Tuesday, October 25, 2011

பணமின்றி வாழ முடியுமா? உண்மை சம்பவ அடிப்படையிலான‌ காணொளி

இது 1970ல் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படம். நாம் அனைவரும் ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அறிந்து இருந்தாலும் நடைமுறை வாழ்வில் பணம் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள்தான்.எவ்ருக்கும் எவ்வளவும் செல்வம் போதுமனது என்று கண்க்கிட முடிவது(விருப்பம்) இல்லை. 1970ல் டோலி ஃப்ரீட்  என்னும் 18 வயது பெண் எழுதிய புத்தக்த்தின் அடிப்படையில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி கற்ற மட்டும் டோரதி தன் தந்தையுடம் ஒரு அரை ஏக்கர் நிலத்தில் இயற்கை சார்ந்த விவசாயம் செய்து வாழ்ந்து வந்ததை,தன்னிறைவு பெற்ற,பணத் தேவை அற்ற வாழ்வை ஆவணப் ப்டுத்துகிறார்கள்.இவ்வாழ்வு முறையே possum living  என்று பெயருடன் புகழ் பெற்றது.இது அனைவருக்கும் நடைமுறையில் சாத்தியம் இல்லை எனினும் இப்படியும் ஒரு வாழ்வு உண்டு என அறியும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.



Part 2


Part 3




“Why is it that people assume one must be a hippie, or live in some dreary wilderness, or be a folksy, hard-working, back-to-nature soybean-and-yogurt freak in order to largely bypass the money economy? My father and I have a house on a half-acre lot 40 miles north of Philadelphia, Pa. (hardly a pioneer homestead), maintain a middle-class façade, and live well without a job or regular income—and without working hard, either.”
—Dolly Freed, Possum Living: How To Live Well
Without A Job And With (Almost) No Money


இப்புத்தகம் மிகவும் பிரபலம் அடைந்தது.டோலி ஒரு சிறந்த எழுத்தாளராக போற்றப் பட்டார்.அதன் பிறகு கல்வியை தொடர்ந்த டோரதி நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றும் அளவிற்கு உயர்ந்தார்.தற்போது கணவர் இரு குழந்தைகளுடன் டெக்சாஸில்(Texas USA) வசித்து வருகிறார்.. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!!!!!!!!!!!!

24 comments:

  1. இப்படியும் ஒரு வாழ்வு உண்டு என அறியும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. நன்றி நண்பர் முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நண்பா

    ReplyDelete
  4. தீபாவளிக்கு முன்தினம் பணத்தை பற்றி ஒரு பதிவா. the head of the family will be amused by it.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    தீபாவளிக்கு பிறகுப் பார்ப்போம். சகோ. பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  5. ஏன் ஓடிகிறோம் எதற்கு ஓடுகிறோம்
    என அறியாது நிதமும் ஓடிக்களைத்துத் திரியும்
    அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய
    அருமையான காணொளி
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய்
    தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. It's too late to know this!Still aspiring for a day to come:)

    ReplyDelete
  7. நன்றி நண்பர்களே!!!!!!
    அனைவருக்கும் இனிய தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  8. -:)
    தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இப்படியும் ஒரு வாழ்வு உண்டு என அறியும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. படம் பார்த்து முடிக்க “நாளாகும்” எனக்கு.
    :(

    கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்களுக்கென்று தனி சந்தை உண்டோ?

    ReplyDelete
  13. but the parody is that the person who wrote a book on possum living, drops all those and becomes a NASA scientist and starts living like any one of us!!

    ReplyDelete
  14. நன்றி நண்பர்கள் ரெவெரி,தமிழன்,இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  15. வணக்கம் த‌ருமி அய்யா!!!!
    டோலி வாழ்ந்த 5 வருட வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பல் இருக்கின்றன.அதன் பிறகு அவரும் சாதரண பொருளாதாய வாழ்வுக்குத் திரும்பினார் என்பது எனக்கு முரணாக படவில்லை.
    நான் செய்ய முயற்சிக்காத ஒரு சிறந்த வாழ்வு முறையை டோலி சில வருடங்களுக்காவது வாழ்ந்து காட்டினார் என்பது எனக்கு பாராட்டக் கூடிய செயலாகவே தோன்றுகிறது.இந்த சந்தைப் பொருளாதார முறைக்கு[free market economy] மாற்று தேடும் ஒரு கால கட்டத்தில் வாழ்கிறோம் என்னும் போது கிராம வாழ்வியல் சார்ந்த ஒரு தன்னிறைவு பெற்ற‌ பொருளாதார முறை வர வேண்டும் என்னும் ஒரு ஆசைதான்.
    கருத்துக்கு நன்றி அய்யா!!!!!!!!

    ReplyDelete
  16. நன்றி நண்பர் ராஜ நடராஜன்

    ReplyDelete
  17. //கருத்துக்கு நன்றி //

    சொன்ன கருத்து படம் பார்த்து முடிப்பதற்கு முன் சொன்னது.

    இன்னும் படம் பார்த்து முடிக்கவில்லை :(

    ReplyDelete
  18. நன்றி நண்பர் ரஜினி பிரதாப் சிங்

    ReplyDelete
  19. புதிய தகவல் படிக்கிறேன் சகோ..

    ReplyDelete
  20. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete