Friday, October 7, 2011

கருந்துளை(Black Hole) பற்றிய 18ஆம் நூற்றாண்டு விளக்கம்&காணொளி

நமது பிரபஞ்சத்தில் உள்ள பல விந்தையான விஷயங்களுல் ஒன்றுதான் இந்த கருந்துளை என்றழக்கப்படும் அதி ஈர்ப்பு இழுப்பான். இது ஒரு கருதுகோளாக 18ம் நூற்றாண்டில்[1783 CE ] திரு John Michell, திரு  Pierre-Simon Laplace. ஆகியோரால் முன் வைக்கப் பட்டது.
இதில் திரு மிட்செல் ஒரு தத்துவவியலாளர்&புவியியல் வல்லுனர்.திரு லாப்லாஸ் ஒரு சிறந்த கணித & வானவியல்[laplace transforms] வல்லுனர்.இப்பதிவில் திரு மிட்செல் அவர்களின் கருதுகோள் பற்றி மட்டும் அறிவோம்.18ஆம் நூற்றாண்டிலேயே ஒரு அறிவு சார்ந்த வாதமாக, ஈர்ப்பு விசையின் தன்மை சார்ந்து, கருந்துளை பற்றிய கருதுகோள் முன் வைக்கிறார்.

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கையின் அடிப்படையில் கருந்துளையின் செயலை 1916 CE ல்  விளக்கியவர். Karl Schwarzschild

லண்டல் ராயல் சொசைட்டிக்கு மிட்செல்  எழுதிய கடிதத்தில் இது பற்றி குறிப்பிடுகிறார்.அது பற்றிய விளக்கமே இப்பதிவு.


If the semi-diameter of a sphere of the same density as the Sun were to exceed that of the Sun in the proportion of 500 to 1, a body falling from an infinite height towards it would have acquired at its surface greater velocity than that of light, and consequently supposing light to be attracted by the same force in proportion to its vis inertia, with other bodies, all light emitted from such a body would be made to return towards it by its own proper gravity.
—John Michel

அவர் கூறியது என்ன?
1.பூமியில் ஒரு பொருள் மேலே செலுத்தினால்(எறிந்தால்) ஈர்ப்பு விசையால் மீண்டும் கீழே வருகிறது.

2.அதே சமயம் விடுபடு வேகத்தில்(escape velocity) எறியப்படும் பொருள் ஈர்ப்பு விசையை தாண்டி பயணிக்கிறது.

பூமியின் விடுபடு வேகம் =  11.2 km/second


பூமியின் விடுபடு வேகம் படத்தில் காட்டப்பட்டு உள்ளது

G=6.67×10-11 m3 kg-1 s-2[ஈர்ப்பு விசை மாறிலி: gravitational constant]

M= கோள்(நட்சத்திரத்தின் எடை)

r=ஈர்ப்புவிசையின் மையப் புள்ளியில் இருந்து தூரம்.
நம் சூரிய மண்டல்த்தின் உள்ள சூரியன் உட்பட்ட பல planets விடுபடு திசை வேகம் கீழே கொடுக்கப் பட்டு உள்ளது.


Location
with respect to
Ve
   
on the Sun,
the Sun's gravity:
617.5 km/s

Mercury's gravity:
4.3 km/s

on Venus,
Venus' gravity:
10.3 km/s

on Earth,
the Earth's gravity:
11.2 km/s

on the Moon,
the Moon's gravity:
2.4 km/s

on Mars,
Mars' gravity:
5.0 km/s

Jupiter's gravity:
59.5 km/s

on Saturn,
Saturn's gravity:
35.6 km/s

on Uranus,
Uranus' gravity:
21.2 km/s

Neptune's gravity:
23.6 km/s

on Pluto,
Pluto's gravity:
3.9 km/s

in the solar system,  
the Milky Way's gravity:  
≥ 525 km/s [3]

on the event horizon,  
a black hole's gravity:  



3. இபோது திரு ஜான் மிட்செல் தன் கருதுகோளை இப்படி கூறுகிறார்.இந்த விடுபடு திசை வேகம் ஈர்ப்பு அளிக்கும் கோள்(நட்சத்திரம்) எடை சார்ந்து உள்ளது. அதாவது கோள்(நட்சத்திரம்) எடை அதிகரித்தால் விடுபடு வேகம் அதிகரிக்க வேண்டும். விடுபடு திசை வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாக உள்ள ஒரு கோள்(நட்சத்திரம்) இருந்தால் எப்படி இருக்கும்? என்பதே அவரின் கேள்வி.

4. அப்படி இருக்கும் போது ஒளி அதனிடம் இருந்து வெளிப்படவோ,வேறு எந்த ஒளியும் பிரதிபலிக்கவோ முடியாது.ஒளி என்பது எடை அற்றது அதுவே இழுக்கப் படும் போது அதல் உள்ள அனைத்துமே ஈர்ப்பினால் சுருங்கி விடும், அதன் அருகில் உள்ள எதுவும் அதனுள் ஈர்க்கப்பட்டு தன் உருவம் இழந்துவிடும்.

இன்னும் இவை பற்றி கூறலாம் எனினும் 18ஆம் நூற்றான்டிலேயே கருந்துளை பற்றி அத்துறை சாரா அறிஞர் ஒருவரின் கருதுகோள் இப்போதைய ஆய்வின் முடிவுகளுக்கு அப்ப்டியே ஒத்துப்போவது பாராட்டுக்கு உரியது. அவர் கற்பனை செய்து கூறவில்லை,ஈர்ப்பு விசை,விடுபடு திசைவேகம் இவற்றின் எல்லைகளை பற்றி சிந்தித்ததன் விளைவுதான் இந்த கருதுகோள்!!!!!!

கருந்துளை பற்றிய வியப்பூட்டும் காணொளி.இது இன்னும் கருந்துளையின் உருவாக்கம் உட்ட்பட பல அம்சங்களை அலசுகிறது.கண்டு களியுங்கள்.


9 comments:

  1. கருத்து பதிவிற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. @ibnu shakir
    நன்றி தலை!!!!!!!!!!

    ReplyDelete
  3. அறிவியல் சார்ந்த விஷயங்களை
    புரியும்படி எழுதி உள்ளீர்கள்
    நன்றி

    ReplyDelete
  4. அருமையான பதிவு மற்றும் காணொளி,

    வீட்டில் குழந்தையுள்ளவர்கள் இதைப்பற்றியெல்லாம் bed time stories ஆக சொல்லி தந்தால் பயனுள்ளதாக இருக்கும். விஷயத்தை அறிந்து நேசிக்கும் மனோபாவம் அவர்களாவது பெறட்டும்.

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  5. வாங்க நரேன்,
    ஏதோ நம்மால் முடிந்தவரை எளிமை படுத்தி சில விஷயங்களை கூற முயற்சிக்கிறோம்.
    நன்றி

    ReplyDelete