Monday, February 11, 2013

கூட்டம் கூடியே வழிபாடு செய்ய வேண்டுமா?



வணக்கம் நண்பர்களே,

மனிதனின் விடை தெரியாக் கேள்விகளான மரணத்திற்கு பின் வாழ்வு என்னும் தேடலில் முளைத்தன‌ மதம்,கடவுள் என்னும் நம்பிக்கைகள் சார் கருதுகோள் என அறிந்த விடயமே. பரம்பரையாக நடமுறையில் உள்ளதால் இந்த நம்பிக்கைகள் மிக சக்தி வாய்ந்து அரசுகளையும் ஆட்டிப் படைக்கும் விடயமாக இருக்கும் விடயமும் வரலாறு சொல்லும் கதை!!

அதிலும் மதம் சார் புனித இடங்களுக்கு குறிப்பிட்ட நாள்களில் சென்று வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்னும் நம்பிக்கையால் பல மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதும், அங்கு சில நிகழும் விபத்துகளில் பலர் பலியாவதும் அடிக்கடி செய்தியாவதும் உண்மையே.

இந்தியா உத்தரப் பிரதேச மாநில அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளா பண்டிகையில் நேற்று[11/2/2013] ஏற்பட்ட நெரிசலில் 20+ மனிதர்கள் பலி என்னும் செய்தி அறிந்து வருந்துகிறோம்.

சுமார் 3(4?) கோடி மக்கள் அங்கு கலந்து கொண்டதாகவும் அறியும் போது, இவ்வளவு கூட்டம் சார் பாதுகாப்பு,சுகாதாரம் போன்றவை செய்து தருதல் ஒரு இமாலய பணியே.விபத்து நடக்கும் சாத்தியம் மிக அதிகம்!!!

இறை நம்பிக்கை இருப்போர் ஏன் இப்படி சடங்கு சம்பிரதாயங்களின் மேல் நம்பிக்கை கொண்டு தேவையில்லாமல் இப்படி விபத்துகளில் சிக்க வேண்டும்?

சகோதர சகோதரிகளே தயவு செய்து மிகப் பெரிய கூட்டம் கூடி செய்யும் வழிபாடுகளை  தவிர்க்கலாமே!!


உயிர் இழந்த சகோக்களுக்கு நம் அஞ்சலி!!! 

நன்றி!!

25 comments:

  1. சார்வாகன், உங்க அஞ்சலி எல்லாம் தேவையில்லை...அவர்கள் மோட்சத்திற்கு தானே போய் இருக்கிறார்கள்...!

    எவன் செத்தாலும், எல்லாவற்றிக்கும் ஒரு வெண்டைக்கா விளக்கம் கொடுத்து காசு பன்னுவானுங்க...

    அந்த அண்டப் புளுகை நம்ம சூததிர்ணகள் அதை நம்புவார்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,
      நம்மைப் பொறுத்த வரை மனித உயிர் என்பது ஈடு செய்ய முடியாத விடயம்.அதனை கடவுளுக்காகவோ, சடங்குகளுக்காகவோ சென்று விபத்தில் இழப்பது தேவையற்றது.

      இறந்தவர்கள் அப்பாவிகள் என்பதால் மட்டுமே அஞ்சலி செலுத்துகிறோம்!!!

      நன்றி!!!

      Delete
  2. ஒரு ஆடு எந்தப் பக்கம் செல்கிறதோ அதன் பின் மற்ற ஆடுகளும் மந்தைகளாகச் செல்லும் என்பார்கள். அதுபோல்தான் இந்த ஆட்டு ம(ந்)தவாதிகளும். கேட்டால் புண்ணியம்,பாவங்கள் தீரும் என்பான்,பாவிகள் ஒன்று கூடும் இடமா புண்ணியத்தளம்?/

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      மதவாதிகள் இப்போது இறந்தால் சொர்க்கம் போகலாம் என்பான். விளக்கம் கொடுப்பதில் மன்னர்கள் ஆயிற்றே!!

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  3. கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கும்வரை இதுபோல மூட நம்பிக்கைகள் தொடரும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ விஜய்,

      கடவுள் இல்லை என ஏற்கும் மனநிலை அனைவருக்கும் வராது. இதற்கு பல உளவியல் காரணம் உண்டு.குறைந்த பட்சம் கடவுளின் பெயரால் இப்படி விபத்தில் சிக்காமல் இருக்கலாமே என்வே வேண்டுகிறோம்.

      விடை தெரியாக் கேள்விகளுக்கு வித்தகனே காரணம் என சொல்லி, சடங்கு சம்பிரதாயம் மூலம் இம்மை,மறுமையில் சுகவாழ்வு என்னும் மோசடிகளினால் உயிர்கள் பலியாவதே மிச்சம்!!

      நன்றி!!

      Delete
  4. பஸ் கவிழ்ந்து கூட 30 பேர் சாகறது இங்கே சாதரணம். வீடு திரும்பும் அவசரமும், ஒழுங்கின்மையும் தான் காரணம். அதைக் கண்டியுங்கள். வரவேற்கிறேன்.

    3 கோடிபேரின் மனநிறைவுக்காக செயலாற்றக் குவிந்த இடம் அலகாபாத்.

    அங்கே போனவங்க எல்லாம் நம்மைப் போல் உயிரைப் பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் சிவா,

      //அங்கே போனவங்க எல்லாம் நம்மைப் போல் உயிரைப் பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல :)//

      உயிருக்காக கவலைப் பட வேண்டும் சகோ!!.

      போனால் உயிர் போகும் எந்த் தெரிந்தால் யாரும் போக மாட்டார்கள். அதிக மக்கள் கூடும் இடங்களில் விபத்து, தீவிரவாதி தாக்குதல், தொற்று நோய் போன்றவை பரவும் அபாயம் அதிகம்.

      நாம் ஊதும் சங்கை ஊதுகிறோம். அதற்கு மேல் செல்பவர்களின் விருப்பம்!!!

      நன்றி!!

      Delete
  5. சிறுவயதில் ஒரு திருவிழாவுக்கு போயிருந்தேன். அங்கு தீடீரென போலிஸ் தடியடி நடத்த ஆரம்பிக்க மக்கள் சிதறி ஒடினார்கள். கீழே விழுபவர்களை மிதித்தபடி பலர் ஒட, போலிஸ் அதுபற்றி சிந்திக்காமல் கருமமே கண்ணாக லத்தி சார்ஜ் செய்வதை கண்ட பின் கூட்டம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.

    இந்தியாவில் மக்கள்தொகை அதிமாகி உள்ளது. ஆனால் நம்மிடம் கூட்டங்களை ஒழுங்கு செய்தல் அல்லது இடர் மேலாண்மை குறித்து எந்தவித எச்சரிக்கையோ அல்லது அறிவும் இல்லை. அரசு இயந்திரம் பொறுப்பற்றது என்பதினால் மக்கள் எச்சரிக்கையுடம் இம்மாதிரியான இடங்களை தவிர்ப்பது நல்லது. ஆனால் பொதுமக்களும் எச்சரிக்கை உணர்வு அற்றவர்கள் என்பது வருந்ததக்கது.

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      நாம் மனிதர்களை மனிதர்களாகவே பார்க்கிறோம். இயற்கையோடும், சக் மனிதர்களோடு ஏற்படும் பொருளாதார சமூக போட்டியில், மனம் கலங்கி ஆன்மீகம் சார்ந்து மன பாதுகாப்பு தேடும் அப்பாவிகளை அன்புடனே நோக்குகிறோம்.

      இந்த தேடலை வியாபாரம், அரசியல் ஆக்கும் மத்வாதிகளை வெறுக்கிறோம்.
      இப்படி கதை விட்டு கூட்ட்ம் கூட்டுவதும், அதில் பலர் பலியாவதும் எபோது நிற்குமோ!!!

      மனதில் நினைத்தால் பக்தி பத்தாமல் போய்விடுமா?

      “நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பஞ் சாத்துகிறீர்
      சுத்தி வந்து முணு முணுவென்று சொல்லு மந்திரமேதடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
      சுட்ட சட்டி சட்டுவங்கறிச் சுவை அறியுமோ?”

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  6. அவுங்களை பொருத்த மட்டில் "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு" கேட்குறாங்க. என்னத்த செய்ய!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ சதுக்கபூதம்,

      இறைவனை தேடி அலையும் மனிதர்களை நினைத்தால் பாவமாகவே இருக்கிறது.
      இதற்கு வெளிநாட்டில் இருந்தெல்லாம் வந்து சடங்கு செய்பவர்களைப் பார்த்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நாம் புலம்ப மட்டுமே முடியும்!!

      நன்றி!!

      Delete
  7. சகோ.சார்வாகன்,

    அத்தனைப்பேர்கள் அங்கே ஏன் வருகிறார்கள்?
    புனிதமடைய வேண்டும் என்று?
    ஏன் புனிதமடைய வேண்டும் என நினைக்கிறார்கள்?
    பாவம் செய்திருப்பதாக நினைப்பதால், அப்படி எனில் பாவம் செய்துவிட்டு புனிதமடையலாம் என நினைக்கும் குறுக்கு புத்தியே அவர்களை அங்கு திரள வைத்துள்ளது.

    பாவம் செய்யாதவர்களோ,அல்லது பாவம் செய்துவிட்டு ஆத்துல குளிச்சா கழுவிட முடியாதுனு உண்மை தெரிஞ்சவர்களோ அங்கு செல்ல மாட்டார்கள்.

    மக்கள் புனித நீராட திரளக்காரணம் பக்தி என்பதை விட தங்கள் பாவத்தினை நீக்கிக்கொள்ள வேண்டும் என்ற பேராசையே காரணம்.

    பெரும்பாலோர் கோயிலுக்கு செல்வது பக்தியினால் அல்ல அவர்கள் பாவம் செய்திருந்தால் அதனை போக்கிக்கொள்ளலாம் என்ற ஆசையே.

    பாவம் செய்யாதவர்கள்,அல்லது பாவம் செய்தால் அது வழிப்பாட்டினால் போகாது ,என நினைப்பவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்,தேவையே இல்லை, இருந்த இடத்தில் இருந்து வணங்கினாலே சர்வவல்லமை படைத்த கடவுள் ஏற்க மாட்டாரா?

    இதெல்லாம் சொன்னா நாத்திகன்னு சொல்லிடுறாங்க :-))

    தனது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பவனுக்கு கோவிலோ,கடவுளோ,புனித குளியலோ தேவைப்படாது.

    ஆத்துல குளிக்க போய் செத்தவங்க,அவங்களா விருப்பப்பட்டு போயி சாவுறாங்க,எனவே இதற்கு அரசை குறை சொல்ல முடியாது.எல்லையில எதிரி தாக்குறான் வீட்டுக்கு ஒருத்தன் வாங்கன்ன்னு சொன்னா வருவாங்களா, இப்போ செத்தவங்க யாரும் அப்பாவின்னு இரக்கம்லாம் படத்தேவையேயில்லை, அளவுக்கு அதிகமா பாவம் செய்து,குற்ற உணர்ச்சியில் குளிக்க போனவங்களா தான் இருக்கும்.

    புறந்தூய்மை நீரால் அமையும்,அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்.

    ReplyDelete
    Replies
    1. //நாத்திகன்னு சொல்லிடுறாங்க//

      யோவ் எல்லாரும் இனிமே வவ்வால் சித்தருன்னு மரியாதையா சொல்லுங்கைய்யா!

      Delete
    2. நண்பர் வவ்வால்,

      இந்த ஆன்மீகப் புலிகள் நாத்திகர்களுடன் விவாதம் செய்யும் போது,
      பெரு வெடிப்புக்கு முன்னால் என்ன? முதல் செல் உயிரி எப்படி வந்தது என இப்போதைய விடைதெரியா கேள்விகளின் விடையே கடவுள் என அறிவு பொங்கி வழிவது போல் பேசுவார்.

      ஆத்திகர் அனைவரும் ஒன்று என்பார்!!

      நம்பும் ஆட்களிடம். சடங்கு சம்பிரதாயம்,மத சட்டம் என சொல்லி பணம் பறிப்பார்,ஒடுக்குவார், சில சமயம் இப்படி விபத்துகள் மூலம் உயிர்ப்பலியும் நிகழும்!!

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நீங்க அவதாரமா,இறைத்தூதரா இல்லை சித்தரா??

      குழப்புதே!!

      நன்றி!!!

      Delete
    3. நந்தவனம்,

      சித்தம்-சிந்தனை, சிந்தனைகளின் வடிவானவர் சித்தர்,நாம எம்புட்டு சிந்திக்குறோம், ஹி...ஹி அப்போ நாமளும் சித்தரு தான் :-)),

      உங்க சிவவாக்கியார் பாடல் அருமை, என்னிடமும் சில சித்தர் நூல்கள் இருக்கு ,அதை எடுத்து படிச்சிட்டு நானும் நான்கைந்து பாட்டுக்களை எடுத்துவிடலாம்னு பார்க்கிறேன் :-))
      ------------

      சகோ.சார்வாகன்,

      கூடுவது, கும்மி அடிப்பது, கும்பமேளா எல்லாமே வணிகத்திற்காக தான். மக்களும் ஏதோ ஒரு நம்பிக்கையில் பாவம் போகும்னு நிக்குறாங்க,பாவம் போகனும்னு செய்துவிட்டு ஆசைப்படுவதற்கு பதிலாக பாவமே செய்யாம இருக்கலாமேனு நினைக்க மாட்டேங்கிறாங்க:-))

      இறைத்தூதராக அவதாரம் எடுத்த சித்தர்னு சொன்னா எல்லாம் நமக்கே :-))

      Delete
  8. பதிவுக்கு இன்னமும் பொருத்தமாக, கோவில் குளமென திரிகுவோரை சாடும் சிவவாக்கியர் பாடல்கள் இவை...

    இந்தவூரில் இல்லையென்று எங்குநாடி ஓடுறீர்
    அந்தவூரில் ஈசனும் அமர்ந்துவாழ்வது எங்ஙனே
    அந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
    அந்தமான சீயிலவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

    கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
    ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனம்,

      இந்த ஆன்மீகப் புலிகளுடன் விவாதம் செய்ய வேதம்,உபநிஷத்துகள் கூட படிக்க ஆரம்பித்து விட்டேன். உபநிஷத்துகள் கொஞ்சம் தர்க்கரீதியாக வாதம் வைப்பதும், சில நாத்திகம் போலவும் தெரிவதால் பிடிக்கிறது.

      வேதம் ம்ம்ம்ம்ம்ம்
      வேள்வி பலி, சோம பானம் என கலக்கல்!!! சுடலைமாடனுக்கு சாராயம், கிடா வெட்டிப் படைப்பதே சரியான வேத கால வழிபாடு!!!
      **

      இப்படி உபநிஷத்து போல் ஏதேனும் படித்து தமிழாக்கம் செய்யாமல் இந்த ஆத்திகப் புலிகள் சடங்கு சம்பிரதாயம் என சொல்லி மனிதர்களைப் பலியாக்குவதே நம் வருத்தம்!!!


      சித்தர்கள் நம்மாளுக இல்லையா!! அதான் போட்டு தாக்குராக!!

      நன்றி!!

      Delete
  9. http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/article3685080.ece

    Royals block the release of cleric who raped daughter

    Saudi Arabia’s Royal Family has intervened in the case of a leading cleric who raped, and tortured his five-year-old daughter to death, causing outrage at home and abroad.
    Lama al-Ghamdi was admitted to hospital in the town of Hotat Bani Tamim in November with a crushed skull, broken back and shattered ribs. Social workers said that she had been repeatedly raped and her body burnt.
    Her father, Fayhan al-Ghamdi, admitted using a cane and electric cable to inflict the wounds after doubting the child’s virginity. The cleric is something of a celebrity in the ultra-conservative kingdom, appearing regularly on television to discuss correct religious observance and social affairs.
    The scandal caused grief and fury within the kingdom. Sayeda Hamadari, the girl’s mother, who is divorced from the cleric, said that she wanted her ex-husband to be put to death.
    “I want him killed. I want the full Islamic punishment. This is God’s law,” she said yesterday. “I am in constant pain when I think of what he did to my daughter. I cannot bear to think of it. I have been reading the Koran to seek some comfort. Only God knows what I am going through.”
    Confusion still surrounds the case. Reports last week claimed that the cleric had been freed from jail after paying £31,000 in blood money to Ms Hamadari. Albawaba News in Jordan quoted the judge in the case as having said: “Blood money and the time the defendant has served in prison since Lama’s death suffices as punishment.”
    But the Saudi Justice Ministry responded with a statement saying that the cleric was still in prison and the case was continuing. Ms Hamadari confirmed that another hearing was set for tomorrow, with Lama’s stepmother appearing as a witness to the murder.
    Sources in Riyadh said that the kingdom’s ruling family had been stung by the outrage over the case. Senior royals are believed to have intervened to make sure that a stronger sentence is upheld, although the death penalty is thought to be unlikely.
    “The royal court is now looking at the case. He [Mr Al-Ghamdi] will stay in prison for a long time,” one source in the Saudi capital said.

    ReplyDelete
    Replies
    1. But Saudi human rights activists said that stepping in when a scandal hit the headlines was not enough and that fundamental reform of the kingdom’s antiquated judicial system was needed, with new laws to protect women and children from abuse.

      “This is just an example of the sort of case that happens all the time in Saudi Arabia,” Eman al-Nafjan, a prominent women’s rights activist in Riyadh, said. “We have no sexual harassment laws, no child abuse laws. Cases are left to the discretion of the police and the judge. If a woman reports a sexual crime they don’t investigate it. They call the religious police and pressure her to drop it.”
      The elderly King Abdullah has faced down fierce opposition from the kingdom’s powerful clerics slowly to advance women’s rights across Saudi Arabia. Under his rule thousands of female students have been sent abroad to study and restrictions on women working have been steadily relaxed. Last month the monarch appointed 30 women to the kingdom’s top advisory body, the Shura Council, for the first time.
      The move was hailed as a small but significant step in the campaign for women’s equality but the Government continues to duck more fundamental reform.
      Saudi Arabia remains the only country in the world to bar women from driving and women need permission from a male guardian to work, to study, to travel, to marry or even to receive some forms of surgery.
      “Putting women on the Shura Council is a meaningless token gesture,” Ms al-Nafjan said. “They have no power. It is for show. Meanwhile laws that would truly liberate and protect women are not passed.”
      Saudi Arabia’s religious establishment provoked further incredulity last week when another cleric was quoted calling for female babies to wear Islamic veils to deter child molesters.
      Citing Saudi medical and security officials, Sheikh Abdullah Daoud said that child abuse was rife within the kingdom and babies should be dressed more conservatively. “Whenever the girl is an object of desire, the parents have a duty to cover her up with a hijab,” he said.
      The comments were made last year, but only recently went viral on social networking sites, prompting several senior clerics to condemn them.

      Delete
  10. நண்பர் நந்தவனத்தான் போல தான் என் சிறு வயது அனுபவமும். பத்து வயது இருக்கும் போது தாத்தா கோயில் கும்பாபிஷேகதிற்கு கூட்டி போக, அங்கே கூட்ட நெரிசலில் பட்ட அவதி, கூட்டம் என்றாலே மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணி விட்டது. அன்று போலீஸ் தடியடி எல்லாம் இல்லை. பக்த கோடிகள் பக்தி மேலோங்கி செய்த தள்ளு முள்ளுகளே, என் வரையில், கூட்டம் என்றாலே எதிர் திசையில் ஓடும் பயத்தை மனதில் விதைத்து விட்டது.

    சார்வாகன், வழிபாடு மட்டும் அல்ல, எல்லா விஷயத்திலும், இந்தியர் பொதுவாய் கூட்ட நெரிசலை ஏற்கின்றனர். கூட்ட நெரிசலை விரும்பி ஏற்கிறார்களோ இல்லையோ, அதை ஒரு தடையாய், ஒரு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாய் நினைப்பதே இல்லை. சில நேரங்களில் தவிர்க்க முடியாது ஆனால் பல நேரங்களில் முடியும். நம் மக்கள் தவிர்க்க முயற்சிப்பதே இல்லை. நான் வசிக்கும் அமெரிக்க தேசத்தில், வெள்ளையர் செல்லும் கடைகள், காய்கறி கடையாய் இருந்தாலும் விஸ்தாரமாய் இருக்கும். இந்திய கடைகள் (சீன கடைகளும்) குறுகி, கச கச வென இருக்கும். பெரிய பணக்கார. நன்றாய் வர்த்தகமாகும் இந்திய கடைகள் கூட குறுகியே இருக்கும். வெள்ளை மக்கள் பொதுவாய் குறுகி இருக்கும் கடைகளை "personal space" இல்லை என்று குறை சொல்லி தவிர்ப்பது சகஜம். நன்றாய் சம்பாதித்தாலும் நம்மவர் இவ்வாறு செய்வதில்லை. கூட்டத்தில் புகுந்து அடித்து பிடித்து வாங்கி வருவதை பெருமையாய் கருதுவோரையே அதிகம் காண முடியும். ஒரு ஆறுதலான விஷயம், இரண்டாம் தலைமுறை இந்திய வம்சாவழியினர் இந்த நெரிசலை ஏற்க முடியாது என்று மறுப்பது.

    ஏன் நம் திருமணங்களையே எடுத்து கொள்ளுங்களேன். ஒரு ஒழுங்கு முறை உண்டா? மன மேடையில், தாலி கட்டும் போது பெண் வீட்டு ஆட்கள்,பையன் வீட்டு ஆட்கள் என்று சொல்லி கொண்டு ஒரு இருபது,முப்பது பேர் மேல ஏறி கொண்டு என்ன ஒரு கூத்து. மேற்கத்திய முறையில் உள்ள ஒழுங்கு முறை இருப்பதில்லை. இவற்றை ஒரு பிரச்சினையாய் நாம் பார்பதே இல்லை. ஒழுங்கு முறை அனாவசிய நெரிசலை தவிர்க்க உதவும் என்பதை நாம் உணர்வதில்லை. நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணமும் வருவதேயில்லை. சாலை விதிகளில் கூட ஒழுங்கு முறை என்றால் வெறுப்போராய் தான் நாம் இருக்கிறோம்.

    இந்த மாதிரி ஒழுங்கற்ற கலாச்சாரத்துடன், மக்கள் தொகை எண்ணிகையும் சேர்ந்தால், என்ன நடக்குமோ அது தான் நடக்கிறது. என்ன செய்ய?

    ReplyDelete
  11. //வவ்வால்February 12, 2013 at 5:16 AM

    இப்போ செத்தவங்க யாரும் அப்பாவின்னு இரக்கம்லாம் படத்தேவையேயில்லை, அளவுக்கு அதிகமா பாவம் செய்து,குற்ற உணர்ச்சியில் குளிக்க போனவங்களா தான் இருக்கும்.//

    மன்னிக்கவும், இது மனித நேயம் இல்லாத கருத்து அல்லது கோவத்தில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.


    மதபோதனைகள், காரண காரியங்களை சிந்திக்கும் மனதை ஊடுறுவி அனிச்சை செயல்களையும் கட்டுப்படுத்தும் கோரப்பிடி கொண்டவை. முற்பிறவியில் செய்த பாவத்தினால் துன்பப்படுவதாக நினைப்பவர்களும், மேலும் புண்ணியம் தேடிக்கொள்ளவென்று கோவில் குளமாக ஏறி இறங்குபவர்களும், இன்னும் பல மூடக்கருத்துகளால் ஆட்பட்வர்களும் பலர் உண்டு.

    மக்களுக்கு விழிப்புணர்வு எப்போதோ வரட்டும், எப்படியோ போகட்டும், உடலையும் உயிரையுமாவது நல்லபடியாக காப்பாற்றிக்கொள்ளட்டுமே என்று சார்வாகன் கவலைப்படுவது சரிதான்.

    நம்நாட்டில் அடுத்தவர் உயிரை மதிக்காத அளவிற்கு பொது சிந்தனை மந்தமடைந்துள்ளது வருந்தத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. குலவுசனப்பிரியன்,

      ரொம்ப பழையக்கையாச்சே, வாங்க,

      ஒரு பாட்டிலில் விஷம் இருக்கு, அதை குடிச்சா செத்துவிடுவார்கள்னு சொல்லியாச்சு, பாட்டில் மேலவும் விஷம்னு எழுதியிருக்கு,ஆனால் அதெல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு எடுத்து குடிச்சா பரிதாபப்பட முடியுமா?

      ஒரு வடிவேல் காமெடியில் இப்படித்தான் விஷம் குடிப்பார், எல்லாம் பரிதாபப்படாம சிரிச்சாங்க.

      ஒரு இடத்தில அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடினால் நெரிசல் வரும் ,விபத்து வரும்னு தெரியும் போது எனக்கு பாவம் நீங்கி ,மோட்சம் வேண்டும்னு பேராசைப்பட்டா எப்பூடி?

      நீங்க ரொம்ப பொது சிந்தனை மந்தமடைந்து இருக்குனு வருந்துறிங்களே, கூட்ட நெரிசலில் எப்படி உயிர் இழப்பு வருது? ஒருத்தன் இன்னொருத்தனை ஏறிமிதிப்பதால் தானே, நாம இன்னொருத்தரை ஏறிமிதித்தால் செத்துடுவான் என உயிருக்கு மதிப்பு கொடுக்க அங்கே தெரியாதவர் யாரு? ஆன்மீகவாதி தானே?

      அப்போ ஆன்மிகவாதிக்கும் அடுத்தவங்க உயிரை மதிக்காத அளவுக்கு சிந்தனை மந்தமடைந்துள்ளது அல்லவா?

      Delete
  12. அருமை அருமை, நாம் இருவரும் பெரும்பாலும் ஒரே தளத்தில் தான் பயணிக்கிறோம்.

    "உங்கள் நண்பர்கள் புனித பயணம் சென்றால் அவர்களிடம் கூட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள். புனித பயணத்தில் இறப்பது பெருமை அல்ல. வெளியில் வேண்டுமானல் 'நல்ல சாவு' என்று ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு சொல்வதால் ஒரு பயணும் இல்லை. அதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பெரும் துன்பம். இதற்கு காரணம் ஆண்டவனோ, ஆள்பவனோ இல்லை. கட்டுக்கு அடங்காத நெரிசல் அதனால் பிதுங்கி மிதிபடுதல் என்னும் இயற்பியல் விதியே காரணம். விசேச நாட்களில் புனித பயணம் மேற்கொண்டு புறப்படும் ஒருவர் தான் செல்லும் புனித பயணம் தனக்கு இறுதி பயணம் என்று செல்லும் போது அவருக்கு தெரியாது. விஷேச நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் புனித தலங்களுக்குச் சென்றால் புனித பயணம் செய்து வீடு வந்து சேரமுடியும். அப்படியும் செல்ல வேண்டுமென்றால் காப்பீடு செய்துவிட்டுச் செல்லலாம்"

    http://govikannan.blogspot.sg/2008/01/blog-post.html

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

    ReplyDelete
  13. அருமை அருமை, நாம் இருவரும் பெரும்பாலும் ஒரே தளத்தில் தான் பயணிக்கிறோம்.

    "உங்கள் நண்பர்கள் புனித பயணம் சென்றால் அவர்களிடம் கூட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள். புனித பயணத்தில் இறப்பது பெருமை அல்ல. வெளியில் வேண்டுமானல் 'நல்ல சாவு' என்று ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு சொல்வதால் ஒரு பயணும் இல்லை. அதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பெரும் துன்பம். இதற்கு காரணம் ஆண்டவனோ, ஆள்பவனோ இல்லை. கட்டுக்கு அடங்காத நெரிசல் அதனால் பிதுங்கி மிதிபடுதல் என்னும் இயற்பியல் விதியே காரணம். விசேச நாட்களில் புனித பயணம் மேற்கொண்டு புறப்படும் ஒருவர் தான் செல்லும் புனித பயணம் தனக்கு இறுதி பயணம் என்று செல்லும் போது அவருக்கு தெரியாது. விஷேச நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் புனித தலங்களுக்குச் சென்றால் புனித பயணம் செய்து வீடு வந்து சேரமுடியும். அப்படியும் செல்ல வேண்டுமென்றால் காப்பீடு செய்துவிட்டுச் செல்லலாம்"

    http://govikannan.blogspot.sg/2008/01/blog-post.html

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

    ReplyDelete