Tuesday, April 10, 2012

பெருவெடிப்பு [Big Bang] மத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதா ?; ஆய்வுக் காணொளி!வணக்கம் நண்பர்களே!

மதபுத்தகங்களில் அறிவியல் என்பது ஒரு மதப்பிரசார உத்தி என்பதை மதபிரச்சாரகர்கள் தவிர அனைவரும் அறிந்து இருந்தாலும் அவ்ர்கள் மனம் தளராது விள்க்குகின்றார்.


இணையத்தில் இமாதிரி பிரச்சார உத்திகளை ஆராய்ந்து உண்மையை என்ன்,எப்படி என விள்க்கும் பல காணொளிகள் உண்டு.ஆகவே ஒவொவொரு மத அறிவியல் பிரசாரத்திற்கும் எதிரான காணொளி வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறோம்.

இதற்கு விள்க்கம் அவசியமில்லை ஏன் எனில் திறமையான மொழி பெயர்ப்பு+அடைப்புக்குறியினுள் சொற்கள் போட்டு எந்த பொருள் வேண்டுமானாலும் கொண்டுவரமுடியும் என்பதை அறிந்தால் இது ஒன்றும் பெரிய வித்தையில்லை என்பதை அறிவீர்கள்.

"ஒவ்வொரு [மத அறிவியல்] பிரச்சாரத்திற்கும் எதிர் பிரசாரம் உண்டு"

மத அறிவியல் என்னும் பிரசாரத்தை எப்படி சமாளிப்பது என்ற நம் முந்தைய பதிவு!.

http://saarvaakan.blogspot.com/2011/03/blog-post_29.html

நாம் என்ன சொல்ல வருகிறோம்?

மதவாதிகள்[அனைவருக்கும் பொருந்தும் மத சார்பற்ற‌] அறவியல் பேசினால் நம்மிடம் எதிர்ப்பில்லை. மதத்தில் அறிவியல் என்ற போர்வையில் அறம் அல்லாத  இயல்களை[சட்டங்கள்] நியாயப்படுத்துவதால் அதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளகிறோம்.


காணொளி கண்டு இரசியுங்கள்!!!!! 

ஆகவே பரிணாம எதிர்ப்புக் கொள்கையோடு, மத அறிவியலையும் சேர்த்து அன்போடு கவனிப்போம்!!!!!!!! 

நன்றி


இது நம் கம்பெனி விளமபரம்,இங்கே ஒரிஜினல் மத பிரசார காணொளிகளும் அதற்கு எதிர் பிரச்சார காணொளிகளும் சிற‌ந்த தரத்தில்,காப்பிரைட்டுடன் கிடைக்கும்.ஸ்பெசல் ஆர்டரின் பேரில் [அறிவார்ந்த]வடிவமைத்தும் தரப்படும்.


அப்புறம் நாம் மத சார்பற்றவர் என்று நிரூபிக்க அகில உலக் பெரும் பிரசாரகர் ஹாருண் யாஹ்ய[Harum yahya] அவர்களின் காணொளியும் அளிக்கிறோம்.

ஆகவே யார் யாருக்கு எந்த காணொளி பிடிக்குமோ சண்டை போடாமல் பார்த்து இரசிக்க வேண்டுகிறேன்.

ஹாரூண் யாஹ்யாவின் பிரச்சார உத்திகளை மட்டும் எடுத்து பயன்படுத்தி அவரின் பெயரை குறிப்பிடாமல் இருக்கும் போட்டி பிரச்சாரகர்களுக்கு கடும் கண்டனம்.!!!!!!!

அன்னைத் தமிழில் அழகாக மத அறிவியல் வழங்கும் ஒரிஜினல் ஹாருண் யாஹ்யாவின் மத அறிவியல் பிரசாரத்தை மட்டும் கேளுங்கள்.போலிகளை கண்டு ஏமாறாதீர்!!!!!!

நமது விள்ம்பரதாரர்!!!!!!!!!!!!!!!!!!!!!

19 comments:

 1. My comment here
  http://mydeartamilnadu.blogspot.com/2012/04/blog-post.html

  சகோ குலாம்'

  நாம் நம் பெயரில் மட்டுமே பின்னூட்டம் இடுகிறோம்.வேறு பெயரில் இட வேண்டிய அவசியம் நம்க்கு இல்லை.நீங்க மத பிரச்சாரக் கம்பெணி நடத்திறீங்க நாம் மதம் எதிர் பிரசாரக் கம்பெனி நடத்துகிறோம்.இரண்டு பேரும் சேர்ந்து வித்தை காட்டினால்தான இருவருக்கும் பிசிநெஸ் நடக்கும்.

  சகோ ஆஷிக்,

  இங்கே கொஞ்சம் வித்தியாசம்
  நீங்க பரிணாம் எதிர்ப்பு பிரசாரக் கம்பெனி,நான் பரிணாம் ஆதரவு பிரச்சாரக் கம்பெனி.கம்பெனியில் உயர்வு தாழ்வு கிடையாது.எப்பாடு பட்டாவது கம்பெனியை காத்து வளர்ப்பதுதான் முக்கியம்.

  சகோ ஆஸிக் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது இவன் ஏன் நம் பதிவில் வந்து விவாதிக்காமல் சகோதரி பதிவில் வந்து விவாதிக்கிறான் என்ற கோபம்தானே.

  நீங்கள் வேறு

  நான் வேறு அல்ல‌

  நானே நீங்கள்!

  நீங்களே நான்

  ஆகவே அமைதி உண்டாகட்டும்!

  ப்ளஸ்ஸ்சும் மைனஸ்சும் இணைந்ததுதானெ வாழ்க்கை! ஏன் ப்ளஸ் மட்டுமே வேண்டுமென்கிறீர்கள்?.

  உங்களுக்கு மட்டும் எப்போதும் எதிர்பதிவு மட்டுமே என அன்புடன் அழகிய வழியில் கூறுகிறோம்.

  விவாதிக்க ஆசைப்பட்டால் ஆயிரம் கேள்விக்கும் அதிரடியாக் பதில் அளிக்கும் அண்ணன் சுவன்ப்பிரியனை விட்டு உங்களிடம் யார் வருவார்?

  மற்றபடி சகோ அன்னு பதிவுக்கு நாம் வருவது இதுவே முதல் தடவை எ
  ன்பதால் இப்பதிவுக்கு மட்டும் என கருதிவிட்டோம்!நான் கருதியது த்வறக்வும் இருக்க்லாம்.

  ஆகவே அழகிய தம்ழில் ஐ ஏம் வெரி சாரி!!!!!!!

  (சரியான)கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் உண்டு

  அன்னைத் தமிழில்

  ஸ்டார்ட் தி ஜர்னி! ஆல் தி பெஸ்ட்.அடுத்த பதிவில் சந்திப்போம்!

  நன்றி

  ReplyDelete
 2. ஒருவரின் டவுஸரை, அவரே எப்படி கழட்டுவது ( சேம் சைட் கோல்) என்பதை அறிய இங்கே கிளிக்கவும்
  http://suvanappiriyan.blogspot.in/2012/04/blog-post_09.html

  படித்து @#$%^&!(*&)*&^ என்று கூற தோன்றினால் கம்பெனி பொறுப்பாகாது.

  ReplyDelete
 3. சகோ உண்மை

  கம்பெனியை கா(கை)ப்பாற்ற வேண்டுமெனில் பலவித தியாகம் செய்தாக் வேண்டும்.மற்ற‌ படி சுயநல நோக்கம் அல்ல!.

  மதத்தில் அறிவியல் இருந்தால் மட்டுமே அது உண்மை என்பதால் வேறு வழியில்லை.ஆகவே மத அறிவியல் பிரசாரங்களை ஒரு புரிதலோடு பார்த்து ஆதர‌வளிக்க வேண்டுகிறோம்.

  நம் கம்பெனிக்கு வந்திருந்தால் அருமையாக அறிவார்ந்து வடிவமைத்து கொடுப்போம் என்றால் கேட்க மாட்டென் என்கிறார்கள்!.

  குறைந்த சர்வீஸ் சார்ஜ்

  தரமான‌ மத (எதிர்) பிரச்சார சேவை

  வழங்கும் ஒரே நிறுவனம்

  சார்வாக அறிவார்ந்த [மத அறிவியல்] வடிவமைப்பு மையம்
  தமிழ்நாடு
  இந்தியா
  பூமி
  சூரிய குடும்பம்
  மில்க்கி வே
  பிரபஞ்சம் 1

  டொட்டய்ங்

  ReplyDelete
 4. கோவேறு கழுதைகளை ஒரு புடி பிடித்தீரே பாரும். மத குழுமத்தில் குசு குசு என புட்டத்திக்கும் கேட்காதவாறு ஆலோசனை நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

  நம்மாலான ஓசனை, கோவேறு கழுதை என்று சொல்லியதால் அல்லா 1400 வருடங்களுக்கு முன்னமே breeding, inter breeding, genetics, species, speciation பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று ஒரே தாக்காக தாக்கி தக்கியா எல்லாம் செய்யலாம் #மதகழுதைகள்

  ReplyDelete
 5. வாங்க சகோ உண்மை

  உங்களுக்கு மத் அறிவியலில் உள்ள ஈடுபாடு புரிகிற‌து.

  மதத்தில் அறிவியல் இல்லை என்றால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள்.
  ஆகவே அறிவியல் காட்டவேண்டிய கட்டாயம் உள்ளது.

  நம் கம்பெனிக்கு வந்து இருதால் குதிரை,கழுதை (இவற்றில் இருந்தே) கோவெறு கழுதை என எளிதில் அடைப்புக்குறிபோட்டு அழகிய முறையில் வடிவமைத்து கொடுத்து இருப்போம்.

  அப்போதும்

  சில நாத்திகர்கள் கோவேறு கழுதை= குதிரை(ஆண்)+கழுதை(பெண்)

  மட்டுமே

  குதிரை(பெண்)+கழுதை(ஆண்)=ஹின்னி

  என்று ஏன் குறிப்பிடவில்லை என‌ விதண்டாவாதம் பேசுவார்கள் அதற்கும் நாம் பதில் கொடுக்கிறோம்.

  ஆண் பெண் என்றுதானே அனைவரும் சொல்கிறோம் அதே போல்

  ஆண்தான் முதல ஆகவேதான் குதைரயை முதலிலும்,பெண்ண் ஆகிய கழுதை இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

  ஒருவேளை கழுதை முதல் இடத்தில் வந்து இருந்தால் ஹின்னி என்றே குறிப்பிடப்பட்டே இருக்கும்!

  என்று விள்க்கம் சொல்லி இருப்போம்

  "சார்வாகனைத் தவிர மத அறிவியலுக்கு எவருமில்லை"

  என்பதை உணர மறுக்கிரார்களே என்ப்துதான் நம் கவலை ,வருத்தம்!

  நன்றி

  ReplyDelete
 6. //குதிஅரை,கழுதை (இவற்றில் இருந்தே) கோவெறு கழுதை என//

  தலைவா, சூரியனுக்கே டார்ச் அடித்துவிட்டீர்கள், கடலுக்கே உப்பு போட்டுவிட்டீர்கள், ................ க்கு அறிவியல் விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்.

  //"சார்வாகனைத் தவிர மத அறிவியலுக்கு எவருமில்லை"//

  உண்மை சொல்கிறது, உண்மைதான்.

  ReplyDelete
 7. சகோ உண்மை

  நம் கம்பெனிக்கு வருபவர்களுக்கு மத அறிவியல் அறிவார்ந்த வடிவமைப்பு முறையில் செய்து தருகிறோம்.நாம் மத சார்பற்றவர் என்ப்தால் அனைத்து மதத்தினருக்கும்,எல்லா பிரிவுகளுக்கும் அவர்கள் விரும்ப்பும் வண்ணம் அறிவியல் கணிதம்,நிரூபணம் அனைத்தும் சரி விகிதத்தில் கல‌ந்து விள்க்கத்தோடு அளிக்கிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

  போலிகளை கண்டு ஏமாறாதீர்!

  நன்றி

  ReplyDelete
 8. ராமநாதபுரம் அருகே ஊரை விட்டு குடும்பம் ஒதுக்கி வைப்பு

  தீண்டாமைக் கொடுமை : இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற குருசாமி குடும்பம்.

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரியை சேர்ந்த குருசாமி என்பவரது குடும்பத்தை இரண்டு ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் எனவே சகோதரத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியுள்ளனர்.

  எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி, கிணறுகளில் குடிநீர் எடுக்கவும், ஊரணியில் குளிக்கவும் தடை விதித்தனர். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கிராம மக்கள் பேசினால், அபராதம் விதிக்கப்படுவதால், யாரும் பேசுவதில்லை. இது குறித்து தமிழக முதல்வர் உட்பட பலருக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை". இதனால், மனமுடைந்த மகன் புகழேந்திரன், மனித குலத்தின் இயற்கை மார்க்கத்திற்கு திரும்பினார்..
  -Anbu selvan

  ReplyDelete
 9. வாங்க சகோ சு.பி

  முதலில் அந்த குடும்பத்தினரை இப்படி துன்புறுத்திய மனித விரோதச் செயலுக்கு நம் கண்டனம்.அவர்கள் இஸ்லாமை ஏற்பது அவர்கள் விரும்பி செய்த செயல் எனில் அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறோம்.சாதிக் கொடுமையால இது போன்ற சமூக நிகழ்வுகவுள் நடப்பது இயல்புதான்.இவர்களுக்கு புதிய இடத்திலாவது சமத்துவம் கிடைக்க வாழ்த்துகிறோம்.

  ஆய்வு செய்து எந்த மதத்தையும் நிரூபிக்க முடியாது,சில சமூக நடைமுறைகளே மதம் மாற காரணம் என்பதே நம் கருத்து

  ஆய்வு செய்து மாறினோம் என்னும் அறிவாளிகளையே நாம் கேள்வி கேட்கிறோம்.

  நன்றி

  ReplyDelete
 10. வாங்க நண்பரே,

  நேரமின்மை காரணத்தினால், நண்பர் சுவனப்பிரியன் மூலம் பெற்ற lol இன்பமயத்தை பெறுக இவ்வையகம் என்று சொல்லமுடியவில்லை.

  இந்த பதிவில் வரும் முதலாவது கவுண்டமணி ஜோக் காணொளி அனைவரும் பார்த்ததுதான் அறிந்ததுதான். ஆனால் இரண்டாவது காணொளி நமக்கு புது படம் ரிலீஸ் போல உள்ளது (புது படத்தையும் விட நன்றாக உள்ளது) LOL's.

  பிறகு வருகிறேன்.

  ReplyDelete
 11. வாங்க நரேன்

  முதல் காணொளி ந்மது வழக்க்மான போஸ்ட் மார்ட்டம் செய்து சரியான‌ பொருள் அளிக்கும் காணொளி.இது நம் போன்ற காஃபிர்களுக்கு மகிழ்வைக் கொடுக்கும்.

  நாம் மத சார்பற்றவர் என்பதால் மதவாதிகளை மகிழ்விக்க நம‌து கம்ம்பெனியில் மத பிரச்சாரமும் ஒரு பகுதியாக சரியான முறையில் செய்ய பயிற்றுவிக்கவும் முடிவெடுத்துவிட்டோம்.

  இணையத்தில் இந்து,கிறித்தவ்த்திற்கு மத அறிவியல் விளக்கம் யாரும் கொடுப்பது இலை என்பதால் அவர்களுக்கும் இன்னும் பிற சின்ன பெரிய ஸ்வாமிகள் அனைவருக்கும் மத அறிவியல் சேவை குறைந்த கட்டணத்தில் வழங்க தயாராக் உள்ளோம் என தெரிவிக்கிறோம்

  திரு ஹாரூண் யாஹ்யா அவர்களுக்காக அவருடைய மார்க்கம் கூட தமிழில் எடுத்துரைப்போர் யாருமில்லையாதலால் அவர் பிரிவுக்கும் பிரச்சாரம் செய்கிறோம்,இபோது பூனை மதம்,ஹாரூண் யாஹ்யா அகியோர் நமது கம்பெனி சேவையை பெற்று வருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்!

  அனைத்து மதங்களுக்கும் பிரிவுகளுக்கும் மத சார்பற்று தரமான் மத அறிவியல் பிரச்சாரம் அறிவார்ந்த வடிவமைப்பு முறையில் செய்து தரப்படும்.

  நாத்திகர்களுக்கும் இதற்கு சமமான எதிர் பிரச்சாரமும் வழங்கப்படும் என்பதையும் அன்புடன் தெர்விக்கிறோம்!

  வருக மத அறிவியல் அருந்தி மகிழக!

  நம்து நிகழ்சிகளின் விள்ம்பரதாரர் இந்தியா மலேசியா இலங்கை,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏராள்மாய் விற்பது கோபால் பல்பொடி!!!

  டொட்டய்ங்

  ReplyDelete
 12. திரு.சு.ப்ரியன்,

  திருப்புல்லாணி மட்டும் உங்கள் மத ஞானக்கண்ணில் படுகிறது ஆனால் காயல்ப்பட்டினம் கறிக்கடை பாய்க்கு ஃபத்வா ,கொலை மிரட்டல்,குடும்பம் பிரிப்பு எல்லாம் கொடுத்த புண்ணிய செயலைப்பாராட்ட மனசு இல்லையே :-))

  ReplyDelete
 13. //சார்வாகன் said... அவர்கள் இஸ்லாமை ஏற்பது அவர்கள் விரும்பி செய்த செயல் எனில் அதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை ஆதரிக்கிறோம்//

  இது காபிர்களுக்கு மட்டுமே உள்ள பெருந்தன்மை தனி சிறப்பு.
  ஒரு இஸ்லாமியர் தனது மதத்தைவிட்டு வெளியேற நினைத்தால் அப்படியொரு நினைப்பு வந்ததிற்கே அடித்து உதைத்து மன்னிப்பு கேட்கவைக்கப்படுவார்.

  ReplyDelete
 14. வாங்க சகோ வவ்வால்

  ஹா ஹா ஹ இதுக்கு சகோ சு.பி விளக்கம் கொடுத்தால் தாங்க மாட்டோம்!.
  அதாகப்பட்டது இந்து மதத்தில் அந்த குடும்பத்தை சாதிரீதியாக கொடுமை படுத்தியதால் சம்த்துவம் மிக்க உலகின் ஒரே ஆதி மதம் இஸ்லாமுக்கு மாறினார்.

  ஆய்வு செய்து இஸ்லாமுக்கு மாறினார் என்று சொல்லாத வரை நமக்கு பிரச்சினை இல்லை!.பிடிக்கும் பூனை,யானை மதம் என்று எதுக்கு வேண்டுமானாலும் ஒருவர் மாறும் உரிமையை அதரிக்கிறோம்.

  துராஃப்சா இஸ்லாமை கொஞ்சம் சர்ச்சைக் குறிய முறையில் ஆய்வு செய்த ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார்.இஸ்லாமுக்கு வருவதற்கு மட்டுமே ஆய்வு செய்யலாமே தவிர வந்த பின் பிடிக்காவிட்டாலும் சும்மா இருக்கலாமே!.ஆகவே அழகிய முறையில் அவருக்கு நல்வழி காட்டப்பட்டது!

  ஆகவே ஆய்வு என்பதை சரியாக புரிந்து கொள்ளுங்கள்.மனித குலத்தின் ஒரே இறுதி மார்க்கத்தின் மீது அபாண்டமாய் குற்றம் சாட்டாதீர்கள்!

  இறுதி மார்க்கம் என்பதை புரிந்து சரியாக் ஆய்வு செய்யுங்கள்!

  நன்றி

  ReplyDelete
 15. சகோ குயிக்ஃபாக்ஸ்

  கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 16. நண்பர் பூணூல் சார்வா “கான்”, LOL!

  முந்தைய பதிவு ஒன்றில், உலக தோற்ற காலத்தை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது எனற அர்த்தத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு நீங்கள் விடையாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை என்று சொன்னதாக ஞாபகம்.

  அப்படியா என்று ஆராய்ந்து இஸ்லாத்திலும் உலக தோற்ற காலம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது என்று குறிப்புகள் எடுத்து ஒரு மாதிரி பதிவை போட்டு பிறகு வெளியிடலாம் என்று வைத்திருந்தேன்.

  ஆனால் அதிர்ச்சியாக அதே ஒத்த குறிப்புடன் இ.சா. லேட்டஸ்ட் பதிவு போட்டுள்ளார். ஜின், மலக்குமார்கள் உதவியுடன் என்னுடைய மாதிரி பதிவை plagiarism செய்துவிட்டார் என நினைக்கிறேன்.

  இ.சா வை பொய்யன் என்று நிரூபிக்க பெலமான ஆதாராம் தேவை. பெலஹீனமான ஆதாரம் தேவையில்லை. அதனால் இ.சா ஒரு பொய்யன் என்று நிரூபிக்க அந்த மறுமொழியை மீட்டு எடுத்து தந்தால் DARTH VADER யை உங்களுக்கு மேலும் அறிமுகப்படுத்துவேன்.

  ReplyDelete
 17. வாங்க நரேன்,

  நான் பூணூல் போடு இருக்கிறேனா என சட்டை பனியன் தாண்டி ஊடுருவி பார்க்கும் வல்லமை சிலருக்கு இருப்பதால்தான் உட்லை முற்று முழுதாக மூடும் கருப்பு ஆடை அணிய சொல்கிறர்ர்கள் என இப்போது புரிகிறது.

  ஆகவே ஆண்களும் உடலை கருப்பு ஆடை கொண்டு மூட வேண்டும்.என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை?????.

  சகோ ரெஜின் பதிவில் ஆண்களின் உள்ளாடை தெரியும் ஆடை அணிதல் பற்றிய பதிவுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என தெரியவில்லை!குழப்ப்மாக் உள்ளது.

  &&&&&

  நாம் உள்ளாடைகளுக்குள் எந்த கயிறும் அணிவது கிடையாது என்பதை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.இப்படித்தான் இப்போது விமான நிலையங்களில் சந்தேகத்துக்கு உரியவர்களை சோதிக்கிறர்கள்.

  அண்ணன் ஷாருக் கான் பற்றி அறியாத அற்ப அமெரிக்கர்கள் அவரையும் நூல் பார்ட்டியா என சோதித்து உள்ளதால் நாமும் அவ்வகை பரிசோதனைக்கு தயார் என கூறுகிறோம்.

  ஷாருக் கானுக்கு நடந்தது சார்வாக்(கா)னுக்கும் நடக்கட்டும்.
  &&&&&

  பிரப்ஞ்ச தோற்ற‌மா உலக் தோற்றமா?

  சகோ இ.சா பதிவும் நம் அண்ணன் ஹாரூண் யாஹ்யாவிடம் இருந்து சுட்டதுதான்.

  நாம் மத பிரசார&எதிர் பிரச்சார குழுக்களிடையே ஒரு ஒறுமை& புரிதல் ஏற்படுத்த முயல்வதை சில விஷம குழுக்கள் தவறாக விளங்குகின்றன.

  உங்களுக்கு உங்கள் கம்பெனி,எங்களுக்கு எங்கள் கம்பெனி ஆரோகியமான போட்டி நிலவட்டும் என்றால்.

  நாங்கள் மட்டுமே கம்பெனி என்றால் எப்படி?

  நீங்கள் மனம் தளராமல் டார்த் வைடருக்காக பிரச்சாரம் செய்யுங்கள். காலம் பதில் சொல்லும்!

  அப்ரக்க தப்ரா!

  டிஸ்கி

  யாராவது சீக்கிரம் பரிணாம் எதிர்ப்பு பதிவு எழுதுங்கள்.அது இல்லாமல் தூக்கம் வர மறுக்கிறது.யாரும் எழுதவில்லையெனில் அதையும் நானே எழுதி அதற்கு
  எதிர் பதிவும் இடுவோம் என அன்புடன் கூறுகிறோம்!

  ReplyDelete
 18. 1400 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் எழுதப்பட்டிருக்கிறது,ஆனால் அதை அப்பவே நிரூபிக்கத்தான் ஆள் இல்லை. அதைச் சொன்னவர்களால் எழுதித்தான் வைக்க முடிந்தது,ஏனெனில் அப்ப கேள்வி கேட்க ஆள் இல்லாததால் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான் இப்ப கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜாகிர் நாயக் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு தப்பு பண்ணிவிட்டார்கள், இதே விளக்கத்தை பெருவிடிப்புக் கொள்கையை கண்டுபிடித்து வெளியிடுவதற்கு முன்னாலேயே ஜாகிர் நாயக்கிடம் விஞ்ஞானிகள் கேட்டிருக்க வேண்டும்,அந்த சூழலில் அவரது விளக்கம் எப்படி இருக்கும் என்று யாராவது அறிந்தவர்கள் கூறலாம்.

  ReplyDelete
 19. உள் அலைகளும் புனித குரானும்

  பேராசிரியர். வில்லியம் ஹே

  வில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே.

  எனக்கு அராபிக் தெரியாது. நான் வாசித்ததெல்லாம் ஷேக் சிந்தானி அளித்த மொழிபெயர்ப்பினைக் கொண்டுதான். இஸ்லாமிய மத அறிஞர்களின் மதநம்பிக்கை குரான் ஒரு வார்த்தை கூட மாற்றப்படாதது என்பதாகும் என நான் அறிவேன். ஆனால் வார்த்தைகளின் பொருள் கட்டாயமாக மாறி வருகிறது என்பதனை நான் அறிவேன். உதாரணமாக ஷேக்ஷ்பியரின் நாடகங்கள் பிபிசியில் காட்டப்படும் போது நவீன ஆங்கில பொருள் தலைப்புகள் (subtitle) போடுவது போல. சில சமயங்களில் இந்த பொருள் படு வித்தியாசமாகக் கூட இருக்கும். அராபிய மொழி பொருள் கொள்ளுதலுக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். எனில், குரானில் சில பகுதிகளுக்கு நவீன விளக்கம் அளிக்க முற்படும் இந்த முயற்சி வீணான ஒரு விஷயமே ஆகும்.  வில்லியம் ஹே

  நவம்பர் 16 2006


  (ஜாகீர் நாயக் என்பவர் 'குரானும் நவீன அறிவியலும்' என ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் வில்லியம் ஹே எனும் புகழ் பெற்ற கடலியளாளரை தமது சாட்சியாக (அதாவது குரானுக்கு சாட்சியாக) அழைத்துள்ளார். வில்லியம் ஹேயை தொடர்பு கொண்டால் அவர் தரும் விளக்கம் வெகு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் எப்படி அறிவியலாளர்களிடம் சவூதி அரசு 'சாட்சியத்தை' வாங்கி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. பல அலுவல்களுக்கு நடுவே பொறுமையாகவும் விரிவாகவும் பதில் அளித்த பேரா. ஹேக்கு மனமார்ந்த நன்றி - அரவிந்தன் நீலகண்டன்


  http://newindian.activeboard.com/t49033334/topic-49033334/

  ReplyDelete