Friday, June 7, 2013

இப்புதிருக்கு தீர்வு கண்டால் 5 கோடி ரூபாய்(1 மில்லியன் டாலர்) பரிசு!!!



வணக்கம் நண்பர்களே,

அறிவியலில் நிரூபணம் ஐயந்திரிபர அளிக்க இயலும் ஒரே துறை கணிதம் ஆகும்.ஒரு கருதுகோள் அல்லது கூற்று எந்த சூழலில் உண்மையாக இருக்கும் என்பதை அறிவியலில் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலும்,பரிசோதை கருதுகோளின் அனைத்து அம்சங்களையும் ,பரிசோதனையில் 100% கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியாது. ஆனால் கணிதத்தில் பல கருதுகோள்கள் பிற கணித [நிரூபிக்கப் பட்ட]தேற்றங்கள்,விதிகள் மூலம் நிரூபணம் அளிக்க இயலும்.

கணிதம் என்பது ஒரு பெருங்கடல்,அல்லது எல்லையற்ற பிரபஞ்சம் போல் எனலாம். கணிதத்தில் எண்கணிதத்தில் நமது தமிழகத்தை சேர்ந்த திரு.இரமானுஜம் பல அரிய கண்டுபிடிப்புகள், நிரூபண பங்களிப்பு   செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எண்கணிதம்[number theory] சார்ந்த பல புதிர்களில் நிரூபணங்கள் சில நூற்றாண்டுகளாக தீர்க்கப் படாமல் உள்ளன. அப்படி ஒரு புதிரைத் தீர்த்தால் ஒரு மில்லியன் டாலர்[சுமார் 5 கோடி ரூபாய்] பரிசு என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு பரிசு இவ்வளவு அளிக்க வேண்டியது இல்லை என்பது நம் கருத்து. ஒரு வேளை தீர்வு காணும் அறிஞருக்கு,ஆய்வுகளைத் தொடர நல்ல வசதி வாய்ப்பு, அவரின் பங்களிப்புகள் கணித மாணவர்கள் அனைவருக்கும் சென்றடைய ஆவண செய்வதே சால சிறந்தது என கூறுகிறோம்.

பணம் என்னும் ஒப்பீட்டு மதிப்புமுறை ,சமூகத்தில் எல்லா தளங்களிலும் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துவதில் முதன்மைப் பங்காற்றுகிறது என்பது உண்மையே!!.கல்வியில் பொருளாதார நலன் மட்டுமே சார்ந்து பணியை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது கல்விக்கு எந்த பயனையும் ஆற்றாது.

சரி புதிருக்கு போவோம். இந்த புதிரின் ஒரு மாறுபட்ட வடிவத்திற்கு நிரூபணம் வழங்கப்பட்டதை நாம் ஏற்கெனவே பதிவாக்கி,அந்த ஆவணப் படத்தையும் அதில் அளித்து இருந்தோம்.ஃபெர்மேட்டின் இறுதி தேற்றம் என்னும் புதிரின் நிரூபணத்தை ஆண்ட்ரூ வைல்ஸ்[Andrew wiles] என்னும் கணித ஆய்வாளர் தீர்வு கண்டதைப் பற்றிய பதிவே அது.



"இரு முழுஎண்களின் இரண்டுக்கு மேற்பட்ட அடுக்குகளின் கூடுதலை,இன்னொரு முழு எண்ணின் அடுக்கு மதிப்பாக கூற இயலும் போது, அந்த மூன்று எண்களுக்கும் குறைந்த பட்சம் ஒரு பகா எண் காரணியாவது இருக்கும்."

அதைப் பற்றி சிறிய முன்னோட்டம் கொடுத்து பிறகு, ஒரு மில்லியன் பரிசு தரும் பீள் கணிப்பு [Beal conjecture] புதிர் பற்றி பார்ப்போம்.

ஃபெர்மாட்டின் இறுதி தேற்றம் என்ன சொல்கிறது?

பிதாகரஸ் தேற்றத்தின் இரண்டுக்கு அதிக பரிமாண[dimension] அளவில், முழு எண்களில் தீர்வு கிடையாது!!

என்ன சகோ தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா!!

பிதாகரஸ் தேற்றம் தெரியும் அல்லவா, ஒரு செங்கோண முக்கோணத்தின் கர்ணத்தின்[hypotenuse] வர்க்கம் ஆனது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம்.

a^2+b^2=c^2

இதற்கு முழு எண் தீர்வுகள் பல் உண்டு. எ.கா [3,4,5].[5,12,13] எப்படி முழு எண் தீர்வுகள் காண்பது என்பதையும் பதிவு இட்டு இருக்கிறோம்.


பிதாகரஸ் தேற்றம் வர்க்கம் அதாவது இரு பரிமாண அடுக்குகள் பற்றி கூறுகிறது இப்போது இரண்டுக்கு அதிகமான பரிமாணத்தில் பிதாகரஸ் தேற்றத்திற்கு முழு எண்களில் தீர்வு இல்லை என்பதே ஃபெர்மேட்டின் இறுதி தேற்றம் கூறும் கணிப்பு ஆகும்.

a^n+b^n=c^n,   n>2

a,b,c,n=முழு எண்கள் [integers]

இப்போது பீள் கணிப்புக்கு செல்வோம்.
BEAL'S CONJECTURE:  If Ax + By = Cz, where A, B, C, x, y and z are positive integers and x, y and z are all greater than 2, then A, B and C must have a common prime factor.

தமிழர்களின் தாய்மொழியாம் ஆங்கிலத்தில் சொல்லி இருப்பதால் புரியும் என்றாலும்,போனால் போகட்டும் என தமிழிலும் சொல்வோம்.


ஃபெர்மேட்டின் தேற்றத்தைப் போல்  அடுக்குகள் அளவுகள் சமமாக இருக்க வேண்டியது இல்லை என்பதும், அப்படி அளவுகள் சமமாக இல்லாது போது இந்தக் கூற்று உண்மை ஆகும்.

An + Bn = Cn

{ [ஃபெர்மேட்டின் தேற்றம்,முழு எண் தீர்வு இல்லை,x=y=z=n!!!}

If Ax + By = Cz, முழு எண் தீர்வு உண்டு!!

{x,y,z}>2

{A,B,C,x,y,z}= முழு எண்கள் [integers]

சரி தீர்வுதான் இருக்கிறதே அப்புறம் என்ன சிக்கல் என்கிறீர்களா.இந்த தீர்வுகளுக்கு பொதுவாக ஒரு பகா எண் காரணியாவது இருந்தே ஆகும் என்பதுதான் பீள் கணிப்பு!!!

சரி ஒரு எ.கா பார்த்துவிட்டு புதிரை வரையறுப்போம்.

26 + 43 = 27

­­­இப்படி தீர்வுகளில் உள்ள  A,B,C முழு எண்களுக்கு பொதுவான பகா எண் காரணி உண்டு என்பதுதான்,பீள் கணிப்பு ஆகும். நாம் பார்த்த எ.கா வில் கூட A=2 ,B=4 ,C=2 இவற்றின் பகா எண் காரணி[prime factor] 2 என எளிதில் உணரலாம்.

Ax + By = Cz,

இப்போது இந்த சமன்பாட்டின் முழு எண் தீர்வுகளில் A,B,C மூன்று எண்களுக்கும் பொதுவான பகா எண் காரணி இல்லாமல் ஒரு தீர்வு கண்டுபிடித்தால் ,பீள் கணிப்பு தவறாகி விடும்.

இப்படி பொது பகா எண் காரணி இல்லாமல் ஒரு எ.கா எனில் A=2 ,B=3 ,C=5 என் வைப்போம் x,y,z எந்த முழு மதிப்பு இட்டாலும் தீர்வு கிட்டாது.ஏன்???

ஆகவே பீள் கணிப்பு தவறு என ஒரு எ.கா அல்லது,[பொதுவான பகா எண் காரணி இல்லாத‌] தீர்வு இருக்க முடியாது என நிரூபணம் அளித்தால் ஒரு மில்லியன் டாலர்[5 கோடி ரூபாய்] என்பதுதான் புதிர்.மேலதிக தகவல் இங்கே பெறலாம்.



நன்றி!!!!

10 comments:

  1. செத்தாண்டா சேகரு...................

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாப்ளே தாசு,
      நலமா?
      சேகர் நீடூழி வாழட்டும்!!!.

      இந்தப் புதிரைப் புரிவது எளிது ஆனால் தீர்வு கடினம்.

      மூன்று முழு எண்கள்[A,B,C] எடுத்துக் கொள்ளுங்கள், இந்த மூன்று எண்களுக்கும் பொதுவான [பகா]வகு எண்[common prime factor] எதுவும் இருக்க கூடாது எ.கா 2,3,11

      இப்போது இன்னும் மூன்று முழு எண்கள்[x,y,z] எடுக்க வேண்டும்.இந்த எண்கள் மூலம் இந்த சமன்பாடு தீர்க்கப் பட வேண்டும்.
      A^x+B^y=C^z

      முந்தைய மூன்று எண்களுக்கு பொது (பகா) வகு எண் இல்லாத பட்சத்தில், இந்த சமன்பாட்டுக்கு தீர்வு இருக்கவே முடியாது என்பதுதான் பீள் கணிப்பு.

      இதனை பொய்யாக்க ஒரு எ.கா இந்த‌ அடுக்கு சமன்பாட்டுக்கு பொது வகு எண் இல்லாத முழு எண் தீர்வு தரலாம்.

      அல்லது பொது வகு எண் இல்லாத மூன்று எண்கள் மூலம் தீர்வு இருக்கவே முடியாது என கணித நிரூபணம் தரலாம்.

      இதுதான் ஒரு மில்லியன் டாலர் பெறும் வழியாகும்!!!

      நன்றி!!!

      Delete
    2. இப்போ புரிஞ்சது மாமு. நன்றி.

      அதுசரி, இத்தனை கம்பியூட்டர் இருந்தும் தீர்க்க முடியலையா?

      பணத்துக்கு ஆசை புடிச்சவனால் தீர்வு காண முடியாது [மூளை வேலை செய்யாது], இதை தீர்க்கும் திறமை இருக்கிறவனுக்கு பணத்தாசை இர்ருக்காது. எப்பூடி.........

      Delete
    3. In this one thing i agree with u.. Some time back wen a similar problem was solved by a RUSSIAN mathematician living alone with his mother in a remote village in RUSSIA.. once the university sent a representative to tell about the money.. He just said "I don't want ur money"... There are still ppl like tat out there.... Their LOVE will be on knowledge not on money..

      Delete
  2. நீங்க எந்த துறையில் படித்து இருக்கீங்க என்பதாவது சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ ஜோதிஜி வாங்க,

      நலமா?

      என்ன படித்தோம் என்றால் [கணிதம் படிக ஆசைப்பட்டவனை வலுக்கட்டாயமாய் தந்தை சேர்த்த] பொறியியல்தான். வழக்கம் போல் மனனம் செய்து மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றேன்.ஆனால் உண்மையான கற்றல் ஆசிரியன் ஆன பிறகே தொடங்கியது.தேடி கற்கும் சில விடயங்களை தமிழில் எளிமையாக எழுத முயற்சிக்கிறோம்.

      முறையான கல்வி,எளிய புரிதல் பெரும்பான்மைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என் உறுதியாக நம்புகிறேன்!!

      ஒரு விடயம் கற்கும் போது அறியா கோடி விடயமே உணர முடிகிறது!!!

      நன்றி!!!

      Delete
  3. I request all the genius people in web who talk about ANCIENT INDIAN knowledge to get this simple answer from ur ancient VEDAS please...After some five years once some RUSSIAN scientist gives a proof for the above i shud not see anyone saying "Rg Veda x:X says this long back".. Appuram naan kadupaiduvean aammma..Iam waiting for VEDIC explaination for this..

    ReplyDelete
  4. The above announcement fits good for QURAN and BIBLE scientists also..

    ReplyDelete
  5. ஹலோ Jenil,

    ரொம்ப கடினமான கணக்கை கடவுளிடம் கொடுத்து விட்டீர்கள். பாவம் கடவுள். இந்த நேரத்திற்கு தன்னுடைய பதவியை resign பண்ணிட்டு போயிருப்பார்.
    முதலில் ஒரு simple question-ஐ எல்லாம் வல்ல கடவுளிடம் கேட்போம்.

    ........., -3, -2, -1, 0, 1, 2, 3, ........

    இந்த series-இன் முதல் மற்றும் கடைசி எண் என்ன என்று (கணிதத்தை மற்றும் பிரபஞ்சத்தை படைத்த) கடவுளால் கூற முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Ha Ha Ha.. Saying me u r giving a much bigger question for him.. The answer Godmen will be Infinity = GOD .. SO answer is GOD himself... He He He..Koduma Koduma solli maths tution ponna ange oru koduma thalakeela aducham.. ha ha ha

      @Sarvakan : Boss iam serious the problem seems to be simple but ofcourse its difficult but it does NOT cost anything why can't u try .. because i think u have a good understanding of mathematics...

      Delete