Wednesday, May 16, 2012

உலகில் எண்ணெய் இல்லாமல் போனால் என்ன ஆகும்? காணொளி



சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் நடக்க வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தாலும் அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கணிப்பதும் ஒருவித ஆச்சர்யமான‌ விஷயமே..இப்பதிவில் உள்ள காணொளியில் உலகில் உள்ள அனைத்து எண்ணெய் வளமும் திடிரென்று மறைந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை படமாக்கி உள்ளார்கள். எந்த ஒரு விபத்தும் உடனடியாக நடக்கும் போது அதன் விளைவுகள் கடுமையாக் இருப்பது போல் உடனடியாக மனித வாழ்வே பெரும் சிக்கல்களை சந்திக்கிறது. இருக்கும் எண்ணெய் வைத்து சில நாட்களை ஓட்டுகின்ற‌னர். சமையல் எண்ணெய் மூலம் டீசல் வண்டிகள் இயக்கப் படுகின்ற‌ன.

மக்களின் வாழ்வு முறை மாறுகின்ற‌து.கிராமப் புறங்களுக்கு குடி பெயருகின்ற‌னர்.நாடுகளுக்கிடையேயான அரசியல்,பொருளாதார தொடர்புகள் குறைகின்ற‌ன. கொஞ்சம் கொஞ்சமாக சோயா,சோள‌ம் இவற்றில் இருந்து மாற்று எண்ணெய் எரி பொருள் தயாரிக்கப் படுகின்றது.மின்சார சேமிப்பின் பேட்டரி தயாரிக்க உதவும் லித்தியம் மிக முக்கியத்துவம் பெருகிறது.லித்தியம் அதிகம் கிடைக்கும் பொலிவியா பணக்கார நாடு ஆகிற‌து. மக்கள் 40 வருடங்களில் எண்ணெய்,ப்ளாஸ்டிக் இல்லாத, இயற்கையோடு இணைந்த வாழ்வு முறைக்கு வந்து விடுகின்ரனர்.விவசாயம் மிக முக்கியமான தொழில் ஆகின்றது.சுற்றுச் சூழல் மேம்ப்டுகின்றது.

கார்கள் மிக இலேசான வடிவமைப்பில்,மின்சாரத்தில் இயங்குகின்றன.ஆனால் விலை மிக அதிகம்.மிதிவண்டி அதிகம் பயன் படுத்தப் படுகின்ரது.சுமார் 40 வருடங்கள் கழித்து மீண்டும் ஆகாய விமானங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.மனிதர்கள் எண்ணெய் ஒன்று இருந்ததையே மறந்து வாழ்க்கையை தொடர்கின்ற‌னர்.

இம்மாதிரி சூழ்நிலை இன்னும் 50 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக் நிச்சயம் வரும் என்று அறியலாம்.வருமுன் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.




எண்ணெய் தீர்ந்து போனால் இதுதான் நம்[முன்னொர்களின்] தொழில்.இது மந்திரி குமாரி படத்தில் திரைப்பட பாடல் ஆசிரியர் திரு மு.கருணாநிதியால் எழுதப்பட்ட பாடல்(ம்).

டிஸ்கி இப்பாடலுக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.இராசா விடுதலைக்கும் எந்த தொடபும் இல்லை

14 comments:

  1. நான் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வேன். அரேபியாவில் என்ன செய்வார்கள்?

    ReplyDelete
  2. வாங்க சகோ இராவணன்,
    நலமா? விவசாயத்தை நாம் முன்னிலைப் படுத்தாததுதான் பல பொருளாதார,சமூக பிரச்சினைகளுக்கு காரணம் என்பது நம் கருத்து.உழைக்கும் வர்க்கம் எபோதும் எப்படியும் வாழும்,வாழ வைக்கும்.

    நான் அச்சூழலில் எருமை மாடு மேய்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.[என் பள்ளி ஆசிரியரின் சொல்லை உண்மையாக்க வெண்டும்]

    நமக்கு மிகவும் பிடித்தவர்களை(?!) எப்போதும் நினைப்போம்.உங்களுக்கு அரேபியா மிகவும் பிடிக்கும் என தெரிகிறது. அசூழலில் அங்கு வாழும் உழைக்கும் மக்களும் வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள்,எண்ணெய்க்கு முந்தை வாழ்வினை இபோதைய தொழில் நுடப்ம் கொண்டு அமைக்க முற்படுவதுதான் அறிவு.

    நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் எண்ணெய் இல்லா இச்சூழல் நமக்கு அடுத்த தலைமுறையினர் எதிர் கொள்வர் என்பது மட்டும் உறுதி.

    நன்றி

    ReplyDelete
  3. //நான் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்வேன். அரேபியாவில் என்ன செய்வார்கள்?//

    ஒட்டகம் மேய்ப்பார்கள். கோதுமை, பேரித்தம் பழம் பயிருடுவார்கள். எண்ணெய் கிடைப்பதற்கு முன் இதுதானே அவர்களின் முக்கிய தொழில். வயிறு காய்ந்தால் யாரும் எந்த வேலையையும் செய்வார்கள். :-)

    ReplyDelete
  4. வாங்க சகோ சுவனப்பிரியன்,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  5. //நான் அச்சூழலில் எருமை மாடு மேய்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.[என் பள்ளி ஆசிரியரின் சொல்லை உண்மையாக்க வெண்டும்]//

    இப்போதே இணையத்தில் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறீர்கள்?(மக்களுக்கு பரிணாமம் கற்றுதர முனைவதை சொல்கிறேன்!)

    ReplyDelete
  6. நல்ல வேலை சும்மா கிடந்த நிலத்தை விக்கலாமுன்னு நினைச்சேன்,எதிர்காலத்தில் பிள்ளைகளுக்குத் தேவைப்படுமில்லையா?

    ReplyDelete
  7. சகோ.சார்வாகன்,

    நல்ல காணொளி, இந்த காணொளியில் சொல்லப்பட்டிருப்பது வெகு விரைவில் நடக்கும். இதனை பல முறை எனது பதிவுகளில் சொல்லி வருகிறேன்.

    இன்னும் 70 ஆண்டுகளுக்கு தான் தற்போதுள்ள எண்ணை கைக்கொடுக்கும், புதிதாக கண்டுப்பிடிக்காவிட்டால் ஆட்டம் குளோஸ்.

    மேலும் 35 ஆண்டுகளிலேயே கடுமையான தட்டுப்பாடு ஆகிவிடும், மிகப்பெரும் பணக்காரர்களால் மட்டுமே அப்போ பெட்ரோல் வாங்க இயலும்.

    இன்னும் 118 ஆண்டுகளில் நிலக்கரி தீர்ந்து விடும், அப்போது எல்லாம் சூரிய சக்தி,காற்றாலை என்றே போக வேண்டியது தான். ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிவிட்டு தொடரும் போட்டேன் இன்னும் தொடரவில்லை, சீக்கிரம் முழுசா இதெல்லாம் பதிவா போடுகிறேன்.

    ReplyDelete
  8. வவ்வால்!சினிமாவே பார்க்க முடியலைன்னு என்கிட்ட சொல்லிட்டு இங்கே என்ன நல்ல காணொளி அறிக்கை:)

    சகோ.சார்வாகன்!காணொளி வழக்கம் போல் நான் பின்பு காண்கிறேன்.முந்தி ரிப் பின்னூட்டங்கள் அத்தனைக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுகிறேன்.

    பின்னூட்ட சோக்காளி நண்பர் ராவணன் பின்னூட்டத்துக்கு பாதியை சகோ.சுவனப்பிரியன் பதில் சொல்லி விட்டார்.வளைகுடா நாடுகள் பெரும்பாலும் கடல் சார்ந்த நிலம் சார்ந்தவை.எனவே நீங்க அரிசிச் சோறா சாப்பிடுவேனாக்கும் என்பதற்கு அரபிகள் நான் வறுத்த மீனா சாப்பிடுவேனாக்கும் என்பார்கள்:)மூச்சுப்பிடிச்சு முத்துக்குளித்தல் பாரம்பரிய தொழில்.அதனை வருட விழாவாக இன்றும் செய்கிறார்கள்.என்வே முத்தைக் கொடுத்து அரிசி,பருப்பு,தண்ணீரை வாங்கி விடுவார்கள்.என்ன இன்றைய சோம்பேறி அரபி தலைமுறைகள் கொஞ்சம் சிரமப்படுவார்கள் அவ்வளவுதான்.

    நீங்க நினைக்கிற படி 50,100 வருடத்துக்குள் பெட்ரோல் தீர்ந்து போனாலும் கூட எதிர்கால சந்ததிக்கென்று குவைத் பண்ட் என்ற சேமிப்பை சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.துபாயை தாண்டி இனி மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய கிழக்கத்திய பொருளாதாரம் இல்லை.

    வவ்வால்!சூரிய சக்தி,காற்றாலையெல்லாம் உங்களுக்கு மட்டுமே.பெட்ரோல் கிடைக்கலைன்னாலும் சந்திரனுக்கும்,செவ்வாய்க்கும் போயே தீருவேன் என்று அமெரிக்கா அடம் பிடிக்கிறதால நானெல்லாம் புட்போர்டுலயாவது தொத்திகிட்டு சந்திரனுக்கு ஓடிவிடுவேன்.அதுல இடம் கிடைக்காட்டியும் பரவாயில்லை.இருக்கவே இருக்குது சாப்பாடு,தண்ணி எதற்கும் அசராத ஒட்டகம்:)

    சகோ.சார்வாகன் நீங்க மாடு மேய்ப்பீங்க.நான் ஒட்டகம் மேய்ப்பேன்.அவ்வளவுதான் வித்தியாசம்:)

    பதிவர் ராஜி முட்டைதான் முன்னாடின்னு நேற்று பதிவு போட்டாங்க.நான் உங்க கடைக்கு வழியைக் காண்பிச்சேன்.வந்தாங்களா?

    ReplyDelete
  9. வாங்க சகோ நந்தவனத்தான்,
    நான் சொல்ல வந்தத்டிஅ சரியாக் புரிந்து கொண்டதற்கு நன்றி.மீண்டும் எருமை மேய்ய்க்க புது பதிவு போட்டுவிட்டோம். நன்றி
    ‍‍‍‍‍‍‍‍*********
    வாங்க சகோ யாசிர்
    நிலத்தை வித்து புடாதீங்க ,அதுதான் எதிர்காலம்.நன்றி
    ***********
    வாங்க சகோ வவ்வால்

    இபோது எண்ணெய் எடுப்பதகு ஆகும் செல்வை விட எண்ணெய் இலாபம் அதிகம்.இனி இலாபம் கொஞ்சம் கொஞ்சமாக் குறையும்,செலவு,தேவை அதிகரிக்கும்.

    குதிரை,மாட்டு வண்டி ஓட்ட கற்றுக் கொள்வோம்.மாட்டு வண்டிக்கும் லைசன்ஸ் போடுவாங்களா!
    புவி எவ்ப்பமயமாதல் பற்றி எழுதுவீர்கள் என காத்திருக்கிறேன்!

    நன்றி
    *******
    வாங்க சகோ இராஜநடராஜன்

    நான் சொல்ல வந்தது எல்லாம் சொல்லி விட்டிர்கள்.இப்படி சகோதரர்கள் இருக்கும் வரை நம் பிழைப்பு நன்றாகவே ஓடும்.

    நன்றி

    ReplyDelete
  10. வணக்கம் சார்வாகன்,
    உங்களுக்காவது பரவாயில்லை. எனது ஆசிரியர் ‘ நீ எருமை மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லை’ என்று என்னை வாழ்த்தியிருக்கிறார். அதனால் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே 35 வருடங்களையும் ஓட்டிவிடலாம் என முடிவெடுக்கலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  11. எருமை மேய்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று ஆசிரியருக்குத்தான் தெரியும். அவர் நம்மைப் போல் எத்தனை எருமைகளை மேய்த்திருப்பார்?

    ReplyDelete
  12. சகோ நீங்க இராவணனுக்கு சென்னது
    //அரேபியா மிகவும் பிடிக்கும் என தெரிகிறது. அசூழலில் அங்கு வாழும் உழைக்கும் மக்களும் வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள்//
    அப்படி எதார்த்தத்தை புரிந்து கொள்ள அரபிகளின் மதம் அனுமதிக்குமா?
    பர்தாவை திணித்தே பெண்களை என்ன பாடு படுத்துகிறார்கள். இப்போ அரபிகள் தண்ணியடிக்கவும், விபசாரம் செய்யவும் விமானம் எடுத்து வெளிநாடு போகிறார்கள். எண்ணெய் இல்லாம போனபின் அரபுகள் என்ன செய்வார்களோ!

    ReplyDelete
  13. நண்பரே.....

    having a strong and long memory is a burden. Poor memory (Ignorance) is bliss. அப்பவும் பிராக்கெட் தான் வருகிறது.

    இதுவும் முன்னரே பார்த்த பதிவுதான்.
    .......................
    சரி அதே deleted மறுமொழி...lol.

    50 வருடங்களில் உலக மாற்றம் எப்படி இருக்கும் என்று கணிப்பது கடினம்தான். 1980 களில் இப்பொழுது உலகம் எப்படி இருக்கும் என்று சரியாக கணித்ததில்லை என நினைக்கிறேன். வருவதை மக்கள் எதிர்கொள்வார்கள். catastrophe நிகழ்ச்சிகள் இருக்காது என நினைக்கிறேன்.

    conserve energy இயக்கம் வெற்றி தராது. வியாபாரமயமாக எல்லாம் ஆனதால் ஒரு பொருள் உலகத்தில் இருந்து மறையும் வரை அதை எவ்வளவு சீக்கிரமாக் ப்யன்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பயன்படுத்தப்படும். அதனால் எண்ணெயை மிச்சப்படுத்துங்கள் என்றால் யாரும் கேட்பதில்லை.
    உலகம் என்றால் சில மக்கள் தான் என்ற நிலமை தற்பொழுது வந்துவிட்டது.

    ஆனால் இந்தப் பதிவு தனி மனிதனுக்கு ஒரு பாடம். அவனின் அன்றாட வாழ்கையில் எண்ணெயை சார்ந்திருப்பதை குறைத்தால் அதுனுடைய தாக்கமே வேறுதான். எண்ணெய் தீர்ந்து பொது வாகங்களை பயனபடுத்துவதை விட இப்பொழுதே பயன்படுத்தலாம்.
    ................................................

    எண்ணெய் என்பது fossil fuels அல்ல என்று மதவாதிகள் வாதம் செய்வார்கள் என எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    நன்றி

    ReplyDelete
  14. //எண்ணெய் தீர்ந்து பொது வாகங்களை பயனபடுத்துவதை விட இப்பொழுதே பயன்படுத்தலாம்//
    நண்பர் நரேன், சில நாடுகளில் இந்த செயலுபாடுகள் தொடங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனா தென் கிழக்கு ஆசிய மக்களை பொறுத்தவரை ரொம்ப கஷ்டம். அவங்களுக்கு சொந்த வாகனமிருந்தால் பொது வாகனத்திலே போவது கவுரவ குறைவு.

    ReplyDelete