Showing posts with label biofuel. Show all posts
Showing posts with label biofuel. Show all posts

Monday, September 12, 2011

பயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்



உயிரி எரிபொருள் (biofuel) என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து (குறிப்பாகப் புதல் அல்லது தாவரம்) உருவாக்கப்படும்எரிபொருளாகும்


எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றாக் பயோ எரிபொருள் எனப்படும் எத்தனால் சோளம் போன்ற பயிர்வகைகளில் இருந்து தயாரிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.இது குறித்த பல ஆய்வுகளும் நடந்த் வருகின்றன்.வழக்கம் போல் நம்து நாடு இது குறித்து எதுவும் செய்வதில்லை என்பதும் நமக்கு தெரியும்.இச்செய்தி பல நல்ல விஷயங்களுக்கு தொடக்காமக் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.



தேங்காய் எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி விமானம் ஒன்று இயக்கப்பட்டு உள்ளது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ”வெர்ஜின் அட்லாண்டிக்”(Virgin Atlantic) நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இதற்கான முயற்சியில் இந்நிறுவனம் பலவருடங்களாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பயோ எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்(அமேசான் காடுகளில் உள்ள ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பபடுவது) ஆகியவற்றின் கலந்து பெறப்பட்ட கலவை இதற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது.
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இதற்காக போயிங் 747400 ரக ஜெட் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யாத நிலையில், விமானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.
இந்த முயற்சி பயோ எரிபொருள் ஆராய்ச்சியில் முக்கியமான ஒன்றாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது.



இக்காணொளி பயோ எரிபொருள் குறித்த பல அம்ச‌ங்களை அலசுகிறது.




http://www.biofueloasis.com/
http://www.collectivebiofuels.org/

சொந்தமாக் உருவாக்கிய பயோ டீசல் நிறுவனம்