Thursday, April 25, 2013

மகாபாரதத்தில் பிராமண எதிர்ப்பு?!




வணக்கம் நண்பர்களே,

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்னும் சொற்றொடர் நமக்கு நன்கு பொருந்தும் என சொல்லலாம். மத புத்தகம் சார்ந்த விடயங்களை அதன் மூலம், அக்காலம் முதல் இப்போதைய  மொழி பெயர்ப்புகள் சார்ந்து கற்பதில் நமக்கு நாட்டம் உண்டு. அவை அனைத்தும் அக்கால மனிதர்களின் சிந்த்னையை பிரதி பலிக்கிறது என்பதால் , மொழி பெயர்ப்புகளில் பல மாற்றம் செய்து இப்போதும் பொருந்தும் வண்ணம் மறைத்து, திரித்து விளக்கம் கொடுப்பதுதன் மத விளம்பரதாரிகளின் வேலை என் நாம் அறிவோம்.


தமிழகத்தை பொறுத்தவரை நாத்திகம் என்னும் இறைமறுப்பு  திராவிட இயக்கங்களால் பிராமண எதிர்ப்பு என்பதாக எடுத்து செல்லப் பட்டது. மத நூல்கள்,சடங்குகள் போன்றவற்றை கட்டிக் காத்து வரும் இனக் குழு என்பதால், மதம் எதிர்ப்பு பிராமண எதிர்ப்பாக மாறியது அக்காலத்தில் தவிர்க்க முடியா செயலே!!.

ஆனால் இப்போது ஆதிக்க சாதியினரின் சாதி மேட்டிமைப் பிரச்சாரமே அதிகம் எதிர்க்க வேண்டியது!!!!.

அனைவரும் எளிதில் மத புத்தகம் அது சார் பன்முக கருத்துக்கள் அறியும் காலதில் வாழும் நாம் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள். ஒருவரின் திரிப்பு கருத்துகளை இணையத்தில் சரிபார்க்க முடிவதால்தான் பெரும் அளவில் மதமாற்றங்கள் நடக்கும் வாய்ப்பு குறைவு. இனிமேலும் எவரேனும் எங்கள் மதம் உலக முழுதும் ஏற்கப் படும் என் சொல்வார்கள் என்றால் அவர்களுக்கு தேவை மன நல சிகிச்சை மட்டுமே!!.

பிராமர் மீதான விமர்சனம் என்பது இந்த திராவிடர் இயக்கம்,அதுவும் பிரிடிஷ் தமிழ் ஆய்வாளர் திரு கால்ட்வெல் ஆகியோரின் கருத்தாக்கம் என்பதே இந்துத்வ இயக்கங்களின் குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மை அல்ல!!.

இயற்கை வளங்கள்  பகிர்வின் மீதான இனக்குழுக்களின் மோதல் என்பதுதான் வரலாறு.

பிராமண, சத்திரிய, வைசிய,சூத்திரன் என்னும் நான்கு அமைப்பு கொண்ட பிரமிட் அமைப்பான (சா)தீய அமைப்பில் மேலே வர ஒவ்வொரு இனக்குழுவும் முயற்சி செய்த்ன. இந்த அடுக்குகளில் பல் முறை மாற்றம் வந்து உள்ளன.

ஆட்சியை கைப்பற்றும் இனக்குழு சத்திரியன் ஆகிவிடும்.இபோதும்  கூட அதற்குத்தான் எல்லா அரசியல் விளையாட்டும்.

சரி பதிவின் மையக் கருத்துக்கு வருவோம். பிராமணர்,சத்திரியர் இடையே நடக்கும் மோதல்கள்  மத புத்த்கங்களிலும் தெரியும்.

அனைத்து மனிதர்களும் ஒன்றே என்றாலும் அக்காலத்தில் , போரில் வென்றவன் தோற்றவனை கீழ் சாதி ஆக்கினான் என்பதே உண்மை.

இதில் பிராமணர்,சத்திரியர் எப்போதும் ஆளும் வர்க்கமாக இருந்தனர், இருவரிடையே மண உறவு,அதிகாரப் பகிர்வு இருக்கும். அரசவையில் இராஜகுரு என் ஒருவர் இருப்பார். அவரின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடக்காது. பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதிகள்,சிறப்புகள் மனுதர்மத்தில், சாணக்யரின் அர்த்த‌ சாஸ்திரத்தில் காணலாம்.


The Aryas were divided into four major castes. They consisted of the Brahmin, Kshatriya, Vaishya and Sūdra. Each of these castes was assigned particular roles in society. The Brahmin, Kshatriya and the Vaishya corresponded roughly to the three classes of the rulers, soldiers and craftsmen, which were needed to constitute an ideal society in Plato’s Republic. The Sūdra’s task was to devote his services to the people of the other three castes. Among the four castes, the Brahmin constituted the most superior varna . He enjoyed all the rights and privileges of society. He was also entitled to earn great respect and dignity from people of the other three varnas. The only disadvantage that a Brahmin suffered was not to be able to claim ownership for a piece of building after having lived on it for twenty years.

இப்படி பிராமணர்களின் மேலாதிக்கத்தை விரும்பாத சத்திரிய அரசர்கள், சிலர் ஆன்மிகவாதிகளாகவும் மாறினர். விசுவாமித்திரர், சித்தார்த்தன் என்னும் கவுதம புத்தர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இராமாயணத்தில் பரசுராமனை(பிராமணன்) அடக்கும் இராமன்(சத்திரியன்) இந்த முரண்பாட்டை நன்கு விளக்குகிறது.

இப்பதிவில் என்ன சொல்ல வருகிறோம் என்றால், பிராமண எதிர்ப்பு,விமர்சனம் என்பதும் பழமையானது என்பதும் அதுவும் திராவிடர் இயக்க சொற்றொடர் ஆன " பாம்பையும்,பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி" என்பது போலவே  மகாபாரதத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா???


மகாபாரதம் இத்தளத்தில் எளிய தமிழில் வெளியிடுகிறார், நான் அறிந்தவரை மூல நூல்களின் சாரத்தை திரிக்காமல் வெளியிடுவதை உணர்கிறேன்.



இதில் ஆதி பர்வம் பகுதி 81ஐ இங்கே படிக்கலாம். இதில் யயாதி மன்னன்[பாண்டவரின் முன்னோர்], அசுர குலகுரு சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி ஆகியோரின் உரையாடல் விளக்கப் படுகிறது.
சத்திரிய மன்னன், பிராமண பெண்ணை மணப்பது பற்றி என்றாலும் அப்படியே தருகிறேன். படியுங்கள்!!!
 

தேவயானி, " மன்னா, நீர் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்? தாமரைகளைச்சேகரிக்கவா அல்லது மாற்றத்திற்காகவா? அல்லது வேட்டையாடவா?" என்றுவிசாரித்தாள்.

யயாதி, " இனிமையானவளே, மானைத்தேடிவந்துதாகமடைந்தேன். இங்கே தண்ணீர் கிடைக்குமா என்றே வந்தேன்நான் மிகவும் களைத்துவிட்டேன். நான் இந்த இடத்தைவிட்டகல உனதுஉத்தரவுக்காகக் காத்திருக்கிறேன்." என்றான்.

தேவயானி, "எனது இரண்டாயிரம் மங்கைகளுடனும் எனது பணிப்பெண்சர்மிஷ்டையுடனும், நான் உமது கட்டளைகளுக்காகக் காத்திருக்கிறேன்.வளமை உமதாகட்டும். நீர் எனது நண்பராகவும் தலைவராகவும் இருப்பீராக."என்று பதிலளித்தாள்.

யயாதி, "இனிமையானவளே, உன்னைப் பெற எனக்குத் தகுதி கிடையாது.என்னைவிட அந்தஸ்தில் வெகுவாக உயர்ந்த சுக்ரனின் மகள் நீ. உனது தந்தை,உன்னை பெரும் மன்னனுக்கே கூட அளிக்க முடியாது (மாட்டார்)." என்றுசொன்னான்.

தேவயானி, "இதற்கு முன்பு, பிராமணர்கள் க்ஷத்திரியர்களுடனும்,க்ஷத்திரியர்கள் பிராமணர்களுடனும் இணைந்திருக்கிறார்கள். நீர் ஒருமுனிவரின் மைந்தன், ஏன், நீரே ஒரு முனிவர்தான். ஆகையால்,  நகுஷனின்மைந்தரே, என்னைத் திருமணம் செய்து கொள்வீராக." என்று பதிலுரைத்தாள்.

யயாதி, " அழகான குணங்கள் கொண்டவளே, நான்கு வர்ணங்களும்ஒருவரின் உடலில் இருந்தே உற்பத்தியாயின.ஆனால் அவர்களது கடமைகளும், சுத்தமும் ஒன்றல்ல. ஒரு பிராமணன் எல்லோரினும் மேன்மையானவன்." என்றான். 

தேவயானி, "இந்த எனது கரம்,உம்மைத் தவிர இதற்கு முன் எந்த மனிதனாலும் தொடப்பட்டதில்லை.ஆகையால், நான் உம்மை எனது தலைவனாக ஏற்றுக் கொண்டேன். உம்மைப்போன்ற முனி ஒருவரால் தொடப்பட்ட எனது கரங்களை வேறு எவர்தான்தொடுவார்?" என்று பதிலுரைத்தாள். 

யயாதி, "கோபத்துடன் இருக்கும்விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ அல்லது சுடர்விட்டு எரிந்து பரவிவரும்சுடர்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன் என்பதைஞானமுள்ளோர் அறிவர்." என்று சொன்னான். 

தேவயானி அந்தஏகாதிபதியிடம், " மனிதர்களில் எருதைப் போன்றவரே, கோபத்துடன்இருக்கும் விஷத்தன்மை வாய்ந்த பாம்பையோ அல்லது சுடர்விட்டு எரிந்துபரவிவரும் சுடர்களையோவிட, ஒரு பிராமணனே தவிர்க்கப்பட வேண்டியவன்என்று ஏன் சொல்கிறீர்?" என்று கேட்டாள். 

அதற்கு அந்த ஏகாதிபதி, "பாம்புஒருவரைத்தான் கொல்லும், கூர்முனை ஆயுதமும் ஒருவரைத் தான்கொல்லும். ஆனால் ஒரு பிராமணன் கோபமடையும்போது, மொத்தநகரங்களையும், அரசாங்கங்களையும் கொல்கிறான்.!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  மருட்சியுடையவளே,ஆகையால்தான் நான் மற்றவற்றைக் காட்டிலும் பிராமணன் தவிர்க்கப்படவேண்டியன் என்று குறிப்பிட்டேன். ஆகையால்  இனிமையானவளே, உனதுதந்தை உன்னை எனக்களிக்காமல், என்னால் உன்னைத் திருமணம் செய்யமுடியாது." என்று பதிலுரைத்தான். 

தேவயானி, " நீர் என்னால்தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர் என்பதே நிச்சயம். நீராக என்னைக் கேட்கவில்லை என்பதும் நிச்சயம்.  மன்னா, எனது தந்தை என்னை உமக்கு அளித்தால், நீர்என்னை ஏற்றுக் கொள்வீர் என்று அறிகிறேன்.

**
பிராமணர் மீது மன்னன் கொண்டு இருந்த அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வு உரையாடலில் பிரதிபலிக்கிறது.பிராமணரைக் கொல்வது பிரம்ம ஹத்தி என்னும் மிக மிக மோசமான் பாவம் என்பதன் நம்பிக்கையின் வெளிப்பாடே  அது. 
http://en.wikipedia.org/wiki/Br%C4%81hmanahatya


Brāhmanahatya (also known as Brahma Hatya) is Sanskrit for "the act of killing a Brahmin". PuranicHinduism considers this act to be a major sin, worse than "ordinary" murder.
In a story involving Indra and Vritra, Brāhmanahatya is personified as a hideous goddess.


மகள்[உயர் குலப் பெண்] விரும்பினால், அதுவும் மன்னன் என்பதால் சுக்ராச்சாரியார் சம்மதிக்கிறார் எனவும் உணரலாம்.
யயாதியின் மகன் யது,யாதவ வம்சத்தினரின் மூதாதையர் ஆகிறார்.

Several Chandravanshi castes and communities in modern India, such as the Sainis of Punjab Province,[5][6] Yadav,Jadaun Rajputs, Jadeja, Jadaun, Jadhav, Jadoon (Pathan), and Khanzada claim descent from Yadu.

இன்னும் கூட இராவணன் கூட பிராமணன் என்கிறார்கள்,இங்கும் அசுர குலகுரு சுக்ராச்சாரியார் பிராமணரே ஆகவே தேவர் ,அசுரர் போர் என்பதே இரு உயர்சாதிகளுக்குள்ளான முரண் என கருதலாம் என நினைக்கிறேன். இதில் சத்திரியர் வெற்றி பெற்றார் என் குறியீடுகளில் அறிந்தாலும்,இருவருக்கும் இடையே ஒரு அதிகார பகிர்வு நிகழ்ந்ததையும் உணர முடியும்.


வேதங்களின் படிக்கூட அசுரர்,தேவர் இருவருமே காஸ்யப முனிவரின் வழித்தோன்றல்கள்.
http://en.wikipedia.org/wiki/Kashyap Kashyapa (Sanskrit कश्यप kaśyapa) was an ancient sage (rishis), who is one of the Saptarshis in the present Manvantara; with others being Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni,Bharadwaja .
He was the father of the Devas, Asuras, Nagas and all of humanity.[ஹி ஹி ஆதம் இல்லை!! ]

வேதகாலங்களில் வேட்டையாடும் இனக்குழுக்கள் என்பதால் பிராமணர், சத்திரியர் என் இருகுழுக்கள் மட்டுமே இருந்து இருக்கலாம்.

சத்திரியரில் இருந்து வைசியர்,சூத்திரர் பிரிந்து இருக்கலாம்.[இதனால்தான் அனைத்து சாதியினரும் நான் ஆண்ட பரம்பரை என்கிறாரோ ஹி ஹி]இது இராமாயண காலத்திற்கு சற்று முன் ஏற்பட்டு இருக்கலாம். இந்தியர் பெரும்பான்மையோர் இரு மூதாதை இனக்குழுக்களின் கலப்பினத்தவர் என்னும் அறிவியலின் கருத்தினையும் இது ஒத்து வருகிறது.


India has been underrepresented in genome-wide surveys of human variation. We analyze 25 diverse groups to provide strong evidence for two ancient populations, genetically divergent, that are ancestral to most Indians today. One, the “Ancestral North Indians” (ANI), is genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, while the other, the “Ancestral South Indians” (ASI), is as distinct from ANI and East Asians as they are from each other. 

நான்கு சாதி நாலாயிரம் சாதி ஆகி இன்னும் முரண்களை வளர்ப்பதால் சாதி குறித்த தோற்றம், வளர்ச்சி குறித்து  மத புத்த்கம் வாயிலாக அறியும் முயற்சியே இப்பதிவு!!

இப்பதிவில் சொல்வது

1.ஆதியில் வேட்டையாடிய சமூக அமைப்பில் ஒரு குழுவாக இருந்தவர்கள் இரு இனக்குழுக்களாக பிரிந்தார்.அவர்களுக்கிடையேயான மோதல் மத புத்த்கங்களில் வெளிப்படுகிறது. அதில் ஒருவர் மத சடங்குகளை கட்டுக்குள் வைத்து இருந்த பிராமணர் என்பதால், பிராமன விமர்சனம்  மிகப் பழமையானது.இதுவே வேத காலம் எனலாம்.நான் பிராமன விமர்சனம் மட்டும் சரி என்று சொல்லவில்லை, பிராமணர்கள் மட்டுமல்ல எந்த ஆதிக்க சாதி மேட்டிமைப் பிரச்சாரமும் விமர்சிக்கப் படவேண்டும் என்வே சொல்கிறோம்.

2. அந்த இரு இனக்குழுவில் இருந்து முளைத்த இன்னும் இரு இனக்குழுக்கள்,இராமாயண, மகாபாரத காலத்தில் பிரிவுகள் உறுதியாகின்றன.இனக் கட்டுப்பாடுகளை மீறுதல் குற்றம் ஆகிறது என்றாலும் விதிவிலக்குகளும் உண்டு.இராமயணம்,மகாபாரத புராணங்கள் தோன்றிய காலத்தையே குறிப்பிடுகிறேன்.


3.இந்தியர் பெரும்பான்மையோர் இரு வித்தியாச இனக்குழுக்களின் மரபணுக்களைக் கொண்டு இருக்கிறோம்.  நம்மிடையே அதிக வித்தியாசம் இல்லை!!

மத புத்த்கம்,வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது என்றாலும் முழுதும் பொய் எழுத முடியாது,குறியீடுகளாக உண்மை வெளிப்படும். நாம் எடுத்த அனைத்து புராணக் கதை எ.கா அனைத்துமே இந்தியர்களின் இரு மூதாதை இனக் குழுகளின் இருப்பையே சுட்டுகின்றன.

நன்றி!!!

7 comments:

  1. திருமதி தமிழ் படம் பார்த்த விளைவா? தேவயானி - ராஜகுமாரன் பாதிப்பு மாதிரி இருக்கு உங்க இடுகை...யயாதிக்கு பதிலா நம்ம தலிவர் சோலார் ஸ்டார் பேரைப்போட்டல் கும்முன்னு இருக்கும்...

    சாம்பிள்...
    ///தேவயானி அந்த ஏகாதிபதியிடம், "ஓ மனிதர்களில் எருதைப் போன்றவரே!" என்று கேட்டாள்.//

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      மத புத்தக கதைகள் எல்லாம் அந்தக் கால திருமதி தமிழ்தான், வேண்டுமானால் திருமதி சமஸ்கிருதம் எனவும் சொல்லலாம்!!

      இந்த யயாதி கதை தேவயானி இக்காலத்துக்கும் பொருந்துவதே இது இறைவனின் வாக்கு என்பதன் நிரூபணம்!!!

      அதுவும் இப்படம் வந்த சமயத்தில் இந்த விடயம் என் கண்ணில் பட்டு பதிவு இருக்கிறேன் என்றால்,அது இறைவன் நாடாமல் நடக்குமா?
      **

      எருதைப் போன்றவரே என்றால் அதில் ஆயிரம் பொருள் இருக்கிறது.

      ஹி ஹி!!

      நன்றி!!!

      Delete
  2. @சார்வாகன் ,

    நீங்கள் குறிப்பிட்ட உரையாடல், பிராமணன் மற்றவர்களைவிட சக்திவாய்ந்தவன் என்ற அர்த்தத்தில்தான் உள்ளது; பிராமணன் கெட்டவன் என்ற அர்த்தத்தில் பேசப்பட்டிருந்தால் அந்தப் பெண் தன்னை திருமணம் செய் என்று கேட்டிருக்கமாட்டாள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராபின்,
      நல்லவன்,கெட்டன் என்பவை சார்பியல் பொருள் கொண்டவை. உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு விடயம் தீயதாக தோன்றும்.
      அக்கால சூழலைப் புரிய வேண்டும்.
      நாடாளும் மன்னன் விரும்பிய எதையும் செய்ய முடியும். அரச குலம், மத குருக்கள் குலம் இரண்டுக்கும் அடிக்கடி மண உறவு ஏற்பட்டாலும், பிராமண ஆண், சத்திரிய பெண் என்றே பெரும்பாலும் இருக்கும். ஒரு உயர்சாதி ஆண் , த்ன,கீழ் வர்ணங்களை மண முடிக்கலாம் என்பதே மனு தர்மம்.

      இங்கு சத்திரிய ஆண் யயாதி, பிராமண பெண் என்பதால் ,முனிவர் சபித்து விடுவாரோ தனது செல்வம்,அரசு அழிந்து விடுமோ என்வும் அஞ்சுகிறான் எனில் இது மரியாதையா? பயமா?

      பிராமணர்களின் வேதங்களுக்கு மாற்றாக சத்திரியர்களால் உருவாக்கப் பட்டவை உபநிஷத்துக்கள்,புராணங்கள் ,ஆனால் அதையும் திரித்து தங்களது ஆக்கி விட்டார்கள்.
      http://www.jatland.com/home/Kshatriyas

      The legend that the Kshatriyas, with the exception of the Ikshvakus, were destroyed by Parasurama, the sixth reincarnation of Vishnu, as a punishment for their tyranny is thought by some scholars to reflect a long struggle for supremacy between priests and rulers that ended in victory for the former. By the end of the Vedic era, the Brahmins were supreme, and the Kshatriya had fallen to second place. Texts such as the Manusmṛti (a book of Hindu law) and most other dharmashastras (works of jurisprudence) report a Brahman victory, but epic texts often offer a different account, and it is likely that in social reality rulers have usually ranked first. The persistent representation of deities (especially Vishnu, Krishna, and Rama) as rulers underscores the point, as does the elaborate series of ritual roles and privileges pertaining to kings through most of Hindu history.[3]. With the rise of Buddhism, Kshatriyas regained their position as first of the four varnas. The murder of the last Maurya emperor Brhadrata by his Brahmin general Pusyamitra Sunga, and the subsequent decline of Buddhism in India, marked Brahmin supremacy once more in Eastern India. Western India remained a stronghold of Kshatriya clans as epitomized by Rajputana and the powerful Kshatriya empire that ruled from Ujjain right up to the Islamic incursions led to a downfall of the Chauhan Kshatriyas in Delhi.

      **
      பதிவில் சொன்ன முக்கிய விடயத்தை புரியவில்லையே!!

      மகாபாரதத்தில் பிராமணர்,சத்திரியர் முரண் பல இடங்களில் குறியீடுகளாக வெளிப்படுகிறது. ஒரு குழுவின் இருந்து பிரிந்த இரு குழுக்களின் வித்தியாசம் உறுதிப் படும் சூழல் என்றே குறிப்பிடுகிறேன்.

      துரோணர்‍,துருபதன் முரண்

      பீஷ்மர்,பரசுராமன் முரண்

      பாண்டவர்கள்,அசுவத்தாமன் முரண்

      துரோணர்,கர்ணன் முரண்

      Delete
  3. அப்ப‌டியானால் இனிமேல் பெரியாரிஸ்டுக‌ள் கூட‌ ம‌காபார‌த‌க் க‌தாகாலட்சேப‌ம் ப‌ண்ண‌லாம். :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வியாசன்,
      வணக்கம்.
      நாத்திகர்களுக்கு இயல்பாகவே கதாகாலேட்சேபம் நன்றாக வரும். ஏன் எனில் மதபுத்தகம் ஒழுங்காய் படிப்பவரே நாத்திகர் ஆகிறார்.

      என்னைப் பெரியாரிஸ்டு என்றீர். நான் பெரியாரை மதித்தாலும், அவரின் வழித்தோன்றல்களாக அரசியல் நடத்தி வரும் சகோக்களை முழுமையான நாத்திகர்களாக ஏற்பது இல்லை.

      நீங்கள் பதிவுலகின் சிவ‌னடியார் என்பதை அறிவேன். ஈழ சைவ மதம், இந்திய வைதீக மதத்திற்கும் பல் வித்தியாசங்கள் உண்டு.இப்பதிவு முழுக்க முழுக்க வேதம், இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் மேற்கோள்கள் அடிப்படையில் எழுதப் பட்டது.

      திராவிடர் இயக்கத்தினர் வேதத்தில் குறிப்பிடப்படும் தேவர்,த்ஸ்யுக்கள்(அசுரர்) மோதல் என்பரை ஆரியர் ,திராவிடர் மோதல் என்றார்.

      நான் ஒரே இன மக்களின் இடையே ஏற்பட்ட மோதல் என்கிறேன். அதுவும் ஆரியர் வருகை என்பது ஏற்றால், வேதங்களில் சொல்லும் மோதல் இரு ஆரியக் குழுக்களிடையே நிகழ்ந்ததுதான்.

      அதுவும் பாருங்கள், இந்திரன்,அக்னி, போன்ற தேவர்கள் ஒரு புறமும், விருத்திரன் தலைமையில் அசுரர்கள் போரிடுகின்றார்.இந்திரன் விருத்திரனைக் கொல்கிறான்.

      விருத்திரன் பிராமணன் என்பதால் ,அவனைக் கொன்ற இந்திரனுக்கு கொடுமையான பிரம்ம ஹத்தி பாவம் பிடிக்கிறது. அசுர குல குரு சுக்கிராச்சாரியர்[வியாழ பகவான்]ம் பிராமணரே!!! அப்படி என்றால் அசுரர்கள் யார்?

      http://en.wikipedia.org/wiki/Vritra
      The Devas collected the bones and Indra crafted the Vajrayudha from them. When they engaged Vritra again, the battle lasted for 360 days before the Brahmin breathed his last.
      In both of these versions (either for killing Trisiras or the Brahmin Vritra), the terrible anthropomorphic personification of Brāhmanahatya (Brahmanicide) chased Indra and forced him into hiding for his sin
      **
      இப்ப மகா பாரதம் வாங்க பாண்டு, திருதைராஷ்டிரன் இருவருமே வேத வியாசரின் மகன்கள்.ஆகவே பாண்டு, திருத இராஷ்ட்ரன் இருவரும் பிராமணர்களே,திருதைராஷ்ட்ரன் மக்ன்களும் பிராமணர்களே!!

      ஆனால் இங்கே பாண்டவர்கள் தேவர்களின் மகன்கள்.
      தருமன்=எமன் மகன்
      பீமன்= வாயு
      அருச்சுனன்=இந்திரன்
      நகுல,சகாதேவன்=ஆஸ்வினி தேவர்கள்

      பாண்டவர்கள் பிராமணர் அல்ல!!!

      மகாபாரதத்தில் துரோணர்,கிருபர் உள்ளிட்ட பல பிராமணர்கள் துரியோதன‌னை
      ஆதரித்தார்.யாதவர் கிருஷ்னன், பாண்டவர்களை ஆதரித்தார். மேலும் வேதங்களுக்கு மாற்றாக கீதை படைத்தார்.

      இயற்கையின் அம்சங்களான பல தெய்வ வழிபாட்டுக்கு மாற்றாக கிருஷ்னனே ஓரிறை என்னும் கருத்தை வலியுறுத்துகிறார்.

      இபோது அசுரர் யார் என்பதை சிந்திக்க மாட்டீர்களா??

      நன்றி!!!

      Delete
  4. தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
    Reply

    ReplyDelete