Monday, January 30, 2012

அறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம்:பகுதி 6 கேம்பிரியன் படிமங்கள் சிக்கலான வடிவமைப்பா?



வணக்கம் நண்பர்களே,
அறிவார்ந்த வடிவமைப்பின் முக்கிய கொள்கையான் எளிமைப் படுத்தமுடியாத வடிவமைப்பு பற்றி கற்றல்+விவாததித்தல் செய்துவருகிறோம்.எ.சி.வ ன் முக்கிய சான்றுகளுள் ஒன்றான கேம்பிரியன் படிமங்கள் பற்றி எழுதினால் மட்டுமே எ.சி.வ பற்றிய கற்றல் முற்றும் பெறும் என்பது உண்மை. கேம்பிரியன் என்பது புவியியல் கால அளவில் 542 ± 0.3 மில்லியன் ஆண்டுகள் முதல் 488.3 ± 1.7 மில்லியன் ஆண்டுகள் வரை உள்ள காலத்தை குறிக்கிறது .கன்டாவில் உள்ள உடஹ் ,சினாவில் பல் இடங்களில் கேம்பிரியன் படிமங்கள் கிடைத்தன்.இதில் கிடைத்த பல படிம உயிரினங்கள் கடின உடல்,முழு வளர்ச்சி பெற்றதாக் காணப்பட்டன.பெரும்பாலான் உயிரின தொகுதிகளின் முன்னோர்கள் உடல்கள் முழுமையாக கிடைத்த‌தும் குறிப்பிடத் தக்கது.கேம்பிரியனுக்கு முந்தைய கால படிமங்கள் மிக குறைவு.

கேம்பிரியன் படிமங்களை பற்றி இப்பொதுவான கருத்துகளை கூறலாம்


1. அனைத்து படிமங்களும் நீர்வாழ் உயிரினங்களாக் இருந்தன‌.


2.உயிரினங்ளின் பெரும்பாலான படிமங்கள் ஒப்பீட்டளவில் சிறியயதாக‌ இருந்தது.


3. பெரும்பாலான கேம்பிரியன் உயிரினங்கள் அழிந்து விட்டன‌

கேம்பிரியன் படிமங்கள் அ.வ கொள்கையாளர்களால் பரிணாமத்திற்கு எதிரான விமர்சனமாக் வைக்கப் படுகிறது.என்ன விமர்ச்னம் எனில் கேம்பிரியனுக்கு முந்தைய படிமங்கள் இல்லை என்பதால் கேம்பிரியன் படிமங்கள் முழு வளர்ச்சி+கடின உடல் உள்ளதாக் இருப்பதல் இவை வடிவமைக்கப் பட்டதாக இருக்க்லாம் என்பதே அவர்களது வாதம்.

இதனை பற்றி அடுத்த பதிவில் பதில் அளிப்போம்.முதலில் அ.வ கொள்கையாளர்களின் கேம்பிரியன் பற்றிய கருத்தாக்க திரைப்படம் ஒன்று பார்ப்போம்.டார்வினின் தர்ம சங்கடம் என்னும் திரைப்படம் முதலில் பார்ப்போம்.பிறகு அப்படத்தின் முக்கிய கருத்துகளுக்கு பதில் அளிப்போம்.

இந்த்ப் படம் பார்க்கும் நண்பர்கள் தங்கள் கேள்விகளை அளித்தால் அதற்கும் பதில்கள் முயற்சிப்போம். 


http://www.fossilmuseum.net/Paleobiology/CambrianFossils.htm

http://theophanes.hubpages.com/hub/The-Strangest-Cambrian-Creatures-Ever-Discovered


18 comments:

  1. ஒரு வேளை கேம்பிரியன் படிமங்கள் மனித அல்லது ஒரு குரங்கு போன்ற ஒரு படிமம் பெற்று இருந்தால் அது நிச்சயமாக முற்று முழுதாக பரிமாண கொள்கையை தவறாக்குகிறது எனலாம்.
    ஒரு எ.சி.வ கொள்கையின் முக்கியமான் வரையறுப்பை போலவே கேம்பிரியன் படிம‌ங்களை பயன் படுத்தும் பரிமாண கொள்கை எதிர்ப்பு குழுவினர் செயல்படுவது வியப்பாக இருக்காது.
    என்ன சொல்கிறார்கள்?.
    *********************
    1.திடீரென்று குறைந்த காலத்திற்குள்[திடீரென?!!!!!!!!!!] பல உயிரினங்கள் தோன்றியுள்ளன.

    2. இவை சிக்க்லான உடல் அமைப்பை அதாவது பெரும்பாலான உயிரின தொகுதிகளின் முன்னார்கள் உடல் அமைப்புகள் பெற்று உள்ள்ன.

    3.கேம்பிரியனுக்கு முந்தைய படிமங்களுக்கும் இவற்றுக்கும் தொடர்பு இல்லை அதாவது முந்தைய படிமங்களே மிக குறைவு,தொடர்பு இல்லை எனவே கூற்லாம்.

    எப்படி இந்த கேம்பிரியன் படிமங்கள் வந்தது என்பதுதான் கேள்வி?[இதுக்கு முன்னால் என்ன என்ற செந்திலின் கேள்விதான்!!!!!!!!!!]
    ***********************
    கேம்பிரியன் படிம முன்னோர்களில் இருந்து ஆந்த்ரோபோட் என்னும் உயிரினத்தின் பரிமாண வளர்ச்சி வரலாறு பற்றியும் மௌனம் சாதிப்பார்கள்.

    ReplyDelete
  2. அ.வ கொள்கையாளர்களின் திறமையே திறமை.
    எப்படி எனில் கேம்பிரியன் படிமங்களின் தோற்றம் ,பரிமாண வளர்ச்சியாக ஸ்டீஃபன் குட்& நைலெல்ரிட்ஜின் கொள்கையாக்கமான punctuated equilibrium விள்க்குகிறது. .இது பரிணாம வளர்ச்சி இயற்கை சூழலை பொறுத்து சில சம்யம் வேகமாகவும்,பல சமயம் மெதுவாகவும் உள்ளது என கூறுகிற‌துஇக்கொள்கை கேம்பிரியன் படிம்ங்களை விள்க்கும் என்பதை அ.வ கொள்கையாளர்கள் சொல்ல மாட்டார்கள்.
    அதற்கு பதில். இந்த punctuated equilibrium கொள்கை டார்வினின் gradual change கொள்கையை (வேறுபடுகிறது)மறுக்கிறது,என்றே சொல்வார்கள்.பரிணாம் ஆய்வாளர்களிடையே பரிணாம மாற்ற வேகம் பற்றிய சில விவரங்கள் ஆய்வில் உள்ள்ன.இதனை பயன்படுத்தி குழப்பும் வேலைதான் இந்த திடீரென வந்த கேம்பிரியன் படிம குழப்பம்.

    http://debunkeymonkey.blogspot.com/2009/08/debunking-cambrian-explosion-myths.html

    ReplyDelete
  3. Solution to Darwin's dilemma: Discovery of the missing Precambrian record of life
    http://www.pnas.org/content/97/13/6947.full
    Measured by virtually any criterion one might propose (Fig. 5), studies of Precambrian life have burst forth since the mid-1960s to culminate in recent years in discovery of the oldest fossils known, petrified cellular microbes nearly 3,500 million years old, more than three-quarters the age of the Earth (36). Precambrian paleobiology is thriving—the vast majority of all scientists who have ever investigated the early fossil record are alive and working today; new discoveries are being made at an ever quickening clip—progress set in motion by the few bold scientists who blazed this trail in the 1950s and 1960s, just as their course was charted by the Dawsons, Walcotts, and Sewards, the pioneering pathfinders of the field. And the collective legacy of all who have played a role dates to Darwin and the dilemma of the missing Precambrian fossil record he first posed. After more than a century of trial and error, of search and final discovery, those of us who wonder about life's early history can be thankful that what was once “inexplicable” to Darwin is no longer so to us.

    ReplyDelete
  4. //கேம்பிரியன் படிமங்கள் அ.வ கொள்கையாளர்களால் பரிணாமத்திற்கு எதிரான விமர்சனமாக் வைக்கப் படுகிறது.என்ன விமர்ச்னம் எனில் கேம்பிரியனுக்கு முந்தைய படிமங்கள் இல்லை என்பதால் கேம்பிரியன் படிமங்கள் முழு வளர்ச்சி+கடின உடல் உள்ளதாக் இருப்பதல் இவை வடிவமைக்கப் பட்டதாக இருக்க்லாம் என்பதே அவர்களது வாதம்.//

    எனக்கு பரிணாமக் கொள்கை மீது பெரிய பற்றுதல் இல்லை என்றாலும் அவற்றின் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, முற்றிலும் நிருபனம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதே என் கருத்து.

    ஆனால் பரிணாமக் கொள்கையின் மூலம் பெருவெடிப்பு தான், பெருவெடிப்பில் இருந்து விரிந்த பிரபஞ்சத்தில் இருந்து தோன்றியவை கேலக்ஸிகள் மற்றும் சூரியக் குடும்பம் மற்றும் அதிலிருக்கும் நம் பூமி, இதிலிருந்து உயிர்கள் விபத்தாக உருவாகி வளர்ந்து பல மில்லியன் ஆண்டுகளில் பரிணாமம் பெற்றது என்பது தான் பரிணாமவாதம்.

    இங்கே பெருவெடிப்பு கிட்டதட்ட நிருபனம் செய்யும் அளவுக்கு எட்டியதால் மதவாதிகளால் பெருவெடிப்பை மறுக்க வழியில்லாமல் பாருங்கள் எங்கள் மதத்தில் வானத்தையும் பூமியையும் பிரித்தேன் என்று கடவுளால் எழுதப்பட்டது, ஆக பெருவெடிப்பு என்பது கடவுளின் செயல் என்று கூறுவார்கள், எதோ ஒரு ஒவ்வாமைக்காரணாமாக பெருவெடிப்பு கடவுளின் வாயுப்பிரிப்பாக தோன்றியது போல் சொல்லுவார்கள். ஆனால் அதன் தொடர்சியாகக் கூறப்படும் பரிணாமம் மட்டும் தவறாம், ஏனெனில் பரிணாமம் ஆதாம் - ஏவாள் கதைகளை நிராகரிக்கிறதே.

    ReplyDelete
  5. வணக்கம் சகோ கோவி
    /முற்றிலும் நிருபனம் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்பதே என் கருத்து./
    பரிணாம் கொள்கை முற்றிலும் நிரூபிக்கப் பட்டதா? என்ற கேள்வியின் விடை ஒரு அறிவியலாளருக்கும் ,அல்லாத மனிதனுக்கும் வேறுபடும்.அறிவியலாளரை கேட்டால் கிடைத்த படும ,மரபணு சான்றுகள் மட்டும் போதுமானது என்பார்.
    ஒரு சாதாரண மனிதனுக்கு இயற்கைத் தேர்வு+சீரற்ற சிறு மாஅற்றங்கள் எப்படி இவிவளவு சிக்க்லான,பல தரப் பட்ட உயிரினங்களை உருவாக்க முடியும் என்பது குழப்பமாக் உல்ளது.இந்த இயற்கைத் தேர்வு என்பதன் செய்லாக்கம் புரிதல் கொஞ்சம் கடினமான் செயல்.
    இதனை பயன்படுத்தியே மதவாதிகள் இன்னும் குழப்புவதையே தொழிலாக கொண்டுள்ள்னர்.வரும் காலத்தில் பரிணாமம் சாதரண மனிதர்களாலும் அறிந்து புரியப் படும் என்பதில் ஐயமில்லை.
    /இங்கே பெருவெடிப்பு கிட்டதட்ட நிருபனம் செய்யும் அளவுக்கு எட்டியதால் மதவாதிகளால் பெருவெடிப்பை மறுக்க வழியில்லாமல் பாருங்கள் எங்கள் மதத்தில் வானத்தையும் பூமியையும் பிரித்தேன் என்று கடவுளால் எழுதப்பட்டது, ஆக பெருவெடிப்பு என்பது கடவுளின் செயல் என்று கூறுவார்கள்/
    மிகச் சரியான் கருத்து
    பெருவெடிப்பு என்பது பரிணாம் வளர்ச்சியையும் சேர்த்தால் மட்டுமே முற்றுப் பெறும்.ஒருவேளை பரிணாம முற்று முழுதாக் நிரூபிக்கப் படும் போது மதவாதிகள் வழி நடத்தப் பட்ட பரிமாணம் என்ற கொள்கையை பயன் படுத்த தயாராகவே உள்ள்னர்.

    அதாவது இந்த இயற்கைத் தேர்வும் இயற்கைக்கு மேம்பட்ட சக்தியால் படைக்கப் பட்டு வழி நடத்தப் படுகிறது என்பதுதான்.இது இன்னும் 50_100 ஆண்டுகளில் இக்கொள்கையாக்கமே மதவாதிகளால் முன்னெடுக்கப் படும் என்பது என் கணிப்பு.
    வானத்தையும் பூமியையும் படைத்தான் என்பதை கூறுபவர்கள்,அனைத்தையும் நீரில் இருந்தே படைத்தான் என்னும் அடுத்த பகுதியை கூற மாட்டார்கள் என் எனில் இது பிறகு வழி நடத்தப் பட்ட கொள்கையாக்கத்திற்கு மட்டும்!!!!!!!!!!.

    21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    How is it!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. நண்பர் கோவி
    ஆதம் ஏவாள் கதை நண்பர் வவ்வால் சிறப்பாக் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்கிறார்.அனைவரும் படியுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  7. நண்பர்கள் இச்சுட்டியில் உள்ள பதிவை படிக்க்லாம்.
    ***************
    Alas, Precambrian Microfossils Are Not the Solution to Darwin's Dilemma
    http://www.evolutionnews.org/2011/12/precambrian_mic054611.html
    **********************
    இது தமிழில் எங்கேயோ படித்தது போல் இருந்தால் என் குற்றமல்ல.

    அதாகப்பட்டது கேம்பிரியனுக்கு முந்தைய கால்கட்டமான் இடியக்கரன் படிமங்கள் பல செல் உயிர்களாக் உள்ளது என ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது.
    இதுதான் அந்த உண்மையான் ஆய்வுக் கட்டுரை.
    *********************
    Therese Huldtgren, John A. Cunningham, Chongyu Yin, Marco Stampanoni, Federica Marone, Philip C. J. Donoghue, Stefan Bengtson. Fossilized Nuclei and Germination Structures Identify Ediacaran “Animal Embryos” as Encysting Protists. Science, 23 December 2011: Vol. 334 no. 6063 pp. 1696-1699 DOI:10.1126/science.1209537
    http://www.sciencemag.org/content/334/6063/1696
    ****************
    அது நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை.கிடைட்ததும் முழு மொழியாக்கம் வெளியிடுவோம். இது இடியக்காரன் படிமங்கள் பற்றிய ஆய்வு விவரங்களை ஆவணப் படுத்தி எழுதப்பட்ட கட்டுரை.
    *******************
    PERSPECTIVE PALEONTOLOGY
    Terminal Developments in Ediacaran Embryology
    N. J. Butterfield

    http://www.sciencemag.org/content/334/6063/1655.summary
    **************
    இது அக்கட்டுரைகள் இரண்டையும் தொகுத்து வந்த செய்தி.
    http://www.sciencedaily.com/releases/2011/12/111222142444.htm

    இதன் படி கேம்பிரியனுக்கு முந்தைய கால்த்து படிமங்களில் கிடைத்தவை பல செல் உயிர்கள் மட்டுமே.இந்த பல் செல் உயிர்களுக்கும் கேம்பிரியன் உயிரினங்களுக்கும் சுமார் 50 மில்லியன் கால் இடைவெளி உள்ளது.
    அந்த ஆய்வுக் கட்டுரை முழுதாக கிடைத்ததும் இது குறித்த ஒரு கட்டுரை வெளியிடுவோம்.

    ReplyDelete
  8. //வரும் காலத்தில் பரிணாமம் சாதரண மனிதர்களாலும் அறிந்து புரியப் படும் என்பதில் ஐயமில்லை.//
    அதில் சந்தேகமேயில்லை. அதனால் தான் மதவாதிகளுக்கு தங்கள் தொழில் போய்விடும் என்று கவலை.நீங்கள் தொடருங்கள்.
    இன்று The Mystery Of The Cambrian Fossil Record 40நிமிடம் வரை பார்த்தேன். மிகுதி நாளை அல்லது வரும் நாட்களில்.

    ReplyDelete
  9. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்
    கேம்பிரியனில் இருந்து இபோது வரை படிம வரலாறு தெளிவாகவே உள்ளதை மதவாதிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். கேம்பிரியனுக்கு முன்னால் எப்படி என்பார்கள்.இபோது அதற்கு முந்தைய இடியக்கரன் கால் கட்டத்தில் கிடைத்த படிமங்கள் பல செல் உயிர்கள் மட்டுமே.ஆகவே இதுக்கு(கேம்பிரியன் படிமங்கள்) எப்படி அது[இடியக்கரன்] முன்னோர் என்கிறர்கள்.

    சரி கேம்பிரியன் உயிர்களில் இருந்து இபோதுள்ள அனைத்து உயிர்களும் மனிதன் உட்பட தோன்றி இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்வார்களா? மாட்டார்கள்

    அறிவியல் முன் வைக்கும் இடைப் படிமங்களையும் ஏற்க மாட்டார்கள்.பிறகு எப்படி இடைப் படிமங்கள் இருக்க வேண்டும் என்றாலும் பதில் அளிக்க மாட்டார்கள்.

    நான் அவன் இல்லை என்பது போல் இது அது இல்லை என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி புலம்புவார்கள்!!!!!!!!!!.

    [கேம்பிரியன்& இடியக்கரன்] இந்த இரு கால கட்டத்திற்கும் இடையில் 50 மில்லியன் ஆண்டு காலம் உள்ளது. இக்காலகட்டத்தில் என்ன நடந்து இருக்கும் என்பதை குறித்த பல கட்டுரைகள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  10. பெருவெடிப்பு கொள்கைக்கு எவ்வளவு ஆதாரமுண்டோ அவ்வளவு ஆதாரங்கள் பரிணமக் கொள்கைக்கும் உண்டு. DNA sequencing கண்டுபிடிப்பிற்கு பிறகு உயிரினங்கள் பரிணாமபடிதான் தோன்றிது, ஒரே நாளில் படைக்கபடவில்லை என ஐயம் திரிபற தெரிந்துவிட்டது, 2009-ல் PEW எடுத்த கருத்து கணிப்பில் 97% விஞ்ஞானிகள் பரிணாமத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். மீதி 3% அவர்கள் உயிரியல் அல்லாத துறையில் பணிபுரிபவராகவோ அல்லது மதவாதிகளாகவோ இருப்பர் (அல்லது அவர் ஜெட்டா பல்கலைகழத்தில் பணிபுரிபவராயிருப்பார்! ) என்பது என் ஊகம் (.இப்போது ஒரு மருத்துவ அல்லது உயிரியல் விஞ்ஞானி பரிணாமத்தை கேள்வி கேட்டால் அவர் கிறுக்கனாகத்தான் மதிக்கபடுவார். தற்போதைய விஞ்ஞான உலகில் பரிணாமம் உண்மையா இல்லையா என விவாதிப்பது விஞ்ஞான உலகை பொறுத்தவரை சூரிய மையமா இல்லை பூமி மையமா என்னும் பழய கஞ்சியை ஆத்துவதிற்கு சமம்!

    இடியக்கரன் படிமங்கள் குறித்து இணைத்தில் பல பேர் பலவிதமாக கதைவிட்டபடி இருக்கிறார்கள். உலகின் மிக முக்கிய ஆராய்ச்சிகளை (நோபல் பரிசு பெற்றவை உட்பட) கட்டுரையாக வெளியிடும் மிக முக்கிய சஞ்சிகைகளுள் ஒன்று சைன்ஸ். அதில் பரிணாமத்திற்கு எதிராக கட்டுரை வருவது நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒன்று, சைன்ஸ் வெளியிடும் ஆராய்ச்சி கட்டுரைகளை பற்றி அத்துறையாளர் மட்டுமின்றி அனைவரும் புரிந்து கொள்ள ஒரு விளக்ககட்டுரையும் வெளிவரும், அப்படி வந்த வி.க யின் சுருக்கத்தை பிடித்துதான் இப்படி எல்லோரும் தொங்குகிறார்கள் (கட்டுரையின் சுருக்கம் மட்டும் சைன்ஸ் இணையதளத்தில் இலவசம்). ஆக அது ஆராய்ச்சிகட்டுரை அல்ல.

    சுருக்கமாக, முன்பு சைனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சில படிமங்கள் இடியக்கரன் காலத்திய விலங்குகளின் கருக்கள் என கருதப்பட்டது. அவை இப்போது அந்த விலங்குகளின் மூதாதையரான அமீபா போன்ற உயிரினம் என கண்டுபிடித்துள்ளார்கள். அவ்வளவுதான். அந்த விலங்குகள் தொடர் பரிணாமத்தில் அக்கால நிகழ்வுகளுக்கு ஆதாரமாக கருதப்பட்டது. இப்போது அந்த ஆதாரமில்லை. இது ஒரு போதும் அந்த பரிணாமத்தை பொய்யாக்காது. அந்த விளக்க கட்டுரையின் கடைசி பேரா இப்படி சொல்கிறது 'Doushantuo fossils eventually end up, it will clearly not be within “crown-group” Metazoa. Does this then mean there were no early Ediacaran animals? Not at all. ' (அதாவது இதுவரை நமக்கு படிமமாக அகப்படவில்லை, அவ்வளவுதான்)

    அக்காலத்தில் விலங்குகள் மட்டுமல்லாது மனிதர் வாழ்ந்த ஆதாரமுமில்லை.. ஒற்றை செல் உயிரிக்கான ஆதாரம் மட்டுமே உண்டு. அப்ப கடவுள் ஒரு செல் உயிரனத்தை படைத்துவிட்டு மனிதனை படைக்க மறுபடி மில்லியன்கணக்கான ஆண்டுக்கு பிறகு வருவோம் என போய்விட்டாரா? அல்லது இந்த ஒரு செல்லிகள் படிப்படியாக இணைந்து விலங்குகள் போன்ற பல செல் உயிரினமாக பரிணாமபடி மாறினவா? விஞ்ஞானம் இரண்டாவதை ஆதரிக்கிறது.

    ReplyDelete
  11. வாங்க நண்பர் நந்த வனத்தான்,
    அருமையாக கூறினீர்கள் இடியக்கரன் படிமங்கள் பற்றி.
    பரிணாமம் புரிதல் பற்றி சில பகிர்தல்

    பரிண்மத்தின் முக்கிய செயலாக்கங்களான் இயற்கைத் தேர்வு என்பதை அதன் உண்மையான முழு பரிமாணத்தில் புரிவதது ஒரு சாமான்யனுக்கு கடினமாக் உள்ளது.அதாவது இயற்கைத் தேர்வின் பல் செயல்கள் அற்புத வடிவமைப்பு போல் இருப்பதும் சில குழப்பங்களை ஏற்படுத்தும்.
    இன்னும் பரிணாம் கொள்கை எளிமைப்ப்டுத்தப்படும்,ஆய்வு ரீதியாக டி .என் ஏ பிரதி எடுக்கப்படும் போது சீரற்ற சிறு மாற்றங்கள் ஏற்படும் என்பதும் பள்ளி கல்லூரிகளில் கற்பிக்கப்படும்.பல் மாற்றங்களில் சில் மாற்றங்கள் சிறந்த டி.என் ஏ க்களை உருவாக்கும் என்பதும் எளிதாக் விள்ங்கும் காலம் வரும்.
    டி.என் ஏ இருக்கும் போது படிமங்கள் என்பது கூடுதல் பலம்தானே தவிர இன்றியமையாதது அல்ல.
    இடியக்கரன் படிவம் தற்கு முன்னால் என்றே எதிர்ப்பாளர்கள் கூவிக் கொண்டே இருக்கட்டும்.உண்மையில் அவர்களின் கேள்விகளே பல தேடல்களையு அதற்கான் பதில்கலையும் அளித்தன.ஆகவே அவர்களுக்கு நன்றிதான் கூற வேண்டும்.

    ReplyDelete
  12. உங்களை மாதிரி சிலரும் இந்த வலையுலகத்தை சுத்தம் செய்து அறிவாளிகளாக மாத்தனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியுறீங்க. இது ஞாயமா?

    ReplyDelete
  13. வண்க்கம் ,வாங்க சகோ ஜோதிஜி நலமா
    நான் எங்கே அப்ப்டி கூறினேன்? சமூக சேவைகள் செய்யும் ஆளா நான்!!!!!!!!!!!!!.
    அபாண்டமான‌ பழி!!!!!!!!!!!.
    எதையோ பிடித்ததை கற்பதை எழுதுகிறோம்.சிலர் அதை இரசிக்கின்றார் சிலர் விமர்சிக்கிறார்.எப்படி இருந்தாலும் நம் பதிவை படிக்கிறர்களே என்ற நிம்மதி மட்டுமே நமக்கு!!!!!!!!!!!!!!.
    நன்றி

    ReplyDelete
  14. என்ன சார் பத்து நாள் லீவுனிங்க, லீவ் லெட்டர் எல்லாம் குடுத்தீங்க, அப்பொறம் எதுக்கு ஸ்கூலுக்கு எல்லாம் வந்து பதிவு போட்டீங்க??? டீச்சர்ஸ் எல்லாம் என்னப் பண்ணுவாங்க பாவம்.

    நண்பரே, இதில் முக்கியமான் விஷயம், இந்த படிமங்கள்(fossils) பற்றித்தான். இது எப்படி உருவாகின்றது, எங்கு கிடைக்கும் மற்றும் இன்னும் பல செய்திகள் பொதுவில் சென்றடையவில்லை. ஏதோ கிடைக்கிற இடத்திலெல்லாம் தோண்டினால் கிடைக்கும் சமாச்சாரம் என்று நினைத்து அந்த படிமம் எங்கே இந்த படிமம் எங்கே என்று கேட்கிறார்கள். அதை பற்றி எளிமையாக விளக்கினால் பாதி வேலை முடிந்துவிடும்.

    கேம்பரியன் பற்றி முன்னரே அறிந்திருந்தாலும், இந்த பதிவின் மூலம் இன்னும் நுணுக்கமாக அறிய படிக்க உதவியது. தொடருங்கள்..

    இந்த பதிவிற்கு பதிலடியாக usual suspectsல் நண்பர் ஒருவர் பதிவிட்டு படித்ததாக ஞாபகம். அந்த fossil யை தேடி கண்டுபிடித்து தந்தால் நல்லது.

    ReplyDelete
  15. //1. அனைத்து படிமங்களும் நீர்வாழ் உயிரினங்களாக இருந்தன‌.//

    //1.திடீரென்று குறைந்த காலத்திற்குள்[திடீரென?!!!!!!!!!!] பல உயிரினங்கள் தோன்றியுள்ளன.//

    மழைகாலத்தில்வளைக்கும் முந்தைய மீன் வடிவம்.இவை தேங்கிய நீரில் பிறப்பவை.முட்டை எப்படி வருகிறதென்பதே தெரியாது.அதே போல் ஈ,கொசு போன்றவை.

    //2.உயிரினங்களின் பெரும்பாலான படிமங்கள் ஒப்பீட்டளவில் சிறியயதாக‌ இருந்தது.//

    முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை,பாலூட்டிகள் இவற்றில் சேர்த்தியா என விளக்குங்கள்.

    //3. பெரும்பாலான கேம்பிரியன் உயிரினங்கள் அழிந்து விட்டன‌//

    பெருவெடிப்பும் நோவா ஆர்க் என்ற விவிலியம் இங்கே எட்டிப்பார்க்கிற மாதிரி தெரிகிறதே!

    நீங்க உட்கார்ந்து யோசிக்கிறவங்களுக்கு ஐடியா சொல்லுங்க.நான் நுனிப்புல் வேகத்துக்கு யோசிக்கிறேன்.

    ReplyDelete
  16. //அறிவியல் முன் வைக்கும் இடைப் படிமங்களையும் ஏற்க மாட்டார்கள்.பிறகு எப்படி இடைப் படிமங்கள் இருக்க வேண்டும் என்றாலும் பதில் அளிக்க மாட்டார்கள்.//

    இதற்கான முக்கிய காரணம் நம்பிக்கையின் அடிப்படையில் என்பதும்,ஆய்வுகளுக்குள் நுழைந்தால் நம்பிக்கை அற்றவன் என்ற நிலை உருவாகி விடுமென்ற பயமும் கூட இருக்கலாம்.

    மேலும் காலம் காலமாக வரும் நம்பிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.

    கலிலியோ,நியுட்டன் கால ஆய்வுகளுக்குப் பின் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் பெரும் அதிர்வையே கொண்டு வந்திருக்கிறது.இருந்தாலும் விஞ்ஞானத்துடன் மெய்ஞானமும் உடனே பயணித்து வந்துள்ளது.இப்போதைய புதிய அறிவியல் இன்னும் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  17. வாங்க நண்பர் நரேன்,
    "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை அனுமதிப்பதில்லை" நான் என்ன செய்வது? அ.வ பற்றி இன்னும் கொஞ்சம் உருப்படியாக எழுதலாம் என்று பார்த்தால்,கருத்துகளுக்கு மறுப்பு,நகைச்சுவை விள்க்கம் என்றே நேரம் போகிறது.
    இந்த படிமங்கள் சேகரிப்பு பற்றி தகவல்கள் சீக்கிரம் பதிவோம்.நன்றி

    ReplyDelete
  18. நண்பர் இராஜராஜன்
    இந்த கேம்பிரியன் உயிரினக்கள் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய‌ படிமங்கள்
    /முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை,பாலூட்டிகள் இவற்றில் சேர்த்தியா என விளக்குங்கள்.//
    இல்லை.ஆனல் இவற்றின் முன்னோர்களான் ஆன்ந்ரோபோட் மற்றும் புழு போன்றவை அதிக த்கவல்கள் இங்கே கிடைக்கும்.கேம்பிரியன் படிமங்கள் மீதான் ஆய்வு என்பது கடல்.
    http://ircamera.as.arizona.edu/NatSci102/NatSci102/text/cambrian.htm

    நம்பிக்கையின் அடிப்படையில் அணுகுவதில் தவறில்லை ஆனால் சான்றுகளே முடிவுகளை தீர்மானிக்க வேண்டும்.கருத்து சான்றுகளை மெய்ப்பிக்க வேண்டுமே தவிர,கருத்திற்காக் [போலி] சான்றுகள் உருவாக்க முயல்தல் தவறு
    நன்றி

    ReplyDelete