Thursday, September 22, 2011

மதம் அறிவியல் முரண் படுகிறதா? தீர்க்க இயலுமா?

அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகம் ஒரு புதிய ஆய்வு "விஞ்ஞானிகள்ன் மதம் மற்றும் அறிவியல் இடையில் உள்ள எல்லைகளை எப்படி மேற்கொளுகிறார்கள், " என்ற தலைப்பில் மேற்கொண்டது.

இது  மதத்தின்  அறிவியல் ஆய்வு சஞ்சிகை(Journal for the Scientific Study of Religion) செப்டம்பர் 2011 இதழில் இவ்வாய்வு முடிவுகள் பதிவிடப் பட்டது.அதில் சில விஞ்ஞானிகள் மட்டுமே மதமும்,அறிவியலும் நேரெதிரானவை என்ற கருத்தை கொண்டதாக தெரிவிக்கிறது.அக்கட்டுரையின் மொழி பெயர்ப்பே இப்பதிவு.

ஆய்வு முறை

இம்முறையில் உயர்ந்த ஆய்வுக் கழகங்களை சேர்ந்த 2198 அறிவியலாளர்களில் இருந்து 21 சிறந்த பல்கலை கழங்களை சேர்ந்த  275 பேர் சீரற்ற(random) முறையில் தேர்வு செய்யப்ப்ட்டனர்.இவர்கள் அனைவருமே அறிவியல் சமூகம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்பவர்கள். இதில் கீழ்க்கண்ட முடிவுகள் அறியப்பட்டன.

முடிவுகள்

 • 15% பேர் மதமும் அறிவியலும் எப்போதும் நேரெதிரானவை என்ற கருத்து தெரிவித்தனர்.

 • 15% பேர் மதமும் அறிவியலும் எப்போதும் நேரெதிரானவை அல்ல என்ற கருத்து தெரிவித்தனர்.

 • 70% சதவீதம் மதம் மற்றும் அறிவியல்  சில நேரங்களில் மட்டும் நேரெதிராக உள்ள்ன பல் நேரங்களில் இல்லை என்ற கருத்து தெரிவித்தனர்.

இதில் கலந்து கொண்ர அறிவியலாளர்களில் 50% பேர் ஏதோ ஒரு மதத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

இந்த ஆய்வு அறிவியலாளர்களின் மதம்+அறிவியல் மோதலை மேற்கொள்ளும் 3 உத்திகளை பற்றியும் கூறுகிறது.

1.மத மறு(மலர்ச்சி) வரையறுப்பு(Redefining categories): மதத்தின் கட்டுப்பாடுகளை குறைத்து,அதன் எல்லைகளை விரிவாக்கி,மதம் சாராத ஆன்மீகத்தையும் மதத்திற்குள் கொண்டு வருதல்.

2. மதம்+அறிவியல் இணைப்பு (Integration models): இம்முறையில் ஐசக் நியூட்டன் போன்ற அறிவியலாளர்கள் கொண்டிருந்தது போல் மதமும்,அறிவியலும் ஒன்றுதான் என்ற கொள்கை கடைப்பிடித்தல்.

3. மதம்+அறிவியலின் எல்லகள் குறித்த விவாதம் (Intentional talk): மதம், அறிவியலின் எல்லைகள், பிரச்சினைகள் குறித்த ஆக்கபூர்வமான் விவாதம்,புரிந்துணர்வு ஏற்படுத்தல்.

இந்த ஆய்வின் பிற கண்டறிதல்கள்

பெரும்பாலான ஆய்வாளர்கள் ,பொது மக்களின் கருத்துக்கு வித்தியாசமான் சிந்தனையையே கொண்டிருந்தனர். அனைவருமே பள்லிகளில் பரிணாம்த்தோடு(evolution) படைப்பியல்வாத(intelligent design) கொள்கை கற்பிப்பதை ஆதரிக்க வில்லை.இதில் மத நம்பிக்ககையாளர் ,எதிர்ப்பாளர் என்ற வித்தியாசம் இல்லை.

68% பேர் தங்களை ஏதோ ஒரு விதத்தில் ஆன்மீகத்துடன் தொடர்புள்ளவர்களாக‌ கூறினர். ஆன்மீகத்தில் தொட்ர்புள்ளவர்களாக கூறியவர்கள் மதமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் என்ற கருத்தினை கொண்டிருந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் ஆன்மீக தொடர்புள்ளவர்களும்,இறை மறுப்புவாதிகளும் கூட ஒத்த கருத்து கொண்டிருந்தது,மதமும் அறிவியலும் இணைந்து செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற‌‌து.

இக்கட்டுரை ஆசிரியர் அவருடைய கருத்தாக அறிவியலும் ,மதமும் ஒத்துப் போக முடியாது என்று கூறுகிறார் அதனை படிக்க விரும்பினால் இங்கே படியுங்கள்.என் கருத்தை மட்டும் கூறி முடிக்கிறேன்.

1.அறிவியலின் போக்கை மதம் சார்ந்த அமைப்புகள் கட்டுப்படுத்தக் கூடாது. அறிவியல்,கல்வியிலும் மத அமைப்புகள் தலையிடக் கூடாது.

2. மதங்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமை, புரிந்துணர்வு வளர்ப்பது மத அறிவியல் ஒற்றுமையை விட முக்கியம்.பெரும்பான்மை மதத்தினர் சிறுபானமை மதத்தவரின் உரிமைகளை மதிக்கும்,பாதுகாக்கும் ஜனநாயக,மத சார்பற்ற சட்டங்களே உலக் முழுதும் வர வேண்டும்.

3. மதம், அறிவியல் இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.அறிவியல் காலப்போக்கில் அதன் எல்லைகளை அதிகரிக்கிறது.இயற்கையின் நிகழ்வுகளுக்கான அறிவியல் விளக்கங்கள் மாறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் பல மதங்கள் தங்கள் கொள்கைகளை காலத்திற்கு ஏற்றபடி மாற்றுவது இல்லை.

முடிவாக் நாம் சொலவ்து மதம் அறிவியல் இரண்டும் வெவ்வேறு தளங்களில் பயணிப்பதாக் ஏற்றுக் கொல்வது அனைவருக்கும் நல்லது.
மதம் அறிவிய‌லை தன் இருப்புக்கான் நிரூபணமாக் காட்டவும் தேவையில்லை.இது எப்போதும் குழப்பத்திலேயே முடியும்.

அறிவியல் கடவுள்,மதம் பற்றி கருத்து கூறாமல் மனித சமூகத்திற்கு பயன் படும் தொழில் நுட்பம் சார்ந்து பயணிப்பது நல்லது.

2011 Bale Boone Symposium - Science & Religion: Are They Compatible? from UK Gaines Center on Vimeo.

1 comment:

 1. சாதியும் மதமும் சமயுமும் காணா
  ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

  சாதியும் மதமும் சமயமும் பொய் என
  ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

  திருவடி தீக்ஷை(Self realization)

  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


  Utube videos:
  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  www.youtube.com/watch?v=FOF51gv5uCo


  Online Books
  http://www.vallalyaar.com/?p=409


  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete