Tuesday, June 11, 2013

திரு .அத்வானி தரப்பு நியாயம் அறியுங்கள்!!!Thanks to
http://indiaopines.com/narendra-modi-reaching-delhi-a-cartoon/

வணக்கம் நண்பர்களே,

நாம் நாத்திகர் என்றாலும் அதிகம் மதப் புத்தகம் படித்து ,ஆய்வு செய்து மதபிரச்சாரங்களை சரி பார்ப்பதால் நமக்கு அவர்களின் மனநிலை நன்கு புரியும்.

மதவாதிகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதை நாம் நன்கு அறிவோம்.”மதவாதியைப் புரிய மதப் புத்தகம் படிப்பீர் எனவே நாம் வலியுறுத்துகிறோம்.

இப்போது திரு அத்வானி பாஜக கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகல் , மோடியின் தலைமைக்கு எதிர்ப்பு என இந்திய அரசியல் பரபரப்பு அடைந்து இருப்பதை அறிவோம். இந்துத்வ அடிப்படைவாதக் கட்சியான பாஜக' வில் இப்படி குழப்பம் நிலவுவதை நாம் இப்பதிவில் ஏன் என சான்றுகள் அடிப்படையில் இப்பதிவில் விளக்குகிறோம்.

மதவாதிகள் என்றாலே இரட்டை வேடப் பேர்வழிகள் என்பதற்கு எந்த மதமும் விதிவிலக்கு இல்லை என்றாலும், இந்த இரட்டை வேடம் போடுவதிலும் உள்ள வித்தியாசங்களைக் கூறி,வலாற்றுரீதியாக சான்றுகள் ரீதியாக அலசி  புரியும் போது திரு அத்வானி தரப்பு நியாயம் பிடிபடும்.அப்படி நமக்கு பிடிபட்டதை பகிர்கிறோம்.மதவாதிகள் இரட்டை வேடம் போட மத புத்த்கத்தின் இரட்டை நாக்கில் விளக்கப்படும் கருத்துகள் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.

மத்தியக் கிழக்கில் உருவான ஆபிரஹாமிய மதங்கள் சிறுபான்மையாக இருக்கும் போது ஒரு வாதமும்[அன்பு,அமைதி,மதச்சார்பின்மை],பெரும்பான்மை ஆகும் போது வேறு வாதமும்[ இறைவனின் சட்டமே இறுதியானது] செய்வார் என்பதை நாம் பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.இந்தியாவின் சனாதன தர்ம மதம் பெரும்பான்மையாக இருந்தாலும் எப்போதும் நான் இரொம்ப நல்லவன்டா எனவே வேடம் போடும். [ஏன்???? சிந்திக்க மாட்டீர்களா???]

நந்தனாரை தீயில் இட்டுக் கொன்றாலும், அவர் ஜோதியில் கலந்துவிட்டார் என அற்புதமாக கயிறு திரிக்கும் வித்தை அறிந்தவர்கள் என்பதால்,பொய் புரட்டு கண்டுபிடிக்க மிக நுட்பமான பார்வை வேண்டும். பரம்பரைத் திருட்டுக்கும்,பஞ்சத்திற்கு திருடுவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா!!!??? இன்னும் .கா சொல்ல வேண்டும் என்றால் பவுத்தம்,சமணம் போன்ற்வற்றை நீர்த்து போக வைத்து , ஆட்சியில் இருந்து இறக்கி,ஒன்றுமில்லாமல் ஆக்கியதையும் சொல்லலாம்.

பாருங்கள் இந்துத்வா என்றால் என்ன என்பதை அக்கொள்கையாளர் எப்படி இங்கே விளக்குகிறார்!!!


இந்த தேசத்தின் அடிப்படையான ஒற்றுமை என்பது, ஒரு ஆன்மிக  பண்பாட்டு ஒற்றுமையிலிருந்து பெறப்பட்டது. எனவே, நவீன சர்வதேச சூழலில், இந்த ஒற்றுமையின் அடிப்படையில் தேசியமும்  அரசியலும் இந்த மண்ணில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதே ஹிந்துத்துவத்தின் அடிப்படை””.

பேச்சில்,எழுத்தில் குற்றம் இருக்காது,அதாவது திருவிளையாடல் பாணியில் சொற்குற்றம் இருக்காது,பொருள் குற்றம்[நடைமுறை!!] மட்டுமே இருக்கும்.

பொதுவாக இந்துத்வ அரசியல் என்றால் இந்தியா என்பது புனிதமான நாடு,இதன் கலாச்சாரம் உயர்ந்தது, ஆதியில் அனைத்தும் சரியாக இருந்தது,சமஸ்கிருதம் தேவ மொழி,வேதத்தில்,புராணத்தில் சாதி உயர்வு தாழ்வு இல்லை,சாதி இருக்கணும் ஆனால் தீண்டாமை மட்டும் ஒழியனும், பசு புனித விலங்கு  நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பிற மதத்தினரே,திராவிட இயக்கத்தினரே காரணம் என்ற கருத்துகள் கொண்டவை என்லாம்.

இந்துத்வ அரசியல் சுமார் ஒரு நூற்றாண்டாக இருந்தாலும்,அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது ஜனசங்கம் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியால் 1951ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட பிறகுதான். அதற்கு முந்தைய ராஷ்ட்ரிய ஸ்வ்யம் சேவக்[RSS],இந்துமஹா சபா போன்றவையும் சுதந்திரத்திற்கு முந்தைய மத ரீதியான பிரச்சினைகளில்,முரண்களில் முக்கிய பங்கு ஆற்றின.

திருமதி இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்திற்கு எதிராக போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் பல இடது,வலது(ஜனசங்கம்), விவசாயக் கட்சிகளின் கூட்டமைப்பான ஜனதா கட்சி 1977 தேர்தலில் வெற்றி பெற்றது.

திரு மொரார்ஜி தேசாய் மிதவாத இந்துத்வ கருத்து கொண்டவராக அறியப்பட்டார், அப்போது வாஜ்பாய்,அத்வானி போன்றோர் கடும்போக்கு இந்துத்வ கொள்கையாளராக அறியப்பட்டனர். ஆட்சி அமைக்கும் போது தேசாய் பிரதமர் ஆகவும், வாஜ்பாய் வெளியுறவுத்துறை,அத்வானி தகவல்தொடர்பு அமைச்சர்கள் ஆகினர்.[கவனிக்கவும் மிதவாத போக்கு உடையவர் முதன்மை இடம் பெறுகிறார்.] . அரசில் பங்கு வகிப்பவர் இன்னொரு அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்]ல் பங்கு இருக்க கூடாது என் ஒரு பிரச்சினை வந்து அதில் கடும்போக்கு வாஜ்பாய்,அத்வானி மட்டும்அரசை விட ஆர்.எஸ்.எஸ் முக்கியம் என பதவி வ்லகினர்.பிறகு அரசில் ஒவ்வொரு கட்சியும் பொருளாரம், கொள்கை சார் முடிவுகளில்ஒவ்வொரு போக்கில் இழுக்க முயன்று குழப்பத்தில் அரசு கவிந்ததது.மிதவாத தேசாய் அரசியல் ஓய்வு பெற்றார்.

அது எப்படி தேசாய் அவர்களை இந்துத்வ கொள்கையாளர் என சொல்லலாம் என்னும் சகோக்களேஇந்துத்வ அமைப்புகளில் உறுப்பினராக இல்லாதோர் அதற்கு எதிரிகள் என நம்பும் அப்பாவிகளே கீழே படியுங்கள்.

கோத்ரா போன்ற ஒரு சம்பவத்தில் இன்று மோடி போல் அன்று குற்றம் சாட்டப் பட்டவர் திரு தேசாய்!!!
Morarji Desai was born into an Anavil Brahmin family in Bhadeli, Valsad in Bombay Presidency (now in Gujarat). His schooling life of Primary section is in Saurashtra The Kundla School,Savarkundla. It's now actual name is J.V.Modi School. After he joined Bai Ava Bai High School, Valsad. After graduating from Wilson College, Mumbai, he joined the civil service in Gujarat. Desai resigned as deputy collector of Godhra in May 1930 after being found guilty of going soft on Hindus during the riots of 1927-28 there.


அதாவது மிதவாத தலைவராக ஒருவர் முதன்மைப் படுத்தப்படுவார்,பிரதமர் பதவி வகிப்பார்,கடும்போக்கு கொள்கையாளர்கள் இரண்டாம் அல்லது கொஞ்சம் கீழான பொறுப்பில் இருப்பது போல் காட்டப் பட வேண்டும் என்பதே தந்திரம்.!!

ஜனசங்கம் பா.. வாக 1977 பரிணமித்தது .கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் 2 பாராளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்கு வந்தது

சரி இப்போது இன்னும் கொஞ்சம் வருடம் முன் சென்று1990 வருகிறோம். அத்வானியின் ரதயாத்ராவால் புத்துயிர் பெற்ற இந்துத் உணர்வுகளை அறுவடை செய்து ,முக்கிய எதிர்கட்சி ஆனது. வி.பி.சிங்கின் அரசு கவிழ அடுத்த ,அடுத்த தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது வாஜ்பாயி மிதவாதப் போக்கு கொண்டவராகவும்,மனிதப் புனிதர் போல் சித்தரிக்கப்பட்டார். ஆகவே பல கட்சிகள் ஆத்ரவு அளிக்க தயங்கவில்லை. அப்போது மிதவாத வாஜ்பாயி பிரதமர்,கடும்போக்கு அத்வானி துணைப் பிரத்மர்.

அப்புறம் இந்தியா இருளில் ஆழ்ந்து இருக்கும் போது ,இந்தியா ஒளிர்கிறது என பிரமோத் மஹாஜன் நகைச்சுவைப் பிரச்சாரம் செய்ய ,மக்கள் எரிச்சல் அடைய மீண்டும் காங்கிரஸ்  2004 ஆட்சிக்கு வந்து 10 வருடம் ஆகிறது.
http://en.wikipedia.org/wiki/India_Shining

The negative assessment of the India Shining campaign was echoed after the election by former Deputy Prime Minister L.K. Advani, who described it as "valid," but "inappropriate for our election campaign... By making them verbal icons of our election campaign, we gave our political opponents an opportunity to highlight other aspects of India's contemporary reality... which questioned our claim."[8][9]


தேசாய் வழியில் ,வாஜ்பாய் அரசியல் ஓய்வுக்கு செல்ல வழக்கம் போல் அத்வானி மிதவாதி ஆக வேண்டும் அல்லவா, அதற்காக பாகிஸ்தான் சென்றார், ஜின்னாவைப் புகழ்ந்தார் , எப்படியும் காங்கிரசுக்கு மாற்று பாஜக  என்பதாலும், அத்வானி இப்போது மிதவாதி என்பதால் பிரதமர் ஆகிவிடுவோம் என எதிர்ப்பார்ப்பு  இருப்பதில் வியப்பு இல்லை அல்லவா!! 
ஆனால் 2002 கோத்ரா இரயில் எரிப்பு பிண்ணனியில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க எதுவும் செய்யவில்லை என  இன்றும் [திரு தேசாய் போல்] குற்றம் சாட்டப்படும் திரு நரேந்திர மோடி குஜராத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் அரசியல் செய்ய நினைப்பது அத்வானியின் கனவில் மண்ணைப் போட்டு விட்டது.

இந்துத்வ அரசியல் கணக்கின்படி இப்போது மிதவாதி அத்வானி என்பதால்,நரேந்திர மோடி கடும்போக்காளர் ஆக காட்டப் பட்டு இருக்க வேண்டும்.அதாவது பிரதம வேட்பாளர் அத்வானி 2014 தேர்தலுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அத்வானி ஓய்வின் பின் மோடி மிதவாதி ஆக்கப்பட்டு[எப்பூடி அவரை விட ஒரு இந்துத்வ கடும் போக்காளர் உருவாக்கிவிட்டால் போதும்!!மக்களுக்கு மறதி அதிகம் ஹி ஹி] பிரதம வேட்பாளர் ஆனால் கணக்கு சரியாக வரும்!!

இப்போது சிந்தித்தால் அத்வானி ஏன் கோபப் படுகிறார் என புரியும்!!

மிதவாதியாக பரிணமித்த அத்வானி இருக்கும் போது இன்னும் மிதவாதி ஆக முடியாத நரேந்திர மோடி முன்னிலைப் படுத்தப்படுவதுதான் அத்வானியின் கோபம்!!!

அப்புறம் ஒரு கேள்வி ஏன் இந்துத்வ மதவாதிகளின் இரட்டை வேடம் வித் தியாசமாக இருக்க மத புத்தக அடிப்படை என்ன? சிந்திக்க மாட்டீர்களா!!!???

பதிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில்களும் தேவையானால் இன்னும் சில விளக்கப் பதிவுகளும் இட தயாராக இருக்கிறோம்.

சிறுபான்மை/பெரும்பான்மை எதுவாயினும் மத ஆட்சிகளை எதிர்ப்பது நம் தார்மீக கடமை!!

நன்றி  நன்றி  நன்றி!!

17 comments:

 1. மோடி மட்டும்தான் வில்லனா?’ கட்டுரையின் முழுமையான வடிவம்).http://www.tamilpaper.net/?p=7916

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பர் குணா,
   அத்வானி மோடிக்கு எந்த விதத்திலும்[மதவாதம்,பிடிவாதம், உலகமயமாக்கல் ஆத்ரவு] குறைந்தவர் இல்லை. என்றாலும்,அத்வானி ஜின்னாவைப் புகழ்ந்து மத சார்பற்றவர் ஆகி விட்டார் என்பதல் அவருக்கு கிடைக்கும் ,கூட்டணி கட்சிகளின் ஆதரவு,மோடிக்கு கிடைக்காது என்பதே எதார்த்த‌ உண்மை ஆகும்!!!

   அத்வானிக்குப் பின் மோடி என்பதே அறிவார்ந்த செயல்!!!

   நன்றி!!!

   Delete
 2. //சிறுபான்மை/பெரும்பான்மை எதுவாயினும் மத ஆட்சிகளை எதிர்ப்பது நம் தார்மீக கடமை!!//

  Suuuupppperrrrr...

  ReplyDelete
 3. ரொம்பவே உங்கள் ஆழ்ந்த வாசிப்பு திறமைப் பார்த்துவியந்து நிற்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஜோதிஜி,

   விக்கிபிடியா பார்த்தாலே பலரின் யோக்கிய முகமூடி கிழிந்து விடுகிறது.இதற்கு எதற்கு வியப்பு!!!

   காங்கிரசுக்கும்,பாஜவுக்கும் நடைமுறை ஆட்சியில் எந்த வித்தியாசமும் இல்லை!!

   ஒன்றும் வேண்டாம், பாஜக ஆளும் மாநிலங்களில் கோக்,பெப்சி தடை மட்டும் செய்த்து காட்ட்டினால், மோடி இனப்படுகொலையாளர்,பஜக இனவாதக் கட்சி என் வில்லன் ஆக்கி விடுவார்!! ஹி ஹி

   ஆகவே பன்னாட்டு நிறுவனங்களின் நலனைப் பாதுகாப்பவர்தான் ஆட்சி செலுத்த முடியும்!!

   மோடி வந்தால் இந்தியா வல்லரசு என்பது புரளி!!!

   மோடியை இப்போது முன் நிறுத்தல் டைமிங் தவறு!!!

   எப்படி சவுதி வஹாபிகள் மேலைநாட்டு கையாள் என்பதை மறைக்க மதவாதம் செய்கிறாரோ,அதே போல் மோடி&கோ அவ்வளவுதான்!!!


   நன்றி!!

   Delete
  2. அருமையான அலசல் சார்வாகன் ...
   மதவாதத்தை நாம் வெறுத்தாலும் யதார்த்தம் இது தான் .
   உங்களோட வாசிப்பு குறித்து எனக்கும் ஆச்சரியம் உண்டு . எவர் வேண்டுமானாலும் வாசிக்க முடியும் ஆனாலும் அதற்காக உழைப்பது என்னவோ குறைவானவரே ... ம்ம்

   Delete
 4. Author like him and their articles will make INDIA still slave to Muslims and Christians. First we are slave to Muslims and then Christians and now to ITALY Christian. What the Author is trying to tell... Mahatma Gandhi a Racist or Religious...who dreamed India to be a RAMARAJIYAM.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் நண்பர் ராம் ஜீ,

   பதிவில் அத்வானியின் மன ஓட்டத்தை அருமையாக விளக்கி இருக்கிறோம்.அதனை மறுக்க இயலாமல் ஏதோதோ கதைக்கிறீர்.

   பெயரில் சமஸ்கிருதம்,தமிழ் பதிவில் ஆங்கிலம் பேசும் நீங்கள் இன்றும் சமஸ்கிருத,ஆங்கிலேய அடிமையாக இருக்கிறீர்.

   நாம் முஸ்லிம்களாலும், பிரிட்டிஷாலும் ஆளப்பட்டோம் என்பது எவ்வளவு உண்மையோ,இந்த இரு ஆட்சிகளுக்கும் வால் பிடித்தவர்கள் உயர்சாதி இந்துத்வ கூட்டம் என்பதும் உண்மையே!!!.

   இந்தியா சுதந்திரம் அடைந்த போதும் 500+ (பெரும்பான்மை பார்ப்பன அடிமை,வெளையர் விசுவாச‌ இந்து அரசர்கள்)இருந்தனர் என்பது வரலாறு!!.அவர்கள் பெரும்பான்மை இப்போது பாஜகவில்,காங்கிரசில் இருக்கிறார்!!!

   திருவிதாங்கூர் திவான் ராமசாமி அய்யர்,அதனை தனி நாடு ஆக்க முயன்றார்.

   https://en.wikipedia.org/wiki/Travancore
   However, his prime minister Sir C. P. Ramaswami Iyer was unpopular among the general public of Travancore. When the British decided to grant independence to India, the minister declared that Travancore would remain as an independent country, based on an "American model." The tension between the local people, led by the Indian National Congress and the Communists, and Sir. C.P. Ramaswami Iyer led to revolts in various places of the country. In one such revolt in Punnapra-Vayalar in 1946, the Communists established their own government in the area. This was crushed by the Travancore army and navy leading to hundreds of deaths. These events led to further disturbances in the State, leading to more killings. The minister issued a statement in June 1947 that Travancore would remain as an independent country instead of joining the Indian Union, and subsequently, an attempt was made on the life of Sir C.P. Ramaswamy Iyer following which he resigned and fled to Madras, to be succeeded by Sri PGN Unnithan.

   ஆகவே தேசபக்தி ,தேச ஒற்றுமை போன்ற்வற்றை இந்து மதவாதிகள் உரிமை கொண்டாட முடியாது.

   இன்றும் பன்னாட்டுக் நிறுவனங்களுக்கு இந்தியாவைத் தாரை வார்ப்பதில் பாஜக,காங்கிர‌சுக்கும் போட்டி.

   ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எவரும் தலைவன் ஆகலாம்.
   ஒரு வேளை மோடி தேர்ந்த்டுக்கப்பட்டால் அவரின் ஆட்சியும் காங்கிரஸ் ஆட்சி போல்தான் இருக்கும். பாஜக 225+ இடங்கள் த்னியாக வென்றால் கூட ,மோடி பிரதமர் ஆவது கடினம்.

   மோடி வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்னும் கட்டுக் கதையை நம்ப முடியாது.

   அத்வானி ஜின்னா ப்ராண்ட் மத சார்பின்மை சோப்பு போட்டு குளித்து ஆச்சார சுத்தம் ஆகி விட்டார்,ஆனால் மோடி இன்னும் அழுக்காக,அபிஷ்டு போல் இருக்கிறார்.

   ஆகவே வழக்கமான இந்துத்வ கணக்கின் படி அத்வானியை பிரதம வேட்பாளர் ஆக்கினால் 150+ இடம் வென்றால் கூட இன்னும் தேவைப்படும் 122 இடங்களை துணைப்பிரதம்ர் பதவி கூட்டணிக்கு கொடுத்து ,ஆட்சி அமைத்து ,பன்னாட்டு கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்த்து,பைசா சம்பாதிக்கும் வழியைப் பார்ப்பது பாஜகவுக்கு உசிதம்!!!

   இதுவே பிழைக்கும் வழி ஆகும்!!!!!!!!!!!!!!!!!!

   நன்றி!!!

   Delete
  2. மகாத்மா காந்தி,அம்பேத்கார்,காமராஜர் போன்றோரை வாழ்ந்த காலங்களில் எதிர்த்தவர் இந்துத்வ சக்திகள்.
   அவர்களையும் இந்துத்வ சக்திகள் மேற்கோள் காட்ட இயலாது.

   Our reports do confirm that, as a result of the activities of these two bodies, particularly the former (the RSS), an atmosphere was created in the country in which such a ghastly tragedy (Gandhiji’s assassination) became possible. There is no doubt in my mind that the extreme section of the Hindu Mahasabha was involved in this conspiracy. The activities of the RSS constituted a clear threat to the existence of government and the state. Our reports show that those activities, despite the ban, have not died down. Indeed, as time has marched on, the RSS circles are becoming more defiant and are indulging in their 'subversive activities ' in an increasing measure

   — Sardar Patel, to Shyama Prasad Mookerjee, member of Hindu Mahasabha in a letter dated 18 July 1948.
   **

   Delete
  3. Good analysis Saarvahan.... Some middle class mahadevans think BJP is the paty of patriotists if they come to power they will fix INDIA in 10 years and INDIA will overtake all western countries this is a very stupid assumption ... lets see the Patriotism

   1) About patriotism after 1948 partition riots there were no much religious problems(ofcourse there were small inccidents) .. Since there was not much problem BJP cudn't grow for tat to create a PROBLEM for their personal gain BJP raised the BABUR MASJID issue and orcestrated Babur masjid demolition,, Even after tat nothing big happened so puposefully condiucgted VICTORY marches in MUMBAI to istigate violence from MUSLIMS and we are paying the price for tat till now in form of BOMBINGS,, if u don't beliee me please searc "Dates and inccident os boming in INDIA" 99% of the bomboing in india(excludingKashmir) has hanppened after babur masjid demolition.. And now people are calling BJP patriotic

   2. About becoming developed as western countries, If we consider the developed countris Most of them have become developed only by innovation and scientific implrovement NOT by FDI and BPO jobs.. Its funny abt InDIANS who beleiev we will overtake USA by working for them for cheaper salary...I think they think MODI will set up a laboratory in PM office and do research and come up wuth invention like EDISON.. Ha Ha HA

   Delete
  4. கண்ணு ,
   நாங்க மொதல்ல வடமொழிக்கும் பாப்பானுக்கும் அடிமையா இருந்தோம் இப்போ அமெரிக்க காரனுக்கு அடிமையா இருக்கோம்....

   Delete
 5. அத்வானியும் மோடியும் ஒன்றா?

  மோடி அத்வானியைப் போன்று மேல்சாதி கிடையாது.

  மோடியைத் தவிர்க்க முடியாமல் பாஜக உயர் சாதியினர் திணறுகின்றார்கள்.

  கோத்ரா ரயில் எரிப்பு கலவரத்தில் மோடியை காலிபண்ணிவிடலாம் என்ற அந்த உயர் சாதியினரின் கனவு பலிக்கவில்லை.

  அத்வானி, கருணாநிதி போன்றவர்கள் வெறும் பேச்சால் வளர்ந்தவர்கள். மோடி அப்படிக்கிடையாது.

  மோடி வந்தால் பிராமணக்கும்பல் தலைதூக்க முடியாது. உங்கள் கவலையும் அதுதானே.

  மீண்டும் பேசுவோம்

  ReplyDelete
 6. சகோ, கோடங்கி தளத்திற்க்கு என்ன நடந்தது? நேற்றில் இருந்து பார்க்க முடியல்ல.

  ReplyDelete
 7. ராவணன் சாடுகிறார் ,வேக நரி வேறு எங்கோ பாய்கிறார் .
  நான் உங்களை புகழ்கிறேன் ,எல்லாம் நல்லதுக்கே
  இருந்தாலும் நீங்கள் மோடியை பற்றி இன்னும் உண்மை முகத்தை காட்டவில்லை .

  ReplyDelete
 8. இப்ராகிம் சயிக்மொஹமெட், நீங்க இது தான் முதல் தடவையா புகழ்ந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. மோடிக்கு திறமை இருந்தால் பிரதமராக வரட்டுமே ,தேவ கவுடா,நரசிம்மராவு ,மன்மோகன்சிங் ,விபி சிங் எல்லாம் இப்படி செம்பு தூக்கியா பிரதமர் ஆனாங்க ?

  ReplyDelete
 10. குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
  http://www.vinavu.com/2013/06/18/criminal-modi-minister-convicted/

  ReplyDelete