Thursday, March 15, 2012

கொரில்லாவின் ஜீனோமின் அமைப்பும் படைப்பியல் கோமாளிகளின் அவதானிப்பும்




இந்த இருபது ஆண்டுகளில் உயிரியல் துறை பல முன்னேற்றங்களை கண்டது .அதில் மனிதனின் உயிர்க்குறியீடுகளான ஜீனோமை[genome] கண்டறிந்து ஆவணப்படுத்தியது குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.. இது 13 வருடங்களாக் தொடர்ந்து நடைபெற்று பொ.ஆ 2003 ல் முடிவுற்ற அரிய சாதனை ஆகும்.இது க்ரைக் வெண்டர் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சிஆகும்.  National Human Genome Research Institute (NHGRI), Bethesda, Maryland USA அமைப்பு இச்சாதனையின் பல அம்சங்களையும் ஒருங்கிணைத்தது. இச்சாதனை அமெரிக்க அதிபராக பெரிய ஜார்ஜ் புஷ் காலத்தில்[1989_1993] தொடங்கி சின்ன ஜார்ஜ் புஷ்[2001_2009C.E] கால்த்தில் முடிவுக்கு வந்தது.அமெரிக்க அதிபராக திரு பில் கிளிண்டன்[1913_2001] இருந்த போது இதற்கு நிதியும்,ஆதரவும் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.  இது குறித்த அதிக விவரங்கள் இங்கே பெறலாம்.


மனிதனின் ஜீனோம் ஆவணப்படுத்தம் வெற்றிக்கு பிறகு  2003C.E ல் சிம்பன்சியின் ஜீனோம் ஆவணப்ப்டுத்தும் முயற்சி தொடங்கியது.2005ல் நேச்சர் ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையில் மனிதன் ,சிம்பன்சி ஜீனோம்கள் ஒப்பீடு குறித்த ஒரு கட்டுரை வெளியான‌து.


இந்த ஆய்வுக் கட்டுரையின் சாராம்சமாக் மனிதனும் சிம்பன்சியும் 96% பொதுவான ஜீனோம் குறியீடுகளை கொண்டுள்ளன, பேச்சு,கேட்கும் பணி செய்யும் மனித ஜீன்களில் அதிக வித்தியாசம் இருந்ததாக்வும் அக்கட்டுரை கூறியது. இதன் பிறகு வந்த சில கட்டுரைகள் ஒற்றுமை 98% என்றும் கூறின.

இது மத படைப்பியல்வாத பரிணாம் எதிர்ப்பாளர்களை மிகவும் எரிச்சல் ஊட்டியது.அவர்கள் ஏதாவது  பரிணாம் கொள்கைக்கு எதிராக ஆதாரம் வராதா என்று 150+ வருடம் எதிர்பார்த்து ஓய்ந்து போனதின் விளைவே இது. இருந்தாலும் மனம் தளராமல் வழக்கம் போல் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். எடுத்துக்காட்டாக ஒரு மாதிரி பரிணாம் கொள்கை பிரச்சாரக் கட்டுரை இங்கே படியுங்கள்.


அவர்களால் ஒற்றுமை 95% என்ற சில கட்டுரைகளை காட்டி மட்டுமே எரிச்சலை தவிர்க்க முடிந்தது,இதனால் மனிதனும் சிம்பன்சியும் ஒரே முன்னோரிடம் இருந்து தோன்றினார் என்று உறுதியாக் கூற முடியுமா என்ற அதி புத்திசாலித் தன்மான கேள்வியை கேட்டு முடித்துக் கொண்டனர்.

இது குறித்து தமிழில் ஏதேனும் பரிணாம் எதிர்ப்பு கட்டுரை வந்திருந்தால் இத்னையோ அல்லது இது போன்ற கட்டுரையின் மோசமான தழுவலாகவே[bad mutant copy !!!!!!!!] இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எப்போதும் இரு அதிக எண்ணிக்கை கொண்ட குழுக்களை ஒப்பீடு செய்யும் போது எந்த அளவு சான்றுகள்,அளவீடுகள் பொறுத்தே அதன் உண்மை உறுதிப்படுத்தப்படும்.உலகின் எல்லா மனிதர்களுக்கும் உள்ள ஜீனோம் சராசரி வேறுபாடு[genomic variation] 0.1%[அதாவது 3 மில்லியன் அமில ஈரினைப்புகள்]என ஆய்வுகள் கூறுகின்றன.இது இன்னும் அதிக  அளவு மனிதர்களின் ஜீனோம் கொண்டு உறுதிப்படுத்தப்படுவதும் கட்டாயமே!.இதுவும் நடந்து கொண்டிருப்பதும் உண்மை. ஆகவே இந்த 95_98% மனிதன் சிம்பன்சி ஒற்றுமை என்பது குறைந்த பட்சம் பரிணாம் கொள்கைக்கு எதிராக் இல்லை என்பதை நடுநிலையாளர் எவரும் ஒத்துக் கொள்வார்.98% சரியில்லை 95% சரி என்னும் போதே எதிர்ப்பாளர்களும் இதனை மறைமுகமாக் ஒரு முன்னோரில் இருந்து தோன்றிய  உயிரின‌ங்களின் ஜீனோம் ஒப்பீட்டளவில் அதிக் நெருங்கிய ஒற்றுமையாக் இருக்க வேண்டும் என்பதை ஏற்கின்றனர் என்பதே பொருள்.

ஆகவே மனித சிமப்ன்சி ஒப்பீடு குறித்தே இன்னும் பல்வேறு சார்பற்ற ஆய்வுகள் நடத்தப் படவேண்டும்.அதனை இந்த பரிணாம எதிர்ப்பாளர்களும் தனியாக செய்து சில விவரங்களை சரி பார்த்து வெளியிட்டால் மிக நலமாக் இருக்கும்.இதனை செய்யாமல் அறிவியலாளர்கள் செய்த ஆய்வின் முடிவுகளை அவர்களே வியக்கும் வண்ணம் திரிப்பது அவர்களின் நம்பக்த் தன்மையை குறைக்கும்.

சரி இப்போது கொரில்லாவின் ஜீனோமும் கண்டறியப்பட்டு அதன் முடிவுகள் நேச்சர்[nature] இதழில்  ஆய்வுக் கட்டுரையாக் வந்தது

இதுதான் அக்கட்டுரை. அதன் சுருக்கமும்[abstract] தமிழாக்கம் அளிக்கிறோம்.

ஹோமினிட்=மனிதன்+னித‌க் குரங்கின் முன்னோரில் இருந்து தோன்றிய மனிதன்[ஹோமோ சேஃபியன்] உள்ளிட்ட அனைத்து இரு காலில் நடக்கும் மனித உயிரினங்களையும் குறிக்கும் சொல்.மனிதன் தவிர சுமார் 20 இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன.

http://www.talkorigins.org/faqs/homs/species.html

நேச்சர் ஆய்விதழ் கட்டுரையின் சுருக்கம்

கொரில்லா ஜீனோமின் மீதான ஹோமினிட் பரிணாம் வளர்ச்சி குறித்த‌ உள்பார்வை

சிம்பன்சிக்கு பிற்கு கொரில்லா மனிதனின் நெருங்கிய உறவினராக பரிணாம ம்ரத்தின் படி வரையறுக்கப்படுகிறது. மனிதனின் பரிணாம் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளில் கொரில்லாவின் முக்கியத்துவம்  தவிர்க்க இயலாது. இக்கட்டுரையில் மேற்கு தாழ் நில வகை  கொரில்லாவின் ஜீனோமின் பகுப்பாய்வு மற்றும் அதன் வாழும் நெருங்கிய இனங்களின் [மனிதன்,சிம்பன்சி,ஓரங்குட்டான்]ஜீனோமுடன் ஒப்பீடும் அளிக்கிறோம். 


படிமங்கள்,ஜீனொம் சான்றுகள் சார்ந்த தொகுப்பாய்வுகள் மனிதன் சிம்பன்சி உயிரின பிளவு [speciation] 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் மனித+சிம்பன்சி,கொரிலா உயிரினப் பிளவு 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் நடந்ததை உறுதிப் படுத்துகின்றன.. கொரில்லாவின் ஜீனோமில் 30% ஜீன்கள் மனிதனின் அல்லது சிம்பன்சியின் ஜீன்களோடு அதிக ஒற்றுமை உள்ளது.இது மனிதன் சிம்பன்சிக்கு இடையேயான [அதே] ஜீன்களின் ஒற்றுமையை விட அதிகம். இந்த  விடயம் [ ப்ரொட்டின் உருவாக்கும்]  ஜீன்களில் அரிதாக‌ உள்ளது.இது மனித(குரஙுகு) குடும்ப‌ பரிணாம் வளர்சியில் [இயற்கைத்] தேர்வு பரவலாக் நடந்ததை  காட்டுகிறது,இது ஜீன்களின் செயலாக்க வெளிப்பாட்டில் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. ப்ரொட்டின் உருவாக்கும் ஜீன்களை ஒப்பீடு செய்ததில் சுமார் 500 ஜீன்களில் மனிதன்,சிம்பன்சி,கொரில்லா அனைத்திலுமே  துரிதமான் பரினாம வளர்ச்சி நடந்துள்ளது.  இவ்வளர்ச்சி மனிதன்,சிம்பன்சி,கொரில்லா அனைத்திலும் இணையாக், குறிப்பாக கேட்கும் பணி செய்யும் ஜீன்களிலேயே நடந்துள்ளது. 


இன்னும் மேற்கு நில கொரில்லாவின் ஜீனோமை,கிழக்கு நில கொரில்லாவுடனும் ஒப்பீடு செய்ததில் அவை இரண்டும் 1.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஜீனோம் வரிசையில் விலகல் ஏற்ற்பட்டது கண்க்கிடப்பட்டாலும்,சமீபத்திய இரண்டுக்கும் இடையேயான் ஜீன் பரிமாற்றத்தின் சான்றுகள்,கிழக்கு நில கொரில்லாக்கள் எண்ணிக்கை  நெருக்கடிநிலையில் உள்ளதையும் ஆவணபடுத்தியுள்ளோம்.  இவைகள் குறித்த ஜீனோம் குறியீடு ஆய்வுகள் எதிர்கால்த்தில் உயிரியல்,மற்றும் பரிணாமவியலில் பல புரிதல்களை ஏற்படுத்தும்.


Insights into hominid evolution from the gorilla genome sequence

Gorillas are humans’ closest living relatives after chimpanzees, and are of comparable importance for the study of human origins and evolution. Here we present the assembly and analysis of a genome sequence for the western lowland gorilla, and compare the whole genomes of all extant great ape genera. We propose a synthesis of genetic and fossil evidence consistent with placing the human–chimpanzee and human–chimpanzee–gorilla speciation events at approximately 6 and 10 million years ago. In 30% of the genome, gorilla is closer to human or chimpanzee than the latter are to each other; this is rarer around coding genes, indicating pervasive selection throughout great ape evolution, and has functional consequences in gene expression. A comparison of protein coding genes reveals approximately 500 genes showing accelerated evolution on each of the gorilla, human and chimpanzee lineages, and evidence for parallel acceleration, particularly of genes involved in hearing. We also compare the western and eastern gorilla species, estimating an average sequence divergence time 1.75 million years ago, but with evidence for more recent genetic exchange and a population bottleneck in the eastern species. The use of the genome sequence in these and future analyses will promote a deeper understanding of great ape biology and evolution.

மனித சிமபன்சி,கொரிலா,ஓரங்குட்டான் உயிரினபிளவு கால கண்க்கீடுகளை,ஒபீடுகளை விள்க்கும் படம்[thanks nature]
 





பெரும்பாலான் ஆய்வாளர்கள் புதிதாக ஏதாவது ஆய்வுக்கட்டுரை இடும் போது எந்த ஒரு புதிய கருத்தையும் வலியுறுத்தும் போது மிக எச்சரிக்கையாக்வே எழுதுவர்.இக்கட்டுரையில் மிகவும் பொதுப்படையாக கொரில்லா ஜீனோம் ,ஒப்பீடு அதன் பயன்பாடுகள் என மிக தாழ்மையாக் எதிர்கால்த்தில் பல் புரிதல்கள் ஏற்படலாம் என்று கூறுவதை  கவனிப்போம்.

ஆனால் இதே கட்டுரையின் ஒரு வரியை எடுத்து ,திரித்து இது பரிணம் மரத்திற்கு எதிரானது என வறட்டு கூச்சல் போடும் சில பதிவுகள் இங்கே பாருங்கள்.




1.இவர்கள் என்ன சொல்கிறார்கள்?.எந்த வரியை திரிக்கிறார்கள்?

 "In 30% of the genome, gorilla is closer to human or chimpanzee than the latter are to each other

கொரில்லாவின் ஜீனோமில் 30% ஜீன்கள் மனிதனின் அல்லது சிம்பன்சியின் ஜீன்களோடு அதிக ஒற்றுமை உள்ளது.இது மனிதன் சிம்பன்சிக்கு இடையேயான [அதே] ஜீன்களின் ஒற்றுமையை விட அதிகம்.

2.கட்டுரையின் சுருக்கத்தில் இருந்து ஒரே வரி.பிறகு கட்டுரைக்குள் சென்று சராசரியாக நாம் சிம்பன்சிக்கு பிற குரங்கினங்களை விட நெருக்கமாக் இருக்கிறோம் என்ற கருத்தை எப்படி கூறலாம் என்று ஒரு கேள்வி.

 as the paper stated "Molecular studies confirmed that we are closer to the African apes than to orangutans, and on average closer to chimpanzees than gorillas." (emphasis added) "On average," of course, is wiggle-language, because huge portions parts of our genomes don't fit with the standard evolutionary phylogeny.

3. கேட்கும் பணி செய்வதாக் கூறப்படும் ஜீன்கள் மனிதன் சிம்பன்சி,கொரிலா ஆகியவற்றில் துரித்மான் வளர்ச்சி என்றால் ஏஎன் மனிதன் மட்டும் பேசுகிறான்.கொரிலாவும் சிம்பன்சியும் பேசவில்லை?

எல்லா மாற்றமும் ஒன்று என்றால் இவர்கள் கேட்கும் கேள்வி சரி என்று கூறலாம்.அந்த ஜீன்களின் என்ன சிறு மாற்ற்ங்கள்[mutations] ஏற்பட்டது என்பது பற்றி இன்னும் பல கட்டுரைகள்,விவாதங்கள் நடக்கும்.ஏன் சிறு மாற்றங்கள் முனேற்றம் தரவே தராது ,கெடுதல்தான் தரும்(நன்றி டாக்டர் சாதிக்) என்று ஒரே அடியாக போட்டுத் தாத்கவில்லை?

வேறுவிதமாக் கூறுகிறார்கள்.இன்னும் கொஞ்சம் மேலே போய் ஆகவே ஜீன்கள் பேச்சு,கேட்கும் திற்னகளை வரையறுப்பதாக கூறுவது தவறு என்கிறார்கள்.

As Nature news explained:
Much of the 15% is in sections of the genome that do not code for proteins. But the researchers also looked at functional gene changes. They found that certain genes -- including some involved in hearing and brain development -- had gone through more rapid changes than expected in both the gorilla and human lineage.

Some of these rapid changes are puzzling: the gene LOXHD1 is involved in hearing in humans and was therefore thought to be involved in speech, but the gene shows just as much accelerated evolution in the gorilla. "But we know gorillas don't talk to each other -- if they do they're managing to keep it secret," says Scally.


This weakens the connection between the gene and language, says Enard. "If you find this in the gorilla, this option is out of the window."

4. ஒருவழியாக் தெளிவாக பேசுகிறார்கள்.மனிதன் 98% மனிதக் குரங்கு என்று கூறியது பொய்யா?மனிதனுக்கும் சிமப்ன்சிக்கும் 98% ஜீனோம் ஒற்றுமை இருந்தால் ஒரே முன்னோரா!.செல்லாது செல்லாது!


இந்த ஒரே முன்னோர் என்னும் கொள்கை எந்த அளவு ஒற்றுமை வந்தால் தவறாகும் 95?,90?,80?. ஒரெ முன்னோர் என்ற கொள்கை தவறாக் எந்த அளவு ஒற்றுமை வேண்டும்?டாக்டர் கிறிஸ் டைலர் ஸ்மித்தின் மனிதன் கொரில்லாவிற்கு ஒரே முன்னோர் என்பதை இந்த ஒப்பீடுகள் பொய்யாக்குமா?

Second, even if humans and gorillas actually were 98% genetically similar, why should that demonstrate common ancestry? We might reasonably ask the evolutionist why 98% similarity is considered powerful evidence for common ancestry, and at what point does the comparison cease to support common descent? What about 97% different? 95%? 90%? 80%? Is there an objective metric for falsification here, or is Tyler-Smith implying a fallacious argument for human / gorilla common ancestry?


கொரில்லா ஜீனோமை பாடுபட்டு ஆய்வு செய்தவர்களே மிக எச்சரிக்கையாக் இப்பரிசோதனையை பலமுறை வேவேறு கொரில்லாக்களை வைத்து  செய்து உறுதிப்படுத்தி கருத்துகள் எதிர்கால்த்தில் வரலாம் என்று மட்டும் கூறும் போது இணையத்தில் மட்டும் அம்ர்ந்து வெட்டி ஒட்டும் அன்பர்களின் கருத்துகள் கொஞ்சம் அதிக்மதான்.

அவர்களும் சில ஜீனோம்களை ஆய்வு செய்து கட்டுரை பதிவிட்டு பேசினால் கொஞ்சமாவது எடுபடும்.மற்றப்டி அவர்களின் கோபமும் வயிற்றெரிசல் மட்டுமே தெரிகிறது.இவர்களுக்கு தோன்றுவது ஏன் ஜீனோம் கண்டறிந்தவர்களுக்கு தோன்றவில்லை?.ஒருவேளை இது பரிணமத்தை பொய்பித்தால் இது இநூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு ஆகும்.நுயுட்ரினோ ஒளியின் வேகத்தை விட மிக சிறிய அளவே சென்றதாக கூறப்பட்ட போது என்ன பரபரப்பு செய்தி ஆயிற்று என்பதை கொஞ்சம் யோசித்தால் புரிந்து விடும். இவ்வாய்ப்பை ஆய்வாளர்கள் விடுவார்களா என சிந்தித்தால் போதும்.ஆனால் அது சிந்திக்காத கூட்டம்.சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!

இது போல் கொரில்லா ஜீனோம் பரிணாமததை பொய்யாக்கியது என தமிழிலும் கட்டுரை வரலாம்[இப்போ வருமா!!!] என்பதற்காகவே நாம் முன்பே விளக்கி விட்டொம்.பரிணாம எதிர்பாளர்களையும் மகிழ்விக்க கொரில்லாவின் ஜீனோம் குறித்த எதிர் விமர்சன காணொளிகளையும் அளிக்கிறோம்.






இப்பதிவு &  பரிணாமம் குறித்த கேள்விகளுக்கு விள்க்கம் அளிக்க சித்தமாக் இருக்கிறோம்.மொழி பெயர்ப்பில் தவறுகள்,மேம்படுத்தல்கள் சுட்டிக் காட்டினால் த்லைவணங்கி ஏற்கிறோம்.

நன்றி
Thanks to google

15 comments:

  1. பரிணாம எதிர்ப்பாளர்களின் இணைய தாய்கம் கிரியேஷன் மினிஸ்டிரிஸ் இதன் கட்டுரைகளே பெரும்பாலான் பிற மொழி கட்டுரைகளாக் மாறுகிறது.தமிழ் பரிணாம் எதிர்ப்பு பதிவுகளும் இவ்வகைதான் என்றாலும்,பதிவு கொடுத்த குருவிற்கே பேரை போடாமல் துரோகம் செய்வதால் கிரியேஷன் மினிஷ்டிரியின் கட்டுரை,காணொளி ஆகியவற்றையும் நாமே வெளியிட்டு விட்டோம்!!!!
    How is it!!!!!!!!!!

    ReplyDelete
  2. சகோ!நலமா?காணொளி மீண்டும் காண்பேன்.

    ReplyDelete
  3. வாங்க சகோ இராஜ நடராஜன்
    நலமே.நீங்கள் நலமா!
    அடிக்கடி வாருங்கள்
    நன்றி

    ReplyDelete
  4. ஒரு வேளை ஆதாம் ஏவாள் குரங்கு வடிவத்தில் இருந்தனர் என்று அறிவியல் சொல்லி இருந்தால் ஒப்புக் கொள்வார்கள்.
    :)

    ReplyDelete
  5. வாங்க சகோ சமுத்ரா
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. வாங்க சகோ கோவி

    ஆதம் ஏவாள கதை உண்மையாக இருக்கும் வாய்ப்பே இல்லை என்வே கூறலாம்.ஆதி கால் மனிதர்கள் விலங்குகளோடு உணவுக்காக போரடி,இயற்கைக்கு அஞ்சி வாழ்ந்த மிக எளிய மனிதர்கள் வேட்டையாடும்.கருவிகள் தயாரிக்கவே அவர்களுக்கு பல் ஆயிரம் ஆண்டுகள்.பிறகு நெருப்பு,விலங்குகளை பழக்கப்ப்டுத்தல் என்று மெதுவாகவே முன்னேற்றம் நிகழ்ந்தது ஆவணப் ப்டுத்தப் பட்ட விடயம்.

    குறீப்பாக இவர்தான் மனிதன் என்று எபோது தெளிவாக வரையறுக்க &கூற முடிந்தது என்பது இன்னும் சரியா விடையளிக்கப் படாத கேள்வி.ரிச்சர்ட் டாகின்ஸ் முதல் ஹோமோ சேஃபியன் என ஒன்று இருக்க முடியாது என்கிறார்.

    Cave Fossil Find: New Human Species or "Nothing Extraordinary"?

    http://news.nationalgeographic.com/news/2012/03/120314-new-human-species-chinese-plos-science-red-deer-cave/

    மனிதனில் 20+ வேறுபட்ட இனங்கள் இருந்ததாக கூறுகிறார்கள்.சமீபத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட மனித படிமம் புதிய இனமா என்னும் ஆய்வும் நடக்கிறது.

    இப்போது மனிதன் ஜீனோம் மீதே பல ஆய்வுகள் நடத்தி பிறமனித இனங்களின் ஜீன்கள் கலப்பு இருக்கிறதா என்பதையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.இது உண்மையாகும் பொழுது ஒரே இடத்தில் மட்டும் மனித தோற்றம்,பிறகு பரவல் என்னும் கொள்கை தவறாகி விடும்.

    அப்போது பல ஆதம் ஏவாள் என்று கூறுவார்களா?.
    *********

    ஆதம் ஏவாள் கதை தவிர்த்து நாம் உண்மையில் யார் என்னும் கேள்விக்கு பரிணாம் கொள்கை& அறிவியல் அளிக்கும் தேடல் எனக்கு ஆன்மீகம் போன்ற தேடலையே தருகிறது.

    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!.

    ReplyDelete
  7. தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

    ReplyDelete
  8. நண்பரே.

    //////இது போன்ற கட்டுரையின் மோசமான தழுவலாகவே[bad mutant copy !!!!!!!!]////

    ஹா...ஹா...ஹா...ஹா..

    கடினமாக தேடி மொழிபெயர்ப்பு பணி நடந்துகொண்டிருக்கும் வேலையில் பதிவு வரும் முன்னரே பதில் சொல்வது எந்த வகையில் தருமம் நியாயம். கேள்வி கேட்டாதான் பதில் சொல்லனும். எத்தனை பதிவுகள் பதிவிடப்படாமல் போயிருக்குமோ தெரியவில்லை. இதற்குதான் நேரடி விவாதம் தேவை என்று கூறுவதை சிந்திக்க மாட்டீர்களா.....

    தமிழக பரிணாம எதிர்ப்பாளர்கள் பரிணாமத்தை ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, ‘மனிதன் குரங்கிலிருந்து வந்தான்” என்ற வாக்கியத்தை இந்த பதிவை படித்தபிறகு விட்டால் நல்லது.

    அருமையான பதிவு.

    ReplyDelete
  9. வாங்க சகோதரி கீத மஞ்சரி,
    ஒவ்வொரு துறையின் ஆய்வுக் கட்டுரையும் உடனே எளிய தமிழில் வரவேண்டும்.அது குறித்து தமிழர்கள் இயல்பாக விவாதிக்க வேண்டும்.இது நடக்க நம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுப்போம்.சகோக்களின் உறசாகமும் ஆதரவுமே எழுத ஆக்கம் அளிக்கிறது
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. வாங்க நண்பர் நரேன்,

    பரிணாம எதிர்ப்பு வரும் வரும் என்று எதிர்பார்த்து வந்த வெறுப்பில் முன்னரே பதிவ்ட்டு விட்டோம்.கேள்வியும் கேடக மறுப்பதால் பழைய பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கும் "கேள்வியும் நானே பதிலும் நானே" என்ற விதத்தில் பதிவு இடும் கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.

    பரிணாம எதிர்ப்பு பதிவுகளின் தொண்டர்கள் மனிதன் குரங்கில் இருந்து வந்தான்,பரிணாமத்திற்கு ஆதாரம் எதுவுமே இல்லை,அப்படி இருக்கும் சில ஆதாரங்களும் மோசடி,பரிணாம‌த்தால்தான் நாத்திகம் வந்தது என்பதை தாண்டி சிந்திக்க முடிவது இல்லை.

    இது ஏன் என்பது ஆய்வுக்கு உரியது.

    மத அறிவியலின் பிதாமகர் மௌரிஸ் புகைலின் வார்த்தைகளையும் வேதம் போல் பின் பற்றுபவர்களால் பரிணாம‌ எதிர்ப்பு பதிவர்களின் கருத்துகளை பின் பற்ற முடியும் என்பது நம் கருத்து . எதையும் கேள்வி கேடகாமல் ஏற்றுப் ப‌ழகி விட்டவர்களை ஒன்றும் செய்ய இயலாது.

    நாம் சொல்வது என்ன ?

    பரிணாம அற்வியலின் சான்றுகளா கூறப்படுபவை உண்மையா என்று ஏன் பரிணாம் எதிர்ப்பு ஆய்வாளர்களால்(??????!!!!!!) சரி பார்க்கப்படுவது இல்லை?.

    படிமங்களின் மீதான் ஆய்வில் அதன் அளவீடுகளின்,பிற வேதியியல்,காலக் கண்க்கீடு சார்ந்த சான்றுகளின் மூலம் ஒரு படிமம் இந்த உயிரின வகையை சேர்ந்தது, இவ்வளவு கால்த்திற்கு முன் வாழ்ந்தது என்று வரையறுக்கப்படுகிறது.

    ஏன் இவை குறித்து ஒரு பரிணாம் எதிர்ப்பாளரும் சரி பார்க்க கூடாது?.அப்படி செய்வதும் அறிவியலின் சரிபார்ர்க்கும் முறைகளை பண்படுத்தும்.

    ஏன் அறிவியலாளர்கள் எழுதும் ஒரு கருத்தை திரித்து வெட்டி ஒட்டும் பணியை செய்து மாறுபட்ட‌ கருத்து திணிப்பு நடத்த வேண்டும்?.

    இப்போது வைரஸ்கள் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் ஜீனோமில் மாற்ரம் ஏற்படுத்த முடியும் என்பது அதன் பரிணாம் வளர்ச்சி விளைவுகள் குறித்து ஆய்வில் அதிகம் விவாதிக்கப்படுவதால் இபோது இதுவே முக்கிய பரிணாம விமர்சனம் ஆகிவிடும்.

    பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களை என்ன செய்வது?
    நன்றி

    ReplyDelete
  11. //படிமங்களின் மீதான் ஆய்வில் அதன் அளவீடுகளின்,பிற வேதியியல்,காலக் கண்க்கீடு சார்ந்த சான்றுகளின் மூலம் ஒரு படிமம் இந்த உயிரின வகையை சேர்ந்தது, இவ்வளவு கால்த்திற்கு முன் வாழ்ந்தது என்று வரையறுக்கப்படுகிறது.//


    இந்தக் கேள்வியை நானெழுப்பினேன். பதிலேதுமில்லை. படிமங்களின் இருப்பே பரிமாணத்திற்கு வலு சேர்ப்பதுதானே என்ற் கேள்வி சகோக்களால் பதிலளிக்கப்படாமல் போய்விட்டது

    ReplyDelete
  12. வாங்க தருமி அய்யா

    படிமங்கள் இருப்பது அந்த உயிரினங்கள் அபோது வாழ்ந்தன என்பதற்கு மட்டுமே அத்தாட்சி என்று கூறுவார்கள்.

    சரி வெவ்வேறு கால்கட்டங்களில் வெவேறு உயிரிஅனக்கள் வாழ்ந்துள்ளன.
    முந்தைய கால்க்ட்டத்தில் வாழ்ந்த உயிரின‌ங்களின் கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தோடு அடுத்த கால் கட்ட உயிரினங்க்கள் வாழ்ந்தது படிம வரலாற்றில் இருந்து அறிய முடிகிறதே என்றல் பதிலே வராது.

    அவர்களின் தொண்டர்கள் பரிணம் எதிர்ப்பாளர்கள் கூறுவதை[பரிண்மத்திற்கு ஆதாரம் இல்லை,இருக்கும் ஆதாரம் எல்லாம் மோசடி] அப்ப்டியே நம்புவதுதான் அவர்களின் அதிர்ஷ்டம், சொத்து!!!!!!!

    இப்போது மூலக்கூறு அறிவியலை குழப்பும் பணியில் மும்முரமாக் இறங்கி விட்டார்கள்.ஏதாவது செய்தாக வேண்டும்!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  13. http://www.guardian.co.uk/science/2012/mar/07/gorilla-genome-analysis-new-human-link?INTCMP=SRCH

    ReplyDelete
  14. http://www.guardian.co.uk/science/2011/sep/08/australopithecus-sediba-ancestor-modern-humans?intcmp=239

    ReplyDelete