Wednesday, August 15, 2012

இஸ்ரேல் அரபு 1967 போர் காணொளி




வணக்கம் நண்பர்களே,

இயற்கையின் விதிகளுள் ஒன்றான போராட்டம்,போட்டி என்பதற்கு மனிதன் மட்டும் விதிவிலக்கு அல்ல என்பதை அதன் இரத்தம் தோய்ந்த வரலாற்றுப் பக்கங்களில் காண்கிறோம்.  

மனிதர்களின் போராட்டம் என்பது போர் என அழைக்கப் படுவது அதற்கு ஆண்டவன் கட்டளையில் இருந்து பல வித தர்ம நியாயங்களும் கற்பிக்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.போர் பற்றி கூறாத மத புத்தகங்கள் குறைவே!!

ப்போதைய உலக வரலாற்றில் மிக முக்கிய பிரச்சினையாக திகழும்  இஸ்ரேல் அரபு நாடுகள் பிரச்சினையின் மிக முக்கியமான் 1967 போர் பற்றிய காணொளி இப்பதிவில் பார்ப்போம்.

அனைத்து போர்களுக்குமே பொருளாதாரம் ,அரசியல் நலன் மட்டுமே காரணமாக இருக்கும்.மதம்,கொள்கைக்காக போர் என்பது ஏமாற்று வேலை என்பது கொஞ்சம் உற்று நோக்கினால் புரிந்து விடும்.

ஆளும் வர்க்கங்கள் தங்களின் சுய இலாபங்களுக்காகவே  போர்களை ஏற்படுத்துகின்றன என்பதும்,ஆயுதம் தயாரிக்கும்,நிறுவனங்கள்,அரசுகள் போர்களை ஊக்குவிக்கின்றன என்பதும் கண்கூடு.

சரி இஸ்ரேல் அரபு நாடுகள் பிரச்சினை அறிய இப்பதிவை படித்தால் 1948 CE க்கு முந்தைய சூழல் புரியும்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் நடந்தது என்ன?(1900_1948)


அரபுநாடுகள் இஸ்ரேலை எளிதில் அழித்து விடலாம் என தவறாக கணக்கீடு செய்ததின் விளைவாக பல் போர்கள் 1948ல் இருந்தே நடந்து வந்தன.அனைத்திலும் இஸ்ரேலே வெற்றி பெற்றது..



அப்படி எனில் இஸ்ரேல் மிக சக்தி வாய்ந்ததா,யூதர்கள் மிக திறமையானவர்களா என்று சிந்திப்பது அறியாமை.இஸ்ரேல் என்னும் நாடு அந்த இடத்தில் இருப்பது மேற்கத்திய நாடுகளின் அரசியல் நலனுக்கு சாதகம்.ஆகவே அது அவைகளால் பாதுகாக்கப் படுகிறது.

இஸ்ரேலுக்கு மேலை நாடுகள் உதவினாலும் அதன் எல்லைகளை அதிகம் விரிவு படுத்த முடியவில்லை. அப்போதைய இஸ்ரேலின் புவியியல் எல்லைகள் ஒழுங்கற்று எளிதில் ஊடுருவும் வண்ணம் இருந்தன. பாருங்கள்
இந்த போர்களினால் இஸ்ரேல் எப்படி இலாபம் அடைந்தது என்பதை வரைபடத்தில்  பாருங்கள்.


சூயஸ் கால்வாயை அபோதைய எகிப்திய அதிபர் நாசர் அரசுடமை (26 July 1956 ) ஆக்கியதும் ஃப்ரான்ஸ்,இங்கிலாந்து இணைந்து போர்(29 October – 7 November 1956) தொடுத்த்ன. இஸ்ரேல் முதலில்  எகிப்தை தாக்கி போரை ஆரம்பித்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Suez_Crisis

அபோதைய வல்லரசு சோவியத் யூனியன்,ஐ.நா அமைப்பின் அழுத்தம் காரணமாக சூயஸ் கால்வாயை விட்டு இங்கிலாந்து,ஃப்ரான்ஸ் வெளியேற நேரிட்டது.

போரில் துன்பப் பட்டு நாசரை பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள் மக்கள் என எதிர்பார்த்த்ன இஙிலாந்து& ஃப்ரான்ஸ்.ஆனால் அரபுலக்த்திற்கே த்லைவர் போல் புகழ் அடைந்தார். அரபு தேசியம் என்ற ஒன்று தோன்ற ஆரம்பித்தது.நாசர் அதன் வழி காட்டி ஆனது, மேலை நாடுகளுக்கும், அதன் கைக்கூலி மத்திய கிழக்கு அரசுகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியது.

எனவே இன்னொரு போர் மத்திய கிழக்கில் உருவாக வேண்டும் என முடிவு செய்தன!!.


ஆறு நாள் போர் (Six-day war) அல்லது ஜூன் போர் அல்லது 1967 அரபு-இசுரேல் போர் அல்லது மூன்றாம் அரபு-இசுரேல் போர் எனப்படுவது 1967இல் June 5 தொடக்கம் June 10 வரைஇசுரேலியரால் அரபு நாடுகளானஎகிப்துசிரியாஜோர்டான் ஆகிய நாடுகள் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். சூன் 5 இல் இசுரேலின் அதிரடி வான் தாக்குதலுடன் இந்தப் போர் ஆரம்பமானது. இதன் விளைவு இசுரேலின் வெற்றியாக அமைந்தது


Six Day War Territories 2.png


மேற்கண்ட வரைபடம் போருக்கு முந்தைய பிந்தைய இஸ்ரேலின் நிலப்பரப்பை காட்டுகின்றன.

இந்தப் போர் பற்றிய காணொளி இஸ்ரேல் எப்படி வெற்றி பெற்றது என்பதை விள்க்குகிறது.

மூன்று நாடுகளான எகிப்து,ஜோர்டான்,சிரியா ஆகியவற்றை வித்தியாசமாக இஸ்ரேல் எதிர்கொண்டதாக காணொளி கூறூகிறது.

எகிப்தின் அனைத்து விமானத் தள்ங்களும் குண்டு வீசித் தாக்கப்பட்டன. ஜோர் டான் ,சிரியாவில் இருந்த உளவாளிகள் அப்படைகளை ஊடுருவி அனைத்து விடயங்களையும் இஸ்ரேலுக்கு தெரிவித்த‌னர் என்வும் காணொளி கூறுகிறது..

சினாய் பாலை வனத்தில் இஸ்ரேலிய வீரர்கள் பயிற்சி எடுத்து தயாராக‌ இருந்ததும்,அதற்கேற்ற ஆயுதங்களை,உணவு,வாகனம் ஆகியவற்றை கையாண்டதுமே வெற்றிக்கு காரணம் என காணொளி கூறுகிறது..


ஆயினும்   இந்த விடயங்களைப் பார்க்கும் போது இஸ்ரேல் தனது வலிமையை விட எதிரிகளின் தவறான நடவடிக்கைகளினால் மட்டுமே வெற்றி பெற்றது அறிய முடிகிறது.

எகிப்து,ஜோர்டான்,சிரியா படைகளிலேயே சில மேலை நாட்டு உளவாளிகள் வேண்டுமென்றே தோல்வியை  நோக்கி அழிவுப் பாதையில்  வழி நடத்தி இருக்க்லாம் என்வே தோன்றுகிறது.

காணொளி பார்த்த பின் உங்களுக்கும் இதே சிந்தனை தோன்றலாம்!!!!

பிறகு என்ன இஸ்ரேல் வெற்றி

எகிப்திடம் இருந்து சினாய்,காசா

சிரியாவிடம் இருந்து கோலன் குன்றுகள்

ஜோர்டானிடம் இருந்து மேற்கு கரை ,கிழக்கு ஜெருசலேம் கைப்பற்றியது.


இந்த போரின் பிறகு எகிப்திய அதிபர் நாசருக்கு உள்நாட்டிலும்,அரபுகிலும் எதிர்ப்புகள் விமரசனங்கள் வலுத்த்ன. மாவீரன் நாசர் த்ன கன‌வுகளோடு  28 September 1970 மரணம் அடைந்தார்.

இதில் சினாய் எகிப்திடம் அன்வர் சதத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையில் [26 March 1979,] திருப்பி அளிக்கப் பட்டது.

மேற்கு கரை,கிழக்கு ஜெருசலேம்,காசா பகுதி இன்றுவரை இஸ்ரேல் வசம் உள்ளது.

கோலன் குன்றுகளின் நிலை யார் வசம் என்பது தெளிவாக தெரியவில்லை.

காணொளி பாருங்கள்!!!

சென்ற பதிவில் கூறிய விடயங்களையும் இணைத்துப் பாருங்கள்!!!!!!

இஸ்ரேல் ஏன் வென்றது என் மதவாதிகள் மட்டுமே சிந்திப்பர் ,நாம் சொல்வ‌து எப்படி வென்றது என்பது மட்டுமே!!!!.







நன்றி

18 comments:

  1. அனைவருக்கும் இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!

    ReplyDelete
  2. இஸ்ரேலினுடைய பெரிய பலம் மொசாட் உளவு அமைப்பு தான். இருப்பினும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இஸ்ரேலை ஒரு பக்கம் தடவி கொடுத்துவிட்டு, அரபு நாடுகளுக்குக் கொம்பு சீவி விடுவதுதான் வேலை. மேலோட்டமாகப் பார்த்தால் இஸ்ரேல் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இழப்பு இருவருக்குமே. வெற்றியோ தோல்வியோ, போர் என்று வந்தால் இழப்பு நிச்சயம் இருக்கும். இருசாராருமே முட்டிக்கொண்டு போரிடுவது, வேறொருவன் ரத்தம் குடிக்கத்தான் வழிவகுக்கும்.

    ReplyDelete
  3. யுத்தம் நடந்து 45 வருட நினைவு இந்த வருடம் 3,ஜுனில் அனுசரிக்கபட்டது. இந்த யுத்தத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.

    இந்தியர்களிடம் கார்கில் யுத்தத்தின் போது இதே நேபாம் குண்டுகளை வீசி விரைவில் போரை முடிக்கும்படி ரஷ்யா இந்தியாவிற்கு அறிவுரை வழங்கியும் இந்தியா சொதப்பி பல வீரர்களை இழந்தது. இதேமாதிரி மும்பாய் குண்டு தாக்குதலின் போது தனது சிறப்பு படைகளை அனுப்புவதாக இசுரேல் சொன்ன போது அரபு நாடுகளுக்கு பயந்து இந்தியா மறுத்துவிட கடைசியில் யூத இளம் தம்பதிகளை இந்திய படைகளால் காப்பாற்ற இயலவில்லை.கட்டத்தின் வரைபடம்கூட இல்லாமல் கமெண்டோ தாக்குதல் ஆரம்பித்த இந்திய கறும்பூனைகளின் திறமை பார்த்து கடுப்பாயிருக்கிறார்கள் இசுரேலிகள்.

    இன்னொரு விடயம் இசுரேல் படைகள் தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருந்த போது அரபி படைகள் உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராக பிஸியாக இருந்தது அரபுக்களின் தோல்விக்கு காரணம் என விவரண படம் சொல்லுகிறது. இதேபோல் இந்திய உளவுத்துறையினர் எதிர்கட்சிகளுக்கு எதிராக பிஸியாக இருப்பதால் அவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களுக்கு பற்றி முன்னறிவிப்பு செய்ய இயலுவதில்லை என்பது நிபுணர் கருத்து.பிறரின் தவறுகளிலிருந்தும் பாடம் கற்காத இனமய்யா நமது இனம்!

    ReplyDelete
    Replies
    1. //அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டும் இஸ்ரேலுக்கு உதவின என அரபுக்களால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது. அந்நிய உதவி இருப்பினும் இசுரேலியர்களின் திறமை மெச்சத்தக்கதே. அவர்களின் புத்திசாலிதனமும் கடும் உழைப்பும் நிச்சயமாக பல இனத்தவரை விட மேம்பட்டதே.//

      அரபுக்கள் வழக்கம் போல் மேலை நாடுக‌ளின் கைக்கூலிகள் என திரும்பவும் நிரூபிப்பதும்,அவர்களையும் போற்றும் கும்பலும் எதுவரை செல்வார்கள் என பார்க்கலாம்!!!!!!!

      இஸ்ரேலியர்கள் ஒரு இனத்தவரே அல்ல. அவர்களின் மீது நடத்தப் பட்ட ஜீனோம் ஒப்பீட்டு பரிசோத்னைகள் இத்னை நிரூபித்த்ன.எந்த நாடுகளில் இருந்து வந்தார்களோ அவர்களோடு ஜீன்களையும் வாங்கிக் கொண்டே வந்துள்ளனர். ஆகவே இது பிறப்பு சார்ந்து அல்ல சூழல் சார்ந்தே என கருதலாம்!!!!!!!
      http://en.wikipedia.org/wiki/Genetic_studies_on_Jews

      பெரும்பானமையூதர்கள் இரஷ்யாவில் இருந்து வந்தவர்கள்.இவர்களே அரசியலில் ஆளுமை செலுத்துகின்றார்

      Thank you

      Delete
  4. விண்வெளியிலிருந்து அமெரிக்கா அஸ்ரோநாட் சுனிதா வில்லியம்ஸின் இந்திய சுதந்திரதின வாழ்த்து மற்றும் விண்வெளி நிலைய காட்சிகள்
    http://www.youtube.com/watch?v=L4KOcasDwa0

    ReplyDelete
  5. சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    இனியவன்....

    ReplyDelete
  6. சகோக்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    இனியவன்....

    ReplyDelete
    Replies
    1. இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்சகோ !!!!!!!!!

      Delete
  7. வணக்கம்! உங்கள் விமர்சனங்களை வவ்வால் பதிவுகளில் படிப்பவன் நான். மேலும் உங்கள் பதிவுகளையும் அவ்வப்போது படிப்பவன். ஆனால் கருத்துரை சொன்னதில்லை. உங்கள் பதிவின் தலைப்பில் சமரசம் என்பதில் கடைசி எழுத்தில் ஒற்று இல்லாமல் ” சமரசம “ என்று (சமரசம உலாவும் இடமே!!!!) உள்ளது. சரி செய்யவும். தலைப்பு என்பதால் சொல்ல வேண்டியதாயிற்று.

    எனது இனிய இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இளங்கோ,
      வாங்க நலமா?

      மிக்க நன்றி. எப்படி இவ்வள்வு நாட்களாக பார்க்காமல் இருந்தேன்!!!தலைப்பை ஒற்று இட்டு மாற்றி விட்டேன்.நாம் விமர்சனம்,விவாதம் இரண்டும் விரும்புகிறோம்.மீண்டும் நன்றி.
      அடிக்கடி வாங்க!


      ந‌ன்றி

      Delete
  8. கூடிய சீக்கிரம் இஸ்ரேலும் இஸ்லாத்திற்கு மாறிவிடும் ..இன்னும் 20 ஆண்டுதான் ...
    அதன்பிறகு நீங்கள் இந்த மாதிரி படம் போட்டு பதிவு போடமுடியாதே .........அச்சச்சோ.....
    ஹி ...ஹி...........

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ அஞ்சா சிங்கம்,

      ஆமாம் ஆமாம் உலகே மாறும் போது இஸ்ரேல் எம்மாத்திரம்.எனினும் அவர்கள் யூதர்கள் எந்த பிரிவுக்கு மாறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே நிலவரம் மாறும்.

      பாருங்கள் சவுதி அரச குடும்பம் கூட யூத வம்சத்தவர்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்த பிந்தானே அதிக மத பிரச்சினைகள்!!!

      http://forums.islamicawakening.com/f20/origin-of-the-al-saud-family-14749/

      http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/AlSaud.html


      முதலில் இஸ்லாமுக்கும் காஃபிர்களுக்கும், பிறகு இஸ்லாமியப் பிரிவுகளுக்குள்,ஒரே பிரிவு ஆகிய பின் ,நல்ல மூமின் கெட்ட மூமின்(முனாஃபிக்) என அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்து போய்க் கொண்டே இருக்கும்.

      ஆகவே இஸ்ரேல் உள்ளிட்ட உலகமே இஸ்லாமுக்கு மாறினாலும் போர்கள் அதிகம் ஆகுமே தவிர குறையாது என்பதற்கு நாம் உறுதி அளிக்கிறோம்.

      அப்படியே பழகி விட்டார்கள்,சும்மா இருக்க முடியாது!!!!!!!!!!!

      நமக்கு bore அடிகாமல் இருக்க்வே போர் செய்கிறார்களா என்ன??
      ஹி ...ஹி...........
      ந‌ன்றி

      Delete
  9. நண்பரே அருமையான பதிவு,

    அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.

    முதலில் ஜியாணிஸம் zionism என்ற கொள்கை சரியா தவறா என்று பார்ப்பது அவசியம். சரியென்றால், வாங்க் எல்லோரும் ஆப்பிர்க்க செல்வோம் என்று சொல்லவேண்டியதுதான்.

    இஸ்ரேல் பிரச்சனை ஆரம்ப முதலே கருப்பு வெள்ளை பிரச்சனையில்லை. அக்காலகட்டத்தில் பிரான்ஸ்தான் இஸ்ரேலுக்கு ஆயுதம் அதிகமாக் அளித்தது. இஸ்ரேல் அமைப்பு சாரா நாடுகளில் இணையத்தான் முற்பட்டது. அமெரிக்கா சில நேரங்களில் இஸ்ரேலை அடக்க நினைத்தது. இது ஒரு அரசியலாகத்தான் பார்த்தார்கள்.

    பாலஸ்தீன பிரச்சனையை மத பிரச்சனையாக்கியது மேலும் குழப்பியது. 1967 போரில் ஈடுப்பட்ட அரபு நாடுகளின் தலைவர்கள் மத முக்கியத்தை விட அனைத்து அரபு நாட்டை அமைக்க முற்பட்டனர்.

    சூழ்நிலைகளை சரியாக பயன்படுத்தியது இஸ்ரேல்தான். இரண்டாம் உலக போர் கொடுமைகளுக்கு பிறகு, யூதர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நிலையை சரியாக பயன்படுத்தினார்கள்.

    real politics யார் செய்தார்களோ அவர்கள் வெற்றி பெற்றனர். அதை பாலஸ்தீனியர்கள் செய்திருந்தால் தற்போது இருக்கும் இடங்களை விட அதிகமாக கிடைத்திருக்கும், இஸ்ரேல் இன்னும் சிறியதாக இருந்திருக்கும்.

    மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.

    மற்றவர்களின் சதி என்று குறை கூறிக்கொண்டே இருப்பதைவிட( படிக்காமல் இருந்ததற்கு யார் காரணம் என்று கேட்டு ஒரு அறிஞர் அதற்கு காந்திதான் காரணம் என்று பேச ஆ வென்று ஒரு கூட்டம் கேட்டுகொண்டுதானிருந்தது), தங்களிடம் ஓற்றுமையை நிலைநாட்டி, சாதகங்களை பயன்படுத்தி வெற்றிபெற நினைக்க வேண்டும். மதத்தை முன்னிலைபடுத்தினால் மற்றவைகள் அடிப்பட்டு போய்விடும். மதத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் நலம்.

    ஹி...ஹி..ஹி.. உண்மையான கடவுள் யார்? யூத கடவுளா இஸ்லாம் கடவுளா?

    எஜமானராக இருக்கும் வீட்டு காவல் நாய், யாரோ????

    நன்றி.

    ReplyDelete
  10. வாங்க சகோ நரேன்,

    //மத தலைவர்கள் முன்னிலைபடுத்தினால் என்னாவாகும் என்பதற்கு ஒரு சாட்சி இந்த பிரச்சனை. பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.//

    இந்த மத தலைவர்கள் என்று சொல்பவர்களும் இஸ்ரேல் உருவாக்க சதியில் உடந்தை என்பதே என் வாதம்.பாருங்கள்.

    1. யூதர்கள் 1840_ 1930 வரை பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலம் வாங்குகின்றனர்.

    http://en.wikipedia.org/wiki/Jewish_land_purchase_in_Palestine

    2.அப்படி விற்றவர்களின் குடும்பங்களுக்கு மேலை நாடுகள் குடியுரிமை தந்து அழைத்துக் கொள்கின்றன.

    3. போர் புரிவது எதிர்ப்பு போல் தோன்றினாலும் ,இஸ்ரேல் எதிர்ப்பு நாடுகளிலேயே பல உள்ளடி வேலைகள்,மேலை நாட்டு உளவாளிகளின் ஊடுருவல் குழப்பங்கள் இஸ்ரேலுக்கு சாதகம் ஆயிற்று.இன்னும் அப்படித்தான்.

    4. இஸ்லாமிய மதவாதத்திற்கு எதிரானது இஸ்ரேல் என்ற பிரச்சாரம் ,மதவாதிகளின் மத விள்மப்ரத்தை விட நன்கு எடுபடுகிறது.இப்போது உலகையே 20+ வருடங்களில் கைப்பற்றுவோம் என பலர் இணையத்தில் கூவுவது,சவால் விடுவது நாம் அறிவோம்.

    இதனை தடுக்க இஸ்ரேலின் வழியே சரியாது என்பது அந்நோய்க்கு சர்வ ரோஹ நிவாரண‌ தீர்வாகி விடுகிறது!!!!


    இதுதான் "இஸ்ரேலை பாதுகாப்பது மதவாதம் எதிர்ப்போரின் கடமையாகும்" என்னும் பிரச்சாரம் பலரிடம் நன்கு எடுபடுகிறது.

    ஆகவே இஸ்ரேலின் உருவாக்கம் என்பது உரிமை மீறல்&ஆக்கிரமிப்பு என்பதே மறக்கப் படுகிறது.

    இப்பொழுது யோசித்தால் புரியும்!!!!!!.

    ReplyDelete
  11. //அமெரிக்க இராணுவம் உலகத்தில் நடந்த அனைத்து இராணுவ போர்களின் யுத்திகளை, பாடமாக வைத்துள்ளது. ஆனால், இந்த ஆறு நாள் போரின் யுத்திகளை பாடமாக வைக்கவுமில்லை சொல்லித்தருவதுமில்லை. ஏனென்றால் இதை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் அதிர்ஷ்டத்தை பெரிதும் நம்பும் யுக்தி.//

    http://www.dtic.mil/cgi-bin/GetTRDoc?AD=ADA432958

    ReplyDelete
  12. இஸ்ரேல் பற்றிய அருமையான கட்டுரை சகோ.
    அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  13. @நந்தவனத்தான்,

    நன்றி நண்பர் நந்தவனத்தான்,

    அந்த, செய்தியை முன்னர் ஒரு காணொளியில் பார்த்த போது குறிப்பு எழுதி வைத்திருந்தேன். அதைதான் சொல்லியிருந்தேன். அந்தச் செய்தி தவறு என்று சுட்டிகாட்டியமைக்கு நன்றி. ஆதாரமல் இல்லாமல் செய்திகளை தரும் தவறை இனி தவிர்ப்பேன்.

    அந்த, illegitimate செய்தியை வாபஸ் பெறுகிறேன்))).

    நன்றி.

    ReplyDelete
  14. @நரேன்
    ஒரு பத்திரிக்கை எழுத்தாளரைப்போல் பதிவில் எழுத மிகுந்த நேரம் செலவழித்து ஆதாரம் தேட இயலாது என்பது புரிகிறது. பதிவுகள் ஒரு இன்பார்மல் தகவல் தொடர்பு என்பதால் தவறுகள் ஓகேதான். ஆனால் அதனை ஒப்புக்கொள்ளவது பெரிய மனிசத்தனம். நீங்கள் பெரிய மனுசர். :-)

    நன்றி!

    ReplyDelete