Monday, June 25, 2012

எகிப்திய அதிபராக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் முகமது மோர்சி:ஒரு எதார்த்தப் பார்வை


morsi_first_tv_speech.jpg

எகிப்தின் அதிபராக திருமுகமது மோர்சி 51.7% வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டி இட்ட அகமது ஷைஃபிக் ஐ[முந்திய இராணுவ ஆட்சியாளர் முபாரக்கின் ஆதரவாளர்] தோற்கடித்து[48.3% வாக்குகள்] பதவி ஏற்று உள்ளார்.அரபு உலகின் முதன் முதலில் மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட அதிபர் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

எகிப்தின் மக்கள் தொகை சுமார் 9 கோடி.அரபுலகில் அதிக எண்ணெய் வளமற்ற பிரதேசம் என்றாலும் சூயஸ் கால்வாய் உள்ளதால் பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் உள்ள பகுதி.நைல் நதி அதை சார்ந்த விவசாயம் என்ற பொருளாதார அடிப்படை கொண்டது.90% எகிப்திய மக்கள் 5.5% இடத்திலேயே வசிக்கின்றனர்.


பொருளாதார அடிப்படையில் மிகவும் சாதாரணமான் நாடு என்பதை விக்கிபிடியாவில் இருந்து அறிய முடிகிறது.20% மக்கள் வறுமைக்கோட்டுக் கீழ்,11% வேலையிலாதவ்ர்கள்,அதிகரிக்கும் மக்கள் தொகை,சட்ட விரோத்மாக குடியேறும் கருப்பினத்தவர்,பாலஸ்தீனர்கள் என சகல வித பிரச்சினைகளையும் கொண்ட நாடு. 

ஜனநாயக நாடுகளில் எதையும் குறுகிய காலத்தில் செய்ய இயலாது என்பதை நாம் அறிவோம்.உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கவே பல காலம் செல்லும்..எனினும் அதற்கு பலவித சூழல்கள் ஒத்துழைக்க வேண்டும்.சரி பதிவுக்கு வருவோம்.

திரு மோர்சியின் வெற்றி பலரால் பல வித்மாக பார்க்கப்படுகிறது.ரியுட்டர் செய்திகளின் மொழி பெயப்பை தருகிறோம்.  ஒரு நிகழ்வு பலரால் பல்வித பார்வைகளில் விளங்க முடியும் என்பதை நாம் அறிவோம்.ஓவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இக்கருத்துகளில் இருந்து விளங்க முடியும்.

1.
******************
"The Egyptian nation did not elect a president just for Egypt, but for the Arab and Islamic nations too," said Fawzi Barhoum, a spokesman for Hamas in Gaza, which hopes Morsy may end Cairo's cooperation with an Israeli blockade. 

பாலஸ்தீன ஹமாஸ் கட்சியின் பிரதிநிதி திரு பவ்ஸி ஃபர்ஹோம் "திரு மோர்சி எகிப்துக்கு மட்டுமல்லாமல் அரபு மற்றும் இஸ்லாமிய உலகிற்கே அதிபராக எகிப்திய மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்".

முந்தைய அன்வர் சாதிக்  ஆட்சி போரில் இஸ்ரேலிடம் இழந்த சினாய் பிரதேசத்தை பெற இஸ்ரேலுடன் செய்த ஒப்பந்தத்தை நீக்கி இஸ்ரேலை எகிப்து தனிமைப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக்வும் திரு பவ்சி நம்புகிறார்.

*********

2.
****************
"Mohamed Morsy a president for Egypt, thank God," said Mohammed al-Qahtani, a co-founder of the Saudi Civil and Political Rights Association (ACPRA), a group pushing for democracy.


சவுதி சமூக அரசியல் உரிமை அமைப்பின் தலைவர் முகமது அல் கக்டானி 'திரு மோர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு இறைவனுக்கு நன்றி" என்கிறார்.
இந்த அமைப்பு சவுதியிலும் ஜன்நாயகத்தை கொன்டு வர முயற்சி செய்யும் அமைப்பு ஆகும்.தனது ட்விட்டர் செய்தியில் "அரபு புரட்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

உலகெங்கும் உள்ள இஸ்லாமியவாதிகள் மோர்சியின் தேர்வை கொண்டாடினாலும் சவுதி அரசு இதனை எப்படி எதிர் கொள்ளும் என தெரியவில்லை.கடந்த ஏப்ரலில் த்னது தூதரகத்தை எகிப்தில் மூடி தூதரை திருப்பி அழைத்துக் கொண்டது. 

In Saudi Arabia, the world's number one oil producer, the government was silent. Its relations with the Muslim Brotherhood have been poor, with many of the kingdom's officials accusing it of backing demands for internal political change.

However, analysts said Saudi Arabia would have to work with the new Egyptian president.

"I think (the Saudis) are going to be very practical about it. More and more they will discover common interests in the economy, in politics, on how to deal with Iran," said Jamal Khashoggi, a prominent former newspaper editor with ties to the ruling family.

"BUILD BRIDGES"
சவுதி அரசுக்கும் முஸ்லிம் சகோதத்துவ கட்சிக்கும் இதுவரை சரியான உறவுகள் இல்லை எனினும் சூழல் பொறுத்து என்ன செய்வார்கள் என்வே பார்க்க வேண்டும்.
*************
3

இரான் திரு மோர்சியின் தேர்வை வரவேற்று உள்ளது.

Iran, which prides itself on its own Islamist credentials, paid fulsome tribute to those it called "the martyrs of the (Egyptian) revolution", whom it said were responsible for ushering in "a splendid vision of democracy".

"The revolutionary movement of the Egyptian people ... is in its final phases of a new era of developments in the Middle East and the Islamic Awakening," the foreign ministry said.


இவ்வெற்றி எகிப்திய புரட்சியின் வீரர்களுக்கு அஞ்சலி& அங்கீகாரம்  என் இரான் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டு உள்ளது.  
எகிப்திய மக்களின் புரட்சியின் தருணம்.இஸ்லாமிய விழிப்புணர்வில் ஒரு புது யுகம் மத்திய கிழக்கில் தோன்றுகிறது என்வும் இரான் பெருமிதம் கொள்கிறது.
___________

4
மத்தியக் கிழக்கின் பாதுகாவலன்(?) மத்தியஸ்தன் பெரிய அண்ணன் அமெரிக்க என்ன சொல்கிறது?

The United States, which provides vast military aid to Egypt, welcomed the result but made clear it expected Morsy to ensure stability and not to veer to extremes.

"We believe that it is important for President-elect Morsy to take steps at this historic time to advance national unity by reaching out to all parties and constituencies in consultations about the formation of a new government," White House spokesman Jay Carney said in a statement, calling on the new leader to ensure Egypt remained "a pillar of regional peace".

திரு மோர்சியின் தேர்வுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை  வாழ்த்தினாலும் இத்தேர்வு மத்திய கிழக்கின் அரசியல்  நிலையை எவ்விதத்திலும் பாதிகாமல் இருக்க வேண்டும்.சில அதீத நடவடிக்கைகளை நோக்கி செல்ல மாட்டார் எனவும் கருத்து தெரிவிக்கிறது.

நாட்டு ஒற்றுமை,அனைத்து கட்சிகள்,அமைப்புகளுடன் ஒற்றுமை கொண்டு அரசமைப்பார் என எதிர்பார்ப்பதாகவும்,எகிப்து வழக்கப் போல் அப்பகுதியின் அமைதியின் தூண் ஆக விளங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை கருத்து வெளியிட்டது.
__________
5
இங்கிலாந்து உள்ளிட்ட பல் ஐரோப்பிய நாடுகளும் திரு  மோர்சியின் வெற்றியை வரவேற்று உள்ளன.நாட்டின் சிறுபானமையினர்&பெண்கள் உரிமைகள் ,மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாக்வும் கருத்திட்டு உள்ளனர். 

A spokesperson for Catherine Ashton, the European Union's foreign policy chief, said the election was a major milestone in Egypt's democratic transition and that Ashton hoped the new president would be "representative of Egypt's diversity".

In Britain, William Hague, the foreign minister, gave Morsy a muted welcome, urging him to build bridges and uphold human rights, including those of women and religious minorities, in a statement broadly echoed other EU member states.

____________
6

பல் இன மத மக்கள் வாழும் எகிப்துநாட்டை வழிநடத்து பொறுப்பு பல சவால்களை கொண்டது.அதனை நல்லபடி திரு மோர்சி நிறைவேற்ற வேண்டும் என துருக்கி கருத்து வெளியிட்டு உள்ளது.

Turkey, an increasingly important power in the region, said Morsy's win reflected the will of the people, but made it clear he had a lot to prove. "Important tests await the new president who will lead the Egyptian people to the free and pluralist democracy they deserve," the foreign ministry said.

__________
7
பிற வளைகுடா நாடுகளில் கருத்து வெளியிடுவதில் மிக்க எச்சரிக்கை தெரிகிற‌து.

Across the Gulf, reaction was cautious.

In the United Arab Emirates, the WAM news agency said the government respected "the choice of the Egyptian people in the context of its democratic march".

Dahi Khalfan, the Dubai police chief, was more skeptical. "An unfortunate choice," he said in a tweet. "The repercussions of this choice will not be light to poor ordinary people."

Bahrain's state news agency said King Hamad congratulated Morsy, praising "an atmosphere of freedom and democracy", while Jordan's Minister of State for Information Samih al-Maaytah told Reuters his country hoped Morsy would ensure stability.

___________

நாம் ஏன் இப்பதிவை எழுதினோம் எனில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய வாதிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.தமிழ் பதிவுலகில் கூட இதனை உணர முடியும்.நாம் அவர்கள்க்கு உண்மை நிலவரத்தை புரிய வைக்க முயல்கிறோம்.

இப்போதைய உலகில் கொள்கை சார்ந்த அரசியல் கிடையாது.உலகமயமாக்கல் என்ற கருத்தாக்கத்திற்கு பிறகு எந்த நாடும்  தன்னிச்சையாக் பொருளாதார& அரசியல் முடிவெடுக்கவே முடியாது.

மத்தியக் கிழக்கின் எண்ணெய் சுரண்டலுக்கு உதவும் குடும்பங்களே அங்கு ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதும்.அவர்களின் மனித உரிமை மீறல்களை,ஜனநாயக விரோதபோக்குகளை அமெரிகா எபோதும் கண்டு கொள்ளாது.அவர்களின் ஆட்சியை பாதுகாக்க மத்திய கிழக்கு முழுதும் தன் படைத்தளங்களை அமைத்து உள்ளது.இரானுடன் போர் வந்தால் பாரசீக வளை குடாவின் வழியாக எண்ணெய் கொண்டு வர முடியாது என அபுதாபியின் இருந்து ஃபஜஜ்ரா என்னும் நகருக்கு ஒரு நாளுக்கு 1.5 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டுவரும் குழாய்கள் அமைக்கின்றனர்.


எகிப்து அரசு அமெரிகாவின் கைப்பாவை அரசுகளுடன் ஒத்துழைத்தால் மட்டுமே பெரிய பிரச்சினை இல்லாமல் கொஞ்ச நாட்கள்க்காவது அரசு நடத்த முடியும்.முபாரக் வழியிலேயே மோர்சி செல்ல் வேண்டும் என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் அன்பாக கட்டளையிடுவது கருத்துகளில் தெரிகிரது.

திரு மோர்சியும் 2000 வரை அமெரிகாவில் பணியாற்றிய பொறியாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.கலிஃபோர்னியா பல்கலைக் கழக்த்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவரின் இரு மகன்கள்[மொத்தம் ஐந்து குழந்தைகள்] அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.ஆகவே அமெரிகாவுடன் மோதல் போக்கை தவிர்ப்பார் என்வே எதிர்பார்க்க்லாம்.

அமெரிகாவுடன் நட்பு கொண்டு, அதன் அரசியலை பொருளாதாரத்தை பாதிக்காமல் மத அடிப்படை வாதம் உள்நாட்டில் சவுதி பாணியில் வளர்த்தால் அதற்கு எந்த தடையும்  இருக்காது.அது செய்தால் மோர்சிக்கு சீகிரம் பேர் கெட்டு விடும்,அதனையே மேலை நாடுகள் விரும்புகின்ற‌ன.எண்னெய் சுரண்டலுக்கு விரோதமான மனித உரிமை மீறல்கள் மட்டும் சரியான முறையில் கவனிக்கப்படும் என்பது வரலாறு சொல்லும் பாடம்.

ஆகவே நம் நாட்டில் முதலில் பா.ஜ.க ஆட்சி வந்த போது எப்படி காங்கிரசின் வழித்தடத்திலேயே சென்று காங்கிரஸ் 2 என ஆனதோ அது  போல்தான் எகிப்தில் நடக்கும் என்பது நம் கருத்து.

ஒரு வேளை மத்தியக் கிழக்கையே[அப்புறம் உலகையே] திருத்துவேன் எனில் சதாம் ஹுசேன்,கடாஃபி போன்றவர்களை ஞாபகப் படுத்திக் கொண்டால் நிலமை புலப்படும்.

அதை விட்டு கைப்புள்ளை எகிப்தை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை இரணகளம் ஆக்க துடிக்கும் வெளிநாட்டு மதவாத,மதப் பிரிய சக்திகளில் இருந்து விடுபட்டு எகிப்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலவதே எதார்த்த‌ இராஜ தந்திரம்.

எகிப்து மிக பழைமையாக கலாசாரம்,நாகரிகம் கொண்டது.பல வகைகளில் இந்தியாவை ஒத்த தன்மைகளும் கொண்டது.நாம் எகிப்தியர்களை,அதன் நாகரிகத்தை,கலை அம்சம் மிக்க பிரமிடுகள் ஆகியவற்றை நேசிக்கிறோம்.
பிரமிடுகளின் அடிப்படை பிதாகரஸ் தேற்றத்தின் முழு எண்கள் தீர்வு என ஏற்கெனவே நாம் ஒரு பதிவு எழுதி இருக்கிறோம்.உலகின் மிக பழைய மத புத்தகம் எகிப்தியர்களின் இறந்தவர்களின் புத்தகம் என்பதையும் நாம் அறிவோம்.


இந்தியாவோடு பல வகைகளிலும் ஒன்றாக இணைந்து உலகளாவிய ஜனநாயக சக்திகளை ஒருங்கினைத்து உள்ள பிரச்சினைகளை போரின்றி சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும் என்பதே நம் ஆவல்.
  
நல்லதே நடக்கும் என நம்புவோம்.வாழ்த்துக்கள் சகோதரர் திரு முகமது மோர்சி!

எகிப்திய அதிபரின் முதல் பேச்சு!!!!!!!!!!!


நன்றி

   

16 comments:

  1. முதல் பேச்சில் எதார்த்த சூழலை புரிந்து கொண்டு அனைவரையும் ச‌மாதானப்ப்டுத்தும் விதமாக கருத்துகளை எடுத்து வைப்பது புரிகிறது.

    பேச்சு முக்கியம் அல்ல செயலே முக்கியம்.பொறுத்து இருந்து பார்ப்போம்!.

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    அனைவருக்கும் தெளிவாக்க, எகிப்தின் உண்மை நிலையை விளக்கமாக தந்தது ஒரு நல்ல பணி.

    ReplyDelete
  3. உங்கள் பதிவிலிருந்து மொர்சி பற்றி புதிய தகவலை அறிந்து கொண்டேன்.இப்பொழுதுதான் ஒரு எகிப்தியனை மூளை இல்லாத பசங்கன்னு கிண்டல் செய்ய போக அவன் இந்தியாவில் கிழடுகளையே வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறாய் என்று என்னையே திருப்பி அடித்து விட்டான்:)

    முந்தா நாள் வரை மெர்சி மட்டுமே உலக பிரபலம்.அமெரிக்காவுக்கு வாலையும்,வளைகுடாவுக்கு தலையையும் காட்டாமல் செயல்பட முடியாது என்பதற்கு மொர்சியின் பின்புலமும்,இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியும் சாட்சி. மொர்சி எப்படி செயல்படுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  4. வாங்க சகோ தேவப் பிரியா,

    நாம் அனைத்து நிகழ்வுகளைகளை அதன் பல் பரிமாணங்களிலும்,எதார்த்த நோக்கில் அணுகவே முயல்கிறோம்.இராணுவ ஆட்சி ஆதரவாளரா இல்லை முஸ்லிம் ச்கோதரத்துவ கட்சியா என்னும் போது மோர்சியை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். தேர்வு மக்களை பெருமித உணர்வு கொள்ளச் செய்து போர் என்ற அழிவு பாதையை நோக்கி கொண்டு செல்லக் கூடாது.

    கேம்ப் டேவிட்[1979] என்னும் எகிப்து இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறாதவரையில் ,சூயஸ் கால்வாயை கையகப் படுத்தும் நோக்கம் இல்லாத வரையில் மோர்சி,எகிப்து மக்களை என்ன செய்தாலும் கண்டு கொள்ளாத மேலை நாட்டவர் ஏதேனும் வில்லங்கம் செய்தால் கிறித்தவர்களை கொடுமைப் படுத்துகிறார்,மத தீவிரவாதி என சதாம்,கடாஃபி வழியில் போட்டுத் தாக்கி விடுவார்கள்.

    http://en.wikipedia.org/wiki/Camp_David_Accords

    முதல் பேச்சில் அனைத்து அயல்நாட்டு ஒப்பந்தங்களையும் மதிப்போம் என் அண்ணன் மோர்சி அழுத்தி கூறுவது இதனால்தான்.

    நன்றி

    ReplyDelete
  5. வாங்க சகோ இராஜநடராஜன்

    ஆட்சியில் இல்லாதவரை என்ன வேண்டுமானாலும் சொல்ல முடியும்.ஆட்சி ஏறி விட்டால் இருக்கின்ற சூழலில் இருக்கும் வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றைத்தான் செய்ய முடியும்.

    மீடியாக்கள் ஒரு நாயகனை ஒரே நாளில் வில்லன் ஆக்கி விடுவார்கள். ஹா ஹா ஹா!!!!!!!!!!!!!!!

    எகிப்திய உணவு மிக அருமையாக் இருக்கும்.ந மக்கும் பல் எகிப்தியர்களின் விருந்தோம்பல் மிக அருமையானது.நமக்கு பல எகிப்திய ‌ நண்பர்கள் இன்றும் உண்டு.

    நம்ம இந்திய தாத்தாக்களுக்கு ஓய்வு கொடுக்க நம் மக்கள் மறுக்கிறார்களே என்ன செய்வது?

    நன்றி

    ReplyDelete
  6. நண்பரே,

    நன்றி, அவசியமான பதிவு.


    முகமது மோர்சி அதிபராக தேர்ந்தெடுத்தபட்டதற்கு மக்கள் ஆராவாரம் செய்வது, அவர் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பார் என்பதால் அல்ல. எகிப்து மக்கள் முதன் முறையாக ஜனநாயக முறையில் ஒரு அதிபரை தேர்ந்தெடுத்திருப்பதை, சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாத்தை வைத்து சொற்ப எண்ணிக்கை வாக்கு வித்தியாசத்தை வைத்து, இஸ்லாமிய ஆட்சியை வரவேற்கிறார்கள் என்று நினைப்பது அபத்தம். அங்கே உள்ள மக்கள் கலாச்சாரத்தின் படி மத அடிப்படைவாத ஆட்சி அமைக்க முடியாது. அதுவும் இராணுவ பலமில்லாமல்.

    மோர்சியின் பேச்சை கேட்டால் இதை நன்றாக உணர்ந்திருக்கிறார். தான் வெற்றிபெற்றது சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் என்பதை உணர்ந்து, மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தாவிட்டால் அவர்கள் அடுத்த தேர்தலில் தூக்கி எறிவார்கள் எனற் பயமும் இருக்கின்றது. அதனால் அடிப்படைவாதியாக சிந்தித்து, ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகாரியாக வர முயற்ச்சிக்கலாம் ஆனால் இராணுவ துணை இல்லாதலால் சாத்தியம் கம்மி. பொருளாதார நிலைமையை சீர்செய்யாமல், அடிப்படைவாதத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி ஆட்சியை தக்க வைக்கலாம். ஆனால் இதின் அபாயம் மக்கள் முபாராக் ஆட்சியை மேல் என்று மோர்சியை தூக்கி எறிந்து விடலாம்.

    இஸ்ரேலை, மோர்சி ஆட்சி ஒட்ட நசுக்கிவிடும் என்று பிரபல பதிவர்கள் எண்ணுவதை போல ஒன்றும் ஆகாது. பாலஸ்தீணியர்களும் இந்த மாதிரி பகல் கனவு காண்பதை நிறுத்தி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எதார்த்த சூழலில் போராடினால் நன்று. எகிப்துக்கு அந்த சக்தி இல்லை. ஏன் அரபு நாடுகளுக்கே அந்த சக்தி இல்லை. இப்பொழுதிருக்கும் நிலைமையைதான் தொடரும் ஏனென்றால் அமெரிக்கா அங்கு வைத்ததுதான் சட்டம்.

    ஷியாக்கள் முஸ்லிம் இல்லை என்று பட்வாக்கள் இருக்கும்போது எப்படி இரான் முஸ்லிம் நாடாகும்??? அறிஞர்களுக்கே வெளிச்சம்.

    மோர்சிக்கு உகந்த ஒரே ஜனாநாயக வழியில் ஆட்சி செய்து மக்களை வளப்படுத்துவதுதான். மோர்சி வெற்றியை பார்த்து அச்சபடுவோ, கவலைப்படுவோ தேவையில்லை.

    ReplyDelete
  7. அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனும் நட்புடன் மேலும் இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்தியும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் ஆட்சியாக முர்ஷியின் ஆட்சி அமைய வாழ்த்துவோம்.

    ReplyDelete
  8. சகோ நரேன் நலமா,
    நம் சகோக்கள் மோர்சியின் வெற்றி கண்டு புல்லரிப்பதால் நம் எதார்த்த சூழலை விளக்க வேண்டியது ஆயிற்று.

    நான் சொல்ல‌ ம‌ற‌ந்த‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளையும் விளக்கிய‌த‌ற்கு ந‌ன்றி.

    மோர்சியின் வெற்றி மக்களாட்சியின் வெற்றி.ஆனால் பதிவான 51% ஓட்டுகள் 51% அதாவது மொத்த மக்களில் 25% மட்டுமே த்னக்கு வாக்களித்த்னர் என்பதை மோர்சி உணர்கிறார் என்வே தோன்றுகிறது.


    எகிப்திய தேர்தல் இரு கட்டங்களை உள்ள‌டக்கியது.முதல் கட்ட தேர்வில் முதல் இரு இடங்கலைப் பிடித்தவர்கள் மட்டுமே இரண்டாம் கட்ட தேவில் போட்டி இட முடியும்.ஆகவே பல் இடது சாரி அமைப்புகள் ஆதரவாளர்கள் வாக்களிக்கவில்லை.

    ஆகவே நீங்கள் கூறிய வண்ணம் எகிப்துக்கு ஒரு கேம்ப் டேவிடொப்பந்தம் போல் பால‌ஸ்தீன+ இஸ்ரேலுக்கு ஒரு ஒப்பந்தம் வந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.


    மதம் சார்ந்தே பால‌ஸ்தீன இஸ்ரேல் பார்க்கப் படுவதாலேயே தீர்க்க முடியவில்லை என்ப‌து ந‌ம் க‌ருத்து.

    ந‌ன்றி

    ReplyDelete
  9. கேம்ப் டேவிட்[1979] என்னும் எகிப்து இஸ்ரேல் ///////ஒப்பந்தத்தை மீறாதவரையில் ,சூயஸ் nகால்வாயை கையகப் படுத்தும் நோக்கம் இல்லாத வரையில் மோர்சி,எகிப்து மக்களை என்ன செய்தாலும் கண்டு கொள்ளாத மேலை நாட்டவர் ஏதேனும் வில்லங்கம் செய்தால் கிறித்தவர்களை கொடுமைப் படுத்துகிறார்,மத தீவிரவாதி என சதாம்,கடாஃபி வழியில் போட்டுத் தாக்கி விடுவார்கள்./////
    ஹா, ஹா,
    இதுதான் uncle samயின் Cow Boy டிபளமாசி. Cold war காலத்தில் சோவியத் ஆதரவு இருந்தும் சண்டை வேலைக்காவது என்று புரிந்து அன்வர் சதாத் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டார்.
    இப்போது அமெரிக்கா ஒத்தையா ஆட்சி செய்கின்ற போது, ஒன்றும் செய்ய முடியாது. சிரியாவில் ஆட்சியை தூக்கிவிட்டால் அடுத்த குறி இரான்தான். அணுகுண்டு வத்துள்ளதா இல்லையா என்று உறுதி செய்த பின்னார் அடுத்த இலக்கு அதுதான்.

    சவுதியை விட்டுதள்ளுங்கள். ஆட்சி செய்பவர்கள் யூதர்கள். அமெரிக்கா ”குன்” என்றால் உடனே சவுதி செய்துவிடும். Cowards.

    ReplyDelete
  10. வாங்க சகோ சுவனப் பிரியன்,

    உங்கள் கருத்துப்படி "அப்படியே ஆகுக"[அரபியில் குன் சரியா?]

    அது என்னமோ,என்ன மாயமோ தெரியவில்லை நம்து உயிர்த்தோழர் ஒருவரிடம் இப்படியே ஏதேனும் கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பேன்.அது உங்களிடமும் வருகிறது.சும்மா தமாஷ்!!!!!!!!!.

    இரம்ஜான் ,பக்ரீத் மட்டும் கடந்த 10+ வருடங்களாக் அவர் வீட்டில்தான் கொண்டாட்டம்.அவரும் உங்களை மாதிரியே ரொம்ப ரொம்ப‌ நல்லவருங்கோ!!!!!!!!!


    நன்றி

    ReplyDelete
  11. நண்பர் ராஜ நடராஜன், இஸ்லாமிய ஆட்சி முறை வந்துவிட்டால், நிலைநாட்டுகிறேன் பேர்வழி என்ற பெயரில் அமைதி போய்விடும், இஸ்லாமிய ஆட்சி முறையில் பிரமீடுகள், பாரோக்களின் நினைவிடங்கள் அனைத்து, அப்கான் பாமியான் புத்த சிலையை தாலிபான் போல தகர்ப்பது, காஃபிர்கள் எப்படி வரலாம் என்று குண்டு வைத்து காபிர்களை கொள்வதால், எகிப்தின் சுற்றலாத்துறை என்னாவது இழுத்து மூட வேண்டுமே பாவம் ஐயோ எகிப்து மக்கள் என்று அர்த்ததில் மறுமொழி போட்டார்.

    அதற்கு நமது நண்பர் சு.பி.அவர்கள் நன்றாக விளக்கம் அளித்துவிட்டார்.LOL

    ReplyDelete
  12. சகோ நரேன் எப்புடீஈஈஈஈஈஈஈஈ

    I am shocked at this concurret usage of the word 'khun'!!!!!!!!!!!!!!!

    நானும் குன் என்கிறேன்,நீங்களும் குன் என்கிறீர்கள்.எல்லாம் ஏக இறைவ‌ன்,ச்கோ சுவனன் மற்றும் பி.ஜே அய்யாவின் திருவிளையாடல்.

    நன்றி

    ReplyDelete
  13. அருமையான பதிவு சகோ. எகிப்து இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு திரும்பினால் அதனால் பல பின்விளைவுகள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இதனால் லாபம் அடையபோவது மேலை நாடுகள் மட்டுமே. எகிப்து மக்கள் நலன் பேண இந்த அரசு முயல வேண்டும்.

    ReplyDelete
  14. நல்ல பதிவு சகோ எகிப்தில் என்ன நடகின்றது என்பதை தெளிவாக்கி உள்ளீர்கள். நரேன் குறிப்பிடும் கருத்துகள் அனைத்தும் உணமையே. எகிப்தின் அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்யாமல் போர், மதம் என இறங்கினால் முபாரக்கு ஏற்பட்ட நிலைமை தான் அனைவர்க்கும் ஏற்படும்.

    ReplyDelete
  15. இஸ்ரேலை, மோர்சி ஆட்சி ஒட்ட நசுக்கிவிடும் என்று பிரபல பதிவர்கள் எண்ணுவதை போல ஒன்றும் ஆகாது. பாலஸ்தீணியர்களும் இந்த மாதிரி பகல் கனவு காண்பதை நிறுத்தி அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எதார்த்த சூழலில் போராடினால் நன்று. எகிப்துக்கு அந்த சக்தி இல்லை. ஏன் அரபு நாடுகளுக்கே அந்த சக்தி இல்லை. இப்பொழுதிருக்கும் நிலைமையைதான் தொடரும் ஏனென்றால் அமெரிக்கா அங்கு வைத்ததுதான் சட்டம்.


    Suuuppppperrrr.. I have noticed many muslim friends overestimate the power of Muslim World... Hope they do not forget what happened to the Muslim world in 1967 SIX DAY WAR.. Its time they realize the real power relies on development of the people ...

    ReplyDelete
  16. பல விசயங்கள் புரிந்தன. மிக்க நன்றி.

    உங்கள் வாழ்க்கையில் நலலதே நடக்கவும். ....குன்!

    ReplyDelete