Thursday, April 18, 2013

பூமியின் செயற்கைக் கோள்களை நொண்டி அடிக்க வைக்கிறாரா சனி பகவான்?






வணக்கம் நண்பர்களே,

இணையம் என்பது கட்டற்ற கருத்து சுதந்திரம் அளிப்பதால், சிலர் விரும்பும் விடயங்களை சான்றுகள் இன்றியே பரப்புரை செய்து விளம்பரம் கொடுக்க முடியும். பெரும்பான்மை மனிதர்கள் தாங்கள் ஒரு அற்புதப் படைப்பு என்னும் எண்ணம் கொண்டு இருப்பதால் இக்கதைகளை நம்புவதில் வியப்பில்லை.

மதங்கள் தோன்றியதே இயற்கை சக்திகளை மந்திரம் போட்டு ஆதரவாக செயல்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே.
இயற்கை சக்திகளை மனித உருவில் கற்பனை செய்து, கதைகள் சொல்லி வந்தது மதத்தின் அடுத்த கட்டம்.மத புத்தக கதைகள் எல்லாம் இப்படித்தான். கடவுளுக்கு மனிதன் போல் ஆசை, கோபம்,பெருமை என் பல குணங்களும் உண்டு.

இவற்றை எல்லாம் பொய் என உணர ஆரம்பித்து விடும் சூழல் வந்ததால், அறிய,புரிய முடியா இயற்கைக்கு மேம்பட்ட சக்தியே கடவுள் என சொல்லி மதவாதிகள் குழப்பி விட்டார்.
  
இயற்கையின் ஆற்றலில் இறைவனைக் காண்போம் என்னும் பாதிரி அக்கினோவின் கருத்து இன்றும் நன்கு எடுபடுகிறது.

இன்று தமிழ்மணத்தின் படித்த ஒரு பதிவில்  தமிழ்நாடு திருநள்ளாறு கோயிலின் மேல் வரும் போது மட்டும் துணைக் கோள்கள் 3 நொடி செயல் இழக்கிறது என ஒரு செய்தி. அதுவும் இத்னை நாசா ஒத்துக் கொள்வதாகவும், சில ஆய்வாளர்களை அனுப்பி இத்னை பரிசோதிப்பதாகவும் அப்பதிவு கூறுகிறது.  


//சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது..

3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.

**கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. 

**இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. 

**இந்துக்களால் ‘சனிபகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்

**அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.

**நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.//

இதையும் நம்புபவர்கள் இருப்பதை கண்டு நமக்கும் பிரமிப்பு வருகிறது.

எதையும் சான்றுகள் அடிப்படையில் சீர்தூக்கி பார்ப்பதே அறிவு. வழக்கம் போல் இப்பதிவிலும்  ஆய்வுக் கட்டுரை அல்லது நாசா அறிக்கை போன்றவை இல்லை.

ஒரு விடயத்தை சொல்பவர்கள் அதனை மற்ற‌வர்கள் பரிசோதித்து ஏற்க/ மறுக்க சான்றுகள் அளிக்க வேண்டும். இப்படி பரப்புரைகள் சொல்பவர்கள் இதனை நாசா மறுக்கவில்லையே ஏன் என்றே கேட்பார்கள்.

இப்படி பதில் சொல்வது நாசாவுக்கு வேலையா? ஒவ்வொரு புரளிக்கும் நாசா பதில் சொன்னால் அது நாசாவாக இருக்காது நாசமாக போய்விடும். அடுத்த கிரக மனிதர்,ப்றக்கும் தட்டு, கோயில் கும்ப்ம காஸ்மிக் கதிரை இழுக்கிறது என பல புரளிகள் தினமும் கிளம்பும் போது எல்லாவற்றையும் மறுக்க நேரம் இருக்காது.

பரிணாம எதிர்ப்புக்கும் தொடர்ந்து மறுப்பு சொன்னாலும்,எதிர்க் கோஷ்டி சும்மா இருப்பது இல்லையே!!. கடவுளைக் காப்பாற்ற இப்படி புரளிகள் இன்றியமையாதது.


Myths are created much faster than they can be debunked

சனி பகவான் என்பவருக்கு மத புத்தக கதைகளின் படி ஒரு கால் ஊனம். ஆகவே கொஞ்சம் நொண்டி நொண்டி நடப்பார்.அக்காலத்தில்[ 20 ஆம் நூற்றாண்டு முன்] போலியோ மருந்து கண்டுபிடிக்கப் படாமையால இது நடக்கும் வாய்ப்பு அதிகம். ஹி ஹி!!!

சனி பகவான் நொண்டுவதால், அவர் கோயில் மேல் செல்லும் துணைக்கோள்களும் நொண்டும் என் கதை விடுவதை ஊகிக்க முடியும். 12 இராசிகளின் நகர்வு , டாலமியின் புவிமையக் கோட்பாட்டில் இருந்து கணிக்கப்படுகிறது என நாம் மீண்டும்,மீண்டும் சொல்லி வருகிறோம்.கிரகங்களின் நகர்வு மனிதனை மட்டும் ஏன் பாதிக்கிறது, ஏன் பிற உயிரிகளைப் பாதிப்பது இல்லை? டைனோசோர்கள் விண்கற்கள் தாக்கி இறக்க எந்த இராசி காரணம்? உலகில் தோன்றிய 99% உயிரிகள் மறைந்து விட்டனவே. மனிதனின் ஹோமோ சேஃபியன் தவிர இதர 20+ இனங்கள் மறைந்து போனாரே!!! 


  நமக்கு வந்த கேள்விகள்

1. எந்த துணைக்கோள் எப்போது இப்படி செயல் இழந்தது?
அது குறித்த செய்திகள் உண்டா?


2.திருநள்ளாறு வந்த ஆய்வாளர்கள் யார்?

3. இப்படி உண்மையிலேயே ஏதேனும் வித்தியாசமாக திருநள்ளாறு மீது மட்டும்  செயற்கைக்கோள் செல்லும் போது நிகழுமா?அதற்கு அறிவியல் விளக்கம் உண்டா???

இது ஒரு பொய் பரப்புரை என்பது என்க்கு தெரியும் என்றாலும் இது குறித்து நாசாவின் மறுப்பு ஏதேனும் உண்டா எனத் தேடினேன். நாசா எதுவும் சொன்னது போல் தெரியவில்லை என்றாலும், இந்த இயற்பியல் கலந்துரையாடல் தளத்தில் பல நண்பர்கள் இதனை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்தது புரிந்தது.


அந்த தளத்திலும் அனந்து [ஒரு தமிழர்??!!] இப்படி கதை விட , அங்கே இருந்தவர்கள் ஆதாரம் கேட்டு, மாற்று விள்க்கம் கொடுத்து கும்ம, நம்ம தமிழர் பம்மி எங்கேயோ யாரோ சொன்னாங்க என தவறை ஒத்துக் கொண்டார்.

சரி நாம்  கேள்விகளின் பதிலை பற்றி யோசிப்போம்.

முதல் இரு கேள்விகள் முற்றிலும் பொய், எந்த துணைக்கோளும் , திருநள்ளாறு மீது செயல் இழக்கவில்லை, எந்த ஆய்வாளரும் பரிசோதிக்க வரவில்லை.

மூன்றாம் கேள்விக்கு துணக்கோள்கள் பயணிக்கும் பாதை பற்றி கொஞ்சம் அறிவோம்.

பூமி,துணைக்கோள்களின் இயக்கம் பற்றி அறிய நியுட்டனின் விதிகள் போதுமானவை. பூமி ஒரு ஒழுங்கற்ற கோளம் என்பதால் துணைக்கோள்களின் பாதையும் ஒழுங்கற்ற நீள்வட்டமாகவே இருக்கும்.

பூமிக்கும் துணைக்கோள்களுக்கும் உள்ள‌ தூரம் மாறுவது மிக இயல்பான விடயம். ஆஹா திருநள்ளாறில் அப்படித்தானா  என்றால் திருநள்ளாறு கோயில் என்பதை துணக்கோள் செல்லும் வேகத்தில் கடக்கும் ஆகும் நேரம் சுமார் 8 கி.மீ/வினாடி.துணக்கோள்  250 கி.மீ தூரத்தில் இருந்து ,பூமியை சுமார் 90 நிமிடத்தில் சுற்றுகிறது.இதில் துருநள்ளாறு கோயில் குறுக்கு வெட்டு தூரம் அதிகபடசம் 200 மீட்டர் கூட இருக்காது. திருநள்ளாறு ஊர்  8 கி.மீ நீளம் இருக்காது. ஆகவே மூன்று வினாடியில் துனைக்கோள் சுமார் 24 கி.மீ சென்று விடும்.



The speed needed to achieve a stable low earth orbit is about 7.8 km/s, but reduces with increased orbital altitude. The delta-v needed to achieve low earth orbit starts around 9.4 km/s. Atmospheric and gravity drag associated with launch typically adds 1.5–2.0 km/s to the delta-v launch vehicle required to reach normal LEO orbital velocity of around 7.8 km/s (28,080 km/h). 

பூமி ஒழுங்கற்ற கோள்மாக இருப்பதால் துணக்கோள்களின் பாதை ஏற்ற இறக்கமாக் இருக்கும். எப்படி நிலத்தில் வண்டியில் செல்லும் போது மேடு ,பள்ளம் உணர்கிறோம் அல்லவா!!! அப்படி. இது உலக முழுதும் நடக்கும். திருநள்ளாறில் மட்டும் எதுவும் நிகழவில்லை.குறிப்பாக துணக்கோள்கள் செயல் இழக்கும் வாய்ப்பே இல்லை.செயல் இழத்தல் என்றால் அக்கணம் மட்டும் த்கவல் தொடர்பு கிடைக்காமல் போக வேண்டும். இதனை நாசா உணராமல் இருக்குமா? உணர்ந்தே வேண்டும் என்றே மறைக்கிறார் என் உங்களுக்கு எண்ணம் வந்தால், உங்களுக்கு சொர்க்கத்தில் அப்சர‌சுகள் காத்து இருப்பார்கள் என்னும் கனவு அடிக்கடி வரும்.உங்களின் இறைவன் மிகப் பெரியவர்!!!!!!!!!!!!!!!!!.


இந்த விக்கி சுட்டியில் நாசா நடத்திய புவி ஈர்ரப்பின் ஒழுங்கற்ற பரவல், தட்பவெப்பநிலை குறித்த ஆய்வு பற்றிக் கூறுகிறது. எப்படி துணக்கோள்கள் பயணிக்கும் பாதை மாறுகிறது என்பதையும் விளக்குகிறது.


எப்படி பூமி ஒழுங்கற்று இருப்பது இயல்பான விடயமோ,அதே போல் துணக்கோள்கள் பாதை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது பெரிய விடயம் இல்லை.


இந்த சுட்டியில் கல்லூரி பாடத் திட்ட கேள்வி பதிலில், ஒரு துணக்கோளின் பாதை எப்படி ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என எ.கா உடன் விள்க்குகிறார்கள். குறிப்பாக 4.4 to,4.8 அருமையான கணக்குகள்.


ஆகவே 
1. திருநள்ளாறில் துணைக்கோள்கள் செயல் இழக்கவில்லை.

2. துணக்கோள்களின் பாதை ஏறி இறங்க ,பூமியின் ஒழுங்கற்ற அமைப்பே காரணம்.
அது பூமியின் பல் இடங்களில் நிக்ழ்கிறது. திருநள்ளாறுக்கும் ஒரு குறிப்பிட்ட துணைக்கோள் சார்ந்து ,தூரம் காணமுடியும். அது அற்புதம் ஆகாது!!!. 

பாருங்கள். பூமி,ஈர்ப்பு,துணக்கோளின் பாதை என பல விடயம் சொல்ல வேண்டி உள்ளது. இன்னும் பல விடயங்கள் உண்டு என்றாலும், பின்னூட்ட விவாதங்களின் மேல் தொடர்வோம்.

புரளி கிளப்புவது எளிது,மறுப்பு சொல்வது அதிக நேரம் எடுக்கும்,கடின உழைப்பு கொண்ட விடயம் ஆகும்.

புரளி கிளப்பிய பதிவு எழுத 10 நிமிடம் போதும். மறுக்க நமக்கு பல மணிநேரம் தேட வேண்டி இருந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!!!!

என்றாலும் பரிணாம மறுப்பு, இப்படி போலி அறிவியல்களை மறுக்கத்தானே நாம் இருக்கிறோம்.

சனீஸ்வரருக்கே சனி பிடிக்க வைக்கிறார்களே ஆத்திக விளம்பரதாரிகள்!!


சனீஸ்வராய நமஹ!!!


நன்றி!!!


Saturday, April 13, 2013

மத புத்தக மதங்களை ஏன் விமர்சிக்கிறோம்?


வணக்கம் நண்பர்களே,

பெரும்பான்மை மதங்களுக்கு கடவுள் கருத்துகள் அடங்கிய மத புத்தகம் உண்டு.இவை அக்கால மதத்தலைவர்களின் மூலம் மக்களுக்கு வழங்கப் பட்டது என்பார்.

இதில் மத்திய கிழக்கு மதங்கள் தங்களின் மத புத்தகம் எக்காலத்துக்கும் பொருந்தும் சட்ட திட்டம் கொண்டது என விளம்பரம் செய்கிறார்.பிரச்சாரங்களில் அதில் உள்ள சில வசனங்களை வெட்டி ஒட்டி  , தங்களின் விளக்கம் இணைத்து அருமையான மதம் பாரீர், வந்து ஜோதியில் ஐக்கியமாகி இம்மையிலும்,மறுமையிலும் இனபம் பெற உத்த்ரவாதம் தரும் ஒரே மார்க்கம் என பல பதிவுகள் தமிழ் மணத்திலும் வருகிறது. இது நேற்றைய பதிவு. 




தயவு செய்து அப்பதிவைப் படியுங்கள்.என்ன சகோ அருமையான கருத்துகள் ,அனைவருக்கும்,எக்காலமும் பொருந்தும் வகையில்தானே இருக்கிறது!!. இதையும் விமர்சித்தால் உங்களுக்கு நாத்திக வெறி முத்தி விட்டது என பொருள் என்னும் மதச்சார்பிமையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழ் சகோக்களே!! அப்பதிவைப் படித்து விடுங்கள்!!

படித்து விட்டீர்களா!!

நாம் என்ன சொல்கிறோம்!!

மத புத்தகங்கள் ஒரு இனக்குழுவை மேன்மைப் படுத்த,அவர்கள் செய்யும் விடயங்களை கடவுள் சொல்லி செய்தோம் என் நியாயப் படுத்தி விளக்க்வே உருவாக்கப் பட்டவை. இனக் குழு தலைவர்கள் தனிமையில் இருக்கும் போது கடவுளிடம் இருந்து வந்த செய்திகளே மத புத்தகம் ஆனது என அவர்களும் சொல்கிறார்கள்.

ஆகவே 

மத புத்தகம் இனவாதம், இன மேட்டிமை[racist supremacy] பேசுகிறது.

இதனை நிரூபிக்க முடியுமா என்றால் முடியும், மத புத்தக மதங்களின் முதல் எதிரி அவர்களின் மத புத்த்கமே. அதில் அவர்கள் சுட்டும் வசனம் மேல் கீழ் கொஞ்சம் படித்தால் இப்படி ஒரு இனக்குழுவை,அதன் செயல்களை மட்டும் புகழ்பாடுவது புரியும்.

அவர்கள் சொன்ன யாத்திராகமம்,23 ஆம் அதிகாரம் முழுதும் படிப்போம். அவர்கள் சொல்லாமல் விட்ட வசனங்களை சிவப்பில் தருகிறேன்.அத்தியாயம் 23 முழுதும் படியுங்கள்.




இந்த சூழல் என்னவெனில் எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை, அவர்களின் தலைவர் மோசஸ்[மூசா] த்ன்னிடம் கடவுள் பேசுவதாக சொல்லி, அவர்களுக்கு பாலும் தேனும் பாயும் நாடு கொடுப்பதாக சொன்னதாக கூறி அங்கிருந்து புறப்பட வைக்கிறார்.

40 வருடம் பயணித்து, இபோதைய இஸ்ரேல்,ஜோர்டான் பகுதிக்கு வந்து ,ஏற்கெனவே இருந்தவர்களை கொன்று,வென்று,ஆக்கிரமித்து நாடு அமைக்கிறார்.[இப்போதைய இஸ்ரேலின் கதையும் இதுதான்]. இது என்ன அயோக்கியத்தனம் எங்கிருந்தோ வந்து , பூர்வ குடிகளை விரட்டி ஆக்கிரமிக்கலாமா? என்றால் எங்கள் கடவுள் அனைத்தையும் படைத்தவர் அவரைக் கேள்வி கேட்காதே என மத புத்தகம் கூறும். அதனை விமர்சித்தால் மத நிந்தனை ஆகும்.

இதுதான் மத புத்தகம் கூறும் இனவாதம்!!

**
12. ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக.

[அடிமைப் பெண் எனபது போரில் தோற்கடிக்கப்பட்ட பூர்வ குடிகள்]
***
13. நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

[தோற்கடிக்கப் படவனின் கடவுளை விட வென்றவன் கடவுள் பெரிது]
****
22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

23. என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

24. நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

[மத புத்தகம்[அதாவது மத குரு] சொல்வதைக் கேட்டால் தவறுகளுக்கு மன்னிப்பு, அடுத்தவன்[பூர்வ குடி] சொத்தை எடுக்கலாம்.பூர்வ குடிகளின் கடவுள் சிலைகளை உடை, தேவதூதர்கள் போரில் உதவுவார்கள்]

***
27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்க வேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
***
இந்த வசனங்களுக்கு விளக்கம் தேவையில்லை!!

இப்படி மதபுத்தகம் இருப்பதற்கு இப்போதைய பிரச்சாரகர்கள் எப்படி பொறுப்பு ஆவார் என்றால், இப்படி மதபுத்தக் உண்மைகளை மறைப்பதுதான் பொறுப்பாளி ஆக்குகிறது.

மத புத்தக கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும், அதனை அப்படியே எழுத்துக்கு எழுத்துக்கு நம்புவோரும் இருக்கிறார்.

இஸ்ரேல் என்பது யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப் பட்டது என் இன்னும் ஜியோனிச யூதர் கூறுகிறார். அவர்களுக்கு உலகில் பல கிறித்துவ அமைப்புகள் ஆதரவு கொடுக்கின்றன.மத புத்தக கருத்துகள்,சட்டங்கள் இன்னும் பிரச்சினை வன்முறைகளுக்கு வித்திடுகின்றன!!!

மத புத்தக கடவுள் என்பவர் பாரபட்சம் இல்லாமல், ஜனநாயகவாதியாக‌,மத சார்பற்றவராக இல்லையே என்பதுதான் நம் கவலை !!!!!!!!

ஆகவே மத புத்தக பிரச்சாரம் கண்டால்,அந்த அத்தியாயம் முழுதும் படியுங்கள். பிரச்சாரகர் பொய் சொல்வது தெரிந்துவிடும்.

இதுவே மத புத்தக பிரச்சாரம் மறுக்கும் வழியாகும்!!!!

மனிதனுக்கு மதம் தேவையில்லை குறிப்பாக மத புத்தக மதங்கள்!!!


To know who is killing who see this!!!
http://blog.ninapaley.com/2012/10/01/this-land-is-mine/

நன்றி!!