!

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்த வனத்தான்
   நிறைய ம(னி)த டைனோசார்களை பயிற்றுவித்து உலகெங்கும் விளம்பரம் போட வைக்கிறார்களே??.
   இனி அந்த டைனோசார்களின் மிச்சம் என்ன ஆகும்?

   நன்றி

   Delete
 13. வணக்கம் சகோ,
  எனக்கு புரிகின்ற மாதிரி ஒரு பதிவு :)
  சவுதிக்கு எண்ணெய் போனா என்ன சகோ அதான் பல வெண்ணைகள் இருக்கின்றனரே :)

  ReplyDelete
  Replies
  1. சகோ புரட்சிமணி,

   அருமை...... சிரிக்க முடியவில்லை!!!!!!!

   நன்றி

   Delete
 14. சகோ தேவப்பிரியாவுக்கு சுவனத்தின் மீது ஒரு கண்ணு போல :)
  நான் சொல்ல வருவது புரிகிறதா? :)
  போக்கிரியில ரயில்ல வர்ற வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது.
  ஹய்யோ ஹய்யோ :)

  ReplyDelete
 15. அப்புறம் மாலை சந்தித்து பேசியபடி கவனித்து விடுவோம்!!
  பெட்ரோல் பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும். ஓகோ இப்படியெல்லாம் உங்களுக்குள்ள நடக்குதா சார்வாகன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ,

   எண்ணெயினால் பொருளதாரம் வளர்வதும்,கவனிப்பால் பதிவு பின்னூட்டம் வளர்வதும்தானே உண்மை

   நன்றி

   Delete
  2. //ஓகோ இப்படியெல்லாம் உங்களுக்குள்ள நடக்குதா சார்வாகன். //

   என்ன ஜோதிஜி, இதுக்கே இப்புடி ஷாக்காய்டீங்களே, இனி நடக்குற எல்லா விஷயமும் தெரிஞ்சா என்னாவீங்களே தெரியல. இங்கன போய் பாருங்க http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post.html?showComment=1347066816752#c5464500938547307717

   விரைவிலேயே "பிரியமானவளே விவேக்" மாதிரி சார்வாகன் பாம்பே போய் ஆப்புரேசன் பண்ணிகிட்டு வந்தா ஆச்சரியபட்டுறாதீங்க!

   Delete
 16. வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
  ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.

  அதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.

  அப்போது சுகவனச் சாமியாடிகள் என்ன செய்வார்?

  மக்கா..மதினா...சாரி..அக்கா...மதினி என்று அந்த பாலை நிலத்தில் புலம்புகிக்கொண்டு திரிவார்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராவணன்
   ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
   நன்றி!!!

   Delete
 17. //வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
  ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.

  அதுவரை நான் இருக்கவேண்டும்..அந்தக் கண் கொள்ளா காட்சியைப் பார்க்கவேண்டும்.//

  பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
  கருமமே கட்டளைக் கல்.

  வாழ்வில் ஒருவர் பெருமை சிறுமை அடைவதற்கு பிறர் காரணம் அல்ல. அவரவர் செயலே காரணம். பொன் மாற்று அறிவதற்கு உரைகல் வைத்திருப்பர். பொன்னை உரசிப் பார்த்து அதன் தரம் அறிவர். அதுபோல் ராவணனின் செயலும் எண்ணமும் அவரை நல்லவரா கெட்டவரா என்பதை காட்டி விடும். :-)

  ReplyDelete
 18. நம்ம அப்பாடக்கர் சுகவனச் சாமியாடிகள் சொன்னால் சரியாகவே இருக்கும். அவரது சர்ட்டிபிகேட் அந்தப் புத்தகத்தைவிட புனிதமானது.

  ReplyDelete
 19. சவுதிக்கு 12 வருடம் என்றால் இந்தியாவுக்கு எவ்வளவு ஆண்டு இருக்கும்? சீக்கிரமா காரை விற்றுவிட்டு சைக்கிளில் போக கற்றுக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வடுவூர் குமார்,

   முன் கூட்டியே ஆர்டர் கொடுத்தால் நயம் சுத்தமான அக்மார்க் பயோ டீசல், பயோ பெட்ரோல்,எத்தனால் தயாரித்து கொடுக்கப்படும் ,

   அணுகவும்,

   வவ்வால்,
   வவ்வால் மரபுசாரா எரிசக்தி முனைப்பகம்,
   வண்டலூர் உயிரியியல் பூங்கா,
   சென்னை.
   இந்தியா.

   பி.கு:

   எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.போலிகளை கண்டு ஏமாறாதீர்கள், பேட்மேன் பிராண்டு தானா என பார்த்து வாங்கவும்!!!!

   Delete
  2. நன்றி சகோ வடுவூர் குமார்.நன்று சகோ வவ்வால்

   Delete
  3. சகோ.சார்வாகன்,

   எல்லாம் ஒரு சுய நலம் தான், அரேபியாவில் எண்ணை தீர்ந்துவிட்டால் நானும் ஒரு பயோ டீசல் நிறுவனம் ஆரம்பிச்சு தொழிலதிபர் ஆகிடலாம்னு தான் ,இப்போ அராபியா பெட்ரோல் கிடைகுதேன்னு எவனும் பையோ டீசல் வாங்க மாட்டாங்க, தீர்ந்துட்டா நாம சொல்லுற விலைக்கு வாங்க வருவாங்க.

   அரேபிய ஷேக்குகள் கூட நம்ம கிட்டே வேலைக்கு வரலாம்,அனைவருக்கும் ஒரே வகையான தொழிலாளர் சட்டம் மட்டுமே கடைப்பிடிக்கப்படும்,சு.பி சுவாமிகளே அழைத்து வரலாம் :-))

   --------

   பிராபல்யப்பதிவராக ஆகப்போறீங்க ,நிறைய அக்கப்போர் கூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சு :-))

   நமக்கும் நல்ல பொழுது போக்கு கிடைக்கும்!!!

   Delete
  4. சகோ வவ்வால்
   பின்னூட்டம் போட்டு மாள்வில்லை.வேறுதளங்களுக்கும் செல்ல் முடியவில்லை!!
   நன்றி

   Delete
 20. எண்ணைவளம் தீருமென்பது தெரிந்த செய்தி, இவ்வளவு விரைவில் தீருமென்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, நாம் வாழும் காலத்திலேயே சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம் என நினைக்கும் பொழுது சிறிது அச்சமாக உள்ளது. எண்ணெய் வளம் தீர்ந்தால் ஏற்படும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களைக் குறித்துக் கணிப்புகள் ஏதும் காணக்கிடைத்தால் கட்டுரையாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள். உலகின் மொத்த எண்ணை இருப்பு நிலவரம், அது காலியாகும் உத்தேச காலம் என்பன போன்ற தகவல்களைச் சேர்த்திருந்தால் கட்டுரை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அருமையான கட்டுரைக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சகோ சீனிவாசன்
   நம் தளத்தின் கீழ் புவிக் கடிகாரம்[Earth Clock widget ] இணைத்து இருக்கிறோம் பாருங்கள். அதில் நீங்கள் கேட்ட விவரம் அவ்வப்போது ஒடிக் கொண்டே இருக்கும்.

   நீங்கள் வேண்டுமானாலும் உங்கள் தளத்தில் பொருத்திக் கொள்ளுங்கள்!!!
   http://www.poodwaddle.com/clocks/earthclock/


   நன்றி
   நன்றி!!

   Delete
 21. ***வடுவூர் குமார்September 8, 2012 8:37 PM

  சவுதிக்கு 12 வருடம் என்றால் இந்தியாவுக்கு எவ்வளவு ஆண்டு இருக்கும்? சீக்கிரமா காரை விற்றுவிட்டு சைக்கிளில் போக கற்றுக்கொள்ள வேண்டும்.***

  இப்படியெல்லாம் நம்மாளு ப்ராக்டிகல்லா யோசிச்சான்னா அவன் எங்கேயோ போயிருப்பான்ங்க.

  ஏன் இவனுக சவுதில பிச்சை எடுத்த எண்ணையை ஊத்திக்கிட்டு, கொரியன்/ஜப்பானியர்/அமெரிக்கன்/ஜெர்மன்/இட்டாலியன் தயாரிச்ச கார்களை வெட்கமே இல்லாம அநியாய வெலைகொடுத்து வாங்கி அதுல ஜம்பமா உக்காந்து ஓட்டிக்கிட்டு டாஸ்மாக்ல போயி தண்ணியடிச்சுக்கிட்டு மான ரோசம் இல்லாம வாய்கிழியப் பேசிக்கிட்டு இருக்கானுக சொல்லுங்க?

  ரஸ்யாக்காரன் உதவியுடன் நம்ம எடுபிடிகளை வச்சு தயாரிச்ச அணுகுண்டை நமக்கு நமக்கே வச்சு வெடிச்சு எல்லாரையும் அனுப்பினால்க்கூட, அப்படி அனுப்பிய அந்த நாட்டுப் பற்றாளலனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

  ஏன்னா முட்டாள்களை கடவுளுக்கு பிடிக்காதாம்! இந்த வாய்ச்சொல்லில் வீரர்களை எப்படி பிடிக்கும்?

  ReplyDelete
  Replies
  1. மதிப்பிற்குறிய வருண் அய்யா,
   என்ன சொல்ல வருகிறீர்கள்?

   //ஏன் இவனுக சவுதில பிச்சை எடுத்த எண்ணையை ஊத்திக்கிட்டு, கொரியன்/ஜப்பானியர்/அமெரிக்கன்/ஜெர்மன்/இட்டாலியன் தயாரிச்ச கார்களை வெட்கமே இல்லாம அநியாய வெலைகொடுத்து வாங்கி அதுல ஜம்பமா உக்காந்து ஓட்டிக்கிட்டு டாஸ்மாக்ல போயி தண்ணியடிச்சுக்கிட்டு மான ரோசம் இல்லாம வாய்கிழியப் பேசிக்கிட்டு இருக்கானுக சொல்லுங்க?//

   விலை கொடுத்து வாங்குகிறோம்.இலவசமாக அல்ல!!நீங்கள் அமரிக்காவில் பணி செய்து கூலி வாங்குவது போல்!

   // அப்படி அனுப்பிய அந்த நாட்டுப் பற்றாளலனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். //

   இது ஜிஹாத் செய்து சுவனத்தில் இடம் பெற துடிக்கும் மத தீவிரவாதி பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். உங்களுக்கும் புரிய ஆரம்பித்து விட்டதா???
   நல்லது.

   நன்றி!!

   Delete
  2. அண்ணே!!! உங்களுக்கு என்ன வியாதி?

   மதம் பத்தி நான் என்ன சொல்லியுள்ளேன்? மேலே வாசியும்!

   எதுக்கு மதத்தைப் பிடித்துக்கொண்டு தொங்கி ஊஞ்சல் ஆடுறேள்???

   Delete
  3. சகோ என்றோ நண்பரே என்றே அழைக்கக்கூடாது என்று உம்முடைய பத்வில் சொல்லி விடு அண்ணே என்றால் நான் எப்படி அழைப்பது?

   சரி மதிப்பும் மரியாதைக்குறிய அமெரிக்க குடிமகன் வருண் அய்யா அவர்களே!!

   ஊஞ்சல் ஆடுவது நானா??? எப்படி விளக்கவும். இப்பதிவில் சவுதியில் பொ.ஆ 2030 ல் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அள்வுக்கு இருக்காது என்ற சிட்டி கார்ப் நிறுவனத்தின் கணிப்பினை வெளியிட்டோம். இப்படி சீக்கிரம் எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போவதன் காரணி அவர்களின் தனிப்பட்ட எண்ணெய் தேவை அதிகரிப்பு என்றும் கூறுகிறோம். இதில் எந்த மதத்தை பிடித்து ஊஞ்சல் ஆடுகிறோம்??

   ஆகவே எண்ணெய் சாரா தொழில் நுட்பம் தேவை அதிகரிக்கலாம். சவுதி அணு உலை,சூரிய மின்சாரம் பயன்படுத்தும் வழிவகைகளை தேடுகிறது.
   ********

   நீர் சொன்னது
   / ரஸ்யாக்காரன் உதவியுடன் நம்ம எடுபிடிகளை வச்சு தயாரிச்ச அணுகுண்டை நமக்கு நமக்கே வச்சு வெடிச்சு எல்லாரையும் அனுப்பினால்க்கூட, அப்படி அனுப்பிய அந்த நாட்டுப் பற்றாளலனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.

   ஏன்னா முட்டாள்களை கடவுளுக்கு பிடிக்காதாம்! இந்த வாய்ச்சொல்லில் வீரர்களை எப்படி பிடிக்கும்? //

   நான் சொன்னது இது!!

   //இது ஜிஹாத் செய்து சுவனத்தில் இடம் பெற துடிக்கும் மத தீவிரவாதி பற்றி கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.//

   நீர் சொன்னது இதில்லையா அப்புறம் வேறு என்ன? இப்படி துடிக்கிறீர்?

   ஆமாம் எதுக்கு எப்போதும் பிராமண‌ர் போல் பேசுகிறீர்?ஏன் சாதியை பிடித்து தொங்குகிறீர்???

   சந்தேகம் வலுக்கிறது!!!!!!!   நன்றி மேதகு அய்யா!!!!!!

   Delete
 22. ***ராவணன்September 8, 2012 7:27 PM

  வரும் காலங்களில் சவுதி பிச்சைக்காரர்களை மும்பை, டில்லி வீதிகளில் பார்க்கலாம்.
  ஏன்...சென்னை, கோவையில் கூட பார்க்கலாம்.***

  அண்ணே ராவணன் யாரு தெரியுமில்லை?

  உலகப் புகழ் மும்பைல பிச்சைக்காரர்களை வச்சு பொழைப்பு நடத்துற தாதாக்களுக்கு லீகல் அட்வைசர்!!!

  அனுபவம் பேசுது!!!

  ReplyDelete
  Replies
  1. என்னங்க வருண் அய்யா

   கிளுகிளு கிசுகிசு எதுவும் கிடைக்கவில்லையா!!

   நீங்கள் எழுதுவது

   1. யாரையாவது திட்டுவது.

   2. கிளுகிளு கிசுகிசு

   அதுக்கு மேலே சரக்கு இல்லை!!!!!!!!!!!!!!!

   தங்கம் பற்றிய அறிவியல் பதிவு என்கிறீர் அது விக்கிபிடியாவில் இருப்பதை சுட்டு போடுகிறீர்,

   இங்கே வந்து புலம்புகிறீர்.ஏதோ 50 ஆய்வுக் கட்டுரை எழுதியதாக் சொன்னீர்?? சுட்டி கொடுக்க மறுத்து விட்டிர்.சரி.

   அது தொடர்பாக தமிழில் எழுதலாம் அல்லவா??


   முதலில் எழுதும்!!!. உருப்படியாக எதையாவது செய்யும்! பதிவுக்கு தொடர்பில்லாமல் ஏன் புலம்புகிறீர் ?

   நன்றி!!!

   Delete
  2. சகோ.சார்வாகன்,

   //தங்கம் பற்றிய அறிவியல் பதிவு என்கிறீர் அது விக்கிபிடியாவில் இருப்பதை சுட்டு போடுகிறீர்,//

   அதுவும் பிழையாக , :-))

   நீங்களும் படிச்சிங்களோ,அதை அப்போவே சொல்லப்போய் தான் என் பின்னால சுத்துறார்,இனிமே உங்க பின்னால சுத்துவார், கையில ஒரு உருட்டுக்கட்டை வச்சுக்கோங்க இனிமே. இல்லைனா ஓவரா கடிக்கும் :-))

   Delete
  3. அண்ணே!!!

   இப்போ நான் உங்க தரமான தளத்தில் சமரசம் தேடி அலைகிறேன்.

   * மும்பைல பிச்சைக்காரர்கள் அதிகமாமே?

   * பொறம்போக்கு நிலத்தில் வாழும் யோக்கியர்கள் இந்தியாவில் அதிகமாமே?

   * பிச்சைக்காரர்களை வச்சு ஈனப்பொழைப்பு நடத்துறவா உம் தேசத்தில் அதிகமாமே?

   இல்லை பிச்சை பத்தி அம்பி ராவனன் ஏதோ எடக்கு மடக்கா பேசினா.. அதான், பிச்சையெடுப்பதில் எக்ஸ்பர்ட்கள் உள்ள பாரததேச ஞானிகளிடம் பிச்சைத் தொழில் பத்தி அறிஞ்சிக்கலாம்னு..

   நீங்க என்னனா, ஏதோ ஒரு "குப்பைத்தளத்தைப்" பேசுறேள்??

   ஏண்ணா இப்படி செய்றேள்?! :(((

   Delete

  4. * மும்பைல பிச்சைக்காரர்கள் அதிகமாமே?

   ஆமாம்

   * பொறம்போக்கு நிலத்தில் வாழும் யோக்கியர்கள் இந்தியாவில் அதிகமாமே?

   ஆமாம்

   * பிச்சைக்காரர்களை வச்சு ஈனப்பொழைப்பு நடத்துறவா உம் தேசத்தில் அதிகமாமே?

   ஆமாம்.
   நாம் உண்மைகளை மறுப்பது இல்லை. என இந்தியா அப்படித்தான்.இக்கொடுமைகளை தவிர்க்கவே முயல்கிறோம்.இதேபோல் அமெரிக்காவோ வேறு நாடோ எதிர்கால்த்தில் மாறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை வருண் அய்யா,

   இன்னும் வெளிநாடுகளில் இருந்து எதிர்காலத்தில் விரட்டி விட்டால் இங்கேதான் வந்தாக வேண்டும் அய்யா

   ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்!!!!!! என்று இங்கேயே நல்ல முறையில் முலாம் போட்டு கொடுக்கலாம்.

   அப்படிப்பட்ட சூழலில் [வேதியியல் வல்லுனர் என்று சொல்வதால்]வவ்வால பயோ எரிபொருள் நிறுவனத்தில் வேலை வேண்டும் எனில் இன்றில் இருந்து 10 அறிவியல் பதிவுகள் எழுதி காட்ட வேண்டும்.பரிசோதித்து திருப்தி இருந்தால் பரிந்துரை செகிறேன்.


   சாதிப் பேச்சு வழக்கை மாற்றவும் வருண் அய்யா!!!!!!

   இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்?

   நன்றி

   Delete
 23. ***அமெரிக்க வெள்யிலே ரவுடி.வீட்டிலே நல்ல அப்பா!!. இந்த அமரிக்க அப்பாவுக்கு ஏகப்பட்ட சின்ன வீடு வச்சுக்கிட்டு ,கிடைத்தவனை அடித்து பிடுங்கி ரோட்டில் தண்ணிய போட்டுக்கிட்டு பண்ர ரவுசு தாங்க முடியவில்லை!!***

  அண்ணே நீங்க உலக அதிசயத்தில் ஒண்ணு. அமெரிக்காக்காரன் பத்தி இவ்ளோ தவறா புரிஞ்சுக்கிட்ட அதிசயம் நீங்க.

  இந்தியாதான் இந்த ஏரியா சண்டியராமில்ல? பக்கத்து நாட்டுல ஏதாவது பிரச்சினைனா, ஐ பி கே எஃப்னு அனுப்பி கற்பழிக்கிறானுகனு சொல்றாக?

  அமெரிக்காக்காரனிடம் கத்துக்கிட்டீங்களா?

  அது ஏன் நம்ம 24 நாலு மணி நேரமும் திட்டுறவன் செய்றதையெல்லாம் ஒரு 25 வருடத்துக்கு பின்னால பொறுப்பா அப்ப்டியே காப்பியடிச்சு செஞ்சுக்கிட்டு, அவனையே திட்டிக்கிட்டு..அசிங்கமா இல்லை?

  ReplyDelete
 24. வருண் அய்யா,

  1. அமெரிக்கா அப்படி இல்லை என நிரூபிக்க வேண்டும்.

  இந்தியாவும் அப்படித்தான் என்கிறீர்,இருந்து விட்டுப் போகட்டும்.ஆனாலும் இந்தியாவுக்கு சுரண்டல்,திருட்டுத் தந்திரத்தில் திறமை பத்தாது.

  அமரிக்காவை அதரிப்போர் என்றால் எபோதும் செய்ய வேண்டும்.

  அமரிக்க ஆதரவாளர் நீர் எனின் 9/11 என்பது அமெரிக்க யூத கூட்டுச் சதி என உமது ஊக்கமூட்டுவோர் கருத்துக்கு என்றாவது மறுப்பு சொன்னது உண்டா?

  அமெரிகாவை தினமும் திட்டும் கூட்டம் யார்?

  இங்கே பாரும் சகோ இராசநட தளத்தில் உம் நண்பர்கள் இட்ட பின்னூட்டம்

  //சுவனப் பிரியன் said...
  சகோ ராஜநடராஜன்!

  //உலக மக்கள் தொகையில் 5 சதவீதமுள்ள அமெரிக்கா கிட்டத்தட்ட 25 சதவீத உலக வளங்களை அனுபவிக்கிறது.உயர்ந்த கட்டிடங்கள்,முதலாளித்துவ திட்டங்கள்,கண்டுபிடிப்புக்கள்,பாதுகாப்பு என வளமாக அமெரிக்கா இருப்பதைப் பார்த்து ஏனைய நாடுகளும் அதுமாதிரியான வாழ்க்கை முறையை விரும்புகினறன.//

  அமெரிக்காவின் தற்போதய நிலை நீங்கள் குறிப்பிடும்படியாக இல்லை. இன்னும் 10 ஆண்டுகள் போனால் நம் நாட்டில் வேலை கேட்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :-)
  September 6, 2012 8:42 ப்ம்//

  அப்போ நீரும் இந்தியா வந்து தங்க முலாம் பூசலியோ என தெருத் தெருவாக கூவுவீர் எனலாம்!!!

  மதம் மாற 1 கோடி கொடுத்தால் மாறூவேன் என்று விலை சொன்னீர்

  //வருண் said...
  என்னைப் பொருத்தவரையில் மதம் என்பது அர்த்தமற்ற ஒன்று. கடவுளே இல்லை அப்புறம் என்ன மதமாவது மண்ணாங்கட்டியாவது?

  இஸ்லாமியரும், கிருத்தவர்களும் வெளிப்படையா தன் மதப்பற்றை காட்டுறாங்க.

  இந்துக்களில்தான் பலவகை!!!

  உயர்சாதி இந்துக்கள் மற்றும் பார்ப்பணர்கள் இந்து மதத்தை பத்தி ரொம்பவே கவலைப்படுறாங்க.

  அப்புறம் நம்ம கடவுள் நம்பிக்கை இல்லை, நான் ஆண்மீகவாதி அது இதுனு இந்துக்கள்ல நெறையாப்பேரு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இவங்க பேசுறதெல்லாம் பொதுநலம், கடவுள் இல்லை என்பதுபோலவும் பேசுவாங்க.

  "ஆனால்"

  வெளீப்படையாக பதப்பற்றுடன் அலையும் இஸ்லாமியர்கள் மற்றும் கிருத்தவர்களை இவர்களால் "சகிச்சுக்க முடியாது". இவங்க ஆண்மீகம், கடவுள் நம்பிக்கையின்மை எல்லாமே வேடம். இதுக்கு வெளிப்படையா தன்மதம் பெருச்னு சொல்ற பார்ப்பனர்கள், இஸ்லாமியர், கிருத்தவர்கள் எவ்வளவோ மேல்!

  எனக்கெல்லாம் 1 கோடி தந்து நீ இந்த மதத்துக்கு மாறுனா நான் உடனே மாறிடுவேன். பேப்பர்ல மட்டும்தான் நான் அந்த மதத்தை சேர்ந்தவன். மனதளவில் மதமோ, கடவுளோ எனக்கு அர்த்தமில்லாதது. இல்லாத கடவுளை அடைய, இந்த மதத்துக்கு நீ வந்தால் உனக்கு ஒரு கோடினு சொன்னால், நான் தாவிடுவேன். :) அப்படி யாராவது திருப்பூர் பக்கம் வந்தா சொல்லுங்க. நான் available!! :))

  September 1, 2012 4:39 AM

  .//

  நல்லது.இப்படி மாறமல் ஆதரவு பின்னூட்டம் மட்டும் போட விலை படிந்து விட்டதா!!!

  எப்பவும் ஒரே மாதிரி இருங்கப்பு!!!

  அடிக்கடி வாங்க

  நன்றி!!!

  ReplyDelete
  Replies
  1. **ஆனாலும் இந்தியாவுக்கு சுரண்டல்,திருட்டுத் தந்திரத்தில் திறமை பத்தாது.***

   இந்தியாவுக்கு என்ன தெரியும்னு சொல்லுங்கோ??

   * கார்கள் தயாரிக்கத் தெரியுமா?

   * மாற்று எரி பொருள் தயாரிக்கத் தெரியுமா?

   எனக்குத் தெரிய..

   * பிச்சைக்காரகளை வச்சு பொழைப்பு நடத்த மட்டும்தான் தெரியும்.

   * பண்டாரங்கள் எல்லாம் நாத்திக வேடம் தரித்து அலையத் தெரியும்

   * டாஸ்மாக்ல தண்ணி யடிச்சுட்டு பதிவுலகில் வந்து நான் பெரிய புடுங்கினு போற இடமெல்லாம் வாந்தியெடுக்கத் தெரியும்.

   வேறென்ன தெரியும்???

   சொல்லுங்கோண்ணா!


   Delete
  2. ***இங்கே பாரும் சகோ இராசநட தளத்தில் உம் நண்பர்கள் இட்ட பின்னூட்டம்**

   இது வேறயா?? நான் என்ன என் நண்பர்களுக்கு டிஃபெண்ஸ் லாயரா என்ன?

   இதெல்லாம் உமக்கே நன்னாயிருக்கா??

   Delete
  3. ***நல்லது.இப்படி மாறமல் ஆதரவு பின்னூட்டம் மட்டும் போட விலை படிந்து விட்டதா!!!

   எப்பவும் ஒரே மாதிரி இருங்கப்பு!!!

   அடிக்கடி வாங்க

   நன்றி!!!***

   ஒரு கோடி ரெடியா?

   இன்னும் இல்லையா?

   அப்புறம் எதுக்கு இதையெல்லாம் தோண்டி வந்துக்கிட்டு!

   நான் என்ன நாத்திக வேடம் தரித்த பண்டாரமா? மாத்தி மாத்தி பேச?

   அப்போ சொன்னதுதான். இன்னும் என் விலை ஒரு கோடிதான்.

   ஆனா, யாராவது 4 கோடி கொடுத்தால்?

   I will take the best offer. :)))

   Delete

  4. வருண் அய்யா,
   சஸ்பென்ஸ் கொடுக்காதீர்!!

   4 கோடி கொடுத்தால் என்ன செய்வீர்?? சொல்லும் மிக ஆவலாக இருகிறோம்.
   //I will take the best offer.//

   எல்லாவற்றுக்கும் ரேட் போட்டுவிட்டால் விள்மபரம் செய்ய எளிதாகி விடும்!!!.

   உங்க நேர்மை எனக்கு பிடித்து இருக்கிறது!!! I like it!!!

   நன்றி

   Delete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
  சமரசம் உலாவும் இடமே

  ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
  அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
  ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே<
  ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
  சமரசம் உலாவும் இடமே
  நம் வாழ்வில் காணா
  சமரசம் உலாவும் இடமே

  -மருதகாசி

  ReplyDelete
  Replies
  1. பாடல்: சமரசம் உலாவும் இடமே

   திரைப்படம்: ரம்பையின் காதல்

   பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

   இயற்றியவர்: மருதகாசி

   இசை: டி.ஆர். பாப்பா
   ஆண்டு: 1956

   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே

   ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
   எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
   எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
   தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
   தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
   உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே

   ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
   அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
   ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
   ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே

   சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
   சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
   ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
   ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
   எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
   எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
   உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே
   சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
   சமரசம் உலாவும் இடமே

   Delete
 27. சாருவால்

  சார்வாகன் வவ்வால் ரெண்டையும் இணைத்துப் பார்த்தேன். இந்த பெயர் வந்தது. பெரும்பாலும் எந்த பின்னூட்டங்களுக்கும் மின் அஞ்சல் வழியே தொடர்வதுஇல்லை. ஆனால் உங்களுக்கு வந்த வந்து கொண்டுருக்கின்ற இந்த பதில்களை பார்க்கும் போது ஒவ்வொரு உங்களின் பதிவுக்கும் முதல் ஆளா பலோ ஆஃப் போட்டு நிறைய கத்துக்கலாம் போல.

  முடித்து வைத்து விட்டு அடுத்து ஆரம்பிங்க நண்பா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ
   நீங்க சொன்னால் சரிதான்.நாம்[ அவர்கள் நிறுத்தாவிட்டாலும்] முதலில் [இப்பதிவில்] நிறுத்தி விட்டோம்.

   அடுத்த பதிவு கணிதம் போட்டால் ஒருவரும் வரமாட்டார்.தனியா டீ ஆத்துவேன். பாவம் என்று சிலர் மட்டும் வந்து ஆறுதல் பின்னூட்டம் இடுவார்.

   நன்றி!!!!!!!!!!

   Delete
 28. //முடித்து வைத்து விட்டு அடுத்து ஆரம்பிங்க நண்பா.//

  அடுத்த சண்டையத்தானே சொல்லுறீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அடுத்த ஆடு வந்ததும் சீக்கிரமாவே நம்ம சகோ பிரியாணி போடுவார்!

  ReplyDelete
  Replies
  1. சகோ நந்தவனத்தானுக்கு ஒரு ஒட்டக பிரியாணி full பார்சல்!!!!!!!

   நமக்கு அப்படியே பீஃப் பிரியாணி Half , போர்க் ஃப்ரை full பார்சல் சொல்லி விடுவோம்!!

   வேறு ஏதாவது !!!

   Delete
 29. ஜோதிஜி,

  ஏன் ,ஏன் இந்த கொலவெறி?

  என்னை திட்டவென்றே ஒரு கூட்டம் அலையுது ,அவங்கக்கிட்டே சார்வாகனை நோகாம கோத்து விடவா இந்த வேலை ?

  தலைவரே சார்வாகன் பாவம் ,அவருண்டு ,பரிணாம அறிவியல் உண்டுன்னு இருக்கார் அவருக்கும் சேர்த்து ஆப்பு வைப்பது ஏனோ?

  ReplyDelete
  Replies
  1. சகோ வவ்வால் எல்லாம் அவன் செயல்!!!!!!!!!!!!!11

   Delete
 30. சகோதரர் ஜோதிஜியின் அறிவுறுத்தலின் பேரில் இப்பதிவுக்கு [மட்டும்] பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகிறது.
  சகோக்கள் மன்னிக்கவும்!!!!!

  ReplyDelete