Monday, January 16, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்றால் என்ன? பகுதி 4:

 
தொடரின் முந்தைய பகுதிகள்
நண்பர்களே.சென்ற பதிவுகளில் அறிவார்ந்த வடிவமைப்பின் விளக்கம் அதன் வரலாறு குறித்து அறிந்தோம்.அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கம்[ID] பிற பரிணாம எதிர்ப்புகளை விட அறிவியல்(?) ரீதியான விமர்சனங்களை பரிணாமத்தின் மேல் தொடுப்பதும் அதற்கு பரிணாம ஆய்வாளர்கள் பதிலளிப்பதும் இந்த 15+ ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப் பட்ட ஒன்று.
இந்த இயக்கமும் பல்கலைகழகம் , ஆய்வுக் கூடம்,கல்வி,விளம்பர பிரச்சாரம் என மும்முரமாக இயங்குகிறார்கள்.இதன் முக்கியமான் நாயகர்கள் குறித்து அறிவோம்.ஒவ்வொருவர் பற்றி சுருக்கமான விவரங்களும் அவர்களின் ஒரு சிறிய உரையும் இப்பதிவில் அளிக்கிறேன்.காணொளியில் அவர்கள் முன் வைக்கும் பரிணாம கொள்கையின் மீதான விமர்சனங்கள் வரும் பதிவுகளில் விவாதிக்கப்படும்.இப்போது அறிமுகம் மட்டுமே!!!!!!!!!!

1.Phillip E. Johnson


Phillip E. Johnson (d.o.b: 18 June 1940) அறிவார்ந்த வடிவமைப்பு இயக்கத்தின் தந்தையாக அறியப்படுகிறார்.இவர் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர் மட்டுமல்லாது பெர்க்லி பல்கலைகழகத்தில் சட்டத்துறை பேராசியராகவும் [emeritus professor of law at Boalt School of Law at the University of California, Berkeley] 1967 to 2000 ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.அமெரிக்காவின் இல்லினோய்ஸ் மாநிலத்தை சேர்ந்தவர். கிறித்தவ[Presbyterian Church (USA] மத நம்பிக்கையாளர். மைக்கேல் டென்டன் எழுதிய Michael Denton's Evolution: A Theory in Crisis. [1985] புத்தகம் மற்றும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய The Blind Watchmaker[1986] புதகம் ஆகியவற்றின் மீதான ஆய்வில் பரிணாம விமர்சகராக மாறியதாக குறிப்பிடுகிறார். Discovery Institute's Center for Science and Culture (CSC) நிறுவனர்களுள் ஒருவர்.


2.Michel Behe

Michael J. Behe (born 1952) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தை சேர்ந்தவர். உயிர்வேதியலில்[Biochemistry] முனைவர் பட்டம் பெற்ற சிறந்த ஆய்வாளர். sickle-cell disease என்னும் இரத்த குறைபாடு பற்றியே ஆய்வு செய்து முனைவர் பட்டம் [1978 to 1982] பெற்றார். உன்னத முனைவர் பட்டம் எனப்படும் postdoctoral work [1982 to 1985] ஆய்வில் டி என் ஏ [DNA] அமைப்பு குறித்து ஆய்வு செய்தார் .பல ஆய்வுக் கட்டுரைகள் பல ஆய்விதழ்களில் பதிவிட்டார். நியூ யார்க்கில் உள்ள Queens College  கல்லூரியில் உயிர் வேதியியல் துறை பேராசியராக பணியாற்றியவர். இப்போது பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள  Lehigh University ல் பணி புரிந்து வருகிறார். Discovery Institute's Center for Science and Culture அமைப்பிலும் பெருந் தொண்டு ஆற்றி வருகிறார்.

முதலில் பரிணாம் கொள்கையை ஏற்புடையதாக கருதினார்.ஆனால் மைக்கேல் டென்டன் எழுதிய Evolution: A Theory In Crisis புத்தகம் படித்த பின் பரிணாம கொள்கையை விமர்சிக்க தொடங்கினார். பரிணாம் கொள்கை உண்மையாக இருக்க முடியாது என்பதற்கு உயிர்வேதியியல் ரீதியான ஆதாரம் கண்டு பிடித்ததாக கூறினார் பெஹே. சில உயிர்களின் அடிப்படை வடிவமைப்புகள் எளிமைப் படுத்த முடியாத சிக்கலாக இருப்பதாகவும் இவை எந்த ஒரு எளிமையான அமைப்புகளில் இருந்து பரிணமிக்க முடியாது என்ற விமர்சனத்தை வெளியிட்டார்.இதுவே Irreducible complexity     என அழைக்கப்படும் அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கையின் சாரம் ஆகும். இவை பரிணாம செயல்முறைகளான் இயற்கை தேர்வு+சீரற்ற சிறு மாற்றத்தின் மூலமாக விளகக முடியாது என்பதால் இவை ஒரு அறிவு கொண்ட சக்தியால் மட்டுமே படைக்கப் பட்டு இருக்க முடியும்.இம்மாதிரி விளக்கங்கள் நிறைய கேட்டு இருக்க்லாம்."கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாத‌தால் கடவுள் உண்டு".இந்த விள்க்கம் எல்லாம் மைக்கேல் பெஹேவின் Irreducible complexity  கொள்கை போட்ட குட்டிகள்தான். இவர் 1996ல் எழுதிய. Darwin's Black Box  புத்தகம் பிரபலமானது.


இக்கொள்கை முன்னெடுப்பதில் இவர்&கொள்கைகள் பற்றி இன்னும் அதிகம் வரும் பதிவுகளில் பார்ப்போம்..

மைக்கேல் பெஹே கீழ்க்கண்ட வாதங்களை காணொளியில் முன் வைக்கிறார்
முதல் காரணி வாதம்[First cause argument]

ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம்[Fine tuning argument]

இயற்கையாக ப்ரோட்டின் அமையும் நிகழ்தகவு[Probability of protein formation]

பிரபஞ்சத்தில் முதல் உயிரின் தோற்றம்.[Abiogenesis].Michel Behe3.William Albert "Bill" DembskiWilliam Albert "Bill" Dembski (born July 18, 1960) இவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை  William J. Dembski பரிணாம் உயிரியல் பேராசியர் [University of Erlangen-Nuremberg] என்பது வியப்பான உண்மை. William Dembski கணிதம் [University of Chicago], தத்துவம் [Princeton Theological Seminary] என இரு முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறுவயது முதலே பரிணாம் கொள்கை மீது சந்தேகம் கொண்ட டெம்ஸ்கி 1991ல் சீரற்ற தன்மையை வடிவமைத்தல்[Randomness by design] என்னும் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டார்.

[பரிணாமத்தின் படி வடிவமைப்பு என்பது சீரற்ற தன்மையால் [Design by randomness] இவர் ப்ளேட்டை திருப்பி போடுகிறார். ஹா ஹா ஹா சரியான போட்டி!!!!!!!!!! சில பரிணாம கொள்கையாளர்கள் சீரற்ற சிறுமாற்றம் மட்டும்தான் ஒழுங்கற்றது இயற்கை தேர்வு அப்படியல்ல என்று கூறுவது சரியே என்றாலும் இங்கு இப்பதிவு ஒரு  ID கொள்கையாளரின் கண்ணோட்டதிலேயே எழுதப்படுகிறது. விமர்சனங்கள்,விவாதங்கள் பிறகு ]

பரிணாம செயல்முறைகள் மூலம் சிக்க்லான வடிவமைப்பு நிகழ முடியாது என்பதற்கு கணித ரீதியாக சில விமர்சனங்களை வைக்கிறார். பரிணாமத்தின் மாதிரியான Evolutionary Algorithms      பல கணித சிக்கல்களை தீர்ப்பது பரிணத்தின் நிரூபணம் என்பதை உடைக்க முயல்கிறார். இதற்கு No free lunch theorem மற்றும் Complexity theory அடிப்படையில் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறார்.இவர் Discovery Institute's Center for Science and Culture (CSC)  ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். எனக்கு பிடித்தவர் இவர்தான் . இவர் நம்ம specialization  ஆள் அதனால் வரும் பதிவுகளில் இவர் கட்டுரைகள் நுணுக்கமாக் அலசப்படும்4.Stephen C Meyer
Stephen C. Meyer.Director of the Center for Science and Culture at the Discovery Institute and Vice President and Senior Fellow at the Discovery Institute

Stephen C. Meyer புவியியலில் பட்டமும்,வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் எழுதிய   signature in the cell     என்ற புத்தகமும் பிரபல்மானது.செல்லில் உள்ள டி என் ஏ ல் உள்ள சிக்கலான வடிவமைப்பு,தகவல்கள் பரிணாமத்தை தவறு என்று நிருபிப்பதாக வாதிடுகிறார்.

இது இல்லாமல் இன்னும் சிலரும் உண்டு என்றாலும் இந்த நால்வரை பற்றி சில குறிப்புகள் கொடுத்தது ஏன் எனில் இவர்களில் விமர்சன முறைகள் வேறுபட்டது.திரு ஜான்சன் சட்டாரீதியாக‌வே பரிணாம கொள்கை கல்வி எதிர்ப்பு குறித்து மேற்கொண்டார்.

திரு மைக்கேல் பெஹே உயிர் வெதியியல் சார்ந்தும்,திரு டெம்ஸ்கி கணிதம் சார்ந்தும் ஸ்டீஃபன் மெயர் செல் ஆய்வு சார்ந்தும் விமர்சனம் வைப்பதால் இந்த விமர்சகர்களை  அறிவது அவசியம் ஆகிறது.இனி நேரடியாக  கொள்கை  மற்றும் அதன் பரிணாம் விமர்சனம் குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.நன்றி

4 comments:

  1. என்னுடைய செஸ் வெப்சைட்டை பார்த்தீர்களா?

    ReplyDelete
  2. ஓ!நீங்கள் தொடர்பதிவாக இடுகிறீர்களா?அப்ப அடிக்கரும்பிலிருந்து கடிக்க வேண்டுமே:)

    ReplyDelete
  3. ஆமாம் அடிக்கடி வாருங்கள் நண்பர் இராஜராஜன்!!!!!!

    ReplyDelete