Thursday, September 6, 2012

நான் ஏன் படைப்புவாதி அல்ல!!!:காணொளி
வணக்கம் நண்பர்களே, 

படைப்புக் கொள்கை[creationism] என்பது இயற்கைக்கு மேம்பட்ட உணர்வுள்ள‌, மிக்க அறிவு கொண்ட சக்தியால் பேரண்டம்[universe] அதில் உள்ள அனைத்து உயிருள்ள ,உயிரற்ற விடயங்களும் உருவாக்கப்பட்டன என்பதே. ஆனால் இப்போதைய அறிவியலின் கணிப்பின் படி பேரண்டம் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் சிறுபுள்ளியில் இருந்து விரிவடைந்து பல கோடி விண்மீன் திரட்சிகள்[Galaxies] தோன்றின.அதில் ஒன்று நமது பால்வீதி மண்டலம் 1320 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் உள்ள கோடிக்கணக்கான் விண்மீன்களில்[stars] ஒன்றான கதிரவன் சுமார் 457 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அத்னை சுற்றி வரும் மூன்றாவது கோள் ஆகிய நமது பூமி சுமார் 454 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 

பூமியில் முதல் ஒரு செல் உயிர் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதில் இருந்து கிளைத்து தழைத்தே மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்தன. 


உயிரினங்களில் மனிதன் மட்டுமே மதம் சார் நம்பிக்கைகள் கொள்வதும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி அனைத்தையும் படைத்து,காத்து வழிநடத்தி வருகிறது என்ற நம்பிக்கையே மதத்தின் ஆணி வேர் ஆகும். 

உயிரற்ற பொருள்களான விண்மீன் திரட்சிகள், விண்மீன்கள்,கோள்கள்,துணக்கோள்களின் கால ரீதியான மாற்றங்களின் அடிப்படையிலான தோற்ற விளக்கத்தை இப்போது பெரும்பானமையான மதவாதிகள் ஏற்கின்றனர். அவர்களை அதிகம் உறுத்துவது மனிதன் என்பவனும் பிற விலங்குகள் போலவே தோன்றினான் என்பதுதான். மனிதனுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டது என்பதும் ,அப்படிப் படைத்த சக்தியை வழிபடாமல் போவது தவறு என்பதே மதவாதிகளின் வாதம்.பரிணாம கொள்கை பெரும்பானமையான மதவாதிகளால் எதிர்க்கப்படுவதும் இதர பேரண்ட தோற்றம் உள்ளிட்ட உயிரற்ற பொருள்கள் மீதான அறிவியல் விளக்கத்தை மதப் புத்தகத்தில் இருப்பதாக ஏதோ ஒருவகையில் விளக்கம் அளிப்பதும் நாம் அறிந்த விடயமே!!! 

இக்காணொளி படைப்புக் கொள்கை மதப் பிரச்சாரகர்களின் தந்திரங்களை அலசுகிறது.இப்போதைய‌ மனித இனம்[நாம்!!! நாம்!! நாம்!!!] அறிவியலில் ஹோமோ சேஃபியன் என அழைக்கப்படுகிறது.இபோதைய ஹோமோ சேஃபியன் மனிதனின் தோற்றம் சுமார் 2.5 இலட்சம் ஆண்டுகள் முன்பு. 

முதல் பகுதி மனிதனின் படிம வரலாறு, நியாண்டர்தால்,ஹோமோ எரக்டஸ் போன்ற இதர மனித உயிரின‌ங்கள் ஒப்பீடு பற்றி விளக்குகிறது. 

http://www.talkorigins.org/faqs/homs/species.html 

இரண்டாம் பகுதி ஆபிரஹாமிய மதங்களின் நோவா(நூஹ்) கப்பல் கதையைச் சாத்தியமற்றது எனக் காட்டுகிறது. இப்போது பல மதவாதிகள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உலக அள்வில் அல்ல ,அப்பகுத்யில் மட்டும் ஏற்பட்டது என்று{ அறிவியலில் ஆதாரம் இன்மையால்]வழக்கம் போல் மாற்று விளக்கம் அளிக்கின்றனர். 

இரண்டாம் பகுதி முடிவில் யானைகளின் பரிணாம வளர்ச்சியையும் படிமங்களின் ஊடாக விளக்குகிறது. 

மூன்றாம் பகுதியில் படைப்பு கொள்கையாளர்களின் சில நகைச்சுவை விளக்கங்களையும் ஆவணப்படுத்துகிறது. 

இறுதி பகுதி பெரு விரிவாக்கம், அதன் ஆதாரமான சிவப்பு விலக்கம் போன்றவற்றையும் விவாதிக்கிறது. 

காணொளி கண்டு மகிழ்க!!!! 

நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!36 comments:

 1. உலகம் தோன்றி 7000 வருடம்தான் ஆகுது, கணக்கு கேட்ட ஏழாயிரத்த ஏழு மில்லியனோடு பெருக்கு கடவுள் கணக்கு அப்படித்தான்னு சொல்லுவோம், எங்க சாமி மட்டும்தான் சாமி மத்ததெல்லாம் ஹம்பக்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ குடுகுடுப்பை,


   கணக்கு மதவாதி நாட்டாமைகள் சொல்கிறது என்றுதான் நாமும் பல வகைக் கணிதம் பதிவு போட்டு வைத்து இருக்கோம்.இந்த கணக்கு, அந்தக் கணக்கு என மனப் பிணக்கு வர வைத்து விடுவொமே!.

   நாம் சொல்வது "நாட்டாமை கணக்கை மாத்தி சொல்லு" என்பதுதான்!!!

   நன்றி!!

   Delete
 2. நமக்கு பரிச்சயமான விடயங்கள் என்றாலும், காணொளியைப் பார்த்துவிட்டு பதில் கூறுகின்றேன் !!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இக்பால் செல்வன்,

   ஆம் அனைத்தும் அறிந்த விடயம்தான் என்றாலும் காணொளி பல விடயங்களை அருமையாக விள்க்கி செல்கிறது. காணொளியில் உள்ள படைப்பியல் வாதங்களையும் ,நம் தமிழ் பதிவுலகப் படைப்பியல் விளமபரங்களையும் ஒப்பீடு செய்தால் படைப்பியலின் பரிணாம வளர்ச்சியும் அறிய முடியும்.பரிணம்த்தின் எதிர்வாதங்களும் பரிணாம வளர்ச்சியைத் தவிர்க்க இயலாது!!!

   நன்றி

   Delete
 3. சகோ.சார்வாகன் ,

  நல்லப்பகிர்வு, ஆனால் நீரே ஒரு படைப்புவாதி ஆனால் இப்படியெல்லாம் சொல்லலாமா?

  ஆமாம் எத்தனை படைப்புகள் வலைப்பதிவில் செய்துள்ளீர்கள் ,அப்படியானால் படைப்புவாதி தானே :-))

  ஒரு ராஜா பாட்டில் வருவது...

  மடை திறந்து பாயும் நதியலை நான்...

  தடைகடந்து பாடும் சிறு குயில் நான்...

  ...

  புதுப்புது ராகங்கள் படைப்பதால் நானும் பிரம்மனே ....

  எனவே புது புது சிந்தனைகளை படைப்பவரெல்லாம் படைப்புவாதியே .... ஓஹே ஹோ... ஓ..ஓவ் ...

  stone age ..bronz age- iron age ... அப்புறம் தான் நாகரீகம் ,மொழி அறிவு எல்லாம் வந்துச்சு , இன்றும் குறியீடுகளாக எழுதப்பட்ட அடிப்படை மொழி எச்சங்களே அகழ்வில் கிடைக்கிறது அப்படி இருக்க பல்லாயிரம் ஆண்டுகால புராணம் என்பது எங்கணம் சாத்தியம் என்பதை மார்க்கப்பந்துகளுக்கு புரிய வேண்டாமா?

  இந்த காலத்தில் இறைவன் என்னோட பேசினான் ,நான் இறைத்தூதர் என சொன்னால் கண்டிப்பாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பாடுவார்கள், இல்லை என்றால் அப்படி சொல்லிக்கொள்பவரை செக்ஸ் சாமியார் என மீடியா வீடியோ எடுத்து வெட்ட வெளிச்சம் ஆக்கும் :-))

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வவ்வால்,

   நான் படைப்புவாதியா, இல்லை ஏற்கெனவெ இணையத்தில் இருப்பவற்றை வெட்டி ஒட்டி,மொழி மாற்றம் செய்து பதிவாகப் பரிணாம மாற்றம் கொண்டுவருகிறேனா??
   ***

   இசைஞானி இளையராஜா நிழல்கள்[பொ.ஆ 1980] படத்தில் இசை இறக்கிய பாடலை காட்டி படைப்பு என்கிறீர்.

   ஆனால்
   இதயக் கோயில்[பொ.ஆ 1985] திரைப்படத்தில் இசை இறக்கிய பாடலில்

   " பாடல்கள் கோடி கோடி
   எதுவும் புதிதில்லை
   இராகங்கள் கோடிக் கோடி
   எதுவும் புதிதில்லை"

   என்று பாடியதை மறைத்தது அறிய முடியாதா??

   எது கடைசியாக் இறங்கியதோ அது அதற்கு மாறான முந்தைய கருத்துகளை நீக்கி விடும் என்பது கூட அறிய மாட்டீரா??
   *****
   //பல்லாயிரம் ஆண்டுகாலப் புராணம் என்பது எங்கணம் சாத்தியம் என்பதை மார்க்கப்பந்துகளுக்குப் புரிய வேண்டாமா? //
   இதைச் சொல்லி சொல்லியே ஓய்ந்து விட்டேன்.ஆதம் ஏவாள் என்பவர்கள் இருந்து இருந்தாலும் காட்டு மிராண்டி போல் மட்டுமே இருக்க முடியும்.உடை அணிந்து இருப்பதோ,பேசி இருப்பதோ சான்றுகள் இல்லை.இதெல்லாம் மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்த[சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்] பிறகே என்றால் யார் கேட்கிறார்.

   ஆதமில் இருந்து வேதம் இறக்க சைத்தான்/யூதன் அதனை மாற்ற/கெடுக்க‌ பல தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு வேதம் அதுவும் பல விளக்கங்கள் சொல்வதற்கு அடித்துக் கொண்டு பல பிரிவினர் இப்போதும் சாவது போல்!!!
   *********
   /இந்த காலத்தில் இறைவன் என்னோட பேசினான் ,நான் இறைத்தூதர் எனச் சொன்னால் கண்டிப்பாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பாடுவார்கள், /

   நீங்கள் கடவுளிடம் பேசினால் வழிபாடு.கடவுள் உங்களிடம் பேசினால் நீங்கள் கீழ்ப்பாக்கம் போய்விடுவது அனைவருக்கும் நல்லது!!

   நன்றி

   Delete
 4. பயனுள்ள பதிவு . அனைவருக்கும் பயன்படும் .

  ReplyDelete
 5. வாங்க சகோ நவஜோதி,
  உங்கள் பதிவுகள் பார்த்தேன்.மிக அருமை.ஏன் திரட்டிகளில் இணைப்பது இல்லை?
  எனினும் சந்தித்தது மகிழ்ச்சி.அடிக்கடி வாங்க!!!

  நன்றி

  ReplyDelete
 6. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை சகோ! மன்னிக்க

  ReplyDelete
 7. வணக்கம் புலவர் அய்யா,

  இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை அய்யா,பரிணாம கல்வி தமிழில் அளிக்கும் ஒரு எளிய முயற்சி அய்யா.

  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!

  ReplyDelete
 8. வணக்கம் சகோ,
  நல்லதொரு பதிவு அப்படியே காணொளியில் தமிழில் மொழிமாற்று பதிவு செய்து நண்பர்கள் உதவினால் நல்லது. பரிணாமவியலை தமிழில் புரிந்து கொள்ள இன்னும் ஏதுவாக இருக்கும். பதிவுக்கு நன்றி சகோ.

  ///இந்த காலத்தில் இறைவன் என்னோட பேசினான் ,நான் இறைத்தூதர் எனச் சொன்னால் கண்டிப்பாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பாடுவார்கள், //

  அந்தக் காலத்தில் மனநல மருத்துவமணை இல்லையே வவ்வால் நண்பா!!!!!!!!!!!

  இனியவன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ இனியவன்,
   // காணொளியில் தமிழில் மொழிமாற்று பதிவு செய்து நண்பர்கள் உதவினால் நல்லது. பரிணாமவியலை தமிழில் புரிந்து கொள்ள இன்னும் ஏதுவாக இருக்கும்.//

   நீங்கள் சொல்வது நல்ல விடயம்தான்.கூடுமான வரை பதிவில் தமிழில் ஒரு கருத்து சுருக்கம் கொடுத்து விடுகிறேன். ஒரு காணொளியை தமிழாக்கம் செய்வதற்கும் சில முயற்சி முன்னெடுப்புகள் தேவை. அறிவியலை தமிழில் கொண்டு வர வேண்டும் என்பதே நம் ஆசை. பார்ப்போம்.

   நன்றி

   Delete
 9. உங்கள் தளத்தின் பெயரை விக்கி பீடியா தளம் என்று மாற்றிக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஜோதிஜி,
   நான் என்ன அவ்வளவு கடினமாகவா எழுதுகிறேன்.தமிழ் விக்கிபிடியா எளிய தமிழில் அனைவரும் புரியும் படி இல்லை என்பது என் கருத்து.

   கருத்துக்கு நன்றி!

   Delete
 10. சகோ.நீங்க சொல்வதற்கெல்லாம் சங்கப்பாடல்களில் ஆதாரம் இருக்கிறதா? இலை மடிக்கிறதுக்கே யாரும் இன்னும் விடை சொல்ல முடியல:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ

   சங்கப் பாடல் என்றல் சாதிச் சங்கமா?/ மதச் சங்கமா? ஹி ஹி

   இது அறிவியல். ஆய்வு சஞ்சிகைகளில் மட்டுமே இருக்கும்!!

   இலை ,இலை என்பவர்கள் நம் கட்சி சின்னத்தை பற்றி பேசவில்லை என அம்மா நினைக்காதவரை பிரச்சினை இல்லை.அப்புறம் ஹி ஹி

   நன்றி!!

   Delete
 11. சகோ.சார்வாகன்!காணொளிகள் சார்ந்து அறிவியல் காட்சி படங்கள் நிறைய இருக்கின்றன.இவை சார்ந்து ஐன்ஸ்டீன்,நியூட்டன் மாதிரியான இறுதி தீர்ப்புக்கள் இல்லாத படி சிதறிக்கிடப்பதும்,கால காலமாக நம்பி வந்த நம்பிக்கையை சிதைப்பதும் சிக்கல்களாக இருக்கின்றன.

  முப்பது ஓட்டுகள் மைனஸ் குத்தும் வல்லமை மாதிரி உங்களுக்கும் சில பிளஸ் போடுபவர்கள் இருப்பது மாதிரியே உலகமும் சுழல்கிறது:)

  A hard nut to crack....the world opinion.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ வணக்கம்,

   அறிவியலை ஒருவர் அறிய விரும்பினால் இணையம் மூலம் அது எளிதே. எனினும் தமிழிலும் அறிவியல் கருத்துகள்,காணொளிகள் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்,அதன் மூலம் அனைவரும் பயன் அடைய வேண்டும் எனவே முயற்சிக்கிறோம்.

   மகாகவி பாரதி சொன்னது போல் எட்டுத்திக்கும் இணையத்தில் தேடி கலை மட்டுமல்ல சிந்தனை செல்வங்கள் அனைத்தையும் தமிழில் கொண்டு வருவோம்.

   நம்க்கு எதிர் ஓட்டு போடக்கூட யாரும் வரமாட்டார்கள். அப்படி போட வந்தாவது பதிவு படிக்க விரும்புகிறோம்!!.

   நன்றி

   Delete
 12. வவ்வாலுக்கு பலா பழம் கதை ஒன்று சொன்னேன்.அதையே இங்கே மாற்றிப் போட்டு விடலாம்:)எல்லோருக்கும் பலாப்பழத்தை உரிச்சு சாப்பிடும் பொறுமையும்,சந்தர்ப்பங்கள் கூட கிடைப்பதில்லை.இன்னும் சிலருக்கு இதுதான் பலாப்பழம் என படம் போட்டுக்கூட காட்ட வேண்டியிருக்கும்:)

  படைப்பு வாதிகளுக்கு மத நூல்கள் இருப்பது பலமாக இருப்பதோடு அதற்கான விளம்பரமும் அதிகம் காணப்படுகிறது.கிறுஸ்தவத்தின் மிஷினரிகள்,இஸ்லாத்தின் ஈகை,இந்து மத மறுபிறப்பு,புத்தனின் ஆசை சித்தாந்தம் என மனிதம் சார்ந்து மதங்கள் சிந்திப்பதும் பாக்டீரியாக்கள் உருவாக்கும் நோய்களுக்கும் கூட இறை நம்பிக்கையாகி மதங்கள் சார்ந்த படைப்புக் கொள்கையை நம்பும் குணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

  பரிணாமக் கோட்பாடுகள் மோட்டைப் பார்த்து யோசிக்கும் அறிவுஜீவிகளுக்கும்,உண்மைகளை கண்டறியும் அட்வென்சர்காரர்களுக்கும்,பகுத்தறிவுவாதிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்ளூம் சித்தாந்தவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது.

  உலகம் உருண்டைன்னு கலிலியோ சொன்னது போல் பரிணாம கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் காலங்கள் எதிர்காலத்தில் உருவாகும்.

  ReplyDelete
  Replies
  1. சகோ இராசநட,
   //படைப்பு வாதிகளுக்கு மத நூல்கள் இருப்பது பலமாக இருப்பதோடு அதற்கான விளம்பரமும் அதிகம் காணப்படுகிறது.//

   இதில் நான் மாறு படுகிறேன்.மத நூல்கள் பல்வீனமாக உள்ளன.மத நூல்களின் வரலாற்று சான்றுகள், தொன்மைப் பிரதிகள், மொழியியல் ஆய்வுகள் போன்றவைகள் மதவாதிகள்க்கு கிலி ஏற்படுத்தும் விடயங்கள்.

   அவர்களின் விவாதங்கள் அனைத்துமே வில்லியம் பாலேயின் இயற்கை மதவியல் சார்ந்தே இருக்கும்.

   http://en.wikipedia.org/wiki/Existence_of_God

   http://www.infidels.org/library/modern/theism/arguments.html

   1. முதல் காரணி வாதம்.[ ப்டைப்பு இருந்தல் படைப்பு சக்தி]
   2.ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பேரண்டம்.[ விதிகளும் படைக்கப்பட்டன]


   //பரிணாமக் கோட்பாடுகள் மோட்டைப் பார்த்து யோசிக்கும் அறிவுஜீவிகளுக்கும்,உண்மைகளை கண்டறியும் அட்வென்சர்காரர்களுக்கும்,பகுத்தறிவுவாதிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்றுக்கொள்ளூம் சித்தாந்தவாதிகளுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது.

   உலகம் உருண்டைன்னு கலிலியோ சொன்னது போல் பரிணாம கொள்கையையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் காலங்கள் எதிர்காலத்தில் உருவாகும்.//

   தமிழ் பதிவுலகில் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மறுப்பு சொல்வது எளிதாகி விட்டது.இப்போது வருவது மிகவும் அருகி வருகிறது. ஏன்??


   பலருக்கும் கேள்வி கேட்கும்,சரியான் விடயத்தை அறியும் மன்ப்பாங்கு வந்து விட்டது.

   விரைவில் ஒரு எதிர்ப்பு பதிவு வரும்,எதிர் கொள்ள தயாராகவே இருக்கிறோம்!

   பரிணாமம் என்பது இபோதைய அறிவியல் கொள்கை, பெரும்பானமையான பல்கலைகழகங்களில், பள்ளிகளில் கற்பிக்கப் படுகிறது. நூற்றுக் கண்க்கான் ஆய்வு சஞ்சிக்கைகள், ஆண்டுக்கு பல ஆயிரக் கண்க்கான் ஆய்வுக்கட்டுரைகள் என்று முன்னேற்றப் பாதையில் செல்கிறது.

   சான்றுகள், கணிப்புகள் அறிவியலில் உண்டு.முதலில் நன்கு நிரூபிக்கப்பட்ட சான்றுகளை அறிந்தாலே போதுமானது. மத்வாதிகளின் விவாதம் கணிப்புகளின் மீதே இருக்கும் என்பதை நாம் விளக்கி வருகிறோம்.

   இபோதும் பரிணாமம் பலராலும் ஏற்கப்படுவதை விக்கி சுட்டி மூலம் அறியலாம். பரிணாமம் பெரும்பானமை சாமான்ய மக்களாலும் ஏற்கப்படும் நாள் விரைவில் வரும்!

   http://en.wikipedia.org/wiki/Level_of_support_for_evolution

   நாம் சொல்வது வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற மாற்று விளக்க கொள்கைக்கு மதவாதிகள் எப்போதும் வரவே மாட்டோம் என்ற உறுதி மொழி மட்டுமே!!

   நன்றி
   Delete
 13. கடவுளிடம் பேசினேன் என தொலைக்காட்சி வாக்குமூலங்களும் அதனை நம்பும் மக்களும் கூட இருக்கின்ற சூழலில் நீங்க கீழ்ப்பாக்கத்துக்கு வழி சொல்லிகிட்டு இருக்குறீங்களே!

  கடவுள் வாக்குமூலங்களுக்கும்,அதனை நம்புகின்ற மக்களின் மனங்களுக்கும் வறுமை,நோய்கள்,வாழ்வு பிரச்சினைகள் என பல காரணங்கள் இருக்கின்றன.இவற்றால் மத மாற்றங்கள் சாத்தியமாகவும் அமைகிறது.

  முழுவதுமாக விஞ்ஞானத்தை மட்டும் நம்பவும் முடியாமல் ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழியென இன்று பெட்ரோலிய கலவைகளை பரிட்சித்துப் பார்க்கும் வாய்ப்புக்கள் அதிகமாக கார்பரோட் நிறுவனங்களுக்கு உருவாகியுள்ள நிலையில் மன்சான்டோ - mansanto போன்ற இயற்கைக்கு மாறுபட்ட அறிவியல் இருப்பதும் கூட விஞ்ஞான நம்பிக்கைகளுக்கு தடை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ,
   நான் மதத்திற்கு எதிராக் நிறுத்துவது அறிவியலை அல்ல. இயற்கை சார் மனித நேய வாழ்வு.அறிவியலில் சில சான்றுகள் மதத்தை பொய்ப்பிக்கிறது என்பதலேயே அறிவியலை ஒரு கருவியாக்குகிறோம்.

   இயற்கை சார் வாழ்வை மேம்படுத்தும் மக்கள் அறிவியலையே வளர்த்தெடுக்க அதனை அறிவது இன்றியமையாதது. எனினும் அறிவியல் என்பது இலாபம் சம்பாதிக்கும் நோக்குடைய ஆதிக்க சக்திகளிடம் சிறைப்பட்டு க்டப்பதும் உண்மைதான்.

   இயற்கை,மக்கள் விரோத அறிவியல் ஆய்வுகளும் தவிர்க்கப்பட வேண்டும்.


   நன்றி

   Delete
 14. நண்பர் சார்வாகன்,

  நம்ம சகோக்கள் கேட்கும் அடிப்படையான கேள்விக்கு, சுவராஸ்யமாக பதிலளிக்கும் காணொளி. அதுவும் Godzilla, Back to Future, போன்ற படங்களின் பிட்டுகளை போட்டு, கிளுகிளுப்பு ஊட்டியிருக்கிறார்கள். இந்த காணொளிகளை அன்றாட கணினி மூலம், இணையத்தில் இருக்கும் செய்திகளை வைத்து உருவாக்கிருப்பார்கள் என நினைக்கிறேன். இதை எப்படி உருவாக்கலாம் என்று யாராவது பதிவிட்டால், தமிழில் இதைவிட சிறப்பான காணொளிகள் வரும் என எதிர்ப்பார்க்கலாம். தமிழ்படுத்தி எழுதுவதற்கு நேரம் தேவைப்படுவதால், நேரமிருக்கும்போது செய்ய எண்ணுகிறேன்.

  ******
  சங்கப் பாடலில் அத்தாட்சி
  ******
  பதிவர் சந்திப்பு, இலைமடிப்பு அக்கப்போரில் சமயத்தில் இல்லாதலால், இப்பதான் முழுவதுமாக தெரிகிறது. ஒரு etiquette யை மூட நம்பிக்கை என்று சொன்னால் என்னவென்பது. நட்சத்திர விடுதிகளுக்கு சென்றால், கரண்டி மற்றும் முட்கரண்டி மூலம் சாப்பிடுவோம். informal ஆக இருந்தால் நாம் கையாலும் சாப்பிடுவோம். formal வியாபார சந்திப்புகள் இருந்தால் கரண்டிகளால் சாப்பிடுவதுதான் etiquette. அதை போலத்தான் இலை மடிப்பும். பதிவர் சந்திப்பில் எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம். ஆனால், பண்பாட்டை பின்பற்றும் வீட்டில் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு மடக்க வேண்டும். இதில் நம்பிக்கை எங்கு வந்தது மூடநம்பிக்கையாவதுக்கு. நம்பிக்கையாளர்கள், மூடநம்பிக்கை என்று சொல்வது விந்தை. அந்த அக்கப்போர் was a relaxing experience. LOL

  நன்றி.

  ReplyDelete
 15. வாங்க சகோ நரேன்,
  நீங்களும் தொடர்ந்து பதிவு இட்டால்தான் நல்லது.நன்றி

  ReplyDelete
 16. //இயற்கை,மக்கள் விரோத அறிவியல் ஆய்வுகளும் தவிர்க்கப்பட வேண்டும்.//

  நான் பயிரிட்டு உண்ணுவது, மருந்துண்பது இவை அனைத்தும் செயற்கைதான். மீண்டும் நாம் காட்டில் புகுந்து இலைதழை உடுத்தி, காட்டு தாவரங்களையும் வேட்டையாடியும் உண்டு மிருகங்களுக்கு இரையாகி வீழ்வதே முழு இயற்கை வாழ்வு. அதுதான் இயற்கை சமநிலையை பாதிக்காது. பயிரிட ஆரம்பிப்பதே இயற்கையை, தாவர சமநிலையை பாதிப்பதுதான். ஆகவே (நீங்கள் கனவு காணும்)இயற்கை வாழ்வு சாத்தியமற்றது.

  மேலும் இன்னொரு விதத்தில் பார்த்தால் எல்லாமே இயற்கைதான். மனிதனும் அவனுடைய மூளையும் அதன் செயல்திறனும் இயற்கைதானே?அப்பொழுது அதிலிருந்து வரும் சிந்தனையும் படைப்பும் மட்டும் எப்படி செயற்கையாகும்? முன்பு நடந்தவை இயற்கை.ஒரு நதியை உருவாக்க இயற்கை மழையை அல்லது ஊற்றினை இயற்கை பயன்படுத்துகிறது. அதேபோல் அணுஉலை போன்ற கருவி செய்தலும் இயற்கைதான். இயற்கை அணுஉலை உருவாக்க விரும்பி அது தனது படைப்பான மனிதனை பயன்படுத்தி கொள்கிறது.அதற்கு மூலப்பொருளான கதிரியக்க தனிமங்களை இயற்கை ஏற்கனவே உருவாக்கியும் விட்டது. அதன் தொடர்ச்சியான நிகழ்வுதான் அணுஉலை.இதிலென்ன பிழை?

  ReplyDelete
 17. வாங்க சகோ நந்தவன‌த்தான்,
  நலமா??
  //ஆகவே (நீங்கள் கனவு காணும்)இயற்கை வாழ்வு சாத்தியமற்றது.//

  நான் சொல்ல வரும் இயற்கை சார் வாழ்வு என்னும் சொல் ஆங்கிலத்தில் Sustainable living & development என அழைக்கப்படுகிறது.

  «Sustainable development is development that meets the needs of the present without compromising the ability of future generations to meet their own needs.»

  This is probably the most broadly accepted definition of sustainability developed in 1987, by the World Commission on Environment and Development (the Brundtland Commission). Instead of sustainability, often terms like sustainable development, sustainable prosperity or sustainable genuine progress are used. They more or less all mean the same as defined above. Details can be found e.g. in Wikipedia .

  நாம் வாழும் வாழ்வானது,எதிர்கால தலைமுறையினருக்கு சிக்கல் உண்டாக்காமல் இருப்பது.இயற்கையை அவர்கள்க்கு பாதுகாத்து அளிப்பது.

  http://en.wikipedia.org/wiki/Sustainable_living
  Lester R. Brown, a prominent environmentalist and founder of the Worldwatch Institute and Earth Policy Institute, describes sustainable living in the 21st century as "shifting to a renewable energy-based, reuse/recycle economy with a diversified transport system."[4]
  நீங்கள் சொன்ன விடயங்கள் இந்த வரையறுப்புக்குள் பொருந்துமா என எண்ணிப் பாருங்கள்.

  மையப்படுத்தப்பட்ட உற்பத்தி,விநியோகம் ,அதிக எரிபொருள்&அணு உலை சார் பயன்பாடு ,மக்கள் தொகை பெருக்கம் போன்ற்வற்றை தவிர்ப்பது எதிர்கால த்லைமுறைக்கு நல்லது.

  எண்ணெய் எரிபொருள் இன்னும் 50 வருடங்களில் அரிதாகி விடும். அணு உலைக்கும்பயன்பாட்டுக்கும் கால எல்லை உண்டு!!

  இன்னும் செயற்கை உயிரின பிளவு மனிதன் டி என் ஏ ல் உருவாக்கி விடுவார்களோ என்வும் அஞ்சுகிறோம்.

  இதில் கற்க முயற்சி செய்ய பல விடயங்கள் உள்ளன!!

  நன்றி

  ReplyDelete
 18. சகோ நந்தவனத்தான்,
  அமெரிக்க ஐரோப்பிய நாடுகளே இயற்கை மேலாண்மை,பாதுகாப்பு என முயற்சி செய்கிறார்கள். ஆகவே இது நம் விருப்பம் அல்ல. செய்யா விட்டால் இயற்கை ஹோமோ சேஃபியன்களை தேர்வில் தோல்வி அடைய வைத்து விடும் என்வே கூறு(வு)கிறோம்.
  இந்த சுட்டிகள் பாருங்கள். பல் விடயம் கற்கலாம்!!

  http://www.cellonline.org/

  http://www.newdream.org/

  நன்றி

  ReplyDelete
 19. நலம். கடந்தது நீண்ட வார இறுதியாதலின் வெளியூர் பயணம் செய்த்தால் பின்னுடமிட இயலவில்லை. நன்றி!

  //நான் சொல்ல வரும் இயற்கை சார் வாழ்வு என்னும் சொல் ஆங்கிலத்தில் Sustainable living & development என அழைக்கப்படுகிறது.//

  இரண்டு வார்த்தைக்கும் என்ன சம்பந்தம்ன்னு புரியல.உங்களுக்கு 'இயற்கை சார்' ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்குதே? ustainable livingக்கு பல செயற்கை அமைப்புகளை தேவை.

  உங்க வார்த்தைய நம்பி 2 பாரா எழுதி.. போங்க சார்!

  விக்சனரியின் இதற்கு வளம் குன்றா வாழ்வு -Sustainable living என போட்டிருக்கிறார்கள், இது சரியான வார்த்தை என நினைக்கிறேன். எப்படியானும் நாம் எந்த வாழ்வினை மேற்கொண்டாலும் இந்த உலகம் தோன்றின நாளிலிருந்து அழிவினை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துவிட்டது, நாம் பிறந்த உடன் சாவினை நோக்கி செல்வதினை போல. ஆனால் நீங்கள் சொல்லும் Sustainable living & development நிச்சயம் வாழ்வினை நீட்டிக்கும். ஆனால் இன்னொரு கணக்கு இவ்வுலக மூலப் பொருட்களை மறு உபயோகம்/சுழற்சி மூலமும் மற்றும் மக்கட்தொகையை குறைபினாலும் நீண்ட நாளுக்கு அனுபவிக்காலாம். அல்லது நிறைய பெத்து குறைந்த நேரத்தில் அனுபவித்துவிட்டு போய்விடலாம். இயற்கை எப்படியும் அடுத்த ரவுண்டு உயிரினங்களை ஜடப்பொருட்களிலிருந்து உருவாக்கும். இது இயற்கையின் சுழற்சி, இதுவே நித்தியம். இப்போதைக்கு மனிதன் சுயமாக 100% மறுஉபயோகம்/சுழற்சி செய்ய ஈடுபட அவனுக்கு அறிவு போதாது.


  //இன்னும் செயற்கை உயிரின பிளவு மனிதன் டி என் ஏ ல் உருவாக்கி விடுவார்களோ என்வும் அஞ்சுகிறோம்.//

  இது சாத்தியமாக தோன்றவில்லை. எனவே ஹைபோதஸிஸ் தியரிகளின் விளைவாக விளைந்த உங்களின் அச்சம் மிகைபடுத்தலாக தோன்றுகிறது. சிற்றின உருவாக்கம் இயற்கையை தவிர இயலாத விடயம் என நினைக்கிறேன். கொஞ்சம் விளக்கினால் தேவலை.

  ReplyDelete
 20. //சிற்றின உருவாக்கம் இயற்கையை தவிர இயலாத விடயம் என நினைக்கிறேன்.//

  அதாவது மனிதன் போன்ற சிக்கலான உயிரினத்திலிருந்து..

  ReplyDelete
 21. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளே இயற்கை மேலாண்மை,பாதுகாப்பு என முயற்சி செய்கிறார்கள்.//

  இது தெரிந்த விடயமே. நான் வசிப்பது நகரியப்பகுதியில். ஆனால் இடமோ காடு போல இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்கள் மூக்கு முதல் அனைத்தையும் பேப்பர் வைத்து துடைக்கிறார்கள், மரத்தை வைத்துதான் வீடு கட்டுகிறார்கள். எல்லாம் தென் அமெரிக்க மரம்.அவுனுக ஊரில மரம் வெட்டமாட்டனுவளாம்!

  உங்களின் தமிழ் வார்த்தை தேர்வுகள் பல நேரங்களில் குழப்பிவிடுகின்றன. மன்னிக்கவும்.

  ReplyDelete
 22. இது சாத்தியமாக தோன்றவில்லை. எனவே ஹைபோதஸிஸ் தியரிகளின் விளைவாக விளைந்த உங்களின் அச்சம் மிகைபடுத்தலாக தோன்றுகிறது. சிற்றின உருவாக்கம் இயற்கையை தவிர இயலாத விடயம் என நினைக்கிறேன். கொஞ்சம் விளக்கினால் தேவலை.//

  சகோ நந்தவனத்தான் ,

  நான் எப்போதும் சொல்வது ஒரு விடயத்தை அறிய அது என்ன என்று சரியாக அறிய வேண்டும். இயற்கை சார் வாழ்வு என்பதற்கும் அந்த ஆங்கில சொல்லுக்கும் என்ன கருத்து ரீதியாக் வித்தியாசம்?.அப்படியே அகராதியில் இருந்து மொழி பெயர்க்க வேண்டுமா?.இதனை நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்தனர்.

  எளிய வாழ்வு,நுகர்வைக் குறைத்தல்,உற்பத்தி பொருள்கள் மிக குறைந்த இடங்களுக்குள்ளேயே பயன்படுத்தல் போன்றவை நிச்சயம் நமது ஆற்றலின் தேவையை வெகுவாக குறைக்கும்.

  மால்களில் எப்போதும் அனைத்தும் கிடைக்காது!!!

  இப்போதும் உலகில் 100 கோடி மக்களுக்கு போதுமான‌ உணவு தினமும் கிடைப்பது இல்லை!.

  ஒன்று இயற்கை சார் வாழ்வுக்கு மாற வேண்டும் இல்லை எனில் இறை அடியார்களின் புண்ணியத்தில் அடித்துக் கொண்டு பெரும்பானமை மக்கள் அழிந்து விடுவோம்!.பிறகு அதிக பிரச்சினை இருக்காது!!!
  ****
  செயற்கை டி என் ஏ உருவாக்கி செல்லினுள் வைத்தவர்கள் குரொமோ சோமில் என்ன மாற்றம் செய்தால் மனித இன கலப்பு தலைமுறை உருவாக்கம் தடுக்க இயலாதவர்களா??

  இது நடக்கவே முடியாத விடயம் என நான் நினைக்கவில்லை.எப்போது என்பதுதான் சிக்கல். இது குறித்த ஆய்வுகள் நடக்கிறது ஆனால் இது ஆபத்தானது என்ப‌தால் தடை வரும் என்பதால் வெளிவிட மாட்டார்கள் .

  ஏற்கெனெவே நடந்த யுஜெனிக்ஸ் ஆய்வுகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பல் யுஜெனிக்ஸ் அறிவியலாளர்கள் மனித இனங்களே வெவ்வேறு உயிரினங்கள் என்னும் கருத்தை கொண்டு இருந்தனர்

  இது நடக்காமல் இருக்கும் வரையில் நல்லதுதான் என்றாலும் நடக்கும் வாய்ப்பே இல்லை/இருக்கிறது என்பதும் கணிப்பு மட்டுமே!.

  எனினும் கணிப்பின் மீது விவாதம் நடத்தி முடிவுக்கு வர இயலாது.

  எனினும் இந்த கட்டுரை சுருக்கத்தை பாருங்கள்!!!

  http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0039054

  Design and Construction of “Synthetic Species”

  Synthetic biology is an area of biological research that combines science and engineering. Here, I merge the principles of synthetic biology and regulatory evolution to create a new species with a minimal set of known elements. Using preexisting transgenes and recessive mutations of Drosophila melanogaster, a transgenic population arises with small eyes and a different venation pattern that fulfils the criteria of a new species according to Mayr’s Biological Species Concept. The population described here is the first transgenic organism that cannot hybridize with the original wild type population but remains fertile when crossed with other identical transgenic animals. I therefore propose the term “synthetic species” to distinguish it from “natural species”, not only because it has been created by genetic manipulation, but also because it may never be able to survive outside the laboratory environment. The use of genetic engineering to design artificial species barriers could help us understand natural speciation and may have practical applications. For instance, the transition from transgenic organisms towards synthetic species could constitute a safety mechanism to avoid the hybridization of genetically modified animals with wild type populations, preserving biodiversity.

  *******
  Thank you//

  ReplyDelete
 23. //நான் எப்போதும் சொல்வது ஒரு விடயத்தை அறிய அது என்ன என்று சரியாக அறிய வேண்டும். இயற்கை சார் வாழ்வு என்பதற்கும் அந்த ஆங்கில சொல்லுக்கும் என்ன கருத்து ரீதியாக் வித்தியாசம்?.அப்படியே அகராதியில் இருந்து மொழி பெயர்க்க வேண்டுமா?.இதனை நம் முன்னோர்கள் காலம் காலமாக செய்து வந்தனர்.//

  இயற்கை சார் வாழ்வு என்றால் இயற்கையை சார்ந்து வாழுவது. இந்த வார்த்தையே பெருங்குழப்பமளிப்பது. விரும்பினாலும் விரும்பாவிடனும் வாழ்க்கை என்பதே இயற்கையை சார்ந்தே உள்ளது. சுவாசிக்கும் காற்றிலிருந்து கணணி செய்யும் மூலப்பொருட்கள் வரை எல்லாமுமே இயற்கையிலிருந்து வருவதே. ஆக வாழ்வு என்பதே இயற்கை சார்ந்ததே! இயற்கை சாராத வாழ்வு என்பதே இல்லை! இல்லாவிடில் இயற்கை சார்ந்த வாழ்வு என்றால் என்ன என விளக்கினால் தன்யனாவேன்!

  Sustainable living & development வேணும் என்கிறீர்கள், ஆனால் அணுஉலைக்கு உலைவைக்க பார்கிறீர்கள், அணுசக்தி ஒரு Sustainable சக்தியே! ஆக Sustainable சக்தியான அணுமின்சாரம் அல்லது சூரிய மின்சாரம் பயன்படுத்துவர் இயற்கை சார் வாழ்வு வாழ்பவர். ஆனால் Non-Sustainable சக்தியான இயற்கையில் கிடைக்கும் எண்ணெயிலிருந்து எடுத்த மின்சாரம் பயன்படுத்துபவர் இயற்கை சாராத வாழ்வு வாழ்பவரா?

  முன்னோர்கள் முழுக்காய் மண்டையன்களாக இருந்துவிட்டு போகட்டும். உமது தமிழ் குழப்பமளிக்கின்றது என்பதுதான் என் பணிவான கருத்து. தவறு எனில் விட்டுவிடவும்.


  நன்றி,

  ReplyDelete
 24. //இயற்கை சார்ந்த வாழ்வு என்றால் என்ன என விளக்கினால் தன்யனாவேன்!//
  சகோ நந்தவனத்தான்,
  நாம் எழுதுவது சில விடயங்கள் மட்டுமே
  1. அறிவியல்(பரிணாமம்,கணிதம்)....
  2. இயற்கையியல்
  3. சமூகவியல்[மதம், வாழ்வியல்]

  இயற்கை சார் வாழ்வு பற்றி சென்ற வருடத்தில் இருந்தே பல காணொளி,விள்க்கப்பதிவுகள் எழுதி இருக்கிறோம்.

  இயற்கை சார்ந்து வாழ்தல் என்றால் அதனை அதிகம் பாழ்படுத்தாமல் வாழ்ந்து முடித்த‌ல்.
  http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_05.html
  ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கும் போது எப்படி இருப்பீர்களோ அப்படித்தான் உலகில் வாழ வேண்டும்.

  //ஆனால் அணுஉலைக்கு உலைவைக்க பார்கிறீர்கள், அணுசக்தி ஒரு Sustainable சக்தியே!//

  செயற்கை விதைகள்,அணு உலை பயன்பாடு என்பது இயற்கை சார்ந்து வாழ்வதாக தோன்றினால் என்ன சொல்வது?

  எது இயற்கையை பாழ்படுத்தும்,மேம்படுத்தும் என்பது கூட அறியாதவர் போல் பேசினால் என்ன சொல்வது?.

  அணு உலைகளுக்காக விளை நிலங்களை ஆக்கிரமிப்போம். இது இன்னும் 100 ,1000, ஆண்டு கழித்து பார்த்தால் எவ்வளவு இடம் அணு உலைகளாக இருக்கும்?

  //முன்னோர்கள் முழுக்காய் மண்டையன்களாக இருந்துவிட்டு போகட்டும். உமது தமிழ் குழப்பமளிக்கின்றது என்பதுதான் என் பணிவான கருத்து. தவறு எனில் விட்டுவிடவும்.//

  இப்படி யோசிப்பதுதான் இயற்கை சார் வாழ்வு. இப்படி நம் முன்னோர் சிந்தித்தால் மட்டுமே நாம் இன்று வாழ்கிறோம்.

  இயற்கை சார்ந்த பல பதிவுகளில் இதை சொல்லி இருக்கிறோம்.


  நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ அடுத்த தலைமுறைகளின் வாழ்வு நம் அளவு கூட எளிதாக இருக்காது!!!


  நன்றி!!!!

  ReplyDelete
 25. //செயற்கை விதைகள்,அணு உலை பயன்பாடு என்பது இயற்கை சார்ந்து வாழ்வதாக தோன்றினால் என்ன சொல்வது?/

  அணுஉலை பயன்பாடு sustainable livingதான். நீங்கள்தான் sustainable living எனில் இயற்கை சார்ந்து வாழ்வது என சொல்லுறீங்க. அதனால்தான் சொல்கிறேன் இயற்கை சார்ந்து வாழ்வது என்ற பததின் பயன்பாடு தவறு.

  //இயற்கை சார்ந்து வாழ்தல் என்றால் அதனை அதிகம் பாழ்படுத்தாமல் வாழ்ந்து முடித்த‌ல்.//

  நீங்கள் தரும் விளக்கத்தை பார்த்தால் அது இயற்கையை பேணி வாழ்வது. ஆனால் இயற்கையை பாழ்படுத்தி வாழ்ந்தாலும் அதை சார்ந்துதானே வாழ்வு இருக்கும்? இயற்கை பேணி வாழக்கூடாது என்பது எமது கருத்தல்ல. நீங்கள் இயற்கை சார்ந்த வாழ்வு என்ற சொல்லினை தவறான பொருளில் பயன்படுத்துகின்றீர் என்பது எமது வாதம். அதுவும் அறிவியல் தமிழை வளர்க்க தாங்கள் முயல்வதாலே இக்கருத்தை எழுதினேன். பொழுது போக்குக்கான அறிவியல் எனில் கண்டுகாம விட்டிருப்பேன். உயிர் தொழில்நுட்பம் சார்ந்த மொழிபெயர்ப்பு வேலைகளில் சென்னையிலிருக்கும் போது ஈடுபட்டதினால் வந்த ஆர்வத்தில் எழுதிவிட்டேன், அம்புட்டுதேன்.

  ReplyDelete

 26. சகோ நந்தவனத்தான்
  அடுத்த பதிவு வாங்க சண்டை போடுவோம்.

  I love you!!!!!!!!!!!

  அய்யன் திருவள்ளுவர் என்ன் சொல்கிறார் என்றால்


  குறள் 1330:

  ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
  கூடி முயங்கப் பெறின்.

  கலைஞர் உரை:

  ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

  மு.வ உரை:
  காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.

  சாலமன் பாப்பையா உரை:
  காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.

  Byeeeeeeeeeeeeeeee

  ReplyDelete
 27. //உயிரினங்களில் மனிதன் மட்டுமே மதம் சார் நம்பிக்கைகள் கொள்வதும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி அனைத்தையும் படைத்து,காத்து வழிநடத்தி வருகிறது என்ற நம்பிக்கையே மதத்தின் ஆணி வேர் ஆகும். //

  If triangles have gods, their gods would be triangles -
  CHARLES DE MONTESQUIEU
  என்பவர் சொன்னதை நான் எனது மொழியில் எருமை மாடுகளுக்கு ஒரு கடவுள் இருந்தால் அது ஒரு பெரிய எருமை மாடாக இருக்கும் என்று சொல்வதுண்டு!

  ReplyDelete