Monday, September 12, 2011

பயோ எரிபொருளில் இயக்கப் பட்ட விமானம்



உயிரி எரிபொருள் (biofuel) என்பது அண்மையில் செத்துப் போன உயிரிப் பொருட்களில் இருந்து (குறிப்பாகப் புதல் அல்லது தாவரம்) உருவாக்கப்படும்எரிபொருளாகும்


எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றாக் பயோ எரிபொருள் எனப்படும் எத்தனால் சோளம் போன்ற பயிர்வகைகளில் இருந்து தயாரிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த செய்தி.இது குறித்த பல ஆய்வுகளும் நடந்த் வருகின்றன்.வழக்கம் போல் நம்து நாடு இது குறித்து எதுவும் செய்வதில்லை என்பதும் நமக்கு தெரியும்.இச்செய்தி பல நல்ல விஷயங்களுக்கு தொடக்காமக் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.



தேங்காய் எண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி விமானம் ஒன்று இயக்கப்பட்டு உள்ளது.
உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ”வெர்ஜின் அட்லாண்டிக்”(Virgin Atlantic) நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தது. இதற்கான முயற்சியில் இந்நிறுவனம் பலவருடங்களாக ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பயோ எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வுகள் உலகின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்(அமேசான் காடுகளில் உள்ள ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பபடுவது) ஆகியவற்றின் கலந்து பெறப்பட்ட கலவை இதற்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது.
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.இதற்காக போயிங் 747400 ரக ஜெட் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யாத நிலையில், விமானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.
இந்த முயற்சி பயோ எரிபொருள் ஆராய்ச்சியில் முக்கியமான ஒன்றாக அமையுமென தெரிவிக்கப்படுகிறது.



இக்காணொளி பயோ எரிபொருள் குறித்த பல அம்ச‌ங்களை அலசுகிறது.




http://www.biofueloasis.com/
http://www.collectivebiofuels.org/

சொந்தமாக் உருவாக்கிய பயோ டீசல் நிறுவனம்

17 comments:

  1. நல்ல பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  2. இச்செய்தி பல நல்ல விஷயங்களுக்கு தொடக்காமக் இருக்கும் என எதிர்பார்க்கலாம்./

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. http://www.nature.com/nature/journal/v474/n7352_supp/full/474S02a.html

    Introduction: Next generation biofuels

    Peter Fairley
    Nature 474, S2–S5 (23 June 2011) doi:10.1038/474S02a
    Published online 22 June 2011
    Proponents of biomass-based fuels push for sustainability against a steady tide of conflicting analysis, but can advanced biofuels cut the mustard?

    ReplyDelete
  4. நண்பரே.

    நாம் கச்சா எண்ணெயின் அடிமையிலிருந்து (addiction) விடுப்படும்வரை அல்லது அந்த எண்ணெயை தீரும் வரை இந்த பயொ எரிப்பொருள் (தமிழில் இயற்கை எரிப்பொருள் ????) போன்ற மாற்று எரிப்பொருள்களை பற்றிய முயற்சி நடைப்பெற வேண்டியதுதான்.

    ஒன்று, கச்சா எண்ணெய் தீர்ந்தவுடன் இந்த மாற்று எரிப்பொருள்கள் அந்த இடத்தை பெற்றுவிடும்.

    அல்லது, இந்த மாற்று எரிப்பொருளின் பொருளாதாரம் கச்சா எண்ணெயின் பொருளாதாரத்தை விட குறைவாக அல்லது சிறந்ததாக இருப்பின் கச்சா எண்ணெயின் இடத்தை அடைந்துவிடலாம்.

    அல்லது, ஒரு முடிவு எடுத்து கச்சா எண்ணெயின் பாதகங்களை குறைக்க மாற்று எரிப்பொருளின் உபயோகத்தை அதிகப்படுத்தலாம்.

    அதனால் மாற்று எரிப்பொருளின் ஆராய்ச்சி தொடரவேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் நரேன்,
    இந்த இயற்கை எரிபொருள் மூலம் விமானமே ஓடி விட்டார்கள்.அப்ப்டி எனில் இத்தொழில் நுட்பம் சாத்தியமானதுதான்.இதுதான் எதிர்கால எரிபொருள்.விவாசயத்தில் நம்மால் உற்பத்தி செய்யக் கூடிய மூலப் பொருள்கள் என்பதால் நம்க்கு இது அனுகூலமே.இதில் உள்ள‌ சிக்கல் என்ன என்றால் இதன் மூல பொருள்களான தேங்காய்,பனை,சோளம் போன்றவை உண்வு பொருள்களுக்கு பதிலாக் பயிர் செய்யப் பட்டு உணவு பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.விளைநிலங்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.

    இத்தொழில் நுட்பம் குறித்த ஆய்வுகள்,செயல்முறைகளுக்கு அடித்தளம் இப்பொதே போடப்பட வேன்டும்.சில காப்புரிமைகள் ந்மது ஆய்வாளர்கள் பெற்று வைப்பது நல்லது.இன்னும் கூட சூரிய சக்தி,காற்றாலை,ஃபியுல் செல் போன்ற தொழில் நுட்பங்களும் கைக்கொள்ளப் படவேண்டும்.நம்து நாட்டின்,மாநிலத்தின் தேவைகள் ஆற்றலில் தன்னிறைவு அடையும் முயற்சி இயற்கையை பாழப்டுத்தாத வகையில் மேற் கொள்ளப் பட வேண்டும்.
    நடக்கும் என எதிர்பார்போம்!!!!!!.
    நன்றி

    ReplyDelete
  6. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

    அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
    ஆதாரம்: புகாரி.

    ReplyDelete
  7. ஸலாம் சகோ இப்ராஹிம்,
    நல்ல கருத்து யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம்.
    நன்றி

    ReplyDelete
  8. காலை சூரிய உதயத்தில் ஒரு தளத்திலும் மாலை நிலவின் வெளிச்சத்தில் ஒரு தளத்திலும் காணப்படுகிறீர்கள்.நீங்கள் இயங்கும் தளம்தான் என்ன:)

    ReplyDelete
  9. நேற்று பெட்ரோல் எரிபொருள் குறித்தும் கூட ஒரு பின்னூட்டமிட்டேன்.எங்கேயென்றே தேடிக்கொண்டிருக்கிறேன்:)

    ReplyDelete
  10. //இந்த இயற்கை எரிபொருள் மூலம் விமானமே ஓடி விட்டார்கள்.அப்ப்டி எனில் இத்தொழில் நுட்பம் சாத்தியமானதுதான்.//

    முன்பு சூரிய ஒளி,காற்றாலை போன்ற எரிபொருட்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லையென்று சொல்லியிருந்தீர்கள்.தற்போதைய நிலையில் பயோ எரிபொருளும் இதே நிலையில்தான் என நினைக்கிறேன்.வானியல் அறிவியலுக்கு நிகரான ஹைட்ரஜன் எரிபொருள் மாதிரியான ஆராய்ச்சிகளே பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருளாக மாறும்.

    ReplyDelete
  11. வாங்க சகோ,
    சூரிய சக்தி,காற்றாலை இவற்றில் நேரடியாக‌ மின்சாரம் தயாரிக்கும் போது அந்த மின்சாரத்த்தை பயன் படுத்துவதில் சிக்கல்.கிடக்கும் மின்சாரத்தை தரப் படுத்த பல மிண்ணனு தொழில் நுட்பம் தேவை.மின்சாரத்தை சேமிப்பதிலும் சிக்கல்.
    ஆகவே இப்போது இவ்வகைகளில் கிடைக்கும் மின்சாரத்தை நீரை மின் பகுப்பு செய்து கிடைக்கும் ஹைட்ரஜன் எரிபொருளை சேமிக்கிறார்கள்.
    இத்தொழில் நுட்பம் ஏற்றுக் கொள்ளப் பரும் வாய்ப்பு அதிகம்.
    ____________________

    பயோ எரிபொருள் தொழில் நுட்பம் உனவு பஞ்சம் எற்படுத்தி விடுமோ ,என்ற அச்சமும்,இதன் வேதிவினைகள் அதிகம் செலவு ஆவதாலும் கொஞ்சம் யோசிக்கிறார்கள்.
    மற்ற்படி அவசியம் எனில் செய்து விடுவார்கள்.பெரும் அளவில தயாரிக்க முடியும் என்பது இதன் சாதகமான அம்சம்.ஏற்கெனவே சில விநியோக நிலையங்களை அமைத்துவிட்டார்கள்.பயன் படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
    http://www.renewableenergyworld.com/rea/news/article/2011/03/top-11-algae-biofuel-and-biochemical-trends-from-2011-2020

    http://www.nasa.gov/topics/aeronautics/features/aafex2.html
    http://www.scientificamerican.com/article.cfm?id=biello-turning-trash-into-biofuel

    ReplyDelete
  12. /காலை சூரிய உதயத்தில் ஒரு தளத்திலும் மாலை நிலவின் வெளிச்சத்தில் ஒரு தளத்திலும் காணப்படுகிறீர்கள்.நீங்கள் இயங்கும் தளம்தான் என்ன:)/
    மனிதம் மட்டுமே.மனிதத்திற்கு பயன் தரும் அறிவியல் வளர்ப்போம்.மனிதத்தை கூறு போடும் கொள்கைகளை விமர்சிபோம்!!!!!!!!!!!
    இயற்கையை பாதுகாப்போம்,இணைந்து வாழ்வோம்!!!!!!!

    ReplyDelete