Friday, August 26, 2011

அடிமை முறையின் வரலாறு:ஆவணப் படம்

அடிமை முறை என்பது மிக இயல்பான் நடைமுறையாக ஒரு 50_100 ஆண்டுகள் முன் வரை இருந்ததை நினக்கும் போது இப்படியெல்லம் கூட காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேறியுள்ள்தா என்பது வருத்தமாக்வும்,கொஞ்சம் வியப்பாகவும் இருக்கும்.உண்மையான‌ வரலாற்றின் இன மத ரீதியான் ஒடுக்குமுறைகள் ஆவணப் படுத்தப் படுவது இல்லை.எல்லவற்றையும் மறைத்து புனித முகமூடித்த்னம் அணிவிக்கப் பட்ட வரலாறே நம்க்கு அளிக்கப் படுகிற‌து.கடந்த காலத்தின் தவறுகளை நியாயப் படுத்துபவன் அதனை எதிர்கால்த்தில் செய்ய வழி தேடுகிறான்.

மனித சமூகம் பலவித தவறுகளை செய்து அதின் பலன்களில் இருந்தே திருந்தி சட்டங்களை வடிவமைத்தது.ஒவொரு சட்டத்தின் பின்னும் ஒரு இரத்ததினால் எழுதிய வரலாறு இருக்கும்.அடிமை முறை பற்றி சகோதரர் ஜோதிஜி எழுதிய தொடர் பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் பல் எண்ணங்கள் ,இந்தியாவின் சாதிமுறையும் இம்முறையும் தொடர்புள்ளதா,இன்னும் கூட கொத்தடிமைகளாக் சிலர் விற்கப் படுவதும் மனதில் ஓடின.

இந்த அடிமை முரையின் வரலாறு பிபிசி ஆவணப் படமாக் தயரித்து இருந்தது.அத்னை இப்போது பதிவிடுகிறேன.

இந்த அடிமை முறை என்பதே ஒருவகை உழைப்பு திருடல்.இபோதும் வேறு பரிமாணத்தில் நடைமுரையில் இருக்கிறது என்பதையும் உண்ரலாம்.கணொளி பாருங்கள்.






அடிமைமுறை சட்டம் தொடர்பான‌ சில விக்கிபீடியா தகவல்கள்.

Abolition of slavery timeline



Slavery Abolition Act 1833





2 comments:

  1. இது எப்ப உருவாக்கிய தளம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே இரண்டு தளங்களை பார்த்துள்ளேன். இது புதிதாக உள்ளதே? என்ன ஆச்சு படம் நிரம்பிய தளம்?

    ரத்தம் கசிய படத்தை பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோ
    நீங்கள் எழுதுவது அருமையான் தொடர்.அடிமைகள் பட்ட கஷ்டம் பற்றி படிக்கும் போது இதயம் கன்க்கிறது.
    என் கதையை கேட்கிறீர்களா!!!!!!!!!!!!!!!!.

    அத்தளம் ஒருமுறை ஹாக் ஆனது,கொஞ்சம் சிரம்ப் பட்டு மீட்டு விட்டேன்.இதில் ஆங்கிலம் மட்டும் எழுதிக் கொண்டிருந்தேன்.இத்தளத்திற்கு தமிழ்மண இணைப்பு கிடத்ததால் இதில் மட்டும் எழுதி அதிலும் பகிரலாம் என்று முடிவு செய்து விட்டேன்.
    அடிக்கடி வாங்க.தொடருக்கு முடிந்த்வரை இன்னும் தகவல் தேடுகிறேன்.
    நன்றி

    ReplyDelete