Tuesday, January 3, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்றால் என்ன? பகுதி 1மகாகவி பாரதிக்கு "கவிதை எமக்கு தொழில்" என்றது போல் நமக்கு "தேடல் ஒரு தொழில்" என்பதால் தேடுவதை உண்மையின் அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்தே தமிழ் சொந்தங்களுடன் பகிர்ந்து வருகிறோம். நம் தேடல: பெரும்பாலும் அறிவியலை எளிமைப்படுத்துவது, இயற்கை சார்ந்த வாழ்வு என்ற எல்லைகளுக்குல் இருந்தாலும் பிற விஷயங்களை பிறரிடம் இருந்தும் கற்று வருகிறோம்.

பரிணாம கொள்கை என்பதுதான் என்ன?

மனிதன் உட்பட்ட அனைத்து உயிரினங்களும் ஒரு செல் உயிர்களில் இருந்து இயற்கை தேர்வு[natural selection],சீரற்ற சிறு மாற்றங்கள்[mutations] ஆகியவற்றால் மாற்றம் அடைந்து தோன்றின‌.


பரிணாமம் இபோதைய அறிவியலின் உயிர் தோற்ற, பரவலாக‌ ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை என்ற அளவில் அதனை கற்று வருகிறோம். அது குறித்து சில பகிர்தலும் முயற்சித்தோம். பரிணாமத்திற்கும் பிற அறிவியல் கொள்கைகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவெனில்

"இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்"

மக்கள் எந்தக் காலத்தில் எதை புரிந்து கொண்டார்கள்? பல கொள்கைகள் இப்படித்தான் மக்கள் ஆட்டு மந்தை போல் தினசரி வாழ்வின் தேவைகளை சந்திப்பதிலேயே அவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது என்று கூறலாம் என்றாலும், பரிணாம கொள்கை பல  மதவாதிகளிடம் இருந்து மிகுந்த எதிர்ப்பை பெற்ற கொள்கையாகும்.

எடுத்துக்காட்டாக இபோதைய பிரபஞ்ச தோற்ற கொள்கையான பெரு விரிவாக்க கொளகை கூட பரிணாமம் போன்றதே.அதாவது

ஓரணுவில் இருந்து விரிவடைந்து அனைத்து பிரபஞ்சமும் தோன்றியது.” (Big Bang Theory)
"ஓர் செல் உயிர்களில் இருந்து மாற்றம் அடைந்து அனைத்து உயிர்களும் தோன்றியது". (Evolution theory).

அனைத்து  மதவாதிகளும் பெரு விரிவாக்க கொள்கையை எதிர்ப்பது இல்லை.இது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.வேண்டுமெனில் விளக்குவோம்!.

மதங்கள் கூறும் படைப்புக் கொள்கையையே பரிணாம கொள்கை முன் உயிர்களின் தோற்றமாக ஏற்கப்பட்டு வந்தது. அதனை பரிணாமத்தின் மாற்றாக மதவாதிகள் வைப்பது உண்டும்

1.இளைய பூமி கொள்கை [Young earth creationism]

2.பழைய பூமி கொள்கை [Old earth creationism]

இவற்றின் படி மத புத்தகங்கள் கூறும் படைப்பு செயல்களை இப்போதைய அறிவியலின் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளோடு ஒட்டியோ, வெட்டியோ விளக்குவதாகும். இவற்றில் பல சிக்கல்கள் இருப்பதால் பரிணாம்த்திற்கு மாற்று ஒன்று இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அது அறிவார்ந்த வடிவமைப்பு[Intelligent Design] என்று அழைக்கப்படுகிறது.

அதனை என்ப்படி வரையறுப்பது?

பிரபஞ்சம்,உயிரினங்கள் தோற்றம் உள்ளிட்ட பல செயல்கள், தன்மைகள் போன்றவை ஒரு  அறிவு சார்ந்த காரணி மூலமே நன்றாக விளக்க முடியுமே தவிர ஒழுங்கற்ற இயறகை தேர்வு மற்றும் சீரற்ற சிறு மாற்றத்தினால் அல்ல.

"certain features of the universe and of living things are best explained by an intelligent cause, not a possibly undirected process such as natural selection."

இது குறித்த பல தகவல்களை இத்தொடர் பதிவில் பார்ப்போம்.


15 comments:

 1. பதிவு எளிமையாக புரியும்படி உள்ளது...தொடருங்கள்.

  என்னச் சொல்ல வர்ரீங்க என புரிஞ்சுப் போச்சு.
  எத்தனை நாள் தான் பரிணாமத்தை குறை சொல்வதை படித்துக்கொண்டிருப்பது. அவங்க கொள்கை என்ன என்று அலச விரும்பும் பதிவு.

  இதில், எப்பொழுது படைக்கப்பட்டது என்பது முதல் கேள்வி. இரண்டாவது first cause effect ஆக யாரால் படைக்கப்பட்டது என்பது இரண்டாவது கேள்வி. ID அத்தாட்சிகள் உள்ளனவா. விளக்கமுடியவில்லை என்பது அத்தாட்சி என்றால் விளக்கியப்பின்????

  பதிவை தொடருங்கள் நன்றி.

  ReplyDelete
 2. உங்கள் மீது அமைதி நிலவுவதாக சகோதரர்...

  பதிவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்கால பதிவுகளில் தாங்கள் தயவுக்கூர்ந்து பதிவிற்கான மூல தரவுகளை கீழே தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  உதாரணத்திற்கு //"இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்"//

  இது போன்றவை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை கீழே கொடுத்தால் என் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  அதுபோல, மற்றொன்றையும் நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதாவது, ID அறிவியலாளர்களை பொருத்தவரை, அவர்கள் விக்கிபீடியாவை பல விசயங்களில் எதிர்க்ககூடியவர்கள். ஆகையால், ID குறித்து பேசும்போது அவர்களுடைய தளத்தில் இருந்து மேற்கோள்களை காட்டுவது சரியானதாக இருக்கும். அதாவது மூலத்திற்கே சென்று தகவல்களை திரட்டுவது.

  இதில் இன்னொரு பயனும் உள்ளது. தவறான தகவல்களை கொடுப்பதில் இருந்து இவை நமக்கு உதவலாம். உதாரணத்திற்கு, ID கோட்பாடு ஆய்வுகள் peer reviewed இல்லை என்ற குற்றச்சாட்டு பரிநாமவியலாளர்கள் மத்தியில் உண்டு. ஆனால், ID ஆய்வாளர்களின் தளத்தில் சென்று பார்த்தால் அவர்களுடைய பல பேப்பர்கள் peer reviewed இதழ்களில் வந்துள்ளது என்று கூறி பெரிய லிஸ்ட் கொடுத்துள்ளார்கள். ஆகையால் மூலத்திற்கு சென்று தகவல்களை கொடுத்தது பல தவறான தகவல்களை தடுக்கும் என்பது என்னுடைய கருத்து..

  நன்றி..

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹமத் அ

  ReplyDelete
 3. எதிர்பார்ப்புகளுடன் ...

  ReplyDelete
 4. saarvaaghan,

  thought provoking one, nice post , i think ,will have a serious work here! lol(just for fun,no offence pls.,)

  ReplyDelete
 5. நண்பர் நரேன்
  அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை அதன் காரணிகளின் செயலாக வரையறுத்தல் என்ற அணுகு முறையிலேயே அணுகுகிறோம்.இந்த ஒவ்வொரு காரணியும் கூட ஆய்வு ரீதியாக உணர,அளவிட முடியும் ஒன்று.

  இதன் அடிப்படையிலேயே பிற அறிவியல் கொள்கைகள் போலவே பரிணாமமும் உயிர்களின் தோற்றதை படிமங்கள்,காலக் கண்க்கீடுகள்,DNA போன்றவற்றை நிகழ்வுகளாக கொண்டு இவை எப்படி ஒன்றுக் கொன்று தொடர்புடையவை என்பதை விளக்குகிறது. அப்பழுக்கற்ற எக்காலமும் மாறாத உண்மை என்று அறிவியலில் எந்த கருத்தும் கிடையாது.

  Maximum Likelihood மூலம் சான்றுகளை விளக்கும் உண்மையே கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு கோட்பாடு சான்றுகளுக்கு எவ்வளவு பொருந்துகிறது என்பதுதான் அதன் நம்பக, பயன்பாட்டுத் தனமை.

  ஆகவே பரிணாம‌த்திற்கு மாற்றாக வைக்கப்படும் கொள்கைக்கு இதே சான்றுகளை இன்னும் ஒரு படி மேலே சென்று விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஒருவேளை அப்ப்டி விள்க்கம் அளித்தால் பரிணாமம் என்பதற்கு மாற்றாக அப்புதிய கொள்கை வந்துவிடும்.

  நியூட்டனின் விதிகள் அதி வேகத்தில் ஆய்வுமுடிவுகளுக்கு சரியாக பொருந்தவில்லை ஆதலால் ஐன்ஸ்டின் சார்பியல் கொள்கை அதற்கு மாற்றானது.ஒருவேளை ஐன்ஸ்டினின் கொள்கையும் பொருந்தாமல் இருக்கும் பட்சத்தில் அது மாற்றாக முடிந்து இருக்காது.

  ஆகவே இந்த அறிவார்ந்த வடிவமைப்பு கொள்கை குறித்து கொஞ்சம் திறந்த மன‌தோடு கற்போம் என்பதுதான் இத்தொடர்பதிவு.அவ்வளவுதான்.

  என் கேரக்டரையே சரியா புரியமாட்டென் என்கிறீர்களே நண்பா!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 6. ந‌ண்ப‌ர் ஆஸிக்

  /இது போன்றவை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை கீழே கொடுத்தால் என் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். /

  வ‌ரும் ப‌திவுக‌ளில் இத‌னை க‌வ‌ன‌த்தில் எடுக்கிறேன்.

  ID குறித்த ‌ ஆய்வித‌ழ்க‌ள்,சில‌ க‌ட்டுரைக‌ள் கூட‌ த‌மிழ் ப‌டுத்த‌ முய‌ற்சி செய்வேன். இன்னும் அதிக‌ தூர‌ம் செல்ல‌ வேண்டியுள்ள‌து.
  வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

  ReplyDelete
 7. தருமி அய்யா
  வருகைக்கு நன்றி.அடிக்கடி பதிவிடுங்கள்.
  நன்றி

  ReplyDelete
 8. வணக்கம் வவ்வால் நண்பா
  (just for fun,no offence pls.,)
  You have the right to do so.Ha ha ha !!!!!!!!!!!
  என் கேரக்டரையே சரியா புரியமாட்டென் என்கிறீர்களே நண்பா!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 9. சகோ ஆஸிக்
  இந்த சுட்டியை அடிப்படையாக கொண்டே நீங்கள் வினவிய தகவல் பதிவிட்டேன்.

  http://en.wikipedia.org/wiki/Level_of_support_for_evolution

  ReplyDelete
 10. 45 சதவீத முஸ்லீம்கள் குரானை தூக்கி எறிந்துவிட்டார்களா?
  ஆதம், ஹவ்வா எல்லா டுபாக்கூர் என்று 45 சதவீத முஸ்லீம்கள் கூறுகிறார்களா? அதாவது 1.5 பில்லியன் மூஃமின்களில் 750 மில்லியன் முஸ்லீம்கள் அல்குரானையே டுபாக்கூர் என்று கூறுகிறார்களா!

  ஆ அல்லாஹ்!

  இந்த கெட்ட முஸ்லீம்களை நல்ல முஸ்லீம்களான போகோ ஹராம், பின்லாடன், தாலிபான், ஆஷிக் அஹமது ஆகியோர் போட்டுத்தள்ளனும்னு நம்ம காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லிட்டு வேற போய்ட்டாரே?

  ReplyDelete
 11. ஸலாம் இபின் ஷாகிர்
  நீங்கள் அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது.இபோது நம் பணி ID பற்றி உள்ளதை உள்ளபடி ஆவணப் படுத்தல் மட்டுமே.இது நடந்து விடால் அனைவருமே சிந்திக்க மாட்டார்களா என்னும் ஒரு ஆசைதான்!!!!!!!
  நன்றி

  ReplyDelete
 12. நண்பர் சார்வாகன்,

  தேவையானதொரு தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளீர்கள். ஆங்கிலப் போதாமையால் அவ்வப்போது எனக்கெழும் ஐயங்களை இத்தொடரில் ஆற்றுப்படுத்திக் கொள்ளலாம் என எண்ணுகிறேன். மீள்பதிவு செய்ய அனுமதி உண்டா?

  ReplyDelete
 13. வணக்கம் தோழர் செங்கொடி நலமா?
  நம் பதிவுகளை மீள் பதிவோ அல்லது இன்னும் கொஞ்சம் விஷயம் சேர்த்து பதிவிட்டாலும் நன்று.
  உங்கள் ஐயங்களை கூடுமானவரை தீர்க்க முயல்கிறேன்.அடிக்கடி வாருங்கள்.
  நன்றி

  ReplyDelete
 14. நல்லதொரு தொடக்கம். அதிலும் மிகவும் அருமையாகவே பிரபஞ்சம் மற்றும் உயிரினங்கள் பற்றி தொடங்கி இருக்கிறீர்கள். மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 15. வாங்க சகோ இராதாகிருஷ்னன்
  நம் பணி தாய்தமிழில் பல் கொள்கையாக்கங்களையும் சார்பற்று ஆவணப்படுத்துவது மட்டுமே.அடிக்கடி வாங்க!!!!!!!!!

  ReplyDelete