வணக்கம் நண்பர்களே ,
பரிணாமம் என்னும் உயிரின தோற்ற வளர்ச்சி கொள்கை பற்றிய விளக்க பதிவுகள் ,விவாதங்களில் நாம் ஈடுபட்டு வருவது அறிந்த விடயம்.உலகில் பரிணாம கொள்கையை எதிர்க்கும் ஒரே ஆய்வு(?) குழு டிஸ்கவரி இன்ஸ்டியூட் எனப்படும் கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களின் அமைப்பு ஆகும்.பிற பரிணாம எதிர்ப்பு அமைப்புகள் எல்லாம் இந்த அமைப்புகளின் கட்டுரைகளை எடுத்து பயன் படுத்துபவை என்பதை நாம் நம் பதிவுகளில் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.
தென் கொரியாவில் பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் பரிணாம கொள்கையின் சில ஆதாரங்கள் நீக்கப்பட்டது கடந்த மாத செய்தி.இது குறித்து நேட்சரும்[nature] ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.
டைனொசரில் இருந்து பறவை என்பதன் சான்றான ஆர்க்கியாப்டிரிக்ஸ்,குதிரையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றின் சான்றுகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்திட்டம் என்பது அரசியல் கொள்கை என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.
உடனே பரிணாம் எதிர்ப்பு சகோக்கள் தென் கொரியாவில அறிவியலாளர்களே இல்லையா? பாடத்திட்ட குழுவில் இருப்பவர்களும் அறிவியல் மேதைகள்தான் ,முட்டாள்கள் அல்ல என வாதிடுவார்கள். இது உலகம் முழுதும் பரிணாம் எதிர்ப்பு பரவுவதை காடுகிறது என சொல்வது இயல்பே.
நாம் ஒரு செயல் நடக்க சில காரணிகள் தேவை,அது போல் பரிணாம எதிர்ப்பு அரசியலுக்கும் சில காரணிகள் தேவை.அதனை வரையறுத்து அது தென் கொரியாவுக்கு பொருந்துமா என பார்க்கப் போகிறோம்.
இது தென் கொரியாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான பரிணாம எதிர்ப்பு
நாடுகளுக்கும் பொருந்தும்.
1. ஆபிரஹாமிய மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பானமையாக இருக்க வேண்டும்.
2.மதம் அரசியலை கட்டுப்படுத்தும் சூழல் நிலவ வேண்டும்.
புத்த மதத்தினர் பெரும்பானமையினராக இருந்த தென் கொரியா கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறித்தவ்ர்கள் பெரும்பானமை நாடாக மாறிவிட்டது.உலகில் அதிக சுவிசேஷகர்கள் உள்ல இரண்டாம் நாடு தென் கொரியா.[முதல் நாடு அமெரிக்கா]
http://www.korea4expats.com/article-Christianity-in-Korea.html
http://www.korea4expats.com/article-Christianity-in-Korea.html
உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஃபுல் காஸ்பல் சர்ஸ் 7.5 இலட்சம் உறுப்பினர்களை கொண்டது 90 களில் அதன் போதகர் திரு பால் யாங்கி சோ நம் சென்னை மெரினாவில் ஒரு கூட்டம் நடத்தினார்.
http://en.wikipedia.org/wiki/Yoido_Full_Gospel_Church
http://en.wikipedia.org/wiki/Yoido_Full_Gospel_Church
தென் கொரிய மக்கள் 40% பரிணாம கொள்கை மீது நம்பிகை அற்று இருக்கின்றனர்.அமெரிகாவிலும் இதே 40% என்பது குறிப்பிடத் தக்கது.தென் கொரியாவின் பள்ளி அறிவியல் பாட புத்தகங்களில் சில பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வளர்ச்சியையும்,அதன் அரசியல் செல்வாக்கை காட்டுகிறது என்பதுதான் நம் கருத்து.
தென் கொரியாவின் புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர் Dayk Jang, an evolutionary scientist at Seoul National University இது அறிவியலாளர்களை கலக்காமல் எடுக்கப்ப்ட்ட முடிவு என கருத்து தெரிவிக்கிறார்.
http://ncse.com/news/2012/06/creationist-success-south-korea-007434
http://ncse.com/news/2012/06/creationist-success-south-korea-007434
பரிணாமம் என்பது உயிரினங்களின் வரலாறு. வரலாற்றை மறைப்பவன்,மறப்பவன் சரியான முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறு என நிரூபிக்கப்பட வேண்டும்.அரசியல் குறுக்கு வழியில் அல்ல.
இதற்கு ஒரு எ.கா பார்க்க வேண்டுமானால் நமது அண்டை நாடு பாகிஸ்தான்தான்.அங்கே பள்ளி வரலாற்று பாடப் புத்தகங்களில் அரபியன் முகமது பின் காசிமின் படை எடுப்புக்கு பிறகே அங்கு நாகரிகம் வந்ததாகவும் அதற்கு முன் நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள் வாழ்வதாக்வும் சிதரிக்கின்றன.
A Text Book of Pakistan Studies claims that Pakistan "came to be established for the first time when the Arabs under Mohammad bin Qasim occupied Sindh and Multan
[இதே பாணியில் எழுதப்பட்ட சிந்து நதிக்கரையினிலே [ஆசிரியர் முகமது ஹசன்]என்ற தமிழில் ஒரு வரலாற்று நாவல் உண்டு.]
A study by Iftikhar Ahmad of Long Island University published in Current Issues in Comparative Education in 2004 drew five conclusions from content analysis of the social studies textbooks in Pakistan.
- First, the selection of material and their thematic sequence in the textbooks present Islam not simply as a belief system but a political ideology and a grand unifying worldview that must be accepted by all citizens.
- Second, to sanctify Islamic ideology as an article of faith, the textbooks distort historical facts about the nation's cultural and political heritage.
- Third, the textbooks offer a biased treatment of non-Muslim citizens in Pakistan.
- Fourth, the main objective of the social studies textbooks on Pakistan studies, civics, and global studies, is to indoctrinate children for a romanticized Islamic state as conceptualized by Islamic theocrats.
- Fifth, although the vocabulary in the textbooks underscores Islamic virtues, such as piety, obedience, and submission, little is mentioned about critical thinking, civic participation, or democratic values of freedom of speech, equality, and respect for cultural diversity.
நேரமினமையால் மொழி பெயர்க்கவில்லை,விவாதம் வந்தால் மொழி பெயர்ப்போம், பாகிஸ்தான் பள்ளிப் பாடத்திட்டம் பற்றி சில பதிவுகள் எழுதலாம்.ஹி ஹி ஹி!!!!!!!!!!
இதனால் இந்திய வெறுப்பு அவர்கள் மனதில் ஊறிவிட்டது .அந்த வெறுப்பு அவர்களை அமெரிக்காவின் அடிமை ஆக்கியது,இப்போது நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வன்முறை,பொருளாதார சிக்கலில் காட்டுமிராண்டி நாடாகவே ஆகிவிட்டது.
ஆகவே பள்ளி பாடத் திட்டம் என்பது எதை வேண்டுமானாலும் அரசியல் செல்வாக்கு பலம் இருந்தால் மாற்றலாம் ,ஆகவே தென் கொரிய ,பாகிஸ்தான் நிகழ்வுகளில் வித்தியாசம் ஒன்றுமில்லை,இதனை மத அரசியலின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கிறோம்.
தென் கொரியா மதவாதிகளின் பிடியில் இருந்து விடுபடவும்,உலகெங்கும் ஜன்நாயகம் ,மத சார்பின்மை,மனித உரிமைச் சட்டங்கள் அமல் படுத்தும் போராட்டத்தில் நாமும் குரல் கொடுப்போம்.
டிஸ்கி: பரிணாம் எதிர்ப்பில் என்ன எழுதுவார்கள் என நம்க்குத் தெரிந்தாலும் எதிர்ப்புக் கட்டுரை வந்த பின் மறுபுக் கட்டுரை வெளியிடவே விரும்புகிறோம்.
நன்றி