Saturday, January 21, 2012

பரிணாம ஆதரவாளரின் கேள்விகளுக்கு அறிவார்ந்த வடிவமைப்பின் பதிலடி:1


நம் அறிவார்ந்த வடிவமைப்பு பற்றிய தொட்ர் பற்றி நண்பர் நரென் சில கேள்விகளை எழுப்பினார்.அவருக்கு பதிலாக இப்பதிவு.

வணக்கம் நண்பர் நரேன்,
நிச்சயம் இதற்கு கடும் உழைப்பு+அதிக நேரம் தேவைப்படுகிறது.இதில் கிடைக்கும் மகிழ்ச்சியே உங்கள் போல் புரிந்து கேட்கப் படும் கேள்விகள்தான்.நாம் எந்த கொள்கையையும் அறிவியல் பார்வையில்தான் [சான்றுகள் நிகழ்தல்+கொள்கையாக்கம் +பரிசோதனை+உறுதிப்படுத்தல்] அணுகுகிறொம்].சரி உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.Just for fun!!!!!!!!!


//1.அதற்கு complexity மற்றும் நிரூபித்தால் போதுமா, அதையும் தாண்டி ஆராயவேண்டாமா?.//

அதற்கு பரிணாம ஆய்வாளர்கள்தான் பார்த்து பதில் சொல்ல வேண்டும்.சரியான பதிலாக் இருந்தால் முதலில் ஏற்க மாட்டோம்.பிறகு அனைவரும் ஏற்கும் பட்சத்தில் அ.வ(வேதாளம்) முருங்கை மரத்தில் ஏறி வேறு எ.சி.வ எடுத்துக் காட்டு தருவோம்.அதற்கும் அவர்கள்தான் விள்க்கம் தர வேண்டும.

ஹி ஹி விள்க்க முடியாததுதான் complexity.விளங்கினா அது easy!!!!!!!!!!!!

//2.மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் அறிவியல் ஆராய்ச்சி வரையறைகுள்ளே வந்துவிடுமா.

//அறிவியலால் முடியாது என்பதுதானே அடிப்படை சகோ!!!!!!!!! .அப்படி ஒரு அறிவார்ந்த சக்தி இந்த சிக்க்லமைப்பை தோற்றுவித்தது.அதனை[சக்தி] எந்த ஆய்விலும் அறிய முடியாது.ஆகவே எ.சி.வ சிக்கலாக் இருப்பதால் சிக்கலை [எப்போதும் போல்] ஏற்படுத்துவது அதுதான் அதேதான்!!!!!!

//3.complexity என்பது relative term ஆகாதா. ஒருவருக்கு கடினமாக் இருப்பது இன்னொருவருக்கு கடினமாக இருப்பதில்லை. ஆதிமனிதனுக்கு கடினமான விஷயங்கள் இப்போது எளிமை.//

இதுதான் சகோ!.நீங்கள் நம் வழிக்கு வர ஆரம்பித்து விட்டீர்கள். அந்த சக்திக்கு எளிமையாக இருப்பது மனிதர்களுக்கு விடை காண முடியா சிக்க்லாக உள்ளது!!!!!!!

[இப்போதைய] விடை தெரியா கேள்விகள் அனைத்திற்கும்  அதுவே விடை,ஒளி மற்றும் வழி.அச்சக்தி மிக பெரியது!!!!!!!!!!!


//4)மாற்றங்களுக்கு காரண காரணிகள் இயற்கையில் இருப்பதுதானே.//

அதனை எ.சி வ அமைப்புகளுக்கு நிரூபியுங்கள் என்பதுதானே சவால்,மரண அடி சகோ!!!!!!.

இது[எ.சி.வ] எப்படி வரும் பரிணாமத்தில் என்னும் கேள்விக்கு ஓடி ஒளிகிறார்களே பரிணாம தத்துவ மேதைகள் பார்க்கவில்லையா!!!!!!!!!!!!!!சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!

//5 உலகின் காலத்தை கணக்கிட்டால் எளிமையிலிருந்து கடினத்திற்கு வரும் சாத்தியகூறு அதிகம் உள்ளது.//

எப்ப‌டி வ‌ந்த‌து என்று கூறாம‌ல் வ‌ரும் சாத்திய‌ம் என்று கூறுவ‌து ப‌ரிண‌ம‌த்தின் உறுதிய‌ற்ற‌ த‌ன்மையையே கா‌ட்டுகிற‌து.

இது சிக்கலான செல் அமைப்பு இதுக்கு முன்னாடி என்ன‌? அதை சொல்லுங்க‌ ச‌கோ!!!!!!!!!!

//6. இப்போது எளிமை படுத்த முடியவில்லையென்றால் பிற்பாடு எளிமை படுத்திவிட்டால்//

மிக மிக  பழைய பதில். ஒரே ஒரு உண்மை [இதை எளிமைப் படுத்தி காட்டினால் முதலில் ஒத்துக் கொள்ள மாட்டோம் .பிறகு  எங்களுக்கு இன்னொரு எ.சி.வ கிடைக்காமல் போய் விடுமா!!!!!!!.

இப்போது பதில் தெரியாத கேள்வி  மட்டும் கேட்க நாங்கள் தயார் . நீங்கள் இப்படியே [தலையை பிய்த்துக் கொண்டு] உளர வேண்டியதுதான்!!!!!!!!!!!!!!

/ 7) எலிப் பொறிக்கும் உயிருள்ள ஒன்றுக்கும் ஒப்பீடு சரியாகுமா./

அது விளக்கத்திற்காக மட்டும் சகோ!!!.முன்னாள் ஆட்கள் கைக்கடிகாரம் [watchmaker argument] வைத்து இதனை ஆரம்பித்தார்கள்உண்மையில் நம்ம ஆட்களுக்கு எலிப்பொறி விடயம் மட்டுமே புரியுது. சக்தி போட்ட சிக்கல் அல்லவா.ஆனால் பரிணாம நாத்திகர்கள் இதற்கும் விடை அளித்தே ஆக வேண்டும். அவர்களை சும்மா விடப் போவதில்லை!!!!!!!

//8) கடைசியாக கணிதத்தின் மூலம் I.D. நிரூபிக்க முயல்கிறார்கள். கணிதத்தை பல பரிணாமங்களை கொண்ட நிதர்சன உலகத்திற்கு சரியான ஒப்பீட்டாகுமா. //

அவ‌ர்க‌ள்   evolutionary algorithms மூல‌ம்  ப‌ரிணாம மாதிரி,செயலாக்கம்  ச‌ரி என்றால் நாங்க‌ள் No free lunch theorem& complexity theory மூல‌ம் அது சாத்திய‌மில்லை என்றே கூறுகிறோம்.நியாய‌மாக வாதிடுங்க‌ள் ச‌கோ!!!!!!!! சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!
Thanks a lot  naren!!!!!!!!!!!!!!!!!

அ.வ கொள்கையாளரின் கேள்விகளுக்கு பதில் இல்லாமல்
வன்முறையில் இறங்கும் பரிணாம நாத்திகர்கள்


பரிணாம் ஆதரவாளர் தருமி(அய்யா மன்னிக்கவும்!!!!!!!)யின்
கேள்விகளுக்கு அறிவார்ந்த சக்தியின் அழகிய முறையில்,அதிரடி பதில்கள்.

10 comments:

 1. ஹா..ஹா..செந்தில் சார்,

  I am a GOOD loser, so don't worry. அதனால் இந்த விவாதத்தில் உங்களுக்கு தான். வெற்றிக் கூட்டத்தை நடத்துங்கள். அதை படம்பிடித்து, இரவு 12 மணிக்கு மேல் ஸ்லாட் பிடித்து ஏதாவது ஒரு டி.வி.யில் ஓளிப்பரப்புங்கள். பேய்களும்?? பிசாசுகளும்!!! பார்க்கட்டும். அதற்கு முன்னால் இதற்கும் பதிலடி இருக்குமா என்று பாருங்கள்.

  1) அ.வா.க்களை இந்த http://aatralarasau.blogspot.com/2011/08/what-is-science.html கோட்ப்பாட்டிற்குள் வந்துவிடுமா?
  துணைக் கேள்வி கணிதமும் அதற்குள் வந்துவிடுமா?

  2) order from disorder ஏன் வரமுடியாது. இப்போது நாம் order என்பது பின்னால் ஒரு disorder தானே?

  3) தேர்வில் கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால், கற்பனை திறமை வைத்து ஏதோ ஏதோ உளறுவோமே அதைப் போலத்தான் அவாக்களும் இவாக்களும்.

  4) நீங்க ஒரு solipsistic ஆ.

  5) நேரடி விவாததிற்கு தயாரா?????????????????

  ReplyDelete
 2. 1) அ.வா.க்களை இந்த http://aatralarasau.blogspot.com/2011/08/what-is-science.html கோட்ப்பாட்டிற்குள் வந்துவிடுமா?
  துணைக் கேள்வி கணிதமும் அதற்குள் வந்துவிடுமா?//

  நாங்கள் இப்படி சிக்கி கொள்ள மாட்டோம் .இப்போதைய,எதிர்கால அறிவிய‌லின் (குறிப்பாக பரிணாம் ஆதரவாளர்களுக்கு)விடை தேரியா,விள்க்க முடியா கேள்வி அனைத்துமே அ.வ[ID] என்றே சொல்கிறோம். அறிந்த‌வ‌ற்றின் விள்க்க‌ம் எங்க‌ளுக்கு தேவையில்லை.க‌ருத்து சொல்ல‌ விரும்ப‌வில்லை என்று சொல்லும் அதே வேளையில் , இவ‌ற்றை வடிவமைக்கும்,புரிந்து கொள்ளும் அள‌விற்கு மனித‌ மூளை செல்க‌ள் அ.வ‌ என்ப‌தை ம‌ட்டும் வ‌லியுறுத்துகிறோம்.விள்க்க முடியா உண்மைகளின் காரணி அறிவார்ந்தசக்தியே என்று நாங்க‌ள் சொல்வ‌தை ஏற்ப‌தில் உங்க‌ளுக்கு என்ன‌ சிக்க‌ல் வ‌ந்து விட‌ப்போகிறது?.அத‌னை[சிக்க‌ல்] வேண்டுமானால் எளிமைப் ப‌டுத்த‌லாம் ச‌கோ.

  இதனை ஏற்காவிட்டால் மனித‌ மூளை செல்கள்[neurons] பரிணாமத்தில் எப்படி வந்தது? என்ற கேள்வி தவிர்க்க முடியாது. ஆகவே சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!

  ReplyDelete
 3. //2) order from disorder ஏன் வரமுடியாது ஏன் வரமுடியாது. இப்போது நாம் order என்பது பின்னால் ஒரு disorder தானே?//
  நம்ம தலை வில்லியம் டெம்ஸ்கி சொன்ன மேட்டருக்கு இன்னும் பதிவில் வரவில்லையே சகோ!!!!!
  அவர் என்ன சொல்கிறார் என்றால் “disorder from order” அதாவது குழப்பமின்மையில் இருந்து குழப்பத்திற்கே செல்கிறோம்.அதாவது அறிவார்ந்த சக்தி படைத்த குழப்பமற்ற பிரபஞ்சத்தை குழ‌ப்பமாக்கியவர் இந்த தத்துவ மே(பே)தை,இனவாதி டார்வினே!!!!!!!!!!!

  நாங்கள் சொல்லும் விள்க்கம் குழப்பாது ஆனல் இந்த பரிணாம் ஆதரவாளர் விளக்கம் குழபுகிறதா இல்லையா என்பதை நம் சகோக்களுக்கு தெரியும்.அவர்களை எங்களைத் தவிர யாரும் குழப்ப முடியாது.

  ஆதியிலே அனைத்தும் சரியாக,ஒழுங்காக இருந்தது,மனிதன் வழி கெட்டதினால் குழப்பம் வந்தது என்பதன் அத்தாட்சிகளை பார்க்கவில்லையா!!!!!

  //3) தேர்வில் கேட்ட கேள்விக்கு விடை தெரியவில்லையென்றால், கற்பனை திறமை வைத்து ஏதோ ஏதோ உளறுவோமே அதைப் போலத்தான் அவாக்களும் இவாக்களும்.//
  எங்க‌ள் கேள்விக்கு ப‌தில‌ளிக்க‌ முடியாமல் "நாங்கள் உளருவது&கற்பனை" என்று அவதூறு செய்வதில் இருந்தே பரிணாம் ஆதரவாளர்கள் எந்த அளவிற்கு போகிறார்கள் என்பதை அறிவார்ந்த மக்களும் புரிந்து கொள்வர்.

  பரிணாம‌மும் கற்பனை & உளரல் என்றால் நாங்களும் அப்ப்டித்தான்.அவர்களை நிறுத்த சொல்லுங்கள் நாங்களும் நிறுத்துகிறோம்.!!!!!!!!

  ReplyDelete
 4. ///4) நீங்க ஒரு solipsistic ஆ.///

  இப்படி புரியாத வார்த்தைகளை போட்டு குழப்புவதே,இந்த பரிணாம குழப்பவாதிகளின் வேலை !!!!!!!!!!!!.இதற்கும் எ.சி.வ க்கும் என்ன தொடர்பு?
  இருந்தாலும் நம் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்காததால் புதுக் கேள்வி தேடாமல் நேரம் இருப்பதால்,என் சொந்த புரிதல் மட்டும் பகிர்கிறோம்.
  சுயம் மட்டும் உண்மை,சுயத்தின் மூலம் மட்டுமே உணர முடியும் என்பது தவறு.
  நம் சுயம் பல எல்லைகளுக்கு உட்பட்டது.முடிவிலா பரிமாணமுடைய உலகை சுயத்தால் உணர இயலாது.

  சுயம் தாண்டி அனைத்தையும் படைத்த அறிவார்ந்த சக்தியும், அனைத்து மனித,உயிரினங்களும் உயரிய நோக்கத்திற்காக படைக்கப்பட்டு சில மாமனிதர்கள் மூலம் வழிநடத்தப் படுகிறது என்பதை உணரும் எங்களை எப்படி அழைப்பது என்று எங்கள் சகோக்களுக்கு தெரியும்.

  /5) நேரடி விவாததிற்கு தயாரா?????????????????//
  உலகே பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சி இணையம் விளம்ப்ரம் செய்தால் தயார்.ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி ஆளிடம் மட்டுமே!!!!!.
  நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு [கேள்வி மட்டுமே!]எங்கள் சகோக்களுக்கு புரியும் வண்ணம் பதில் சொல்ல முடியுமா என்று சவால் விடுகிறோம்.புரியாது என்று அவர்கள் கூறிவிட்டால் அவர் தோற்றுவிட்டார் ச‌ரியா!!!!!!!!

  ஆனால் ஹாருன் யாஹ்யாவின் சவாலுக்கு அஞ்சி ஓடுகிறார்.ஹா ஹா ஹா
  http://www.harunyahya.com/new_releases/news/dawkins_challenge.php
  1. Archeological researches unearthed over a hundred million fossils, proving that life forms were created out of nothing. Still, there is not a single transitional fossil supporting the theory of evolution. If Dawkins is sincere in his claim, he should bring a transitional fossil and announce it to the public as "a transitional form!"
  2. The odds against a functional protein emerging randomly is 10^950 to 1—a practical impossibility. (In mathematics, probabilities smaller than 1 over 1050 are accepted as "zero probability.") If Dawkins is honest, he should point at a mass of proteins that formed by chance or by means of the methods he espouses. Let Dawkins explain us how he can account for the origin of life in evolutionary terms, when even a single protein—the building block of life—cannot form by chance!
  3. Let Dawkins explain us how all colorful, lively, three-dimensional and perfectly clear images, shortly life itself, can form in the pitch dark human brain and who sees this image in the brain!
  4. Let Dawkins explain us in evolutionary terms how conversations, music and all other sounds form in the sound-isolated brain; who listens to and enjoys these sounds, who knows their meaning, who reflects on them consciously and who answers back these sounds!

  ReplyDelete
 5. பரிணாம ஆதரவாளரே!!!!!!!! நீங்கள் saltationist ஆ,
  அல்லது Punctuated equilibriumist ஆ

  அல்லது Phyletic gradualist ஆ,

  அல்லது Quantum evolutionist ஆ

  அல்லது Punctuated gradualist ஆ

  முதலில் அதை சொல்லுங்கள்!!!!!!

  ஏன் இத்தனை பிரிவு ? ஹா ஹா ஹா

  ReplyDelete
 6. முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்லா@ சார்வாகன் இன்னாள் எலிப்பொறி சார்வாகன் அவர்களே..

  so you expect us to do all the hard and dirty work and feed like vultures on the end product.

  அடடா என்ன இது இ.வாக்கள் மாதிரி சப்போர்ட்டுக்கு ஐந்தாறு வெள்ளைகார துரைமார்களை (நவீன பிராமணர்கள்???) வைத்துக் கொண்டு இப்படி ஆட்டம் போடுகிறீர்களே என நினைத்து, என் புத்திக்கு ஏற்றவாறு எனக்கு ஆதரவாக ஒரு வெள்ளைக்கார துரைமார் கிடைக்க மாட்டமாட்டார என்று ஏங்கி, தேடி, கிடைத்தில், பிச்சு பிச்சு கேள்வி கேட்டதற்கே, திணறித் தான் போனீர்கள்.

  ஆனால் இப்போது சரியான ஆள் கிடைத்துவிட்டார். //praise the lord -:)-:)// நேற்றே தெரிந்திருந்தால் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட விரட்டியிருப்பேன். அவர் பெயர் Donald E. Simanek, என்ன ஒரு அழகிய நெஞ்சருக்கம் முறையில் விளக்கம் அளிக்கிறார். http://www.lhup.edu/~dsimanek/philosop/creation.htm

  As far as yarunhahaya is concerned, please see the video in http://aatralarasau.blogspot.com/2012/01/blog-post.html

  saltationist- மனித சமுதாயமே saltationist தான் அவன் செய்யும் செயல்களால் என்ன வகை பரிணாமங்கL பூமியில் ஏற்படப்போகிறதோ. காலத்தில் மனிதனின் காலம் குறுகியது, அதனால் மனிதனே sudden evolution தான்.

  punctuated equilbrium etc ஏன் இத்தனை பிரிவு..
  இதை http://www.lhup.edu/~dsimanek/philosop/theory.htm நன்றாக படியுங்கள்.

  கடைசியாக நான்தான் அந்த intellegent designer therefore i am god - how is this logic. I am designating you saarvakan as my prophet. Go and rule the mankind and enjoy yourself.

  There is no complex issues in the above mandate.

  ReplyDelete
 7. //முன்னால் டார்வின்@மனித குரங்கு@சிப்பன்சி@கொரில்லா@ சார்வாகன் இன்னாள் எலிப்பொறி சார்வாகன் அவர்களே//
  இதெல்லாம நீங்க படித்து வாங்கின பட்டமா என்று ஒரு சகோ கேட்க புல்லரித்து போனது.மிக்க நன்றி சகோ நரேன்,

  உங்களுக்கும் ஒரு வெள்ளைகாரன் கிடைத்து விட்டானா!!!!.இந்த பரிணாம ஆதரவாளர்களின் இணைய தொடர்பை துண்டிக்க வேண்டும்[பழைய காலமாக் இருந்தால் வேறு எதையோ.......... ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது அந்த காலம்].

  இருந்தாலும் நாங்கள் மட்டுமே கேள்வி கேட்போம்,பதில் சொன்னாலும் ஏற்க மாட்டோம் என்ற அடிப்படை உண்மை கூட தெரியாமல் விவாதிக்கும் உங்களை என்ன செய்வது?.

  சிக்கலான செல்,கண் அமைப்பு ...போன்ற எ.சி.வ இதற்கு முன்னால் பரிணாமத்தில் என்ன? என்பதற்கு பதில் இல்லை என்பதால் குழப்புகிறீர்கள்.

  நாங்கள் தெளிவாக கூறுகிறோம். அறிவார்ந்த சக்தி படைத்தது இப்போது இருப்பது போன்றே செல் ...போன்ற எ.சி.வ படைப்பின் போதும் இருந்தது.

  அப்போதும் எ.சி.வ அப்படியே இருந்தது எப்படி தெரியும்? என்று நீங்கள் கேட்டால் அப்படி இல்லை என்பதற்கு நீங்கள்தானே ஆதாரம் காட்ட வேண்டும்.

  நாங்கள் சொலவது பதில்.நீங்கள் கேட்கும் கேள்விக்கு பொருந்த வில்லை எனில் ஆதாரம் நீங்கள்தானே கொடுக்க வேண்டும் அல்லது கேள்வியை எங்கள் பதிலுக்கு தக்கவாறு மாற்ற வேண்டும்.

  இது போன்ற விவாத நாகரிகம் கூட தெரியாத உங்களிடம் விவாதித்து என்ன‌ விள்க்க முடியும்?

  அப்ப உங்களிடம் விவாதித்து பயன் இல்லை.நம் சகோக்களுக்கு உண்மை எது குழப்பம் எது என்பது நன்றாக தெரியும்.

  அந்த வடிவமைப்பாளர் யார் என்பது பரம இரகசியம் தொடரின் இறுதியில் மட்டுமே தெரியும். ஹா ஹா ஹா

  வெ(ற்)றி வெ(ற்)றி......வெ(ற்)றி

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. வாங்க சாகிர் நாயக் M.B.B.S அவர்களே
  ஏன் போட்ட கருத்தை உடனே எடுத்து விட்டீர்கள்.வருகைகு நன்றி.மீண்டும் வருக‌

  ReplyDelete
 10. World's First Iridescent Mammal Discovered
  The fur of golden moles has multiple layers that act as reflectors similar to the "eye shine" of nocturnal mammals
  http://news.discovery.com/animals/golden-moles-iridescent-122401.html#mkcpgn=rssnws1

  ReplyDelete