Wednesday, September 21, 2011

ஸ்டிரிங் தியரி என்றால் என்ன ? காணொளி:1

நம்முடைய முன் பதிவுகளில் பிரபஞ்சத்தின் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு தொகுப்பு விதிகள் (Theory of everything) மூலம் விள்க்க முடியுமா என்பதுதான் இப்பொதைய அறிவியலின் சவால் என்பதை குறித்து விள்க்கி இருக்கிறோம்.


இப்பதிவில் ஸ்டிரிங் தியரி குறித்து ஒரு எளிமையான் விள்க்கம் தர மட்டுமே முயற்சிக்கிறோம்.சில முக்கிய விஷயங்களை குறிப்பிடவில்லை என்று கருதினால் உங்கள் கருத்துகளை கூறி இன்னும் மேம்படுத்த உதவ வேண்டுகிறேன்.கொஞ்சம் கற்பதை எளிமையாக்கி பகிரும் முயற்சி.எதனையும் எளிமையாக,எவருக்கும் புரியும் வண்ணம் கூற முடியும் என்பது நம் கொள்கை.


M தியரி என்பது இயற்கையின் நிகழ்வு அனைத்தையும் விளக்க இயலும் ஒரு கொள்கை என்பதுதான் இதன் சிறப்பு. இயற்கையின் அடிப்படை விசைகளாக கீழ்க்கண்ட நான்கை குறிப்பிடலாம். மற்ற விசைகளை இந்த அடிப்படை விசைகளின் தொடர்பில் கூற முடியும்.

1.ஈர்ப்பு விசை:நான்கில் குறைந்த வலிமை ஆனால் நெடுந்தூரம் செயல்படும் தன்மை உடையது.பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் மீதும் செயல்படும் வல்லமை உடையது.அதிக எடை உள்ள சி()ல‌ பொருள்கள் ஒரு எடை குறைவான பொருளின் மீது செயல்படும் மொத்த விசை அந்த தனிப்பட்ட விசைகளின் கூட்டுத்தொகையாகும்(vector sum).

2. மின் காந்த விசை:இது ஈர்ப்பு விசையை விட சக்தி வாய்ந்தது.இதுவும் நெடுந்தூரம் செயல்படும்,இது மின் காந்த சக்தி உடைய பொருள்கள்(charges) மீது மட்டும் செயல்படும். ஒரே குறி(sign) உடைய பொருள்கள் விலகுவதும்(repel),எதிர் குறி உடைய பொருள்கள் ஈர்ப்பதும்(attract) இயல்பு.

3. எளிய‌ நியுக்ளியர் விசை: ரேடியோ ஆக்டிவிட்டி(radio activity) நடக்க காரணமான் விசை. இத்னை நம்மால் நேரடியாக உணர முடியாது.

4. வலிய நியுக்ளியர் விசை:அணுவில் உள்ள‌ துக‌ள்க‌ளை அத‌ன் க‌ட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விசை. சூரியன் ,நியுக்ளியர் ரியாக்டர் இவற்றின் சக்தி இவ்வகையை சார்ந்த்து.

இந்த விசைகள அனைத்தையும் தொடர்பு படுத்தும் ஒரு கொள்கையியலைத்தான் அறிவியலாளர்கள் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்டிரிங் தியரி என்பது என்ன?

எல்லாப் பொருள்களும்(matter) அணுக்களால் ஆனது.அணுக்கள் ப்ரோட்டன்,எலெக்ட்ரான்,நியூட்ரான் உள்ளிட்ட அணுத்துகள்களால் ஆனது. இந்த அணுத்துகள்கள் குவார்க்(quark) எனப்படும் உப துகள்களால் ஆனது.

இந்த் குவார்க் துகள்கள் ஸ்டிரிங் எனப்படும் அதிரக்கூடிய இழைகளால் ஆனது.இந்த ஸ்டிரிங் அளவு 10-34 centimeters.11 பரிமாணம் உடையவை. பொருள்கள் மட்டுமல்ல,காலம்,வெளி, அனைத்து அணு துகள்கள் இப்படி வடிவமைக்கும் முயற்சியில் பல அறிவியலாளர்கள் உள்ளார்கள்.இது முடிந்து விட்டால் பிரபஞ்சத்தின் தொடக்கம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அறிவியல் கொண்டு விளக்க முடியும்.

இப்போது அனைத்து விசைகளும் அவற்றின் இடையே உள்ள தொடர்புகளும் இந்த இழைகளின் செயல்களாக வடிவமைக்கப் படவேண்டும்.


இப்போதைய சூழல்
1.நமது பூமியில் நடக்கும் பல இயக்கவியல் நிகழ்வுகளை நியூட்டன் விதிகள்,(இயக்கவியல்+ஈர்ப்பு விதிகள்) மூலம் விள்க்க இயலும். இதற்கு முன் ஆர்ர்க்கிடிமிஸ் காலம் தொட்டு பலரின் கருத்துகள், விதிகள் கூட பல விதத்தில் பங்காற்றி உள்ளன என்பதையும் நினைவு கூர்தல் நலம்.

2.சூரிய குடும்பத்தின் நிகழ்வுகளை கோபர்நிகஸ்,கெப்ளர் போன்றவர்களின் விதிகள் மூலம் விள்க்கம் முடியும்.

3.இந்த விதிக‌ளின் எல்லைகள் சூரிய(பூமி) குடும்பத்தை தாண்டும் போது மாற்றியமைக்கப் படவேண்டும்.ஐன்ஸ்டின்  சார்பியல் கொள்கை இதற்கு உதவியது.பிர‌ப‌ஞ்ச‌த்தின் தோற்ற‌ம் கூறும் பெரு விரிவாக்க கொள்கை உட்பட்ட பல் பிரபஞ்ச நிகழ்வுகளை இக்கொள்கைகளின் மூலம் விள்க்க இயலும்.

4.இதுவரை அனைத்து விதிகளும் இயற்கை நிகழ்வுகளை அதன் காரணிகள் மூலம் எளிதாக வரையறுத்தது போல் அணுவின் உள் இயக்கவிலை முடியவில்லை.அணுவின் உள் துகள்களின் இயக்கவியல்கள் நிகழ்தக்வு சார்ந்தே உள்ள‌துதான் காரணம்.ஒவொரு விசயும் இத்துகள்களின் செய்லாக்கமே.எ,கா மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் அசைவே.

5.ஆர்க்கிடிமஸ் முதல் ஐன்ஸ்டினின் விதிகள் அணுவின் உள் செல்லுபடி ஆவதில் பல் சிக்கல்கள்.ஆகவே ஒவொரு விதியையும் அணு துகள்களின் காரணிகளாக் விளக்க முயற்சிதான் இந்த அனைத்து விளக்க கொள்கை(theory of everything).ஈர்ப்பு விசையை தீர்மானிக்கும் துகளை வரையறுப்பதில் சில சிக்கல்கள் உண்டு.

இந்த படம் 1.ஈர்ப்பு விசை 2. சார்பியல் கோட்பாடு 3) அணு துகள் இயக்கவியல் இடையே உள்ள தொடர்புகளை விளக்குகிறது.
இந்த கன சதுரத்தை கூர்ந்து பார்த்தால் பல விஷயங்கள் பிடிபடும்.இமூன்று விதிகள் இணைப்பு முயற்சிக்கு பல கொள்கைகள் முயற்சிக்கின்றன.அதில் ஒன்றுதான் இந்த ஸ்ரிரிங் தியரி.

அதாவது ஒவொரு இயற்கை நிகழ்வையும் அடிப்படை இழைகளின் செய்லாக விதிகளின் மூலம் கூறும் முயற்சி.
.இதுதான் ஸ்டிரிங் தியரி!!!!!!!!!!!!.
இன்னும் தொடர்வோம்
//superstringtheory.com/
(To be continued)

No comments:

Post a Comment