Thursday, December 22, 2011

குறை வெப்ப அணு இணைப்பு ஆற்றல்[Cold Fusion] முறை சாத்தியமா?




அணு உலை குறித்த சூடு பறக்கும் வாதங்களும்,விள்க்கங்களும் நடப்பதை அனைவரும் அறிவோம்.அணு உலையின் பாதுகாப்பு,கதிர்வீச்சின் பாதிப்பு, கழிவுகளை புதைத்தல் என பல பரிமாணம் கொண்ட பிரச்சினை அது. வேறு விதமான  அணுவில் இருந்து ஆற்றல் பெறும் முறைகள் சில  பற்றி இப்பதிவில் அறிவோம்.

அணுக்கரு எனப்படும் நுயுக்ளியஸை பிளக்கும் போது [Nuclear fission] அதில் இருந்து ஆற்றல் வெப்பக் கதிர்வீச்சாக வெளிப்படுகிறது.இந்த வெப்பத்தை பயன் படுத்தி மின்சாரம் தயாரிப்பதுதான் அணு உலைகள்.ஒரு அணுவை பிளப்பது எப்படி ஆற்றல் அளிக்கிறதோ அதே போல் இரு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கருக்களை இணைத்து[Nuclear fusion] ஒரு மொத்த(பெரிய) அணுக்கரு அமைக்கும் போதும் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது. இது அணு பிளப்பிற்கு எதிரான வினை என கூறலாம்.

இயற்கையில் சூரியன் [உட்பட்ட நட்சத்திரங்கள்] இவ்விதத்திலேயே [நமக்கு] ஆற்றல் அளிக்கிறது.செயற்கை முறையில் அணு இணைப்பு ஆற்றல் முறையின் எடுத்துக் காட்டு எனில் ஹைட்ரஜன் குண்டு என கூறலாம்.

இரும்பை விட குறைந்த அணு எடை கொண்ட தனிமங்களின் அணு இணைப்பு ஆற்றல் தருகிறது. அதிகமான் அணு எடை கொண்ட தனிமங்களின் அணு இணைப்பு ஆற்றலை உள்வாங்குகிறது[consume].

இந்த அணு இணைப்பிற்கான சூழலை பூமியில் உருவாக்குவது மிக் கடினமானதாக கருதப்படுகிறது. ஹைட்ரஜன் போன்ற எளிய தனிமத்தின் அணுக்கருக்களை இணையச் செய்வதற்கும் மிகுதியான ஆற்றல்[வெப்பம்]  தேவைப்படுகிறது. மின்சார உற்பத்திக்காக இணைவு ஆற்றலை உற்பத்தி செய்யும் நோக்குடன் கட்டுப் படுத்தப்பட்ட இணைவு(Controlled Nuclear fusion] ஆராய்ச்சியானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதில் ஒரு வகையான‌ குறை வெப்ப அணு இணைவு[cold fusion] என்பது பற்றியே இப்பதிவு. அதாவது அணுக்கரு இணைப்பு என்பது குறைந்த வெப்பநிலையில்,ஆய்வு சூழலில் ஏற்படுத்த முடியும் என்பதும் இதில் இருந்து வெப்ப ஆற்றல் பெற முடியும் என்பதே இக்கொள்கையாகும்.

இதன் பயன் பாடுகளாக‌

1. சுற்று சூழலை மாசு படுத்தாத ஆற்றல்.

2. பாதுகாப்பானது.

3கடல் நீரில் இருந்து இதனை செய்ய‌ முடியும் என்பதால் அதிக ஆற்றல் குறைந்த செலவில் பெற இயலும்

4. அணு உலைகளின் கழிவுகளின் மறு பயன் பாடு





மார்ச் 23 ,1989 ல் இரு அறிவியலாளர்கள் Dr. Stanley Pons  Dr. Martin Fleishman தங்கள் ஆய்வில் இதனை நிரூபித்ததாக கூறினாலும் இதுவும் ஆதாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

இப்படி பல நன்மைகள் இருந்தாலும்.இதுவரை அறிவியல் உலகில் இம்முறைகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இப்போது இது குறித்து சில விவாதங்கள்,ஆய்வுகள்  வெளிவருகிறது.இந்தியாவிலும் கூட பாபா அணு ஆய்வகம் இதில் ஈடுபாடு காட்டுவதாக் தெரிகிறது.

இம்முறை வெற்றி பெற்றால் மனித சமுதாயத்திற்கே நன்மை எனினும் நிரூபிக்கப்படும் வரை எதுவும் அறுதியாக கூற இயலாது.


இன்னும் சிலர் இம்முறையை வேண்டுமென்றே அறிவியல் உலகம் ஒதுக்குவதாகவும் கூறிவருகின்றனர்.அது பற்றிய காணொளி பாருங்கள்.நாம் என்ன சொலவது வாய்மையே வெல்லும்,மனித சமுதாயத்தின் நன்மை பயக்கும் அறிவியலை  மட்டும் வளர்ப்போம்!!!!!!


http://coldfusionnow.org/

http://en.wikipedia.org/wiki/Cold_fusion

http://www.lenr-canr.org/Collections/BARC.htm

1 comment:

  1. cold fusion முறையில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து, அந்த முறை வெற்றி பெரும் என நம்புவோம்..... பயன்கள் அதிகமாக இருப்பதால்.

    பதிவிற்கு காணொளிக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete