வணக்கம் நண்பர்களே,
எண்ணெய் என்பது இப்போதைய பொருளாதரத்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். உலகின் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சவுதி அரேபியாவே முண்ணனி வகிக்கிறது.
நேற்று அல்ஜசீரா செய்தியில் சவுதியில் பொ.ஆ 2030 க்கு பிறகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அளவு இருக்காது என படித்ததும் , இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடப்பது வியப்புக்கு உரியது.
சவுதி இப்போது ஒருநாளைக்கு 11.1 மில்லியன் பேரல் எண்ணெய் உறப்த்தி செய்து அதில் 7.7 மில்லியன் பேரல் ஏற்றுமதி செய்கிறது.மீதம் உள்ள 3.4 மில்லியன் பேரலை[25%??] சவுதியே பயன் படுத்துகிறது.
இது சிட்டி கார்ப் என்ப்படும் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஹெய்டி ரஹ்மான் கூறிய கருத்து ஆகும்.அவரின் கருத்தை சார்ந்து டெய்லி டெலிகிராஃபில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தை அளிக்கிறேன்.
சிட்டி கார்ப் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்தால் சவுதி பொ.ஆ 2030ல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகி விடும்!!.
அந்நிறுவனத்தின் ஹெய்தி ரஹ்மானின் 150 பக்க சவுதி எண்ணெய் பொருளாதாரம் சார் தகவல் அறிக்கை இத்னை கூறுகிறது. இது பலருக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் நிகழப்போகிறது என வியப்பும்,அதிர்ச்சியும் ஏற்படுத்தலாம்.
இதன் முக்கிய காரணி என்னவெனில் சவுதியின் தனிப்பட்ட எண்ணெய் நுகர்வு அதிகரித்தலே!!. சவுதி தனிப்பட்ட எண்ணெய் 50%[1.5 million barrels] பொது மக்களால் பயன்படுத்தப் படுகிறது.இதில் மூன்றில் இரு பங்கு குளிர்சாதனப் பெட்டிகள் பயன்பாடு!!.
ஒரு சவுதி அரேபியர் ஒரு நாளுக்கு சுமார் 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதும்,இது உலக சராசரியை விட 91% அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இங்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீர் பெறப்படுவதும்,உலகின் 17% கடல் நீர் சுத்திகரிப்பு நீர் இங்கு உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள். இதற்கும் அதிக பொருள் செல்வு, எரிபொருள் தேவை உண்டு.தண்ணீரின் தேவை வருடம் 9% அதிகரிக்கிறது. மின்சாரத்தின் தேவை ஆண்டுக்கு 8% அதிகரிக்கிறது.
மேலும் சவுதியில் எண்ணெய் சந்தை விலையை விட மிக குறைந்த விலையில் வழங்கப்படுவதும் சிக்கலை அதிகப்படுத்துகிறது.
சவுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மொத்தமும் பயன்படுத்தப் படுகிறது. குவைத் இரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதும் குறிப்பிடலாம்.
ஹெய்தி ரஹ்மான் கூறுகிறார்.
• Saudi Arabia Could be an Oil Importer by ~2030 — Saudi Arabia is the world’s largest oil producer (11.1mbpd) & exporter (7.7mbpd). It also consumes 25% of its production. Energy consumption per capita exceeds that of most industrial nations. Oil & its derivatives account for ~50% of Saudi’s electricity production, used mostly (>50%) for residential use. Peak power demand is growing by ~8%/yr. Our analysis shows that if nothing changes Saudi may have no available oil for export by 2030.
• It Already Consumes All Its Gas Production — Saudi Arabia produces 9.6bn ft3/day of natural gas. This is entirely consumed domestically. It is looking to raise gas production to 15.5bn ft3/day by 2015E, implying a 2011-15E CAGR of 12.7%. However, peak power demand is growing at almost 8% pa. We believe Saudi Arabia will need to find new sources to meet residential & industrial demand.
ரஹ்மானின் கருத்துகளை ஏற்கெனெவே மேலே சொல்லி விட்ட படியால் மொழி பெயர்க்கவில்லை.
ஒரு வேளை இந்த கணிப்பு தவறாக இருக்கலாம் ,இது போன்ற பிற ஆய்வுகளில் மட்டுமே உறுதி செய்யப்படும். சவுதி எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயம் தங்களின் உண்மை எண்ணெய் இருப்பை வெளியே சொல்ல மாட்டார்கள். எனினும் உச்ச எண்ணெய் [Peak Oil] என்ற அளவை நெருங்கி விட்டோம் என்பதன் அறிகுறியாக எடுக்க வேண்டியதுதான்.!!!
இப்பதிவில் சவுதியின் அதீத நுகர்வையே விமர்சிக்கிறோம். "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!.
அதீத நுகர்வு ஆபத்தானது என்றெ நாம் பதிவுகளில் வலியுறுத்தி வருகிறோம். மல்ர்களிடம் இருந்து தேனீ தேன் எடுப்பது போல் ஒரு அரசன் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என ஒரு சங்கப்(???) பாடல் கூறுவதாக படித்தது உண்டு.
அதுபோல் மனிதர்களின் தேவைகள் இயற்கையை பாழ் படுத்தாமல் பயன்படுத்த வேண்டும்.இன்னும் பல்லாயிரம் தலைமுறை அனைத்து உயிரினங்களும் பிரச்சினையின்றி வாழ வழி தேட வேண்டும். .
எப்படி என்றால் குறைந்த பட்சம் உணவு,உடை,ஆற்றல்,எரிபொருள் நுகர்வு தேவைகளை முடிந்த வரை குறைக்கலாம்.சிறிய அள்வில் வீட்டில் ஒரு செடியாவது வளர்க்கலாம்.ஏதோ ஒருவகையில் ஒவ்வொருவரும் ஏதேனும் இயற்கை சார்ந்து உற்பத்தி செய்தல் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும்!!!
இதுதான் நல்ல தீர்வு!!!
இதுதான் நல்ல தீர்வு!!!